மான்ஸ்டர்-24

4.6
(13)

அத்தியாயம்-24

ஒருநாள் வழக்கம் போல அவளின் அந்த மான்ஸ்டரோ காபி குடிக்க வந்திருக்க.. கண்களிலிருந்து கண்ணாடியை கழட்டாமல் அப்படியே கால் மேல் கால் போட்டுக்கொண்டு அந்த காபி ஷாப்பில் இவனை பார்த்துக்கொண்டே வேலைப்பார்த்துக்கொண்டிருக்கும் அந்த மருண்ட மான்குட்டியையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்க.. அந்த மருண்ட மான்குட்டி பெண்ணவளோ காபி கொட்டையினை அறைத்த தூள்களில் சுடுதண்ணீரை ஊற்றுவதும் பின் இவனை பார்ப்பதும், பின் அதனை ஒரு நீண்ட கப்பில் ஊற்றுவதும் பின் இவனை பார்ப்பதும், பின் அதில் சர்க்கரை கட்டிகளை போடுவதும் பின் இவனை பார்ப்பதும், பின் அதில் பாலை ஊற்றுவதும் இவனை பார்த்துக்கொண்டே கலக்குவதுமாக இருக்க..

அவளின் ஒவ்வொரு செயலையும் கால் மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தான் அந்த மான்ஸ்டர். அவளின் செயலில் அவனது இரும்பு உடல் கூட கொஞ்சம் தளர்வதாக இருக்க.. அவன் இறுக்கமான இதழ்களும் விரிவதாக இருக்க ஆனால் அதனை எதையும் தளர்த்துவதாக இல்லை அவன். அவனுக்கு அது பழக்கமும் இல்லையே.

இப்படியே நேரம் ஓட.. திடீரென்று அந்த காபி ஷாப்பின் உள்ளே திடுதிடுபென நான்கு ஆட்கள் நுழைய.. அதனை அவள் கவனித்தாளோ இல்லையே அந்த ஹேஷல் நிற கண்களுக்கு சொந்தக்காரனுக்கோ நன்றாக பதிந்து போனது. சொல்லப்போனால் இப்போது அவனின் இறுக்கம் தளர்ந்த இதழ்களோ இப்போது மறுபடி இறுக்கத்தை தான் பூசிக்கொண்டது.

அந்த நான்கு ஆட்களை பார்த்த அந்த காபி ஷாப்பின் உரிமையாளரோ அந்த மருண்டை பெண்ணவளை பார்த்து கண்காட்ட.. அவளோ சரி என்று தலையாட்டியவாறே அந்த நால்வர் இருக்கும் இடம் நோக்கி சென்றாள்.

ஹாய் சார் குட்மார்னிங் வாட் யூ வான்ட் சார்..”என்று பெண்ணவள் பதற்றமே இல்லாமல் அவர்களிடம் வினவ.

அதனை கேட்ட நால்வரின் கண்களும் அந்த பெண்ணவளின் வரிவடிவமான உடல் அழகில் மயங்கி போக.. நால்வரும் ஒருவரை ஒருவர் வாவ் என்ற வார்த்தையை முணகியவாறே பார்த்துக்கொண்டனர். அந்த வாவ் என்ற வார்த்தை அவர்களுக்கு அருகிலே நின்ற பெண்ணவளின் காதில் விழாமல் போனாலும் அவர்களுக்கு பத்தடி தூரத்தில் உட்கார்ந்திருந்த அந்த மான்ஸ்டரின் காதுகளுக்குள் விழ தான் செய்தது.

அவர்கள் ஹிந்தியில் ஆளு நல்லா ஸ்ட்ரக்சரா இருக்கா இல்லடா..” என்று ஒருவன் கூற…

ஆமாண்டா நல்லா கொழுக் மொழுக்குன்னு உடம்பு எல்லாம் அங்கங்க சரியான அளவுல எல்லாமே சிக்குனு இருக்குடா…” என்று ஒருத்தன் மயக்க பார்வையுடன் மைத்துவை பார்த்து போதை விழிகளுடன் கூறினான்..

ம்கூம் டா.. இப்ப பாக்கவே இப்படி இருக்காளே இன்னும் மார்டன் டிரஸ்ல பாத்தா எப்படிடா இருப்பா…” என்று இன்னொருவன் கூற..

அதும் பிக்னி ட்ரெஸ்ல..”என்று ஒருவன் அவளை இமெஜினேஷன் செய்தவாறே கூற…

அட காபி ஷாப்ல தானடா வேலை பாக்குற நம்ம என்ன சொன்னாலும் செய்வா தான் இவகிட்ட நம்ம ரேட் பேசிப் பார்ப்போமா…” என்று இன்னொருவன் கூறினான்இவர்கள் பேசுவது எல்லாம் அவளுக்கு புரியவில்லை என்றாலும் ஏதோ தன்னை பார்த்து தவறாக கமென்ட் பண்ணுகிறார்கள் என்று மட்டும் அவளுக்கு நன்றாக புரிந்ததுஅதனால் கையை பிசைந்தவாறே நின்றவள் திரும்பவும் ஒரு தடவை அவர்களிடம் என்ன வேண்டும் என்று கேட்டுப் பார்த்தாள்..

அவர்களோ அவளை மேலிருந்து கீழாக ஒரு மாதிரி பார்த்தவாறே ஆர்டர் கொடுக்க.. அதனைக் கேட்டு சரி என்று தலை ஆட்டியவள் வேகமாக அவர்களுக்கு ஆர்டர் எடுக்கும் சாக்கில் உள்ளே சென்றுவிட்டாள்.. என்னதான் அவள் உள்ளே சென்றாலும் அந்த நால்வரும் அவளை இங்கிருந்து பார்த்து தவறாக கமெண்ட் செய்ய இது எல்லாம் பின்னால் உட்கார்ந்து அவள் கொடுத்த கேப்பச்சினோவை அருந்தியவாறு கேட்டுக் கொண்டிருந்த மார்ட்டினுக்கோ உடல் பற்றி எரிந்தது..

ஆம் அவனுக்கு ஹிந்தி தெரியாதா என்ன அவர்கள் பேசிய ஒவ்வொன்றும் அவனுக்கு அப்படியே அச்சு பிசகாமல் விழ.. அவர்களையே அக்னி பார்வை பார்த்துக் கொண்டிருந்தவன்.. திரும்பி தன்னவளை பார்க்க அவளோ வழக்கம் போல இவனையும் அந்த நால்வரையும் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவள் கண்களில் தெரிந்த ஒருவித மிரட்சியை கண்டு இவனுக்கோ உள்ளம் தடுமாற…

ம்ச் இதெல்லாம் இவளுக்கு தேவையா வீட்டுக்கு வர சொன்னா பேசாம வர வேண்டியதுதானே.. அத விட்டுட்டு நான் துரத்திட்டேன்னு பிடிவாதத்துல வரமாட்டேன்டா…இப்போ அனுபவிக்கிறா…” என்று நினைத்தவாறு அவன் அப்படியே உட்கார்ந்து இருக்க..

இந்த நால்வரின் பேச்சிகளும் வரம்பை மீறி சென்று கொண்டிருந்தது.. சரியாக பதினைந்து நிமிடம் கழித்து அவர்களுக்கான ஆர்டரை கொண்டு போய் கொடுக்க.. அவர்களோ வரம்பு மீறி அவளின் பின் பக்கம் ஒருவன் கைகளை கொண்டு வருட பார்க்க

அதனை உணர்ந்தவளோ.. அவன் கையை தட்டிவிட்டு… “ஹலோ சார்…” என்று வேகமாகவும் அதே நேரம் கோவமாகவும் கத்தஅந்த நால்வரும் அவளை பார்த்து இளக்காரமாக ஒரு சிரிப்பை சிந்தினார்கள்..

அப்போதும் ஒருவன் அடங்காமல்.. “உனக்கு என்ன ரேட்…”என்று மறுபடியும் அவள் மேல் கை வைக்க செல்ல… அதனை தடுத்தவாறே ஒரு வலிமையான கை ஒன்று அவளின் இடையில் கைக்கொடுத்து அவளை தன் பக்கம் இழுத்ததோடு இல்லாமல் அந்த நீட்டியை கையை நிமிடத்தில் உடைத்தது…

ஆஆஅ அம்மா…”என்று அவன் கத்த.

அதனை கண்ட மற்ற மூவருமே அந்த செயலில் மிரண்டு போனார்கள்… ஏனென்றால் அதனை செய்தது மார்ட்டின் ஆகிற்றே.. அங்கு இருக்கிறவர்களுக்கு மார்ட்டினை தெரியாதா என்ன… ஆனால் முன்பு அவன் அங்கு உட்கார்ந்து இருப்பதையே அவர்கள் பார்க்கவில்லை…

இப்போது வேகமாக தனது நண்பனின் கையை முறித்த மார்ட்டினை பார்த்து பதறியவாறே எழுந்து நிற்கமார்ட்டினோ… அவர்களை கண்களால் எரித்தவன் வந்தோமா காபி சாப்பிட்டோமா போனமானு இருக்கணும்.. அத விட்டுட்டு என்னடா கமெண்ட் பண்றீங்க, மேல கை வைக்கிறீங்களா…” என்று மூவரையும் சரமாரியாக அறைய…

அய்யோ பாஸ் சாரி சாரிங்க பாஸ்…” என்று அவர்களும் கதற…

ஆனால் மார்ட்டினோ அதனை காதில் வாங்காமல் அவர்களை அரக்கதனமாக அறைந்தான்… அதனை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த மைத்து என்ற சிலைக்கு உயிர் வர… அய்யோ என்ன செய்றீங்க நிறுத்துங்க…” என்று மார்ட்டினின் கையை இறுக்க பிடித்துக் கொண்ட பெண்ணவளோஅந்த நால்வரையும் பார்த்து… “சீக்கிரமா இங்க இருந்து போங்க…” என்று விரட்டினாள்…

அவளுக்கு கண்டிப்பாக தெரியும் தன்னிடம் வம்பு வளத்தவர்களை அவன் எந்த கதிக்கு ஆளாக்குவான் என்றுஅதனால்தான் அவர்களை அங்கிருந்து போக சொல்ல… அவர்களோ தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிட்டனர்… அதனை கண்ட மார்ட்டினோ திரும்பி இவளை முறைத்தவன் வேகமாக அவளை வெளியில் இழுத்து வந்தான்….

அந்த மான்ஸ்டரோ அவளின் கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டவன் அவளை தரத்தரவென இழுத்துக்கொண்டு தன் காரினை நோக்கி செல்ல.. அவளின் கால்களோ அவனின் இழுப்புக்கு பயந்து தள்ளாடியது.

அவளை காருக்குள் தள்ளிவிட்டவனோ.. “ஹவ் டேர் தே டச் மை கேப்பச்சினோ..”என்று அந்த காரே அதிர கத்த. பெண்ணவளோ அப்படியே அவன் கத்தலில் கண்களை மூடி உட்கார்ந்திருந்தாள்.

எப்டி அவனுங்க உன்ன டச் பண்ணலாம் கேப்பச்சினோ…..”என்று அவளுக்கு அடுத்த அடைமொழி வைக்க.. அவன் மைனா என்று அழைக்கும் மைத்ரேயியும் அவனை அதே மிரட்சி பார்வை பார்த்தாள். “ம்ச் இதுக்கு தான் உன்ன எங்கூடவே வந்துடுனு சொன்னேன்.. நீ புல்ஷிட் மாதிரி மாட்டேன் மாட்டேன்னு என் உயிர எடுக்குற..”என அந்த காரே அதிரும் அளவிற்கு கர்ஜிக்க.. இப்போது பெண்ணவள் அதில் கடுப்பாகி போனாள்.

வொய் நான் உங்க கூட வரனும் மான்ஸ்..”என்று அவனை போல அல்ல என்றாலும் சிட்டுக்குருவி கத்துவது போல ஒரு கத்தலை போட்டவளோ.. “அதான் என்ன பிடிக்கலனு சொல்லிட்டீங்க இல்ல.. தென் வொய் நான் உங்க கூட வரனும் மான்ஸ்..”என்றவளோ.. அவனின் அணைப்பில் இருந்து கடினப்பட்டு வெளியில் வந்தவளோ.. “நெவர்.. என் வாழ்க்க இங்க தான் இந்த காபி ஹவுஸ் தான் என் வாழ்க்கை. இனி என்னை பாக்க வராதீங்க மான்ஸ்..”என்றவளோ அவனின் அக்னி பார்வையை கூட கணக்கில் கொள்ளாமல் இறங்கி ஓட.. அவளின் நிலையை நினைத்து அந்த மான்ஸ்டரோ கோவத்தின் உட்சிக்கே சென்றுவிட்டான்.

அதனால் வந்த கோவம் தான் இப்படி உருமிக்கொண்டிருக்கின்றான்… என் கூட வர மாட்டேன்னு சொல்லிட்டா…” என்று புலம்பியவனோ அடுத்த இரண்டு நாட்களாக அவளை பார்ப்பதற்கு காபி ஷாப்பிற்கு செல்லவே இல்லை…

இதனை தன்னுடைய வேலையின் போது அவன் வரும் நேரத்தில் நிமிர்ந்து பார்த்தவளுக்கு அவன் வராதது ஏமாற்றத்தை தான் கொடுத்தது.. அதிலேயே அவள் பேசியது அவனை கோவப்படுத்திவிட்டது என்று அவளுக்கு நன்றாக தெரிந்து போனதுஅதனால்தான் இன்று அவன் தன்னை பார்க்க வரவில்லை என்று அவள் நினைத்தாள்..

என்னை வீட்டை விட்டு மட்டும் வெளியில துரத்த வேண்டியது.. நாம வேற ஏதாவது பேசிட்டா உடனே இப்படி கோபப்பட வேண்டியதுபோகட்டுமே.. உன்ன பாக்க வரலைனா இப்போ என்னடி.. போட்டும் வராம போட்டும்..” என்று புலம்பியவளின் காதல் மனது அவன் வராதது, தினமும் அவன் முகத்தை பார்க்க முடியாதது அவளுக்கு வேதனையை தான் அளித்தது. ஆனாலும் அதனை கட்டுப்படுத்திக் கொண்டு அவள் தன்னுடைய வேலையில் மும்முரமாக இருந்தாள்.. 

(கேப்பச்சினோ…)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!