போகும் விகிதாவை பார்த்துக் கொண்டிருந்த விதுரனின் மனது ஏனோ சஞ்சலத்தில் இருந்தது… அவளைப் பார்த்துக் கொண்டே விதுரன் நின்று கொண்டு இருக்க.., விதுரனை பார்த்த ராஜ்குமார்.., “ மன்னிச்சிருங்க தம்பி நீங்க வந்திருக்க நேரத்துல இந்த மாதிரி ஆகிறது .., இதுக்காக நீங்க எதுவும் தப்பா நினைச்சுக்காதீங்க .., என்னோட பொண்ணு அந்த பப்பிக்குட்டி மேல உசுரா இருந்துட்டா… திடீர்னு அதுக்கு அப்படி ஆகவும் உங்களை கண்டுக்காம இந்த மாதிரி போயிட்டா…, மன்னிச்சுக்கோங்க தம்பி … என்னோட பொண்ணு பண்ணதுக்கு” என்று விதுரன் ஏதாவது நினைத்துக் கொள்வானோ அவள் யாரையும் கண்டுகொள்ளாமல் அறைக்கு சென்றது என்று நினைத்துக் கொண்ட ராஜ்குமார் விதுரனிடம் மன்னிப்பு கேட்க…
“ அய்யோ மாமா என்னது இது..!! நீங்களே இந்த மாதிரி கவலைப்பட்டுக்கிட்டு இருக்கெங்கா .. இந்த நேரத்துல என்கிட்ட போய் சாரி கேக்குறீங்க … உங்க பொண்ணுக்கு எவ்வளவு கஷ்டம் இருந்தா அவ இந்த மாதிரி உடைந்து போய் இருப்பாள் என நினைத்தவனின் மனது அவன் பேசிய வார்த்தைகள் கண் முன் வந்து போய் அதனால் அவள் உடைந்து அழுதது எல்லாம் நினைவு வர அதை நினைத்துக் கொண்டிருந்தவன் மறுபடியும் ராஜகுமாரை பார்த்து… … எனக்கு புரிஞ்சுக்க முடியுது மாமா தயவு செய்து எனக்கு கிட்ட சாரி கேட்டு இப்படி என்னை அந்நியமா ஆக்காதீங்க” என்று சொல்லியவனின் மனது என்னவோ விகிதாவை தான் நினைத்துக் கொண்டு இருந்தது…
சரிங்க மாப்பிள்ளை என்று சொல்லிய ராஜ்குமார் அமைதியாக இருக்க விதுரன் பேச ஆரம்பித்தான்…
‘ அப்புறம் மாமா இதைப்பற்றி பாட்டிகிட்ட எதுவும் பேசிடாதீங்க…, அப்புறம் பாட்டி அபச குணம் .., அது இதுன்னு பேச ஆரம்பிச்சுடுவாங்க … அப்புறம் ஜோசியரை கூப்பிட ஆரம்பிச்சுடுவாங்க , பாட்டியோட மனசு சஞ்சல படும் அதனால நீங்க எதுவும் பாட்டி கிட்ட சொல்லிடாதீங்க … நானும் சொல்ல மாட்டேன்.. இது அப்படியே விட்ருங்க” என்று ராஜ்குமார் பார்த்து விதுரன் தன் பாட்டியைப் பற்றி முழுவதும் அறிந்தவன் ஆக ராஜகுமாரிடம் பேச…
ஆனா தம்பி… என்று ராகினி ஏதோ ஒன்றை பேச வர…
“ அத்தை நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் கிடையாது … ஏற்கனவே பப்பிக்குட்டி உடம்பு சரியில்லாமல் இருந்திருக்கு… அதனாலதான் இறந்திருக்கு… நீங்க இதுக்கும் எங்களோட கல்யாணத்துக்கும் கம்பர் பண்ணாதீங்க…, ஏற்கனவே உங்க பொண்ணு பப்பி குட்டி இறந்ததுல ரொம்பவே கவலையா இருக்கிறாள் .., இப்படி நீங்க பேசி நீங்க கவலைப்பட்டு .., அவளையும் கவலையாகாதீர்கள்… அவளுக்கு சாப்பிடறதுக்கு ஏதாவது ரெடி பண்ணி அவளை சாப்பிட வைக்க வேண்டியது உங்களோட பொறுப்பு.., என்னதான் நான் கணவனாக இருந்தாலும் இன்னைக்கு தான் அவளோட புருஷன்… இதுக்கு முன்னாடி அவ உங்களோட பொண்ணு.., எனக்கு அவளை பத்தி இன்னும் தெரியல பட் நான் தெரிஞ்சுக்கிறேன் ஆனா அதுக்கு முன்னாடி நீங்க அவளை பாத்துக்கோங்க அவளை சாப்பிடவைக்கிறதை” என்று பக்குவமாக விதுரன் பேச….
சரிங்க தம்பி என்று சொல்லிய ராகினியின் மனமும் சற்று குளிர்ந்து போய் தான் இருந்தது என்னதான் விதுரனை பற்றி பயம் இருந்தாலும் , அவன் இப்பொழுது தன்னிடம் மனம் விட்டு பேசியது .. அதுவும் தன் பொண்ணுக்காக பேசியதை நினைத்து ராகினியின் மனம் குளிர .., சரிங்க தம்பி என்று சந்தோசமாக தலையசைத்தவள் ராஜ்குமாரை பார்த்து நீங்களும் கொஞ்சம் சாப்பிடுங்க .. தம்பி நீங்களும் சாப்பிட வாங்க தம்பி என்று கூப்பிட…
‘ சாரி அத்த தப்பா நினைச்சுக்காதீங்க.., எனக்கு இப்போதைக்கு சாப்பிடற மாதிரி மனநிலை இல்லை… எனக்கு பசித்தது என்றால் கண்டிப்பா நானே சாப்பாடு போட்டு சாப்பிட்டுக்கறேன் அதனால நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க …” அவன் ராகினி இடம் வரவழைத்த புன்னகையுடன் பேச
“ தம்பி நீங்க போய் ரெஸ்ட் எடுங்க ஆனா சாப்பிடாம மட்டும் இருக்காதீங்க .., உங்களுக்கு வேணா நான் பால் காய்ச்சி எடுத்துட்டு வரட்டுமா’ என்று ராகினி கேட்க…
“ ஐயோ அத்தை உண்மையாவே எனக்கு இப்போ எதுவுமே சாப்பிட வேண்டாம் அத்தை… அப்புறம் நான் பால், காப்பி, டீ எதுவும் குடிக்க மாட்டேன் … அதனால அதுவும் கூட நானே பார்த்துக்கொள்கிறேன் … நீங்க மாப்பிள்ளை அப்படின்னு பயந்து பயந்து எதுவும் பண்ண வேண்டாம்… உங்களுடைய பையன் நினைச்சு நீங்க சாதாரணமா இருந்தாலே எனக்கு அதுவே போதும் அத்தை… சரிங்க நான் ரூம்ல போய் தூங்குறேன்’ என்று சொல்லிய விதுரனும் அவர்களிடம் சிறு தலையசைப்பு செய்துவிட்டு ரூமிற்குள் வந்தான் படபடப்புடன்…
ரூமிற்க்கு வந்தவன் அறையைப் பார்க்க.., அதுவும் மிகவும் தலை கீழாக இருந்தது… அவன் வந்த புதிதில் பார்ப்பதற்கும் இப்பொழுது பார்ப்பதற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் அப்படியே அந்த அறை தலைகீழாக இருந்தது போல் அவ்வளவு நீட்டாக இருந்தது… அவ்வளவு சுத்தமாக இருக்க கடைசியாக அந்த பெட்டில் இருக்கும் பெட் சீட்டை மடித்து வைத்துக் கொண்டிருந்தவள் … அவன் வந்ததை கூட கண்டுகொள்ளாமல்…, ரூமில் வேலை செய்து கொண்டிருந்தாள்..
அவளைப் பார்த்தவுடன் அவன் பேசியது,, அதற்க்கு அவள் அழுதது எல்லாம் கண் முன் வர .., சற்று மனது சங்கடமாகவே இருந்தது… அவன் அவளை அப்படி பேசியதை உணர்ந்து அவன் மனது சஞ்சலப்பட , அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் “ என்று அவளை நோக்கி சென்றான் கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு…,
“ உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று வார்த்தைகள் மிக மெதுவாக அதே நேரம் அவளை நோக்கி பேச..
அவனிடம் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தாள் … அவனைத் திரும்பி கூட பார்க்கவில்லை.. அவன் பேசியதை கேட்பது போல் அப்படியே அதே நிமிடத்தில் சட்சு போல் நின்று கொண்டிருந்தாள்..
“ நான் அப்போ பேசியது எல்லாமே தப்புதான்.., நீ எதுக்காக என்கிட்ட வர்ற அப்படின்னு கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம … நான் எதோ ஒன்னு பேசி ,உன் மனச காயப்படுத்தி” என்று அவன் மேலும் பேச வர வேகமாக அவனை நோக்கி திரும்பினால்…
‘ அவள் அவனைப் பார்க்கவில்லை… தலையை குனிந்து கொண்டே இருந்தால் ஆனால் அவனோ அவளை தான் முழுவதுமாக பார்த்தான் , அவளின் கன்னங்கள் இரண்டும் சிவந்து போய் இருந்தது… அவனின் கைத்தடங்கள் அப்படியே பதிந்து போய் இருக்க.., அதை பார்த்தவனின் மனது ரணமாய் குத்தியது… அவனுக்கு கோபம் வரும் தான்.. அளவுக்கு அதிகமாக வரும் ஆனால் இப்பொழுதுதான் புதிதாக தன்னை நம்பி வந்து இருக்கும் பெண்ணை கண்முடித்தனமாக அடித்தது.., ஏனோ அவனுக்கு அதை நினைத்தும் கோபம் வந்தது… அதுவும் அவளைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் அடித்தது இன்னும் அவனின் மனது வலித்தது.., அவள் எப்படி வேணழும் என்றாலும் இருந்திருக்கலாம்… அவள் காமத்தை தன்னிடம் தானே காட்டி இருக்கிறாள் .., வேறு எங்கும் காட்டியது இல்லையே அதை ஏன் அவளை அப்படி நான் தப்பா பேசினேன்’ என்று அவனது மனதுக்குள் அவனைக் கேள்வி கேட்டுக் கொண்டே பெண்ணவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்…..
ப்ளீஸ் எதுவா இருந்தாலும் அழுதுரு .. இப்படி நீ அமைதியாய் இருக்காத ..? என்று அவன் சொல்ல வர…
அவனை பார்த்து கையெடுத்து கும்பிட்டவள் மறு நிமிடமே அவன் முகத்தை பார்க்காமல் தலையை கீழே குனிந்து கொண்டு நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் … என்று மிக மெல்லியதாக அவளின் குரல் வந்தது…
ஹ்ம்ம் பேசு .. என்று அவன் சொல்ல…
‘ உங்ககிட்ட சும்மா விளையாடலாம்னு தான் காலையில இருந்து நான் உங்ககிட்ட அப்படி நடந்துகிட்டேன் … ஆனா சத்தியமா தப்பான எந்த ஒரு எண்ணத்திலும் கிடையாது… ஏன் எதுக்கு அப்படி எல்லாம் தெரியாது.. உங்க கிட்ட அப்படி பேசணும் அப்படின்னு தோணுச்சு அதனால தான் நீங்க பேசுறதுக்கு நான் எதிர்த்து எதிர்த்து உங்கள் கிட்ட பேசினேன்… ஆனால் நான் பேசுனது உங்களோட மனசு இந்த அளவுக்கு காயப்படுத்தி இருக்கும் அப்படின்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.. அதனால என்ன மன்னிச்சிடுங்க” என்று அவள் அமைதியாக பேச அவனுக்கு அதைக் கேட்டு அவனுக்கு தான் என்னவோ போல் இருந்தது…
“ எனக்கு விளையாட்டுத்தனம் ஜாஸ்தி அது எங்க அம்மாவே அடிக்கடி திட்டுவாங்க… உன்னோட விளையாட்டுனால யாருக்காவது விபரீதமா ஆகிற போகுது அப்படின்னு நிறைய திட்டுவாங்க … ஆனா அப்போல்லாம் நான் கண்டுக்கல அத நெனச்சு… இப்போ நான் வெட்கப்படுகிறேன்…, எங்க அம்மா சொன்னது போல நான் அமைதியாக இருந்திருந்து உங்ககிட்ட விளையாடாம இருந்திருந்தா.., அந்த மாதிரி நீங்க பேசுறத நான் கேட்டிருக்க தேவையில்ல அப்புறம் நான் ஒன்னும் ப்ராஸ்டியூட் பொண்ணு கிடையாது … நான் உங்ககிட்ட ஏற்கனவே சொன்னது போல தான் சைட் அடிச்சிருக்கேன் …,அது கூட என்னோட வரைமுறை என்ன அப்படிங்கறது எனக்கு நல்லாவே தெரியும்.., அப்புறம் இந்த காலத்துல சைட் அடிக்கல அப்படின்னா தான் தப்பு சைட் அடிக்கிறது இல்ல தப்பே கிடையாது …,உங்களுக்கே நல்லா தெரியும் நான் ஒன்னும் யாரையும் பாக்காம சைட் அடிக்காம இருக்குறதுக்கு சாமியார் வேஷம் போட்டு இருக்கலாமே.., எனக்கு அந்த மாதிரி தோணல நான் ஃப்ரீயா உங்க கிட்ட சொல்லணும்னு தோணுச்சு.. அதனாலதான் அப்ப கூட அப்படி சொன்னேன்…ஆயிரம் தான் இருந்தாலும் என்னோட கல்யாணம் ஒரு அரேஞ்ச் மேரேஜா தான் இருக்கணும்.., அப்படின்னு இதுவரைக்கும் நான் யாரையும் காதலிக்கல …வந்த ப்ரொபோசல் கூட அக்சப்ட் பண்ணிக்கல…, எங்க அம்மாவுக்கு எல்லாமே தெரியும்… எங்க அம்மாவ கிட்ட சொல்லாம நான் எதுவும் செஞ்சதும் கிடையாது… எவ்வளவுதான் விளையாட்டுத்தனம் இருந்தாலும் சீரியஸ்னஸ் என்ன அப்படிங்கறது தெரியும் ..,ஏனோ உங்க கூட விளையாடனும்னு தோணுச்சு அதனாலதான் அந்த மாதிரி நடந்து கொண்டேன் …ஆனால் அப்படி நடந்துக்கிட்டது உங்களோட மனசை எந்த அளவுக்கு பாதிச்சி இருக்கும் அப்படின்னு நான் கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல, அதனால என்னை தயவு செய்து மன்னித்துவிடுங்கள். இனிமேல் இந்த மாதிரி உங்ககிட்ட நடந்துக்க மாட்டேன்… யாரையோ லவ் பண்ணுறீங்க அப்படின்னு தானே சொன்னீங்க உங்களுக்கு நான் டிவோர்ஸ் தந்துவிடுகிறேன்…, இனிமே உங்க வாழ்க்கையில நான் குறுக்க வரமாட்டேன் …நீங்க என்னோட கணவரா இருக்க போய் தான் உங்ககிட்ட விளையாடுற , வேற யார்கிட்டயும் நான் அப்படி பேசுறதுக்கு கூட போக மாட்டேன் ..,அதனால என்னோட கேரக்டர் இதுதான் அப்படின்னு தயவுசெய்து இண்ணமே இந்த மாதிரி தப்பா ஜட்ஜ் பண்ணாதீங்க’ … என்று பேசிக்கொண்டு இருக்கும் பொழுது அவளுக்கு அழுகை வர இருந்தும் அந்த அழுகையை அடக்கிக் கொண்டவள் மறுபடியும் பேச ஆரம்பித்தாள்…
இது ஒண்ணும் ப்ரஸ்டியூட் குடும்பம் கிடையாது.., நாங்க கௌரமா தான் வாழ்ந்துகிட்டு இருக்கும் ..,அப்புறம் கல்யாணத்துக்கு என்னமோ சொன்னீங்க இல்ல ..,அந்த கல்யாணம் எதிர்பாராமல் ஏதோ ஒரு விதத்தில் நடந்தது… இன்னும் சொல்ல போனால் எனக்கு ஒண்ணுமே தெரியாது ..,நான் எங்க அம்மா அப்பா கூட ஜாலியா அந்த கல்யாணத்துக்கு வரணும்னு வந்து தான், உங்களுக்கு இப்போ மனைவியா வந்திருக்கு ..,தயவுசெய்து என்னை அந்த மாதிரி பேசாதீங்க …இப்ப கூட உங்ககிட்ட சண்ட போடணும் அப்படிங்கற மைண்ட் செட் எனக்கு கொஞ்சம் கூட கிடையாது…, ஏதோ ஒரு விதத்தில் தான் உங்களோட தோல்ல சாய்ந்துகொண்டு உங்களை கட்டிப்பிடித்து தவிர தப்பான எந்த ஒரு எண்ணத்திலும் கிடையாது.., நான் உங்களோட அனுமதி இல்லாம உங்கள ஹக் பண்ணதுக்கு என்ன மன்னிச்சிடுங்க.., சாரி இனிமே இந்த மாதிரி பண்ண மாட்டேன் ..,அதுக்காக என்னோட அம்மா அப்பாவோட வளர்ப்பை மட்டும் தப்பா பேசாதீங்க.., நீங்க அதை இப்படி பேசுறது மட்டும் அவங்களுக்கு தெரிஞ்சா மறு நிமிசமே உயிரை விட்டுருவங்க ” என்று சொல்லி கதறி அழுது கொண்டிருக்க…
அது வந்து என்று அவன் அவளை சமாதானப்படுத்த அவளின் பக்கமாக வர வேகமாக வர வேண்டாம் என்று இடைநிறுத்தினால் விகிதா…
“நீங்க என் பக்கத்துல வராதீங்க.., சப்போஸ் என் பக்கத்துல வந்து என்னை சமாதானப்படுத்துகிற பேர்ல என்னோட கைய தொட்டால் கூட நான் ஒரு பிராசிடியூட் அப்படிங்கற மாதிரி தான் எனக்கு ஞாபகம் வரும் ..,அதனால தயவு செய்து’ என்று பேசாமல் அவனைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டவள் .தன் கண்களில் விடாமல் வழிந்து கொண்டிருக்கும் கண்ணீரை துடைத்துக்கொண்டே அந்த பெட்ஷீட்டை முழுவதுமாக மடித்து வைத்தவள் இங்க நீங்க படுத்துக்கோங்க… என்று அந்த கட்டிலை காண்பித்தவள் அடுத்த நிமிடம் அந்த ரூமை விட்டு வெளியேறினால் வேகமாக…
“அவள் பேசியது எல்லாம் நினைத்தவனுக்கு மனது கலங்க ஆரம்பித்தது …,அவனுக்கு கோபம் அதிக அளவு வரும்… அப்படி கோபம் வந்தால் அவன் என்ன பேசுகிறான் “என்று அவனுக்கே தெரியாது… பல சமயம் காதம்பரி பாட்டி அவனிடம் இப்படி இருக்காதே… என்று சொல்லி இருக்கிறார் ஆனால் அவன் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அதற்கு எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல் அப்படியே அவன் இருக்க… இப்பொழுது அது எவ்வளவு பெரிய தவறு என்று உணர்ந்து கொண்டவனுக்கு தன் மனைவியான விகிதாவை எப்படி சமாதானம் செய்வது… என்று புரியாமல் தலையில் கை வைத்து உட்கார்ந்தான் …
“ என்னதான் அவள் செய்தது தனக்கு பிடிக்கவில்லை என்றாலும்.., அவளிடம் அந்த மாதிரி பேசியது மிகவும் தவறு… அதுவும் தனக்காக அவள் மணமேடையில் தான் அசிங்கப்படக்கூடாது என்பதற்காக அவள் அம்மா அப்பா உட்கார வைத்திருக்க அவர்களையும் ..,தன் கொச்சைப்படுத்தியது மிகவும் தவறு தன்னை நம்பி … தன்னை நோக்கி வந்தவளை கரம் பிடித்து அவளை பாதுகாக்காமல் தானே அவளை அவதூறாக பேசியது எவ்வளவு பெரிய மகா தவறு …” என்று உணர்ந்து கொண்டவனோ அவளை சமாதானப்படுத்த செய்யலாம் என்று அந்த அறையை விட்டு வெளியேற அதே நேரம் ராஜ்குமார் அவனின் முன்னாள் வந்து நின்றார்… …
திடீரென்று தனக்கு முன்னால் வந்து நிற்கவும் பயந்துவிட்டான் விதுரன்…, அவள் அழுது கொண்டே பேசியது எங்கு வெளியில் கேட்டு இருக்குமோ..!!! அதனால் தான் அவளுடைய தந்தை ராஜ்குமார் தனக்கு முன்னாள் ஏதாவது அதை பற்றி பேசுவதற்காக நிற்கிறாரோ…, என்று மனம் படபடக்க எந்த ஒரு பெற்றோருக்கும் தன் பெண் கலங்கினால் ஆகாது … ஆனால் தான் அவளை பேசக்கூடாத வார்த்தைகள் எல்லாம் பேசி அவளை கலங்க வைத்தது மற்றும் தெரிந்தால் அவர் நொந்து விடுவார்கள்… என்று பயந்து கொண்டே என்ன அங்கிள்..? என்று அமைதியாக அவன் கேட்க….
“ அது அது வந்து எப்படி சொல்லணும்னு தெரியலப்பா… அந்த நாய்க்குட்டி இறந்ததுல இருந்து என்னோட பொண்ணு ரொம்பவே அழுதுகிட்டு இருக்கிறான் இப்ப கூட பாருங்க, ரூம்ல இருக்க கூச்சப்பட்டுக்கிட்டு உங்களுக்கு டிஸ்டர்பன்ஸா இருக்குமே அப்படின்னு அழுதுகிட்டே மேல மொட்டமாடிக்கு போறப்ப… நான் என் பொண்ணு பக்கத்துல போனா கண்டிப்பா அவ கூட சேர்ந்து நானும் அழுதுடுவேன் ..,என் பொண்ணு மனசு உடைஞ்சு சத்தியமா என்னால தாங்க முடியாதுப்பா.., அதனால நீ கொஞ்சம் என்னோட பொண்ண பாத்துக்கிறியாப்பா கூட இருந்து’ என்று ஒரு தந்தையாக தன் மருமகன் இடம் கேட்க…
‘ ஹியோ மாமா ஏன் இந்த மாதிரி எல்லாம் பேசுறீங்க..? அவளை பாத்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு.., அப்புறம் தப்பா நினைச்சுக்காதீங்க இங்க மெடிக்கல் எங்க இருக்கு ..? என்று அவன் கேட்க…
‘ ஏன் பா என்னாச்சு..? எதுக்கு இப்ப மெடிக்கல் போகணும்..?” என்று அவர் கதறி கொண்டு கேட்க…
“ அது இல்ல அங்கிள் … எனக்கு கொஞ்சம் திங்ஸ் வாங்க வேண்டியது இருக்குது… அதனாலதான் நீங்க எதுவும் தப்பா நினைச்சுக்காதீங்க… நீங்க பயப்படற அளவுக்கு எல்லாம் எதுவும் கிடையாது” என்று அவன் சொல்ல…
“ பக்கத்துல தான் பா இருக்குது … என்ன வேணும்னு சொல்லுப்பா நானே போய் வாங்கிட்டு வரேன்..” என்று ராஜ்குமார் சொல்ல அதற்கு முற்றிலுமாக மறுத்துவிட்டான் விதுரன்…
“எப்படி சொல்லுவான் உங்களுடைய பொண்ணுக்கு தான் கன்னத்தில் நான் அடித்ததால், காயம் ஏற்பட்டு அதற்கு தான் நான் மருந்து வாங்க போகிறேன்’ என்று எப்படி சொல்லுவான் சொன்னால் தந்தையின் நிலை என்னவோ அதை அறிந்து தான் அவன் எதுவும் பேசாமல் தனக்கு ஏதோ ஒன்று வேண்டும் என்று அவன் சொல்லி கேட்க…
அவர் மெடிக்கல் எங்க இருக்கிறது… என்று சொல்ல …,சரி என்று கேட்டுக் கொண்டவன் போக ….போகும் அவனை கூப்பிட்ட ராஜ்குமார் தன்னுடைய மகள் ஸ்கூட்டியின் சாவியை , விதுரனின் கை கையில் கொடுக்க ..,அதை வாங்கிக் கொண்டவனோ சரிங்க அங்கிள் என்று சொல்லிவிட்டு மெடிக்கல் கடைக்கு சென்று விகிதாவிற்கு தேவையான ஆயின்மென்ட்டை வாங்கிக் கொண்டு மறுபடியும் வீட்டிற்கு வந்தவன் .., நேராக விகிதா இருக்கும் மொட்டை மாடிக்கு சென்றான்…
(உடல் அளவில் காயப்படுத்தியதற்கு மருந்து வாங்கியவன் மனதளவில் காயப்படுத்தியதற்கு எப்படி மருந்து கொடுப்பானோ..!!!!)
மான்விழியாள் வருவாள் …