மான்ஸ்டர்-26

5
(16)

அத்தியாயம்-26

மார்ட்டினோ தான் அழைத்தும் வரமாட்டேன் என்றவளை பார்த்து கடுப்பானவன் கண்டிப்பாக இவள் இப்படி வெளியில் சுற்றினால் அவளுக்கு ஆபத்துதான் வரும் என்று நினைத்தவன் அவளை அங்கு பார்த்த நாளிலிருந்து அவளுக்கு ஒரு செக்யூரிட்டி கார்டு ஒருவனை காவலுக்கு நியமித்திருந்தான். அவன் தான் இப்போது மார்ட்டினுக்கு அழைத்து இங்கு நடப்பது அனைத்தையும் கூறி விட அங்கு மார்ட்டினோ உடல் அனல் தகிக்க பறந்துவந்தான்…

இந்த நிவாஸ் அடங்கவே மாட்டானா.. என்கிட்ட நேரா மோத பயந்துக்கிட்டு என்னோட கேப்பச்சினோக்கிட்ட போயிருக்கான்அது அவனுக்கே ஆபத்தா போகும்னு பாவம் அவனுக்கு தெரில போல…”என்று வன்மமாக நினைத்தவாறு சட்டென்று தன்னுடைய காரியனை எடுத்து காபி ஷாப் நோக்கி பறந்து வந்தான்…

இங்கோ மைத்ரேயியை அடித்து காரில் ஏற்ற முயன்று கொண்டு இருக்க… ஆஆ அய்யோ ப்ளீஸ் என்னை விடுங்க… ராகவ் ராகவ் உனக்கும் எனக்கும் ஒரே வயசு தானே.. அப்புறம் எப்படி உனக்கு என்னோட வாழ்க்கையை வீணடிக்க மனசு வருது… நாம ரெண்டு பேரும் அக்கா தம்பி தானடாஏன்டா இப்படி பண்ற..” என்று அவள் அவனிடம் நியாயம் கேட்டுக் கொண்டே இருக்க…

அவனுக்கோ இப்போது எப்படியாவது நிவாஸிடம் இருந்து தப்பித்து அவன் கொடுத்த பணத்தினை உல்லாசமாக அனுபவிக்க வேண்டும் என்ற வெறியே இருந்தது.. கை நிறைய காசினை கொடுத்துவிட்டு இப்போது அதனை கொடு என்று நிவாஸ் கேட்டால் அவனுக்கும் வெறியேறத்தானே செய்யும்அதனால் தான் அவளை அறக்க பறக்க நிவாஸிடம் தள்ள காரில் ஏற்றிக் கொண்டிருந்தான்.

காஞ்சனாவும் அவளை காரில் ஏற்ற எவ்வளவோ பிரதானம் செய்து கொண்டிருந்தாள்… “உனக்கு என்னடி அவ்வளவு திமிரு ஓடிகாளிஏறுடிஎன்று அவளை கத்திக்கொண்டு ஏற்றிக் கொண்டிருந்தாள்..

மைத்ரேயி அனைவரிடமும் கதறியவாறு இருந்தவளை காரினுள்ளே கிட்டத்தட்ட தள்ளி விட்டார்கள் மூவரும்காரில் பின் சீட்டில் குதித்து படுத்தவளும் மறுபடியும் காரில் இருந்து எகிறிக் குதிக்க முயல.. காஞ்சனாவும் அதுக்கு விடாமல் அவளை தள்ளிவிட்டு கார்ல ஏறுடிஎன்றாள் அதட்டலாக…

அப்போது பார்த்து காஞ்சனாவை யாரோ வெறிகொண்டு பிடித்து இழுத்து கிழே தள்ளிவிட… அதில் காஞ்சனா அம்மாமா….” என்று கத்தியவாறே பின்னால் பக்கம் போய் விழ…ஒரு நிமிடம் அந்த இடமே அரண்டு போய்விட்டதுமைத்துவோ உதடு கிழிந்து, கையெல்லாம் சிவந்து போய், முகம் எல்லாம் சிவந்து போய் கதறளுடன் நிமிர்ந்து பார்க்க.. அங்கோ மார்ட்டின் அவளை தான் பார்த்தவாறே நின்று இருந்தான்… அவன் பார்வை அவள் முகம், உடல் என்று ஆராய… அவளுக்கோ அழுகையில் உதடு பிதுங்கியது..

தன்னுடைய கேப்பச்சினோவை காப்பாற்றுவதற்காக பறந்து வந்திருந்தான்… “மான்ஸ்…” என்று அவள் தேம்பியவாறே இழுக்கசட்டென்று அவளை தன்னுடைய கைக்கு கொண்டு வந்தவனோ திரும்பி நின்று ராகவ்வையும்,அவனது அன்னையையும் மாணிக்கவாசகத்தையும், முறைத்தவாறு இருக்க ராகவ்வோ பயந்தவாறே காஞ்சனாவை தூக்கி விட்டான்…

ராகவ்டேய் அவனை விடாதடா அவனை எப்படியாவது அடிச்சு போட்டு அவள இழுத்துட்டு வாடா…” என்று காஞ்சனாவோ திமிருடன் கத்த…

அதனை கேட்ட ராகவ்வும் தன்னுடைய பயத்தை மறைத்தவாறு வேகமாக வந்து மார்ட்டினை அடிக்க முயல…. அவனோ ஒரு கையில் ராகவ்வை அசால்ட்டாக தடுத்தவன்… தன் கையில் துவண்ட பெண்ணவளை… பேபி ஒரு நிமிஷம் இரு பேபி…”என்று அவளை இறக்கிவிட்டு விலக்கி நிறுத்தியவனோ ராகவ்வை போட்டு சடார் சடார் என்று அறைய ஆரம்பித்து விட்டான்

அவன் கண்களோ மைத்ரேயியின் முகத்தை தான் ஆராய்ந்ததுஅவள் கன்னத்தில் சரமாரியாக அடித்ததற்கான அடையாளமும், அது போக வாயில் உதடு கிழிந்து வந்த ரத்தம் அனைத்தையும் பார்த்த வேகத்திற்கு அவன் உடலே பத்திக் கொண்டு எரிந்தது… கண்டிப்பாக ராகவ் தான் இதனை செய்திருப்பான் என்று கணக்கு போட்டவன் அவனை வெளுத்து எடுத்து விட்டான்…

ஆஅ ஐயோ என் புள்ள என் புள்ளையை அடிக்கிறானே.. யாராவது காப்பாத்துங்க..” என்று காஞ்சனா கத்தியவாறே மார்ட்டினின் அருகில் ஓடமார்ட்டினோ காஞ்சனாவை ஒரே தள்ளாக தள்ளிவிட மறுபடியும் காஞ்சனா போய் ரோட்டில் விழுந்து விட்டார்.

மைத்ரேயிக்கு இதெல்லாம் பார்த்தாலும் அவளால் இதையெல்லாம் தடுக்கவே முடியவில்லைஏற்கனவே அவள் இரண்டு நாட்களாக சரியான காய்ச்சலில் இருக்க இப்போது அதனை அதிகப்படுத்துவது போல உடலெல்லாம் அவளுக்கு வலித்தது;… அவர்களிடம் வாங்கிய அடி வேறு மயக்கம் வருவது போல கண்ணை மறைத்தது.. அப்படியே கண்ணில் இருந்து தாரைதாரையாக கண்ணீர் வழிய மார்ட்டினையே பார்த்தவாறு இருந்தவளுக்கு ஒரு நிமிடம் என்ன ஆனது என்றே தெரியவில்லைஅனைத்தும் மங்கலாக தெரிய தலையை உலுக்கியவளோ சட்டென்று மார்ட்டினை நோக்கி கையை நீட்டியவாறு மான்ஸ்….”என்றவள் வேரறுத்த கோடியாக கீழே விழுந்தாள்…

அவனோ ராகவ்வை சரமாரியாக அடித்தவன் மாணிக்கவாசகம் பம்மிக்கொண்டு நிற்பதை ஓர கண்ணால் பார்த்து அவரை கையை காட்டி மிரட்டியவாறு இருந்தவனுக்கு அப்போது தான் தன்னவளின் வலுவிழந்த குரல் கேட்க… திரும்பிப் பார்த்தவன் வேறொருந்த கொடியாக விழும் பெண்ணை ஓடி சென்று தாங்கிக் கொண்டான்….

ஹேய் கேப்பச்சினோ… உனக்கு ஒன்னுமில்லடி…”என்று அவளை அப்படியே தன் கையில் பூமாலையாக தாங்கிக்கொண்டவனுக்கோ அவளை இந்த நிலையில் பார்த்து கண்களும் கசிந்தது… நல்ல உப்பிய கன்னமாக இருப்பவளை இன்று காய்ச்சி போகும் அளவிற்கு செய்தவர்களை சுட்டுக்கொல்ல தோன்றியது அவனுக்கு… ஹேய் பேபி….”என்று அவள் கன்னத்தை பிடித்து தட்டிக் கொண்டே இருக்கஅவளோ கண் விழிப்பதாகவே இல்லை.. அவள் மயங்கி விழுந்துவிட்டாள் என்பதை உணர்ந்து கொண்டவனோ சட்டென்று அவளை தூக்கி தன் காரில் போட்டுக் கொண்டவன் திரும்பி ராகவ் மற்றும் காஞ்சனாவை பார்த்து…

மரியாதையா இந்த ஊரை விட்டு ஓடி போய்டுங்கஇல்ல உங்களை சும்மா விடமாட்டேன்..” என்று கர்ஜனையாக கர்ஜிக்க… உடல் முழுவதும் அடிவாங்கி வலியில் முணகிக் கொண்டே படுத்திருந்த ராகவ்விற்கு அவன் கத்தலில் உடல் சில்லிட்டு போனதுகாஞ்சனா எழுந்திருக்க முடியாமல் எழுந்து வந்து தன் மகனை தூக்க.. மாணிக்கவாசகமோ அப்படியே சிலை போல நின்றார்..

மூவரும் மார்ட்டினை பார்த்து பம்மிக் கொண்டிருந்தனர்பின்பு யாரிடம் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு அளவு இல்லையாமும்பையையே ஆட்டுக் கொண்டிருக்கும் அவனை போய் சாதாரண ஊரில் இருந்து வந்த அவர்கள் தொட்டு விடுவார்களா என்ன அல்லது தொட்டு விடுவதற்கு அவர்கள் என்ன அவனின் கேப்பச்சினோவா… 

மார்ட்டின் தன் கையை பிசைந்தவாறே அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தான்.. அவன் கண்களுக்கு தன் கையில் வேறெந்த கொடியாக மயக்கமுற்று படுத்திருந்த தன்னவள்தான் ஞாபகம் வந்திருந்ததுஅந்நேரத்திற்கு அவனுக்கு ஒன்றுமே புரியவில்லைஉடல் வெடவெடுத்து போய் இருந்தது.. இதுவரை அவன் யாருக்காகவும் இப்படி துடித்ததில்லை.. கடைசியாக அவன் தந்தையை இழக்கும்போது அவரை கடைசியாக பார்த்த போது மட்டும் அப்படி துடித்திருந்தவனுக்கு பலவருடம் கழித்து இன்றுதான் இதுபோல உணர்வு குவிந்து கொண்டிருந்தது..

யாரோ ஒரு மாதமாக இரண்டு மாதமாக பழக்கமான ஒரு பெண்ணிற்காக அவன் பதறுவதை நினைக்க நினைக்க சிரிப்பாக தான் வந்ததுஆனாலும் மைத்து அவன் மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளாள்… இல்லை இல்லை அவனை மாற்றி இருந்தாள்என்பது அவனால் மறுக்க முடியாத உண்மையாகிப் போனது.. தனக்கு தொல்லையாக இருக்கக் கூடாது என்று நினைத்துதான் அவளை வீட்டை விட்டு வெளியில் துரத்தி விட்டான்ஆனால் அப்படி இருக்கும் போது வெளியில் சென்றுமே அவளின் பாதிப்பில் இருந்து இவனால் வெளிவரவே முடியவில்லை என்பது அப்பட்டமான உண்மைதான்.. இப்போது தான் அவனுக்கு புரிந்தது அவளின் மீது தான் கொண்ட காதல்

மைத்துவை மருத்துவமனைக்கு எல்லாம் கொண்டு செல்லாமல் வீட்டிற்கு தூக்கி வந்தவன்… உடனே தனக்கு தெரிந்த மிகப் பெரிய ஹாஸ்பிடலிருந்து ஒரு பெண் மருத்துவரை வரவைத்து அவளை பரிசோதனை செய்ய சொல்லிவிட்டு.. இவன் வெளியில் காத்திருந்தான்.. மைத்துவை இந்நிலைக்கு ஆளாக்கியவர்களை இனி என்ன செய்வது என்று யோசனையிலையே மார்ட்டின் நின்று கொண்டிருக்கஅப்போதுதான் அறையில் இருந்து மருத்துவர் வெளியில் வந்தார்.

மார்ட்டின் பதட்டத்துடன் வந்தவரை பார்த்தவன்.. “டாக்டர் அவ ஓகே தானே…” என்று கேள்வியாக கேட்க..

யா ஷீ இஸ் ஆல்ரைட்.. ஒன்னும் பிரச்சனை இல்ல உடம்புல கூட கொஞ்சம் அதிக காயங்கள் இருக்கு அவ்வளவுதான் மத்தபடி ஷீ இஸ் ஓகேஇப்ப கொஞ்சம் உங்க அன்கான்சியஸ்ஸா இருக்காங்க.. அவங்க கான்ஸியஸுக்கு வர ஒரு ரெண்டு மணி நேரமாவது ஆகும்நானும் கொஞ்சம் டேப்ளட்ஸ் எல்லாம் கொடுத்து இருக்கேன்… ஆயின்மென்ட் தரேன்கொஞ்சம் போட்டு விடுங்கஒன்னும் பயப்படறதுக்கில்ல…” என்றவர் அங்கிருந்து சென்றுவிட்டார்…

மார்ட்டின் உடனே தவிப்பாக தன்னவளை காண உள்ளே ஓடிவிட… அந்த வீட்டின் வேலை ஆட்களோ மார்ட்டின் இப்படி ஒருத்திக்காக உருகி கொண்டு நிற்பதை பார்த்தவர்களுக்கு ஆச்சரியமாக தான் இருந்ததுஆனால் எங்கே தாங்கள் பார்ப்பது அவன் கண்ணில் பட்டுவிடுமோ என்று பயந்தவர்கள் அங்குமிங்கும் ஓடியவாறே இருக்க..

அவனோ அதை எதைப் பற்றியும் கண்டு கொள்வதாகவே இல்லை… அவன் கண்கள் முழுவதும் அவனவள் மீது மட்டுமே இருந்தது.. அவள் அருகில் சென்று உட்கார்ந்தவனோ அவளது பூமுகத்தில் விழுந்த அவளது கூந்தலை காதில் ஒதுக்கியவாறு அவளையே ஊன்றி கவனித்துக் கொண்டிருக்கஅவள் கன்னத்தில் அடித்த அடியும், உதட்டின் ஓரத்தில் காய்ந்து போய் இருந்த குருதியும் அவனுக்கு ஒரு வித வேதனையைத்தான் உருவாக்கியதுஎதற்காக தனக்கு இந்த வேதனை உருவாகிறது என்று யோசனையை தாண்டி இது காதல் என்ற நிலைக்கு அவன் வந்து விட்டான்.

இப்போது அவன் மனதில் இருப்பது முழுதும் அவள் மட்டுமே.. தனக்குள்ளே நிறைய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் தான் சுற்றிக் கொண்டிருக்கிறான்.. ஆனால் இப்போது அவனுக்கு தேவைப்படுவது எல்லாம் அவள் மட்டுமேஅவள் இப்போது சரியானால் அவனுக்கு போதும் என்ற நிலைக்கு தான் வந்திருந்தான்அவளையே ஆழ்ந்த பார்வை பார்த்தவாறே இருந்தவன் தன் கையில் இருக்கும் ஆயின்மென்ட் டியூப்பில் இருந்து மருந்தை எடுத்து அவள் கன்னத்தில் இருக்கும் காயத்திற்கும் உதட்டில் இருக்கும் காயத்திற்கும் மருந்து போட.. அவனது முரட்டு கைகள் அவளது மென்மையான கன்னத்திலும்,வரி வரியான உதட்டிலும் படுவதை பார்த்து அவனுக்கு குறுகுறுப்பு தாங்கவே முடியவில்லை…

எவ்ளோ சாப்ட்… இதுல போய் அடிச்சிட்டானே…”என்று ராகவை கொல்லும் அளவிற்கு வெறி யேற… அதே நேரம் அதன் மென்மை அவனை பித்தாக்கியது… ஆஆ ஐயோ படுத்துறாளே.. இந்த நிலைமையிலே கொண்டு வரவா ஆசப்பட்டா.. அன்னைக்கே கூப்ட்டேன் என்னோட வந்துடுனு சொன்னேன்கேட்டாளா இவ.. சதிக்காரி…” என்று புலம்பியவனுக்கு இன்னும் அவளை பற்றி ஒன்றுமே தெரியாது என்பதுதான் உண்மை…

ம்ச் கேப்பச்சினோ ஐ அம் ரியலி சாரிஇந்த வீட்டை விட்டு வெளியில உன்ன அனுப்பிருக்கவே கூடாது…” என்று மான சீகமாக அவளிடம் மன்னிப்பு கேட்டவனின் முகம் அடுத்த நிமிடம் பழிவெறியில் மினுமினுக்க… கண்டிப்பா இதுக்கு பின்னாடி அந்த நிவாஸ் இருப்பான்னு எனக்கு தெரியும்அவனை நான் சும்மா விடமாட்டேன்…” என்று மார்ட்டின் தனக்குள்ளையே கர்ஜித்தவாறு அவளையே பார்த்தவாறு இருக்க…. அவளோ அதனை எல்லாம் கண்டுகொள்ளாமல் ஏதோ பாதுகாப்பான இடத்தில் இருப்பது போல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்…

ஆம் பாதுகாப்பான இடத்தில் தானே அவளும் இருக்கின்றாள்மார்ட்டினை மனதார அவள் காதலிக்கிறாள்.. எப்போது என்றால் அவனைப் பார்த்த வேகத்தில் இருந்து இந்த காதலா என்று கேட்டால் தெரியாது என்றுதான் சொல்லுவாள்ஆனால் இந்த வீட்டினை விட்டு அவள் செல்லும்போது அவள் மனதில் முழுவதும் மார்ட்டினே நிறைந்திருந்தான் என்பது தான் உண்மை… மார்ட்டின் எப்படியாக இருந்தாலும் யாராக இருந்தாலும் அவளுக்கு கவலை இல்லைஉண்மையாக அவனை காதலித்து கொண்டு தான் இருக்கிறாள்

மார்ட்டின் அப்படியே அவள் அருகிலேயே உட்கார்ந்து அப்படியே பின்னால் சாய்ந்து கொண்டு அப்படியே உறக்கத்திற்கு சொல்லமைத்துவோ உறக்கத்திலேயே புலம்ப ஆரம்பித்தாள்… ப்ளீஸ் சித்தி என்னை அந்த கிழவனுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்திடாதீங்க சித்திசித்தி ப்ளீஸ் சித்தி ப்ளீஸ்…” என்று அவள் கதறியவாறு இருக்கஅதனை எல்லாம் உறக்கத்தில் இருந்த மார்ட்டின் காதில் நன்றாகவே கேட்டது.

அதில் பதறி எழுந்தவனோ அவளை ஊன்றி கவனிக்க.. “ப்ளீஸ் மான்ஸ்என்னை அவங்களோட அனுப்பிடாதீங்க மான்ஸ்… அவங்க நல்லவங்க இல்லப்ளீஸ் அனுப்பிடாதீங்க…” என்று உறக்கத்திலேயே அழுதவாறு கதறிக் கொண்டே இருக்க…

அதனை கண்டு துடித்து போனவனோ… ஹேய் கேப்பச்சினோ… இட்ஸ் ஓகே நான் யார் கூடவும் உன்ன அனுப்பலநீ என்கூட தான் இருக்கநான் தான் உன்னோட  தாஸ் நான் தான் உன்னோட மான்ஸ்… நீ என்கிட்ட சேஃபா வந்துட்டடா…” என்று அவளது தலையை பரிவாக கோதி விட்டவன்.. அவளை அப்படியே தூக்கி தன் நெஞ்சில் போட்டுக்கொள்ளஅது கிடைத்த நிம்மதியிலையே மறுபடியும் தன்னுடைய தூக்கத்தை தொடர்ந்து கொண்டிருந்தாள்அவளது இந்த செயலை பார்த்த மார்ட்டினோ அந்நேரத்திலும் உதட்டில் தானாக ஒரு சிரிப்பு வந்து மோதியது…

யூ சில்லி கேர்ள்…என்று அவளது கன்னத்தை வலிக்காதவாறு வருடியவனோ அந்த மூவரையும் கொல்லும் வெறியை மனதில் குறித்துக்கொண்டான்…

(கேப்பச்சினோ…)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!