மச்சக்கார மைனர்

0
(0)

அத்தியாயம்-10

 

இளவேலனுடைய கதையைக் கேட்டவள் அவனை ஏற இறங்க பார்த்துவிட்டு கட்டிலில் அமர்ந்தாள். அதன் பிறகு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள், நண்டுவிடம் “சோ இது தான் உங்க அண்ணனோட பிரச்சனை..? ஏன்டா இதுக்காகவாடா உங்க அண்ணன் பேர ஊர் முழுக்க நாற வச்சிருக்க.. அவரும் படிச்சவர் தானே..? கொஞ்சமாவது மண்டைல மசாலா வேணாம்.. சின்ன வயசுல இருந்தே பொண்ணுங்க கூட பழக்கம் இல்ல.. திடீர்னு போய் ஒரு பொண்ணு கிட்ட பழகுனா.. உடனே உங்க அண்ணனுக்கு ஆசை வந்துருமா என்ன..? முதல்ல ஒரு பொண்ணு மேல காதல் வரணும் டா அதுக்கு அப்புறம் தான் மத்ததெல்லாம்.. சும்மா தான் ஒரு ஆம்பளனு நிரூபிக்கறதுக்காக ஒரு பொண்ணு கிட்ட போனா.. உடனே எல்லாம் நடந்துருமா..? நீங்க ரெண்டு பேரும் என்ன மூளையை கழட்டி வச்சுட்டா இவ்ளோ நாளா இருந்தீங்க..? சரியான ஒரு மொக்க பிளாஷ்பேக் சொல்லி என் கழுத்தை அறுத்துட்டீங்க..” என்று அவள் அவனை திட்டிக் கொண்டிருக்க, அவனோ “இங்க பாரு உனக்கு என்ன தெரியும்..? நாங்களும் எவ்வளவோ ட்ரை பண்ணோம்.. பட் எதுவுமே முடியல.. அதுக்கு அப்புறம் தான் இப்படி ஒரு பிளான் பண்ணினோம்.. இப்ப லாஸ்ட்டா கூட ஒரு பொண்ண ஏற்பாடு பண்ணி அண்ணன் தான் அவளை கற்பழிச்சார்ன்னு பஞ்சாயத்து எல்லாம் பண்ணி அதுக்கு எவ்வளவு செலவு பண்ணோம் தெரியுமா..?” என்று சொல்ல, அதைக்கேட்ட வினியோ அதிர்ந்து போய் “என்னடா சொல்ற..? இப்படி எல்லாமா பண்ணிங்க..?” என்று அவனை அடிக்கப் போக, அவளிடமிருந்து சற்று தள்ளி நின்று கொண்டவன், “இங்க பாரு ஆஊனா நீ அடிக்க அடிக்க வர.. நீ தள்ளி நின்னே பேசு..” என்றான் நண்டு.

“நீங்க ரெண்டு பேரும் பண்ணி வச்சிருக்க வேலைக்கு உங்களை கொஞ்சுவாங்க.. ஏன்டா நாலு பேரு மத்தியில கெட்ட பெயர் எடுக்கறது ரொம்ப ஈஸி.. ஒரு நல்ல பெயர் எடுக்கறது எவ்வளவு பெரிய கஷ்டம் தெரியுமா.. ஆனா நீங்க ரெண்டு பேரும் என்ன பண்ணி வச்சிருக்கீங்க..?” என்று மேலும் மேலும் அவனை திட்ட,

அவனோ “சரி அதெல்லாம் விடு அண்ணாவுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்குனு நாங்களும் டாக்டர்கிட்ட போய் பாத்துட்டோம்.. ஆனா எதுக்குமே அண்ணாவுக்கு சரியா வரல.. நீ எங்க அண்ணனை கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்ப தானே..?” என்று கேட்க, அவளோ “டேய் நான் முதல்ல சொன்னது தான் இப்பவும் சொல்றேன்.. என் மாமா தப்பு பண்ணிக்கொண்டு இருக்கிறாருன்னு தெரிஞ்சும் அவர கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்பட்டேன். இப்போ அவர் மேல எந்த தப்பும் இல்லைன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் அவரை விட்டு இனி ஒரு நிமிஷம் கூட என்னால இருக்க முடியாது..” என்று சொல்ல, அதன்பிறகே நண்டுவின் முகம் மலர்ந்தது.

“சரி ஆனா உன்ன அண்ணா ஏத்துக்கணுமே.. அவர் என்னடா அவருக்கு உணர்ச்சியே வராதுன்னு சொல்லிக்கிட்டு இருக்காரு.. இந்த நிலைமையில உன்னை எப்படி அவர் ஏத்துக்குவாரு..?” என்றான். அவளோ சற்று யோசித்தவள்,

“நான் சொல்ற மாதிரி நீ செய் அதுக்கப்புறம் உங்க அண்ணன நான் பாத்துக்கிறேன்..” என்றவள் அவன் காதில் ஏதோ சொன்னாள். அவள் சொல்வதைக் கேட்டு “நீ சொல்றதெல்லாம் சரிதான் ஆனால் அண்ணாவுக்கு இதுக்கு நானும் உடந்தைன்னு தெரிஞ்சதுன்னா அவ்வளவுதான் என்ன கொண்ணு போட்டுடும்..” என்றான்.

“உங்க அண்ணனோட வாழ்க்கை நல்லா இருக்கனுமா வேண்டாமா..? நீயே முடிவு பண்ணு..” என்றாள். “என்ன நீ இப்படி சொல்லிட்ட.. என் அண்ணன் சந்தோஷமா இருக்கணும்னு எனக்கு மட்டும் ஆசை இருக்காதா.. அவரு சந்தோஷமா இருந்தா எனக்கு அதுவே போதும்..” என்றவன் அவள் சொல்படி கேட்டு நடந்தான்.

“சரி ஓகே இன்னைக்கு ராத்திரி நான் சொன்னத அப்படியே செய்..” என்றாள்.

அவனும் சரியென்று தலையாட்டி சென்றான்.

இங்கே வெளியே சென்றவன் தன்னுடைய வேலைகளை முடித்து விட்டு என்றுமே மதியம் வீடு வராதவன் அன்று வீட்டுக்கு வந்தான்.

அவன் வந்த நேரமோ இவள் குளித்துவிட்டு வெறும் துவாலையை மட்டும் கட்டிக் கொண்டவள் அறைக்குள் வந்து ஆடை மாற்ற எத்தனிக்க, சட்டென அவளுக்கு விக்கல் எடுத்தது.

பக்கத்தில் இருந்த தண்ணீர் போத்தலை பார்த்தவள் அதில் தண்ணீர் இல்லை என்றதும், வீட்டில் இந்த நேரத்தில் யாரும் இருக்க மாட்டார்கள் என்றதால் போத்தலை எடுத்துக்கொண்டு சமையலறை நோக்கி வந்து கொண்டிருந்தாள். அந்த நேரம் பார்த்து உள்ளே நுழைந்த இளவேலனும் தன்னுடைய அறைக்குச் செல்ல மாடி ஏறினான். அப்பொழுது கீழே வந்தவள் இவனை எதிர்பாராதவள் அவனைப் பார்த்த அதிர்ச்சியில் சட்டென்று நிற்க முற்பட்டவள் கால்கள் தடுமாறி அவன் மேல் அப்படியே விழுந்தாள். அவனோ தன் மேல் அவள் விழுந்ததும் அவளை தன்னோடு இறுக்கிப்பிடித்தவன் பிடிமானம் இன்றி கீழே விழுந்தான்.

இருவரும் அந்த மாடிப்படிகளில் கட்டிப்பிடித்தவாறே உருண்டு வந்தார்கள்.

கீழே அவள் தலை அடிபட்டு விடக்கூடாது என்பதற்காக அவளை தனக்குள் ஆக்டோபஸ் போல சுருட்டி கொண்டவன் அவன் கீழே விழுந்து அவன் மேல் அவளை விழும் படி விழுந்தான்.

கீழே விழுந்ததும் அவள் கண்ணை திறந்து பார்க்க எதிரில் அவனும் அவளைப் பார்த்து “உனக்கு ஏதும் அடி படலையே..?” என்று கேட்க, அவளோ இல்லையென்று தலையாட்டியவள் அப்போதுதான் தன்னை குனிந்து பார்த்தாள்.

தன் உடலில் துவாலை மட்டும் சுற்றியிருக்க அவன் மேல் இருப்பதை எண்ணி முகம் சிவந்தவள், சட்டென எழுந்திருக்க முற்பட, அவனுடைய புலிப்பல் டாலர் அவள் துவாலையின் முடிச்சில் மாட்டிக்கொண்டது.

இவள் எழுந்திருக்கும் போது அந்த தவாலையின் முடிச்சி அவிழப்போக சட்டென அதைப் பிடித்துக் கொண்டவள்,

“அச்சச்சோ உங்க டாலர் துண்டுல மாட்டிக்கிச்சு.. இப்ப நான் எழுந்தா துண்டு அவுந்துடும்.. ஏதாவது பண்ணுங்க..” என்று மெதுவாக சொன்னாள்.

அவனோ அவள் துவாலையில் மாட்டியுள்ள அவனுடைய டாலரை பிரித்து எடுக்க ஆரம்பித்தான். ஆனால் அந்த டாலரோ நான் அவள் மேனியில் உள்ள அந்த துண்டில் இருந்து வரமாட்டேன் என்று அடம் பிடிக்க, வேறு வழியில்லாமல் தன்னுடைய கழுத்தில் இருந்த அவனுடையச் செயினை கழட்டி அவளுடைய கழுத்தில் போட்டு விட்டான்.

“இப்ப எழுந்திரு..” என்றான். அவளும் எழுந்து நின்றவள் கூச்சத்துடனே தலைகுனிந்து நின்று கொண்டிருந்தாள்.

என்னதான் அவன் மேல் உயிரையே வைத்திருந்தாலும் திடீரென அவன் முன்னால் தான் இப்படி இருக்க வெட்கம் பிடுங்கி தின்றது.

அவள் பக்கம் நெருங்கியவன் “ஏன்டி வெள்ளத் தக்காளி வீட்டுக்குள்ள இப்படியா வெறும் துண்டு மட்டும் கட்டுகிட்டு சுத்துவ..?” என்று கடிந்து கொண்டான்.

அவளோ “இப்பதான் குளிச்சிட்டு வந்தேன் டிரஸ் மாத்தலாம்னு போகும்போது விக்கல் எடுத்தது.. பக்கத்துல தண்ணீர் போத்தலை பார்த்தேன்.. தண்ணி இல்ல சரி வீட்ல தான் யாரும் இல்லையே அப்படின்னு கீழே வந்தேன்.. நீங்க வருவீங்கன்னு நான் எதிர்பார்க்கல..” என்றாள் தலை குனிந்து கொண்டே, “சரி சரி போய்த் தொல.. எப்ப பாரு என் முன்னாடி இப்படி அரைகுறையாவே சுத்துற.. இது எங்க போய் முடியப் போகுதோ எனக்கே தெரியல.. போய் முதல்ல டிரஸை போடு..” என்க, அவளோ விட்டால் போதும் என்று தன்னுடைய அறை நோக்கி ஓடிவிட்டாள். இவனுக்கோ அவளை அங்கிருந்து அனுப்பியதும் அவள் தன் மேல் விழுந்து உருண்டதை நினைத்து பார்த்தவன் உடல் சிலிர்த்தது.

“என்ன இப்ப எல்லாம் எனக்கு என்னென்னமோ தோணுது.. இதெல்லாம் தப்பு.. இப்படி எல்லாம் தோனக் கூடாது..” என்றவன் வந்த வழியே திரும்பிச் சென்று விட்டான். இரவில் வீட்டிற்கு வந்தவன் தன்னுடைய அறைக்குள் நுழைந்து விட, அவன் பின்னையே வந்த நண்டு வினிதாவின் அறை நோக்கிச் சென்றான்.

அவளைப் பார்த்ததும் தன்னுடைய வலது கையை தம்சப் என்ற வகையில் சைகைச் செய்ய, அவளும் அவனைப் போலவே சைகை செய்து புன்னகைத்தாள். இங்கு வேலனோ வழக்கம்போல் குளித்துவிட்டு வாசனை திரவியத்தை தன் மேல் தெளித்துக் கொண்டு எப்போதும் போலவே அறைக்குள் நுழைந்தவன் கட்டில் ஒரு பெண் பாலை குடித்து விட்டு போர்வையைத் தலைவரை மூடி படித்து இருப்பதை கண்டவன்,

“இது என்னடா போர்வையை இழுத்து மூடி படுத்து இருக்கா.. சரி எப்படியோ ஒன்னு நமக்கு என்ன..” என்றவன் அங்கு டேபில் மேல் அவனுக்காக ஒரு பால் டம்லர் இருக்க, ‘இது என்ன புதுசா இன்னொரு டம்லர் இருக்கு..’ என்று யோசித்தவன் நண்டுக்கு போன் செய்து விசாரிக்க, அவனோ “அண்ணே அது சத்துப்பால் குடிங்க நல்லா தூக்கம் வரும்..” என்று சொல்ல, அவனும் அவன் சொன்னதை நம்பி குடித்துவிட்டு படுத்து விட்டான்.

காலையில் அவன் அருகே ஒரு பெண் ஆடைகள் கிழிந்தவாறு முழங்காலில் முகத்தை புதைத்துக் கொண்டு அழுது கொண்டிருந்தாள். அவள் அழுகையில் துயில் கலைந்து எழுந்தவன் யார் என்று கேட்க, தன்னுடைய முகத்தை மெல்ல உயர்த்தினாள் அவனின் வெள்ளத் தக்காளி வினி.

அவளுடைய முகத்தை பார்த்தவன் அதிர்ந்து எழுந்து விட்டான்.

இவள் எப்படி இங்கே என்று.

 

அத்தியாயம்-11

 

காலையில் தன் அருகே அழுகை சத்தம் கேட்டு கண்விழித்த இளவேலனோ தன் முன் அமர்ந்திருக்கும் பெண்ணைப் பார்த்து யார் என்று கேட்க,

அவளோ தன் தலையை நிமிர்த்தவும் அவளைப் பார்த்து அதிர்ச்சியானான்.

“நீ எப்படி இங்க..?” என்று கேட்க, அவளோ “நைட்டு என்னோட ரூமுக்கு நான் தூங்கப் போகும் போது இந்த பக்கமா ஏதோ சத்தம் கேட்டதுன்னு உள்ள வந்தேன்.. டேபிள் மேலே பால் இருந்துச்சு.. சரி நமக்கு தான் வச்சிருப்பாங்க அப்படின்னு குடிச்சேன்.. குடிச்ச உடனே எனக்கு தூக்கம் வந்துருச்சு நானும் சரி இங்க தான் யாருமே இல்லையே அப்படின்னு இங்கேயே தூங்கிட்டேன்.. தூக்கம் கலைஞ்சி எழுந்து பார்த்தா என் டிரஸ் எல்லாம் கிழிஞ்சிருக்கு.. பக்கத்துல நீங்க இப்படி அரையும் குறையுமா படுத்து இருக்கீங்க.. என் கற்பு போச்சு..” என்று அவள் ஓ என்று ஒப்பாரி வைக்க, இவனுக்கோ எதுவுமே புரியவில்லை.

இது எப்படி சாத்தியம் என்று யோசித்துக் கொண்டிருக்க, அவளோ “நீங்க என்ன மோசம் பண்ணிட்டீங்க இனி நான் என் மாமா மூஞ்சில எப்படி முழிப்பேன்.. நான் கெட்டு போயிட்டேன்.. இனி நான் உயிரோடவே இருக்க மாட்டேன்..” என்றவள் சட்டென அந்த அறையை விட்டு வெளியேற போக, இவனோ அவள் அப்படி சொல்லவும் சட்டென சுயம் வந்தவன்,

“ஏய் ஒரு நிமிஷம் இருடி..” என்றவன் அவளுடைய கையைப் பிடித்தான். “விடுங்க.. என் கையை விடுங்க.. இனி நான் ஒரு நிமிஷம் கூட உயிரோட இருக்க மாட்டேன்.. உங்களை நம்பி வந்த பொண்ண இப்படி நீங்களே கெடுத்துட்டீங்களே.. நீங்க ரொம்ப நல்லவருன்னு நினைச்சேனே ச்சை..” என்றவள் நீலிக் கண்ணீர் வடித்தாள். அவனுக்கோ குற்ற உணர்ச்சியாகி போனது.

“இங்க பாரு நீ நினைக்கிற மாதிரி எதுவும் நடந்திருக்காது.. தயவு செஞ்சு என்னை நம்பு..” என்றான். “இன்னும் நீங்க சொல்றத நம்புறதுக்கு நான் தயாரா இல்லை.. என்ன விடுங்க நான் சாகணும்..” என்று அவன் கையை உதறி விட்டு போக நினைக்க, அவனோ அவளைப் பிடித்திருந்த கையால் சட்டென உள்ளே இழுத்தவன் அவளுடைய கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான்.

“என்னடி பைத்தியம் மாதிரி சொன்னதையே சொல்லிட்டு இருக்க.. நான் தான் சொல்றேன் இல்ல அப்படி ஏதும் நடந்திருக்காது அப்படின்னு நம்பி தொலையேன்டி..?” என்று கோபத்தில் கத்தினான்.

“நீங்க எதுவுமே பண்ணல அப்படின்னா எப்படி என் டிரஸ் எல்லாம் கிழிஞ்சது..? நீங்க எதுக்கு என் பக்கத்துல வந்து படுத்திங்க..?” என்று அவள் கேட்க,

அவனோ சற்று நிதானித்தவன் “இங்க பாரு எனக்காக ராத்திரி எப்பவும் ஒரு பொண்ணு வருவா.. இப்பவும் அவன்னு நினைச்சு தான் இங்க வந்தேன்..” என்றான்.

அதற்கு அவளோ

“அப்போ சரிதான அந்த பொண்ணுனு நெனச்சு நீங்க என்ன நாசமாக்கிட்டீங்க.. என் வாழ்க்கையே போச்சு..” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்.

இவனுக்கோ தலையே வெடித்து விடும் போல் இருந்தது.

இரவு என்ன நடந்தது என்று கூட அவனுக்குத் தெரியவில்லை.

அந்த பாலை குடித்ததும் அவனும் நன்றாக உறங்கி விட்டான். வழக்கமாக இரவில் ஒரு பெண் வந்து அந்த பெண்ணின் ஆடைகளை கலைந்து விட்டு செல்லும்போது இவன் அங்குள்ள குளியலறைக்குள் நுழைந்து கொள்வான்.

ஆனால் நேற்று இரவு அவன் எழுந்திருக்கவில்லை. அப்படி என்றால் நேற்று இரவு என்ன நடந்தது என்று அவனுக்கும் தெரியவில்லை.

அவளோ “இனி நான் என் மாமாவை எப்படி கல்யாணம் பண்ணிப்பேன்.. இனி அவர் மூஞ்சில நான் எப்படி முழிப்பேன்.. நான் கெட்டுப் போயிட்டேன்..” என்று அழுது கொண்டிருந்தாள்.

இவனுக்கோ இதற்கு மேல் அவளிடம் என்ன சொல்லி புரிய வைக்க என்று தெரியாமல்,

“இங்க பாரு நீ தேடி வந்த உன் மாமா நான் தான்..” என்றான்.

அவ்வளவு நேரம் அழுது கொண்டிருந்தவள் அவனுடைய இந்த வார்த்தைகளைக் கேட்டு அதிர்வது போல அவனை ஏறெடுத்து பார்த்தாள்.

‘அப்படி வா மாமா வழிக்கு..’ என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டாள். “நீங்க பொய் சொல்றீங்க.. நீங்க எப்படி என்னோட மாமாவா இருக்க முடியும்.. நீங்க என்கிட்ட தப்பா நடந்துகிட்டு அதை சமாளிக்க பாக்கறீங்க.. நான் நம்ப மாட்டேன்..” “அடியேய் வெள்ளைத் தக்காளி என்ன இரிடேட் பண்ணாத.. சத்தியமா நீ தேடி வந்த உன் மாமா நான் தாண்டி.. உன் கையில் இருந்த என்னோட சின்ன வயசு போட்டோவ பார்த்ததுமே எனக்கு தெரிஞ்சு போச்சு.. ஆனால் நான் தான் உன்கிட்ட சொல்லல.. சரி நீயா கொஞ்ச நாள் தேடிப் பார்த்துட்டு போயிடுவேன்னு நினைச்சேன்.. ஆனா இப்படி ஆகும்னு நானே எதிர்பார்க்கலடி..” என்றான்.

அதற்கு அவளோ “ஏன் மாமா என்னை உங்களுக்கு பிடிக்கலையா..? ஏன் என்கிட்ட நடிச்சீங்க.. நான் உங்களை ஊரெல்லாம் எப்படி தேடினேன் தெரியுமா..? ஆனா நீங்க என் பக்கத்துலயே இருந்துகிட்டு நான் உங்களை தேடுறதப் பார்த்து ரசிச்சிட்டு இருந்துறுக்கீங்க..” என்று கேட்க, அவனோ “அப்படியெல்லாம் இல்லடி.. உன்கிட்ட நான் என்ன சொல்லி புரிய வைப்பேன்..” என்று நிறுத்தியவன் ‘தனக்கு இருக்கும் பிரச்சனையை அவளிடம் சொன்னால் அவள் எப்படி ஏற்றுக் கொள்வாள்..?’ என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

“போதும் மாமா போதும்.. நீங்க ஏதேதோ சொல்லி என்னை சமாளிக்க பார்க்கறீங்க.. முடிவா சொல்லுங்க என்ன கல்யாணம் பண்ணிப்பீங்களா..? மாட்டீங்களா..?” என்றாள் திடமாக.

அவனோ “பைத்தியம் மாதிரி பேசாதே.. என்னால உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது..’ என்றான்.

“என்ன..? என்னை கல்யாணம் பண்ணிக்க முடியாதா..? அப்புறம் எதுக்காக நேத்து நைட்டு என்கிட்ட இப்படி நடந்துக்கிட்டீங்க..?” என்றாள். “நீ நினைக்கிற மாதிரி அப்படி எதுவும் நடக்கலடி.. இது ஒரு டிரா..” என்று சொல்ல வந்தவன் பாதியில் அப்படியே நிறுத்தி விட்டான்.

“என்ன சொல்லுங்க.. ஏதோ சொல்ல வந்துட்டு அப்படியே நிறுத்திட்டிங்க.. என்ன பொய் சொல்லி இவளை சமாளிக்கலாம் அப்படின்னு பார்க்கிறீர்களா.. இதுக்கு மேலயும் உங்க பேச்சை என்னால கேட்க முடியாது.. நான் போய் சாகப் போறேன்..” என்று அவள் எழுந்து கொள்ள, அவனோ அவளுடைய கையை இறுகப் பற்றியவன் சுண்டி இழுக்க, அவளோ அவன் மேல் வேகமாக வந்து மோதினாள்.

தன் மேல் மோதியவளை தன் கைவளைவிற்குள் வைத்துக் கொண்டவன்,

“என்னடி பிரச்சனை உனக்கு.. ஒரு தடவை சொன்னா உனக்கு புரியாதா.. நைட் எதுவும் நடக்கல.. அப்புறம் என்னால உன்னை கல்யாணமும் பண்ணிக்க முடியாது.. ஏன்னா..” என்று நிறுத்தியவன் “எனக்கு பொண்ணுங்க மேல ஆசையே வராது.. ஒரு உணர்ச்சி இல்லாத ஜடம்‌‌.. என்ன கல்யாணம் பண்ணி உன் வாழ்க்கையை நீ கெடுத்துக்க விரும்பல.. அதனாலதான் நீ என்னைத் தேடி வந்திருக்கேன்னு தெரிஞ்சும் உன்கிட்ட நான் என்னை காட்டிக்கல புரியுதா..” அவன் அப்படி சொல்லவும் அவளுக்கு அது ஏற்கனவே தெரியும் என்றாலும் ஒரு ஆண்மகன் ஒரு பெண்ணின் முன்னால் தான் ஒரு ஆண்மகனே இல்லை என்று சொல்லும் போது அவன் எவ்வளவு வலியில் இருப்பான் என்று அவளால் உணர முடிந்தது.

“இங்க பாரு உனக்குன்னு ஒருத்தன் கண்டிப்பா பிறந்து இருப்பான்.. அவனைக் கல்யாணம் பண்ணி நீ சந்தோஷமா வாழு.. உனக்கானவன் நான் இல்லை.. என்னைக் கல்யாணம் பண்ணா உன் வாழ்க்கை பட்ட மரமா தான் போகும்.. அப்படிப்பட்ட வாழ்க்கை உனக்கு தேவையே இல்லை.. தயவு செஞ்சு நான் சொல்றதை புரிஞ்சுக்கோ.. உன் ஊருக்கு போற வழிய பாரு..” “ஏன் மாமா என்னை உனக்கு பிடிக்கலையா..?” என்று இவள் அவன் முகத்தை பார்த்து பாவமாக கேட்க,

அவனோ தன்னுடைய கண்களை ஒரு நிமிடம் மூடித் திறந்தவன், “எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் டி.. அதனால தான் சொல்றேன் நீயாவது சந்தோஷமா இரு.. என்னால உனக்கு சந்தோஷத்தைக் கொடுக்க முடியாது..” என்றான் வேதனையுடன். அவளோ “இங்கு பாரு மாமா எப்போ உன்னைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு உன்னைத் தேடி இங்க வந்தேனோ அப்பவே என் மனசு முழுக்க நீ தான் நிறைஞ்சிருக்க.. உன்னை தவிர்த்து என் வாழ்க்கையில வேற எவனுக்கும் இடம் கிடையாது.. அப்படி ஒன்னு நடக்கவும் நான் விடமாட்டேன்.. இப்ப முடிவா கேட்கிறேன் உன்னால என்னை கல்யாணம் பண்ணிக்க முடியுமா..? முடியாதா..?

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!