நேச தாழ் திறவாயோ உயிரே..!! 03, 04

5
(8)

Episode – 03

ஆழினியிடம் பேசி விட்டு மன நிம்மதியுடன் வெளியில் வந்தவனின் நெற்றியை எதிர்பார்க்காமல் ஒரு கல் வந்து அடிக்கவும் வலியில் நெற்றியைத் தேய்த்தவன் சுற்றும் முற்றும் பார்க்க அவனுக்கு நேராக ஒரு கையில் உண்டிகோலை வைத்து ஆட்டிய வண்ணம் நின்று கொண்டு இருந்தாள் மாயா என அழைக்கப்படும் அந்த இடத்தின் குட்டி ரவுடி மாயாதேவி.

அவளோ அவனுக்கு அடித்து விட்டு எந்த விதமான சலனமும் இன்றி நின்றிருக்க அவனுக்கு அந்த வலியிலும் அவளைப் பார்த்தால் ஏனோ கோபம் வர மறுத்தது.

(இதே ஓரு ஆம்பிள அடிச்சு இருக்கணும் அப்போ தெரியும் சேதி.)

அவளோ அவன் தன்னைப் பார்த்ததும் விரலை அவனை நோக்கி நீட்டி “உன்னோட சிரிப்பால தான் அப்போ நான் மாட்ட வேண்டியதாப் போச்சு, அதோட அவங்க என்னோட சாக்கியையும் பறிச்சிட்டாங்க. அதான் உன் மேல இருக்கிற கோபத்தில இப்பிடிப் பண்ணினேன்.” என தப்பைக் கூட தைரியமாகச் சொன்னவளைக் கண்டு அவனுக்குள் அவள் மேலான ஈர்ப்பு இன்னுமின்னும் கூடியதே தவிர குறையவில்லை.

வினிதனோ அவளைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளும் வண்ணம் “ஏய் பொண்ணு உனக்கு கொஞ்சம் கூட என்னைப் பார்த்தால் பயமா இல்லை. நான் உன்னை விட எவ்ளோ பெரியவன் தெரியுமா?” என்று அவளைச் சீண்டினான்.

அவளோ அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டே அவன் அருகில் வந்தவள் ஒரு முறை அவனை மேலிருந்து கீழாகப் பார்த்தபடி “உனக்கு எத்தனை வயசு? “ என்று கேட்டாள்.

அவனோ “ஆடு சிக்கிடிச்சு. “ என்று எண்ணி உள்ளுக்குள் சிரித்த வண்ணம் வெளியில் விறைப்பாக முகத்தை வைத்துக் கொண்டு “இருபத்தொன்பது.” என்று சொன்னான்.

“ஹா…. ஹா…. என்னை விட உனக்கு ஜஸ்ட் ஒன்பது வயசு தான் கூட, நீ அப்பிடி ஒண்ணும் என்னை விட பெரியவன் இல்லை. பார் உயரத்தில கூட நான் உன்னோட தோள் மட்டத்தில நிக்கிறன் தானே…. அப்புறம் நீ எதில தான் என்னை விடப் பெரியவன்? “ என்று அவனிடமே பதிலுக்குக் கேட்டாள்.

(அவன் சும்மா இருந்தாலும் இவ அவனை சும்மா இருக்க விட மாட்டா போலேயே….)

மாயூ அவனுக்கு அருகில் நின்று இயல்பாய் உரசி உரசிப் பேச,

அவனோ அவள் அருகில் நொடிக்கு நொடி தடுமாறும் தனது மனதை அடக்க முடியாது தத்தளிக்க ஆரம்பித்தான்.

அவளோ அப்போதும் விடாது சிறு பிள்ளை போல பெரு விரலில் எட்டி நின்று அவனின் தலையைத் தொட முயன்றதில் கால் பிறழ்ந்து கீழே விழப் போனாள்.

இதை எதிர் பார்க்காதவன் தன்னிச்சையாக அவளது இடையைப் பிடித்து தன்னுடன் இறுக்கி அவள் விழாது காப்பாற்றினான்.

வாய் துடுக்காகப் பேசிக் கொண்டு இருந்த மாயாக்கு அவனின் இந்த தொடுகை காரணம் இன்றி கன்னத்தை சிவக்க வைத்தது.

அவளோ அவனிடம் இருந்து விலகி தலை குனிந்து நின்றாள்.

அவளின் இந்தப் பரிமாணம் அவனுக்கு மேலும் அவள் மீதான ஆசையைத் தூண்ட சுற்றிப் பார்த்தவன் யாரும் இல்லை என்றவுடன் அவளை நெருங்கி “உன்னோட வீடு எது மாயூ? உன்னோட பெற்றோர் என்ன செய்றாங்க?” என்ற கேள்விகளைக் கேட்க,

அவளோ தலை நிமிராது “என்னோட வீடு ஆழினி வீட்டில் இருந்து மூன்று வீடு தள்ளித்தான் இருக்கு. அப்புறம் எனக்கு பாட்டியைத் தவிர யாரும் இல்லை என்னோட அம்மாவும், அப்பாவும் நான்கு வருசத்துக்கு முன்பாக நடந்த ஒரு சாலை விபத்தில் இறந்துட்டாங்க சார். “ என்று குரல் கமறக் கூறினாள்.

அவனின் மீது மரியாதை இப்போது அவளுக்கு தானாகவே வந்தது.

அவளின் வேதனையை அவளது குரலிலேயே உணர்ந்து கொண்டவனின் கைகள் அவளை அணைத்துக் கொள்ள பரபரத்தது.

பெற்றோர் இல்லாதவர்களுக்குத் தான் அதே போல் உள்ளவர்களின் வலி புரியும்.

கட்டுப்பாடு மீறத் துடித்த கைகளை தனது பேண்ட் பாக்கட்டில் போட்டுக் கொண்டவன் “அப்புறம் உன்னோட படிப்பு? “ என்று இழுக்க,

 

“ஹ்ம்ம்ம்ம்ம்…. நான் இங்க உள்ள காலேஜ்ல பி. ஏ படிக்கிறன் சார், பார்ட் டைம்ல இங்க உள்ள தேயிலைத் தொழிற்சாலையில கணக்கு வழக்குப் பார்க்கப் போவேன் சார். “ என்றவளுக்கு தான் ஏன் இதனை எல்லாம் அவனிடம் சொல்கிறோம் என்பதற்கான காரணம் தான் தெரியவில்லை.

வினிதனுக்கு அவளது நிலையைப் பார்க்க அத்துணை கவலையாக இருந்தது.

அவன் முடிவே பண்ணி விட்டான் இனி தனது வாழ்வில் பெண் என்றால் அது மாயூ மட்டும் தான் என்று.

ஆகவே தயக்கமின்றி அவளின் விரல்களைப் பற்றியவன் “மாயூ பேபி இனி உனக்கு எல்லாமுமாக நான் இருப்பேன். “என்று கூறி அவளின் விரல்களை அழுத்தி விடுவித்து விட்டுச் செல்ல,

அவளோ அவனின் செய்கையில் வியந்து போய் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளுக்கும் அவன் எந்த அர்த்தத்தில் அந்த வார்த்தைகளைக் கூறிச் சென்றான் என்று புரியத் தான் செய்தது.

“ஆனாலும் பார்த்து அரை மணி நேரத்திற்குள் இந்தக் காதல் சாத்தியமா?”என எண்ணிக் குழம்பிப் போனவள் செல்லும் அவனையே விழி விரித்துப் பார்க்க,

“அவனோ, எல்லாம் சாத்தியம் தான் பேபி உன்னைப் பொண்ணுப் பார்க்க வந்த மாப்பிள்ளையா என்னை நினைச்சுக்கோ. “என்று சொல்லியபடியே காரில் ஏறிச் சென்றான்.

அவனின் பேச்சில் அவளுக்கும் மனசு இலேசாக மாற சிரித்துக் கொண்டு அங்கிருந்து சென்றாள்.

வினிதன் அங்கிருந்து கிளம்பி நேராகச் சென்றது பெலிக்கல் எப். எம்ற்குத் தான்.

அங்குள்ள நிகழ்ச்சி முகாமையாளரிடம் ஆழினியைக் கூட்டிக் கொண்டு செல்வதாகக் கூறி அவளுக்கு கஷ்டம் ஏற்படுத்தாமல் தானே எல்லா வேலைகளையும் செய்தவன்,

மாலைப் பொழுது நெருங்கும் நேரம் ஜிதினுக்கு மீண்டும் அழைத்து ஆழினி வீட்டுக்குச் சென்றது முதல் நடந்தவற்றை சுருக்கமாகக் கூறி முடித்தான்.

அதில் மாயுவின் விசயமும் உள்ளடக்கம்.

அவன் கூறியவற்றுக்கு எல்லாம் ஜிதினின் பதில் மௌனம் மட்டுமே.

பேசி முடிக்கையில் கடைசியில் மாத்திரம் ஆழினியை கவனமாக அழைத்து வரச் சொன்னவன்,

“மாயுவின் படிப்பு முடியட்டும் மீதியைப் பிறகு பார்க்கலாம்.” என்று கூறி விட்டு அழைப்பைத் துண்டித்தான்.

அவன் எப்போதுமே அப்படித் தான். இரண்டு அல்லது மூன்று வரிகளில் மட்டுமே பதில் சொல்லுவான்.

ஆனால் அவனது செய்கைகள் யாவும் அதற்கு நேர் எதிராக அதிரடியானதாக இருக்கும்.

அவனிடம் பேசி முடித்து விட்டு தாமதம் இன்றி ஆழினியை அழைத்து வரச் சென்றவன் அதற்கு முன்பாக மாயு சொன்னதின் படி அவளது வீட்டிற்கு செல்ல,

அவளும் அவனை எதிர்பார்த்திருந்தது போல வீட்டு வாசலிலேயே நின்றிருந்தாள்.

அவளிடம் தான் அவளுக்காக தேடி வாங்கிய ஒரு பட்டுச் சேலையைக் கொடுத்தவன் “இதோட ஒரு நாள் உன்னைக் கூட்டிப் போக வருவேன்.

அது வரைக்கும் என்னை மறக்காம இரு மாயூ.” என்றவன்,

அவளுக்கு தனது ஃபோன் நம்பரையும் கொடுத்து விட்டு ஒரு தலை அசைப்புடன் அவளிடம் இருந்து விடை பெற்றான்.

அதன் பின்பு ஆழினியை அழைத்துக் கொண்டு சென்னை நோக்கிப் பயணம் ஆனான்.

ஊட்டிக்கு வரும் போது வெள்ளைக் காகிதமாக இருந்த அவனது மனது அங்கிருந்து கிளம்பும் போது மாயூ…. எனும் பெண்ணவளின் நினைவுகளை சுமந்த வர்ணக் காகிதமாக மாறிப் போய் இருந்தது தான் விந்தை.

பயணத்தின் போது அப்போது தான் நியாபகம் வந்தவன் போல “ஆழினி உன்னோட வயசு என்ன? “ என்று கேட்டான்.

அவளோ, சின்னச் சிரிப்புடன் “இருபத்தைந்து வயசு அண்ணா, ஏன் இந்த திடீர்க் கேள்வி?”

“இல்லம்மா நான் உன்னோட வாய்ஸ்சையும், பேச்சையும் கேட்டு ஏதோ உனக்கு வயசு முப்பதிற்கு மேல இருக்கும் எண்டு நினைச்சேன். ஆனா நீ ரொம்ப சின்னப் பொண்ணு தான்.”

“ம்ம்ம்ம்ம்….”

“அப்புறம் இன்னொரு விசியம், எப்பிடி என்னோட குரலை போன்ல ஒரு தரம் கேட்டுட்டு என்னை சரியாகக் கண்டு பிடிச்சாய்?, எனக்கு அது ரொம்ப ஆச்சரியமா இருந்திச்சு.”

“ஓஹ்…. அதுவா அண்ணா. அது எனக்கு உள்ள ஒரு பழக்கம் எண்டு வைச்சுக்கோங்களேன். நான் சின்ன வயசில இருந்தே அப்படித்தான் அண்ணா. ஒரு தடவை கேட்ட குரலை ஈஸியா கண்டு பிடிச்சிடுவன்.”

“ம்ம்ம்ம்…. ஓகேம்மா. நீ கெட்டிக்காரி தான். “ என்றவன் தொடர்ந்து பொது விஷயங்கள் பற்றிப் பேச அவளும் பேசினாள்.

அப்படியே இருவரும் சென்னை வந்து சேர்ந்தனர்.

அவளை அவர்களது கெஸ்ட் ஹவுஸ்சில் தங்க வைத்தவன் மார்னிங் வருவதாகக் கூறி விடை பெற்றுச் செல்ல ஆழினியின் மனது ஏனோ ஒரு ஒவ்வாமை நிலையை உணர்ந்தது.

“வேலை முடிஞ்சதும் நாம சீக்கிரம் இங்கிருந்து கிளம்பிடணும். “ என்று முடிவு பண்ணியவள் ஒருவாறு பல சிந்தனைகளுடன் உறக்கத்தைத் தழுவினாள்.

மறு நாள்ப் பொழுது அழகாகப் புலர வழமையான வழக்கத்தில் காலை ஐந்து மணிக்கே கண் விழித்தவள் ஜன்னல் திரைச் சீலையை விலக்கி அதன் வழியே வெளி உலகத்தைப் பார்த்தாள்.

அந்த விடிகாலைப் பொழுதிலேயே சென்னை நகர மக்களின் அன்றாட நடவடிக்கைகள் தொடங்கி இருக்க, 

அங்கிருந்து பார்வையை அகற்றியவள் தானும் தனது யோகாப் பயிற்சிகளை ஒழுங்காக செய்து முடித்தாள்.

அதன் பின்பு வினிதன் சொன்னது போலவே காலை ஏழு மணிக்கு குளித்து முடித்து மஞ்சள் நிறச் சேலையில் மங்களகரமாகத் தயாராகினாள்.

அவனும் சொன்ன நேரத்திற்கு வர இருவரும் ரெடி ஆகி ஜிதினின் அலுவலகம் நோக்கிச் சென்றனர்.

அங்கு அவளை ஜிதினின் கேபினுக்கு வெளியில் அமர்த்தியவன் உள்ளே செல்ல,

வழமையாக அவனுக்கு முன்பாகவே ஆபீஸிற்கு வரும் ஜிதின் இன்னும் வந்து சேரவில்லை.

வினிதனோ “என்னாச்சு பாஸ்சுக்கு ஏன் இன்னும் வரல?” என்று எண்ணியபடி அவனுக்கு ஃகால் பண்ண,

எடுத்தவன் “நான் ஒரு முக்கியமான வேலையா வெளில போறேன். என்னோட ரூம்ல இருக்கிற டேபிள்ல லாஸ்ட் ட்ரோயர ஓப்பன் பண்ணு, அதுக்குள்ள ஆழினி என்ற பெயரோட ஒரு பைல் இருக்கும். அதில் உள்ள பேப்பர்ஸ்சில் அந்தப் பொண்ணுக் கிட்ட சைன் வாங்கு ஓகே. “

“சரி சார். பட், இவ்ளோ நாளும் இப்பிடி சைன் வாங்கினது இல்லையே அதுவும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் கிட்ட தேவையே இல்லையே. “

“நீ சொல்றது சரிதான். ஆனா இந்தப் பொண்ணு புதுப் பொண்ணு, வெளி இடம் வேற. சோ, என்னால உடனே நம்ப முடியாது, கண்டிப்பா சைன் வாங்கி வை. நான் இன்னும் டுவெண்ட்டி மினிட்ஸ்ல அங்க இருப்பேன்.” என்றவன் ஃபோனை வைக்க,

அவனின் புதுவிதமான செய்கைகளில் குழம்பித் தான் போனான் வினிதன்.

ஆனாலும் அவன் சொன்னது போல அந்த பைலை எடுத்துக் கொண்டு போய் அவளிடம் நீட்ட அதைப் படித்துப் பார்த்தவள் அதில் உள்ள விடயங்களைக் கண்டு அதிர்ந்து போய், “அண்ணாஆஆஆஆ….” என்று கூவினாள்.

அப்படி என்ன விடயம் தான் அதில் எழுதி இருந்தது?

ஜிதினின் அடுத்த நடவடிக்கை என்ன?

அடுத்த பதிவில் பார்க்கலாம்.

போன எபிக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் போட்ட நண்பர்களுக்கு நன்றிகள். இந்த எபிக்கும் உங்கள் லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் தாங்க மக்காஸ்…. லைக்ஸ் கூட வந்தால் அடுத்த எபி நாளைக்கே வரும் மக்காஸ்…… 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖❤❤❤❤❤❤❤❤❤

Episode- 04

அந்த பைலில், ஆழினி அவர்களின் அடுத்த ஐந்து படங்களுக்கும் தொடர்சியாக டப்பிங் பேச வேண்டும் என்றும், அவள் கண்டிப்பாக ஜிதின் கம்பெனியில் ஆறு மாதம் வேலை செய்ய வேண்டும் என்றும் போடப்பட்டு இருந்தது.

இது தவிர அவளுக்கு கொடுக்கப் படும் சம்பளம் பற்றியும் தெளிவாக குறிப்பிடப் பட்டு இருந்தது.

இவற்றுக்கும் மேலதிகமாக இந்த நிபந்தனைகளுக்கு சம்மதித்து கை எழுத்து போட்ட பின்பு அதில் இருந்து விலக நேர்ந்தால் அவளின் சம்பளம் எக் காரணம் கொண்டும் கொடுக்கப்பட மாட்டாது என்றும்,

அதோடு அந்த சம்பளத்தின் ஐந்து மடங்கு பணத்தை அவள் கம்பெனிக்கு மீள கொடுக்க வேண்டும் என்றும்,

அதுவும் இயலாத பட்சத்தில் அந்த நிறுவன உரிமையாளர் எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் நான் கட்டுப்படுவேன் என்று உறுதி கூறுகிறேன் என்பதும் சேர்த்து அதில் போடப்பட்டு இருந்தது.

அவளுக்கு அப்போதும் கூட அந்த நிறுவன உரிமையாளர் யார் என்பதோ, அவரின் பெயர் என்ன என்பதோ தெரியவில்லை.

அவளும் அதை வினிதனிடம் கேட்கவில்லை, அவனும் சொல்ல முயலவில்லை.

வினிதன் மீது அப்படி ஒரு நம்பிக்கை அவளுக்கு இருந்தது.

அந்த பத்திரங்களைப் படித்து முடித்தவள் அதை நேரடியாக வினிதனிடம் காட்டி “இதற்கு என்ன அர்த்தம் அண்ணா? “என்று கலக்கமாக வினவினாள்.

அவனுக்கே தெரியாத விடயத்திற்கு அவன் எப்படி பதில் சொல்லுவான்?

“அண்ணா, இதெல்லாம் நீங்க எனக்குச் சொல்லவே இல்லை.நான் உங்களுக்காக ஒரு பத்து நாள் மட்டும் தான் இங்க இருப்பதாக ஒத்துக் கொண்டேன்.”

“இந்த நிபந்தனை எதுக்கு எண்டு எனக்குப் புரில அண்ணா. நான் உங்களை ஏமாத்திடுவேன் எண்டு நீங்களும், உங்க பாஸ்சும் நினைச்சா இந்த வேலையே எனக்கு வேண்டாம். நம்பிக்கை இல்லாத இடத்தில் என்னால வேலை செய்ய முடியாது அண்ணா. எனக்கு என்னோட பழைய வேலையும் சம்பளமுமே போதும்.”என்றவள் ஒரு முடிவுடன் அந்த பைலை அவனிடம் கொடுக்க,

வினிதனுக்குமே அவனது நண்பனின் இந்த திடீர் மாற்றங்கள் பீதியைக் கிளப்ப அவளைத் திருப்பி அனுப்பும் முடிவுக்கு அவனும் வந்திருந்தான்.

ஆழினி அவனிடம் சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்ப ஆய்த்தமாக அதே நேரம் அவளது ஃபோன் அடித்து தனது இருப்பைக் காட்டியது.

ஆழினி அழைப்பை ஏற்க, மறுபக்கம் அவளது எப். எம் முகாமையாளர் “ஆழினி நம்ம எப். எம்மை ஒருத்தர் இரவோடு இரவா விலை பேசி வாங்கிட்டார். சோ, இனிமேல் நமக்கு அங்க வேலை கிடையாது என்று சொல்லிட்டாங்கம்மா. “ என்று கவலையுடன் கூற,

அவளோ “இதென்னடா புதுப் பிரச்சனை? “ என எண்ணி தலையில் கை வைத்து உட்கார்ந்தாள்.

அவளைச் சுற்றி இரு நாட்களாக என்ன நடக்கின்றது என்பது அவளுக்குப் புரியாத புதிராகவே இருந்தது.

ஏதோ ஒரு மீள முடியாத சுழலில் மாட்டிக் கொண்டு இருப்பதைப் போன்ற உணர்வு அடிக்கடி உருவாக அந்த இடமே அவளுக்கு மூச்சு முட்டுவது போல் இருந்தது.

அவளின் நிலைமையைக் கண்ட வினிதன் அவளிடம் என்ன என்று கேட்க அவள் நடந்ததைக் கூறி விட்டு சோர்ந்து போய் அமர்ந்தாள்.

வினிதனுக்கு அப்போதும் இதற்குக் காரணம் ஜிதினாக இருக்குமோ என்ற ஐயம் காரணமின்றித் தோன்ற,

அதைப் புறம் தள்ளியவன் ஆழினியைப் பார்த்து “சரிம்மா, இதுக்கெல்லாம் நீ கவலைப்படாத. உன்னோட தகுதிக்கு வேற நல்ல வேலை கிடைக்கும். அல்லது நானே உனக்கேற்ற மாதிரி ஒரு வேலை வாங்கித் தர்றேன். இப்போ போகலாம் வா, நானே உன்னைக் கொண்டு போய் ஊட்டில

விடுறேன். “ என்றவன் அவளை மீண்டும் அவர்களது கெஸ்ட் ஹவுஸ்ற்கு அழைத்து வந்தான்.

அங்கு அவள் தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு வெளியில் வரவும் அவளை சுமந்து கொண்டு அவனது கார் மீண்டும் அவளது இருப்பிடம் நோக்கி நகர ஆரம்பித்தது.

அந்த நேரத்தில் அவன் ஜிதினுக்கு அழைத்து நிகழ்ந்தவற்றைக் கூற வேண்டும் என்பதைக் கூட மறந்து போனான்.

அவள் கார் இருக்கையில் கண்களை மூடி சாய்ந்தவாறு இருக்க, மீண்டும் அவளது ஃபோன் அடித்தது.

அசிரத்தையாக அதனை தூக்கிப் பார்த்தவளுக்கு அழைப்பது அவளது அன்னை என்றதும் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாக ஓட ஆரம்பித்தது.

இருக்காதா பின்னே. கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக ஒரு வார்த்தை கூட பேசாத அவளது அன்னை அவளுக்கு அழைப்பு எடுத்தால் அவளுக்கு அழுகை வராது இருந்தால் தான் அதிசயம்.

வினிதன் கண்ணாடி வழியே அவளின் அழுகையைக் கண்டு வண்டியை ஓரமாக நிறுத்தினான்.

அதற்குள் ஆழினி அந்த அழைப்பை ஏற்று “அம்மாஆஆ….”என்றதும்,

 மறுபக்கம் “ஆழினி நீ எங்க இருந்தாலும் உடனடியா இந்த ஹாஸ்பிட்டலுக்கு வா. “ என்று தஞ்சாவூரில் உள்ள பிரபல தனியார் வைத்திய சாலையின் பெயரைச் சொல்லி விட்டு அழைப்புத் துண்டிக்கப்பட,

அவளோ “யாருக்கு என்னவாயிருக்கும்?, ஒரு வேளை அப்பாக்கு ஏதும்….” என்று நினைத்தவளுக்கு அதற்கு மேலும் சிந்திக்கப் பயமாக இருந்தது.

பயந்து போய் இருந்தவளிடம் என்னவென்று கேட்ட வினிதனுக்கு ஹாஸ்பிட்டல் விபரம் மட்டும் சொன்னவள் அவனை நோக்கி தயக்கமான பார்வை ஒன்றை வீச,

அவனோ அதைக் கவனிக்காது காரை மின்னல் வேகத்தில் தஞ்சாவூர் நோக்கி ஓட்ட ஆரம்பித்தான்.

“ஆழினி, அம்மா போன் என்றதும் பேச முதலே எதுக்கு அப்பிடி அழுதாய்? “

“என்னோட அம்மா, அப்பா என் கூட கடைசியாப் பேசினது  நாலு வருஷத்துக்கு முன்பு தான் அண்ணா. அதுக்குப் பிறகு இப்போ தான் எனக்கு ஃகால் பண்றாங்க, அப்போ எனக்கு அழுகை தானே வரும் அண்ணா?”

“எத, நாலு வருஷம் பேசாம இருந்தியா? அப்படி என்ன தான் ஆழினி பிரச்சனை உனக்கு?” என்று கேட்டான் வினிதன்.

அப்போது தான் பதட்டத்தில் தான் அனைத்தையும் உளறியதை உணர்ந்தவள் “ஹ்ம்ம்ம்…. அதை இப்போ கேட்காதீங்க அண்ணா.

நேரம் வரும் போது நானே சொல்றேன் ப்ளீஸ். “

“ம்ம்ம்ம்ம்…. சரிம்மா. “ என்றவன் அவளை தஞ்சாவூரில் உள்ள ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு சென்று விட,

அவனைத் திரும்பியும் பார்க்காது புயல் வேகத்தில் உள்ளே நுழைந்தவள் தாயைத் தேடிச் செல்ல,

அவரோ அவசர சிகிச்சைப் பிரிவின் முன்பாக நின்று கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார்.

நான்கு வருடத்தில் மெலிந்து, உடல் கருத்து யாரோ போல் இருந்தவர் ஆழினியைக் கண்டதும் ஓடி வந்து அணைத்துக் கொண்டு “ஆழி…. அவருக்கு ஏதும் ஆகிடுமோ எண்டு பயமா இருக்குப் புள்ள. இங்க ஏதேதோ சொல்றாங்க. எனக்கு ஒண்ணுமே புரில.” என்று சொல்லி புடைவைத் தலைப்பால் வாயைப் பொத்திக் கொண்டு அழ,

அவரை ஒருவாறு சமாதானப் படுத்தியவள் டாக்டரிடம் சென்று விடயத்தை என்னவென்று கேட்டறிந்தாள்.

அவர் சொன்னதின் சாராம்சம் இது தான்.

அவளது தந்தைக்கு ஐந்தாறு இடத்தில் இருதய இரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பதால் உடனடியாக அவருக்கு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்து அவற்றை அகற்ற வேண்டும். இல்லை எனில் அவரின் இதயம் எந்த நேரத்திலும் தனது செயற்பாட்டினை நிறுத்தி விடும் அபாயம் உள்ளதாகக் கூறினார்.

அதோடு அந்த ஆப்ரேஷனுக்கு ஏறத்தாழ பத்து லட்சம் செலவாகும் என்றும் கூறினார்.

அவர் சொன்னதைக் கேட்டவளுக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருக்க, அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

அப்போது தான் அந்த டப்பிங் பேசும் வேலை பற்றி நினைவுக்கு வர திடமான  முடிவு ஒன்றை எடுத்தவள் தாய்க்கு ஆறுதல் கூறி அவரை உணவு உண்ண வைத்து விட்டு பணத்துடன் திரும்பி வருவதாகக் கூறி விட்டு வெளியில் வந்து அவசரமாக வினிதனைத் தேடினாள்.

அவனோ அவளை இறக்கி விட்டதும் கிளம்ப மனம் இன்றி பார்க்கிங் ஏரியாவில் வெயிட் பண்ணிக் கொண்டிருக்க ஜிதின் அவனுக்கு அழைத்தான்.

அப்போது தான் அவனுக்கு சொல்லாமல் வந்ததை எண்ணிப் பார்த்தவன்,

ஃகாலை ஆன்ஸர் பண்ணி “சாரி பாஸ்…. ஒரு சின்ன பிரச்சனை, அது வந்து….”

“ரொம்ப இழுக்காத, உன்னோட பாசமலர் சைன் பண்ண மாட்டாங்க எண்டு சொன்னதும் அவங்களை கொண்டு போய் விட சார் ஊட்டிக்கு கிளம்பிட்டீங்களோ?” என்று கேலியாக வினவினான் ஜிதின்.

“இல்லடா…. இது வேற பிரச்சனைடா, என்றவன் நடந்ததைக் கூறி விட்டு,

“அது சரி உனக்கு எப்பிடி அவ சைன் வைக்கல எண்டு அவ்வளவு உறுதியா தெரியும்டா? “

“ஆங்….வெத்திலையில மை போட்டுப் பார்த்தேன்டா.”

“டேய் ஏன்டா இருக்கிற கடுப்புக்கு நீ வேற எரிச்சலைக் கிளப்புறாய்?’

“ஓகேடா கூல். நான் கம்பெனிக்கு வந்து பார்க்கும் போது அந்தப் பொண்ணு இல்ல, உன்னையும் காணல. அதனால இப்பிடித் தான் நடந்து இருக்கும் எண்டு கெஸ் பண்ணினேன்.”

“ஓஹ்…. ஓகே, டைரக்டர் சார்.” என்று சிரித்தவன்,

“சரிடா மச்சி, நான் அந்தப் பொண்ணைக் கொண்டு போய் அவங்க ஊர்லயே விட்டுட்டு வரேன்.உனக்கு அதில ஒன்றும் பிரச்சனை  இல்ல தானேடா?”

“இல்லடா இதில எனக்கு என்ன பிரச்சனை இருக்கப் போகுது?, டப்பிங்குக்கு வேற பொண்ணுப் பார்த்திட்டாப் போச்சு ரிலாக்ஸ் மச்சி.” என்று அழைப்பைத் துண்டித்தவன் அவனது கம்பெனிக்குப் போகவே இல்லை என்பது தான் உண்மை.

ஆனாலும் அவள் கண்டிப்பாக அந்த ஆஃபர்க்கு ஒத்துக் கொள்ள மாட்டாள் என்று அவன் நிச்சயமாகக் கூறியதன் காரணம் தான் என்ன?

அவளைப் பற்றிய அவனது எண்ணம் தான் என்ன?

அவன் மனதின் மர்ம முடிச்சுக்கள் அவிழும் நாள் எந்நாளோ?

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

4 thoughts on “நேச தாழ் திறவாயோ உயிரே..!! 03, 04”

    1. தாரதி

      அடுத்த இரண்டு எபி வந்தாச்சுடா 😍😍😍😍😍😍 நைட் இன்னும் இரண்டு எபிகள் வரும் 😍😍

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!