சென்னை மாநகராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது…. என்ற பெயர் பலகையை தாங்கிக் கொண்டு போர்டு இருக்க…
இதற்கு அப்புறம் எங்கு செல்ல வேண்டும் எப்படி செல்ல வேண்டும் அவனுக்கு ஒன்றுமே புரியாமல் எல்லோரையும் பார்க்க… அவர்களோ நன்றாக தூங்கிக் கொண்டிருக்க .., வேறு வழியில்லாமல் ராஜ குமாரை எழுப்பி கேட்கலாம் … என்று அவன் நினைத்துக் கொண்டிருக்க … ஆனால் அவரோ அசதியில் மிகவும் நன்றாக தூங்கிக் கொண்டிருக்க ..பக்கத்தில் இருப்பவர்களை பார்த்தால்…
இரு கால்களையும் சீட்டின் மேல் வைத்து கால்களைக் குறுக்கி கார் டோரில் சாய்ந்து கொண்டு நன்றாக தூங்கிக் கொண்டிருக்க.., ஏனோ அந்த இரவு ஒளி வெளிச்சத்தில் பெண்ணவளை பார்ப்பதற்கு மிகவியும் ரம்மியமாக இருந்தது…
விளக்கு வெளிச்சத்தில் உன் முகம் பார்க்கிறேன், நான் பார்க்கும் முகம்… சிரிக்கும் முகம் இல்லை, கோபப்படும் முகம் இல்லை, காதலிக்கும் முகம் இல்லை, சண்டை போடும் முகம் இல்லை.
நான் பார்க்கும் இந்த முகம், என்னை ஆட்டிப்படைத்த கோபம், வெறுப்பு, சந்தேகம் என அனைத்தையும் மறந்து, ஒரு குழந்தை போல் இருக்கிறது.
நீ உறங்கிக்கொண்டிருக்கும்போது உன்னைப் பார்த்துக்கொண்டு இருக்கிறேன், ஏனென்றால், உறக்கத்தில் மட்டுமே உன் உண்மையான முகம் வெளியே தெரிகிறது.
நீ தூங்கும்போது நீ குழந்தை ஆகிறாய், அழகு ஆகிறாய், அமைதி ஆகிறாய்.
நான் உன்னைப் பார்த்தேன், எனக்குத் தூக்கம் வரவில்லை. விழித்திருந்தேன். ஏனென்றால், உனது உறக்கத்தை ரசிக்கிறேன்.
பார்த்துக் கொண்டிருந்தவனின் மனது அவனை அறியாமலே ரசித்து கொண்டிருக்க ..,அதே நேரம் அவனது பார்வை சென்றது .. என்னவோ அவளது மொபைல் போனில் இருக்கும் ஸ்கிரீனில் தான்…
அவளது மொபைலை பார்த்தவுடன் .., யாரோ ஒருவன் முகம் தெரியாதவன் தன்னவளிடம் பேசியது நினைவு வர.., அவளிடம் இருந்த ரசனையான பார்வை போய் கோபம் முகம் தத்து எடுத்துக் கொண்டவனோ அவளின் தொடையை நறுக்கென்று கிள்ளி வைத்தான் .. அவளுக்கு வலிக்கும் அளவிற்கு…
ஆஆஆஆ … என்று கத்திக்கொண்டே எழுந்தவள் பக்கத்தில் இருக்கும் அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டு…, இப்ப எதுக்குடா என்னை கிள்ளி வச்ச..? என்று அவள் அவனை பார்த்து முறைத்து கொண்டே கேட்க…
“ நான் உன்னை கிள்ளி வெறுப்பேத்துனத விட .., நீ ரொம்ப அதிகமாவே என்ன வெறுப்பேத்துற… பார்க்க அத்திக்காய் மாதிரி குட்டியோண்டி இருந்துகிட்டு என்ன வரத்து வர.. என்கிட்ட” என்று அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டே சொன்னவன் , அப்புறம் எப்படி உங்க வீட்டுக்கு போகணும் ..? என்று அவளிடம் கேட்க..,
அவள் வழி சொல்ல… அதை கவனமாக கேட்டுக் கொண்டே காரை ஓட்டிக் கொண்டிருந்தவனை அவ்வப்பொழுது அவள் தீண்டாமல் இல்லை..அவனை … அவளை திட்டினாள் கோபம் கொண்டு முறைப்பான் … அதே நேரம் அவளோ பெரியவர்களை சொல்லி கொண்டு தப்பித்து விடுவாள் .. அவளுக்கு கோபம் நன்றாக தூக்கத்தில் இருந்தவளை எழுப்பி விட்டான் என்று அதுவும் சாதாரணமாக அவன் எழுப்பவில்லை என்று அவளுக்கு கோபம் இருக்க… அவள் தீண்டிக்கொண்டே வந்தால்…
‘ இதோ பாரு எதா இருந்தாலும் ஒரு அளவுக்கு தான் … என்னோட பொறுமை என்னை ரொம்ப சோதிக்கிற.., ரொம்ப ஆடிக்கிட்டு இருக்காத …இன்னும் ரூம்க்கு போறதுக்கு கொஞ்ச நேரம் தான் இருக்குது… அதனால கவனமா இருந்துக்கோ … என்கிட்ட தான் அடுத்து வரணும்” என்று அவன் மிக மெதுவாக அவளிடம் கோபத்தில் அவளுக்கு மட்டும் கேட்கும் படி சொல்ல …
“ பரவால்ல இருக்கட்டும் எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது .. அதே ரூமுக்குள்ள அடுத்து போனா என்ன நடக்கும்னு தெரியுமில்ல .., நம்மளுக்கு ஃபர்ஸ்ட் நைட்.. அது ஞாபகம் வச்சுக்கோங்க’ என்று அவனைப் பார்த்து கண்ணடித்துக் கொண்டே அவனை வெறுப்பு ஏற்ற …
“ எங்கனா பொண்ணு மாதிரி நடந்துக்கிறியா டி.. இல்ல நான் தெரியாம தான் கேட்கிறேன் பொண்ணு மாதிரி நீ எங்கனா நடந்துகிடுறியா .., பெண்ணுக்குரிய அடக்கம்.., கூச்சம் …, அச்சம்.., வெட்கம் இது எதுவுமே உன்கிட்ட கிடையாது…ஆரம்பத்தில் இருந்தே உன்னோட நடவடிக்கை எதுவுமே சரியில்ல.., அதான் ஓபனா சொன்னா… நீ அதுக்கு தானே அலைஞ்சுகிட்டு இருக்கிற … ரூம்க்கு போன உடனே அது நீ நினைச்ச மாதிரி எல்லாமே நடக்கும் … ரொம்ப அலைஞ்சுகிட்டு இருக்காத ஆனா ஒன்னு நல்லா தெரிஞ்சுக்கோ.., என்ன நடந்தாலும் சரி ரெண்டு பேரோட மனசு ஒத்துப்போய் பண்ணா தான் அது அழகான தாம்பத்தியம் .., ஒரு ஆளுக்கு மட்டுமே இருந்து பண்ணா… என்று பள்ளிடுக்கில் பேசியவன் அவள் காதுக்கு மட்டுமே சற்று கேக்குமாறு புணம் கூட செஞ்ச மாதிரி டி… என்று அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டே சொல்ல…
இவ்வளவு நேரம் அவனை சீண்டிக் கொண்டிருந்தவள் அவன் அப்படி சொல்லவும் எதுவும் பேசாமல் அவள் வீட்டிற்கு போகும் வழியை தன்னுடைய ஃபோனில் கூகுள் மேப்பில் போட்டுக் கொடுத்தவள் .., ஜன்னலோரம் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தால் அவனிடம் பேசாமல் …
அவள் பேசிக்கொண்டே சீண்டிக்கொண்டே வந்தது.., அவனுக்கு சற்று கோபத்தை ஏற்படுத்தினாலும் ஏனோ அது பிடித்திருந்தது … தான் பேசிய வார்த்தையில் அவள் முகம் சிறுத்து மறுபக்கம் திரும்பியது…, அவனின் தன்மானத்தை சீண்டி இருக்க ..,அவனும் அவளிடம் அடுத்த வார்த்தை எதுவும் பேசவில்லை … ஏனோ நிம்மதியாக உணர்ந்தாலும் அவனை அறியாமல் ஒரு வெற்றிடம் நிரம்பி போய் இருந்தது…
அவனைத் திரும்பி பார்க்கவில்லை .., வெளியில் பார்ப்பதை தவிர அவன் ஏதாவது கேட்டால் கூட அவனைப் பார்த்த முறைத்துக் கொண்டே பதில் சொல்லாமல் மறுபக்கம் திரும்பிக் கொள்ள.. அவள் சொன்னது போலவே அவர்களின் வீட்டுக்கு முன்பு காரை வந்து நிப்பாட்டினான் விதுரன்…
காரை விட்டு இறங்கியவள் அப்பா என்று அவள் அப்பாவையும் அம்மாவையும் எழுப்ப .., அதே நேரம் கார் எங்க நிப்பாட்டனும்..?? என்று அவளிடம் கேட்க….
“ அவனின் பக்கமாக வந்தவள் மெதுவாக அவனின் காதருகே குனிந்து காரை எங்க நிப்பாட்டனும் அப்படின்னு தானே கேட்டா.., என்னோட தலை மேல நிப்பாட்டு… இப்போதைக்கு அது மட்டும் தான் காலியா இருக்குது… நீ சொல்லுற மாதிரி” என்று அவனிடம் முறைத்துப் பார்த்துக் கொண்டே சொல்ல…
“ அது என்னமோ சரிதான் அந்த இடம் காலியா தான் இருக்குது” என்று சொல்லிக்கொண்டே மறுபக்கம் ராஜ்குமாரை பார்த்து ‘அங்கிள் காரை எங்கு நிப்பாட்டனும் ..?” என்று கேட்க….
“ அப்படியே ஓரமா நிப்பாட்டிருப்பா.., வரும் போது புல்லா டிரைவிங் பண்ணிட்டு வந்தனா.., அதுக்கு அப்புறம் கொஞ்சம் வேலை வேற ரெஸ்ட் கிடையாது …அதனாலதான் நான் அசந்து இப்படி தூங்கிட்டேன் …வழி எப்படிப்பா..? பாப்பா சொன்னாளா உனக்கு” என்று விதுரனிடம் கேட்க…
“ ஆமா மாமா… உங்க பொண்ணு தூங்கவே இல்ல …உங்க பொண்ணு தான் எனக்கு ஃபுல்லாவே வழி சொன்னாங்க” என்று அவளைப் பார்த்து நக்கலாக சிரித்துக்கொண்டே சொன்னவன்… ராஜகுமாரிடம் அவர் சொன்னது போல் காரை ஒரு ஓரமாக வீட்டின் முன்பு நிப்பாட்டினான் …
வேகமாக விகிதா வீட்டிற்குள் நுழைய போக .., அதை இடை நிறுத்தினால் ராகினி…
“ மாப்பிள தம்பி ஒரு நிமிஷம் இருங்க” என்று சொல்லிய ராகினி விகிதாவிடம் “ வீட்டுக்குள்ள வராத ஒரு ரெண்டு நிமிஷம் இரு நான் ஆளாத்திக்கு கரைச்சசுட்டு வந்துறேன்” என்று சொல்லிவிட்டு வேகமாக வீட்டின் கதவை திறந்து கொண்டு உள்ளே போக…
“என் வீட்டுக்குள் இந்த அம்மா என்னவே வரக்கூடாதுன்னு சொல்லிக்கிட்டு இருக்குது .., எவ்வளவு கொழுப்பு” என்று மனதிற்குள் அவள் நினைத்துக் கொண்டே கோபமாக நின்று கொண்டிருக்க அதே நேரம் விதுரனும் அந்த வீட்டயே தான் பார்த்துக் கொண்டிருந்தான்…
சாதாரண நடுத்தர மக்களை சேர்ந்த இவர்கள் போல் அந்த வீட்டை பார்ப்பதற்கு இருந்தது.. அவர்கள் வீட்டை சுற்றி காம்பவுண்ட் சுவர் இருக்க .., அதில் பாதி உடைந்த பாடில் பதித்து வைத்து போல் திசை செய்ய பாட்டு இருக்க .., அந்த சுவற்றில் .. மேற்பகுதியில் .., வெளியில் ஒரு பக்கம் துளசி செடி இருக்க …, மற்றொரு பக்கமும் …கத்தாழை இருக்க அதனை ஒட்டி குட்டி ரோஸ் செடி இரு பக்கமும் இருக்க .., அதனை ஒட்டி வெளி புறத்தில் வீட்டினை ஒட்டி முருங்கை மரம் இருக்க.., அதன் பக்கத்தில் வேப்பமரம் இருக்க … கம்பவுண்ட் சுவற்றை ஒட்டி வீட்டின் உள்ளே இன்னும் நிறைய செடிகள் இருப்பது போல் அவனுக்கு தெரிந்தது … ஆனால் என்ன இருக்கிறது என்று தான் அந்த இரவு வெளிச்சத்தில் இருந்தும்… அந்த வீடு பார்ப்பதற்கும் மிகவும் அழகாக இருந்தது வெளிப்புறத்தில் , இந்த காலத்திற்கு ஏற்ப இருப்பது போல் தோன்றியது அவனுக்கு …
‘ இந்தச் செடி எல்லாமே ரொம்ப அழகா இருக்கு ஆன்ட்டி … இதை நீங்க உண்மையாவே பராமரிக்கிரெங்க ஆண்டி” என்று அவன் அந்த செடிகளை பார்த்துக் கொண்டே ஆழத்தி கரைத்து எடுத்து வந்திருக்கும் ராகினிடம் மனதார சொல்ல …
அவனுக்கு செடி வளர்ப்பதில் அலாதி பிரியம் .. அதனால் மபினாத்தில் தோன்றியது சொல்லி விட்டான் .. அதுவும் இப்பொழுது இந்த இடத்தை பார்க்கும் போது அவனுக்கு மனதுக்கு இதமாக இருந்தது
“ எல்லாமே பாப்பாவோடது தான்… பாப்பா தான் சும்மா இருக்க நேரத்துல ஏதாவது ஒரு செடி வைக்கணும் ,மரம் வைக்கணும்னு சொல்லிக்கிட்டே இருப்பாள் …. அவளோட கண்ட்ரோல்ல இது எல்லாமே விட்டாச்சு …,அவதான் இப்ப வரைக்கும் பராமரிச்சுக்கிட்டு இருக்கிறால் ..” என்று விதுரனிடம் விகிதாவை பற்றி பெருமையாக ராகினி சொல்லிக் கொண்டிருக்க…
“ ராட்சசி இதை மட்டும் எப்படி ஒழுங்கா பண்ணுறா…, ஒரு வேலைக்கும் அவ சரியில்ல அப்படின்னு தானே நினைச்சுக்கிட்டு இருந்தேன்… ஆனா இதுல மட்டும் எப்படி..? இல்லையே கண்டிப்பா இவ பண்ணிருக்க மாட்டா .., இவள பத்தி ஒரு நாள் ஃபுல்லா அலசி ஆராய்ஞ்சதுல இவளுக்கு வாய் மட்டும்தான் அதிகம் அப்படிங்கிற மாதிரி தெரியுது …, ஆனா இவ இந்த செடி எல்லாம் இவளுக்கு எப்புடி” என்று மனதிற்குள் அதிர்ச்சியாக கேட்டுக் கொண்டிருந்தவனோ விகிதாவை பார்க்க..
எங்க அம்மா சொநினைத்தை கேட்கும் போது .., உங்களோட மைண்ட் வாய்ஸ் கண்டிப்பா இவ பண்ணிருக்கிறதுக்கு வாய்ப்பே கிடையாது அப்படிங்கறது தானே,,!! என்று அவனின் காது அருகில் மெதுவாக எக்கிக்கொண்டு அவனிடம் சொல்ல..
“ நம்ம மனசுல நினைக்கிறது கரெக்டா சொல்றாள்” என்று நினைத்துக் கொண்டிருந்தவன் சற்று அதிர்ந்து அவளை பார்க்க … அவன் பார்த்ததில் பெண்ணவழுக்கு சிரிப்பு வர…, மறுபக்கம் திரும்பிக் கொண்டு லைட்டாக சிரித்தாள் … எங்கு அவன் பார்க்கும் பொழுது சிரித்தால் அவனுக்கு கோபம் வந்துவிடுமோ இதனால் தன்னுடைய அம்மா ஏதாவது கண்டுபிடித்து விடுவார்களோ …!!! என்று நினைத்துக் கொண்டவளோ முடிந்த அளவு அவள் , அவளின் சிரிப்பை சற்று அடக்கிக் கொண்டாள் …
இருவருக்கும் ஆழம் கரைத்து வரவேற்த்த ராகினி.., இருவரிடமும் வலது கால் உள்ள எடுத்து வச்சு உள்ள வாங்க… என்று ராகினி சொன்னவுடன் எதுவும் பேசாமல் விதுரனும் விகிதாவும் உள்ளே வர… அவர்களை வரவேற்று சோபாவில் உட்கார சொன்னார் …
மெதுவாக விகிதாவை மட்டும் உள்ளே அழைத்த ராகினி சற்று படபடப்புடன் இருக்க…
என்னமா எதுக்கு இப்போ உள்ள கூப்பிடுற ..? என்ன ஆச்சு? என ஒன்றுமே புரியாமல் விகிதா கேட்க…
“ இல்லடி அது இதுக்கப்புறம் என்ன பண்ணும் ஏது பண்ணனும் அப்படிங்கிறது தெரியல ,….மாப்ள தம்பி கிட்ட நைட் என்ன சாப்பிடுவாங்க .., சாப்பாட்ட கேளு .., நீ தான் கேட்டு சொல்லணும்” என்று ராகினி சொல்ல ஏனென்றால் இந்த கல்யாணம் ஒரு எதிர்பாராத கல்யாணம் எப்படி பேசுவது என்று ஒன்றும் புரியாமல் சற்று தயக்கத்தோடு விஹிதாவிடம் சொல்ல….
‘ ஆமா அவன் மட்டும் என்னை மானே தேனே ன்னு கொஞ்சிட்டு … கொஞ்சிக்கிட்டு இருப்பான்… இந்த அம்மா நினைக்குது போல … இவங்க என்னடான்னா என்னைய போய் கேக்க சொல்லுது .., நான் கேட்டதுக்கு எப்படி எரிஞ்சு விழுவான்னு தெரியாது …,இதுக்கு எனக்கு பதில் இந்த அம்மாவே கேட்டிருக்கலாம்… அதுக்கு கூட நல்லபடியா பதில் சொல்லுவான்” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள் ஈஈஈ என்று இளித்து கொண்டே தன் தாயிடம் இருந்து விடை பெற்று அவனின் பக்கத்தில் போய் மெதுவாக உட்கார்ந்தால்…
“ இவ பக்கத்துல வந்து அமைதியா உட்கார மாடுலேஷன் சரியில்லையே..!” என்றும் மனதிற்குள் நினைத்துக் கொண்டே விதுரன் அவளை பார்க்க அவளோ அவனின் கிட்டே நெருங்கி அம்மா உங்க கிட்ட நைட்டு சாப்பிடுவதற்கு என்ன செய்யணும் .. அப்பறம் டீ, இல்லாட்டி காபி குடிப்பியா ன்னு தெரில அதுனால கேட்டு வர சொன்னாங்க… என்று அமைதியாக அவள் சொல்ல…
“ இல்லை சாப்பிடுற மைண்ட் எனக்கு இல்ல .., அப்பறம் இப்போ டீ , கோபீ நான் குடிக்க மாட்டேன் .. பொதுவா மார்னிங் பிளாக் டீமட்டும் தான் குடிப்பேன் .., அதுனால உங்களுக்கு ஏதாவது நீங்க செஞ்சுக்கோங்க அண்ட் எனக்குன்னு தனிப்பட்ட முறையில் எதுவுமே செய்ய வேண்டாம்” என்று சொல்லியவன் ரெஸ்ட் எடுக்கணும்… ரூம் எங்க இருக்கு ..?என்று அவளிட ம் கேட்க…
மேல இருக்குது என்னோட ரூம் என்று சொல்லியவள் வாங்க போகலாம் என்று அவனிடம் சொல்ல…..
தேவையில்லை நானே போய் கொள்கிறேன் … மேல இருக்கிற ரூம் தானா .., ஒன்னும் பிரச்சனை இல்ல …, நீ எதுனா இங்க உள்ள ஒர்க் பாரு ,,, அண்ட் தயவு செய்து சொல்றேன் எனக்கு எந்த டிஸ்டர்பும் பண்ணாத … என்று சொல்லியவன் அவளைக் கண்டு கொள்ளாமல் சுற்றி அந்த ஹாலினை பார்த்துக் கொண்டே மேலே படியேறினான்….
இவன் பெரிய ஆளு …, மற்றும் பெரிய துறை இவரு .., டிஸ்டர்ப் பண்ண கூடாதாம் … டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு என்கிட்ட போய் சொல்லுறான் பாரு .. இதுக்காகவே இருடா இதோ வரேன் .., நான் தூங்கிக்கிட்டு இருக்குறப்போ மூஞ்சில தண்ணீயவா ஊத்துற .., கில்லியா வைக்குற .., இதோ வரேன்டா … வந்து உன்ன என்ன பண்ணுறேன் பாரு …, இது என்னோட வீடு .., நான் என்ன வேணா உன்ன பண்ணுவேன்.., யாரும் கேட்பதற்கு முடியாது “ என்று மனதிற்குள் அவனைப் பார்த்து நக்கலாக சொல்லியவளை கலைத்தது ராகினியின் குரல்..
அவள் சொல்லிய உடன் அவன் மேலே படியேறி அவளின் ரூமிற்கு போக எங்கு ராகினியை பார்த்தால் விகிதா…
என்னம்மா..? என்று ராகினியிடம் விகிதா கேட்க…
“ இங்கு என்னடி மச மச ன்னு நின்னுகிட்டு இருக்க.., போய் மாப்பிள தம்பி கூட இரு.., எதனா ஒன்னு பேசு” … என விகிதாவின் அம்மா ராகினி சொல்ல…
“ அம்மா என்ன டிஸ்டர்ப் பண்ணாத .., அப்படின்னு ரூம்ல போய் ரெஸ்ட் எடுக்க போயிட்டான் ..,அவன் கிட்ட போய் என்ன என்ன பேச சொல்ற..?”, என்று சாதாரணமாக தன் தாயிடம் சொல்ல…
“ அடியே இப்படி மரியாதை இல்லாம அவன் இவன் எல்லாம் பேசக்கூடாது.., ஒழுங்கா அவரு.. அப்படின்னு சொல்லு … அது சொல்றதுக்கு ஒரு மாதிரியா இருக்குன்னா மாமா , என்னங்க, அந்த மாதிரி கூப்பிட்டு பழகிக்கோ … இனிமே இந்த மாதிரி எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்காத.. நீ மரியாதை இல்லாமல் அவன் இவன் பேசுறது மட்டும் அத்தைக்கு தெரிஞ்ச அவ்வளவுதான் … என்னைய தான் கரிச்சு கொட்டுவாங்க…என்ன பொண்ண வளர்த்து வெச்சி இருக்கா பாருன்னு கேள்வி கேப்பாங்க …ஏற்கனவே நானும் உங்க அப்பாவும் அந்த வீட்டை விட்டு வெளியில் வந்து கல்யாணம் பண்ணிக்கட்டும்… ஆனா அதையும் மீறி இப்போ உன்னைய கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க .. அவங்களோட பேரனுக்கு, அத எல்லாமே காப்பாத்துற மாதிரி நடந்துக்கோ” என்று தன் மகளுக்கு அறிவுறுத்த…
“ திடீர்னு கல்யாணத்துக்கு வா போகலாம்னு சொன்னீங்க .., சரின்னு போனா எவனோ ஒருத்தனை என் கழுத்துல தாலி கட்ட வச்சிட்டீங்க …, என்னதான் இருந்தாலும் அவன் கூட பழகுவதற்கு எனக்கு சில நாள் ஆகும் ..,ஆனால் அதையே மீறி எடுத்த உடனே அவன இப்படி கூப்பிடு… அப்படி கூப்பிடு அப்படின்னு சொன்னா எப்படி எனக்கு கூப்பிட வரும்… அதுவும் இல்லாம மாமான்னு கூப்பிடறது எல்லாம் உவக் …உங்களுக்கே தெரியும் .., என் வயசு என்ன அப்படின்னு… சின்ன பிள்ளையை கல்யாணம் பண்ணி கொடுத்துட்டு இப்படி கூப்பிடு .., அப்படி கூப்பிடனு கண்டிஷன் போட்டுக்கிட்டு இருக்கீங்க ..? இதெல்லாம் ரொம்ப அநியாயம் அப்புறம் போலீஸ் ஸ்டேஷனுக்கு போவேன். ஞாபகம் வச்சுக்கோங்க” என்று தன் தாயை மிரட்ட…
“ என்னடி வாய் கொழுப்பு கூடிப்போச்சு உனக்கு… உன் வயசு எல்லாம் எனக்கு தெரியும்… அதை பார்த்து தான் நானும் கல்யாணத்துக்கு சம்மதிக்க வைத்து, உன்னை கல்யாணம் பண்ண சொன்னேன் ..,போலீஸ் ஸ்டேஷன் போவியா ..? இரு இரு உங்க அப்பா வரவும் நான் சொல்லுறேன் … உனக்கு வாய் கொழுப்பு கூடி போச்சு அதனாலதான் இந்த மாதிரி எல்லாம் பேசிக்கிட்டு இருக்கிற..?” என்று ராகினி அவளின் காதினை பிடித்து திருகிக்கொண்டேஅவளைப் பார்த்து முறைத்துக் கொண்டு சொல்ல…
“ ம்மா திடீர்னு நடந்ததுனால இப்படி சொல்லிக்கிட்டு இருக்கேன் …, மத்தபடி போலீஸ் ஸ்டேஷன் அப்படி இப்படி எல்லாம் சும்மா ஓள்ளலாய்க்கு” என்று அவள் தாயிடம் சிரித்துக்கொண்டே சொல்ல…
“ உன்னோட கல்யாணம் திடீர்னு நடந்தது தான்… எல்லா பொண்ணுக்கும் கல்யாணம் நடக்கிறது தான்… அதே மாதிரி தான் உனக்கும் நடந்திருக்கு… என்ன உனக்குஇதுக்கு முன்னாடி சொல்லாம .., எதிர் பாக்காம திடீர்னு நடந்திருக்கு அவ்வளவுதான் ,, நீதான் மாப்பிள்ளை தம்பி கூட சகஜமா பேசி பழகணும் … ஒன்னு ஒன்னத்தையும் நான் சொல்லிக்கிட்டு இருக்க முடியாது.. மாப்பிள்ளை தம்பி கூட அனுசரிச்சு போ… உன்னோட வாய் தனத்தை வாலுத்துனத்தை மாப்பிள கிட்ட காமிக்காத…, கொஞ்சம் அடக்கம் ஒடுக்கமா இரு… இன்னார் பொண்ணு இப்படித்தான் வளர்த்தாங்க அப்படின்னு சொல்லுற மாதிரி வச்சிராத.., மாப்பிள தம்பி ஒன்னும் நம்ம ஊரு கிடையாது… அந்த தம்பி கிராமத்து தம்பி.., அதனால கொஞ்சம் அப்படி இப்படின்னு சம்பிரதாயங்கள் பார்ப்பது தான் செய்வாங்க … அதனால பார்த்து பக்குவமா இருந்துக்கோ… என்று தன் மகளுக்கு அறிவுரை சொல்லிய ராகினி மனம் கலங்கினாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் … நீயும் ரூமுக்கு போ” என்று சொல்லிவிட்டு சமையல் வேலையை பார்க்க ஆரம்பித்தால்…
எதுக்கு நீ திடீர்னு லக்ட்சர் எடுக்குறமா நான் இப்போ மேல போகணும் அவ்வளவு தானே.. சரி போறேன்… உன்னோட மாப்பிள்ளையே நல்லா பார்த்துக்கணும் அவ்வளவுதானே … சரி நான் நல்லா பாத்துக்கறேன்… அவனை … இல்லல்ல அவரை” என்று அழுத்தமாக அவள் தாயைப் பார்த்து சொல்லியவள் மேலே போக ஆரம்பித்தாள் …
போகும் தன்னுடைய மகளை கவலையுடன் பார்த்தால் ராகினி …
மான்விழியாள் வருவாள் …