நிதர்சனக் கனவோ நீ! Part 2: episode -12

5
(34)

அத்தியாயம் – 12

 

கனநேரத்தில் நடந்து முடிந்துவிட்ட செயலில் ஸ்தம்பித்து தன்னையே விழிகள் விரிய பார்த்துக் கொண்டு  நின்றவளை நெருங்கியிருந்தான் விபீஷன்.

 

தான் அவளை நெருங்கியும், நின்ற நிலை மாறாமல் நின்றவளின் கவனத்தை திருப்பும் விதமாக சற்றே குரலை செருமியவன் “இங்க என்ன பண்ற?” என்று கேட்டான்.

அவனது கேள்வியில், சுயம் அடைந்தவள் “சாரி, நான் ஆஹிக்கு தான்…” என குரல் நடுங்க கூற,

அவளை ஓர் பார்வை பார்த்தானே தவிர  பதில் ஏதும் கூறாது  குனிந்து சற்றே அவளின் புடவையை அகற்ற எத்தனிக்க, ‘இவன் என்ன தான் செய்ய போகின்றான்?’ என ஒன்றும் புரியாது மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்றவள் அவன் செய்யப் போகும் செயலில் தூக்கி வாரி போட்டது.

“ஐயோ என்ன பண்றிங்க விபீஷன் விடுங்க” என்று சொல்லிக் கொண்டே குனிந்து  புடவையின் மீதிருந்த அவனது கரத்தை மேலும் முன்னேற விடாது பற்றிப் பிடித்துக் கொண்டாள்.

 

‘ப்ச்ச’ என சலித்துக் கொண்டே நிமிர்ந்தவன் சற்று முன் அவன் கட்டிய தாலி அசைந்தாட, தன்னெதிரே மிக நெருக்கத்தில் தெரிந்த அவளது வதனம் ஆடவனை பித்தம் கொள்ள வைக்க, எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டே அவளது இரு நீள் விழிகளை ஆழ்ந்து நோக்கியவன் பார்வையில் என்ன உணர்ந்தாளோ அவனது பார்வை வீச்சினை தாழ முடியாதவள் கரமோ, அவளை அறியாமலேயே அவனது கரத்தை விடுவித்திருந்தது.

அந்நொடி இருவரும் சுற்றம் மறந்தனர்.

தனது நெருக்கத்தில் அவளது அவஸ்தையை உணர்ந்து கொண்டவனுக்கு இதழ்களுக்குள் யாருமாறியாமல் மெலிதாக புன்னகைத்துக் கொண்டவன் புடவையை லேசாக உயர்த்தி மருதாணியால் சிவந்திருந்த அவளின் பாதத்தை பற்றி அவளெறிந்த காலணியை அணிவித்து விட்டான்.

 

சும்மாவே அவனின் காதலில் மயங்கி கிடப்பவளுக்கு அவனின் இச் செயலில் உச்சி முதல் பாதம் வரை சிலிர்த்தடங்கியது.

அவனை அணைத்து இப்போதே காதலை கூறி விட்டால் என்ன? என்று தோன்றியது. ஆனால் பெண்ணவளுக்கே உரிய கூச்சம் அவளை தடுக்க ஒருவாறு தட்டுத்தடுமாறி  “ விபீஷன் நான் ஒண்ணு சொல்லணும்” என்றாள் நாணத்தில் முகம் சிவக்க,

 

“எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம் இப்போ என்கூட வா” என்று அவளின் கரத்தை பற்றிக் கொள்ள, என்னவோ மந்திரத்திற்கு கட்டுப்பட்டவள் போல அவன் இழுத்த இழுவைக்கு இழுபட்டு சென்றாள் பாவை.

கணநேரத்தில், அவர்களை கண்டும் காணாதது போல அமர்ந்திருந்த ஆஹித்யாவை நெருங்கியிருந்தான்.

 

“அண்ணி” என காற்றுக்கும் கேட்காத குரலில் மிக மிக மென்மையாக அழைத்தான்.

 

அவனின் மென்மையான அழைப்பில், கல்லும் கூட கரைந்து விடும் போலும் ஆஹித்யா மட்டும் விதிவிலக்கா என்ன?

 

“சொல்லுங்க விபீஷன்” என கேட்டுக் கொண்டு எழுந்து நின்றவள் பார்வை, வெட்கப் புன்னகையுடன் நின்ற பவ்யாவின் மேல் படிந்து மீள, “பவிக்காக நான் சாரி கேட்டுகிறேன் அண்ணி” என்றவனை அதிர்ந்து பார்த்த பவ்யா, “அச்சோ என்ன இது நாங்க இப்படி தான் அடிச்சுக்குவோம் ஜஸ்ட் ஃபோர் ஃபன் அவ்ளோ தான்” என்றவளை “நீ பண்ணது தப்பு பவி. இது வெளியிடம் அதுவும் நாம நிற்கிறது கோவில்ல. இங்க எப்படி நடந்துக்கணும்னு உனக்கு தெரியும்னு நினைக்கிறேன் சோ” என ஏதோ கூற வந்தவனை இடைமறித்த போல “பரவல்ல விபீஷன். அவளை விடுங்க” என ஆஹித்யா கூறவும், சட்டென “அக்கா ரியலி ரியலி சாரி” என்றவள் விபீஷனைப் பார்த்து புன்னகைத்தவள்  “இப்போ ஓகேவா? இனிமேல் இப்படி வீட்லயும் கூட நடந்துக்க மாட்டேன்” என்றவளிடம் “எப்பவும் யாருக்காகவும் உன் சுயம் இழக்க கூடாது பவி. நீ நீயா இரு. அது தான் எனக்கு உன்கிட்ட பிடிச்சது” என்றவன் திரும்பி “அண்ணி உங்கள அண்ணா போன் செக் பண்ண சொன்னார்” என்று விட்டு “ உள்ள போறேன் பேசிட்டு வா பவி” என்றவன் கரமோ அப்போது தான் அவளின் கரத்தை விடுவித்தது.

 

“என்னவாம்டி? இப்போ தானே இப்படி நடந்துக்க வேணாம்னு சொல்லிட்டு, நான் நானா இருக்கணுமாம்” என்று பிதற்றியவளை “ அடியே அறிவாளி காதோல் என வேண்டுமென்றே இழுவையாக சொன்னவள் பண்ணா மட்டும் பத்தாது உன்னோட அவர் என்ன சொல்ல வர்றார்னு புரிஞ்சிக்கணும்” என்றவளை மேலிருந்து கீழாக பார்த்தவள் “நீ மட்டும் ஒழுங்கோ” என கேட்க.

 

“எல்லாரும் எல்லா விஷயத்துலயும் பர்பெக்ட்டா இருக்க முடியாது” என ஏதோ கூற வந்தவளின் வாயை எட்டி கரத்தால் பொத்தியவள் “ போதும் எனக்கு புரிஞ்சுது  கிளம்பு போகலாம்” என்று சொன்னவளோ முன்னே நடக்க, எங்கே விபீஷனை இறுதி வரை புரிந்து கொள்ள மாட்டாளோ என மனதின் ஓரத்தில் உறுத்திக் கொண்டிருந்த எண்ணம், இப்போதோ அவன் மீதான பவ்யாவின் விழிகளில் தெரிந்த அளவுக்கதிகமான காதலில் மனமோ மட்டில்லா மகிழ்ச்சியை அடைந்தது.

 

இதழ்களில் திருப்தி புன்னகையுடன் தனது அலைபேசியை எடுத்து பார்த்தாள்.

 

திரையை ஒளிரச் செய்து பார்த்தவளுக்கு தன்னவனிடமிருந்து வந்த குறுஞ்செய்தி தான் முதலில் தென்பட்டது.

 

என்னவாக இருக்கும் என ஓர் ஆர்வத்துடன் மனதில் குறுகுறுப்பாக இருக்க, அக் குறுஞ்செய்தியை பார்த்தவளின் முகமோ அப்பட்டமாக வெளிறிப் போனது.

 

வெளிறிய முகத்துடன் வந்தவளை திரும்பி பார்த்த பவ்யா  “ என்னடி பேய் புகுந்துடுச்சா?” என்றவளை முறைத்தவள் “என்ன பார்த்தா அப்படியா தெரியுது? அதுவும் கோவில் உள்ள பேய் வந்துடுமா?” என்றவளை “ஏன் நீ வர்லயா?” என கேலியாக சொன்னவள் அவளின் தீ பார்வையில் “கண்ணாலே என்னை எரிச்சிடாத. போ போய் மாமாவை கவனி. மாமா உனக்காக தான் வெயிட்டிங் போல” என்று சொன்னவளோ தன்னவன் அருகில் சென்று நின்று கொண்டாள்.

 

‘இவ வேற என் அவஸ்தை புரியாமல்…’ என மனதில் புலம்பிக் கொண்டே சாதாரணமாக நவீனுடன் பேசி சிரித்துக் கொண்டிருந்த ஜெய் ஆனந்த்தின் அருகே நெருங்கியிருக்க, “ஹேப்பி மெர்ரிட் லைஃப் மா” என புன்னகையுடன் சொன்ன நவீனிடம் “தேங்ஸ் அண்ணா. அப்புறம் எப்போ உங்க மேரேஜ்? எவ்ளோ நாள் தான் அம்மா பேச்சை கேக்காமல் லவ் பண்ண பொண்ணை தேடிட்டு இருக்க போறீங்க?” என்று கேட்டவள் நவீனின் அதிர்ச்சியான முகபாவனையில் ‘ஆத்தி, மண்டை மேல இருக்க கொண்டையை மறந்துட்டேன் போலயே’ என மனதில் அரண்டவள் “நான் ஏதும் தப்பா கேட்டுட்டேனா?” என கேட்டு பற்கள் தெரிய சிரித்து வைத்தாள்.

 

“அவனுக்கு லவ் மேரேஜ் பிடிக்கும்னு உனக்கு எப்படி தெரியும்?” என்ற ஜெய் ஆனந்த்தின் கேள்வியில் திகைத்து விழித்தவள் ‘ஹையோ! ஹே ஏதாவது சமாளிச்சு தொல’ என தன்னைத் தானே திட்டிக் கொண்டவள் “ஜஸ்ட் கெஸ் பண்ணேன். அதுக்காக ஏன் ரெண்டு பேரும் இவ்ளோ ஷாக் ஆகுறீங்க?” என்றவளிடம் “நதிங் மா, என்னை பத்தி எல்லாமே தெரிஞ்சு வச்சிருக்கவன் ஜெய் தானே சோ இப்போ நீங்க சொல்லவும் கொஞ்சமா ஜெர்க் ஆயிட்டேன்” என்றான் நவீன்.                                                                                                           

 

“தப்பா கேட்டிருந்தா சாரி அண்ணா”

 

“ஹேய் இதுக்கெல்லாம் எதுக்கு சாரிலாம் நோ இஷ்ஷு. என் ப்ரண்ட் ரொம்ப நல்லவன் கவனமா பார்த்துக்கோ மா” என அடக்கப்பட்ட புன்னகையுடன் கூறியவனிடம் “கண்கலங்காம பார்த்துப்பேன் ஓகேவா” என்றாள் கண்களை சிமிட்டி,

 

“டபுள் ஓகே” என்றவனோ திரும்பி “ஜெய்  ஐம் லீவிங்டா” என்று சொன்னவனோ அவனை கட்டி அணைத்து விடுவித்தவன் விடை பெற்று சென்ற மறு நொடியே,

“எதுக்காக வெர்ஜினிட்டி ரிப்போர்ட் அஹ் கேட்குறீங்க மாமா?” என படபடப்பாக கேட்டாள்.

“ஏன்னு நாளைக்கு சொல்றேன்” என்று சொன்னவன் முகம் என்னவோ சாதாரணமாகத் தான் இருந்தது.

 

“பட் எதுக்கு?” என மீண்டும் பதற்றமாக கேட்டவளிடம் “இப்படியே பேசிட்டு இருந்தனா உன் லிப்ஸை கடிச்சு வச்சிடுவேன்” என ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்க, இவ்வளவு நேரமும் முகம் வெளிறி பதைபதைப்புடன் இருந்தவளுக்கோ அவனின் வார்த்தைகளில் படபடப்பு நீங்கி கூச்சம் தானாக வந்தொட்டிக் கொண்டது.

 

எல்லோர் முன்பும் வைத்து கன்னத்தில் முத்தத்தை கொடுத்தவன் இதை செய்ய மாட்டானா என்ன?

அவன் செய்யக் கூடிய ஆள் தான்.

அதன் பின் அவள் வாயே திறக்கவில்லை.

 

அதனைத் தொடர்ந்து உறவினர்களுடன் சேர்ந்து புகைப்படங்களை எடுத்துக் கொண்ட பின்னர் தனித் தனியே ஜோடியாகவும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

 

ஒரு வழியாக சம்பிரதாயங்களை முடித்து விட்டு கோயிலிலிருந்து மணமக்கள் வீட்டுக்கு கிளம்பி இருக்க, மாலையும் மங்கி இருள் கவிழ ஆரம்பித்து இருந்தது.

 

வீட்டுக்கு வந்ததன் பின்பும் சம்பிரதாயங்கள் என ஒரு வழி பண்ணி விட, ‘மீண்டும் மீண்டுமா’ என சலித்துக் கொண்டே செய்த அஹித்யாவுக்கு தன்னவன் எடுத்து வைக்க சொன்ன ரிப்போர்ட் வேறு அநியாயத்துக்கு ஞாபகம் வந்து தொலைக்க, ஒரு வித சங்கடத்துடனேயே தன் வீட்டுக்குச் சென்று யாருமரியாமல் எடுத்து வந்து தனது உடை பெட்டிக்குள் மறைத்து வைத்துக் கொண்டாள்.

அதுமட்டுமா என்ன? இருள் கவிழவும் அடிவயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறப்பது போல குறுக்குறுக்கவும் ஆரம்பித்து விட, ஒருவித மோன நிலையில் சுற்றிக் கொண்டிருந்தவளை அழைத்திருந்தார் சித்ரா.

இதோ அழைத்து விட்டார்.

மறுக்க முடியாது.

மறுக்கவும் முடியாது என்று தெரிந்தது.

தன் இதயம் துடிக்கும் ஓசை  அவளுக்கே தாறுமாறாக கேட்டது.

தனக்குள் உழன்றவாறே “அத்தை” என்றழைத்த படி அவரிருந்த அறைக்குள் நுழைந்தாள்.

 

மென் புன்னகையுடனேயே அடர் நீல நிறப் புடவையில் ஆங்காங்கே வெண் கற்கள் பதித்த வேலைப்பாடுகள் நிறைந்த புடவையை அவளின் கையில் திணித்தவர் “கட்டிட்டு வா” என்று கொடுக்க,

நாணம் ஒருபுறம் என்றாலும் தன்னையே அறியாமல் மெல்லிய நடுக்கம் அவளுள்…

 

“என்னமா போ போய் புடவையை கட்டிட்டு வா” என்று சொல்லி விட்டு அறையை விட்டு வெளியேறி விட, ஓர் ஆழ்ந்த பெரு மூச்சுடன் தான் அணிந்திருந்த புடவையில் கை வைக்க போக, “ ஹேய் வெயிட் வெயிட்” என திடீரென கேட்ட  பவ்யாவின்  குரலில் அதிர்ந்து போய் அப்போது தான் சுற்றிலும் விழிகளை சுழல விட்டாள்.

 

அவள் அறைக்குள் வந்த மனநிலையில் ஏற்கனவே அலங்காரங்களை முடித்துக் கொண்டு ஓரமாக அமர்ந்து ஆப்பிளை கொறித்து கொண்டிருந்த பவ்யாவை  கவனிக்கத் தவறி இருந்தாள்.

 

“இங்க தான் இருக்கியா?” என்று கேட்டுக் கொண்டே குரலை செருமியவள் விபீஷன் நிலைமைய நினைச்சா எனக்கே பாவம் போல இருக்கே” என்றுவளோ பவ்யாவை கேலி செய்ய,

 

“ப்ச்ச… எனக்கென்னவோ என்ன நினைச்சா தான் எனக்கு பாவம் போல  இருக்கு” என்றவளோ ஒரு பெரு மூச்சுடன் எழுந்தவள் நான் வெளில நிக்கிறேன் வேயார் பண்ணிட்டு கூப்பிடு” என்றவள் கதவில் கையை வைக்க, “ஏன் என்னை இதுக்கு முதல் மேடம் டிரஸ் இல்லாம பார்த்ததே இல்ல போல” என்க,

 

“என் புருஷன் பேச வேண்டியதெல்லாம் நீ பேசுற, எல்லாம் என் விதி என சலித்துக் கொண்டே நதிங், ஜஸ்ட் ஒரு கர்டசிகாக தான் வெளில போலாம்னு இருந்தேன் பட் உன் வேர்ட்ஸ் என்னை டெம்ப்ட் பண்ணிடுச்சு” என்று சொல்லிக் கொண்டே மீண்டும் வந்து இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

 

“பேச்சு வேற எங்கயோ போற போல இருக்கே” என அடக்கப்பட்ட சிரிப்புடன் சொன்ன ஆஹித்யாவின் மனநிலை இயல்புக்கு திரும்பியிருந்தது.

 

“போய் என்ன பண்ண? என்னை தான்   விபீஷன் கண்டுக்கவே இல்லையே” என ஆரம்பித்து விட,”கோவில்ல வச்சு சுத்தி யார் இருக்கான்னு கூட பார்க்காம பட்ட பகல்ல மனசாட்சியே இல்லாம கண்ணாலே ரொமான்ஸ் பண்ணிங்களேடாவ்! இதுக்கு பேர் தான் கண்டுகிறது இல்லையா?” என்றாள் புருவங்கள் உயர,

 

“ஹையோ! அது சாதா ரொமான்ஸ்டி. இது வேற கேட்டகரி” என்க,

“இப்போ உனக்கு என்ன

தான் ப்ராப்ளம்?” என்ற ஆஹித்யாவின் கேள்வியில், “என் கூட இன்னும் கோபமா இருக்கார் சோ எனக்கு என்னவோ போல இருக்கே” என்று சொன்னவள் விழிகளோ உண்மையாகவே இயலாமையில் கலங்கி விட,

 

கதைத்துக் கொண்டே புடவையை கட்டி முடித்தவளோ அவள் கண் கலங்கியதில் பதறிப் போனவளாய் “தேவையில்லாம எதுக்காக ஓவரா யோசிக்கிற?” என்று சொல்லிக் கொண்டே அவளின் தாடையை பற்றி நிமிர்த்தியவள் “இன்னுமே உன்ன விபீஷன் லவ் பண்றார். இது உனக்கான நாள். நீ தான் உன் லவ்வ புரிய வைக்கணும் சோ தேவையில்லாம திங்க் பண்ணாத” என்றவள் சென்று கதவை திறந்து வெளியில் கதைத்துக் கொண்டு நின்ற சித்ராவை அழைத்தாள்.

மென் புன்னகையுடன் அறைக்குள் வந்தவரோ “ரெண்டு பேரும் மகாலக்ஷ்மி போல அழகா இருக்கீங்க” என முகம் மலர சொன்னவரோ முகத்தை வழித்து நெட்டி முறித்த அதே நேரம், உள்ளே வந்த வித்யாவுக்கும் ஆனந்தத்தில் கண் கலங்க “ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்” என்று சொல்லிக் கொண்டே இருவரின் கரத்திலும் கொண்டு வந்திருந்த பால் செம்பினை வைத்திருந்தார்.

 

எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டே அதனை வாங்கிக் கொண்ட ஆஹித்யாவுக்கு இதயம் தொண்டைக் குழிக்குள் வந்து துடிப்பதை போல் இருந்தது.

 

ஆனால் அதற்கு எதிர் மாறாக எவ்விதமான பதற்றமும் இன்றி வெட்க புன்னகையுடன் நின்றிருந்தாள் பவ்யா.

 

இனி சொல்லவும் வேண்டுமா என்ன?

அடுத்த சில நிமிடங்களில் இருவரும் வெவ்வேறு அறைகளுக்குள் நுழைந்திருந்தனர்.

 

********************************************************

பதற்றத்துடன் அறையினுள் வந்த ஆஹித்யாவின் விழிகளோ தன்னவனை தேடி சுழன்றன.

அவனது அறை முழுதும் அவனது வாசமே!

ஒரு கணம் ஒரே ஒரு கணம் விழிகளை மூடி ஆழ்ந்து சுவாசித்தாள்.

 

சட்டென பின்னங் கழுத்தில் உணர்ந்த உஷ்ணப் மூச்சுக்காற்றில் அவளது கரங்களோ பால் செம்பினை அழுத்தமாக பற்றிக் கொண்ட அதேநேரம், அவனோ “பைனலில் மை வெயிட் இஸ் ஓவர்” என்றவன் குரலில் விழிகளை திறந்தவள் “மாமா” என வெட்கத்துடன் தலையை தாழ்த்திய படி அவன் புறம் திரும்பி “பால் குடிங்க” என்றபடி செம்பினை அவனை நோக்கி நீட்டினாள்.

 

அவளை ஒரு மார்க்கமாக பார்த்தவன் “லுக் அட் மீ தியா” என்றான் மென்மையாக,

 

“ம்ஹூம், நான் பார்க்க மாட்டேன்” என்று சொன்னவள் “பால்” என்றாள் மீண்டும்,

 

அவள் நீட்டிய பாலை அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே வாங்கியவன் “அப்போ நான் குடிகட்டுமா?” என ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டவனைப் ஏறிட்டு பார்த்தவள் “எனக்கும் பா…” என்று வார்த்தையை முடிக்கும் முதலே அனைத்து பாலையும் வாய்க்குள் சரித்தவனை அதிர்ச்சியாக நோக்கியவள் “ ஹையோ மாமா நானும் பாதி குடிக்கணும் பட் எல்லாமே நீங்க…” என்று கேட்டுக் கொண்டிருந்தவளின் இடையை ஒற்றை கரத்தால் பற்றி தன்னை நோக்கி இழுத்து அணைத்தவன் நொடியும் தாமதிக்காமல் குனிந்து அவளின் இதழைக் கவ்வியிருந்தான்

 

அதுமட்டுமா என்ன?

 

அவன் முத்தமிட்ட அதிர்ச்சி ஒருபுறம் என்றால் அவன் குடித்து விட்டான் என நினைத்த பால் மொத்தமும் அவள் இதழ்களுக்குள் இடம் பெயர்ந்திருக்க, அவள் தான் அவனது அதிரடியில் திணறி போனாள்.

 

சற்று நேரத்திலேயே அவளின் இதழ்களை விட்டு பிரிந்தவன் தன்னவளை பார்த்தான்.

 

அவளோ உணர்வுகளின் பிடியில் விழிகளை மூடி அவனது ஷர்ட்டின் காலரை இறுகப் பற்றி கசக்கிப் பிடித்திருக்க, அவளையே ரசனையாக பார்த்திருந்தவன்   இதழ்களில் கர்வப் புன்னகை.

 

விழிகளை மூடியிருந்த பெண்ணவளுக்கே அவனது இதழ்கள், அவளது இதழ்களில் ஆழ்ந்து இருப்பது போல பிரம்மை போலும், தன்னவளின் சூடேறி சிவந்த இரு கன்னங்களையும் மென்மையாக வருடியவன் “யூ ஆர் பிளஷிங் பேபி” என்றதும் மெல்ல தன் விழிகளை திறந்தவளுக்கு அப்போது தான் தன் நிலையே உரைத்தது.

 

தன்னை குனிந்து பார்த்தாள்.

 

மார்பை மறைத்திருந்த சேலை களைந்து அவளது அங்கங்களை அவனுக்கு வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டு இருக்க, பதறிப் போய் மார்பில் கரத்தை வைத்து மறைத்துக் கொண்டே மறுபுறம் திரும்பி நின்று கொண்டவளுக்கு இதயமோ படு வேகமாக துடித்துக் கொண்டிருந்தது.

 

“இதுக்கு பிறகு என்கிட்ட இருந்து என்ன மறைக்க போற தியா” என்றவன் குரல் கூட மோகமாக ஒலித்தது.

“மாமா பிளீஸ் இப்படி பேசாதீங்க” என்றவளை பின்னிருந்து அணைத்தவன் “சோ நான் பேசக்கூடாதா?” என கேட்டவன் கரங்கள் அவளின் இடையில் கோலம் போட, அவளும் பெண் தானே! கண்ட கனவிலேயே அவனின் மென்மையில் தன்னை அறியாமல் காதலித்தவள் அவள். இப்போது நிதர்சனத்தில் அவனே அவளது கணவனாக தன்னில் பித்தாகி நிற்கும் போது அவளது உணர்வுகளும் பீறிட்டு கிளம்ப ஆரம்பித்து விட்டிருந்தன.

 

அதன் விளைவாக, இதழ் கடித்து தன் உணர்வுகளை அடக்க முயன்றவளோ அவனது கரத்தை மேலும் முன்னேற விடாது பற்றிக் கொள்ள முயல, “என்னடி?” என்றான் மோகமாக,

 

அவளால் என்ன சொல்லி விட முடியும்?

 

சும்மாவே அவனருகாமையில் தன்னை மறப்பவள் அவள். அவன் கேட்ட கேள்விக்கு சற்று தயங்கியவாறே “நர்வஸ்ஸா இருக்கு” என்றவள் கரம் தானாக அவனது கரத்தை பற்றிய பிடியை தளர்த்தி இருக்க, அவளை அப்படியே தன் கரங்களில் ஏந்திக் கொண்டவன் “ உன் நர்வஸ்ஸ பஸ்ட் பண்ண ஹெல்ப் பண்றேன்” என ஹஸ்கி குரலில் கூறியவன் அவளுடன் கட்டிலில் தஞ்சமடைந்திருந்தான்.

அதிர்ந்து விழிகளை அகல விரித்தவள் தன்னை மறைத்துக் கொள்ள கட்டிலில் கிடந்த போர்வையை எடுக்க முயன்றாள்.

 

இதழ்களுக்குள் அடக்கப்பட்ட புன்னகையுடன் அவளைப் பார்த்தவன் “எதை மறைக்க ட்ரை பண்ற? ஐ திங்க் உன் ரைட் சைட் செஸ்ட்ல” என்று சொல்ல வந்தவனின் வார்த்தைகளை முடிக்க முதலே எட்டி அவனின் இதழ்களை தன் கரம் கொண்டு மூடியவள் “மாமா இப்படி எல்லாம் பேசாதீங்க எனக்கு என்னவோ போல இருக்கு” என்றவள் வெட்கத்தோடு பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொள்ள, “ சோ நான் உன்ன பார்க்கிறது ப்ராப்ளம் இல்ல பேசுறது தான் ப்ராப்ளம் ரைட்” என்றவனை விழி விரித்து பார்த்தவள் ‘இன்னைக்கு நம்ம பர்ஸ்ட் நைட் கன்பார்ம்’ என தனக்குள் சொல்லிக் கொண்டவள் “நான் என்ன சொன்னாலும் நீங்க என்னை பேசி பேசியே ஷையாக்குறீங்க மாமா” என்று சொன்னது மட்டும் தான் தெரியும் அவளுக்கு, அவள் மேல் மொத்தமாக படர்ந்து மெலிதாக நடுங்கிக் கொண்டிருந்த அவளின் இதழ்களில் தன் இதழ்களை ஆழமாக பொருத்தி இருந்தான்.

 

மீண்டும் ஒரு முத்தம்.

 

இருவர் மேனியும் உணர்வுகளின் பிடியில் சிக்கித் தவிக்க, அவன் கரமோ அவளின் மேனியைத் தடையின்றி ஸ்பரிசித்தது.

மெல்ல ஏறிட்டு அவளின் மூடிய விழிகளை பார்த்தவன் குனிந்து மென்மையாக அதில் முத்தம் பதித்து சற்றே நெருங்கி “ஐ லவ் யூ லாட்” என்றது தான் தாமதம், சட்டென விழிகளைத் திறந்தாள்.

 

அவளின் விழிகளில் நம்ப முடியாத ஆச்சர்ய பார்வை தொக்கி நின்றது. அது மட்டுமா என்ன? அவளை அறியாமலேயே  ஒற்றை விழியிலிருந்து கண்ணீரும் கன்னத்தை நனைக்க, அவளின் உணர்வுகளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தவன் குனிந்து தன் இதழ்களால் அவளின் விழிநீரை ஒற்றிய படி, “டூ யூ லவ் மீ?” என்றான் மிக மிக மென்மையாக,

 

‘உங்கள அவ்ளோ டீப்பா லவ் பண்றேன் மாமா’ என்று கத்த வேண்டும் போலிருந்தது.

 

என்னவோ இவ்வளவு நேரம் மனதின் ஓரத்திலிருந்த படபடப்பு அகன்ற உணர்வு.

 

தனது பதிலுக்காக தன் உணர்வுகளை உள்வாங்கிய படி பார்த்திருந்தவனை நோக்கியவள் “உங்களுக்கு தெரியாதா என்ன?” என்று கேட்டவள் எம்பி அவனின் இதழ்களை முற்றுகையிட்டிருந்தாள்.

 

அதன் பின் கேட்கவும் வேண்டுமா?

 

அவளின் சம்மதம் கிடைத்து விட, அவளின் கூச்சத்தையும் மறுப்பையும் அழகாக கையாண்டு அவன் அடுத்தடுத்து செய்த செயல்களில் தடுக்கும் முயற்சியை கை விட்டு அவனுள் மொத்தமாக புதைந்து கொண்டாள்.

அவனால் உண்டான இன்ப அவஸ்தையிலிருந்து அவளால் வெளி வர முடியாத நிலை.

 

அவளுக்கு அவன் ஆடையாக படர்ந்திருக்க, அவளின் மேனி முழுதும் தன் இதழ்களால் முத்த ஊர்வலம் நடத்தியவன் ஒரு கட்டத்தில் அவளுள் மொத்தமாக ஊடுருவி விட்டான்.

 

அவளுக்கோ உயிர் போகும் வலி.

 

தன்னவனின் தனக்கேயான காதலுக்கும் மோகத்திற்கும் தன் வலியெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என சிந்தித்தவள் இதழ் கடித்து விழிகளை மூடிக் கொண்டாள்.

 

அவளை ஆட்கொள்ள ஆரம்பித்தவன் அவளின் முகத்தில் வந்து போன வலியின் சாயலை உணர்ந்து கொண்டவனாய் ஆழிப்பேரலையாய் கட்டுக்கடங்காமல் பீறிட்டு கிளம்பிய உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தவன் அவளை மிக மிக மென்மையாக ஆள ஆரம்பித்திருந்தான்.

 

 

தனக்காக உணர்வுகளை அடக்கியவனது செயலில் அவன்மேல் காதல் கரை கடந்து ஊற்றெடுக்க, அவனுக்கு தன்னை முழுதாக கொடுத்தவள் மேனியில் அவனால்  உண்டான சிலிர்ப்பு.

 

அவளின் மேனியிலோடி மறைந்த நொடிநேர சிலிர்ப்பை அவளை மொத்தமாக ஆட்சி செய்து கொண்டிருப்பவன் உணராமல் இருப்பானா என்ன?

அவளின் இதழைக் கவ்வி விடுவித்தவன் “ஆர் யூ ஒகே?” எனக் கேட்டான்.

 

அவனை பார்க்கவே கூச்சம் நெட்டித்தளியது. என்ன நிலையில் இருந்து கொண்டு என்ன கேட்டுக் கொண்டிருக்கின்றான்? இதில் ‘ஓகேவா’ எனக் கேள்வி வேறு, என்று மனதில் நொந்து கொண்டவள் “ம்ம்” என்றாள்.

 

அவளையும் மீறி குரலும் முனகலாக ஒலித்திருக்க, அதுவே அவனது உணர்வை மேலும் தூண்டி விட்டு இருக்க, அவளை தடையின்றி ரசித்து மொத்தமாக ஆட்கொள்ள ஆரம்பித்து விட்டான்.

 

இரு மனங்களிடையே காதலும் விரவிக் கிடக்கும் போது அங்கு தடைகள் ஏது?

 

நீண்ட நேரம் தொடர்ந்த மேனியின் சங்கமம் நிறைவு பெற்றிருக்க, சற்றே விலகி படுத்தவன் மார்பு வேக மூச்சுக்களால் மேலேறி இறங்கியது.

 

அவனுக்கே அப்படி என்றால் அவளை கேட்கவும் வேண்டுமா?

 

அவன் விட்டு விலகினாலும் இன்னுமே அவன் தன்னை ஆட்கொள்வதை போலிருந்தது அவளுக்கு, மேனியில் சொல்ல முடியாத என்னவோ ஓர் உணர்வு.

நிலத்துக்குள் புதைந்து விடலாமா என்கின்ற அளவுக்கு வெட்கம் பிடுங்கித்தின்றது.

 

பக்கவாட்டகத் திரும்பி அவளைப் பார்த்தான்.

வெட்கி சிவந்து போய் படுத்திருந்தவளை ரசனையாக பார்த்தவன் அவளை இழுத்து இறுக அணைத்துக் கொண்டவன் “தேங்ஸ் ஃபோர் எவ்ரிதிங் தியா” என்றவன் குனிந்து அவளின் நெற்றியில் இதழ் பதித்திருந்தான்.

 

இங்கே இருவரும் இல்லறத்தில் மூழ்கி திளைத்திருக்க, அடுத்த அறையில் பவ்யாவின் நிலையோ படு மோசமாக இருந்தது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 34

No votes so far! Be the first to rate this post.

1 thought on “நிதர்சனக் கனவோ நீ! Part 2: episode -12”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!