மச்சக்கார மைனர்

4
(2)

அத்தியாயம்-14

 

துணிக்கடையில் அவர்களுக்கு தேவையான துணிகளை வாங்கிக் கொண்டு அங்கு வந்து கொண்டிருக்கும் பொழுது கூட்டத்தைக் கண்டவள் அங்கு சென்று என்ன என்று பார்த்த பொழுது அங்கு ஒரு பெண்மணி மயங்கிக் கிடந்தார்.

சட்டென எதைப் பற்றியும் யோசிக்காமல் அந்த பெண்மணிக்கு அவள் முதலுதவி அளிப்பதை பார்த்த இளவேலனோ அவளைக் கண்டு அதிர்ச்சியாக நின்றான்.

‘இவள் எப்படி அந்த பெரியவருக்கு இவ்வாறு செய்தாள். இவளா ஒரு கிராமத்து பெண்..?’ என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

அவள் அவன் அருகில் வந்து திகைத்துப் போய் நின்றவனை தோளைத் தொட்டு உலுக்கியவள் “மாமா வாங்க போகலாம்..” என்றாள். அவனும் அவள் கூப்பிட்டதும் அவள் பின்னோடு சென்றவன் வண்டியை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து கிளம்பினான்.

ஆனால் அவனது மனது அவளைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தது. பின்பு அவளிடமே அதை கேட்டு விட்டான்.

“உனக்கு எப்படி அந்த முறை தெரியும்..? நீ தான் கிராமத்து பொண்ணாச்சே..?” என்று அவளிடம் கேள்வி கேட்க, அவளோ லேசாக சிரித்தவள் அவனை நேராக பார்த்து, “நான் ஒரு டாக்டர் மாமா.. சோ அவங்கள ஈசியா என்னால காப்பாற்ற முடிஞ்சது..” என்க, அவனோ ஓட்டிக் கொண்டிருந்த காரை சடன் ப்ரேக் போட்டு நிப்பாட்டி விட்டான்.

“என்ன டாக்டரா..?” என்று அதிர்ச்சியாக கேட்டான்.

அவன் பிரேக் போட்ட வேகத்தில் முன் சீட்டில் அமர்ந்தவள் சட்டென தன் தலையை இடித்துக் கொண்டாள்.

“ஆஆஆ.. ஏன் மாமா இப்படி பிரேக் போட்டீங்க..? இங்க பாருங்க தலையை இடிச்சுக்கிட்டேன்.. அம்மா வலிக்குது..” என்று அவள் சினுங்க, அவனோ அவள் புறம் திரும்பியவன் “ஹேய் என்ன சொன்ன..? நீ டாக்டரா..?” என்று மீண்டும் கேட்டான் அவளைப் பார்த்து.

அதற்குள் பின்னால் இருந்து வண்டியின் ஹார்ன் சத்தங்கள் விடாது ஒலிக்க, அவளோ தன்னுடைய தலையைத் தேய்த்துக் கொண்டே “மாமா பின்னாடி ஹார்ன் அடிச்சுக்கிட்டே இருக்காங்க.. இப்படி நடுரோட்டில் வண்டிய நிப்பாட்டிட்டா கேள்வி கேப்பிங்க.. நீங்க வீட்டுக்கு வாங்க உங்களுக்கு அப்புறம் சொல்றேன்..” என்றாள்.

அவனோ பின்னே திரும்பி பார்க்க, வரிசையாக வண்டிகள் நின்று கொண்டிருந்தன.

வண்டியை வேகமாக எடுத்தவன் தன்னுடைய வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

அவள் தன்னுடைய பைகளை கையில் எடுத்துக் கொண்டு உள்ளே செல்ல, இவனோ வேக வேகமாக அவள் பின்னோடு சென்றவன் வீட்டின் உள்ள நுழைந்ததும் அவளுடைய கையைப் பிடித்து இழுத்து தன்னைப் பார்க்குமாறு செய்தவன்,

“இங்க பாரு இப்பதான் வீட்டுக்கு வந்தாச்சுல்ல இப்ப சொல்லு..?” என்றான் அவளை விடாப்படியாக. அவளோ “ஷஃப்பா.. சொல்றேன் மாமா இப்படி வாங்க.. முதல்ல வந்து உட்காருங்க..” என்று அந்த ஹாலில் உள்ள சோபாவில் அவனை அமர வைத்து அவன் பக்கத்தில் அவளும் அமர்ந்து கொண்டு “நான் டாக்டர் தான் மாமா.. அதுவும் கைனகாலஜிஸ்ட்..” என்றாள். “அப்புறம் ஏன்டி என்கிட்ட ஏதோ பக்கத்துல ஒரு கிராமத்து பொண்ணுன்னு சொல்லி என்கிட்ட நடிச்ச..?” என்று கோபமாக கேட்டான்.

அவளோ “ஆமா நான் டாக்டரு.. உங்க அம்மாவோட அண்ணன் பொண்ணு.. உங்களைத் தேடி தான் மும்பையில் இருந்து இங்க வந்து இருக்கேன்.. அப்படின்னு சொன்ன உடனே என்ன உள்ள வாமா அப்படின்னு வெத்தலை பாக்கு வச்சு அழைச்சு இருப்பீங்க பாருங்க.. அப்படியே போடின்னு புற மண்டையில அடிச்சு அனுப்பி இருக்க மாட்டீங்க..?” என்றாள் அவனைப் பார்த்து.

“என்ன சொன்ன நீ எங்க அம்மாவோட அண்ணன் பொண்ணா..?” என்று கண்கள் விரிய அவளைப் பார்த்து அதிர்ச்சியாக கேட்டான்.

அவளோ “மாமா இப்படி அடிக்கடி ஷாக் ஆகுறத முதல்ல குறைங்க.. நான் உங்களுக்கு விளக்கமா சொல்றேன்..” என்றவள்

“இங்க பாருங்க மாமா என்னோட அப்பா படிக்கிறதுக்காக மும்பை போனப்போ அங்க அவர் கூட படிக்கிற பொண்ண கல்யாணம் பண்ணி அங்கேயே செட்டில் ஆயிட்டாரு.. இங்க அத்தையும் லவ் மேரேஜ் பண்ணி இங்க வந்துட்டாங்க.. ஆரம்பத்துல அவங்க நல்லா தான் இருந்திருக்காங்க.. அதுக்கு அப்புறம் தான் மாமாவோட போக்கு சரி இல்லாம அத்தை இறந்துட்டாங்க.. அதனால அப்பாவுக்கு மாமாவ சுத்தமா பிடிக்காம போயிருச்சு.. உங்களை எப்படியாவது அவங்க கூப்பிடலாம்னு நினைக்கும் போது நீங்களும் யார் கூடயும் வரமாட்டேன் அப்படின்னு ஹாஸ்டல் போய்ட்டீங்க.. சரி நீங்க ஹாஸ்டல்ல தானே இருக்கீங்க உங்க அப்பா கூட இல்ல அப்படின்னு எங்க அப்பாவும் பாட்டியும் அப்படியே இருந்துட்டாங்க.. பாட்டி தான் எப்பவுமே உங்க ஞாபகமாவே இருப்பாங்க.. உங்களோட சின்ன வயசு ஃபோட்டோவை அவங்க எப்பவும் வச்சிருப்பாங்க.. அப்படி ஒரு நாள் நான் வளர்ந்ததுக்கு அப்புறம் தான் என்கிட்ட அவங்க கேட்டாங்க உங்களை கல்யாணம் பண்ணிக்க சொல்லி.. எனக்கு நானியை ரொம்ப பிடிக்கும்.. ஆனா என் நானிக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்.. அதனால நானும் உங்களை கல்யாணம் பண்ண சம்மதம் சொன்னேன்.. இதுல என்ன பிரச்சனைன்னா உங்களை எப்படி நேரடியா சந்திக்கிறது அப்படின்னு தான்.. அதனாலதான் நான் பாட்டிகிட்ட ஒரு ஐடியா சொன்னேன்.. இந்த மாதிரி உங்களுக்கே தெரியாம உங்க கிட்ட பழகி உங்க கிட்ட நெருங்கலாம்னு வந்தேன் மாமா.. ஆனா எனக்கு உங்களை கொஞ்சமே கொஞ்சம் புடிச்சிருந்துச்சு ஏன்னா..” என்றவள் கண்கள் அவனை மேலிருந்து கீழ் வரை ஒரு முறை பார்த்து “ஏன்னாஆஆஆ..”

“ஏன்னாஆஆஆ..?’ என்று அவளைப் போலவே அவன் அவளை திருப்பி கேட்க,

“ஏன்னாஆஆஆ நானி சொன்னாங்க உங்களுக்கு அந்த இடத்துல பெரிய மச்சம் இருக்குனு.. அதை பார்க்கணும்னு எனக்குள்ள ஒரு உந்துதல் வந்துச்சு.. அதான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டா நான் தாராளமா பார்க்கலாம் தானே..” என்று அவனை பார்த்து கேட்க, அவனோ அவள் சொன்னதைக் கேட்டவன் “அடிப்பாவி ஒரு மச்சத்தை பார்க்குறதுக்காகவாடி ஒருத்தனை கல்யாணம் பண்ண ஆசைப்படுற.?” என்று கேட்க, சட்டென்று சிரித்தவள் “இது கொஞ்சம் சின்ன புள்ளத்தனமா தான் இருக்கும் ஆனாலும் எனக்கு பிடிச்சிருக்கு மாமா..” என்க,

“ஏய் வெள்ளை தக்காளி பாட்டி எப்படி இருக்காங்க நல்லா இருக்காங்களா..? எனக்கு விவரம் தெரிஞ்சு நான் அவங்களைப் பார்த்து ரொம்ப வருஷம் ஆகுது.. ஆனா அவங்க என்ன மறக்காம இன்னும் நெனச்சிட்டு இருக்காங்க..” என்றவன் கண்கள் கலங்கியது.

“அட என்ன மாமா நீங்க.. இதுக்கெல்லாமா போய் கண் கலங்குவீங்க..?” என்றவள் அவனுடைய கன்னத்தை பற்றி அவனுடைய கண்ணீரை துடைத்து விட்டாள்.

“இங்க பாருங்க மாமா நான் ஒரு டாக்டர் அப்படிங்கிறதால அன்னைக்கு நண்டு கிட்ட உங்கள பத்தி விசாரிக்கும் போது அவன் உங்களுக்கு இருக்கிற பிரச்சனையை என்கிட்ட சொன்னான்.. எனக்கு புரிஞ்சது.. அது ஒரு பெரிய பிரச்சினையே கிடையாது.. அதுக்கப்புறம் தான் நானும் நண்டுவும் பிளான் பண்ணி நைட்டு உங்களுக்கு பால் கொடுத்து தூங்க வச்சி மறுநாள் உங்களை கல்யாணம் பண்ண சொல்லி வற்புறுத்தினேன்..” என்று சொல்ல, அவனோ “என்ன அப்போ நேத்து நைட் நடந்தது ப்ளானாஆ..? இதுக்கு அந்த நண்டுப் பயலும் உடந்தையா.. டேய் நண்டு என் கையில மாட்டுவல்ல அன்னைக்கு இருக்குடா உனக்கு..” என்று அவனை திட்டிக் கொண்டிருக்க, அவளோ “அதெல்லாம் விடுங்க மாமா இப்ப நம்ம பிரச்சனைக்கு வருவோம்..

என்னால உங்களை சீக்கிரமா சரி பண்ண முடியும்.. நீங்க எதை பத்தியும் கவலைப்படாம எனக்கு எப்படி பிள்ளையைக் கொடுக்கிறது அப்படின்னு மட்டும் யோசிங்க..” என்றாள் வினி.

அவனோ அவள் இப்படி ஒளிவு மறைவு இல்லாமல் அவனிடம் கேட்க சற்று ஆடித்தான் போனான்.

“ஏன்டி உனக்கு கொஞ்சம் கூட இந்த கூச்சநாச்சமே கிடையாதா.. இப்படி ஒரு பையன் கிட்ட வெக்கமே இல்லாம கேக்குற..?” என்று அவன் கேட்க, சட்டென அவனுடைய மடியில் ஏறி அமர்ந்தவள்

“இங்க பாருங்க என் மைனர் மாமா..” என்றவள் தன்னுடைய மாராப்பிற்குள் உள்ளே கிடந்த தாலியை எடுத்து அவன் கண் முன்னால் காட்டியவள்

“இது நீங்க கட்டின தாலி.. நான் உங்க பொண்டாட்டி.. எனக்கு புள்ள கொடுக்குறத பத்தி உங்ககிட்ட பேசாம வேற யார் கிட்ட பேச முடியும்..? இதுல எனக்கு எந்த தயக்கமும் கிடையாது.. இன்னும் சொல்லப்போனா உங்களுக்கு எப்படி புள்ள கொடுக்கணும் அப்படின்னு கிளாஸ் கூட எடுப்பேன்.. நான் ரெடி நீங்க ரெடியா..?” என்று அவனை ஒற்றைப் புருவம் உயர்த்தி கண்ணடித்தாள்.

அவனோ அவள் பேச்சில் ஆடிப் போய் அப்படியே அமைதியாக அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்க,

அவனை ஒரு மார்க்கமாக பார்த்தவள்,

“மாமா உண்மையிலேயே உங்களுக்கு அந்த இடத்துல மச்சம் இருக்கா காட்டுங்களேன்..” என்று கேட்க, அவனுக்கோ தூக்கி வாரிப் போட்டது.

“அடி போடி இவளே.. விட்டா நீ என்ன அவுத்து பார்க்காம விட மாட்ட போல.. ஆள விடுமா தாயி..” என்றவன் அவளை தூக்கி அந்த சோபாவில் உட்கார வைத்து விட்டு அங்கிருந்து ஓடியே விட்டான்.

 

அத்தியாயம்-15

 

இரவு வினிதா அவனுக்காக பார்த்துப் பார்த்து சமைத்து வைத்தவள் பின்பு தனது அறைக்குச சென்று குளித்து முடித்து கறுப்பு நிறத்தில் டிரான்ஸ்பரண்டான புடவையை அணிந்தவள் தலைமுடியை விரித்து விட்டு அதில் மளிகை சரத்தை வைத்தவள் அவன் வரவிற்காக காத்துக் கொண்டிருந்தாள்.

“மாமா இன்னைக்கு என்கிட்ட இருந்து நீங்க தப்பிக்கவே முடியாது..” என்று உறுதி எடுத்தவள் வாசலில் அவனை எதிர் நோக்கி காத்துக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரம் கழித்து தன்னுடைய வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த வேலனோ தன்னுடைய புது மனைவியின் அவதாரத்தை கண்டு அப்படியே நின்று விட்டான்.

ஏனென்றால் மனைவியின் அபார அழகை அவள் அணிந்திருந்த லோ நெக் ப்ளவுஸ் அப்பட்டமாக தனக்கு காட்சி அளிக்க அதை மறைக்க வேண்டிய அவளுடைய புடவையும் அவனுக்கு சதி செய்து அவனை அடுத்த அடி எடுத்து வைக்க விடவில்லை.

அவளுடைய அழகில் மயங்கி அப்படியே நின்று விட்டான்.

‘ஐ மாமா மயங்கிட்டாரு.. அப்போ இன்னைக்கு நம்ம பிளான் சக்சஸ் ஆகிடும்..’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டவள் அவன் அருகே சென்று

“வாங்க மாமா.. என்ன மாமா வாசல்லையே நின்னுட்டீங்க உள்ள வாங்க..” என்று அவன் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றவள்,

“மாமா சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க உங்களுக்காக நான் சாப்பாடு ரெடி பண்ணி வச்சிருக்கேன்..” என்று அவனை கூட்டிச் சென்று குளியல் அறைக்குள் அழைத்துச் செல்ல, அதுவரை அவள் இழுத்த இழப்பிற்கு சென்றவன் இனியும் தாங்காது என்று நினைத்து

“ஏய் நீ எங்க உள்ள வர்ற.. அதான் சொல்லிட்டல்ல நான் குளிச்சிட்டு வரேன் நீ போ..” என்று அவளை பிடித்து வெளியே அனுப்பிவிட்டு “விட்டா இவளே குளிப்பாட்டி விட்டுடுவா போல..” என்று கதவை பூட்டியவன் பெருமூச்சுவிட்டு குளித்துவிட்டு வெளியே வந்தான். அதற்குள் அவளோ அவனுடைய கபோர்டை திறந்து அவனுக்கான இரவு ஆடையை எடுத்து வைத்தவள் “மாமா இந்த ட்ரஸ்ஸை இன்னிக்கு போட்டுக்கோங்க..” என்று அவன் முன்னே கொண்டு வர, அவனோ ‘இன்னைக்கு என்ன இவ ஒரு மார்க்கமாக இருக்காளே..?’ என்று நினைத்துக் கொண்டு

“அடியே நீ போடி நான் போட்டுட்டு வரேன்.. இப்படி கொடுக்கு மாதிரி பின்னாடி சுத்திக்கிட்டு இருக்க..” “என்ன மாமா என்ன இப்படி சொல்லிட்டீங்க..? போங்க நான் கோபமா போறேன்.. அப்படி சொல்லுவேன்னு நினைச்சீங்களா..? அதெல்லாம் முடியாது.. ஒழுங்கா நீங்களே போடுறீங்களா இல்ல நானே போட்டு விடவா..?” என்று கேட்க, அவனோ தன் தலையில் அடித்துக் கொண்டவன் அவளை வெளியே தள்ளி கதவை பூட்டி விட்டே ஆடையை அணிந்து கொண்டான். சிறிது நேரம் கழித்து கீழே வந்தவன் டைனிங் டேபிளில் அமர்ந்தான். அவன் உண்பதற்கு பல வகை பதார்த்தங்கள் அடுக்கி வைத்து இருந்தாள்.

ஒவ்வொன்றாக திறந்து பார்த்தவன் அதிர்ச்சியாக அவள் முகத்தை பார்த்து

“என்னடி இது..?” என்று கேட்க, அவளோ

“ஏன் மாமா உங்களுக்குத் தெரியாதா..? இது முருங்கக்காய் சாதம், இது முருங்கைக்காய் குழம்பு, இது முருங்கைக்காய் பொரியல், இது முருங்கைக்கீரை கூட்டு, இது முருங்கைக்காய் பச்சடி, அப்புறம் இது முருங்கைக்காய் சூப்பு..” என்று சொல்லி முடிக்கவில்லை, அவனுக்கோ தலை சுற்றிக் கொண்டு வந்தது.

“ஏன்டி ஊர்ல இருக்கிற எல்லா முருங்கைக்காயும் இங்கதான் இருக்கும் போல இருக்கு.. எதுக்குடி இவ்வளவு சமைச்சு வச்சிருக்க..?” என்று கேட்க, அவளோ லேசாக சிரித்தவள் “ஏன்னு உங்களுக்கு தெரியாத மாமா..? இன்னைக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட்.. உங்களுக்கு தான் இந்த சமாச்சாரத்தை பத்தி எதுவுமே தெரியாது.. அதனால தான் முதல்ல உங்களுடைய உணர்ச்சிகளை தூன்ற மாதிரி சாப்பாடு வகையில் முருங்கைக்காய் வெரைட்டிஸ் பண்ணி இருக்கேன்.. அதுக்கப்புறம் நான் உங்களுக்கு ஒன்னு ஒன்னா சொல்லிக் கொடுக்குறேன்.. நீங்க கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டு அதுக்கப்புறம் நீங்களே..” என்று சொல்ல முடியாது வெட்கப்பட்டு தலை குனிந்து கொண்டாள்.

அவள் வெட்கப்படுவதை பார்த்தவன் “அந்த அளவுக்கு எல்லாம் சீனு இல்லை.. முதல்ல வெட்கப்படுவத நிப்பாட்டிட்டு சோறு போடுறியா.. இல்ல நான் எழுந்து போகவா..?” என்று கேட்டான்.

“ஏன் மாமா ரொமான்டிக்கா பேசும்போது அத ரசிக்கலன்னா கூட பரவாயில்லை.. அட்லீஸ்ட் அத கெடுக்கமா இருக்கலாம்ல.. இப்படியா கட்டைய போடுவீங்க..?” என்றவள் “சரி மாமா சாப்பிடுங்க..” என்று ஒவ்வொரு பதார்த்தத்தையும் பார்த்து பார்த்து அவனுக்கு பரிமாற, அவனும் அதை வாயில் வைத்தவனுக்கு மிகவும் சுவையாக இருந்தது.

அனைத்தையும் விரும்பியே உண்டான்.

வழக்கத்தை விட இன்று அதிகமாகவே சாப்பிட்டு இருப்பான். பாவம் அவன் சாப்பிட்டது அனைத்தும் இன்னும் சற்று நேரத்தில் அவனை என்ன பாடு படுத்தப் போகிறது என்று தெரியாமல் மனதார முழுவதையும் உண்டான்.

அவன் சாப்பிட்டு முடித்ததும் “மாமா உங்க போனுக்கு நான் ரெண்டு வீடியோ அனுப்பி வச்சிருக்கேன்.. நான் வர்ற வரைக்கும் நீங்க அத பார்த்துட்டு இருங்க..” என்று சொல்ல, அவனும் ஏதோ ஒன்று என்று நினைத்து சரி என்று சொல்லியவன் தன்னுடைய அறைக்குச் சென்றான்.

அவள் சொன்னது போலவே அவனுடைய மொபைலில் மெசேஜ் வந்திருக்க, மொபைலை ஆன் பண்ணி அந்த வீடியோவை ஓபன் செய்து பார்க்க, அதுவோ ஏடாகூடமான வீடியோ.

அதை கண்டவன் சட்டென மொபைலை ஆஃப் பண்ணி ஃபோனை தூக்கி போட்டு விட்டான். “ச்சை என்ன கண்றாவி வீடியோ.. இவ என்ன இப்படி இருக்கா ஆத்தி..” என்று புலம்பிக்கொண்டு இருந்தான்.

அவளோ அவன் சாப்பிட்டு முடித்த பின்பு அவளும் சாப்பிட்டு விட்டு கையில் அவனுக்காக பசும்பாலை சுண்ட காய்ச்சி அதில் பாதம் பிஸ்தா என்று இன்னும் சில பல ஐட்டங்களை சேர்த்தவள் அவனுக்காக அதை எடுத்துக்கொண்டு அவனது அறைக்குச் சென்றாள்.

கையில் பால் டம்ளருடன் உள்ளே வந்தவள் அந்த அறையில் அவனை காணாது சற்று திகைத்தாள்.

“இந்த மாமா இந்நேரத்துல எங்க போனாரு..?” என்றவள் அந்த அறை முழுவதும் அவனை சுற்றி முற்றி தேடினாள்.

அவன் எங்கும் இருக்கவில்லை. அங்கு உள்ள குளியலறை பின்பு பால்கனி, மொட்டை மாடி என அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்தவள் “எங்க மாமா போனீங்க..” என்று புலம்பியவாறு திரும்பவும் அவர்களது அறைக்கு வந்தவள் பாலை அங்கு உள்ள டேபிளில் வைத்துவிட்டு நகர, அவளுடைய கொலுசு அவளுடைய புடவையில் மாட்டி அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் போனது.

“பட்ச் இது வேற நேரம் கெட்ட நேரத்துல..” என்று சலித்துக் கொண்டவள் கீழே குனிந்து கொலுசில் மாட்டிய சேலையை எடுத்துக் கொண்டிருந்தவள் ஏதோ உந்துதலில் சட்டென தலையை நிமிர்த்தி பார்க்க, அங்கே அவர்களது அறையில் கட்டிலின் அடியில் ஒரு போர்வையை சுற்றிக்கொண்டு இளவேலன் அங்கும் இங்கும் உருண்டவாறு படுத்துக் கிடந்தான்.

அதை பார்த்தவளுக்கோ சற்று அதிர்ச்சியாக தான் இருந்தது.

“மாமா நீங்க இங்க தான் இருக்கீங்களா..? உங்களை எங்கெல்லாம் தேடினேன்.. எத்தனை தரம் கூப்பிட்டேன்.. எதையுமே காதுல வாங்காத மாதிரி என்கிட்ட இருந்து தப்பிக்கலாம்னு இங்கையா ஒளிஞ்சு இருக்கீங்க.. இப்ப மாட்டினீங்களா இருங்க வரேன்..” என்றவள் கீழே குனிந்து பூனை போல கட்டிலின் அடியில் இவளும் போய் அவனுடையப் போர்வையை பிடித்து இழுக்க, அவனோ சற்று முன்பு சாப்பிட்ட உணவினால் அவன் உடலில் ஏதேதோ மாற்றங்கள் நிகழத் தொடங்கியது. என்னவென்று அவனுக்கு சொல்லத் தெரியவில்லை.

ஆனால் ஏதோ ஒன்று தன் உடலில் நிகழ்வதை உணர்ந்தவனால் அந்த அறையில் இருக்க முடியவில்லை. அதே நிலையில் அவளை எவ்வாறு பார்ப்பது என்றும் அவனுக்கு புரியவில்லை.

அவள் வரும் சத்தம் கேட்டு சட்டென போர்வையை போர்த்திக்கொண்டு கட்டிலின் அடியில் பதுங்கிக் கொண்டான்.

அவள் அறைக்குள் வந்ததும் அவனை அழைத்தும் கூட சிறிதும் சத்தம் இல்லாமல் இருந்தவன் இப்பொழுது அவள் அவன் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டு உள்ளே வரவும் அவனுக்கோ அடி வயிறு கலக்கியது.

இனி தப்பிக்க வாய்ப்பே இல்லை என்று நினைத்து கொண்டான். “என்ன மாமா நீங்க.. சின்னப் புள்ள மாதிரி இப்படி கட்டிலுக்கு அடியில வந்து ஒளிஞ்சிருக்கீங்க.. இப்படியெல்லாம் பண்ணா என்கிட்ட இருந்து தப்பிச்சிடலாம்னு பாத்தீங்களா.. முதல்ல வெளியே வாங்க..” என்று அவனை வெளியே அழைத்து வந்தாள்.

வெளியே வந்தவன் அவளைப் பார்க்க முடியாமல் தன்னுடைய உடலை நெளித்துக் கொண்டு நின்றான்.

“என்ன ஆச்சு மாமா உங்களுக்கு.. ஏன் இப்படி ஆக்வாடா பிஹேவ் பண்றீங்க..?”

“அது ஒன்னும் இல்ல வெள்ளத் தக்காளி.. என் உடம்புக்குள்ள என்னமோ பண்ணுது.. ஆனா என்னனு சொல்லத் தெரியல.. ஏதோ ஒரு மாதிரி உடம்பெல்லாம் முறுக்கிக்கிட்டு வருது..” என்று திக்கி திணறி அவன் சொல்ல, அவளோ தனக்குள் சிரித்துக் கொண்டவள், “ஐயோ மாமா இதுக்கு தான் நீங்க இப்படி பயந்தீங்களா..? அது ஒன்னும் இல்ல மாமா இதுக்கு முன்னாடி சாப்டீங்கள்ள முருங்கைக்காய் ஸ்பெஷல்.‌ அதோட வேலதான் உங்க உடம்புல அதோட மாற்றத்தை காண்பிக்கிறது.. இதுவே என்னோட முதல் வெற்றி தான்..” என்க,

அவனோ அவளைப் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன மாமா நான் என்ன சொல்றேன்னு உங்களுக்கு புரியலையா..? உங்க உடம்புல இப்போ ஒரு மாற்றம் தெரியுதுல்ல அது நல்ல அறிகுறி.. இப்படியே போனா கண்டிப்பா நான் சொன்ன மாதிரி என்னோட சேலஞ்சில நான் ஜெயிச்சு காட்டிடுவேன்..” என்றாள். “சரி வாங்க மாமா ஆரம்பிக்கலாமா..?” என்க, அவனோ பேய் முழி முழித்துக் கொண்டிருந்தான்.

“இந்தாங்க மாமா இந்த பால முதல்ல குடிங்க.. அப்புறம் மத்தத நான் பாத்துக்கிறேன்..” என்று அவனைப் பார்த்து கண்ணடித்தவள் அங்கு டேபிளில் உள்ள பாலை எடுத்து அவன் முன் நீட்ட,

அவனோ “என்னது திரும்பவும் பாலா..” என்று அதிர்ந்து அவன் நிற்க, அவளோ அந்த பாலை தனது வாயில் சரித்து கொண்டு அவனை நெருங்கியவள் சட்டென அவனுடைய இதழை முற்றுகையிட்டாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!