வகுடுப்பட்டி(கற்பனை ஊர்தான் பா யாரும் பஸ் ஏறிராதிங்க ஹிஹி..)
என்ற கிராமம் எங்கு சுற்றிலும் பச்சை பசேல் என்று இருக்கும். பக்கத்தில் ஆறு வேற ஓடும் சொல்லவா வேண்டும் அந்த ஊரின் அழகை.
அப்படி ஒரு ஊரில் காலை ஒரு ஒன்பது மணி அளவில் ஒரு பெரிய ஆலமரம் அடியில் ஊர் தலைவர்கள் என்ற பெயரில் வெள்ளை வேட்டி சட்டை போட்டு பெரிய பெரிய மீசை வைத்து அந்த மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு தங்களுடைய வெள்ளை பஞ்சு போன்று இருக்கும் மீசையை ஒரு கையால் தடவியப்படி இருக்க, அந்த ஊரின் மக்கள் அனைவரும் அவர்களை சுற்றி நின்றிருந்தனர்.
அவர்களது நடுவில் ஒரு பெண் தன்னுடைய முந்தானையினால் அவளுடைய வாயை பொத்திக்கொண்டு அழுது கொண்டிருந்தாள்.
இதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா..? அந்த ஊரில் பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிறது அதுவும் எதற்காக அந்த பெண் தன்னை அந்த ஊரில் உள்ள மைனர் கெடுத்து விட்டான் என்று புகார் கொடுத்திருக்கிறார்.
சாதாரண வழிப்போக்கன் என்றால் போலீசில் பிடித்துக் கொடுத்து அவனுக்கு தண்டனை வாங்கி கொடுத்து விடுவார்கள். ஆனால் இவனோ விடாக்கண்டனுக்கு கொடாக்கண்டன் போலீசே வந்து அவன் முன்னால் நின்றாலும் தூசியை தட்டுவது போல தட்டி விட்டு செல்வான். அப்படி ஒரு ரவுடிப் பையன்.
அவனுடைய தாத்தா அப்பா வழியில் அனைவருமே அந்த காலத்தில் இருந்து மைனர்களாகவே இருந்தார்கள். அவர்களுடைய வாரிசு இவனும் விதிவிலக்காகவா இருக்க போகிறான். இவனும் தன்னுடைய முன்னோர்களின் வழியே வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அதே மைனராக.
அப்படி இருப்பவனை இந்தப் பெண் தன்னை அவன் நாசம் செய்து விட்டான் என்று வந்து புகார் கொடுத்து விட்டாள்.
என்னதான் ஊர் தலைவர்களாகவே இருந்தாலும் அவன் செய்து கொண்டிருக்கும் தவறுகளை யாரும் போய் கேட்க முடியாது.
கேட்டால் செவிட்டு வாக்கில் விடுவான்.
“நீ ரொம்ப யோக்கியமா ஒழுங்கா பொத்திகிட்டு போயிரு கண்ணு முன்னாடி நின்னே பாத்துக்கோ..” என்று விரட்டி அடித்து விடுவான். அதனால் யாரும் அவனிடம் தனியாக போய் சிக்கிக் கொள்ள மாட்டார்கள்.
இப்படி ஒரு பெண் அனைவர் முன்னிலையிலும் வந்து அவன் மேல் பழி போட வேறு வழியில்லாமல் ஊர் தலைவர்கள் என்று அனைவரையும் பஞ்சாயத்து பண்ண அழைத்திருந்தார்கள். அவர்களும் செவ்வனே வந்து தங்கள் வேலையை ஆரம்பித்து வைத்தார்கள்.
அந்தப் பெண்ணோ அனைவரிடமும் அழுது கொண்டே தனக்கு நியாயம் கேட்க, அந்த தலைவர்களில் இருந்த ஒருவரோ “நீ யார் மேல பழி போடுற தெரியுதா இந்த ஊரோட பெரிய மைனர் அவரு.. அவர பத்தி தெரிஞ்சி இருந்தும் இப்படி பழி சொல்றியே..?” என்று ஒருவர் கேட்க, மற்றைய ஒருவரோ “என்னையா இப்படி சொல்றீங்க நம்ம ஊரு மைனர பத்தி நமக்கு தெரியாது.. எந்த நேரம் பாரு பொண்ணுங்க கூடயே சுத்துவான்.. அப்படி இருக்கும்போது இந்த பொண்ணு உண்மையைத்தான் சொல்லும்..” என்க.
“அவன் தப்புன்னு தான் இங்க பஞ்சாயத்து பண்றதுக்கு எல்லாரும் வந்திருக்கோம் ஆனா யார் மேல புகார் கொடுத்து இருக்கோமோ அவனை மட்டும் இன்னும் காணோம்..?” என்று சொல்ல,
மற்றும் ஒருவரோ “அண்ணே பார்த்து பேசுங்க அவன பத்தி தெரிஞ்சிருந்தும் நீங்க இப்படி பேசுறீங்க.. அவன் வந்ததுக்கப்புறம் அவன் முன்னாடி தைரியமா உங்களால பேச முடியுமா கொஞ்சம் அடக்கி வாசிங்க..” என்று சொல்ல, இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அவனைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்க, ஆனால் இதற்கு சம்பந்தப்பட்டவனோ தன்னுடைய வீட்டில் குளியலறைல் இருந்து வெளியே வந்தவன் வெள்ளை வேஷ்டி கட்டி கருப்பு நிற முழுக்கை சட்டையை மாட்டியவன் அதை கழுத்தில் இருந்து இரண்டு பட்டன் கழட்டி விட்டு கழுத்தில் அணிந்திருக்கும் புலிப்பல் செயின் வெளியே தெரியும்படி போட்டுவிட்டு தன்னுடைய முழங்கை வரை சட்டையை மடித்து விட்டான்.
அதன் பிறகு அவனுடைய அலைஅலையான கேசத்தை தன்னுடைய கைகளால் கோதியே சீர்படுத்தியவன் தன்னுடைய வலது கையை பயன்படுத்தி குங்குமம் எடுத்து தன்னுடைய நெற்றியில் சிறிய கீற்று போல அழகாக இட்டுக் கொண்டான்.
பின்பு வலது கையில் அவனுக்கு மிகவும் பிடித்தமான அவனுடைய அம்மாவின் தங்க காப்பை கையில் போட்டவன் தன்னுடைய மீசையை முறுக்கி கொண்டிருக்க, அப்போது அவன் அருகில் ஓடி வந்தவன் விழாத குறையாக அவன் மேல் மோதி நின்றான்.
“ஏலேய் எடுபட்ட நாயே இப்படியாலே மேல வந்து விழுவ தூரப் போல..” என்று அவன் மேல் விழுந்தவனை கன்னத்தில் ஒரு அடி கொடுத்தான். அவன் அடித்த அடியையும் வாங்கிக் கொண்டவன் “அண்ணன் உன் மேல ஒரு பொண்ணு புகார் கொடுத்து இருக்கு அண்ணே.. எல்லாரும் அங்கு உனக்காக தான் காத்துகிட்டு இருக்காங்க சீக்கிரமா வா அண்ணே..” என்று அழைக்க, அவனோ தன்னுடைய காலரை மெதுவாக சரி பண்ணிக் கொண்டிருந்தவன்,
“ஏலேய் செத்த மூதி இந்த ஊர்ல இருக்கிற எவளுக்குலே என் மேல புகார் கொடுக்க தைரியம் வந்து இருக்கு..?” என்று கேட்க, அதற்கு அவனும் “அண்ணே எவன்னு தெரியல ஒருவேளை வெளியூர்காரியா இருக்குமோ..?” என்று அவனிடம் சந்தேகம் கேட்க. திரும்பவும் அவனுடைய கன்னத்தில் பளார் என்று அறைந்தவன்
“எடுபட்ட பயலே என் மேல புகார் கொடுத்திருக்குன்னு வந்து சொல்ற நாயி தீர விசாரிக்காம என்கிட்ட வந்து கேள்வி கேட்கிதியோ.. முதல்ல வண்டியை எடுலே..” என்று தன்னுடைய வலது காலை ஏத்தி வேட்டியின் நுனியை கையில் பிடித்துக் கொண்டவன் மாடிப்படியில் இருந்து இறங்கி வர அவனுடைய அழகைக் காண பல கோடி கண்கள் வேண்டும்.
வீட்டை விட்டு அவன் வெளியே வர அவனுடைய அல்லக்கை நண்டு வண்டி எடுக்க அவன் பின்னால் ஏறி அமர்ந்தவன் தன்னுடைய கண்ணில் கூலிங் கிளாசை அணிந்து கொண்டான்.
“என்னங்கடா ஊர் மைனருக்கு விஷயம் போச்சா அவரு மேல தான் புகார் கொடுத்து இருக்காங்கன்னு.. நம்ம எல்லாரும் வந்து இவ்ளோ நேரம் ஆகுது இன்னும் அவர காணோமே..?” என்று சொல்லிக் கொண்டிருக்க, புல்லட்டுகளின் சத்தம் காதை கிழிக்கும் அளவு வந்து கொண்டிருந்தான் நம்முடைய மைனர் “இளவேலன்” 30 வயது ஆண்மகன். அடங்காத காளை ஆனால் என்ன பெண்கள் விடயத்தில் மட்டும் கொஞ்சம் சறுக்கி விடுவான். அதனால் வந்த பிரச்சனைக்கு தான் இன்று வந்திருக்கிறார் துரை.
ஆனால் அவனுக்கோ இது அவ்வளவு பெரிய விடயம் இல்லை. இதை சுலபமாக முடித்துவிட்டு தனது வேலையைப் பார்க்க போய் விடுவான்.
அனைவருடைய பார்வையும் அவன் வந்த திசை பக்கம் பார்க்க, அவனோ தனக்கு முன்னே இரண்டு புல்லட்டில் ஒரு பெண் வண்டி ஓட்ட பின்னால் ஒரு பெண் அமர்ந்த மாதிரி அவனுக்கு முன்னையும் பின்னேயும் பெண்கள் புடை சூழ அந்த பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கும் இடத்திற்கு வந்து கொண்டிருந்தான். அவன் வருவதை பார்த்து அனைவரும் ஆ என்று வாயை பிளந்து கொண்டு பார்த்து கொண்டு இருந்தார்கள்.
பெண்களோ ஒரு சலிப்போடு பார்த்தார்கள் என்றால் ஆண்களோ அவனுடன் வரும் பெண்களை பார்த்து ஆ என்று வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவனுக்கு முன்னால் வந்த வண்டியில் இருந்து இரண்டு பெண்கள் இறங்கியவர்கள் அவன் வண்டியின் அருகே சென்று அவருடைய கையைப் பிடித்து இரு பெண்களும் இறக்கி விட்டார்கள். பின்னே வந்து கொண்டிருந்த வண்டியில் இருந்து இறங்கிய இரு பெண்கள் அவன் நடந்து வருவதற்குள் ஒரு நாற்காலியை அங்கு ஊர் தலைவர்கள் அமர்ந்திருக்கும் எதிர் திசையில் வைத்தார்கள்.
இவன் வந்து அமர்ந்ததும் அந்த நான்கு பெண்களில் இரு பெண்கள் அவனுக்கு மயிலிறகால் சாளரம் வீச மற்றைய இரு பெண்களோ அவனுடைய கையை ஆளுக்கு ஒரு பக்கம் விரித்து வைத்து அமுக்கி விட்டுக் கொண்டிருந்தார்கள்.
அதை பார்த்துக் கொண்டிருந்த அங்கிருந்த அனைவருக்கும் பத்திக்கொண்டு வந்தது. ஆனால் அவனிடம் யாரும் எதுவும் பேச முடியாதே அதனால் மனதுக்குள் புகைந்து கொள்ள மட்டுமே முடிந்தது. அந்த தலைவர்களில் இரண்டாவதாக இவனை வசை பாடிய அந்த தலைவரோ இவன் வந்ததும் எச்சிலை விழுங்கிக் கொண்டு,
“அதான் தம்பி வந்தாச்சு விசாரணையை ஆரம்பிங்க.. என்ன தம்பி ஆரம்பிக்கட்டுங்களா..?” என்று பம்மிக் கொண்டு கேட்க, கூட இருந்த தலைவர்களோ தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்கள் வெளியே யாருக்கும் தெரியாதபடி.
இவனோ தன்னுடைய கூலிங் கிளாஸை கழட்டி தன்னுடைய சட்டையில் மாட்டியவன் காலரை பின்னே இழுத்து விட்டவாறு “என் பேர்ல என்ன பிராது வந்து இருக்கு..?” என்று கேட்க,
“தம்பி அந்த பொண்ணு உங்க மேல புகார் கொடுத்து இருக்கு.. அந்த பொண்ண நீங்க கெடுத்துட்டதா சொல்லுது தம்பி..” என்று சொல்லி முடிக்கவில்லை அதற்குள் அவன் அவரை ஏறிட்டு பார்க்க, “நாங்க நம்பல தம்பி.. அதான் உங்களை கூப்பிட்டு விசாரிக்கிறோம்..” என்று சொல்ல, அதற்கு இவனோ
“ஏன் நம்பல அதான் அந்த புள்ள தெளிவா சொல்லுதுல்ல நான்தான் காரணம்னு.. நம்பி தொலைங்கலே நான் தான் காரணம்.. நீங்க நம்பலேங்கிறதுக்கா நான் என்ன வீடியோவா எடுத்து காட்ட முடியும்..?” என்று அசராமல் சொன்னான்.
அங்கு இருந்த ஊர் தலைவர்கள் இவனை ஆ என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
Mr. Mainar ❤️👌🔥