மச்சக்கார மைனர்

4.5
(2)

அத்தியாயம்-06

 

வினிதான் அறையில் இருந்து வெளியே வந்தவன் நேராக நண்டுவை அழைத்து “லேய் நண்டு நான் சொல்ற மாதிரி ஏற்பாடு பண்ணு சரியா..” என்றவன் தன்னுடைய திட்டத்தை அவனிடம் சொல்ல, அவனோ வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு அவன் சொல்வதை அப்படியே கேட்டுக் கொண்டு அதை செயல்படுத்த ஆரம்பித்தான்.

“சரி அண்ணே நீ சொல்லி நான் எதைக் கேட்காமல் இருந்து இருக்கேன்.. இப்போ உடனே அந்த வேலையை பண்றேன்..” என்றவன் உடனே அங்கிருந்து புறப்பட்டான். ஒரு ஆட்டோவில் இரண்டு பெரிய ஸ்பீக்கர் குழாய்கள் கட்டியவாறு ஆட்டோ ஒன்று அந்த ஊருக்குள் வட்டமிட, அதற்குள் அமர்ந்தவாறே தன்னுடைய கையில் மைக்கை பிடித்துக் கொண்ட நண்டு

“இந்த ஊர் மக்களுக்கு சொல்ல வருவது என்னவென்றால் இந்த ஊரின் மைனரான என்னுடைய அண்ணன் இளவேலன் புதியதாக கல்யாணம் ஆனவர்களுக்கும் ஏற்கனவே கல்யாணமாகி பல பிள்ளைகளை பெற்றவர்களுக்கும் கறி விருந்து ஏற்பாடு செய்து இருக்கிறார்.. ஆகவே திருமணம் ஆனவர்கள் தங்களுடைய மனைவிகளுடன் அந்த விருந்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.. மாலை ஆறு மணிக்கு விருந்து ஏற்பாடு ஆரம்பமாகும்.. கணவன்மார்கள் தங்கள் மனைவிமார்களுடன் கட்டாயம் வரும்படி கேட்டுக்கொள்கிறோம்..” என்று கூறினான்.

அதைக் கேட்ட அந்த ஊர்மக்கள் என்னடா இது வினோதமான விருந்தா இருக்கு என்று நினைத்தார்கள்.

வினிதா அவனை எப்படி தன்னுடைய வழியில் கொண்டு வரலாம் என்று நினைத்தவள் வேண்டுமென்றே அவன் மேல் மோதுவதும் அவனை இடிப்பதும் என்று அந்த வீட்டுக்குள் அவன் இருக்கும் வரை அவன் பின்னையே சுற்றிக் கொண்டிருந்தாள். அவனுக்கோ எரிச்சலாக இருந்தது. ஒரு சிகப்பு நிற சேலை கட்டி தலை நிறைய மல்லிகை பூ வைத்துக்கொண்டு அவன் முன்னே இடை தெரிய நடந்து வந்தாள். அவனோ வீட்டில் ஹாலில் உள்ள நாற்காலியில் அமர்ந்து கொண்டு தன்னுடைய கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டிருந்தான். கொலுசு சத்தம் அருகில் கேட்க யாரது என்று நிமிர்ந்து பார்த்தவனது கண்களோ பெரிதாக விரிந்தன. ஏனென்றால் அவனுடைய கண்கள் அவளுடைய இடையில் பதிந்திருந்தது.

அவளோ தாராளமாகவே தொப்புள் தெரியும் அளவிற்கு புடவையை கட்டியிருந்தாள்.

அவனுடைய முகத்துக்கும் அவளது இடைக்கும் ஒரு இன்ச் இடைவெளி இருக்க அவனோ மூச்சடைத்து போனான்.

சட்டென இருக்கையில் இருந்து எழுந்திருக்க அவள் அவனுக்கு மிக அருகில் இருந்ததால் அவன் சட்டென எழுந்திருக்கவும் அவன் முகம் அவளுடைய முன்னழகில் உரசியது.

அதில் மேலும் திடுக்கிட்டு போனவன், ‘என்னடா இது இன்னிக்கு நாள் நமக்கு இப்படி சோதனையா இருக்கு..’ என்றவன் அந்த கோபத்தை அவளிடம் காட்ட எண்ணி “ஏய் ஒரு ஆம்பள இருக்குற இடத்துல இப்படியா அரை குறையா டிரஸ் போட்டு முன்னாடி வந்து நிப்ப..” என்று திட்டினான்.

அதற்கு அவளோ தன்னை ஒரு முறை குனிந்து பார்த்து கொண்டவள்,

“என்னது புடவை கட்டுறது உங்களுக்கு அரைகுறை ஆடையா..? அப்போ ஊர்ல இருக்கிற எல்லா பொம்பளைங்களும் அரைகுறையாவா ஆடை போட்டு இருக்காங்க..?” என்று கேட்க. அவனோ “மத்த பொம்பளைங்க எல்லாரும் மறைக்க வேண்டியதை மறைச்சு கட்டுவாங்க.. ஆனா நீ எதை எதை மறைக்கணுமோ அதெல்லாம் மறைக்காமல் அப்பட்டமா காட்டிக்கொண்டிருக்க..?” என்றவனுடைய பார்வையோ அவளுடைய சிறிய தொப்புளை பார்த்தது.

சட்டென முகத்தை திருப்பிக் கொண்டான்.

அவளோ அவன் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தானே புடவையை எவ்வளவு கவர்ச்சியாக கட்ட முடியுமோ அவ்வளவு கவர்ச்சியாக யூடியூப் பார்த்து கட்டிக்கொண்டு அவன் முன்னால் வந்தது.

அவன் தன்னைப் பார்த்து தடுமாறுவதை கண்டு தனக்குள் சிரித்தவள்,

“சரிங்க மைனரே நான் என் மாமாவை இந்த ஊருக்குள்ள தேடி பார்த்துட்டு வரேன்..” என்று அவன் தோளில் ஒரு இடி இடித்து விட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

அவள் கிளம்பியதும் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டவன், “என்னடா இவ ஒரு மாதிரி வித்தியாசமா பண்றா..? உள்ளுக்குள்ள என்னமோ பண்ணுதே.. ஒருவேளை காய்ச்சல் எதுவும் வந்திருக்குமோ..?” என்று ஆராய்ந்து கொண்டிருந்தான்.

மாலை ஊர்மக்கள் அனைவரும் இளவேலன் கொடுத்த அறிவிப்பை தொடர்ந்து ஆண்கள் தங்கள் மனைவிமார்களை அழைத்து கொண்டு அவன் சொன்ன இடத்திற்கு வருகை தந்தார்கள். அனைவருக்கும் ஓடுவதிலிருந்து பறப்பது வரை ஆடு மாடு கோழி என அனைத்து வகை விருந்துகளும் வைக்கப்பட்டது.

வந்தவர்கள் அனைவரும் மூக்கு பிடிக்க நன்றாக வகைவகையாக உண்டார்கள்.

அவ்விடத்திற்கு வந்த வேலனை கண்டவர்கள் அனைவரும் அவனை வாழ்த்தினார்கள்.

அவர்கள் வாழ்த்தை எல்லாம் பொருட்டாக எண்ணாமல் சிறு தலை அசைப்போடு அங்கிருந்து கடந்தவன், அங்கு சிறியதாக போடப்பட்டிருந்த ஒரு மேடையில் ஏறி நின்றவன் தன்னுடைய கையில் மைக்கை பிடித்துக் கொண்டு பேச ஆரம்பித்தான்.

“ஊர் மக்கள் எல்லாரும் நான் சொன்னதை கேட்டு இங்க வந்ததுக்கு ரொம்ப நன்றி.. நீங்க எல்லாரும் நல்லா வயிறு முட்ட சாப்பிட்டு இருப்பீங்கன்னு நினைக்கிறேன் ரொம்ப சந்தோஷம்.. இப்போ இங்க நம்ம சுத்துப்பட்டு கிராமத்து திருவிழாவுக்கு ஆட வரும் பேர் போன ஆட்டக்காரங்க உங்களுக்காக இங்கே ஆட வருவாங்க.. எல்லாரும் பார்த்து சந்தோஷமா இருங்க..” என்று சொன்னதும் ஆண்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது.

“இருங்க இருங்க அதுக்குள்ள அவசரப்பட்டா எப்படி.. லேய் நண்டு அந்த ஐட்டங்களை கொண்டு வா..” என்றான்.

அவன் சொன்னதும் நண்டு அந்த பொருட்களை எடுத்துக்கொண்டு வர “எல்லா பொம்பளைங்க கையிலயும் அதைக் கொடு..” என்றான்.

அவன் சொன்னது போலவே அந்த பொருள்களை எல்லாம் அனைத்து பெண்களின் கையிலும் கொடுத்தான்.

அதை வாங்கிய பெண்களோ சற்றும் புரியாமல் இதை எதற்கு தங்கள் கையில் கொடுத்திருக்கிறார்கள் என்று தங்கள் கையில் உள்ள விளக்கமாறு செருப்பை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது மேடையில் இளவேலன் “உங்கள் கையில் கொடுத்திருக்கிற பொருள்கள் எதுக்கு அப்படின்னா.. இப்போ நம்ம மேடையில் ஆட போற நம்மளோட பேர் போன ஆட்டக்காரங்களை உங்கள் கணவர்மார்கள் பார்க்க கூடாது.. எல்லாருடைய கண்களும் அவர்களுடைய மனைவிமார்கள் மேல் மட்டுமே இருக்கணும்.. கொஞ்சம் அசைந்தாலும் அவர்களது மனைவிமார்கள் அவர்களது கணவனை அந்த ஆயுதங்களால் வெளுக்க வேண்டும்..” என்றான் அதிகாரமாக.

அதைக் கேட்ட அங்குள்ளவர்கள் ஒருவரை ஒருவர் பேயறைந்தாற் போல பார்த்துக் கொள்ள, ஒரு சிலர்களோ “இங்கு பாருங்க மைனரே என் புருஷன் எல்லாம் ரொம்ப தங்கமானவரு தான் பொண்டாட்டிய தவிர வேற எந்த பொண்ணுங்களையும் பார்க்க மாட்டாங்க.. அதனால நீங்க கொடுத்த பொருளுக்கு இங்க வேலையே இருக்காது..” என்று தங்கள் கணவர்கள் மேல் உள்ள நம்பிக்கையில் அடித்து கூற, அவனோ “அப்புறம் என்ன..? எதுக்கு பயப்படுறீங்க.. அவங்க ஆடட்டும் உங்கள் புருஷன்கள் உத்தமன்கள்தான் அப்படின்னு நிரூபிங்க..” என்று அங்கு உள்ள நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

ஆனால் இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அப்பாவி கணவன்மார்களோ அவனையும் தங்கள் மனைவிமார்களையும் திரும்பித் திரும்பி பார்த்தார்கள்.ஒரு சிலரோ இங்கிருந்து ஓடிவிடலாமா என்று யோசிக்க அதற்குள் “லேய் நண்டு கேட்ட இழுத்து மூடுலே..” என்றான் இளவேலன்.

அங்கு மேடையிலோ ஆட்டக்கார பெண்கள் ஆட ஆரம்பித்தார்கள். ஆண்களின் நிலையோ சொல்லவே வேண்டாம். தங்கள் மனைவிமார்களையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் பாவம் போல. கண்கள் அங்கு ஆடும் பெண்களை காண சித்தம் கொண்டாலும் அதன் பிறகு தங்களுக்கு கிடைக்கும் அடிகளை நினைத்து கண்களை திருப்பாமல் சிலை போல அப்படியே அமர்ந்திருந்தார்கள்.

எவ்வளவு நேரம் தான் அப்படியே இருக்க முடியும்.

அங்கு ஆடிக் கொண்டிருந்த பெண்களோ தங்களுடைய வளைவு நெளிவுகளை அழகாக காட்டி கவர்ச்சியாக நடனமாடிக் கொண்டிருந்தார்கள்.

யாராக இருந்தாலும் பார்க்க தூண்டும் வகையில் இருந்தது அவர்களுடைய நடனம்.

கொஞ்சம் கொஞ்சமாக அங்கு இருந்த ஆண்கள் தங்கள் பார்வையை பெண்கள் மீது திருப்ப ஒவ்வொரு ஆண்களுக்கும் தங்களுடைய மனைவிமார்கள் கையில் இருந்து அடி விழ ஆரம்பித்தது.

இங்கு வேலனோ அதைக் கண்டு புன்னகைத்துக் கொண்டிருந்தான். நேரம் ஆக ஆக அங்கிருந்த அனைத்து பெண்களும் தங்கள் கணவன்மார்களை அடித்து துவைக்க அவர்களோ வலியில் அலறிக் கொண்டிருந்தார்கள். “மைனரே போதும் நிறுத்துங்க இதுக்கு மேல தாங்காது..” என்று ஒவ்வொருவராக அவனிடம் கெஞ்ச, அவனோ “எவ்வளவு தைரியம் இருந்தா எனக்கே பஞ்சாயத்து பண்றேன்னு அம்புட்டு பேரும் ஒன்னு கூடி இருப்பிங்க.. இதுக்கு அப்புறம் எவனுக்கும் அந்த தைரியம் வரக்கூடாது..’ என்று நினைத்துக் கொண்டு “அதெல்லாம் முடியாது நீங்க எல்லாரும் தான் யோக்கியமானவங்க ஆச்சே.. அதனால உங்க கண்ணு அங்க போக கூடாது.. போச்சு அப்படின்னா உங்க பொண்டாட்டி கையால அடி வாங்குங்க..” என்றவன் அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க, அங்கு உள்ள ஆண்கள் அனைவரும் அவனிடம் கதறத் தொடங்கினார்கள்.

சற்று நின்று யோசித்தவன் “சரி இன்னும் ஒரு அரை மணி நேரம் இந்த கச்சேரி நடக்கும்.. அதுவரைக்கும் உங்கள என்னால காப்பாத்த முடியாது.. நீங்களே உங்க கண்ணை அலைபாயாமா பாத்துக்கிட்டிங்கனா தப்பிச்சீங்க..” என்றவன்,

“அப்படி போடு போடு போடு அடிச்சு போடு உன் கையால.. இப்படி போடு போடு போடு இழுத்து போடு இந்த தடிமாட..” என்று பாடல் பாடிக்கொண்டே கண்ணில் கூலிங் கிளாசை மாட்டிக் கொண்டு நண்டுவை அழைத்து கொண்டு

அங்கிருந்து சென்று விட்டான்.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!