மான்ஸ்டர்-23

5
(12)

அத்தியாயம்-23

இன்று தான் மார்ட்டினுக்கு அதிர்ஷ்டம் அள்ளி தெளித்தது போல அவளுக்கு முன்னாலே சென்று அவன் உட்கார்ந்து இருந்தான்… அவன் கண்கள் அவளையே ரசனையாக அள்ளிப்பருகிக்கொண்டிருக்க…

அப்போது… “மைத்ரேயி.. டேபிள் நம்பர் செவன்.. கஸ்டமர் வெய்ட்டிங் ஃபார் ஆர்டர்.. ப்ளீஸ் கோ அன்ட் அட்டன்…”என்று அவளின் முதலாளி கூற…

அதில் பதறியவளோ.. “யா யா சார்…”என்று ஓடியவள் அந்த டேபிள் செவனில் நின்றவாறே… சார் வாட் யூ வான்ட் சார்…” என்று குனிந்தவாறே கேட்க…

மார்ட்டினோ தனக்கு அருகில் நிற்கும் பெண்ணவளை இமைக்க மறந்து பார்த்துக்கொண்டிருந்தான்… அவன் கைகளோ அவளை அள்ளி அணைக்க ஆர்மவாக இருக்க.. அவன் இதழ்களோ அதன் இணையை தேட துடித்துக்கொண்டிருந்தது…

மைத்து ஆர்டர் கேட்டவள் ஆர்டர் குறிப்பில் எழுத தயாராக நிற்க… ஆனால் மார்ட்டினோ எதுவும் கூறாமல் அப்படியே அசையாமல் உட்கார்ந்து இருந்தான்… ஆம் அந்த டேபிள் நம்பர் செவன் அவன் அமர்ந்திருக்கும் இடம் தான்…

மைத்ரேயியோ என்ன இன்னும் எதுவும் சொல்லல..”என்று நினைத்தவளோ… சார் வாட் யூ வான்ட் சார்…”என்று கேட்டவாறே எதார்த்தமாக நிமிர்ந்து பார்க்க.. அவள் கண்களோ அப்படியே அதிர்ச்சியில் விரிய.. அவள் இதழ்களோ பாறை போல இரண்டாக பிளந்து இருந்தது..

அவள் முகம் அவனின் பிரசனத்தில் சிவந்து போக… அவள் கண்கள் இம்மியும் அசையவில்லை.. அவள் அவனை அங்கு கண்டிப்பாக எதிர்பார்க்கவே இல்லை… “ஐயோ இவரா…”என்று அவள் உதடுகள் முணுமுணுக்க… இவர் எப்டி இங்க…”என்று அவள் யோசனையிலையே நின்றுக்கொண்டிருக்க…

மார்ட்டினோ அவள் முகத்தில் தோன்றும் உணர்வுகளை தான் குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்தான்.. அவன் இதழில் மலர்ந்த புன்னகை ஒன்று தோன்றியதுமைத்துவும் அப்படியே அசையாமல் அவனையே பார்த்துக் கொண்டே இருந்தவளுக்கோ கொஞ்ச நேரம் உலகமே மறந்து போனது…

ஆனால் அடுத்த நிமிடம் சட்டென்று அவன் பேசிய பேச்சு எல்லாம் நினைவுக்கு வர சட்டென்று தலையை உலுக்கியவள் ம்ச் என்ன சார் வேணும்…” என்று கடுமையான குரலில் கேட்க..

மார்ட்டினுக்கோ அவளது கோவம் நன்றாக விளங்கஅதில் ஒரு பக்கம் உதட்டை சுருக்கி சிரித்தவனோ ம்ம்ம் ஒன் கேப்பச்சினோ.. கேப்பச்சினோ.” என்று கூற

அவளோ விழித்தவள்… வாட் டூ கேப்பச்சினோவா…” என்று கேட்க…

அவளின் குழப்பமான முகத்தை பார்த்து உள்ளுக்குள் சிரித்துக்கொண்டவன்… ம்ம் நோ நோ ஒன் கேப்பச்சினோ…”என்று தன்னுடைய ஒரு விரலை காட்டியவன்… பின் அவளை நோக்கி ஒரு விரலை காட்டியவன்.. “கேப்பச்சினோ..” என்று கூற…

அதில் அவளோ தனக்கு கேப்பச்சனோ என்று பெயர் வைத்திருக்கிறான் என்பதை புரிந்து கொண்டவள் அவனை பார்த்து முறைத்தவளோ ம்கூம்… இது ஒன்னு தான் குறை.. சும்மா இருக்குறவள வீட்டை விட்டு மட்டும் துரத்த வேண்டியது..” என்று நினைத்தவாறு… “ஓகே சார்…”என்றவள் அவனை ஒரு மாதிரி பார்த்தவாறே அவனுக்கு கேப்பச்சினோவை ரெடி செய்வதற்காக உள்ளே செல்ல..

மார்ட்டினோ அவளது ஒவ்வொரு செயலையும் தான் உட்கார்ந்த இடத்திலிருந்தே பார்த்தவனின் பார்வையோ அவளை அப்படியே ஸ்ட்ரா போட்டு உறிவது போல இருந்தது.. அவனது பார்வை அவளை இம்சை செய்ய…

ம்ச் எதுக்காக இப்படி வந்து உட்கார்ந்துகிட்டு என்னையே உத்து உத்து பார்த்துட்டு இருக்காரு…” என்று உதட்டை சுருக்கி யோசனை செய்து கொண்டு இருந்தவளை பார்க்க பார்க்க அவனுக்கோ உடல் முழுவதும் ஒரு வித போதை தான் ஏறியதுகிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக அவளை பார்க்காமல் ஒருவித அவஸ்தையில் இருந்தவனுக்கு அவளை பார்த்ததுமே ஏதோ பரவசமாக இருந்தது.. அதே நேரம் அவன் உடல் வேறு அவளை பார்த்த வேகத்திற்கு உணர்ச்சி குவியலாக மாற..

அதனை உணர்ந்தவனோ ஏன் இவள பாத்தா மட்டும் உடம்பு அப்படியே உணர்ச்சியில் தவிக்குது…” என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு கண்டிப்பாக அந்த உணர்வுகள் எல்லாம் புது வகையாக தான் இருந்ததுஅவளை அப்படியே இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருக்கஅவளோ வேகவேகமாக கேப்பச்சினோவை ரெடி செய்து மேலே ஹார்ட் ஒன்றை வரைந்து கொண்டு வந்து அவன் முன்னால் வைக்க

மார்ட்டினோ அவளை ரசனையாக பார்த்தவாறே அந்த காபியை பார்த்தவன்.. அந்த ஹார்ட்டினை பார்த்து உதட்டை சுருக்கி சிரித்தவன்…  “திஸ் ஹாட் ஃபார் மீ…” என்ற கேள்வியாக கேட்க…

அதில் அவனை நிமிர்ந்து பார்த்தவள்… “இல்ல சார் இங்க வர எல்லா கஷ்டமருக்கும் நான் ஹார்ட் தான் போட்டு கொடுக்கிறேன்…” என்று நக்கலாக பதில் சொல்லியவள்.. அங்கிருந்து சென்று ஓரமாக நின்றுக்கொள்ள.. அவளது பதிலில் அவனுக்கோ அதிக கோபம் தான் வந்தது..

அவனது கோவம் அவளுக்கு குஷியை கொடுக்க… நல்லா கோவம் வருதா… மான்ஸ்டர் அன்னிக்கி என்ன அங்கிருந்து துரத்தும்போது எனக்கும் அப்டிதானே இருந்துருக்கும்…”என்று அவனை மனதில் திட்டியவளோ அவனை பார்க்காமல் பார்வையை திருப்பிக்கொள்ள..

மார்ட்டினோ தன் கோபத்தை கை விட்டவனாக அப்படியே அந்த ஹார்ட்டினை கலைக்காமல் எடுத்து அருந்த ஆரம்பிக்க.. அவனது தலைவலி இருந்த இடமே தெரியாமல் பறந்து போனது.. “ஒரே காபில என்னோட மொத்த தலைவலியையும் டோட்டலா இல்லாம ஆக்கிட்டாளே..மை கேப்பச்சினோ…”என்று நினைத்துக்கொண்டான்…

அன்றிலிருந்து அவளுக்கு கேப்பச்சினோ என்ற பெயரையும் வைத்துவிட்டான்அவளோ அவன் காபி குடித்து முடித்ததை பார்த்தவள் அவன் அருகில் சென்று பில்லை நீட்ட…

அவனோ அவளை குறும்பு புன்னகையுடன் பார்த்தவாறே.. “இங்க புதுசா அக்கௌன்ட் ஓபன் பண்ணலாமா…” என்று கிண்டலாக கேட்டான்…

அதில் முறைத்தவள்… சாரி சார் இது பேங்க் கிடையாது.. இது காபி ஷாப்…” என்று கூற,,

ம்ச் ஓ பேங்க் இல்லையா… ம்ச் சாரி மேடம் நானு பேங்க்னுல நெனச்சேன்…” என்று அவனும் நக்கலாக கூறியவனோ.. தன் பாக்கெட்டில் இருந்து ஒரு கார்டினை எடுத்து வைக்க.. அவளோ அதனை ஸ்வைப் செய்து பில்லை கட்டி அவனிடம் அந்த கார்டை ஒப்படைத்தவள்…. “தேங்க்ஸ் ஃபார் கம்மிங் சார்…என்று கூற…

அட அதுக்குள்ள தேங்க்ஸ் சொல்லி முடிச்சிடாதீங்க மேடம்.. இனிதான் அதிகமாவே இங்கே வருவேன்..” என்று கூறியவன் வாயிற்குள் சிரிப்பை அடக்கினான்…

மைத்துக்கோ இது என்னடா தலைவலி என்று தான் தோன்றியதுஅவனை விட்டு வந்ததிலிருந்து அவளுக்கு எப்போதும் அவன் நினைப்புதான் அதிகமாக வரும்.. ஒரு மாதமாக தான் அவனை காதலிக்கின்றாள்.. ஆனால் ஏதோ பல வருடமாக காதலித்தது போல காதல் நோய் அவளை அதிகமாக தாக்கி இருக்க.. எப்போதும் மார்ட்டினின் நினைவில் சுற்றிக் கொண்டிருந்தவளுக்கு இப்போது நெடுநாள் கழித்து அவனை பார்க்கும்போது ஓடி சென்று அவனை அணைத்து முத்தமிடுவோமா என்று கூட தோன்றியதுஆனால் அதனை அடக்கியவளோ

கொஞ்சம் அடங்குடி.. நீதான் அவரையே நினைச்சி உருகுற… ஆனா அவரு உன்ன கேர் எடுத்துகிறாரா பாத்தியா.. ஏனோ தானோன்னு உக்காந்து இருக்காரு.. அவரு கண்ணுல ஏன் அவரு முகத்துல கூட ஒரு எக்ஸ்பிரஸனும் தெரியல…” என்று நினைத்தவளுக்கு கண்டிப்பாக அவனின் நிலை தெரியாமல் போனது

இப்படியே நாட்கள் ஓட.. தினமும் அவள் வேலை செய்யும் அந்த காபி ஷாப்பிற்கு சென்று காபி அருந்துவது கூடவே அவளையும் அருந்துவது என்று மார்ட்டினின் நாட்கள் பிஸியாக ஓடிக்கொண்டிருந்தது..

மார்ட்டின் அன்று கடுமையான கோவத்தில் இருந்தான்… “அது எப்படி அவள் தன்னுடன் வரவே மாட்டேன்..” என்று உறுதியாக கூறுவாள் என்று நினைத்தவாறு அங்குமிங்கும் கர்ஜனையுடன் சிங்கம் போல அரட்டிக் கொண்டிருந்தான் தன் வீட்டில்

ஹவ் டேர்அவ எப்படி என்னோட வர மாட்டேன்னு சொன்னாஅவ எதுக்காக என்னோட வர மாட்டேன்னு சொன்னா…” என்று கத்தியவாறே இருந்தவனின் சிந்தனையோ சிறிது நாட்கள் முன்பு நடந்ததை பற்றி நினைத்துக் கொண்டிருந்ததுஎப்போது அவள் அந்த காபி ஷாப்பில் வேலை செய்கிறாள் என்று தெரிந்ததோ அன்றிலிருந்து மார்ட்டின் வெளியில் சென்றால் வேலையை முடித்துவிட்டு வரும்போது தன் கேப்பச்சினோ வேலை செய்யும் காபி ஷாப்பிற்கு சென்று ஒரு கேப்பச்சினோவையும் தன்னுடைய கேப்பச்சினோவையும் அருந்திவிட்டு தான் வீட்டிற்க்கே வருவான்…

ஒரு பக்கம் அவனுக்கு அவளது காபி தேவைப்பட்டாலும் இன்னொரு பக்கம் அவனது கேப்பச்சினோ தேவையாகப்பட்டது.. கேப்பச்சினோ என்பது அவளுக்கு அவன் வைத்திருக்கும் செல்லப் பெயர்.. எப்போதும் அவளுக்கு முன்னாள் போய் உட்கார்ந்து அவளை ரசனையாக பார்த்தவாறு கேப்பச்சினாவை ரசித்து குடித்து முடித்தவன்… “ஐ லவ் கேப்பச்சினோ..” என்று ஆசையாக அவளை வருடியவாறே கூற…

அவளோ அவனின் வார்த்தையில் அதிர்ந்து நிமிர்ந்து பார்க்க.. ஆனால் பார்வையோ அவன் கையிலிருக்கும் காபியில் இருக்கும்… அவள் அவனை முறைக்க… அதனை ஓரக்கண்ணால் பார்த்து ரசித்தவன் எதார்த்தமாக நிமிர்ந்து பார்த்து… “ஹலோ என்ன முறைப்பு… நான் என்னோட கேப்பச்சினோவ சொன்னேன்…” என்று தன் கையில் இருக்கும் கப்பை தூக்கி காட்ட

அவளுக்கோ பத்தி கொண்டு வரும்… அவன் தன்னை தான் சொல்கின்றான் என்றோ தன்னை பார்க்கதான் இங்கு அடிக்கடி வருகின்றான் என்றோ அவளுக்கு தெரியாமல் போகுமா என்ன.. தன்னை அந்த வீட்டினை விட்டு துரத்தி விட்டவர் எதற்காக தினமும் தன்னை பார்க்க இங்கு வருகிறார் என்று அவளுக்குத்தான் புரியாமல் போனது..

ஒருநாள் அவன் அவளை வீட்டிற்கு வருமாறு அழைத்தும்விட்டான்… ம்ச் இங்க இருந்து எதுக்கு நீ கஷ்டப்படனும் கேப்பச்சினோ.. பேசாம நம்ம வீட்டுக்கு வந்துடேன்…”என்று உரிமையாக அவளை கூப்பிட..

அவளோ அவனின் பேச்சை கேட்டு முறைத்தவள்… என்ன பத்தி என்ன நெனச்சீங்க.. நீங்க வானா வரனும் போனா போனுமா… முடியாது.. நான் இனி அங்க வரமாட்டேன்.. இங்க இருந்து போனு தொரத்துனீங்க… இப்போ வானா வரமுடியுமா வரமாட்டேன்…”என்று திமிராக கூற.. அதில் அவனுக்கும் கோவம் அதிகமாகியது.. ஆனாலும் அதன் பிறகு பலநாட்கள் அவளிடம் கேட்டுவிட்டான் அவள் விடாப்பிடியாக மாட்டேன் என்றுவிட்டாள்..

அவன் இங்க எதற்காக வரவேண்டும்.. அவனுக்கு என்ன தலையெழுத்தா என்று அவளுக்கு தோன்றாமல் இல்லை..

அதனை ஒரு நாள் அவனிடம் கேட்டும்விட்டாள்… “எதுக்காக டெய்லியும் இங்க வந்து காபி சாப்பிட உட்கார்ந்து இருக்கீங்கநீங்க நினைச்சா இந்த காபி ஷாப்ப கூட விலைக்கு வாங்க முடியும்.. ஆனா இங்க வந்து உட்கார்ந்துகிட்டு ஒரு சாதாரண ஆள் மாதிரி காபி குடிச்சிட்டு இருக்கிறது பார்த்தா என்னால நம்பவே முடியல…”என்று அவனை சந்தேக பார்வையுடன் பார்த்துக் கொண்டிருக்க…

அவனோ அதற்கு கேலியாக உதட்டை வளைத்தவனோ.. “ஒரு காபி குடிக்கிறதுக்காக காபி ஷாப்பையே வாங்க முடியுமா..” என்று நக்கலாக பேச,

அதில் மைத்துவிற்கு கோபம் தான் அதிகமாகிறதுஅவள் பேசியதற்கு காரணம் இந்த காபிக்காக ஒன்றும் தான் வரவில்லை உனக்காகத்தான் வந்திருக்கிறேன்…” என்று அவன் கூறுவான் என்று நினைத்தவாறு அவள் பேசஆனால் அவன் பேசியது அவளை இன்னும் வெறுப்பேற்றியதுதான்.. இப்படியே நாட்கள் மார்ட்டினுக்கு அழகாக கரைந்து போக.. அவனின் கோவத்தை அதிகப்படுத்துவது போல ஒருநாள் ஒரு சம்பவமும் நடந்தது..

(கேப்பச்சினோ…)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!