முரடனின் மான்விழி

5
(3)

அவளிடம் பேசுவதற்காக .., மன்னிப்பு கேட்பதற்காக …. அவளை நோக்கி படியேறி செல்ல அதே நேரம்.. அவன் மேல போவதை பார்த்து  ராகினி மாப்பிள தம்பி… என்று கூப்பிட்டாள் … 

 

 என்ன அத்தை..?  என்று அவன் திரும்பி பார்க்க… 

 

“ அது அது வந்து பாப்பா சாப்பாடு எதுவுமே வேண்டாம்ன்னு  சொல்லிருச்சு .. ஆனா அவள் பசி தாங்க மாட்டாள் … அதனால நீங்க இந்த பால் மட்டும் அவளை குடிக்க வச்சிறீங்களா .., நானே கொண்டு போய் கொடுத்துடுவேன்..  இருந்தாலும் .., நீங்க போறீங்களே அப்படின்னு உங்ககிட்ட கொடுக்கிறேன் தப்பா நினைச்சுக்காதீங்க தம்பி.. ”  என்று விதுரனிடம் கொடுக்க… 

 

“ இதுல என்ன அத்தை இருக்குது…,  பரவால்ல நீங்க கொடுங்க நானே கொண்டு போய் கொடுத்துவிடுகிறேன்…, அப்புறம் நீங்க இந்த மாதிரி பயந்து பயந்து எல்லாம் என்கிட்ட பேச வேண்டாம்…, சும்மா சகஜமா பேசுங்க….  நான் ஏற்கனவே சொல்லிட்டேன்…  நான் உங்கள் பையன் மாதிரி,  அப்படின்னு நீங்க முதல் நினைங்க அத்தை … நம்ம எல்லாருமே சொந்தம் ..,   நீங்க இந்த மாதிரி எல்லாம் பேசுறதுனால தான் எனக்கு கொஞ்சம் தயக்கமா இருக்குது…,  நம்ம வேற வீட்டுக்கு வந்து இருக்குமோ அப்படின்னு …!!! அதனால தயவு செய்து அத்தை இன்னுமே இந்த மாதிரி பயந்து பயந்து பேசுறது எல்லாமே விட்டுருங்க ..,  சகஜமா என் கூட பேசுங்க ஒன்னும் பிரச்சனை கிடையாது” என்று சொல்லியவன் ராகினியின் கையில் இருக்கும் பாலை வாங்கிக் கொண்டு மேலே மொட்டை மாடிக்கு போக … 

 

இவனையே பார்த்து நின்று கொண்டு இருக்கும் ராகினியிடம் மறுபடியும் கீழே வந்து பேச ஆரம்பித்தான்… . 

 

“ அத்தை இத  எப்படி உங்க கிட்ட சொல்லுறதுன்னு தெரியல ஆனா உங்க கிட்ட சொன்னா கொஞ்சம் பெட்டரா இருக்கும் அப்படின்னு ஃபீல் பண்ணுகிறேன்…, எங்க ரெண்டு பேருக்கும் இப்போ சாந்தி முகூர்த்தம் வேண்டாம் அத்தை ..,நாங்க ஒருத்தருக்கு ஒருத்தர் மனசார புரிந்தக்கு  அப்புறம் எங்களோட சாந்தி முகூர்த்தம் நடக்கட்டுமே ப்ளீஸ்..,  நீங்க அதை பத்தி எதுவும் நினைச்சுக்காதீங்க ..,இப்போதைக்கு என்னுடைய மனைவி அதுக்கு தயாரா இல்லை அப்படின்னு எனக்கு நல்லாவே தெரியும் .., நானும் அவள மாதிரி தான் அதுக்கு இப்போதைக்கு என் நான் தயாரா இல்லை அத்தை… அதனால ரெண்டு பேருக்குள்ள ஒரு அண்டர்ஸ்டாண்டிங் வந்ததுக்கு அப்புறம் நானே உங்ககிட்ட சொல்லுறேன் அத்தை” என்றவன் சற்று தயங்கிக் கொண்டே … ஆனால் பேச வந்ததை முழுவதுமாக  சொல்ல… 

 

ஆனா தம்பி ….. அத்தை என்று காதம்பரி பாட்டி ஏதாவது சொல்லி விடுவார்களோ என்று பயந்து கொண்டு ராகினி தயங்கி கொண்டிருக்க …. … 

 

“ அத்தை நீங்க அத பத்தி தப்பா நினைச்சுக்காதீங்க …,பாட்டிக்கு ஏற்கனவே தெரியும் இத பத்தி … நான் ஏற்கனவே சொல்லிட்டேன்… இருந்தாலும் சம்பிரதாயத்துக்காக தான் ஜோசியரை வர வச்சு பார்த்தாங்க …,இப்ப அதுவும் பிரச்சனை கிடையாது…. நான் பாட்டி கிட்ட சொல்றேன்” என்று விதுரன் சொன்னவுடன் சற்று நிம்மதியாக உணர்ந்தால் ராகினி… 

 

போகும் அவனைப் பார்த்துக் கொண்டு ராகினி நின்று கொண்டு இருக்க…,  ராகினியின் பின்னால் அவளின் தோளில் கைவைத்து ராஜ்குமார் நிற்க… 

 

தன் தோளில் கை வைத்தது யார் என்று உணர்ந்து கொண்ட ராகினி..,  பின்னால் திரும்பி ராஜகுமாரை பார்த்து “ எனக்கு இப்ப தாங்க கொஞ்சம் திருப்தியா இருக்குது…  நான் ஆரம்பத்தில் ரொம்பவே பயந்தேன்,  என் பொண்ணுக்கு யாருமே அறிமுகமாகாத ஒரு பையன கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டேன் அப்படின்னு நினைச்சு கவலைப்பட்டுக்கிட்டே இருந்தேன் … அதுவும் மாப்ள விவசாயம் பார்க்கிறதை பாத்துட்டு இன்னுமே கொஞ்சம் கவலையா தான் இருந்துச்சு … ஆனா இப்பதான்  நெனச்சது எல்லாமே தப்பு அப்படின்னு ஒரு நிமிஷத்துல மாப்பிள தம்பி எனக்கு நல்லாவே புரிய வைடச்சுட்டாங்க ..,  இப்போ எனக்கு நம்பிக்கையா இருக்குது என்னோட மாப்பிள்ளை தம்பி …, கண்டிப்பா என்னோட பொண்ண நல்லாவே பார்த்துபங்க  அப்படின்னு”  என்று மனதார ராகினி ராஜ் குமார்  தோளில் சாய்ந்து கொண்டு தன் மனதில் தோன்றியதை சொல்ல.. 

 

“ வளர்ப்பு யாரோட வளர்ப்பு ..,  என்னோட சின்னம்மா கூட வளர்ப்பு அதனால கண்டிப்பா நல்ல பையனா தான் வளர்ந்து இருப்பான் …. அதுக்காக தான் என்னை ஏதுன்னு கேட்காமல் என் பொண்ணு கொடுத்தேன் …. ஆனால் நான் நம்புனதுக்கு அவன் எந்த ஒரு தப்பும் செய்யல.., இன்னும் சொல்லப்போனால் நாம் பார்த்திருந்தால் கூட இப்படி ஒரு பையனை பார்த்திருக்க மாட்டோம் அந்த அளவுக்கு  மாப்பிள்ளை ரொம்பவே கேரிங்கா நல்ல மாப்பிள்ளையா இருக்காரு”  என்று மனதார ராஜ் குமார்  சொல்ல அதற்கு ராகினியும் ஆம் என்று தலையசைத்தாள்… 

 

 அந்த இரவின் வெளிச்சத்தில் நிலவினை நோக்கி பார்த்துக் கொண்டிருந்த அவளின் கண்கள் கண்ணீர்  வற்றி போயிருந்தது…  பாவம் அவளும் எவ்வளவுதான் அழுது கொண்டிருப்பாள்…  இதற்கு மேல் அழுகுவதற்கு உன் உடம்பில் தண்ணீர் இல்லை என்று கண்ணீர் வரவில்லை போலும் .., அவள் அந்த நிலவினை வெறுத்து பார்த்துக் கொண்டிருந்தால்..,  கைகளை கட்டிக்கொண்டு ….. அவளை சுற்றி காய்கறிகள் நிறைந்து செடிகள் இருக்க..,  பூக்கள் மலர்ந்து பூத்துக் குலுங்கி கொண்டிருக்க.., ஆனால் அதை எல்லாம் ரசிக்கும் மனநிலையில் அவள் இல்லை அவளின் ஒரே இடமான அந்த அமைதியான இடம் கூட இப்பொழுது அமைதியற்று காணப்பட்டது போல் அவளுக்கு தோன்ற..,  ஏனோ அதனைப் பார்க்க பிடிக்காமல் அந்த நிலவில் தெரியும் ஒற்றை நிலாவை பற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்… 

 

“ நீ எவ்வளவு அழகா தனியா தனுச்சு போய் அழகா  இருக்கிற..,  ஆனா உன்னை எல்லாருமே ரசிக்கிறார்கள் …,ஏன் நானுமே உன்னை பல தடவை ரசித்து இருக்கேன்..,  ஏனோ தெரியல உன்ன பார்க்கும்போது ஒரு அமைதி எனக்குள் வந்துகிட்டே இருக்கும்..,  உன்ன மாதிரி பளிச்சுன்னு எல்லா இடத்திலும் தெரியிற மாதிரி இருக்கணும்…,  அப்படின்னு நான் பல தடவை நினைச்சு இருக்கேன் ஆனா அப்படி நினைச்சது தப்பு போல அப்படி நினைச்சா நம்மளுக்கு இன்னொரு பெயர் வைப்பாங்க அப்படிங்கறதும் இப்பதான் தெரியுது”  என்று நினைத்துக் கொண்டவள் … அவன் தன்னை சொல்லாத குறையாக பிராசிடியூட் என்று தனியாக சொல்லியது நினைவு வர அவள் மனது பாரமாக உணர்ந்தால்… பப்பி குட்டி போனது கூட அவளுக்கு அந்த அளவிற்கு ரணமாய் வலிக்கவில்லை …ஏனோ  நீண்ட பெரிய கத்தியை கூர்முனையாக்கி அவளின் இதயத்தில் அழுத்தமாக பலமுறை குத்தியது … போல் ரணமாய் வலித்தது அவனின் வார்த்தைகள்…  அவன் கன்னத்தில் அடித்த காயம் கூட அவளுக்கு வலிக்கவில்லை ஆனால் கன்னத்தில் அடிக்காமல் அவளின் நாவினால் அடித்து சொல்லிய வார்த்தைகள் மிகவும் ரணமாய் வலிக்க .., அதயே நினைத்துக் கொண்டு அவள் அந்த நிலவினை பார்த்துக்கொண்டு இருந்தால்… 

 

 அவள் பெயர் என்னவென்று கூட அவனுக்குத் தெரியவில்லை…  அவன் அமைதியாக நின்று கொண்டு இருந்தன்… இரவு ஒளி வெளிச்சத்தில் சுற்றி இருந்த பசுமை கூட அவன் கண்களுக்கு தெரியவில்லை …. எப்பொழுதும் அவன் இருக்கும் இடத்தில் பசுமை இருந்தால் முதலில் அவனின் கண்கள் அந்த பசுமையை நோக்கிதான் செல்லும்…, ஆனால் இப்பொழுது ஏனோ பெண்ணை நோக்கி செல்ல அந்த இரவின் வெளிச்சத்தில் அழகாய் வானத்தில் வீற்றிருக்கும் அந்த நிலவைப் பார்த்துக் கொண்டிருந்தவளின் பெண்ணவளை   நோக்கி தான்  பார்வை நோக்கியது அவனுக்கு… 

 

“ தன் பக்கத்தில் இருந்தாலே ஏதோ ஒன்றை பேசிக் கொண்டிருப்பவள் இன்று ஏனோ தன்னிடம் பேச பிடிக்காமல் மௌனத்தை தத்தெடுத்துக் கொண்டு தான் இருக்கும் இடத்தில் கூட இல்லாமல் வெளியில் வந்து .., அந்த நிலவினை பார்த்துக் கொண்டிருப்பவளின் மனது எவ்வளவு வலிக்கும்…”  என்று உணர்ந்து கொண்டவனோ அவளின் அருகில் சற்று படபடப்னே  சென்றான்…

 

“ என்ன மன்னிச்சுடுடி நீ இவ்வளவு அமைதியா இருக்குறதுக்கு காரணமே நான் தான் உன்னோட குழந்தைத்தனமான அந்த செயலை ரசிக்காம அதுல நான் ஆபாசத்தை பார்த்து உன்னை திட்டுனது எவ்வளவு தவறுன்னு இப்பதாண்டி புரியுது….  ஆனா காலம் கடந்த சூரிய நமஸ்காரம் செய்வதில்லை ஒண்ணும் பிரயோஜனம் கிடையாது…  செஞ்ச தப்புக்கு தண்டனதான அனுபவிக்கணும் …எனக்கு எவ்வளவு தண்டனை வேணும்னாலும் கொடுக்குறதுக்கு நீ தயாராயிரு…  ஆனால் தயவுசெய்து நீ இந்த மாதிரி இருக்கிறது…  என்னால் கொஞ்சம் கூட தாங்கிக்க முடியல நான் ஒத்துக்குறேன் … இன்னைக்கு தான் உன்னைய பார்த்து இருக்கிறேன் இன்னைக்கு தான் நானும் உன்னை கல்யாணம் செய்திருக்கிறேன் ….  ஆனா எனக்கு எந்த மாதிரி வலி  எல்லாம் இருக்கும் அப்படின்னு கொஞ்சம் கூட யோசிக்காமல் உன்னை உடல் அளவலையும் மனதளவையும் ரொம்பவே காயப்படுத்திட்டேன்”  என்று அவன் மனதுக்குள் நினைத்துக் கொண்டே அவளின் அருகில் பின்னால் நின்றான்… 

 

 அவளின் பெயர் தெரியாததால் எப்படி கூப்பிடனும் என்று கூட அவனுக்கு தெரியவில்லை … அதனால் அவளின் தோளினை தொட்டு கூப்பிடலாம் என்று அவன் கை போக … “ அதே நேரம் ப்ளீஸ் நீங்க என்ன தொடாதீங்க .., நீங்க அப்படி என்ன தொட்டீங்கன்னா நான் ஒரு பிராசிடியூட் அப்படின்னு நீங்க சொன்னதுதான் எனக்கு ஞாபகம் வருது…  அதனால தயவு செய்து என்னை தொடாதீங்க”  என்று அவள் ரூமில் தன் தொட வந்த பொழுது அவள் கையெடுத்து கும்பிட்டு அழுதது , அவன் கண் முன் வர வேகமாக தன்னுடைய கையை மடக்கிக்கொண்டு தொடையில் குத்திக்கொண்டான்…  அவள் அப்படி சொல்லும் பொழுது எவ்வாறு  மனதிற்குள் ரணத்தை வைத்து வெளியில் அப்படி சொல்லி இருப்பாள்..  என்று நினைத்துக் கொண்டவனின் உள்ளம் கதறியது மன்னித்துவிடு என்று 

 

‘அம்மு”  என்று அவளைக் கூப்பிட… 

 

 முதலில் அவள் ஏதும் கண்டுகொள்ளாமல் கையை கட்டிக்கொண்டு ….அந்த நிலவினை பார்த்துக் கொண்டிருந்தாள்….  அவன் கூப்பிட்டது கூட அவள் காதில் விழவில்லை …. எப்படி விழும்..?  அவன் தான் அம்மு என்று கூப்பிட்டு பிராக்டிஸ் செய்து கொண்டிருந்தானே,  அவன் பேசியது கூட வெளியில் காற்று கூட கேட்காத அளவிற்கு அவன் மிக மெல்லிதாக அவனின் உதட்டை அசைத்து உச்சரித்து கொண்டிருக்க…  பாவம் பெண்ணவளுக்கு எப்படி புரியும் அவன் கூப்பிட்டது… 

 

 “ அம்மு”  என்று இந்த முறை அவள் காதுக்கு கேட்குமாறு சற்று சத்தமாக கூப்பிட்டவன் அவள் திரும்பியவுடன் ஜெர்காகி நின்றான்… 

 

“ ரூமில் கூட அவளின் முகத்தை சரிவர அவன் பார்க்கவில்லை..  அந்த அளவிற்கு அவள் குனிந்து இருந்தால்..,  ஒரு செகண்ட் தான்…  அவள் உன்னை பார்த்திருப்பாள் .., மறுநிமிடமே அவன் பார்க்கும் பொழுது அவள் குனிந்து இருக்க…,  இப்பொழுது நேருக்கு நேர் அதுவும் பக்கத்தில் அவளின் முகத்தை பார்ப்பதற்கு ஏன்டா அப்படி பேசினோம் ….என்பது போல் ஆகிடுச்சு அழகாக காலையில் பொலிவுடன் ரசிக்கும் அந்த முகம் இப்பொழுது பொலிவிழந்து களையிழந்து கண்களில் கண்ணீர் வற்றி போய் கண்ணீர் வடிந்த தடங்கல் அப்படியே இருக்க,  கண்களும் சிவப்பு நிறமாக இருக்க அவள் முகமே பார்ப்பதற்கு பாவமாக இருந்தது…,  தன்னிடம் பேசும் பொழுது எவ்வளவு உற்சாகமாக தன்னிடம் வம்பிழுக்கும் பொழுது அவள் முகம் எவ்வளவு பிரகாசமாக இருக்க .., ஏனோ இப்பொழுது அது எல்லாம் முற்றிலும் தன்னால் தொலைந்தது நினைத்து பார்த்தவனுக்கு தன்னையே கன்னத்தில் பலர் பலர் என்று அறியலாம் போல் இருந்தது அதுவும் அவன் மறைந்த தடையங்கள் வேறு அவள் கன்னத்தில் இருக்க அது மிகவும் சிவப்பு நிறமாக ரத்தம் கட்டியது போல் தடங்கள் அப்படியே பகிர்ந்து இருந்தது …. அவன் கழை  வெட்டி மம்பட்டியால் பிடித்த கை..,  எப்படி பெண்னின் பிஞ்சு கன்னங்களை தாக்கி இருக்கும்”  என்று நினைத்தவனோ அங்கு உள்ள சுவற்றில் அவனின் கைகளை குத்திக் கொண்டிருந்தான்…. 

 

அம்மு என்று அவன் மறுபடியும் அவள் தன்னை பார்ப்பதை பார்த்து அவன் கூப்பிட… 

 

‘என்னோட பேர் விகிதா…  சொல்லுங்க எதுக்கு என்னை கூப்பிட்டீங்க..?” என்று குரல் வராமல் வரவழைத்த குரலில் அவனிடம் கேட்க… 

 

“  இருக்கட்டும் பரவாயில்லை உன்னுடைய பெயர் என்ன அப்படிங்கறது எனக்கு தெரிஞ்சுக்கணும் அப்படிங்கறது அவசியம் கிடையாது …, நான் உன்ன இனிமே அம்மு என்று தான் கூப்பிடுவேன்…  எனக்கு அந்த பேர் ரொம்ப புடிச்சிருக்கு அப்புறம் சாரி”  என்று அவன் சொல்ல… 

 

பேசியதற்கு எதுவும் கண்டுகொள்ளாமல் அவள் அமைதியாக இருக்க… 

 

 “ அவன் மேலும் பேச ஆரம்பித்தான்…  அது வந்து … என்று அவன் பேச ஆரம்பிக்க ஆனால் அவனின் வார்த்தைகளும் தந்தி  அடிக்க …,  பெண்ணவளும் அவனை பார்க்காமல் வேறு பக்கம் பார்வையை பதித்துக்கொண்டு..,  அப்படியே நிற்க வேகமாக தன் கையில் இருக்கும் ராகினி கொடுத்த பாலை அவளிடம் அவள் பக்கமாக நீட்டி..,  உனக்கு தான் கொண்டு வந்திருக்கிறேன் … உங்க அம்மா கொடுத்து விட்டாங்க இந்தா “ என்று அவளிடம் கொடுக்க…

 

 எதுவும் பேசாமல் அந்தப் பாலை வாங்கிக் கொண்டவள் .., பக்கத்தில் வைத்துவிட்டு நான் கொஞ்ச நேரம் தனியாய் இருக்கணும்னு நினைக்கிறேன் ப்ளீஸ் என்னை டிஸ்டர்ப் பண்ணாம இருக்கீங்களா…  நீங்க போய் ரெஸ்ட் எடுங்க…  ரூமில்…  என்று அவன் அவனை  பார்க்காமல் வேறு பக்கமாக பார்த்துக் கொண்டு சொல்லியவள்,  மறுபடியும் அந்த நிலவினை பார்க்க… 

 

 “ வாடக்காத்து ரொம்ப அடிக்குது..,  இந்த காத்துல வெளியில நின்னா கண்டிப்பா சளி புடிச்சிக்கும்.., அதனால நீ ரூமுக்கு வா” என்று அவன் சொல்லி உள்ளே கூப்பிட…  

 

 “ இன்னைக்கு தான் என்னைய பார்த்து இருக்கீங்க .., 

இன்னைக்கு தான் என் கழுத்துல தாலி கட்டி இருக்கீங்க ஆனா பல நாள் பழகியது போல என்கிட்ட இவ்வளவு உரிமையா பேசுற மாதிரி நீங்க நடிக்க வேண்டாம்”  என்று சொல்லியவள் மறுபடியும் அவளின் பார்வை என்னவோ அந்த நிலவினை நோக்கி தான் சென்றது…. 

 

“ இங்க பாரு நான் செஞ்சது தப்புதான்… அதுக்காக நான் உன் கிட்ட மன்னிப்பு கேட்கிறதுக்கு எல்லாம் கூச்சப்பட மாட்டேன்..,  தாராளமா நான் தப்பு காண மன்னிப்பு கேட்பேன் …. அப்புறம் நீ என்ன தண்டனை கொடுத்தாலும் சரி…  என் மேல தப்பு இருக்கறதுனால நான் அதை அக்செப்ட் பண்ணிக்கிறேன்..  ஒரு பொண்ண எந்த மாதிரி எல்லாம் பேசக்கூடாதோ நான் கண்டிப்பா அந்த மாதிரி தான் உன்கிட்ட பேசி இருக்கிறேன்…  உன்னோட மனசு எவ்வளவு காயப்படும் அப்படின்னு எனக்கு நல்லாவே தெரியும் … அதனால என்னை மன்னிச்சிரு அப்புறம் நீ எந்த மாதிரி தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்கிறேன்” என்று அவளிடம் சொல்ல…. 

 

“ நீங்க எதுக்கு என்கிட்ட மன்னிப்பு கேக்குறீங்க .., உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது .., அப்புறம் மன்னிப்பு கேட்பதற்கு அவசியமும் கிடையாது…  நீங்க சாதாரணமா ஒன்னும் அப்படி சொல்லலையே உங்ககிட்ட நடந்துக்கிட்ட முறையை வைத்து தானே சொன்னீங்க..,  எந்த ஆம்பளைக்கா இருந்தாலும் சந்தேகம் வரத்தான் செய்யும் …. காலையில் பார்த்த பையன் கிட்ட அத்துமீறி நான் நடந்துக்கிட்டத வச்சு சாதாரணமா சந்தேகம் வரத்தான் செய்யும் அதே மாதிரி தான் உங்களுக்கும் வந்து இருக்கு , அதுக்காக நீங்க மன்னிப்பு கேக்கணும் அப்படிங்கிறது அவசியம் கிடையாது என் மேலயும் தப்பு இருக்கு யாரு என்னன்னு தெரியாம என்னோட கணவன் அப்படிங்கற ஒரு உரிமையில் இந்த மாதிரி செஞ்சது தப்புதான் … அதனால நீங்க வேணா என்னை மன்னிச்சுக்கோங்க”  என்று சொல்லியவள் மறுபடியும் மறுபக்கம் திரும்பிக் கொள்ள… 

 

“ ப்ளீஸ் நீ இப்படி பேசாத எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ஏற்கனவே உன் மனதை காயப்படுத்திட்டேன் .., அப்படின்னு கஷ்டத்துல இருக்கேன் இப்படி பேசி இன்னும் காயப்படுத்தாத” என்று அவன் சாதாரணமாக அவளிடம் சொல்ல… 

 

 அதற்கு எந்த ஒரு பதிலும் சொல்லாமல் அவள் அமைதியாக இருக்க… 

 

அந்தப் பால் குடிக்க வேண்டி தானே..,  எதுக்கு அங்கேயே வச்சிருக்க வாடக்காத்து வேற அடிச்சுக்கிட்டு இருக்குது … அப்புறம் இந்த பால் வேற குளிர்ந்து போயிருச்சுன்னா நல்லாவே இருக்காது…  அதனால பஸ்ட் அதை குடி என்று அதை கையில் எடுத்தவன் அவளிடம் வம்படியாக கொடுக்க… 

 

 “ இதெல்லாம் எதுக்கு நீங்க செய்யறீங்க ..? நீங்க யாரு என்னன்னு கூட எனக்கு தெரியாது அப்புறம் நம்ம ரெண்டு பேருக்கும் கொஞ்சம் கூட பொருந்தல உங்களோட டேஸ்ட் வேறயா இருக்குது…,  என்னோட டேஸ்ட் வேறயா இருக்குது பாருங்க நீ இப்ப கூட  மடத்தனமா உங்க  என்னைய வச்சு கம்பர் பண்ணுறேன் சாரி நீங்க ஒரு பொண்ண லவ் பண்றீங்களா …!!! தாராளமா நீங்க அவங்களே கல்யாணம் பண்ணிக்கோங்க…  உங்களுக்கு புடிச்ச மாதிரி உங்களோட வாழ்க்கை ஆரம்பம் வச்சுக்கோங்க…  அப்புறம் நீங்க கேட்ட மாதிரி நான் உங்களுக்கு டைவர்ஸ் கொடுத்துடறேன்… சாரி உங்ககிட்ட காலையில் அப்படி நடந்துக்கிட்டதுக்கு”  என்று மறுபடியும் மன்னிப்பு கேட்டவளின் போன் அலறியது …

 

“ அவள் போன் அலறியவுடன் அவனின்  நினைவு என்னவோ கார் ஓட்டிக்கொண்டு இருக்கும் பொழுது வந்த  போனில் இருக்கும் நபர் தான் இப்பொழுதும் கால் செய்துகிறார்களோ..!!”  என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு அந்த போனில் தொடுதுறையில் இருக்கும் நபர் யார் என்று அவன் பார்ப்பதற்கும் முயற்சி செய்ய … 

 

அவன் பார்ப்பதற்கு முயற்சி செய்வதை பெண் அவள் பார்த்துவிட்டு..,  தன்னுடைய போனில் இருக்கும் ஸ்கிரீனை நன்றாக அவன் பக்கம் காண்பித்து விட்டு அந்த காலை அட்டென்ட் செய்ய… 

 

 அவன் நினைத்தது போலவே,  காரில் வரும் பொழுது போன் பண்ணிய நபர் தான் இப்பொழுதும் அவளுக்கு கால் செய்திருக்கிறார்கள் ஆனால் இந்த முறை ஏனோ அவனுக்கு கோபம் வரவில்லை,  அவன் மனதில் தான் நான் யாரையும் காதலிக்கவில்லை…  ஒன்லி ஒன் சைட் மட்டும் தான் அடிப்பேன் என்று சொன்னது அவனின் மனதில் ஆணித்தரமாக பதிந்திருக்க… அனல்  இப்பொழுது எதற்காக அந்த நபர் மறுபடியும் கால் செய்திருக்கிறார்கள் என்ற எண்ணமே வர … தவறாக அவளின் மேல் அந்த எண்ணம் வராமல் இருக்க … ஆனால் எதற்காக இப்பொழுது ஃபோன் வந்திருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் அவன் அவளையே பார்த்து கொண்டிருக்க … 

 

இங்கு அவன் பார்ப்பத்தை  பெண்ணவள் பார்த்தாலும் அவனை கண்டு கொள்ளாமல் அந்த போன் அன்டன் செய்து காதில் வைத்தவள் … அடுத்த நிமிடமே “அப்பு குட்டி , ப்ளீஸ் அழுகாம சொல்லு”  என்று சொல்லியவளின் குரலில் பதட்டம் நிறைந்து போய் இருந்தது … 

 

மான்விழியாள்  வருவாள் …. 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!