மச்சக்கார மைனர்

5
(1)

 அத்தியாயம்-09

 

சில வருடங்களுக்கு முன்பு இளவேலனின் தாத்தா காலத்தில் அவருடைய தாத்தா அந்த ஊரில் பெரிய மைனர்.

அதிகாரமாக ஒரு பொண்டாட்டி இருந்தாலும் யாருக்கும் தெரியாமல் பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொள்வார்கள்.

அப்படி இருக்கும் வகையில் இளவேலனின் அப்பா காதலித்து திருமணம் செய்து கொண்டவர். இளவேலன் பிறக்கும் வரை தன்னுடைய மனைவி முந்தானையைப் பிடித்துக் கொண்டு திரிந்தவர் அவன் பிறந்து சில மாதங்கள் கழித்து தந்தையின் ரத்தம் மகனுக்கும் ஓடும் அல்லவா..? பார்க்கும் பெண்களிடம் எல்லாம் பழக ஆரம்பித்தவர் பின்பு மனைவிக்கு தெரியாமலேயே மற்ற பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ள ஆரம்பித்தார்.

இது அவரது மனைவிக்கு தெரியாத வரை நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது.

இளவேலனுக்கு ஒரு எட்டு வயது இருக்கும் போது அவனது அன்னைக்கு அவர் கணவர் பல பெண்களுடன் உறவு வைத்திருப்பது தெரிய வர அவரோ உடைந்து போனார்.

தன்னுடைய காதல் கணவன் தனக்கு இப்படி துரோகம் செய்துவிட்டாரே என்று எண்ணியவர் அவரிடம் அதைக் கேட்க, அன்று ஆரம்பித்தது சண்டை அவர்கள் இருவருக்கும். அவருடைய மனைவி ஒவ்வொரு முறையும் அவரிடம் சண்டை போட அவரோ “நான் ஆம்பளடி அப்படித்தான் இருப்பேன்.. உன்னால அமைதியா இருக்க முடிஞ்சா இரு இல்லேன்னா போய்கிட்டே இரு..” என்றார்.

அவர் அப்படி சொன்னதும் அதைக் கேட்ட அவனது அன்னையோ “இப்படி ஒரு மானங்கெட்ட வாழ்க்கை எனக்கு தேவையே இல்லை.. என் பையனுக்காக தான் உங்க கூட இருக்கேன்.. ஆனா ஒவ்வொரு நாளும் நீங்க உங்க அளவ மீறி போய்க்கொண்டே இருக்கீங்க.. இது கொஞ்சம் கூட சரியே இல்லை..” என்று அவரை கைநீட்டி பேச, அவரோ “எவ்வளவு தைரியம் இருந்தா என்னையவே நீ எதிர்த்து பேசுவ..?” என்று அவரை அடிக்க, அவரோ அவர் அடித்த அடியில் சுருண்டு போய் விழுந்தவர் தலை அங்கு சுவற்றில் இருந்த கூர் ஆணியில் இடித்தது.

இளவேலனின் தந்தையோ அடித்து விட்டு அவர் திரும்பியும் பாராது சென்றுவிட, இவரோ மயங்கி விழுந்தவர் நேரமாகியும் எழுந்திருக்கவில்லை.

விளையாட்டு பையனாக இருந்த இளவேலன் மாலை நேரம் வீட்டுக்கு வர தன் அன்னை மயங்கிய நிலையில் இருக்க, அவரைச் சுற்றி இரத்த வெள்ளம் பெருகி இருந்தன. அதைப் பார்த்தவன் அதிர்ச்சியாக நின்று விட்டான்.

பின்பு தன் அன்னையின் அருகில் வந்து அவரைத் தூக்கி மடியில் வைத்தவன், அவரை அழுது கொண்டே எழுப்பினான்.

பக்கத்தில் இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து தன் அன்னையின் முகத்தில் தெளிக்க, கண்களை திறக்க முடியாமல் கண்ணை திறந்தவர் பெரிய பெரிய மூச்சுகளை இழுத்து விட்டவாறு தன் மகனை பார்த்து,

“இளா அம்மா உன்னை விட்டு போறேன் டா.. உங்க அப்பா நம்மள ஏமாத்திட்டாருடா.. என்னால அதை தாங்க முடியல.. அதனால அவர் கிட்ட சண்டை போட்டேன்.. அவரு என்ன அடிச்சிட்டு போயிட்டாரு டா..

இங்க பாரு கண்ணா அம்மா உன் கூட இதுக்கப்புறம் இருப்பேனா இல்லையான்னு எனக்குத் தெரியல..” என்றவர் பெரிய மூச்சு எடுத்து,

“நீ வளர்ந்து பெரியவன் ஆனதும் உங்க தாத்தா மாதிரியும், உங்க அப்பாவ மாதிரியும் வந்துரக்கூடாது.. இந்த அம்மாவுக்கு நீ சத்தியம் பண்ணி கொடுப்பா..” என்றவர் தன்னுடைய கடைசி தருணத்தில் தன் மகனிடம் கேட்க, அவனோ கண்களில் கண்ணீரோடு “அம்மா அப்படி எல்லாம் சொல்லாதீங்க.. நீங்க இல்லாம நான் எப்படி இருப்பேன்..?” என்றான்.

“இல்ல இளா அம்மா இனிமே உன் கூட இருக்க வாய்ப்பு இல்லை.. நீ அம்மாவுக்கு இந்த சத்தியம் மட்டும் பண்ணி கொடு..” என்று அவர் கேட்க, “சரிமா..” என்று அவன் அவருக்கு சத்தியம் செய்து கொடுத்தான்.

“நீ இவங்க கூட இங்க இருக்காதப்பா.. இவங்க கூட இருந்தா உனக்கும் இவங்க புத்தி வந்துடும்.. நீ ஹாஸ்டல் போய் அங்க தங்கி படி..” என்றார்.

அதற்கு அவனும் சரி என்று ஒத்துக் கொண்டான்.

சற்று நேரத்தில் அவர் கடைசியாக ஒரு பெரிய மூச்சு எடுத்தவர் அப்படியே தலை தொங்க அவனுடைய மடியில் சாய்ந்தார். அவனோ “அம்மாஆஆ.. அம்மாஆஆ..” என்று அவரை எழுப்பினான். அவர் எப்படி எழும்புவார் அவருடைய உயிர் பிரிந்து விட்டதே,

இளவேலனுக்கோ தன் தந்தை மேல் ஆத்திரம் அதிகமாக வந்தது. ஆனால் அவனோ சிறியவன் எதுவும் செய்ய முடியாததால் தன் அன்னை மீது சாய்ந்து அழுது கொண்டிருந்தான். அப்பொழுது அவனுடைய அழுகை சத்தம் கேட்டு அங்கே வந்து வேலைக்காரர்கள் தங்களுடைய முதலாளி அம்மா இருக்கும் நிலையை கண்டு இளவேலனுடைய தந்தைக்கு தகவல் சொல்ல, அவரோ பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. அவருக்கு உரிய சடங்குகள் செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டனர்.

தன்னுடைய அன்னை இல்லாத இந்த வீட்டில் தானும் இருக்க விரும்பாதவன் தன் தந்தையிடம் ஹாஸ்டல் செல்ல விரும்புவதாக கூற, அவரும் சரியென்று ஒப்புக்கொண்டுவிட்டார்.

அதன் பிறகு அவன் இங்கு திரும்பி வரவே இல்லை.

ஹாஸ்டலில் அவன் படிக்க சென்றான். அதுவும் ஆண்கள் படிக்கும் பள்ளியில். பெண்களின் சகவாசம் அவனுக்கு வேண்டாம் என்று முடிவு செய்து விட்டான். அதனால் ஸ்கூலும் சரி காலேஜும் சரி அவன் ஆண்கள் மட்டுமே படிக்கும் இடத்தை தேர்வு செய்தான். அங்குதான் பழக்கமானான் இந்த நண்டு.

நண்டு வீண் உண்மையான பெயர் முத்து. சிறு வயது முதலே இருவரும் ஒன்றாக இருந்தவர்கள்.

நண்டு ஒரு அனாதை. ஆசிரமத்தில் வளர்ந்தவன். இந்த பள்ளிக்கு வந்த பிறகு இவனுடன் பழகினான்.

இளவேலன் எங்கே சென்றாலும் இவன் பின்னையே இவனும் செல்ல அவனுக்கு இவனை மிகவும் பிடித்து போனது.

அதனால் இளவேலன் தான் எங்கு சென்றாலும் இவனை தன்னுடனே வைத்துக் கொள்வான்.

அதனால் இளவேலனை பற்றிய அனைத்து விடயங்களும் நண்டுவிற்கு தெரியும்.

இவ்வாறு நாட்கள் செல்ல இளவேலன் கல்லூரி முடிக்கும் நாளில் அவனுடைய தந்தை இறந்துவிட்டார் என்று செய்தி வர, அவனோ எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் ஊருக்கு வந்து அவனுடைய கடமையை செய்து கொண்டு இருந்தான்.

அதன் பிறகு அவனுடைய கல்லூரி படிப்பு முடிய அங்கேயே இருந்து கொண்டான்.

அவன் விவசாயம் பற்றிய படிப்பு படித்துக் கொண்டிருந்தான். அதனால் தன்னுடைய குடும்ப சொத்தை வைத்து விவசாயத்தை பார்த்துக் கொண்டிருக்கின்றான். தன்னிடம் விவசாயத்திற்கு வேலைக்கு கூட பெண்களை அவன் அனுமதிக்க மாட்டான்.

முற்றிலும் ஆண்களே இருக்க, அந்த ஊரில் உள்ள ஆட்களோ இவன் காது படும்படியே “இவனோட தாத்தாவும் அப்பாவும் ஊருக்குள்ள ஒரு பொண்ணுங்கள விட மாட்டாங்க.. அப்படி அந்த காலத்திலேயே மைனர் மாதிரி சுத்திக்கிட்டு இருந்தாங்க.. இவன் என்னடான்னா ஒரு பொண்ணக் கூட திரும்பி பார்க்க மாட்டேங்குறான்.. சரி வேலை பார்க்குறதுக்கு கூட ஒரு பொண்ண வைக்க மாட்டேங்குறான்.. ஒருவேளை இவனுக்கு எதுவும் நோயா இருக்குமோ..?” என்றும், “இருக்காது இருக்காது இப்பதான் நிறைய பசங்க பையனா பிறந்து அதுக்கப்புறம் ஹார்மோன் மாற்றத்தினால பொண்ணா மாறுறாங்களே அந்த மாதிரி ஏதாவது இருக்கலாம்..” என்றும் பல பேர் அவர்களுக்கு தோன்றிய கருத்துக்களை விதமாக பேச, அதைக் கேட்ட இவனுக்கோ ஆத்திரமாக வரும்.

ஆனால் எதையும் அவர்களிடம் வெளிக்காட்ட மாட்டான்.

இப்படியே நாட்கள் செல்ல செல்ல அந்த ஊரில் உள்ள அனைவருமே அவனை ஏளனமாக பார்க்க ஆரம்பித்தார்கள்.

அதுவே அவனை கூனி குறுக செய்தது.

ஒரு நாள் தன்னுடைய அறையில் அவன் இதைப் பற்றி யோசித்து கொண்டு இருந்தான்.

அப்போது அவன் அருகே வந்த நண்டுவோ,

“அண்ணே அவங்க பேசுறதெல்லாத்தையும் நீ கணக்கில எடுக்காத.. உன்னப் பத்தி என்ன அவர்களுக்கு என்ன தெரியும்.. சும்மா ஏதோ வாய்க்கு வந்த மாதிரி பேசுவாங்க..” என்று சொல்ல, இவனோ “இல்லடா அவங்க சொல்றது உண்மைதான்னு எனக்கே தோணுது.. எனக்கு பொண்ணுங்க மேல ஒரு ஈர்ப்பே வரல டா. உண்மையிலேயே நான் ஒரு பையனானேன்னு எனக்கே டவுட்டா இருக்கு..” என்று வருந்தி கொண்டு இருந்தான்.

“என்ன அண்ணே அவங்க தான் அப்படி சொல்றாங்கன்னா நீயும் இப்படி பேசுற.. அப்படி எல்லாம் இருக்காது.. அண்ணே வேணும்னா நீ ஒரு பொண்ணு கூட பழகி பாரு.. அதுக்கு அப்புறமா உனக்கு எந்த ஒரு மாற்றமும் வரலைன்னா பாத்துக்கலாம்..” என்றான்.

அவன் சொன்னதற்கு சரி என்று ஒத்துக் கொண்ட வேலன்,

“சரிடா நீ சொல்ற மாதிரி நான் முயற்சி செஞ்சு பார்க்கிறேன்..” என்று சொன்னவன் மறுநாளே ஒரு பெண்ணிடம் பழக அவனுக்கோ அது பாகற்காயைப் போல கசந்தது.

எந்த ஒரு பெண்ணையும் தன் அருகே அவன் அனுமதிக்கவில்லை.

அன்று வீட்டுக்கு வந்த நண்டுவிடம் அவன் சொல்ல, அவனோ ஒரு திட்டம் தீட்டினான்.

“அண்ணே எனக்கு ஒரு ஐடியா.. நம்ம அந்த மாதிரி பண்ணா இந்த ஊர்காரங்க இனிமே உன் பக்கம் தலை வைச்சுக் கூட படுக்க மாட்டாங்க.. உனக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறது அவங்க யாருக்குமே தெரியக்கூடாது..” என்றவன் அவனுடைய திட்டத்தை கூறினான்.

முதலில் அது வேலனுக்கு பிடிக்கவில்லை.

அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவன் அதற்கு பழகிக் கொண்டான். நடந்ததை நண்டு வினிதாவிடம் சொல்லிக் கொண்டிருக்க, அதை கேட்ட அவளோ சற்று அதிர்ச்சியாகி பின்னர் நண்டுவிடம் “டேய் நண்டு அப்போ உங்க மயினருக்கு பல்பு பியூஸ்

போச்சா..?” என்று கேட்டே விட்டாள்.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!