அத்தியாயம் 4
ஆட்டோவினில் இருந்து இறங்கி பரபரப்பாக சென்றாள் .. அவங்க அப்பா பதற்றத்துடன் இருந்ததைக் கவனித்து என்னாச்சு, எதற்காக இப்படி இருக்கீங்க,
உடனே அனுகரன்….நான் .,..கங்காதேவிக்கு சாதம் ஊட்டிய பின்பு தான் மாத்திரையை கொடுத்தேன்… அதற்கு பிறகு தான் தூங்கிட்டாள்… இன்னும் அவள் எழுந்திருக்கவே இல்ல… அப்படியே அசையாமல் படுத்திருக்கிறாள்…
உடனே எந்த மாத்திரையை அம்மாவுக்கு கொடுத்தீங்கன்னு விசாரிக்க, அவளே பார்க்க, அப்பா நீங்க அம்மாவுக்கு தூக்கமாத்திரை கொடுத்திருக்கீங்க,.. அதனால் அசந்து உறங்குறாங்க!…
“பயப்பட வேண்டாம்,…அவங்களே சற்று நேரத்தில் எழுந்து விடுவார்கள்… ‘
அம்மாடியோ,.. பயந்தே போய்ட்டேன்… உங்க அம்மா, எப்போதும் தூக்கத்தில் எழுந்து ஏதாவது செய்வாள்… ஆனா, இன்னிக்கு எழவே இல்லை… நானும் பயந்து உன்னையும் விரைவாக வீட்டுக்கு வரவழைத்தேன்…
பரவாயில்லை.. அப்பா…
இனிமேல் அம்மாவுக்கு நானே மருந்து,மாத்திரையை கரெக்ட்டாக எடுத்து தருகிறேன்…
அனுகரன், நீ அந்த இளைஞனை போலீஸில் பிடிச்சுக் கொடுத்துட்டியா,..
இல்லப்பா,.. அவன் தான் என்னிடம் இவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருந்தான்… நொண்டியில்லை என்கிற விஷயத்தை தனியாக அழைத்து போய் கூறினான்… அதுமட்டுமல்ல அவனது குடும்பத்தைப் பத்தி என்னிடம் தெளிவாக சொல்லியிருக்கான்.. அதான் கொஞ்சம் யோசனையாக இருக்கு…
எந்த ஒரு விஷயத்தையும் நல்லா பக்குவமாக பார்த்து நிதானமாக செய்யனும்…அவனுடைய பெயர்.. எனக் கேட்டதும்,…
அப்பா, பவித்திரன்… .அதுவும் வசதியான பையன் என சொல்கின்றான்.. நிறைய படிச்சிருக்காங்களாம்….
இரண்டு நாள் போகட்டும்.. அப்புறம் பார்த்துக்கிறேன் என்றாள் சாதாரணமாக… .
அடுத்ததாக, அவங்க அப்பாவிடம் நம்ம நாளைக்கே இன்ஜினியரை வீட்டுக்கு கூட்டிட்டு வர முடியுமா?.. இல்ல நம்ம தான் அவங்க வீட்டுக்குப் போய் பேசனும்மா… எதுக்காக கேட்கிறாய்?.. அதான் நம்ம வீட்டை கட்டுவதை பத்தி அவர்களிடம் discuss பண்ணனும்…
சரிம்மா,.. அப்பா நாளைக்கே கூப்பிட்டு வருகிறேன் என்றார்…
இன்ஜினியர் வீட்டிற்கு நேரிலே போய் அவரை வீட்டுக்கு அழைத்த வந்தார்… சாந்தினிகா அந்த இன்ஜினியரிடம் விவரமாக கேட்டாள்…
சாந்தினிகா உங்களுக்கு புரியவில்லை என்றால் நானே சாட் பேப்பரில் வரைந்து கொண்டு வருகிறேன் என சொல்லும் போது ,..
சார்,.. நீங்க வரைந்ததைத் தான் வீடு கட்டுவீங்களா!.. இல்ல நானும் வரைந்து கொடுத்தால் அதற்கு முயற்சி செய்வீர்களா!.. மெல்லமாக கேட்டவள்…
ம்ம்ம்… வெரி குட்… மா…
நீங்க வரைந்த டிசைனைக் கொடுங்கள் பார்ப்போமே,.. என்றார் இன்ஜினியர்…
வேகமாக சென்று எடுத்து வந்த டிசைனை பார்த்துட்டு ,செம… மா…
இந்த மாதிரியே தான் ..வீடு பெரியதாக, ஒவ்வொரு ரூமும் அதோட பாத்ரூம் உள்ளே, அடுத்து இது பூஜை ரூம் கொஞ்சம் பெருசாக, அத விட சமையல் ரூம் பெரியதாக கட்டனும்.. செல்ப் எல்லாமே மரப்பலகையில் கபோடு வைத்து செய்யனும்…
சாந்தினிகா சொல்ல, சொல்ல அவங்க அப்பாவிற்கு தலையே சுற்றியது… இப்படியெல்லாம் கட்டனும் என்று சொல்றாளே!… அதற்கு பணத்துக்கு எப்படி?..ரெடி பண்ணுவாள் சிந்தனையில் இருந்தார் …
“இன்ஜினியர் அவள் வரைந்த டிசைனும் அழகாக இருந்தது… நீங்கள் சொன்ன விதமும் சூப்பரோ சூப்பர்.. பாராட்டிய இன்ஜினியர்,… சாந்தினிகாவிடம் இவ்வளவு அழகாக டிசைன் பண்ணிருக்கீங்களே!.. நீங்க பேஷன் டிசைன் படிச்சீங்களா,.. எனக் கேட்டார்… ‘
சார்,.. அந்த மாதிரியெல்லாம் படிக்கிறதுக்கு வசதி இல்லை… பன்னிரெண்டாம் வரை தான் முடித்துள்ளேன்… .என்னுடைய ஆசை, நல்ல டிசைனாக வீடு கட்டனும்.. மற்றவர்கள் கட்டிய வீட்டை அடிக்கடி பார்த்து ரசிப்பதுண்டு… .
ஒரு சில சமயங்களில் சித்தாள் பணிக்குச் செல்வதுண்டு,… அங்க இன்ஜினியர் வந்து பேசி வீட்டை அளந்து எப்படியெல்லாம் சொல்வாரு என்பதை அவ்வப்போது கவனிப்பேன்.
உங்க பேரு என்னம்மா, சார் எம் பேரு சாந்தினிகா, ம்ம்ம்… .
ஸ்டாட்டிங்ல நாள் செய்து வைத்துட்டோம்னா,.. வீட்டை எந்த மாதத்திலும் ஆரம்பிச்சிடுலாம்… நீங்க முதலில் அட்வான்ஸ் கொடுக்கிறத பார்த்துட்டு நெக்ஸ்ட் என்ன செய்யலாம் என்பதை சொல்ல முடியும்… .
சார்… அட்வான்ஸ் எவ்வளவு? வாங்குவீங்க!.. நாங்க காண்ட்ராக்ட்டாக தான் பேசி வாங்குவோம்… மற்றவங்க எப்படி வாங்குவாங்கனு தெரியாது . ஆனால் நான் ஒரு இலட்சம் வாங்குவேன்…
நீங்க அட்வான்ஸ் கொடுத்துட்டீங்கனா நாள் செய்யறது எப்போது வச்சிக்கலாம் என்பதையும் நாளைக்கே சொல்லிடுவோம்…
சார்,..நாளைக்கு வாங்க பணத்தை ரெடி பண்ணி வச்சிருக்கேன்…
சாந்தினிகா,.. என்னோட வேலையை நாங்க கரெக்ட்டாக முடிச்சிடுவோம்… ஒரு வாரத்துக்கு ஒரு தடவை கூட பணம் கேட்போம்… நீங்க கொடுக்க ரெடியாக இருக்கனும்.. அப்ப தான் ஆறு மாசத்துக்குள் வீட்டை கட்டி கொடுத்திடுவோம் என்றார்… நீங்க எதுக்கு கலந்து பேசிட்டு சொல்லுங்க,.. ஒரு வாரம் ஆனா கூட போதும்… எனச் சொல்லிட்டு கிளம்பினார்…
சாந்தினிகா, வேகமாக ஓடி போய் ,..சார்.. உங்க பெயர் சொல்லுங்க ,..என்னோட பெயர் விசிட்டிங் கார்டில் இருக்கு, இந்தாங்க,… என்று கொடுத்தார்…
சாந்தினிகா வாங்கிட்டு உள்ளே, வந்ததும் அவங்க அப்பா,அனுகரன் வோறோரு சிந்தனையில் சிந்திப்பதை கவனித்தாள்.. அப்பா… அப்பா..தோள்பட்டையைத் தொட்டதும் திடுக்கென்று நோக்கினார் …
“என்னவாயிற்று !….’
எதை யோசித்து இப்படி உட்கார்ந்து இருக்கீங்க!..
“இன்ஜினியர் எங்க, வேகமாக கேட்டு எழ, ‘
அவங்க போய் கால்மணி நேரம் ஆயிடுச்சு… எந்த சிந்தனையில் இருந்தீங்க அப்பா ..
நீ வீடு கட்டும் நோக்கத்தை அவரிடம் கூறும் போது எனக்கே புல்லரித்தது போல இருந்துச்சு…
என்னமோ!. தெரியல… நீ சொன்ன போது உம் மேல எனக்கு முழு நம்பிக்கை வந்துட்டு… நீயும் எங்களோட விருப்பத்தை உறுதியாக நிறைவேற்றிடுவாய் எனக் கூறினார் அனுகரன்… .
சாந்தினிகா எனக்கு தெரிந்த ஒருவர் வட்டிக்குக் கேட்டா பணம் கொடுப்பார்… அப்பா அவரிடம் பணம் வாங்கட்டும்மா,…
வேணாப்பா,. பணத்துக்கு நானே ஏற்பாடு செய்து விட்டேன்…
அப்பா, நீங்க என்னிடம் ஒரு இடத்துப் பத்திரம் கொடுத்தீங்க,. அதோட இன்னொரு பத்திரம் இருந்துச்சு,..
என்னது!..இன்னொரு பத்திரமா,…அது யாரோட பத்திரம் !…
“ஆமாம்…பா… அண்ணன் பெயரில் அம்மா இடம் வாங்கி வச்சிருக்காங்க,. ஏற்கனவே அம்மா சீட்டு கட்டி தான் அந்த இடத்தை வாங்கி வச்சிருக்காங்கனு அந்த நம்பருக்கு போன் செய்து கேட்டுட்டேன்…இப்போதைக்கு நம்மகிட்ட அந்த பத்திரம் தான் பக்கபலமாக உள்ளது.. அதை தான் எனக்கு தெரிந்த பாய் முகமது அவரிடம் சொல்லிட்டேன்…அவரே வச்சு பணத்தை வாங்கி கொடுக்கிறேன் என கூறிட்டார்… .’
நாளைக்கு நீங்களும் வாங்கப்பா,.. முகமது பாய் ஒரு இலட்சத்துக் கூடவே பேசிருக்கேன் என்றார்… அந்த பணத்தை வாங்கிட்டு வந்துருவோம் என அப்பாவிடம் பேசி முடித்தாள்…
சரிம்மா, உங்க அம்மா சீட்டு கட்டியதைப் பத்தி ஒரு வார்த்தை சொல்லவே இல்ல,.. அதுவும் எங்கயோ போன மகனுக்காக அந்த இடத்தை வாங்கி போட்டுருக்கா!…
அப்பா, இந்த விஷயம் தெரிந்தால் கோபப்பட்டு அம்மாவை திட்டுவீங்க!. அதான் அம்மா உங்களிடம் சொல்லாமல் மறைச்சுருக்காங்க!…
இந்த இடம் வாங்கி போட்டதால் நமக்கு எவ்வளவு யூஸ்புல்லாக இருக்கு,.. அத விடுங்கப்பா,.. அம்மா எது செய்தாலும் நமக்கு நல்லதாக தான் அமையும்…
சாந்தினிகா, நீ சொல்றதிலேயும் கொஞ்சம் உண்மை தான்.. மகளே… இருவரும் சிரித்து கொண்ட வேளையில் யாரோ அழுதது போல ஒரு சத்தம் அனுகரன் அறைக்குள்ளே நுழைந்தார்…
கங்காதேவி,.. எழுந்து அமர்ந்து அமைதியாக உட்கார்ந்து இருந்தாள்… அப்போது அவளது கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டே இருந்தது…
அனுகரன்.. சாந்தினிகாவிடம் உங்கள் அம்மா கொஞ்சம் கொஞ்சமாக சுய நினைவுக்கு வருகிறாள்… கங்காதேவி நல்லா அழனும்… அப்படி அழுதுட்டா, கண்டிப்பாக நினைவு திரும்ப வரும்…
அம்மா, நான் தான் சாந்தினிகா… அண்ணன் வீட்டை விட்டு போனதில் இருந்தே நீ நீயாக இல்ல,.. ஒரு பஸ்சில் அடிப்பட்டு கீழே விழுந்து விட்டாய்… இப்போது நீ பழைய நிலைமைக்கு வந்துட்டா அண்ணனை தேடி கண்டுபிடிச்சிடலாம் …
கங்கா தேவி கதறி அழுவதைப் பார்த்து சாந்தினாகவும் அழ ஆரம்பித்தாள்…
எம் மகனை எங்க,.. அவ எங்க போனான்…அவனைக் கூட்டிட்டு வாங்க,.. இனிமேல் அவனை திட்டாதீங்க.. அவ எந்த தப்பும் பண்ணல என திரும்ப திரும்ப அதை சொல்லிக் கொண்டே இருக்க,..
சாந்தினிகாவுக்கு சந்தேகம் வந்தது… அண்ணன் தப்பு செய்ய வில்லை என்று அம்மா சொல்றாங்க,.. அன்று என்னதான் நடந்திருக்கும் யோசிக்க தொடங்கினாள்…
“அனுகரன் கங்கா தேவிக்கு ஆறுதல் சொல்ல,.. அவளும் அப்படியே அசந்து படுத்துட்டா,..
சாந்தினிகா… இங்க வாம்மா,.. அழைத்த போது எந்தவொரு பதில் கூறாமல் இருந்ததைப் பார்த்து அனுகரன் அறையை விட்டு வெளியே வர… ‘
சாந்தினிகா.. அப்பா… சொல்லுங்க… அம்மா… தூங்கிட்டா,.. அவ எதுவும் சாப்பிடலயே,.. எதுவும் அம்மாவுக்கு ஊட்டிறீயா…
அம்மா…நல்லா தூங்கட்டும்… பா… மதியம் சாதம் தானே சாப்பிட்டாங்க,..அதனால தூக்கம் தான் வரும்…
அவங்க கண் விழிக்கட்டும்.. ஒரு கிளாஸ் பால் சுட வைத்து கொடுத்தால் போதும் என்றாள்…
நீ என்னம்மா யோசனையில் இருக்கிறாய்… அப்பா எனக்கு ஒரு டவுட்… அண்ணன் எதுக்காக வீட்டை விட்டு போனான்… நீங்க அண்ணன் போகும் போது ஏன்?.. தடுத்து நிறுத்தல,.. அம்மா..அடிக்கடி உச்சரித்த வார்த்தை அவன் எந்த தப்பும் பண்ணல என்று தான்…
சொல்லுங்கப்பா,.. என்ன நடந்திச்சு… .
சாந்தினிகா,.. உமக்கு விவரம் அறியாத வயசு. .நீ எப்போதும் அத்தை வீட்டுலேயே தான் இருப்பாய்…முக்கியமாக உங்க அத்தை செளபாக்கியலட்சுமி உன்னை எப்போதும் இடுப்புல வைச்சுட்டே நடப்பாள்…
கீழே கூட விடமாட்டாள்… கங்கா தேவி வேலைக்குச் சென்றிடுவாள்… இப்படியே ஒவ்வொரு நாளும் நல்ல விதமாக போய் கொண்டிருந்தது.. உங்க அண்ணன் கார்த்திகேயன் பள்ளியிலிருந்து அத்தை வீட்டுக்கு வந்துடுவான்… எப்போதும் கங்காதேவி வேலையை முடிச்சுட்டு வருகிற வரைக்கும் கார்த்திகேயன் அத்தை வீட்டில் தான் இருப்பான்…
ஒரு தடவை செளபாக்கியா பாலுக்கு காசு கொடுப்பதற்காக பீரோவை திறந்து பர்ஸில் பார்க்க,.. இல்லை.. உடனே உள்ளே நெக்லஸ் பர்ஸில் இருக்க அந்த பணத்தை எடுத்தவள்… நெக்லஸைக் கட்டிலில் வைச்சுட்டு சமையல் அறைக்குள் நுழைந்து விட்டாள்..
நீ கட்டிலில் உறங்கி கொண்டிருந்த வேளையில், தூக்கத்தில் ஒரே அழுகை, அதை கேட்டு ஓடி வந்த செளபாக்கியா நெக்லஸைக் கவனிக்காமல் உன்னை தூக்கிவிட்டாள்… தூக்கியபோது அந்த நெக்லஸ் கட்டிலில் இடையில் விழுந்து விட்டது…
செளபாக்கியா அதை அறியாமல் உன் அழுகையை நிறுத்துவதின் நோக்கத்தோடு இருந்தாள்…
பல முறை போராடி பார்த்தால் நீ தொடர்ந்து அழுது கொண்டிருந்தாய்.. . அப்படியே கதவைச் சாத்திட்டு உங்க அம்மா வேலைப் பார்க்கும் இடத்திற்கே வந்துட்டாள்… அதற்கு பிறகு தான் உனக்குள்ள ஒரு சிற்றெரும்பு கடித்திருக்கிறது..
அந்த எறும்பு கடித்த இடத்தில் தேங்காய் எண்ணெய் போடு.. இன்னும் அழ மாட்டாள் எனச் சொல்லி கையில் தூக்கிட்டு வெடுக்கென்று நடந்து போனாள்…
கதவு திறந்து கிடக்க,. செளபாக்கியா பார்த்துட்டு கார்த்திகேயன் எப்போது வந்தாய்..
அத்தை அப்பவே வந்துட்டேன்… நீங்க எப்படியும் அம்மாவ தான் பார்க்கப் போயிருப்பீங்கன்னு தெரிஞ்சது.. இவளது அறைக்குள் நுழைந்த போது நினைவு வந்தது..
அச்சச்சோ!.. மறந்தே போய்ட்டேன்.. அனைத்தையும் உள்ளே வச்சிட்டு பார்க்க நெக்லஸ் மிஸ் ஆகுது..
செளபாக்கியா எல்லாத்தையும் தேடிப் பார்க்கிறா!.. அவளுடைய கண்ணுக்கு புலப்படல…
“சோகத்தில் அமர, கார்த்திகேயன் எடுத்திருப்பானோ என்ற சந்தேகம் ஏற்பட்டது.. ‘
டேய்!.. கார்த்திகேயன் இங்க வா. டா… .
சொல்லுங்க,.. அத்தை…கட்டிலில் வைச்சிருந்த நெக்லஸைப் பார்த்தியா!…
எந்த நெக்லஸ்… .நான் பார்க்கவேயில்லையே!..
பொய் சொல்லாதே, நீ எடுத்துட்டா கொடுத்திடு… அது எனக்கு ரொம ப பிடிச்ச ராசியான நெக்லஸ் கார்த்திகேயன் அத்தையிடம் கொடுத்திடுடா… ..
ஐய்யோ,.. எடுக்கல என சொல்லிட்டு திரும்பினான்…
செளபாக்கியலட்சுமி அவனை அடிக்க கை ஓங்கிய போது, கங்கா தேவி …கையை புடிச்சு… என்னம்மா!.. நான் இல்லாத நேரத்தில எம்புளைய அடிக்கிறியே!… என மனசஞ்சலத்தோடு கேட்டாள்…
மதினி… உங்க புள்ளைய உண்மைய சொல்ல சொல்லுங்க,. ஏதோ ஒரு ஞாபகத்துல என் நெக்லஸை எடுத்து கட்டிலில் வைச்சுட்டு வந்துட்டேன்.. இங்க வந்து பார்த்த போது இவன் தான் இருந்தான்…
செளபாக்கியா!.. இவ்வளவு நாள் பழகியும் எங்க மேல வச்ச நம்பிக்கை அவ்வளவு தானா!…
மதினி.. உங்க மேல நம்பிக்கை இருக்குது ..ஆனால் கட்டிலில் வைச்ச நெக்லஸ் எங்க போகும் என்ற குழப்பத்தில் இருந்தாள்…
கார்த்திகேயா!..அத்தை நெக்லஸ் நீ எடுத்திருந்தால் சொல்லிடு,.. உனக்கு வேற ஏதாவது வாங்கி கொடுக்கிறேன்…
நான் எடுக்கவே இல்ல…சொன்னால் கேட்க மாட்டிக்காங்களா, கோபப்பட்டு ஓடிட்டான்…கங்காதேவியும் அங்க ஒரு நிமிஷம் கூட நான் நிற்காமல் கிளம்பிவிட்டாள்…
செளபாக்கியலட்சுமி வருத்தத்தோடு அமர்ந்திருந்தாள்… அவளுடைய கணவன் ராஜேஷ் எப்போதும் போல வீட்டுக்குள் நுழைந்தான்…
ராஜேஷிடம் என்னுடைய நெக்லஸ் காணோம்… வீட்டில் உள்ள நெக்லஸ் எப்படி மிஸ் ஆகும்… காரத்திகேயன் தான் நெக்லஸைத் திருடிருப்பான் என்ற சந்தேகம் சொல்லிக் கொண்டிருக்க,.. இதுக்கு தான் யாரையும் வீட்டுக்குள்ள விடக் கூடாது அளவாக இருந்துக்கோ!.. ஆரம்பத்தில் இருந்து சொன்னேன்.. நீ கேட்கல எரிச்சலுடன் பேசிட்டு சென்றார் ராஜேஷ்…
அதை கேட்டவுடன் ஷாக் ஆகி வெளியே வந்துட்டேன்… நம்ம புள்ளைய அப்படி வளர்க்கலயே.. என புலம்பிக் கொண்டும் கோபத்தோடும் சென்றார்…
உங்க அண்ணனை எதுவும் விசாரிக்காமல் நெக்லஸைத் திருடி என்ன செஞ்ச,.. அப்படினு சொல்லி அடிச்சுட்டேன்… அதுக்கு அப்புறம் வீட்டுக்கே வரவே மாட்டேன்… என் மேல நம்பிக்கை இல்லாமல் இருக்கீங்கல,.. போங்கப்பா…என கோபப்பட்டான்… கங்கா தேவியும் கார்த்திகேயா,.. போகாதே.. போகாதே,.. என்று கத்தி கத்தி கூப்பிட்டாள்… திரும்ப வரவே இல்ல,..
ஒரு வாரத்திற்கு அப்புறம் தான் அவன் நெக்லஸை எடுக்க வில்லை வீட்டினில் தான் இருக்கிறது போன் பண்ணி சொன்னாங்க!.. உங்க அம்மா நல்லா பேசி திட்டிவிட்டாள்… அவங்களுக்கு நமக்கு இப்போது பேச்சு வார்த்தை கிடையாது…
அப்புறமா.. தான் அவசரப்பட்டு அடித்து விட்டேனே ,..சங்கடப்பட்டு ஒவ்வொரு இடத்திலும் ஊரிலும் விசாரித்தோம் அவனைப் பத்தி எந்த தகவலும் இல்லை…
ஒரு தடவை உனக்கு உடம்பு சரியில்லைனு ஆஸ்பத்திரிக்கு போய்ட்டு பஸ்சில் வரும் போது உங்க அண்ணன் கார்த்திகேயன் வேறொரு பஸ்சில் அமர்ந்ததைப் பார்த்து வேகமாக இறங்கி ஓட அந்த பேருந்து வேகமாக சென்று கொண்டிருந்தது… பின்னாலேயே போக இடையில் வந்த கார் அடிச்சு கீழே விழுந்ததில் தான் உங்க அம்மா சுயநினைவை இழந்து விட்டாள்…
சரிங்கப்பா!.. அண்ணன் கண்டிப்பாக வருவாங்க,.. நீங்க வருத்தப்படாமல் இருங்க,.. அம்மாவையும் கூடிய விரைவில் குணமடைந்துவிடுவார்கள்… நம்ம எல்லாரும் ஒரே வீட்டில் சந்தோஷமாக இருக்கலாம்… .
மறுநாள் காலையிலேயே சீக்கிரமாக அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு கிளம்பி கொண்டிருந்தாள்… அப்போது பாய் முகமது ஐயா போன் செய்தார்கள்… சாந்தினிகா,.. நீ நேராக கடைக்கு வந்திடு… முதலில் ரேட் எவ்வளவுனு பேசிட்டு அப்புறமாக பத்திரத்தை வைத்து பேசுவோம்…
சாந்தினிகாவும் அவங்க அப்பாவிடம் சொல்லிட்டு,.. அம்மாவுக்கு இட்லி ஊட்டி விட்டேன்… நீங்க சாப்பிடுங்கப்பா.. கடைக்குப் போய்ட்டு வந்து சொல்றேன் என்றாள்…
மீண்டும் சாந்தினிகா வருவாள்… .
..