அத்தியாயம்-03
இளவேலன் அடித்த அடியில் சுருண்டு போய் கீழே விழுந்த இன்ஸ்பெக்டருக்கோ ஆத்திரமாக வந்தது.
இவனை ஒரு பொறம்போக்கு இவனிடம் தான் அடி வாங்குவதா என்று சீறி கொண்டு எழுந்தவன் அவனை அடிக்கப் பாய அதற்குள் அந்த இன்ஸ்பெக்டருடன் இருந்த மற்ற காவலர்கள் அவனை வந்து பிடித்துக் கொள்ள, அவனோ “டேய் வேலா ஊருக்குள்ள வேனா நீ பெரிய மைனரா இருக்கலாம்.. உனக்கு என்னடா யோக்கியதை இருக்கு அந்த பொண்ண என்கிட்ட இருந்து காப்பாற்றுவதற்கு மரியாதையா சொல்றேன் அந்த பொண்ண இங்கயோ விட்டுட்டு நீ உன் வேலைய பாத்துட்டு போ..”
“இதோ பாருடா வந்துட்டாரு சீம துரை நான் சிலுக்கு சட்டை போட்ட மைனர்னா நீ காக்கி சட்டை போட்ட மைனர்.. ஒழுங்கா வந்தோமா உன்னோட வேலைய பார்த்தோமான்னு முழுசா ஊர் போய் சேர வழியை பாரு.. சும்மா இங்க சீண்டிகிட்டு இருந்த நடக்கிறதே வேற..” என்று தன்னுடைய மீசையை முறுக்க, அந்த போலிஸ் அதிகாரிக்கோ அவனை இந்த நிமிடமே இங்கேயே சுட்டு பொசுக்க வேண்டும் என்று கோபம் வந்தது.
இவர்கள் இருவருக்கும் ஆகவே ஆகாது.
இன்ஸ்பெக்டர் காளியப்பன் அவருக்கு தான் ஒரு போலீஸ் அதிகாரி தனக்கு அனைவரும் மரியாதை கொடுக்க வேண்டும் என்று நினைப்பவருக்கு இவனோ போலீஸ்னா பெரிய கொம்பா..? என்று ஒரு பொருட்டாக கூட எண்ணாமல் செல்ல. காளியப்பனோ எப்படியாவது அவனை தன் காலில் விழ வைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறான்.
“இந்தா புள்ள யார் நீ.. எதுக்கு இந்த ராத்திரி நேரத்துல தனியா சுத்திட்டு இருக்க..?” என்று இளவேலன் அந்தப் பெண்ணிடம் கேட்க, அவளோ தன்னுடைய கண்களை துடைத்துக் கொண்டவள்,
“சார் என் மாமா இந்த ஊர்ல இருக்கிறதா தகவல் வந்துச்சுங்க.. அதனால அவர பாக்க தான் நான் இங்க வந்தேன்.. ஆனால் இந்த இன்ஸ்பெக்டர்..” என்று சொன்னவளுக்கோ அதற்கு மேல் வார்த்தை வரவில்லை.
“என்னது இந்த ஊர்ல உன் மாமனா.. யாரது..?” என்று அவளிடம் கேட்க,
அவளோ “சார் அவருடைய சின்ன வயசு போட்டோ என்கிட்ட இருக்கு அத வச்சு தான் விசாரிக்கணும்..” என்று சொல்ல, அவனோ இவ என்ன லூசா..? என்பது போல் பார்த்தவன், “ஹேய் கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா.. சின்ன வயசு போட்டோ வெச்சி இப்ப இருக்குறவரை எப்படி கண்டுபிடிக்க முடியும்..?” என்று கேட்க,
“முடியும் சார்.. என்னால முடியும்.. அந்த நம்பிக்கையில தான் நான் வந்து இருக்கேன்..” என்றவள் தன்னுடைய பையில் இருந்து அவள் மாமனுடைய சின்ன வயது போட்டோவை அவனிடம் காண்பிக்க, அதைப் பார்த்தவனுக்கோ சட்டென தூக்கி வாரி போட்டது.
ஏனென்றால் அது அவனுடைய பத்து வயதில் எடுத்த போட்டோ அது. ‘இது எப்படி இவள் கையில்..?’ என்று யோசனையுடன் இருக்க, அவளோ அவனுடைய கையைப் பிடித்து உலுக்கியவள் “சார் இவர் தான் என் மாமா.. என்ன ஊருக்குள்ள மட்டும் கூட்டிட்டு போக முடியுமா சார்..? மத்ததை நான் பார்த்துக்கொள்கிறேன்..” என்று சொல்ல,
அவனோ ‘நம்ம அப்பன் பண்ண சில்ற வேலைக்கு இவ எந்த ஊரு காரின்னு தெரியலையே.. எங்கிருந்து வந்தாலோ என்னோட போட்டோவ கரெக்டா கொண்டு வந்தருக்கா இப்போ இவகிட்ட நான் தான்னு சொன்னேன் நம்ம கதை சோலி முடிஞ்சு..’ என்று நினைத்தவன்,
“இந்தா பாரு புள்ள இது ரொம்ப சின்ன வயசு போட்டோ இதுல இருக்குற உருவத்தை வைச்சி இப்போ இருக்கிற ஆள எல்லாம் அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்க முடியாது.. ஒழுங்கா சொல்றேன் வந்த வழியே திரும்பி போய்டு அதுதான் உனக்கு நல்லது..” என்று அவன் சொல்ல,
இவளோ “சார் உங்களால ஊருக்குள்ள என்ன கூட்டிட்டு போக முடியாதுன்னா சொல்லிடுங்க நானே எப்படியோ போய்க்கிறேன்.. அதை விட்டுட்டு என்னை எப்படி நீங்க ஊருக்கு போக சொல்லலாம்..? நானே ரொம்ப வருஷம் கழிச்சு எங்க மாமா இருக்கிற ஊரை கண்டுபிடிச்சு வந்து இருக்கேன்.. கண்டிப்பா அவர கண்டுபிடிக்காம நான் இந்த ஊரை விட்டு போக மாட்டேன்..” என்றவள் அங்கிருந்து ஊரை நோக்கி நடக்க தொடங்கினாள். அவனோ தலையில் அடித்துக் கொண்டு ‘இவ என்ன என்ன பிரச்சனை எல்லாம் கொண்டுவர காத்திருக்காளோ தெரியலையே..’ என்று நினைத்துக் கொண்டவன் “இங்க பாரு இன்சு இதுக்கு அப்புறமும் உன்னோட சில்லறை புத்தியை காட்டிக் கொண்டிருந்த முழுசா ஊர் போய் சேர மாட்ட.. யோவ் பார்த்து கூட்டிட்டு போங்க..” என்றவன் தன்னுடைய வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
வினிதா தன்னுடைய கைப்பையை மார்போடு சேர்த்து அணைத்தவள் விறுவிறு என்று ஊரை நோக்கி நடந்து கொண்டிருந்தாள்.
அவள் பின்னே அவன் ஹாரன் சத்தம் கேட்க, திரும்பி பார்த்தவள் முகத்தை சுளித்துக்கொண்டு தன்னுடைய நடையை தொடர்ந்தாள்.
“இந்தா புள்ள நான் சொல்றதத்தான் கேட்கல சரி வா ஊருக்குள்ள கொண்டு போய் விடுறேன்..” என்று சொல்ல, அவளோ தன்னுடைய நடையை நிறுத்தியவள்,
“இங்க பாருங்க யாரும் எனக்கு உதவி பண்ண வேண்டாம் எனக்கு போய்க்க தெரியும்..” என்றாள்.
“ஓ அப்படியா சரி அப்போ அந்த இன்ஸ்பெக்டர திரும்ப வர சொல்லவா..?” என்று இவன் கேட்க,
அவளோ திடுக்கிட்டு திரும்பியவள் “சார் ஏன் சார் இப்படி செய்றீங்க.. அந்த ஆளு ஒரு போலீஸ்காரன் மாதிரியா நடந்துக்கிறான்.. பொறுக்கி மாதிரி நடந்துக்கிறான்.. எப்படித்தான் ஒரு பொண்ணு மேல கை வைக்க தோணுதோ..” என்று இவள் சொல்ல,
அதைக் கேட்டவனோ கண்களை சுருக்கிக் கொண்டு அவளைப் பார்த்தான்.
“சரி சரி ரொம்ப பேசாத வரியா நான் போகவா..?” என்க. சற்று யோசித்தவள் தன்னை சுற்றி பார்க்க இருட்டு அவளை பயமுறுத்துயது.
என்னதான் தன்னை தைரியமாக காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் பயமாகத்தான் இருந்தது. இவனோ அவளை அந்த போலீசிடமிருந்து காப்பாற்றியதால் இவன் மேல் ஒரு நம்பிக்கை வந்து இருந்தது. அதனால் அவனுடன் பைக்கில் செல்ல தயாரானாள். அவனுடைய வண்டியில் ஏறப்போனவளோ “சார் இந்த கைய கொஞ்சம் எடுத்துக்கோங்க..” என்று அவனுடைய இடது கையை காட்டினாள்.
அவனோ ‘எதுக்கு இவ இப்ப கைய எடுக்க சொல்றா..?’ என்று யோசித்தவாறே தன்னுடைய கையை எடுக்க, அவளோ அவன் தொடையில் ஒரு கையை பதித்தவள் அவனுக்கு முன்னால் வண்டியில் அமர்ந்தாள்.
அவள் இப்படி தனக்கு முன்னால் வந்து அமர்வாள் என்று நினைக்காதவனுக்கோ சட்டென தூக்கி வாரி போட்டது.
“ஏய் என்னடி பண்ணிட்டு இருக்க இறங்கு முதல்ல..” என்றான். “நீங்கதானே சார் வண்டில என்னை ஏற சொன்னீங்க அதான் ஏறுனேன் இப்ப இப்படி சொல்றீங்க..” என்றாள் அவனுக்கு முன்னே அமர்ந்தவாறு அவனை ஏரெடுத்து பார்த்தபடி அந்த நெருக்கத்தில் சற்று தடுமாறியவனோ “உன்னை ஏற சொன்னது முன்னாடி இல்ல பின்னாடி..” என்று சொல்ல,
“ஓ அப்படியா சார் நான் இதுவரைக்கும் இந்த மாதிரி வண்டியில வந்தது கிடையாது.. சைக்கிள்ல போகும்போது இந்த மாதிரி எங்க அப்பா முன்னாடி வச்சு தான் கூட்டிட்டு போவாங்க.. அதே மாதிரி நினைச்சுக்கிட்டேன் மன்னிச்சுக்கோங்க..” என்றவள் இறங்கி அவனுடைய தோளில் கரம் பதித்தவள் பின்னால் ஏறி உட்கார்ந்து அவனை இடுப்போடு கட்டிக் கொண்டாள். அவளுடைய பருத்த மாங்கனிகள் அவனுடைய முதுகை வண்டாய் குடைய அவனுக்கு சோதனைக்கு மேல் சோதனை ஆனது.
“இவள..” என்று பல்லைக் கடித்தவன்,
“அடியேய் கையை எடுடி ஏதோ பொண்டாட்டி கணக்க இடுப்ப பிடிச்சிட்டு வர.. ஒழுங்கு மரியாதையா கைய எடு இல்ல இப்படியே விட்டுட்டு போய்டுவேன்..” என்று கத்தினான்.
“என்ன சார் நீங்க நான் பாட்டுக்கு செவ்வனே நடந்து போயிட்டு இருந்தேன்.. நீங்கதான் வண்டில வந்து ஏறு கூட்டிட்டு போறேன்னு சொன்னீங்க.. சரின்னு முன்னாடி ஏறுனா அதுக்கும் திட்றீங்க.. இப்ப பின்னாடி ஏறுனா அதுக்கும் திட்றீங்க.. போங்க சார் நீங்க ரொம்ப மோசம்..” என்று நொடித்துக் கொள்ள,
‘சரியான இம்ச வேளியில போற ஓணானை வேட்டுக்குள்ள விட்ட கதையா போச்சு..’ என்று முனங்கியவன் ”அம்மா தாயே இந்தக் கை இருக்குல்ல இதை எடுத்து இங்க பக்கத்துல இந்த கம்பி இருக்கு பாரு அதுல புடிச்சுக்கோ..” என்றவன் அவன் இடுப்பை சுற்றி இருந்த அவருடைய கையை எடுத்து அந்த கம்பியில் பிடிக்க வைத்து வண்டியை கிளப்பினான்.
Super