காதல் : 01
பச்சைப் பசேல் என்று நான்கு திசைகளிலும் பரந்து காணப்படும் வயல்வெளிகள் பார்ப்போரின் கண்களை வியக்க வைக்கும். காற்றின் திசைக்கேற்ப தமது மெல்லிய உடலை அசைத்தாடும் நெற்கதிர்களை பார்த்தாலே போதும் எவ்வாறான குழப்பத்திலோ கவலையிலையோ இருந்தாலும் சட்டென்று நமது மனம் அமைதியடையும்.
எப்போதும் வயலைச் சுற்றியோடும் வாயக்கால்களில் ஓடும் நீர் குளிர்ச்சியாகவே இருக்கும். வயல்களில் சோம்பலன்றி சுறுசுறுப்புடனும் மகிழ்ச்சியுடனும் வேலை செய்யும் ஆட்கள் என அந்த சுற்றுவட்டாரமே பார்க்க அத்தனை அழகாக இரம்மியமாக இருந்தது. இது எல்லாம் சொல்லிட்டு ஊரின் பெயர் சொல்லாம விட்டால் என்னப்பா? ஊர் பெயர் கதிரொளியூர். பெயருக்கு ஏற்றாற் போல் ஊர் எங்கும் தனது ஆயிரம் கரங்களால் கதிரவன் ஒளியினை வாரி வழங்குவான்.
கதிரொளி ஊரின் பெரிய வீட்டில் காலைப் பொழுதிலே ஏதோ பெரிய சத்தம்…….
(அவ் ஊரிலே பெரிய வீடு அந்த வீடுதான் அதை பெரியவீடு பெரிய வீடுனு சொல்லிச் சொல்லியே பழகிவிட்டனர் அவ் ஊர் மக்கள். )
அதை விடுங்க அந்த பெரிய வீட்டில் ஏதோ சத்தம் கேட்குது முதல்ல அதை என்னனு பார்க்கலாம் வாங்க ……..
“என்னங்க இதை நீங்க என்ன என்று கேக்கமாட்டீங்களா?”
“நான் என்ன செய்றது சகுந்தலா. அவனோட பேசுறதுக்கு நான் நம்ம வீட்டு சுவத்தில போய் முட்டலாம். என்னோட பேச்சை கேட்கிறானா அவன்?”
“முன்னாடி எல்லாம் அப்பா அப்பான்னு உங்களோட பேச்சைதானே கேட்டான். அதை மறந்துட்டீங்களா? ”
“அது அப்போ. ஆனால் இப்போ என் பேச்சைத்தான் கேட்கிறதே இல்லையே உன் அருமைப் பிள்ளை. ”
“அதுக்காக நீங்க அவன் வாழ்க்கைய பற்றி யோசிக்கமாட்டீங்களா? அவனுக்கு நேரமே சரியில்லை போல அதுதான் அப்பிடி நடந்துக்கிறான். அவனுக்கு ஒரு நல்லது செய்தால் தானே மற்றவனுக்கும் செய்யலாம். காலா காலத்தில அதையெல்லாம் பண்ணி வச்சிடணும்ங்க. ”
“ஏய் உனக்கு புரியுதா இல்லையா? சின்னவன் நான் சொல்வதை கேட்கிறவன். மூத்தவரு நான் சொல்வதை கேட்கிறாரா? நான் ஒண்ணு சொன்னா அவரு ஒன்னு செய்றாரு பிறகு நான் என்னடி செய்ய முடியும்? ”
“இங்க என்ன நடக்குது முத்து? மருமகளே என்ன பிரச்சனை ஏன் இவ்ளோ சத்தமா இருக்கு ” என்றபடி வந்தார் அவ் வீட்டின் தலைவர் சௌந்தரபாண்டியன்.
“பாருங்க மாமா இவரை. இவருதான் சத்தம் போடுறாரு. நான் ஒண்ணும் பண்ணலை. ”
“என்ன முத்து (முத்துப்பாண்டியன்) என்ன பிரச்சனை இங்க? மருமகள் என்ன சொல்ற? ”
“அப்பா இவளுக்கு வேற வேலை இல்லை. ”
” யாரு எனக்கா வேலை இல்லை. உங்களுக்குதான் வேலை இல்லை. மாமா கேட்கிறாருல என்னனு அதற்கு பதில் சொல்லுங்க”
” அப்பா மூத்தவருக்கு கல்யாணம் செய்து வைக்கணுமாம். ”
“அவனுக்கா அவன் யாரோட பேச்சையும் கேட்காம தனக்கு விருப்பப்பட்ட மாதிரி சுத்துறாரு அவருக்கு கல்யாணம்தான் ஒரு கேடு. உனக்கு ஏன் மருமகளே இப்பிடி தோணுது”
“ஏன் மாமா இப்பிடி கேட்கிறீங்க? அவன் இந்த வீட்டு பிள்ளைதானே.. ஏன் என்னோட பிள்ளைய இப்பிடி எல்லாரும் திட்டிட்டே இருக்கிறீங்க… அவன் அவனுக்கு பிடிச்சதை செய்கிறான். அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? அவனை அவன் போக்கிலேயே விடுங்களேன்”
“மருமகளே அவனை படிக்க வச்சது விவசாயம் பார்க்க இல்லை. வெளிநாட்டுல பெரிய இடத்தில போய் வேலை செய்ய. அங்கே போக எத்தனை பேரு தவம் செய்றான். ஆனால் இவன் தானாக தேடி வந்த வேலைக்கு போய் ஒரே வருசத்திலே ஊரோட வந்துட்டாரு. இங்க இப்பிடி வெயில்ல கிடந்து சாகிறதுக்கா படிக்க வச்சம். யாரோடையும் பேசாம திரியிறாரு. அதுமட்டுமல்லாமல் ஐயா குடிக்கிறாரு. என் மானம் மரியாதை எல்லாம் போகுது.?”
“நீங்க எல்லாரும்தானே அவனை பேசக்கூடாது என்று சொன்னீங்க.மாமா அவனுக்கு கல்யாணம் செய்து வைத்தால் சரியாயிருவான் மாமா. எனக்காக மாமா. நிச்சயமா கல்யாணம் நடந்திட்டால் குடிக்கெல்லாம் மாட்டான் மாமா. ”
“சரிமா உன்னோட முகத்திற்காகவும் நீ இவ்வளவு சொல்றதனாலையும் நான் அவனுக்கு பொண்ணு பார்க்கிறன். ஆனால் அவன் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்காட்டி என்ன பண்றது? யாரு அவன்கிட்ட பேசுறது?”
“நான் பேசுறன் மாமா சக்திக்கிட்ட. நான் சொன்னா என் பையன் கண்டிப்பா கேட்பான்.”
” சரிமா நீ இவ்வளவு சொல்றதனால நான் அவனுக்கு பொண்னு பார்க்கிறன்.”
” ரொம்ப நன்றி மாமா”
“தாத்தா”
“வாடா ரகு ( ரகுவர பாண்டியன்) என்ன இந்த நேரத்தில வீட்ல இருக்கிற. இன்னைக்கு ஆஸ்பத்திரிக்கு போகலையா?”
“போகணும் தாத்தா. நைட் வீட்டுக்கு வர நேரமாயிட்டுது அதுதான் நல்லா தூங்கிட்டன். இப்போதான் எழுந்து ரெடியாகினன் தாத்தா. தாத்தா அவனால எனக்கு ஒரே பிரச்சனை தாத்தா.”
” யாரால ரகு? ”
” வேற யாரு அம்மா. இந்த பெரிய வீட்டோட முதல் வாரிசு சக்தி. அவன்தான் பிரச்சனை பண்றான்.”
“ரகு அவன் உனக்கு அண்ணன் அதனால மரியாதையாக பேசு. அவன் இந்த வீட்டு வாரிசுனா நீ யாரு? நீயும் இந்த வீட்டு வாரிசுதானே. ”
“போங்கம்மா உங்களுக்கு அவன்தான் எப்பவும் பெரிசு. அவனுக்கு சாதகமாகத்தான் நீங்க பேசுவீங்க. அவன் என்ன பண்ணான்னு தெரியுமா? நேற்று இரவு குடிச்சிற்று வந்து என்னோட கார் கண்ணாடிய உடைச்சிப்போட்டான்”
“அவன் கண்ணாடியை உடைச்சான் சரி. ஆனால் அவன் எதுக்காக கண்ணாடியை நீ அவனுக்கு என்ன செய்த?”
“நா….நான் ஒன்றுமே செய்யலை. பாருங்க அப்பா அம்மாவை. அவங்க இப்பிடித்தான் எப்பவுமே. ”
“அவ கிடக்கிறா. நீ கவனமாக போயிட்டு வா ரகு ”
“சரிப்பா.. வாரன் தாத்தா. அம்மா போயிட்டு வாரன்.”
“சரிப்பா”
“சரி நான் நம்மளோட தோட்டத்துக்கு போய் ஒரு வாரமாச்சு ஒரு தடவை தோட்டத்துக்கு போய் அங்க என்ன நடக்குதுனு பார்த்திட்டு வாரன் ”
“சரி மாமா”
“என்னங்க நீங்களும் மாமாவும் விவசாயம் செய்றீங்க பிறகு ஏன் சக்தி (சக்திவேல் பாண்டியன் ) செய்தா மட்டும் இப்பிடி திட்டுறீங்க?”
“ஏன்டி நாங்க ஆட்களை வச்சி விவசாயம் செய்றம் ஆனா அவன் எங்கள போலவா செய்றான். அவன்தான் எல்லா வேலையும் செய்றான் ஒருத்தரையும் வயல்லை இறங்கவே விடுறானில்லையாம். நமக்கு இருக்கிற வசதிக்கு இவனுக்கு இது தேவையா ”
“பாவம் என்னோட பிள்ளை”
“அவனா பாவம் நல்ல வேலைய விட்டுட்டு வந்தான் தானே அனுபவிக்கட்டும்.”
“நம்ம புள்ளைய நம்மளே திட்டலாமா. நீங்கதானே சொல்றீங்க நம்மட வசதிக்கு அவன் வேலை செய்யலாமா என்று கேட்டீங்க பிறகு ஏன் வெளிநாட்டுக்கு போகல என்று திட்டுறீங்க”
“நம்மளோட மகன் வெளிநாட்டுல இருக்கிறான் என்று சொல்றது எவ்வளவு பெருமை தெரியுமா?அவன் செய்ற வேலைக்கு போ அந்தப்பக்கம் ” என்ற சௌந்தரபாண்டியன் பஞ்சாயத்து ஒன்றுக்கு சென்றார்.
“சரஸ்வதி….”
“என்னம்மா?” என்றபடி வந்தார். அவ் வீட்டு வேலைக்காரி சரஸ்வதி.
“சக்தி சாப்பிட்டானா?”
” ஆமா அம்மா நீங்க கோவிலுக்கு போனபிறகுதான் சாப்பிட வந்தாரு. சாப்பாடு எடுத்து வச்சன் சாப்பிட்டாருமா”
“சரி உன்னோட மகள் சத்தியரூபா எங்க? இப்ப வீட்டுக்கு வாரதே இல்லை. ஏன்?”
“அது…..அவள் வீட்டிலேயே இருக்கிறாள்மா. உடை தைக்கிறாள்.”
“ஆ… சரி சரி நீ போய் வேலைய பாரு. சமையல் வேலை செய்ததும் துவைக்கிறதுக்கு துணி இருக்கு அதையும் துவைச்சிடு. ”
” சரிங்க அம்மா”
சரஸ்வதியின் குடிசை………….
” ஹைதர் கால வேடன்தான்
குதிரை ஏறி வருவானோ
காவல் தாண்டி என்னைத்தான்
கடத்திக்கொண்டு போவானோ
கண்ணுக்குள் முதல் நெஞ்சுக்குள் வரை ஆசை சேமிக்கிறேன்
யார் அவனோ….” என்று தனக்குள் பாடலை முணுமுணுத்தவாறு
உடைகளை தைத்தபடி இருந்தாள் சத்தியா(சத்தியரூபா).
“ஐயோ எவ்வளவு துணி இருக்கு தைக்கிறதுக்கு கைகால் எல்லாம் வலிக்குது. என்ன பண்ணலாம்? ”
” ஆ.. கொஞ்ச நேரம் எழுந்து நடக்கலாம்” என்று யோசித்தவள் எழுந்து நடக்க ஆரம்பித்தாள். அப்போதுதான் அம்மா சரஸ்வதி சொல்லிச் சென்றது ஞாபகம் வந்தது.
“சத்தியா துணியை ரொம்ப நேரத்திற்கு தச்சிட்டே இருக்காத. சாப்பிட்டு ஓய்வெடுத்திட்டு அப்புறமா தைக்க ஆரம்பி ” என்று சொல்லிவிட்டே சரஸ்வதி வேலைக்குச் சென்றார்.
அவர் சொல்லிவிட்டுச் சென்றது நம்ம ஹீரோயினுக்கு ஞாபகம் வந்தது. உடனே சமையல் செய்யும் பகுதிக்குச் சென்றாள்.
ஆமாங்க சரஸ்வதியும் சத்தியாவும் ரொம்ப ஏழைங்க. சரஸ்வதி பெரிய வீட்ல வீட்டு வேலைகள் செய்துகொள்கிறார். சத்தியரூபா தனக்கு தெரிந்த தைக்கும் வேலையை செய்து கொண்டு தாய்க்கு உதவியாக இருக்கிறாள். இருவருக்கும் வரும் பணம் உண்பதற்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்.
இவர்கள் இருவரும் ஒரு குடிசையில்தான் இருக்கிறார்கள். அக் குடிசையின் உள்ளேதான் சமைப்பதற்கு என்று சிறிய இடத்தை ஒதுக்கி வைத்திருந்தனர். அந்த இடத்திற்குதான் சத்தியா சென்றாள்.
அங்கே வழக்கம் போல ரொட்டியும் சம்பலும் இருந்தது. அதை எடுத்துப் பார்த்து விட்டு தினமும் இதுதானா என்று சலிக்காமல் சாப்பாட்டை மகிழ்ச்சியாகவே சாப்பிட்டாள் சத்தியா.
சாப்பிட்ட பின்னர் தட்டை கழுவி வைத்து விட்டு தைப்பதற்காக தனது ஆஸ்தான இடமான தையல் மிஷின் இருக்கும் இடத்திற்குச் சென்றாள் சத்தியா.
மீண்டும் தனக்கு பிடித்த பாடலை பாடியவாறு தைப்பதற்கு ஆரம்பித்தாள்.
“உன்னை தினம் எதிர்பார்த்தேன்
உன்னை தினம் எதிர்பார்த்தேன்
நீ வரும் வழி பார்த்து
நெற்றிக்குப் பொட்டிட்டு
காதணி மூக்குத்தி கைவளையல் போட்டு கூந்தலில் மலர் சூடி…” என்று பாடியவாறு எதேச்சையாக குடிசை வாசலினைப் பார்த்தாள் சத்தியா. அங்கே குடிசை வாசலில் தெரிந்த நிழலை பார்த்தவள் உடனே அதிர்ச்சியில் கதிரையில் இருந்து எழுந்தாள்..
வாங்க பட்டூஸ் எல்லோரையும் தெளிவாக சொல்றன்.
தாத்தா : சௌந்தரபாண்டியன்
அப்பா : முத்துப்பாண்டியன்
அம்மா : சகுந்தலாதேவி
மூத்தமகன் : சக்திவேல் பாண்டியன் ( நம்ம கதையோட ஹீரோ)
இரண்டாவது மகன் : ரகுவர பாண்டியன் (doctor )
வேலைக்காரி : சரஸ்வதி
மகள் : சத்தியரூபா
இவங்கதான் இந்த கதையோட பயணிக்கப்போறவங்க… இடையிடையே சில கதாப்பாத்திரங்களும் அப்பப்போ வந்திட்டு போவாங்க…
சத்யரூபா அதிர்ச்சியடையக் காரணம் என்ன??????
கதையில் நடைபெறும் மாற்றங்களை அறிந்து கொள்ள கதையோடு இணைந்து பயணியுங்கள் பட்டூஸ் …..
🥰❤️
Thank you thangam 😊
Wow 😲
Thank you akkachi 😊