புதுமனை புகுவிழா 3

0
(0)
  1. புதுமனை புகுவிழா 
    அத்தியாயம் 3
    மெடிக்கலில்  மருந்தை வாங்கியதும் பவித்திரனை  நோக்கவே,.. இவன்  இங்கே  தான்  இருக்கின்றான்… இன்னும்  இந்த பிழைப்பை விடல,. இன்னிக்கு இவனை  நல்லா  போலீஸிடம்  பிடிச்சுக்  கொடுக்கனும் நினைத்தாள் சாந்தினிகா… .
    வேகமாக  ஓடிச் சென்று  அவங்க  அப்பாவிடம்  தகவலை  சொல்ல, அதற்கு  அந்த இளைஞனை அனுகரன்  நோக்கினான்  …
    சரிம்மா!… நீ  மருந்து  வாங்கிட்டியா!… 
    வாங்கியாச்சு,… அப்பா… .
    இன்னிக்கு  அவனை  போலீஸில்  பிடிச்சுக்  கொடுக்க போறேன்… ..
    ஏம்மா!… நமக்கு தேவையில்லாத  வேலை… .
    அப்பா  நம்ம  கண்ணு  முன்னால நடக்கிற  அநியாயத்தைக்  கண்டு  கொள்ளாமல் போனால் அது  தப்பு  ..
    “இவனால் எத்தனை  பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள் இனிமேல்  எந்தவொரு மக்களும்  பாதிக்கப்படாமல் இருக்கனும்னா,.. இந்த  இளைஞனை  போலீஸில்  பிடிச்சுக் கொடுக்கனும் உறுதியோடு  இருந்தாள்… .’
    நீங்க அம்மாவை அழைச்சிட்டு வீட்டுக்கு போங்க எனக்  கூற,…ஆட்டோவை  அழைத்த மறுகணம் வந்து  நின்றது… 
    அனுகரனுக்கு மனசு  இல்லாமல் சாந்தினிகாவிடம் நீ  போய்  தான்  ஆகனும்மா,… 
    அப்பா, நீங்க  பாத்துப்போங்க, வந்துடுறேன்… .என்றாள்… 
    இளைஞனை  ஏற்கனவே  சந்தித்ததால், அவனிடம்  போய்  பேசினாள்…ஏங்க நல்லா இருக்கீங்களா,.. எனக்  கேட்க.. சாந்தினிகாவும் நாங்க நல்லா இருக்கோம்… உங்களுக்கு ஒரு  நல்ல  வேலை  வாங்கி  தருகிறேன் என  சொன்னேன்ல,… அந்த  வேலையை  பத்தி  சொல்றதுக்காக தான்  வந்தேன்…. 
    பவித்திரன்  மனதிற்குள்… ஆ… ஆ… ஆஹா… இவங்க யாரென்று  தெரியாது… ஆனால்  நமக்கு  உதவி  செய்யனும்னு  நினைக்கிற  குணம்  நல்லவங்களா  இருக்கிறாங்களே!.. இவங்ககிட்ட  நம்ம  நொண்டியில்லை  என்கிற விஷயத்தை சொல்வோம் என  நினைத்தான்  . 
    சாந்தினிகா,.. உங்க  பெயர்  என்ன?.. என்னோட  பெயர். பவித்திரன்… 
    ஓ. கே.. வாங்க  நம்ம  கடைக்குப்  போகலாம் என  அழைத்த  அவளை பவித்திரன் உங்களிடம்  கொஞ்சம் தனியாக  பேசனும்  என  சொல்ல,.. 
    அவளும்  ஏதோ  சொல்லப்  போறாங்க போல  என்னவென்று  கேட்போம்… சாந்தினிகாவும் சொல்லுங்க,  என்ன  விஷயம்… 
    ஏங்க  என்னை  மன்னிச்சுடுங்க, இந்த  உலகத்தில மற்றவர்களை  ஏளனமாக பாத்துக் கொண்டிருக்கிற  உலகம்,.. நமக்கென்று  ஒரு  வேலையை  கொடுக்க வில்லையே என்ற  மன உளைச்சல்  இது  தான்  இந்த  மாதிரி வாழ்க்கையை  வாழ  வைச்சது… 
    உங்களை  முதலில்  பார்த்த  போது  எல்லாம்  மனிதர்களோடு  தான்  உங்களை  ஒப்பிட்டு  பார்த்தேன்… நீங்களும்  பணம்  கொடுப்பதற்கு  மனசில்லாமல் தான்  என்னை சமாளிப்பதற்காக வேலை  வாங்கி தருகிறேன் என  சொன்னீங்கன்னு  நினைச்சேன்… ..
    இப்போது நீங்களே  என்னோட  குறையைக்  கண்டு  எனக்கு ஒரு  வேலையை  வாங்கிக்  கொடுக்கிறேன்  எனச் சொல்லும்  போது,எனக்கே ஷாக்  ஆகிடுச்சு… இதுக்கு மேலயும்  உங்களிடம் உண்மையை மறைக்கக்  கூடாது  என்றான்… 
    “எங்க  அம்மா அடிக்கடி என்ன சொல்வாங்க தெரியுமா?..
    நம்ம கிட்ட  யாரும்  உண்மையாக  இருக்கிறார்களோ!.. அவர்களை  எக்காரணத்தைக்  கொண்டும்  ஏமாற்றவே  கூடாது அன்று  சொன்ன  விஷயம்  என்  பிஞ்சு  வயசில்  பதிந்தது..  ‘
    என்னை  உண்மையாகவே  ஊனம்  என  நினைத்துள்ளீர்கள்… அப்படி  தானே!.. 
    ஆமாம்… .பவித்திரன்… என மெதுவாக சொல்ல,… 
    பவித்திரன்  தனது  வேஷத்தைக்  கலைக்கவே…அதிர்ச்சியில் நோக்காமல் திரும்பி  நின்றாள்… 
    ஏங்க,.. ஏன்?..திரும்பி நின்னுட்டீங்க, 
    “பவித்திரன்  நீங்க  யாரு,என்பதை  யான்  அறிந்தேன்… ‘
    “நீங்கள்  ஊனம்  இல்லை  என்பதை நேற்றே எனக்கு தெரிய வந்தது… எங்க  அப்பா  உங்களை  பத்தி  சொன்னதும்  எனக்கு  உங்க  மேல கோபம்  கோபமாக வந்தது.  உங்களது  போட்டோவை  நியூஸ்  பேப்பரில் போட்டுள்ளார்கள்  என்று  எங்க அப்பா  சொன்னாங்க,..எனக்கே  ஷாக்  ஆனது… எப்படியாவது உங்களை  போலீஸிடம்  பிடிச்சுக்  கொடுக்கனும்னு தான்  வந்தேன்… ‘
    “ஆனால் நீங்க என்  மேல  நம்பிக்கை  வைச்சு  உங்களுடைய  வேஷத்தை  கலைச்சுட்டீங்க,.. அதனால்  உங்க  மேல  உள்ள  கோபம்  சற்று  குறைந்தது..  ‘
    நீங்க எதுக்காக ஊனமாக நடிக்கனும்… அதற்கு  காரணம் என்னன்னு தெரிஞ்சுக்கலாம்மா!… சொல்வதற்கு  உங்களுக்கு விருப்பம் இல்லையெனில்  என்னிடம்  சொல்ல  வேண்டாம்… 
    இல்லைங்க,.. சொல்றேன்… இது  வரைக்கும் யாரிடமே சொல்லாத  ரகசியத்தை உங்ககிட்ட  சொல்றேன்…
     .நான்  இந்த  மாதிரி  ஆனதற்கு  நானே  காரணமாக  இருப்பேன்  என்று  கொஞ்சம்  எதிர்பார்க்கவில்லை… .என்  வாழ்வில் நடந்த  ஒரு  கொடுமை… ..
    எல்லாருடைய  வாழ்க்கையிலும்  ஒவ்வொரு இலட்சியம், கனவு,ஆசை என்ற  நோக்கத்தோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்… நானும்  என்  தங்கையும்  அப்படியொரு  உலகத்தில்  வாழ்ந்தோம்… .
    எனக்கு  சொந்த ஊர் மீனாட்சிபுரம்.   மதுரை  பக்கத்தில் உள்ளது.. அங்க தான்  எங்களோட  சொந்தம்  பந்தங்கள் எல்லாரும்  இருக்கிறார்கள்… நானும்  என்னோட  தங்கை மட்டும்  தான்  ஒரே  வீட்டில்  வாழ்ந்தோம்… .எங்களுக்கு  அப்பா, அம்மா  யாரும்  இல்லை… எனக்கும்  அப்பா இருந்தும்  இல்லாத மாதிரி என்று  சொல்லவும்,.. 
    அது  எப்படி.. பவித்திரன்..  உங்களுக்கு அப்பா இருக்காங்களா?.. இல்லையா?… 
     சொல்றேன்… சாந்தினிகா… 
    “‘என்  தங்கைக்கு அப்போது ஐந்து  வயது இருக்கும்… நான்  ஐந்தாம்  வகுப்பு படித்து கொண்டிருந்த போது, எங்க அம்மா தேவகலா… .மங்களகரமான  பெயர்… அம்மாவுக்கு ரொம்ப உடல்நிலை சரியில்லாமல்  போனது…அதுவும் இருதயத்தில்  ஏதோ பிரச்சினை என்று  டாக்டர் சொல்லவும்..எங்களுக்கு என்னசெய்வதென்று புரியல,எங்க அம்மாவை  காப்பாற்றனும்  என்ற  எண்ணம்  மட்டுமே இருந்தது… 
    நாங்க அப்போது கொஞ்சம்  வசதியான  குடும்பம்… 
    அதனால் எங்க  அம்மாவுக்கு  இருக்கிற  பணத்தை வைத்து  அம்மாவை  காப்பாற்ற  முயன்றோம்… ஆனால் டாக்டர்  எவ்வளவோ முயற்சி  செய்தும்  எங்க  அம்மாவை  காப்பாற்ற  முடிய  வில்லை என்று சொல்லி  கைவிட்டனர்’
    துயரத்தில்  இருந்த  நாங்கள்,..அது  போவதற்குள் எங்க  அப்பா வேறோரு திருமணம்  செய்து  என்னையும் என்னுடைய  தங்கையையும் வீட்டில் இருக்கக்கூடாது  என்று  வெளியே  துரத்தி விட்டார்… 
    அச்சச்சோ!.. இப்படியும்  ஒரு  தகப்பன்  உண்டா!.. என  ஆச்சரியத்தில்  கேட்ட  சாந்தினிகா பரிதாபத்தோடு  பவித்திரனின்  வாழ்க்கை  கதை  இப்படி  ஒரு  சோகத்தில்  உள்ளதே  என  வருத்தப்பட,… 
    “நானும்  என் தங்கையைக்  கூட்டிட்டு  ,எங்க  சித்தி வீட்டிற்குச்  சென்றேன்  …அங்க  எங்க  சித்தி ரொம்ப  நல்ல டைப்… ஆனால்  சித்தப்பா சிடுமூஞ்சி… எங்களை  ஒரு  வேலைக்காரங்க போல  நடத்த,.. கிட்டத்தட்ட அங்க  ஒரு  மாதமாக  இருந்தோம்… .’
    “எனக்கு  அந்த  வீட்டில் இருப்பதற்கே பிடிக்கவில்லை… அதனால்  நானே  என்னுடைய  தங்கையை  அழைத்து விட்டு வேறோரு  கிராமத்திற்குச்  செல்வோம்  என்று  நினைத்த  போது, எங்க அம்மாவின்  சொந்தமான  எங்க  விஷ்ணுசாமி மாமா எங்களை  அவங்க வீட்டுக்கு அழைத்து சென்றார்… ‘
    எங்க மாமாவிடம் எனக்கு ஒரு வேலை  மட்டும் வாங்கி கொடுங்கள் நானே வேலை  பார்த்து என்  தங்கையை  நல்லா படிக்க வைச்சிடுவேன் என  கூறினான்… 
    பவித்திரனுக்கு அவங்க  மாமா,விஷ்ணுசாமி  என்பவர்  தான் பண்ணையாரிடம்  பேசி  நல்ல  வேலையை  வாங்கி கொடுத்தார்… 
    அவனுக்கு வேலை வாங்கி கொடுத்ததும், பவித்திரனை  அழைத்து…நீ  கொஞ்சம்  நாள்கள்  எங்களோடு  இரு.. உன்னையும் நல்லா படிக்க வைத்து என்  மகன்  வெளியூரில் வேலை பார்க்கின்றான்… அதே  போல  உன்னையும்  அந்த வேலைக்குச் சேர்த்து  விடுகிறேன்… .
    சரிங்க, மாமா.. என்றான்  பவித்திரன்… தன்  தங்கையை  நல்லபடியாக  படிக்க வைக்கனும்னு என்ற  எண்ணம்  மட்டுமே இருந்தது… 
    “அதனால்  அவளும் நானும் தங்கியிருந்து படித்தோம்…அத்தை அம்பிகா… எங்க இருவரையும்  தனது பிள்ளைகளாக  நினைத்தார்கள்.அத்தை, மாமாவுக்கு ஒரே  ஒரு  மகன்  அவனின்  பெயர் அஜய்கிருஷ்…. .மிகவும்  பொறுமைசாலி… அவங்க  வீட்டில்  உள்ள  அனைவரும்  எங்க  மேல  அம்புட்டு  பாசம்  வைச்சு  எங்கள  நல்லா  படிக்க  வைத்தார்கள்… .’
    நானும்  வேலையும் பார்த்துட்டு மாமாவுக்கு எந்தவொரு  தொந்தரவு கொடுக்காமல் நல்லா படித்தேன்… .ஒரு  வழியாக  பிளஸ் 2 தேர்வில் முதலிடம்  பிடித்தேன்… அதனால்  எங்க மாமாவும்  அத்தையும்  ரொம்ப  சந்தோஷப்பட்டாங்க,.. பள்ளியிலே  எனக்கு  இலவசமாக படிக்க வைத்தார்கள்… .
    நானும்  கல்லூரி  வரைக்கும் போய்  நல்லா  படிச்சேன்… கல்லூரியிலும்  முதலிடம்  பிடித்து  டிகிரியை  முடித்தேன்…காலங்கள்  கடந்தது… 
    சில வேலைகளை பார்த்து தங்கையை  நல்லா படிக்க வைச்சேன்… கையில்  கொஞ்சம் காசு  இருந்தது… அத  வைச்சு தான்  அடுத்த வேலைக்கு ஏற்பாடு செய்தேன்… பிறகு சில  தொழிலை பார்த்தேன்… .நானும்  என்  தங்கையும்  தனியாக தான் இருந்தோம்… நாங்கள்  தனியாக  இருந்தது  போல  எங்களுக்கு தோன்றவில்லை… 
    எப்போதும் எங்க அம்பிகா அத்தை வந்து  வந்து  பார்த்துட்டு  போவாங்க!.. எங்களுக்கு  ஏதாவது  தீவனம் செஞ்சு கொண்டு  வருவாங்க!… நாங்களும்  எப்போதாவது அங்க போய் கொண்டு  தான்  இருந்தோம்… 
    .அடுத்தபடியாக  வெளிநாட்டு  வேலைவாய்ப்பு கிடைத்தது… அதுக்கும்  டிரை  பண்ணினேன்… பாஸ்போட்டுக்கு அப்ளே செய்தேன்… 
    என்  தங்கை  அர்ச்சனா என்  மீது  அளவுக்கடந்த  பாசம் வைத்திருக்கிறாள்..அவளும்  அழுது கொண்டே  சொன்னாள்… .நீங்க வெளிநாட்டு  வேலைக்கு போய்  தான்  ஆகனும்மா!… எனக்கென்று  நீங்க மட்டும் தான்… நீங்களும்  என்னருகில்  இல்லாமல்  போனால்  என்  உயிர்  இல்லை  என்பது   எனக்கும்  தோன்றும்  என்றாள்… 
    அவளது தங்கையின்  பாசத்தை  புரிந்து  கொண்டு  கொஞ்சம்  நாள்கள்  இவளோடு  ஆனந்தமாக  இருந்துட்டு  அவளை கல்லூரியில் சேர்த்த பிறகு தான் நம்ம  போகனும் என்று  முடிவெடுத்தான்… 
    அர்ச்சனா,.. எதுக்கும்மா அழுதுகிட்டு  இருக்கிற,    அண்ணன்  எப்போதும்  உன்னுடனே  இருக்கிறேன்… 
      ” .கவலைப்படாதே!.. என்றான்  பவித்திரன்… ‘
              நம்ம மாமா வீட்டுக்கு போய்ட்டு  வரலாம் என்றான்  பவித்திரன்…  
    .இவர்களும்  அங்கே  செல்ல, பேசிக்கொண்ட சமயத்தில் உள்ளே  நுழைந்தான் அஜய்கிருஷ்… .
    அதற்குள்ளும் வந்துவிட்டாயா என  சந்தோஷத்தில்  அவனைக்  கட்டி தழுவ…. அவங்க  அப்பா, ……
    .சமையலறையில் இருந்து  ஓடி  வந்தாள் அம்பிகா…
            .தன்னோட  மகனை  வெகு  நாள்கள்  கழித்து பார்த்த மாயத்தில் ஆனந்தக்கண்ணீரோடு  அவனை  நோக்கினான்… .
    அவர்களின்  முகத்தில்  ஒருசந்தோஷம் புலப்பட்டது… 
         அட, மச்சான் நீங்க  எப்போது வந்தீங்க,.. மாப்பிள்ளை.. நானும்  இப்போது  தான்  வந்தேன்… வெளிநாடு  செல்வதற்கு பாஸ்போட்  வந்திடுச்சு,… அதான்  மாமா, அத்தையிடம் சொல்ல வந்தேன்… 
    அத்தை.. உங்க  மகன்  வந்துட்டாங்க!.. என்ற  சந்தோஷத்தில்  மருமகளை  மறந்து  விடாதீங்க என்றாள்  அரச்சனா… அவளது  குரலை  கேட்டதும்  திரும்பி  பார்த்தான்… 
    அம்மா, யாரு… இந்த  பெண்… உங்களையே அதட்டி  பேசுறா… .
    ஓ.. கோ… அதுக்குள்ள  மறந்தாச்சா,.. 
    “மாப்பிள்ளை.. அவ  தான். என்  தங்கச்சி அர்ச்சனா… ‘
    அர்ச்சனாவா!.. சின்ன புள்ளையாக  இருக்கும்  போது  பார்த்தது… இப்போது  நெடு  நெடுவென  நெட்டையாக வளர்ந்துட்டா!… என அஜய் சொன்னதும்… 
    அர்ச்சனாவுக்கு கோபம்  வந்தது  பாரு… இங்க  பாருங்க நா ஒன்னு  நெட்டை  இல்லை… எம்  பெயரு அர்ச்சனா… என்றாள்  திமிராக… .
    சரிடி… போ… உள்ளே அத்தை  காபி போட்டிருக்கேன்… எடுத்துட்டு  வா… .எனக்  கூறினாள் அம்பிகா… .
    சமையலறைக்குள்  சென்றவள் ஒன்னுஒன்னாக  கேட்க ஆரம்பிக்க, அத்தை காபி எதுல இருக்கு… அத ரொம்ப  சுட வைக்கவா இல்ல கம்மியாக  சுட  வைக்கவா… என. கேள்வி  மேல்  கேள்வி  கேட்டதும்  அம்பிகாவே எழுந்தாள்… 
    ஏன்டி… ஒரு  காபி உன்னை  போட  சொன்னனா!… இல்லையே… அத  சுட  வைக்க  சொன்னதுக்கு இத்தனை  கேள்வியா?..போடி.. போ  …ஒன்னும்  செய்ய  தெரியல… நீயெல்லாம் கல்யாணம்  முடிஞ்சு என்னத்த  சொல்றது சலித்து கொள்ள, 
    பவித்திரன்  அப்படியெல்லாம் என்னோட  தங்கச்சிய  விட்டுட  மாட்டேன்… அவளுக்கு இன்னும்  வயசு  வரனும்… அப்புறம்  பாருங்க என்  தங்கை  எல்லாம் வேலையையும் இழுத்துப்  போட்டு  செய்வாள்… 
    “அது  எப்போது  நடக்கும்.. டா..பவித்திரனை  நோக்கி.. கிண்டலோடு அவங்க அத்தை அம்பிகா… ‘
    அஜய்  நம்ம அனைவரும்  சேர்ந்து  கோவிலுக்குப்  போய்ட்டு வருவோமா!.. 
    மச்சான்.. நீங்க என்ன  சொல்றீங்க!… 
    நாளைக்கு ஒரு  நாள்  தான்  என்னால்  ஜாலியாக  இருக்க முடியும்.. நாளை  மறுநாள்  சென்னைக்குக் கிளம்பி விடுவேன் என்றான்… 
    என்னடா!.. ஒரு  வாரம் லீவு கேட்டுருக்கலாமே!… அவங்க அப்பா.. சொல்ல 
    கேட்டு  பார்த்துட்டேன்  ..அவங்க  தீபாவளிக்குத் தான்  கொடுப்போம் என  உறுதியாக சொல்லிட்டாங்க!… 
    சரி… நம்ம நாளைக்கே திருப்பரங்குன்றம் போவோம் என  பேசி  முடித்தார்கள்… 
    அந்த  நாளில்  அனைவரும்  சேர்ந்து  கோவிலுக்குச்  சென்று, சாமி  தரிசனத்தைப்  பார்த்த பிறகு… பூங்காவிற்குச்  சென்று  எல்லாத்தையும்  ஆனந்தமாக  கழித்தார்கள்… 
    அர்ச்சனாவிற்கு  கேட்டதெல்லாம்  வாங்கி கொடுத்தான்… அஜய்.. பவித்திரனிடம் நீயும்  நாளைக்கு என்னுடன் சென்னைக்கு வா… அங் ஏதாவது  ஒரு வேலை உனக்கு  ஏற்பாடு  செய்து தருகிறேன்என்றவன்… 
    எந்தவொரு  மறுப்பு  சொல்லாமல் கொஞ்ச  நாள்கள்  தானே  நானும்  உன்னுடன்  வாரேன் என  சொல்லி விட்டான்… 
    தன்  தங்கையிடம்  இப்போதைக்கு சென்னைக்கு போய்ட்டு  வாரேன்… அப்புறம்  உன்னை  கல்லூரியில்  சேர்த்த  பிறகு அண்ணன்  வெளிநாட்டுக்குச்  செல்கிறேன்  …
    அவளும்  சம்மதம்  அளிக்க மாமா, அத்தை ஆசிர்வாதத்தோடு சென்னை  நோக்கி  கிளம்பி  வந்தேன்…
    சரிங்க நீங்க இங்க  வந்துட்டீங்க அப்புறம்  என்னாச்சு!..சுவாரஸ்யமாக கேட்ட, சாந்தினிகாவிற்கு அழைப்பு மணி  ஒலித்தது.. 
    சட்டென்று  நோக்க, அவங்க  அப்பா  அனுகரன்… 
    சொல்லுங்கப்பா!.. நீ  கொஞ்சம்  சீக்கிரம்  வாம்மா,.. என்றார்  பதற்றத்துடன்… 
    பவித்திரனிடம் நம்ம நாளைக்கு  பேசிக்கொள்ளலாம்  …இப்போது  அவசரமாக  வீட்டுக்குச்  செல்லனும்  என  சொல்லிட்டு ஓடிப்  போனாள்… 
    பவித்திரன்  ச்சே… அவளோட  போன்  நம்பரை கேட்க  மறந்து  விட்டேனே,..என நினைக்கின்றான்… .
    அப்பா,இதோ  ஆட்டோவில்  ஏறிட்டேன் வந்துகொண்டே  இருக்கிறேன்… அம்மாவுக்கு ஒன்னும்  ஆகாது நீங்க  பயப்படாமல்  இருங்கள் ஆறுதல்  சொன்னாள்… 
    மீண்டும் வருவாள் சாந்தினிகா… .

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!