முரடனின் மான்விழி

5
(2)

காதம்பரி பாட்டி சொன்னது போல் அடுத்த அரை மணி நேரத்தில் எல்லோரும் கிளம்பி கொண்டிருக்க…  இங்கு விஹிதாவும் காதம்பரி பாட்டியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்…

 

“   பியூட்டி ப்ளீஸ் எனக்காக என் கூட வாங்க , நீ வராம இருந்தா எனக்கு ஒரு மாதிரி சோகமா இருக்கும்… அப்படிங்கிறதை விட எங்க அம்மா என்னை திட்டிக்கொண்டே இருக்கும் ….நீ தான் எனக்கு சப்போர்ட் பண்ணுவ அதனால என் கூட வாங்க பாட்டி”  என்று விகிதா சொல்லிக் கொண்டிருக்க… 

 

 “ இல்லம்மா பேத்தி நான் இங்கு இருந்த தான்  எல்லாமே பார்த்துக்க முடியும் ..,  எல்லாத்தையும் வேலை வாங்கிக்குவேன்… இதே   அங்க வந்துட்ட… எப்புடித்த பேத்தி முடியும் ..,  என்ன எனக்கு தூக்கம் வராது.. இங்க  இருக்கிற இடத்தை விட்டு இன்னொரு இடத்துக்கு போன எனக்கு தூக்கம் வராது பேத்தி”  … அதனாலதான்  பாட்டி சொல்லிக் கொண்டிருக்க… 

 

  ஆனால் விதுரன் எதுவும் பேசாமல் அமைதியாகவே டிரைவர் சீட்டில் உட்கார்ந்து இருந்தான் … அவன் பாட்டியை ஏறெடுத்த கூட பார்க்கவில்லை…  ஏனோ அவனுக்கு கோபம்… அவன் அங்கு போக மாட்டேன் …என்று சொல்லியும் வம்படியாக அவனை அனுப்பி வைத்தது… ஏனோ பாட்டிதான் அதனால என்னவோ கோபம் அவனுக்கு அளவுக்கு அதிகமாகவே வந்தது… 

 

 எல்லோரும் அந்த வீட்டை விட்டு கிளம்ப … இந்த முறை விதுரன் கார் ஓட்டிக் கொண்டிருக்க பக்கத்தில் விகிதா இருக்க..,  பின்னால் ராஜகுமார்  ராகினியும் உட்கார்ந்திருக்க… மரகதத்தையும் ராகினி கூப்பிட்டால் ….ஆனால் மரகதமோ  பாட்டி கூட இருக்கிறேன்… என்று வர மறுத்துவிட்டால் அவர்களுடன்… 

 

 அந்த காரின் பயணம் அமைதியாக போய்க்கொண்டிருக்க …அப்படி அமைதியாக போய்க்கொண்டிருந்தால் அது நல்லது பிள்ளையை இருக்காது  என்று சொல்லும் விதமாக விகிதாவின் போன்  அடித்துக் கொண்டிருந்தது விடாமல்… 

 

 தூக்கத்தில் இருந்த விகிதாவிற்கு எதுவும் தெரியாமல் இருக்க …, ஆனால் பக்கத்தில் கார் ஓட்டிக் கொண்டிருக்கும் விதுரனுக்கும் அவள் போன் வந்து கொண்டே இருப்பது … சற்று கடுப்பாக இருக்க போனை லைட்டாக பார்த்தவனின் கண்கள் சுருங்கியது .. 

 

 என்ன இது ஒரு பையன் போட்டோ வருது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன்…  அவளை சிறிதாக  கூப்பிட்டு பார்க்க…அனால் அவளிடம் எந்த அசைவும் இல்லாமல் தூங்கி கொண்டிருக்க ,பட்டும் படாமல் அவளை சிறிது தட்டி எழுப்பினான் …  

 

 “ஹான்”   என்று தூக்கத்திலிருந்து சற்று அதிர்ந்து விழுந்து.. பக்கத்தில்  அவனைப் பார்த்து ஒன்றுமே புரியாமல் திருவென்று விழித்துக் கொண்டே இருக்க…  

 

அவள் துக்கத்தில் இருந்து விழித்து பார்ப்பத்தை .., பார்த்தவுடன்  அவள் தன்னைப் பார்த்து விழிப்பதை பார்த்த விதுரனுக்கு சிரிப்பு வந்தாலும் மறுநிமிடம் அவளின் போனில் ஒரு ஆண்மகனின் போட்டோ வந்திருப்பதும் அவன் கால் செய்திருப்பதும் நினைவு வர .., முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு…  “ போன் வருது உனக்கு…” என்று அவன் சொல்ல … அதே நேரம் மறுபடியும் அந்த நம்பரில் இருந்து போன் வர … அதை பார்த்தவளின் உதடு புன்னகை செய்ய…கண்களோ மின்ன ….  வேகமாக அந்த போனை அட்டென்ட் செய்தால் விகிதா… 

 

போனை  காதில் வைத்தவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க …, மறுமுனை என்ன பேசப்பட்டதோ … அதற்கு வேகமாக விகிதாவோ…, 

 

“ போடா … என்கூட நீ பேசாத , மொத்தமா மறச்சிட்டல்ல…  நீ லவ் பண்ற விஷயத்தையே மறைச்சிடல … நீ மட்டும் லவ் பண்றது எனக்கு முன்னாடியே தெரிந்திருந்தால் நான் ஏன் இந்த மாதிரி எல்லாம் செய்திருக்க போற..,” அவள் பேச.. 

 

 “ இவ என்ன சொல்லுறா..?  நம்மள மாதிரியே இவளுக்கும் ஒரு லவ் இருந்து இருக்குமோ…!!  ஒருவேளை அவன் தான் கால் பண்றானோ…,  ஆனா என்கிட்ட சைட்டு மட்டும் தான் அடிப்பேன் சொன்னாள்ளே ..,  லவ்வ பத்தி எதுவும் சொல்லல” என்று அவனின் மனம் அவள் பேசியதை வைத்து நினைத்துக் கொண்டிருக்க… 

 

 “ டேய் நீ என்ன வேணா சொல்லிக்கோ…  ஆனா நீ பண்ணது தப்புதான் உன்னோட லவ்வர் என்கிட்ட மறைச்சது தப்புதான் … அதனால உனக்கு தான் லாஸ்…  லேட்டா சொல்லி ஒரு பிரயோசனமும் கிடையாது…  நீ என்ன வேணா சொல்லிக்கோ, நீ பண்றது தப்பு’ என்று அவள் மறுபடியும் பேசிக் கொண்டிருக்க… 

 

  அவளைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தவன்,  மறுபடியும் அவள் பேசுவதை காது கொடுத்து கேட்டுக் கொண்டிருக்க…  மறுபடியும் அவள் காதல் விஷயத்தை பற்றி பேசவும் அவனுக்கு கோபம் எங்கெங்கோ வந்தது… 

 

“ உண்மையாவே இவ லவ் பண்றாள… ஏன் என்கிட்ட மறைக்கணும்..???  என்கிட்ட எவ்வளவோ சொன்னாலே … இவளோட காதல் விஷயத்தை மட்டும் சொல்லவே இல்ல” என்று அவன் மனதுக்குள் நினைத்துக் கொண்டே காரை ஓட்டிக் கொண்டிருக்க … 

 

 “ அது எப்படி உன்கிட்ட சொல்லுவா ..? அவ பேசுறதுக்கு எங்கேயாவது நீ டைம் கொடுத்தியா , அதுவும் இல்லாம உங்களுடைய கல்யாணம் ஒண்ணும்  பெரியவங்க பார்த்து நிச்சயதார்த்தம் எல்லாம் முடிஞ்சு , மூணு மாசம் கழிச்சு  மண்டபம் பார்த்து தாலி கட்டல..,  ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி தான் அவளுக்கே அவ கல்யாணம் பொண்ணு அப்படிங்கறது தெரியும் … உனக்கும் அப்படித்தான் கல்யாணம் பண்ற டயத்துல தான் அந்த பொண்ணு போக போய்  தான் இவல் தான்  கல்யாண பொண்ணு..  அப்படிங்கறதே தெரியும்… அதனால அவளுக்கு இதுக்கு முன்னாடி லவ் இருந்து இருக்கலாம்”   என்று அவனின் மனசாட்சி சொல்ல… 

 

‘ இதெல்லாம் ரொம்ப சீட்டிங்…  இல்லை .. இல்லை என்னால முடியவே முடியாது..  நீ எப்படி சமாதானப்படுத்தினாலும் என்னால முடியாது … நீ ரொம்ப லேட்டா உன்னோட லவர் சொல்லிட்ட… ,  அதனால கண்டிப்பா நான் இதை அக்செப்ட் பண்ணிக்கவே மாட்டேன்”  என்று அவள் பேசிக் கொண்டிருக்க… 

 

 “அவனுக்கு கோபம் எல்லை மீறி வர .. ஒரு பையனிடம் அவள் பேசுவதை கேட்டு…  என்ன பண்ணுவது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தவன் திடீரென்று சடன் பிரேக் போட..  அவளும் டேஷ் போர்டில் முன்னாள் முட்டிக்கொண்டு அம்மா என்று தேய்த்துக் கொண்டே இருக்க அவளின் கையில் இருக்கும் போனும் அவன் சடன் பிரேக் போட்டதால் சற்று நழுவி கீழே விழ…,  இங்கு பின்னால் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் திடீரென்று என்னச்சுப்பா  என்று அதிர்ச்சியாகி உடனே கேட்க… 

 

 அவளை ஒரு பார்வை பார்த்தவன் ஒன்னும் இல்ல அங்கிள் இடையில் நல்ல கார் ஓட்டிக்கிட்டு இருக்கிறப்போ..,  ஒரு சின்ன நாய்  குறுக்கால வந்துருச்சு .., அதனாலதான் சடன் பிரேக் போட வேண்டியதா போயிருச்சு”  என்று  விகிதாவை பார்த்து சற்று அழுத்தமாக அவனின் பல் இடுக்கில் பேசியவன் சாரி அங்கிள் என்று ராஜ்குமாரை பார்த்து சொல்லிவிட்டு மறுபடியும் மெதுவாக காரை இயக்கினான்… 

 

நான் பார்க்கும் போது எதுவுமே இல்லையே .., இப்போ இவன் என்னடான்னா நாய் வந்ததுன்னு சொல்லுறன் ..,  அதுவும் குறுக்கால வந்துச்சா!!!  என்று ஒன்றுமே புரியாமல் விஹிதா  முன்னால் பார்க்க .., அங்கு ரோடு மிகவும் காலியாக இருக்க…  அவளுக்கு எதுவுமே புரியவில்லை…  திடீரென்று அவன் ஏன் தன்னை முறைத்துப் பார்த்தான்…  எதற்காக அவன் எப்படி பேசுகிறான் என்று ஒன்றுமே புரியாமல் இருந்தவள்… தன் கையில் இருக்கும் போனை தேடிக் கொண்டிருக்க… அதுவும் கையில் இருந்து கீழே விழுந்து ,  கீழே உயிரெற்று போயிருந்தது… 

 

 ஃபோனை கீழே குனிந்து கொண்டு  எடுத்தவள் … அந்த போனை பார்க்க அதுவோ சுவிட்ச் ஆப் என்று இருக்க…  வேகமாக காரில் அப்படியே சார்ஜ் போட ஆரம்பித்தல்… 

 

 “ சும்மா இருந்தவளை கல்யாணத்துக்கு வான்னு சொல்லி கூப்பிட்டு போய்ட்டாங்க … ஆனா கடைசியா பார்த்த ..,  அந்த ஃபங்ஷன்ல முக்கியமான பொண்ணா இருக்கேன்” என்று அவன் காதுக்கு கேட்குமாறு சொல்லியவள் … அவள் அப்பாவிடம் போனை வாங்கியவள் சாங் ப்ளே செய்து கேட்டுக் கொண்டிருந்தால்…  காரில்… 

 

மைபூசி வைத்திருக்கும் கண்ணில்

நீ.. பொய்பூசி வைத்திருப்பதென்ன

தூவானம் என, தூரல்கள் விழ

தப்பான எண்ணம் நெஞ்சில் ததும்பிடுதே

கண்ணா நீ பொறு

கட்டுக்குள் இரு

காதல் கைக் கூடட்டும் 

இதோ..எனக்காக விரிந்தது

இதழ்..எடுக்கவா தேனே

கனி..எதற்காக கனிந்தது

அணில்..கடித்திட தானே 

ஓ..காலம் நேரம் பார்த்துக்கொண்டா

காற்றும் பூவும் காதல் செய்யும்

வைகாசி நிலவே

வைகாசி நிலவே 

என அப்பாடல் ஓடி கொண்டிருக்க … 

அதை ஹம்  செய்து கொண்டே கொண்டே கேட்டு கொண்டிருந்தாள் … அவள் ஹ்ம் செய்தது பிடிக்காமல் … சடார் என்று வேகமாக பாட்டை நிப்பாட்ட … 

கண்களை மூடி கேட்டு கொண்டே வந்தவள் பாட்டு பாதியில் முடியவும் .., கண்கள் விழித்தவள் … அவனை முறைத்து பார்க்க … 

எதுக்கு இப்போ பாட்டு நிப்பாட்டுனீங்க … என ரகசியமாக அவனிடம் கேட்க.. 

எனக்கு பாட்டு பிடிக்கல  அதுனால.. நான் ஆப் பண்ணுனேன்… இதுல என்ன இருக்கு..?? என அவனை பார்த்து நக்கல் சிரிப்பு சிரித்துக்கொண்டே அவளிடம் சொல்ல… 

 அந்த பாட்டு தானே புடிக்கல .., நான் வேற பாட்டு வைக்கிறேன் என்று அவனைப் பார்த்து நக்கலாக சொல்லியவள்  

இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக…
சிாிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக…
என்னாச்சு எனக்கே தொியவில்லை…
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை…

அட என்ன இது என்ன இது…
இப்படி மாட்டிக்கொண்டேன்…
இது பிடிக்கிறதா பிடிக்கலையா…
யாாிடம் கேட்டு சொல்வேன்…

எவ்வளவு அருமையா இருக்குது அப்படியே நம்ம மனசுல உள்ளதா அந்த உன்னிகிருஷ்ணன் சார் சாமியா சொல்லி இருக்காரு என்று அவனைப் பார்த்து நக்கலாகவும் அதே நேரம் அந்த பாடல் வரிகளை ஹம் செய்து கொண்டே சொல்லிக் கொண்டிருக்க அதை பார்த்து பக்கத்தில் இருந்த விதுரனுக்கும் கடுப்பாக இருக்க வேகமாக மறுபடியும் அந்த சாங் ஆப் செய்தான்..  

 நல்லா தான இருக்குது எல்லாருக்குமே இந்த சாங் நல்லா பிடிக்கும் அப்படி இருக்கிறப்போ நீ மட்டும் ஏன் ஆஃப் பண்ற உனக்கு ரசமே இல்ல என் கூட பழகிட்டெல்லாம் என்னமே உனக்கு ரசம்னா என்ன அப்படிங்கறது தெரிஞ்சிடும் என்று அவனின் பக்கத்தில் அவனின் தோள்பட்டையில் சாய்ந்து கொண்டவள் மெதுவாக சொல்ல

 

ஒழுங்கு மரியாதையா மேல சாயாத கடுப்பா இருக்கு பின்னாடி உங்க அம்மா அப்பா இருக்காங்களேன்னு அமைதியா இருக்கிறேன் எந்திரிச்சு என்று அவன் அவளுக்கு மட்டுமே கேட்குமாறு கோபமாக சொல்ல… 

 

 நான் பாட்டு போட்ட உனக்கு பிடிக்கலைன்னு சொல்றேன் அப்போ நீயாவது பாட்டு போடு எனக்கு பாட்டு கேக்கலாட்டி ஏதாவது ஒன்னு பண்ணிகிட்டே இருக்கணும் என் போன்ல சார்ஜ் கிடையாது எனக்கு அப்படி சாய்ந்து தூங்குறதுக்கு இஷ்டம் கிடையாது அதனால இப்படி சாய்ந்து தூங்கறேன் என்று அவனிடம் சொல்ல… 

 

 சரி நிமிர்ந்து தொல நான் பாட்டு வைக்கிறேன் என்று சொல்லி அவன் பாட்டை வைக்க ஆரம்பித்தான்… 

 

எவன்டி உன்ன பெத்தான் பெத்தான்…

பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான்…

கையில கெடச்சா செத்தான் செத்தான்…

செத்தான் செத்தான் செத்தான் செத்தான்… 

 

இப்பொழுது அவன் அவளை வெறுப்பேற்றுவதற்காகவே அந்த பாடல் வரிகளை சொல்லிக் கொண்டிருக்க அதை பார்த்தவரின் உதடுகளோ புன்னகை செய்ய மெதுவாக அவளின் காது அருகில் … 

 

 என்னை பெத்த அப்ப பின்னாடி தூங்கிக்கிட்டு இருக்காரு அதுக்கு அப்புறம் என்னை வெறுப்பேத்தறதுக்கு தானே இந்த பாட்டு போட்ட அடுத்த லைன் கேளு நீ ஏன் போட்ட அப்படிங்கற மாதிரி பீல் பண்ணுவ என அவள் சொன்ன… 

 

 இவை என்ன சொல்லுறாய் என்று ஒன்றுமே புரியாமல் அடுத்து வரும் லைனை கவனிக்க ஆரம்பித்தார் 

 

ஐ பீல் லைக் மூவ் யுவர் பாடி…
ஐ பீல் லைக் மூவ் யுவர் பாடி…
ஐ பீல் லைக் கிஸ்ஸிங் யூ…
ஐ பீல் லைக் டச்சிங் யூ…
ஐ பீல் லைக் மூவிங் யூ…
ஐ பீல் லைக் லுக்கிங் ஸ்வீட் லைப் வித் யூ…

 என் பேஸ்புக் ஸ்டேடசும் நீதான்…
என் ட்விட்டர் ட்விட்டிங்கும் நீதான்…
என் ஸ்கைப் காலும் நீதான் நீதான்…

 என் பி.பி.எம்மும் நீதான்…
என் பேஸ்டைமும் நீதான்…
என் ஐபோன் ஐபேட் எல்லாமே நீதான்…

 என் ஐடியூன் ப்ளேலிஸ்ட்டும் நீதான்…
அதில் லவ் சாங்சும் நீதான்…
அதில் ப்ளே ஆகுற ஸ்பீக்கர் நீதான்…

 

 “ என்ன பாட்ட கேட்டு ரொம்ப காண்டு  ஆகிடீடியா நல்ல கேட்டுக்கோ … அதுல சிலம்பரசன் சார் அவங்க வைஃபை புடிக்கும்  .., அப்படிங்கிற மாதிரி வர்ணிச்சு சொல்லி இருப்பாரு…  எல்லாமே அவரோட ஒய்ஃப் தான் அப்படிங்கற மாதிரி அந்த பாட்டுல சொல்லி இருப்பாரு…  என்ன உனக்கு அப்படி தானே/  எல்லாமே நான் தானே..!…  அதனால தானே இந்த பாட்டை செலக்ட் பண்ண” என்று அவன் எதிர்பாராத சமயம் அவனின் கன்னத்தில் முத்தமிட்டு சற்று வேகமாக விலகியவள் பின்னால் அதிர்ந்து தன்னுடைய பெற்றோரை பார்க்க…. 

 

 அவர்களோ இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் நன்றாக தூங்கிக் கொண்டிருக்க… அப்பொழுது தான் அவளுக்கு சற்று நிம்மதியாக இருந்தது…  அவனை வெறுப்பேற்றுவதற்காக அவனின் கன்னத்தில் முத்தமிட்ட அவளுக்கு தனது பெற்றோர் பின்னால் இருக்கிறார்கள்.. என்று நினைவில்லாமல் போக…,  எல்லாம் முடிந்ததற்கு அப்புறம் நினைவு வந்து அவள் பின்னால் திரும்பி பார்த்தவுடன் தான் அவளுக்கு சற்று நிம்மதியாக இருந்தது… 

 

 ஏய்  நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்கன்னு உனக்கு தெரியுதா..??  என்று அவன் கோபமாக கேட்க… 

 

 நல்லாவே தெரியுது…  ஐ லவ் யூ டா புருஷா என்று பறக்கும் முத்தத்தை கொடுத்தாள்… 

 

கார் ஓட்டிக்கொண்டே அவளின் கன்னத்தில் அறைய  வர…, அதே நேரம் அப்பா என்று அவள் பின்னால் திரும்ப… அறைய   வந்த கையை ஸ்டேரிங் மேல் வைத்தவன் அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டே , காரை ஓட்டிக் கொண்டிருக்க…  அதே நேரம் அவள் அப்பாவை கூப்பிட்டவளோ சும்மா என்று சொல்லிக் கொண்டே முன்னாள் திரும்பிக் கொண்டால் .. அவனைப் பார்த்து நக்கலாக சிரித்துக் கொண்டே… 

 

மான் விழியால் வருவாள்…

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!