அத்தியாயம்-25
“உங்களுக்கு தேவையான டைம் கொடுத்தாச்சு.. இதுக்கு மேலயும் உங்களுக்கு டைம் கொடுக்க முடியாது.. மரியாதையா நான் கொடுத்த காசை வச்சுட்டு இங்க இருந்து கிளம்புற வழிய பாருங்க..” என்று நிவாஸ் கத்திக் கொண்டிருக்க…
அவனுக்கு முன்பு காஞ்சனாவும், மாணிக்கவாசகமும், ராகவ்வும் பம்மிக்கொண்ட நின்றிருந்தனர்… “அய்யோ சார் அப்டி சொல்லாதீங்க சார் கொஞ்சம் டைம் கொடுங்க சார்.. கண்டிப்பா எப்படியாச்சும் அவள உங்கக்கிட்ட கொண்டு வந்து ஒப்படைக்கிறோம்…” என்று ராகவ் கெஞ்ச..
அவனை எரிக்கும் பார்வை பார்த்த நிவாஸோ “ம்ச் உன் அக்கா போனதும் இல்லாம… என்னோட ஃபேமிலி சொத்தான அந்த லாக்கெட்டையும் தூக்கிட்டு போயிட்டா… அவளுக்கு இருக்குற கொழுப்பு யாருக்கும் இருக்காதுடா… அவ அழகா இருக்கான்னு ஆசைப்பட்டதுக்கு என்னை என்ன செய்ய முடியுமோ செஞ்சிட்டா.. அது மட்டுமா செஞ்சா அந்த மார்ட்டின வச்சி என் கைய ஒடைக்க வைச்சி அவன் பக்கத்துலையே நெருங்க முடியாத அளவுக்கு செஞ்சிட்டா…”என்று நிவாஸ் கத்திக் கொண்டிருந்தான்..
அதனைக் கேட்ட காஞ்சனாவிற்கோ கொஞ்சம் கொஞ்சமாக பொறுமை எருமையில் செல்ல ஆரம்பித்துவிட்டது.. பின்னே இருக்காதா அவன் கொடுத்த கோடிகளை செலவழித்து அல்லவா விட்டார்கள்.. பாதியில் இடம் வாங்கி போட்டு விட்டார்கள்.. இப்போது இவன் பணம் கேட்டால் எங்கிருந்து அவனுக்கு கொடுப்பது என்று நினைக்கவே அவளுக்கு கடுப்பாக இருக்க… மனதிற்குள்.. “இந்த ஓடுகாலியை எப்படியாவது கொண்டு வந்து இவங்கிட்ட தள்ளி விட்டுட்டா இந்த பிரச்சனைக்கெல்லாம் ஒரு முடிவு கிடைச்சிரும்…”. என்று அந்த பூப்போன்ற மென்மை மனம் கொண்ட பெண்ணவளை எண்ணி வஞ்சம் வளர்த்தவறோ..
“கண்டிப்பா நாங்க அவளை எப்படியாவது இழுத்துட்டு வந்து உங்க கைல ஒப்படைக்கிறோம் சார்..” என்று காஞ்சனா பேசி நிவாஸை சமாதானப்படுத்த… நிவாஸோ போனா போகிறது என்ற மாதிரி பார்த்தவன்… “சரி லாஸ்டா ஒரு சான்ஸ் தரேன்.. இதான் கடைசி.. இதுக்கு அப்புறம் உங்களால ஒன்னும் செய்ய முடிலைனா என் பணத்த கொடுத்துட்டு ஓடிடனும்…“என்று மிரட்டியவனோ… “இப்போ வந்த புது தகவல் என்னன்னா அவ இப்ப அந்த மார்ட்டினோட வீட்ல இல்ல… அந்த வீட்டை விட்டு தனியா ஒரு காபி ஷாப்ல வேலை பார்க்கிறதாவும், அங்கையே தான் தங்குறதாவும் என்னோட ஆள் சொன்னான்…”என்று கூற..
அதனை கேட்ட அந்த நால்வரின் முகமும் மலர்ந்து போனது… “அப்போ அவள தூக்குறது ஈஸில்ல..”என்று ராகவ் கூற…
அதற்கு மறுப்பாக தலையசைத்த நிவாஸோ… “அவ வேல பாக்குற இடம் அந்த மார்ட்டினோட ஏரியால இருக்கிற காபி ஷாப்ல தான்…” என்று ஒரு குண்டை தூக்கி போட…
அதில் புஸ் என்று ஆனாலும் காஞ்சனாவிருக்கும் ராகுவ்விற்கும் இது புது தகவலாக தான் இருந்தது… “அட இருந்தா என்ன சார்… அவள ஏன் இன்னும் அங்க விட்டு வச்சிருக்கீங்க… அந்த வீட்ல இருந்து வெளியே வரதுக்கு தானே நீங்க காத்துட்டு இருந்தீங்க…” என்றான் ராகவ்…
நிவாஸோ இல்லை என்று வேகமாக தலையாட்டியவன்… “என்ன இருந்தாலும் அந்த மார்ட்டின் என் மேல ஒரு கண்ணு வச்சிருப்பான்… இப்ப போய் என்னால அவன்கிட்ட மாட்டிக்க முடியாது.. நீங்களா போய் உங்க பொண்ண கூப்ட்டா கூட ஏதோ உங்களுக்கு அவ மேல உரிமை இருக்குன்னு அவன் விட்டாலும் விடலாம்ன்றதுனால தான் உங்கள இங்க வர வெச்சேன்… இதுல என்னால தலையிட முடியாது.. நீங்கதான் உங்க பொண்ண கூட்டிட்டு வந்து என்கிட்ட ஒப்படைக்கணும்..” என்று உறுதியாக கூற…
அவள் மார்ட்டினின் வீட்டில் இருந்து வெளியேறியதே மிகவும் நல்லது என்று நினைத்துக் கொண்ட காஞ்சனா… “எப்டியாச்சும் அவள உங்க கைல வந்து ஒப்படைக்கிறோம் சார்..” என்று வஞ்சனையுடன் தனது மகனை பார்க்க… அவனும் ஆம் என்று வெறித்தனமாக கண்ணை அசைத்தான்.
“எப்படியோ அவளை என் கைல கொண்டு வந்து ஒப்படைச்சீங்கன்னா அந்த பணத்த நீங்க தர வேண்டாம்… அப்டி அவள கொண்டு வர முடிலன்னா எனக்கு என் பணம் வந்தாகணும்…” என்று நிவாஸ் கூறியவனுக்கு முகம் பழி வெறியில் மின்னியது..
“மார்ட்டின் நீ என்னைய அடிச்சிட்டு அவள இழுத்துட்டு போன மாதிரி எப்படி அவள என் கைக்கு கொண்டு வந்து அவள படுத்துற பாட்ட பார்த்து நீயே அப்படியே ஆடி போயிடனும்… அத பாத்து நான் ரசிக்கனும்…” என்று கொடூரமாக நினைக்க அந்த மான்ஸ்டர்க்கும் இந்த மனித மிருகத்துக்கும் இடையில் சிக்கிக் கொண்டு பெண்ணவள் தான் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாள்…
மைத்ரேயி தனக்கு முன்னால் நிற்பவர்களை இமைக்காமல் வெறித்து கொண்டிருந்தாள்… அவளுக்கு முன்னாள் நின்று கொண்டிருந்த காஞ்சனாவும், ராகவ்வும் மாணிக்கவாசகமும் அவளை நெருப்பாக முறைத்துக் கொண்டிருக்க… முன்பிருந்த மைத்ரேயியாக இருந்திருந்தால் அவர்களை கண்டு பயந்து போய் இருப்பாள்.. ஆனால் இப்போது இருப்பவளோ கொஞ்ச நாள் மார்ட்டின் உடன் இருந்து விட்டு வந்திருந்தால் கொஞ்சம் தெம்பு இருந்தது… அது மட்டும் இல்லாமல் தனக்கு அருகிலேயே தான் மார்ட்டின் இருப்பது போல அவளுக்கு ஒரு நினைப்பு.. அதனால் அவர்கள் மூவரையும் கையை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள்…
“ம்ச் எதுக்காக இங்க வந்தீங்க..” என்று திமிராக கேட்க..
அதில் காஞ்சனாவிற்கு படக்கென்று கோவம் ஏறிவிட்டது… “ம்ச் என்ன பாத்து என்ன கேள்வி கேட்குற… என்னடி பயம் போயிடுச்சா..” என்று காஞ்சனா ஆரம்பிக்க…
மைத்ரேயியோ அவளை பார்த்து… “ம்ச் இப்போ என்ன உங்கள பாத்து தப்பாவா கேட்டேன்… எதுக்காக இங்க வந்தீங்கன்னு தானே கேட்டேன்… நீங்க இல்லாம நான் இங்க நிம்மதியா, சந்தோசமா, தனியா வாழறேன்.. அது உங்களுக்கு பிடிக்கலையா எதுக்காக திரும்பவும் என்ன பாக்க வந்து என்ன தொல்ல பண்றீங்க…” என்று அமைதியாக அதே நேரம் அழுத்தமாக கேட்டவளை கண்ட காஞ்சனாவிற்கே வித்தியாசமாக தான் தெரிந்தாள் மைத்து..
“எல்லாம் அந்த பய குடுத்த தைரியம் போல…”என்று நினைத்த காஞ்சனாவிற்கு இன்னும் அதிகமாக கோபம் கொப்பளித்தது… காஞ்சனா ஏதோ கோவமாக பேச வர… ராகவோ அவரது கையை பிடித்துக் கொண்டவன் கண்களாலையே அமைதி காக்க சொன்னவன்…
“அட அக்கா நாங்க பண்ணது தப்புதான்.. அதுக்காக இப்படி கோச்சிட்டு வந்து தனியா இருக்கலாமா.. ஊருக்கு போலாம் நாங்க முன்ன மாதிரி இல்ல.. இப்ப திருந்திட்டோம்..” என்று கூற…
மைத்து அவனை நக்கலாக பார்த்தவள் கேலியாக இதழ் வளைத்து சிரித்தவளோ… “நீங்க திருந்திட்டீங்க அத நான் நம்பனுமா…” என்று கேட்க..
இப்போது ராகுவ்விற்கும் கோபம் கொப்பளித்தது..ஆனால் அதை அடக்கியவன் எப்படியாவது இவளை நிவாஸிடம் சென்று சேர்த்து விட வேண்டும் அவன் தொல்லையிலிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று நினைத்தவாறு… “அக்கா உண்மையா தான் சொல்றேன்.. நாங்க திருந்திட்டோம்க்கா அந்த ஆள் கிட்ட பணத்தை எல்லாம் திரும்பி கொடுத்துட்டோம்.. நீ நம்ம ஊருக்கே வந்துரு.. அந்த இடத்தை கூட நாங்க இனிமே கேட்க மாட்டோம்.. உன் அம்மாவோட சமாதி இடத்தை நீயே வச்சுக்கோ ப்ளீஸ்… ஆனா தயவு செஞ்சு நம்ம ஊருக்கு வாயேன்..” என்று கூப்பிட.
அவளோ அவனைக் கண்டு இன்னும் கிண்டலாக சிரித்தவள்… “முன்னாடி இதே டயலாக்க பேசியிருந்தா நான் நம்பி இருப்பேனோ என்னமோ தெரியல.. ஆனா இப்போ நான் கண்டிப்பா உங்கள எல்லாம் நம்பவே மாட்டேன்.. இங்க இருந்து நகருங்க ப்ளீஸ்.. இங்க நல்லா நிம்மதியா வாழ்ந்துட்டு இருக்கேன்.. அத கெடுத்துடாதீங்க..”என்று கூறிய மைத்துவோ தன்னுடைய முதலாளியை பார்த்து கண்களால் மன்னிப்பு கேட்டவாறே கஷ்டமரை பார்க்க சொல்ல…
சட்டென்று அவள் கையை வேகமாக பிடித்துக் கொண்ட காஞ்சனாவோ.. “என்னடி ரொம்ப திமிரா பேசுற நானும் போன போது அமைதியா பேசுவோம் கைய நீட்ட வேண்டாம்னு பார்த்தா என்னமோ ஓவரா பேசுற…” என்றவளோ அவளது கையை இறுக்க பிடித்துக்கொள்ள… மைத்ரேயியோ தன் கையை அவரிடமிருந்து பிரிக்க முயன்றவாறே…
“ம்ச் என்ன செய்றீங்க கையை விடுங்க… சித்தி எதுக்காக இப்படி என்னை போட்டு டார்ச்சர் பண்றீங்க… கையை விடுங்கன்னு சொன்னேன்…“என்று கத்தியவளை கொஞ்சமும் கண்டுக்கொள்ளாத காஞ்சனா தன் பிடியை மட்டும் தளர்த்தவில்லை..
மைத்துவோ கடுப்பாகியவள் “ப்பா…இதுக்கும் ஒன்னும் கேட்க மாட்டீங்களாப்பா நீங்க உண்மைக்குமே என்ன பெத்தவர் தானா.. இல்ல என்னை தத்தெடுத்தீங்களா..” என்று கோவமாக கேட்ட பெண்ணவளை பார்த்து மணிக்கவாசகமோ தலையை குனிந்து கொண்டு நின்றிருந்தார்..
அந்த நிலையில் அவரை பார்த்தவளுக்கோ வெறுத்தே போனது… “ச்ச நீங்கலெல்லாம் ஒரு அப்பாவா உங்களை போய் கடைசி நேரம் வரைக்கும் என்னை காப்பாத்துவீங்கனு நினைச்சுட்டு இருக்கேன் பாருங்க.. என் புத்தியை செருப்பால அடிக்கணும்..” என்று கத்திய மைத்துவோ..
“அய்யோ கைய விடுங்க…விடுங்க என் கைய விடுங்கன்னு சொன்னேன்… இப்போ விடலைன்னா உங்க மேல போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணுவேன்..” என்று மைத்து கத்திக் கொண்டு இருக்க.. காஞ்சனாவோ பளார் என்று அவள் கன்னத்தில் ஓங்கி அறைய… அதை பார்த்து அந்த கடையில் இருக்கும் அனைவரும் ஸ்தம்பித்து போய் இருந்தனர்..
பகல் நேரத்தில் அதுவும் நிறைய கஸ்டமர்கள் இருக்கும் நேரத்தில் தான் இவர்கள் மூவரும் வந்திருக்க.. அந்த கடையின் முதளாலியோ ஏதோ மைத்ரேயியின் உறவினர்கள் ஐந்து நிமிடம் பேசிவிட்டு வந்துவிடுவாள் என்று நினைக்க ஆனால் இப்போது நடந்ததை பார்த்து அவருமே ஸ்தம்பித்து போனார்…
மைத்ரேயி அறை வாங்கியதில் அதிர்ந்த முதலாளியும் வேக வேகமாக அவர்கள் அருகில் வந்து நின்று ஹிந்தியில் ஏதோ பேசிக் கொண்டிருக்க… மைத்துவோ தன் கையை அவர்களிடமிருந்து பிரிப்பதிலையே குறியாக இருந்தாள்…
ராகவ்வோ இவளுக்கு இதான் சரி என்றவாறே ஹிந்தியில் பேசும் முதலாளியிடம் ஆங்கிலத்தில் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்துவிட்டான்… “அவங்க என் சிஸ்டர் தான்.. நான் இங்கிருந்து அவங்களை கூட்டிட்டு போறேன்… இது எங்க பேமிலி மேட்டர்…” என்று ராகவ் கூறிக் கொண்டே இருக்க… அதற்கு மேல் அந்த கடையின் முதலாளியோ மைத்ரேயியை திரும்பி பார்க்க அவளோ இல்லை என்று தலையாட்டியவாறே காஞ்சனாவிடம் இருந்து தன்னுடைய கையை விலக்க போராடினாள்..
சட்டென்று அந்த கடையின் முதலாளியோ எங்கோ விலகி சென்றுவிட.. மைத்துவிற்கு ஒன்றுமே புரியவில்லை… “இப்ப விடுறீங்களா இல்லையா…” என்று மறுபடியும் கத்த… ராகவோ எரிச்சலில் அவள் பூப்போன்ற கன்னத்திலையே மாறி மாறி அறைய ஆரம்பித்து விட்டான்…
“ம்ச் என்னடி ஓவரா பேசிட்டு இருக்க… நானும் பார்த்துகிட்டே இருக்கேன் ஓவரா பேசிட்டு இருக்க… உன்னால அந்த கிழம் எங்களோட கழுத்தை புடிக்கிறான்… உன்னை கொண்டு போய் அவன் கையில ஒப்படைச்சாதான் எங்களுக்கு நிம்மதியே…” என்று அவளின் பூப்போன்ற கையை பிடித்து அந்த கடைக்கு வெளியில் தரத்தரவென்று இழுத்து வர…
பெண்ணவளோ அவர்களிடம் அவ்வளவு போராடிக் கொண்டிருந்தாள்… “அய்யோ என்னை விடுடா ராகவ்… ஏன்டா என்ன நிம்மதியாவே வாழ விடமாட்றிங்க… எதுக்குடா இப்படி எல்லாம் அநியாயம் பண்றீங்க… எதுக்குடா என் வாழ்க்கை இப்படி பாழாக்க நினைக்கிறீங்க…” என்று கதறிக் கொண்டே இருக்க…
அதற்கு மேலும் அவளுக்கு அடி விழுந்துக் கொண்டே இருந்தது.. அவள் கன்னம் சிவந்து போக… வாயிலோ ரத்தம் வர ஆரம்பிக்க.. பத்தாதற்கு காஞ்சனா வேறு அவள் முதுகிலேயே அடி வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தாள்…
பெண்ணவளோ அடி தாங்க முடியாதவள்… “ஆஆ விடுங்க சித்தி விடுங்க எதுக்காக இப்படி என்னை போட்டு அடிக்கிறீங்க.. என்னை இப்படியே விட்டுருங்க நான் எங்கேயாச்சும் போய்டுறேன்.. உங்க கண்ணு முன்னாடி வரக்கூடாமாட்டேன்… இதுக்கு தான் நான் ஊருக்கு கூட வரல… எதுக்காக இப்படி என்னை டார்ச்சர் பண்றீங்க…” என்று கதறியவாறு இருத்தாள்..
மாணிக்கவாசகமோ அனைத்தையும் பார்த்தவர் அவர்களை பின் தொடர்ந்து சென்று கொண்டே இருந்தார். “அப்பா ப்ளீஸ்ப்பா நீங்களாவது சொல்லுங்கப்பா நான் உங்க வாழ்க்கையில் இனிமே வரவே மாட்டேன்… அவன் என்னை எப்படி எல்லாம் டார்ச்சர் பண்ணான் தெரியுமா.. அப்பா ப்ளீஸ் பா என்ன விட்ருங்கப்பா…” என்று மாணிக்கவாசகத்திடம் கெஞ்ச அவரோ தன்னுடைய மகனுக்கும், மனைவிக்கும் எதிர்த்து எதுவுமே பேசாமல் பின்னாலே சென்று கொண்டிருந்தார்..
அதற்கு ஏற்ற படி அவளை சரமாரியாக அடித்தவாறே காரில் ஏற்றுக் கொண்டிருந்தார்கள்… இதனை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு ஆளோ சட்டென்று தன்னுடைய போனை எடுத்து மார்ட்டினுக்கு தகவல் சொல்ல.. அவனோ அனல் தெறிக்க பறந்து வந்துவிட்டான் தன்னவளை காக்க…
(கேப்பச்சினோ…)