மச்சக்கார மைனர்

5
(1)

அத்தியாயம்-07

 

தன்னை பஞ்சாயத்தில் அழைத்து கேள்வி கேட்டதற்காக ஊரில் உள்ள அனைத்து ஆண்களையும் பெண்களையும் பழிவாங்குவதற்காக ஒரு விருந்து போல ஏற்பாடு செய்து அவர்களுக்குள்ளேயே சண்டையை மூட்டி விட்டு திருப்தியாக அங்கிருந்து வெளியே வந்தான் இளவேலன்.

இரவு வீடு வந்தவன் ஏதோ ஒரு பாடலை வாயில் ஹம் செய்து கொண்டே உள்ளே வந்தவன் பார்வை அங்கு சோபாவில் தலையில் கை வைத்து அமர்ந்திருக்கும் வினிதாவே அவன் கண்ணில் விழுந்தாள்.

அவள் அப்படி அமர்ந்திருப்பதை பார்த்தவன் புருவங்கள் முடிசிட்டது. ‘இப்ப என்ன நடந்துச்சுன்னு நடு வீட்ல இப்படி தலையில கை வைச்சி உட்காந்து இருக்கா.’ என்று முணுமுணுத்தவன் உள்ளே வந்து அவள் அருகில் அமர்ந்தவன்,

“என்ன ஆச்சு வெள்ளத் தக்காளி.. ஏன் இப்படி நடு வீட்டில தலையில கைய வச்சிட்டு உட்கார்ந்திருக்க..” என்று தன்னுடைய கழுத்தை தடவிக் கொண்டே அவன் கேட்க, அவளோ அவன் குரல் கேட்டதும் நிமிர்ந்து பார்த்தவள் முகத்தை அஷ்ட கோணலாக வைத்துக்கொண்டு “என் மாமாவை இந்த ஊர்ல மூலை முடுக்கெல்லாம் தேடி பார்த்தேன்.. அவர கண்டுபிக்கவே முடியல.. இதுல என் கையில வச்சிருந்த அவரோட சின்ன வயசு போட்டோ அதையும் நான் தொலைச்சிட்டேன்..” என்று அழுக ஆரம்பித்தாள். அவனோ மனதிற்குள்,

“ஹய்யா இருந்த ஒரு ஆதாரமும் போச்சா.. கடவுள் நம்ம பக்கம் இருக்கிறார் போல.. இன்னைக்கு நாள் ரொம்ப நல்லா இருக்கே.. ஐயோ ஐயோ..” என்று உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டவன் அவள் முன்பு முகத்தை பாவம் போல் வைத்துக்கொண்டு “அச்சச்சோ அந்த ஃபோட்டோவை வைச்சி தான் நீ உன் மாமாவை கண்டுபிடிக்கணும்னு வந்த.. இப்ப அதுவே போயிடுச்சு இப்ப எப்படி நீ உன் மாமாவை கண்டுபிடிப்ப..” என்றவன் சற்று யோசித்து”இதுக்கு நான் ஒரு ஐடியா சொல்லவா..?” என்று கேட்க அவளோ சட்டென அவன் அருகே நெருங்கி அமர்ந்தவள் “சொல்லுங்க சொல்லுங்க என்ன ஐடியா..?” என்று ஆர்வமாக கேட்க, அவள் அப்படி கேட்கவும் அவள் தன் அருகே நெருங்கி வந்ததை கூட கவனிக்காமல் பேச்சிலேயே கவனமாக இருந்தான்.

“இப்படியே ஊருக்கு ஓடிரு.. உனக்குன்னு ஒருத்தன் பொறந்திருப்பான்.. அவனை கல்யாணம் பண்ணி புள்ள குட்டிகளை பெத்து சந்தோஷமா வாழு..” என்று சொல்ல அவளோ அவளை தீயாக முறைத்தவள்,

“இந்த ஈர வெங்காயம் எல்லாம் எங்களுக்கு தெரியாதா..? ஏதோ பெருசா ஐடியா சொல்றேன்னு வந்துட்டாரு.. கேட்டா இந்த ஊருக்கே நான் மைனர் அப்படின்னு பில்டப் விடுவது.. போய்யா நீயும் உன் ஐடியாவும்..” என்று திரும்பி அமர்ந்து கொள்ள, அவனோ

“ஹேய் என்னடி வெள்ளத்தக்காளி நானும் வந்ததுல இருந்து பார்த்துகிட்டே இருக்கேன்.. உன் வாய் ரொம்ப நீளுது.. இழுத்து பிடிச்சி தைக்க போறேன் பாரு..” என்று அவன் சொல்ல, அவளோ

“ஓஓஓ..” என மீண்டும் அழுக ஆரம்பித்தாள்.

அவனுக்கோ என்ன செய்வது என்று தெரியவில்லை. பின்பு மெதுவாக “இங்க பாரு எப்படியாவது கண்டுபிடிப்போம் அதை விட்டுட்டு சும்மா சும்மா இப்படி தண்ணீர் குழாய திறந்து விட்டுட்டு இருக்காத.. முதல்ல அழுகையை நிறுத்து..” என்று சொல்லிவிட்டு,

“சரி உன்கிட்ட அந்த சின்ன வயசு போட்டோ மட்டும் தான் இருக்கா.. வேற எதுவும் இல்லையா..?” என்று அவளை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே கேட்க, அவளோ அழுகைனூடே “எதுவுமே இல்ல.. என்கிட்ட இருந்தது அந்த ஒரே ஒரு போட்டோ மட்டும் தான்.. அதையும் இப்படி தொலைச்சிட்டு வந்து நிற்கிறேன்.. என் மாமாவை நான் எப்படி கண்டுபிடிக்க போறேன்..” என்று அழுதவள் சட்டென துள்ளி குதித்து எழுந்து அமர்ந்தாள்.

அவள் அப்படி செய்யவும் ஒரு கணம் அதிர்ந்து போய் எழுந்து விட்டான் இளவேலன்.

“ஹேய் என்னாச்சுடி என்னாச்சு.. ஏன் இப்படி சிலை மாதிரி உட்கார்ந்து இருக்க எனக்கு பயமா இருக்கு..” என்று அவள் அருகில் வந்து தோளை உலுக்க, அவளோ சட்டென அவனை நோக்கி தன் தலையை திருப்பினாள்.

அதில் மேலும் அதிர்ந்தவனோ தன்னுடைய கையை எடுக்கப் போக அதற்குள் அவனுடைய கையைப் பிடித்து தன் மடியில் அமராத குறையாக அவனை பக்கத்தில் அமர வைத்தவள்,

“மைனரே இன்னொரு விஷயம் இருக்கு.. நான் அதை மறந்தே போயிட்டேன் இந்த போட்டோ காணாம போன விஷயத்துல.. இதுல எனக்கு உங்க உதவி கண்டிப்பா வேணும்.. தயவு செஞ்சு எனக்கு உதவி பண்ணுவீங்களா..? சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க..” என்று அவன் வாய் திறக்கும் வரை இவள் கேட்டுக் கொண்டே இருக்க,

அவனோ இவளுடைய நெருக்கத்தில் சற்று உடலை நகர்த்தியவன் அவளுடைய கையை தனது கையில் இருந்து பிரித்து விட்டு சற்று தள்ளி அமர்ந்தவன்,

“சரி நான் உனக்கு உதவி செய்றேன் என்ன விஷயம்னு சொல்லு..” என்றான்.

அவன் சரி என்று சொன்னதும் அவள் முகம் மலர்ந்தது.

உடனே மீண்டும் அவன் அருகில் நெருங்கியவள் “என் மாமாவுக்கு அந்த இடத்துல ஒரு பெரிய மச்சம் இருக்குமாம்.. அத பார்த்தா என் மாமாவை ஈசியா கண்டுபிடிச்சிடலாம்..”

‘என்னது மச்சமா அடிப்பாவி மச்சம் இருக்குற இடத்தைக் கூட சரியா சொல்றாலே..’ என்று ஒரு நிமிடம் ஜற்காணவன் அவளிடம் திரும்பி

“சரி இதுக்கு நான் உனக்கு என்ன உதவி செய்யணும்..?” என்று அவளை ஒரு மாதிரியாக பார்க்க, “நீங்க என்ன பண்றிங்க அப்படின்னா இந்த ஊர்ல இருக்கிற ஆம்பளைங்கள ஒவ்வொருத்தரையா கூப்பிட்டு நீங்க அவங்களோட டிரஸை கழட்டி பாக்கணும்.. நான் அங்க ஒரு ஓரமா நின்னுக்கிறேன்.. நீங்க யாருக்காவது அந்த மச்சம் இருந்துச்சு அப்படின்னா எனக்கு சொல்லுங்க.. நான் என் மாமாவை கண்டுபிடிச்சிடுவேனுல்ல.. எப்படி என் ஐடியா..?” என்று அவள் கேட்க, அவனுக்கோ இவளை அப்படியே தூக்கி புதைத்து விடலாமா என்று யோசித்தவன் ‘அடி ஆத்தி ஊர்ல உள்ள ஆம்பளைங்களுக்கே இவ இந்த மாதிரி பண்ண சொல்ற அப்படின்னா.. இவ மாமன் நான் தான்னு தெரிஞ்சா உடனே அவுத்து பார்த்துடுவா போலவே..’ என்று நினைத்தவன் தன்னை ஒரு முறை கீழே குனிந்து பார்த்தவன் தன்னுடைய வேஷ்டியை இரு கையால் இழுத்து பிடித்துக் கொண்டான்.

“இங்க பாரு இதெல்லாம் ரொம்ப தப்பு.. ஒழுங்கா ஊர் போய் சேர்ற வழியைப் பாரு..” என்று சொல்ல, அவளோ “அதெல்லாம் முடியாது உங்களால முடிஞ்சா உதவி பண்ணுங்க இல்லைன்னா ஓரமா நில்லுங்க நானே பார்த்துக்கிறேன்..” என்று சொல்ல, அவனோ பதறியவன்,

“ஏய் என்னடி சொல்ற நீனே பார்த்துக்கிறேன்னா அப்போ ஒவ்வொருத்தனையும் கூட்டிட்டு வந்து அவுத்து பார்க்க போறியா..?” என்று கேட்க, அதற்கு அவளோ “ச்சை.. உவக் அசிங்கமா பேசாதய்யா.. நான் என் மாமன தவிர வேற எந்த ஆம்பளையையும் பார்க்க மாட்டேன்..” என்றவள் அவனுடைய தொடை மேல் அவளுடைய கால் போட்டவாறு அவனிடம் பேச்சுக் கொடுக்க, அதை கண்களால் சுட்டிக்காட்டியவன் அவளிடம் “ஓ இதுதான் நீ உன் மாமன தவிர மத்த யாரையும் பாக்க மாட்டேன்னு சொல்றதா..?” என்று கேட்க, அப்போதுதான் அதை கவனித்தாற் போல “அச்சச்சோ மன்னிச்சிடுங்க ஏதோ என் மாமன பத்தி பேசிட்டு இருக்கும்போது இடைவெளிய கவனிக்காமல் இருந்துட்டேன் இதெல்லாம் அதுல சேர்த்தி கிடையாது..” என்று அவளாகவே ஒரு பதிலை கூறிக் கொண்டாள்.

“அம்மா தாயே என்னமோ பண்ணு என்னை மட்டும் இதுல கூட்டு சேர்க்காதே..” என்று எழுந்தவன் அவள் முன் தலைக்கு மேல் கும்பிடு போட்டுவிட்டு தன்னுடைய அறைக்குள் நுழைந்து கொண்டான். போகும் அவனை தனக்குள் சிரித்தவாறு பார்த்துக் கொண்டிருந்தவள்,

“ஐயோ என் மச்சக்கார மாமா உன்ன போய் மைனர்னு சொன்னா யாரு நம்புவா.. ஒரு பொண்ணு உன் பக்கத்துல இவ்வளவு நெருங்கி நெருங்கி வாரேன்.. ஆனால் நீ என்னடானா விலகி விலகி போற.. ஆனாலும் இந்த ஒரே ஒரு விஷயம் மட்டும் இடிக்குது அதை மட்டும் என்னனு பாக்கணும்.. இன்னைக்கு நைட்டு ஒருத்தி வருவாதான.. கவனிச்சிக்கிறேன் எப்படி இன்னைக்கு நீ அவ கூட இருக்கிறேன்னு..” என்று தனக்குள் உறுதி எடுத்துக் கொண்டவள் அன்றைய இரவு வரும் அந்த பெண்ணிற்காக வழி மேல் விழி வைத்து காத்திருந்தாள் வினிதா.

 

அத்தியாயம்-08

 

அன்று இரவு வழக்கம் போல் அவனுக்காக ஒரு பெண் வரவைக்கப்பட்டாள்.

அவளும் நண்டு சொல்வதைக் கேட்டு அந்த கேரளத்து கப்பக்கிழங்கை மாதிரி அல்லாமல் சமத்தாக அந்த பாலை குடித்துவிட்டு உறங்கி விட்டாள்.

இவனோ எப்போதும் போல அந்த அறைக்குள் நுழைந்தவன் அங்கு அந்த பெண் பாலை குடித்து தூங்கிக் கொண்டிருக்கவும் “அப்பாடி வர்ற பொண்ணுங்க எல்லாம் இவளை மாதிரியே சொல் பேச்சு கேட்டு சமத்தா பால குடிச்சிட்டு தூங்குனா என்னோட வேலை எவ்வளவு குறையும் ஹூம்ம்..” என்று பெருமூச்சு விட்டவன் தன்னுடைய ஆடைகளை களைந்து விட்டு உள்ளாடையுடன் கட்டிலில் படுத்து விட்டான்.

மறுநாள் விடிந்ததும் அந்தப் பெண் எழுந்து பார்க்க தன்னுடைய உடம்பில் ஆடை ஏதும் இல்லாமல் போர்வை போர்த்தி இருக்க ”சரி அவர் தான் சொன்னாரே அப்படித்தான் இருக்கும்..” என்று தனக்குள் சொல்லியவள் தன்னுடைய ஆடையை மாற்றிக் கொண்டு வெளியே வந்து நண்டுவிடம் பணத்தை வாங்கிக் கொண்டு புறப்பட்டு விட்டாள்.

அவள் சென்ற சிறிது நேரத்தில் துயில் கலைந்து எழுந்தவனோ தன்னுடைய அறைக்குச் சென்று குளித்து முடித்து தன்னுடைய வேலைகளை பார்க்க கிளம்பி விட்டான்.

இங்கோ தன்னுடைய அறைக்குள் கட்டிலில் தன் முன் லேப்டாப்பை வைத்துக்கொண்டு விடிய விடிய அதையே பார்த்துக் கொண்டிருந்தவள் கண்கள் சிவப்பேரி போய் இருந்தது.

ஆனால் அதை எல்லாம் பெரிதாக எண்ணாமல் அவள் முகமோ சந்தோஷத்தில் பூரித்து போய் இருந்தது.

ஒரு பக்கம் சந்தோஷம் இருந்தது என்றால் இன்னொரு பக்கம் ஏன்..? எதற்கு..? என்ற சந்தேகம் எழுந்தது. ஏனென்றால் தன் முன்னால் உள்ள லேப்டாப்பில் இளவேலனும் அந்த பெண்ணும் இருந்த அறை அப்பட்டமாக தெரிந்து கொண்டிருந்தது.

அன்று இரவு அவர்கள் அந்த அறைக்குள் போகும் முன் இவளோ ஒரு மைக்ரோ கேமராவை அந்த அறையில் யாருக்கும் தெரியாமல் செட் செய்து வைத்து விட்டாள்.

அதன் மூலமாக அங்கு என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதை பார்த்தவளுக்கோ அதிர்ச்சியாக இருந்தது.

அந்த பெண் வந்து பாலை குடித்து படுத்ததும் ஆழ்ந்த நித்திரைக்கு சென்று விட்டாள்.

இவனோ உள்ளே வந்தவன் தனக்குள் புலம்பி விட்டு ஆடையை கலைந்து விட்டு அந்த பெண்ணின் அருகில் படுத்து விட்டான்.

இப்படியே அன்றைய இரவு கழிந்து கொண்டிருக்க அதை பார்த்துக் கொண்டிருந்த இவளுக்கோ ஒன்றும் புரியவில்லை.

சரி ஏதாவது நடக்கும் தான் ஏதாவது பிளான் செய்து அதை கெடுத்து விடலாம் என்று இவள் நினைத்துக் கொண்டிருக்க, அங்கு நடந்ததோ வேறு.

சிறிது நேரம் கழித்து ஒரு பெண் அவ்வறைக்குள் நுழைந்தாள்.

அவள் உள்ளே வரவும் இளவேலன் அந்த அறையில் உள்ள பாத்ரூமில் நுழைந்து கொண்டான்.

அவன் உள்ளே நுழைந்து கொண்டதும் அந்தப் பெண் அங்கு படுக்கையில் இருந்த பெண்ணின் ஆடைகள் அனைத்தையும் கழட்டி ஒவ்வொரு இடமாக வீசிவிட்டு அங்கு உள்ள போர்வையினால் போர்த்தி விட்டு அங்கு உள்ள பூக்களையும் அந்த அறை முழுவதும் சிதறி விட்டு அவள் போய்விட்டாள்.

பத்து நிமிடம் கழித்து வெளியே வந்தவன் திருப்தியாக புன்னகைத்து விட்டு திரும்பவும் அந்த பெட்டில் படித்துக் கொண்டான்.

இதுவே அங்கு நடந்தது.

அதை பார்த்தவளுக்கோ மனதில் அப்படி ஒரு சந்தோஷம்.

தன்னுடைய மாமன் தப்பானவன் இல்லை என்று வந்த சந்தோசம். ஆனால் ஏன் இப்படி ஒரு விளையாட்டு என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

‘தன்னைத்தானே இப்படி கெட்டவன் போல் காட்ட வேண்டிய அவசியம் என்ன..? பெண்கள் பின்னால் சுற்றும் காமன் போல தன்னை ஏன் ஊர் மக்களிடம் இப்படி காட்டிக் கொண்டிருக்கிறார்..? என்ற சந்தேகம் அவளுக்கு வலுவாக இருந்தது. இதை யாரிடம் கேட்கலாம் என்று யோசித்தவளுக்கோ நண்டுவின் ஞாயபகம் வந்தது.

“கரெக்ட் கண்டிப்பா அவனுக்கு தெரிந்திருக்கும்.. அவன புடிச்சா கண்டிப்பா தெரிஞ்சிக்கலாம்..” என்று அவன் வரவிற்காக காத்திருந்தாள். அன்று இரவு இளவேலனும் நண்டுவும் வீட்டிற்குள் வர, வேலன் எப்போதும் போல தன்னுடைய அறைக்குள் சென்று விட்டான். அவன் பின்னே போக இருந்த நண்டுவின் கையைப் பிடித்து யாருக்கும் தெரியாமல் தன்னுடைய அறைக்குள் இழுத்துக் கொண்டு சென்றாள்.

அவளோ சட்டென தன்னை யாரோ கையைப் பிடித்து இழுக்கவும் கத்தப்

போனான்.

அதற்குள் தன்னுடைய ஆள்காட்டி விரலை வாயின் மேல் வைத்து அவனைப் பார்த்து “உஷ் சத்தம் போடாதே என் கூடவா..” என்றாள். தன்னுடைய அறைக்குள் அவனை உள்ளே கூட்டி வந்ததும் கதவை மூடியவள் அவன் முன்னே தன்னுடைய கையை மார்புக்கு குறுக்காக கட்டி

“உங்க மைனர் எதுக்காக ஊருக்கு முன்னால தன்னை பொம்பள பொறுக்கி மாதிரி காட்டுறாரு..?” என்று நேரடியாக கேட்டு விட்டாள். அவள் அப்படி கேட்கவும், அவனோ இவளுக்கு எப்படி இந்த விடயம் தெரியும் என்று சற்று திகைத்தவன், பின்பு ஒன்றும் தெரியாதது போல் “உனக்கு என்ன பைத்தியமா எதுக்கு எங்க அண்ணா பொய் சொல்ல போறாரு.. அவரு இந்த ஊருக்கு மைனர் தான்..” என்றான்.

“டேய் ரீல் அந்து போச்சு டா ரொம்ப ஓட்டாத.. எனக்கு எல்லா விஷயமும் தெரியும்.. ஒழுங்கு மரியாதையா நீயே உன் வாயால உண்மைய சொல்லு..? என்றாள்.

“ஏ ஏய் என்ன சொல்ற.. அப்படியெல்லாம் எதுவும் இல்லை.. அப்படியே எதுவும் இருந்தாலும் உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.. ஒழுங்கா நீ வந்த வேலைய மட்டும் பார்த்தா உனக்கு நல்லது.. தேவையில்லாத விஷயத்துல நீ மூக்கை நுழைக்காத..” என்றான் சற்று கோபத்துடன்.

“டேய் டேய் அடங்குடா.. உனக்கு ஒரு உண்மையை சொல்லட்டுமா.. நான் தேடி வந்த மாமா உங்க மைனர் தான்..” என்றாள்.

அதைக் கேட்டவனோ அதிர்ச்சியாக “என்ன சொல்ற எங்க அண்ணா தான் உன் மாமா வா..?” என்றான். “ஆமாடா என் மாமா தான் உங்க மைனர் போதுமா இப்ப சொல்லு.. எதுக்காக இந்த ட்ராமா..?” என்றாள். “அது இருக்கட்டும் எங்க அண்ணா நடிக்கிறாருன்னு உனக்கு எப்படி தெரியும்..?” என்று அவன் சந்தேகமாக கேட்க,

இவளோ தன்னுடைய கப்போர்ட்டில் வைத்திருந்த லேப்டாப்பை எடுத்து வந்து அதை கண்ணிமைக்கும் நேரத்தில் ஆன் செய்தவள் நேற்று இரவு பதிவு செய்த அந்த வீடியோவை அவன் முன்பு காட்டினாள்.

அதை பார்த்தவனோ அவளை முறைத்வன் “எவ்வளவு தைரியம் இருந்தா எங்க அண்ணா ரூம்லயே நீ கேமரா வச்சிருப்ப.. உன்னை என்ன பண்றேன் பாரு..” என்றவன் அந்த அறையை விட்டு வெளியேற எத்தனைக்க, அவனுடைய கையைப் பிடித்தவள்,

“இங்க பாரு நீ உண்மைய சொல்ற வரைக்கும் நான் விட மாட்டேன்.. அப்படி நீ உண்மைய சொல்லலன்னு வச்சிக்கோயேன் உங்க அண்ணன் பெரிய மைனர் மைனர்னு இந்த ஊர் ஃபுல்லா சொல்லிட்டு திரியுறீங்களே.. இந்த வீடியோவை பெரிய திரை போட்டு படம் போட்டு காட்டிடுவேன்..” என்று மிரட்டினாள். அதன் பிறகு இவளிடம் உண்மையை சொல்லாமல் விட்டால் தன் அண்ணனுடைய மானம் போய்விடும் என்று எண்ணிய நண்டுவோ

“ஏய் இங்க பாரு உன்னை நம்பி தான் நான் என் அண்ணனை பத்தின உண்மைய சொல்றேன்.. இது உன்னை தவிர யாருக்கும் தெரிய கூடாது.. யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் அப்படின்னு எனக்கு நீ சத்தியம் பண்ணி கொடுத்தா தான் நான் அவரை பத்தின உண்மைய உன்கிட்ட சொல்வேன்..” என்றான் தயக்கமாக, அவளோ

“என் மாமாவை நான் கல்யாணம் பண்ணிக்கணும் அதுக்காக தான் நான் வந்து இருக்கேன்.. நீ தாராளமா என் மாமாவை பத்தின உண்மையா என்கிட்ட சொல்லலாம்..” என்றாள் வினிதா.

அவள் தன்னுடைய அண்ணனை திருமணம் செய்து கொள்ளத்தான் வந்திருக்கிறேன் என்று சொன்னதை கேட்டவன் அவளைப் பார்த்து

“என் அண்ணன பத்தின உண்மை தெரிஞ்சதுக்கு அப்புறமும் உன்னோட இந்த முடிவு மாறாதில்ல.. என்றான் ஏக்கமாக, அவளோ

“இங்க பாரு இந்த மனசுக்குள்ள என் மாமா நான் எப்போ நினைக்க ஆரம்பிச்சேனோ அப்பவே அவர் தான் என் வாழ்க்கைன்னு முடிவு பண்ணிட்டு தான் நான் அவரை தேடி இங்க வந்து இருக்கேன்.. அதனால நீ சொல்லப் போற உண்மை என்னவா இருந்தாலும் என் முடிவு மாறாது..” என்றாள்.

அதன் பிறகே திருப்தி கொண்ட நண்டுவோ இளவேலனை பற்றி அவளிடம் சொல்ல ஆரம்பித்தான். 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!