பணமா? குணமா?

4.8
(32)

பணமா? குணமா?

கதவில் சாய்ந்த படி அமர்ந்திருந்தாள் நித்யஸ்ரீ!

“பெரியம்மா வாங்க விளையாடலாம்”, என்று அவளது தங்கையின் நான்கு வயது மகன் சித்தார்த் அழைத்தான்.

“கொஞ்ச நேரத்துல வரேன் டா கண்ணா”, என்று அவள் சொல்ல, சரி என்று தலையாட்டி விட்டு அவனும் சென்று விட்டான்.

அப்போது தான் உள்ளே நுழைந்தான் குணவாளன்!

அவளது தங்கையின் கணவன், அவளிற்கு கணவன் ஆக வேண்டியவன் தான். ஆனால் அவள் தான் அவனை நிராகரித்து விட்டாலே!

அதுவும் என்ன வார்த்தைகள் எல்லாம் சொல்லி நிராகரித்தால் என்று நினைக்கும் போது இன்றும் மனது பிசைந்தது!

“நல்லா இருக்கியா நித்யா?”, என்று அவன் வெகு சாதாரணமாக தான் கேட்டான்.

அவளுக்கு தான் அவனிடம் எளிதாக உரையாட முடியவில்லை!

அவனோ, “நடந்ததையே நினைச்சிட்டு இருக்காம அடுத்து என்னனு யோசி நித்யா”, என்று சொல்லி அவனின் மனைவி மீனாட்சியை காண சென்று விட்டான்!

நித்யாவின் நினைவுகளோ ஐந்து வருடங்களுக்கு முன் சென்றது!

அன்று தான் முதன் முதலில் குணவாளன் அவளை பெண் பார்க்க வந்திருந்தான்!

அவனது தாய்க்கோ அப்போது கடைசி கட்ட கான்செர் இருக்க, அவரது கடைசி ஆசை மகனின் திருமணத்தை பார்ப்பது தான்! அவனுக்கு தந்தை சிறுவயதிலேயே தவறி விட்டதால் எல்லாமே அவனின் அன்னை தான்!

அப்படி பெண் பார்க்கும் போது அவர்களுக்கு கிடைத்த சம்மந்தம் தான் நித்யஸ்ரீ உடையது!

அவர்களும் பெண் பார்க்க வர, நித்யஸ்ரீக்கோ அவள் திருமணம் செய்பவன் நல்லவனாக இருப்பதை விட செல்வந்தனாக இருப்பதை தான் விரும்பினாள்.

குணவாளனும் நல்ல உத்யோகத்தில் தான் இருந்தான். நடுத்தர குடும்பம், லோன் போட்டு அபார்ட்மெண்ட் வாங்கி இருந்தான். மாநிறமாக இருந்தாலும் அழகானவன் தான்!

ஆனால் நித்யாவிற்கு தான் அவனை பிடிக்கவில்லை! அவள் லகரத்தில் அல்லவா அவளது கணவனுக்கு மாத வருமானம் எதிர் பார்க்கிறாள்!

அப்போதே சபையின் முன், அந்த சம்மந்தத்தை நிராகரித்து விட்டாள்.

அதுவும், “எனக்கு இந்த மாப்பிள்ளை வேணாம்! இவரால என்ன சிங்கப்பூர், ஸ்விட்ஸ்ர்லாந்துனு கூட்டிட்டு போக முடியுமா? எனக்கு வேற மாப்பிள்ளை பாருங்க”, என்று முகத்தில் அடித்தது போல அனைவரும் முன்பு உரைத்தது இன்றும் நினைவு இருந்தது!

குணவாளனின் தாயோ, அருகே இருந்த மீனாட்சியை கேட்க, இருவருக்கும் இரண்டு வயது இடைவேளை தான் என்பதால், அவர்களின் தந்தையும் சம்மந்தத்தை ஒப்புக்கொண்டார்!

“பெரிய பொண்ணுக்கு சீக்கிரம் முடிச்சிட்டு சொல்றேங்க”, என்று சொல்லி அனுப்பி வைத்து விட்டார்!

மீனாட்சி, நித்யா மாறி எல்லாம் இல்லை! அவளும் அழகி தான், ஆனால் அவள் பகட்டான வாழ்க்கைக்கு எல்லாம் ஆசை பட்டதில்லை!

அவளுக்கு குணவாளனை பார்த்ததும் பிடித்து இருந்தது!

அடுத்த வாரத்திலேயே இன்னொரு சம்மந்தம் நித்யஸ்ரீக்கு வந்தது! அவன் தான் அவளின் கணவன் ஷியாம்!

அவள் நினைத்தது போலவே, லகரத்தில் சம்பாத்தியம்! அதற்கும் மேல், பெரிய வீடு, இரண்டு உயர் ரக கார் என்று பெரிய இடத்து சம்மந்தம் தான்!

இருவருக்கும் அடுத்த மூகூர்த்தத்துலேயே திருமணம் நடந்தேறியது!

அதற்கு பிறகு தான் அவளுக்கு பிரச்சனை ஆரம்பித்தது!

ஷ்யாமிற்கோ அன்னை தந்தை என்று யாரும் இல்லை! அவள் வைத்தது தான் சட்டம் என்று அவள் நினைத்து இருக்க அங்கோ நடந்தது வேறு! நித்யஸ்ரீ அந்த வீட்டில் ஒரு சம்பளம் இல்லாத வேலைக்காரி தான்!

ஷ்யாமிற்கோ பகட்டு வாழ்க்கை, குடி கூத்து என்று தான் இருப்பான்!

“நமக்கு கொஞ்ச நாளைக்கு குழந்தை வேண்டாம் நித்யா”, என்று சொல்லிவிட்டான்!

அவளும் முதலில் பெரிதாக எடுத்து கொள்ள வில்லை!

அவளது தங்கை மீனாட்சி கருத்தரித்த போது அவளின் அன்னை கூட குழந்தையை பற்றி வினவ, “அம்மா கொஞ்ச நாளைக்கு வேணாம்னு இருக்கோம்”, என்று சொல்லிவிட்டாள்!

மூன்று ஆண்டுகள் சரியாக தான் சென்றது! அவளுக்கு தான் உயிர்ப்பே இல்லை!

காலையில் அவனுக்கு சமைத்து வேளைக்கு அனுப்பி வைத்து விட்டு, வெறும் நான்கு சுவரை பார்த்து கொண்டு அவளும் எத்தனை நேரம் தான் இருப்பாள்!

குழந்தை செல்வத்திற்கு மனம் ஏங்கியது! மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் மீனாட்சி கருத்தரிக்க, இந்த தடவை அவளுக்கே குழந்தையின் மீது ஆசையாய் இருந்தது!

அவளே ஷ்யாமிடம், “என்னங்க, குழந்தை பெத்துக்கலாமா?’, என்று கேட்க, “இன்னும் கொஞ்சம் காலம் நித்யா”, என்று சொல்லவும், அவளுக்கு மனமே உடைந்து விட்டது!

அப்போது தான் ஒரு நாள், எதாச்சியமாக ஷ்யாமின் போனை பார்க்க, அவளுக்கோ தூக்கி வாரி போட்டது!

அவள் குளிக்கும் வீடியோவில் இருந்து, உடை மாற்றும் வீடியோ வரை அனைத்தையம் எடுத்து ஒரு எண்ணிற்கு அனுப்பி இருந்தான்!

அப்போது ஷியாமும் நுழைய, “என்னடா இதெல்லாம்?”, என்று அவனின் முகத்திலேயே அவன் போனை தூக்கி அடிக்க, “என்ன டி? ஆமா இதுக்கு தான் உன்ன குழந்தை பெத்துக்க வேணான்னு சொன்னேன்! கல்யாணம் ஆகி ஒரு வருஷத்துல எனக்கு பிசினஸ்ல லாஸ்! என் பிசினஸ் பார்ட்னர் தான் உன் பொண்டாட்டி ஓட வீடியோ கேட்குறான் நம்ப கிளைன்ட் அனுப்புனா விட்டுடறானாம்னு சொன்னான்! நீ இப்போ நல்லா அழகா இருக்க, குழந்தை பிறந்த பிறகு இந்த அழகு இருக்குமா?”, என்று மனசாட்சியே இல்லமால் அவன் பேச, அவளுக்கோ உலகமே தலைகீழாக மாறிய உணர்வு!

“ச்சீ உனக்கு கொஞ்சம் கூட உடம்பு கூசலை? உன் பொண்டாட்டிய இப்படி இன்னொருத்தனுக்கு..”, என்று அவள் நிறுத்த, “இன்னும் கூட்டி கொடுக்கல… ஆனா எனக்கு பணம் முக்கியம் இந்த பகட்டான வாழ்க்கை முக்கியம்… வேணும்னா கூட்டி கூட கொடுப்பேன்… நீ இன்னொருத்தன் கூட படுத்து தான் ஆகணும்”, என்று அவன் சொல்லவும், அவளுக்கு ஆத்திரம் தான்!

அவளை காக்க வேண்டிய கணவன், இப்படி இன்னொருத்தனுக்கு அவளை தாரைவார்த்து கொடுப்பேன் என்று சொல்கிறான்! இவனையா நேசித்தால் என்று தான் தோன்றியது!

“என்ன நீ மட்டும் நல்லவ மாறி பேசுற? என்கிட்ட காசு இருக்கறதுனால தான என்ன கட்டிகிட்ட? அந்த குணாளன் வேணாம்னு சொன்னதுக்கு காரணம் காசு தான டி?”, என்று அவன் கேட்க, அவளோ வாய் அடைத்து போய் விட்டாள்!

அவள் பணத்தை பெரிதாக நினைத்தால் தான்! அதற்காக குணத்தை இழக்க வேண்டும் என்று அவள் நினைக்க வில்லை!

அன்று பணம் பெரியதாக தெரிந்தது! இன்று குணம் தெரிகிறது!

அவள் அங்கிருந்து செல்ல எத்தனிக்கும் சமயம், அவளை வன்கொடுமை செய்ய துவங்கினான்!

அவளது கதறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் தான் அவளை காவல்துறையின் உதவியுடன் மீது எடுத்தனர்!

வாடி வதங்கி கந்தல் கோலமாக வந்தவளை பார்த்தே, அவளது தந்தைக்கு மாரடைப்பு வந்து இறந்து விட்டார்!

இப்போது தாயுடன் தான் வசிக்கிறாள்!

குணவாளனது வாழ்க்கையோ நன்றாக தான் சென்று கொண்டு இருந்தது! அவனிற்கும் மீனாக்ஷிற்கும் திருமணம் செய்து மூன்று மாதங்களில் அவனது தாய் தவறிவிட, மீனாட்சி தான் அவனது மொத்த குடும்ப நிர்வாகத்தையும் பார்த்தாள்.

குணவாளன் பெயருக்கு ஏற்றார் போல குணவாளன் தான்!

அதற்காக சண்டையே வராது என்றெல்லாம் சொல்ல முடியாது!

இருவருக்கும் நிறைய முறை சண்டை வரும்! ஆனால் சமாதானம் ஆகி விடுவார்கள்!

இருவருக்குமே இந்த ஐந்து வருட திருமண வாழ்க்கையில் நல்ல புரிதல் வந்திருந்தது!

அவளது தங்கையின் அழைப்பில் நிகழ் காலத்திற்கு வந்திருந்தாள்!

“அக்கா, உன்ன அம்மா கூப்பிட்டாங்க”, என்று அவளது தங்கை மீனாட்சி அவளது ஒரு வயது மகள் இலக்கியாவுடன் வர, அவளும் எழுந்து சென்றாள்!

“என்ன ம்மா?”, என்று அவள் கேட்க, “உனக்கு ஒரு சம்மந்தம் வந்திருக்கு டி”, என்று ஆரம்பித்தவர் அவளுக்கு விவரத்தை கூற, “எனக்கு இதுக்கு மேல இந்த பணக்கார சம்மந்தம்லாம் வேண்டாம் மா”, என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள்!

அவளின் தாயோ, குணவாளனை பார்க்க, அவன் தான் எழுந்து சென்று அவளுடன் பேச துவங்கினான்!

“உனக்கு என்ன பிரச்சனை நித்யா?’, என்று அவன் கேட்க, “எனக்கு பணமே வேண்டாம்! பணம் பணம்னு போய் தான் இப்போ இப்படி நிக்குறேன்!”, என்று அவள் சொல்ல, “பணம் பிரச்சனை இல்ல நித்யா! பணம் கண்டிப்பா வாழ்க்கைக்கு தேவை! பணம் இல்லமால் வாழவும் முடியாது! ஆனா அதோட சேர்ந்து குணமும் இருக்கனும்! உனக்கு பாத்திருக்க மாப்பிள்ளை ரொம்ப நல்லவர்! அவரோட பொண்டாட்டி ஒரு ஆக்சிடென்ட்ல கல்யாணம் ஆன புதுசுலயே இறந்துட்டாங்க போல! அவரும் மூணு வருஷமா கல்யாணம் வேண்டாம்னு தான் சொல்லிட்டு இருக்காரு! நீ பேசி பாரு உனக்கு பிடிச்சிருந்தா மட்டும் நம்ப இந்த சம்மந்தத்தை ப்ரொசீட் பண்லாம்”, என்று சொல்லிவிட்டு சென்று விட்டான்!

நித்யாவிற்கோ, அவன் சொன்னது தான் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது!

ஒரு வாய்ப்பு கொடுத்தால் தான் என்ன? என்று அவளின் மனம் கேட்க, வாய்ப்பும் கொடுத்தாள்!

ஒன்பது மாதங்கள் கழித்து,

இன்று நித்யாவிற்கும் இன்பாவிற்கும் திருமணம்! உண்மையாகவே அவளின் வாழ்வை இன்பமயம் ஆக்க போகிறவன் தான்!

அவனிடமும் பணம் இருந்தது தான்! உண்மையை சொல்ல வேண்டும் என்றால், ஷ்யாமை விட பல மடங்கு பணக்காரன் தான்! ஆனால் பண்பும் அன்பும் நிறைந்தவன்!

அவள் ஒன்றும் இன்பாவை அவனின் பணத்திற்காக திருமணம் செய்யவில்லை!

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, அவனின் மனதை படித்து, புரிந்து, உடைந்த இருமனங்களும் இன்று திருமணத்தில் ஒருமனதாக சங்கமித்தனர்!

இருவருமே பகடான திருமணத்தை கூட விரும்பவில்லை! எளிய முறையில் பதிவு திருமணம் தான்!

வாழ்க்கை நித்யாவிற்கு நிறைய பாடங்களை சொல்லி கொடுத்து விட்டது!

என்றைக்கும் பணம் வாழ்க்கையில் முக்கியம்! ஆனால் அத்துடன் சேர்ந்து பண்பும், பணிவும், குணமும் மிக மிக முக்கியம்!

உப்பில்லா தின்பண்டம் குப்பையிலே போல, பண்பு, பரிவு, பாசம் இல்லாதா வாழ்க்கை என்றுமே பாழடைந்து போனது தான்!

இனி நித்யஸ்ரீ வாழ்வு இன்பாவுடன் சேர்ந்து இன்புறும் என்று நம்பி விடைபெறுவோம்!

முற்றும்!

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 32

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “பணமா? குணமா?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!