முரடனின் மான்விழி

5
(5)

“அந்த குழந்தையை தூங்க வைத்து விட்டு வெளியில் வந்தவன் ..,இதுக்காக தான், நீ அவசர அவசரமா உங்க அம்மாகிட்ட பொய் சொல்லிட்டு வந்தியா..?” என்று அவளிடம் கேட்க…. 

 

“ஹ்ம்ம் ஆமா..,அம்மாவுக்கு இது எதுவுமே தெரியாது …அம்மாவுக்கு தெரியாம தான் நான் இங்க வந்துட்டு போறேன்….அம்மாவுக்கு மட்டும் தெரிஞ்சா..,  உனக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை அப்படின்னு கண்டிப்பா திட்டுவாங்க அப்படிங்கிறது என்னுடைய எண்ணம்…”   என்று அவள் சாதாரணமாக அவனிடம் சொல்ல… 

 

“ மொத்தமாகவே இங்க வர்றது தெரியாதா..?  இல்ல இது மட்டும் தெரியாதா..?  நைட் நேரத்துல வர்றது ..”என்று அவளிடம் தனியாக அவன் பிரித்து வைத்து  கேட்க… 

 

 “ இல்லை இல்லை அம்மாவுக்கு நான் ஆசிரமம் போவேன் அப்படிங்கிறது தெரியும் ….. ஆனா நைட்டு நேரத்துல தெரியாத்தனமா வீட்டை விட்டு வெளியில் வந்து இவங்கள பார்க்கிறது எதுவும் தெரியாது …அப்படி அம்மாவுக்கு தெரிஞ்சா கண்டிப்பா நைட்டு நேரத்துல என்ன வெளியில் விடுவதற்கு…,அக்செப்ட் பண்ணிக்க மாட்டாங்க … அதனால தான் நீ எப்பயாவது இப்படி ஒரு எமர்ஜென்சி நேரத்துல நான் வந்து அவங்கள பாத்துக்குவேன்”  என்று அவள் சற்று பயந்து கொண்டே அவனிடம் சொன்னால்….  ஏனென்றால் இதற்கு ஏதாவது அவன் திட்டி விடுவானோ என்ற பயம் அவளுக்கு  இருக்க..,  சற்று பயந்து கொண்டே சொன்னால்… 

 

 அதை கவனமாக கேட்டுக் கொண்டவனோ இனிமே  இந்த மாதிரி தெரியாத்தனமா வந்தேனா..,  கண்டிப்பா நானே அத்தை கிட்ட சொல்லுவேன் … ஆனா தெரியாத்தனமா வர்றதுக்கு பதில்  என்னையும் கூட கூட்டிட்டு வா…,  நான் சொல்ல மாட்டேன் டீல் ..  எப்படி”  என்று அவளிடம் கேட்க…அவளோ உதட்டை சுழித்துக்கொண்டு உட்கார்ந்தால்… 

 

“ உதட்ட சுழிக்கும்போது கூட கொஞ்சம் அழகா தாண்டி இருக்கிற”  என்று மனதிற்குள் அவளை ரசித்துக்கொண்டவனோ … இப்பொழுது எதுவும் பேசாமல் அவளின் பின்னால் உட்கார்ந்து ..,அவளின் இடுப்பில் நன்றாக கையை கட்டிக்கொண்டு..,  அவள் முதுகினில் சாய்ந்து படுத்திருக்க… 

 

 “ என்னது இது கையை எடு “ என்று வேகமாக அவள் கையை தட்டி விட்டு…  அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டு இருக்க… 

 

“  என்ன பிரச்சனை உனக்கு..?  இப்போ எனக்கு தூக்கம் நிறைய இருக்குது ..? நான் உன்னைய புடிச்சுகிட்டு தூங்காமல் இருந்தேனா..,  கண்டிப்பா கீழே விழுவதற்கு நிறையவே சான்ஸ் இருக்குது .., அதனால தான் உன்னை பிடிச்சுகிட்டு தூங்கணும் மத்தபடி தப்பான எண்ணத்துல” என்றவன் சொல்ல வர..,  வேகமாக அவனை பார்த்து கையெடுத்து கும்பிட்டு அவள் அமைதியாக வண்டியை ஸ்டார்ட் செய்தாள் …  

 

 அவன் தன் மேல் சாய்ந்து இருப்பது கூட அவளுக்கு பெரிதாக தோன்றவில்லை ..,ஆனால் அவன் இடுப்பில் கைவைத்து அவளை அணைத்துக் கொண்டு படுத்திருப்பது ஏனோ பெண்னவளுக்கு சற்று இடைஞ்சலாக இருக்க…,  சற்று நெளிந்து கொண்டே அந்த வண்டியை அவள் ஒட்டிக்கொண்டு இருக்க… 

 

 “ஹே வண்டி அங்குட்டு இங்குட்டு போய்க்கிட்டு  இருக்கிற மாதிரி தோணுது … அதனால ஒழுங்கா வண்டியை ஓட்டு.,உனக்கு ஓட்ட தெரியலன்னா தயவு செய்து என்கிட்ட கொடு…  நான் ஹாஸ்பிடல் போவதற்கு விரும்பல” என்று சொல்லியவன் மேலும் அவளின் தோளில் நன்றாக சாய்ந்து கொண்டு முகத்தை அவளின் முதுகினில் பதித்து இருக்க… 

 

 “எனக்கு நல்ல வண்டியை ஓட்ட தெரியும் “ என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டவள்…நேராக வண்டியை ஒட்டிக் கொண்டிருக்க அவனும் பேச ஆரம்பித்தான் அவளிடம்…

 

 “ நான் கேட்கிறேன்ன்னு  தப்பா நினைச்சுக்காத..,அந்த போன்ல ஒரு பெரிய பையன் போட்டோ இருந்தது…ஆனால் இங்கு வந்து பார்த்தா கொஞ்சம் சின்ன பையனா..,  ரொம்பவே சின்ன பையனா இருக்கிறான் …,அப்புறம் ஏன் நீ அவனோட பெயரையும்,  அந்த போட்டோ போட்டு பதிஞ்சு வச்சிருக்கேன்..,  ஆக்சுவலி நான்  உன்ன தப்பான எண்ணத்தில் கேட்கல .., ஆனா தெரிஞ்சுக்கணும் அப்படிங்கிற ஆர்வத்துல நான் கேட்கிறேன் … உனக்கு சொல்ல இஷ்டம் இருந்தா சொல்லு ..,இல்லாட்டி இருக்கட்டும் பரவாயில்லை”  என்று அவன் கண்களை மூடிக்கொண்டு அவளிடம் கேட்க…. 

 

 “ அது வேற யாரும் கிடையாது அவனோட அண்ணன் தான்.., அவனோட அம்மா அப்பா ஒரு ஆக்சிடென்ட்ல இறந்துட்டாங்க .., அவனும் அவன் அண்ணனும் தான் இருந்தான் .. அவன் கொஞ்சம் பெரிய பையன்..,  என்னுடைய  ஸ்கூல் மேட்.. இவங்க ரெண்டு பேரும்  ஆசிரமத்துல இருந்து தான் ஸ்கூலுக்கு வருவான்…. என்னோட அம்மா அப்பா தான் அவனுக்கு ஸ்கூல் பீஸ்  எல்லாமே கட்டுவாங்க….  அவனுக்கு மட்டும் இல்ல ஒரு பத்து பேருக்கு என்னோட அம்மா அப்பா தான் ஸ்கூல் பீஸ் கட்டுவாங்க…..  அதுக்காகவே அவங்க வேலைக்கு போகணும் அப்படின்னு என்கிட்ட நிறைய தடவை சொல்லி இருக்காங்க … அவங்கள பார்த்து தான் எனக்கு இந்த பழக்கமே வந்துச்சு … இப்புடி போயிடு இருக்கும் போது . ஒரு ஆக்சிடென்ட்ல அவன் இறக்கவும் இவனால் அக்செப்ட் பண்ணிக்கவே முடியல … தன்னோட அண்ணனும் இறந்துட்டான்,  அப்படின்னு ரொம்ப டிபிரேஷனுக்கு போனான் … அதுக்கப்புறம் தான் அவன் கூட இன்னும் கொஞ்சம் குளோசப் பழகி அவனுக்கு கவுன்சிலிங் எல்லாமே கொடுத்து எந்த அளவுக்கு நார்மலா வச்சிருக்கேன்… இப்போ கூட அந்த பொண்ணுக்கு உடம்பு சரி இல்லேண்ணு அழுகை ஆரம்பிச்சதே .., எங்கு இவளும் விட்டு போயிருவாளோ அப்படின்னு ஒரு பயத்துல தான் .. என்று அவனின் கடந்த காலத்தை பற்றி அவள் சொல்லிக் கொண்டு இருக்க… 

 

“ அதைக் கேட்டுக் கொண்டவனின் மனது பாரமாக இருந்தது … இவர்களை போய் தான் தப்பாக பேசி விட்டோமோ ….!!! இவரது நல்ல எண்ணம் கொண்டு நல்ல செயல் செய்து கொண்டிருப்பவர்களை போய் தான் இப்படி பேசிவிட்டோமோ…!!” என்று எண்ணும் அவனுக்குள் இருக்க லைட்டாக கண்கலங்கினான்…. 

 

 அவன் கண் கலங்கியது பெண் அவளுக்கு ஏனோ அந்த ஈரத்தை உணர்ந்தவள் வேகமாக வண்டியை நிப்பாட்டி அவள் திரும்பி பார்ப்பதற்கு முயற்சி செய்ய…. 

 

 ‘ ப்ளீஸ் எதுவும் திருப்பாத வண்டியை ஓட்டு .., எனக்கு ஒரு மாதிரியா இருக்கு அப்புறம்  அம்மு  உன்கிட்ட அப்படி நடந்துக்கிட்டதுக்கு சாரி.., நான் ஒன்னே ஒன்னு மட்டும் கேட்டுக்கறேன்…  நான் உன்கிட்ட அந்த மாதிரி பேசினதை எதுவும் உங்க அம்மா அப்பா கிட்ட சொல்லிறாத ப்ளீஸ் … எனக்கு அவங்கள பார்க்கும்போதே ஒரு கில்ட்டி பீலிங் வந்துகிட்டே இருக்கு ஆனா அவங்களுக்கு மட்டும் இந்த மாதிரி உண்மை நான் இப்படி பேசுனது எல்லாம் தெரிஞ்சா சத்தியமா அவங்க  நீ சொன்ன மாதிரி தாங்கிக்கவே மாட்டாங்க” என்றவன் சற்று கலங்கிக் கொண்டே அவளிடம் சொல்ல… 

 

 ஒரு வீரமான ஆண்மகன் அழுகிறானா …!!! என்ற எண்ணமே அவனுக்குள் சற்று ஈரத்தை உணர்த்த .., அவள் வேறு எதுவும் பேசாமல் அமைதியாக அந்த வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தாள்…..  ஆனால் அவன் அப்படி அமைதியாக இருப்பது ஏனோ பெண்ணவளுக்கு பிடிக்காமல் இருக்க .., வேறு ஏதோ ஒன்றை பேசிக்கொண்டே வந்தவள்..,  கரெக்டாக வீடு வரவும் அவனை எழுந்துக்க சொன்னாள்… 

 

“ கதவை தட்டுவதற்கு போக .., வேகமாக அவனின் பக்கத்தில் வந்தவள் நீங்க எவ்வளவு தட்டினாலும் திறக்க மாட்டாங்க …ஏன்னா அம்மா ரூமுக்கு உள்ளே இருக்கிறதுனால எதுவுமே கேட்காது … இங்கு இருக்கும் சாவி அந்த இடத்திலிருந்து சாவியை எடுங்க” என்று சாவி வைக்கும் இடத்தை அவள் சொன்னவள் அந்த ஸ்கூட்டியை நிப்பாட்டிக் கொண்டிருக்க அதே போல் அவனும் அந்த சாவியை எடுத்துக்கொண்டு கதவை திறந்தவன் நேராக கிச்சனுக்கு தான் சென்றான்… 

 

 உங்க வீட்டுல மாவு இருக்குதா ..? என்று  அவளிடம் அவன் கேட்க… 

 

 “அதெல்லாம் இருக்குது பிரிட்ஜ்ல இருக்கும்” என்று சொல்லியவள் நீங்க இப்ப என்ன பண்ண போறீங்க ..? என்று அவனிடம் கேட்க… 

 

“  என்னோட அம்முக்கு பசிக்கும்னு நினைக்கிறேன் … அவள் பசி தாங்க மாட்ட .., பால் குடிச்சுட்டு வெளில போய் வந்திருக்க , இப்போ அதுனால பசி எடுக்க ஆரம்பிச்சுருக்கும் .., அவளுக்கு  நான் இப்ப தோசை சுட போறேன்’ என்று சொல்லியவன் அவளின் பதிலை கூட எதிர்பாராமல் என்னென்ன எங்க இருக்கிறது என்று கேட்டுக் கொண்டே அவன்  தோசை சுட ஆரம்பிக்க ஏனோ ஆடவனை ரசித்துக்கொண்டே இருந்தால் ஆனால் அவ்வப்பொழுது அவளின் மனம் ஏதோ ஒன்றை எச்சரிக்கை செய்ய சற்று அமைதியாகவும் இருந்தால் அவனிடம் அதிகம் பேசாமல்

 

உங்களுக்கு சமைக்க தெரியுமா ..? எப்பொழுது தெரியும்? எப்படி தெரியும் / என்று அவனிடம் கேட்க…. 

 

“  சமைச்சுக்கிறேன் ஆனா எப்பயாவது ஒருக்கா தான்.., பட்  சமையல் சுத்தமா தெரியல அப்படின்னு இருக்காது. எனக்கு ஓரளவு தெரியும்…  எங்க அம்மா இறந்ததுக்கு அப்புறம் நான் சமைக்கு ஆரம்பித்தேன் …எப்பயாவது பாட்டிக்கு உடம்பு சரியில்லாமல் இருக்கும் இல்லையா .., அந்த டைம் நான் தான் சமைப்பேன்  வீட்டுல” என்று சொல்லிக் கொண்டே அவளுக்கு தோசை வார்த்து கொடுத்தான்… 

 

“அங்கு உங்க வீட்டில இருக்கும்போது மட்டும் ஏன் எப்ப பார்த்தாலும் நீங்க மூஞ்சியே இறுக்கமாகவே வச்சிருந்தீங்க ..?” என்று அவனிடம் இதுவரை மனதில் அரித்துக் கொண்டு இருந்த கேள்வியை  அவனிடம் கேட்க… 

 

 “ அப்புறம் சிரிச்சுக்கிட்டே என்னை இருக்க சொல்றியா நீயே சொல்லு .., கல்யாணம் வரைய வந்து என்னோட கல்யாணம் நின்னு போயிருக்கு அதை எப்படி என்னால ஈஸியா அக்சப்ட் பண்ணிக்க முடியும்..? அப்புறம் நீ யாரு என்னன்னு எனக்கு தெரியாது … அதுவும் என்னோட பாட்டி உன்னை சொந்தம்னு வேற சொன்னாங்க சொந்தத்துல எல்லாம் ஒதுக்கி வெச்ச நானே சொந்தக்கார பொண்ணு கல்யாணம் பண்ணா எப்படி இருக்கும் ..? அதனாலதான் சுத்தமா எனக்கு பிடிக்கல உன்னை”  என்று சொல்லியவன் ஒரு நிமிடம் அமைதியாக இருக்க அதே நேரம் அவன் சுத்தமாக பிடிக்கவில்லை என்று சொன்னதை கேட்டவள் சாப்பிடாமல் அப்படியே கைகளை நிறுத்தி இருக்க… 

 

“ சாப்பிடு அப்போதான் பிடிக்கலைன்னு சொன்னேன் ஆனா அதுக்கு அப்புறம் அப்படி சொல்லலையே..,  இப்போ எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு சொந்தத்திலையும் இந்த மாதிரி ஒரு சொந்தம் இருக்காங்களா அப்படிங்கற அளவுக்கு நீங்க இருக்கீங்கனா , அதுக்கு கண்டிப்பா காரணம் நீ மட்டும் தான்…  நீ மட்டும் தான் என்னோட தப்பு ஒவ்வொன்றையும் எனக்கு எடுத்து எடுத்து சொல்லுற அப்புறம்  இன்னும் உன் கிட்ட சொல்லணும்”  என்று சொல்லிக் கொண்டு அவன் தோசை சுட… 

 

 “அதை என்னவென்று அவள் வாயைத் திறந்து கேட்கவில்லை அவள் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் ஆனால் அது என்ன உண்மை அவன் சொல்லுகிறான்..” என்று காது கொடுத்து கேட்க ஆரம்பித்தால் அவனிடம்… 

 

 “ அது வந்து நான் யாரையும் லவ் பண்ணல … உன்னை மாதிரி தான் ஒரு ஆம்பிஷன் கல்யாணத்துக்கு அப்புறம் என்னோட பொண்டாட்டிய தான் லவ் பண்ணனும் அப்படிங்கறது ஒரு எண்ணம் அதனாலதான் நான் யாரையும் காதல் செய்யல..,  நீ  இன்னைக்கு என்ன காலைல ரொம்ப வெறுப்பேத்துனதுனால தான் அப்படி சொன்னேன் ஆனா ராட்சசி அப்ப கூட நீ தான் என்னை வெறுப்பேத்திட்டு போயிட்ட .., அந்த கடுப்பு வேற,  அப்புறம் ஏதோ ஒரு டென்ஷன் உன்கிட்ட அந்த மாதிரி எல்லாம் பேசிட்டு பேசுனதுக்கு அப்புறம் எவ்வளவு கில்டி பீலிங் ஆச்சு அப்படின்னு எனக்கு மட்டும்தான் தெரியும்…  ஒன் செகண்ட் சாரி”  என்று சொல்லிக்கொண்டு அவன் தோசையை அவளுக்கு வைக்க அவளும் போதும் என்று முழுவதுமாக மறுத்துவிட்டால் இதுவே வயிறு நிறைந்து விட்டது என்று அவனிடம் சொல்லியவள் அப்படியே வைத்து இருக்க… 

 

 அவனும் அந்த அடுப்பை ஆப் செய்ய போக தடுத்து விட்டால் பெண்னவள்… 

 

 ‘இல்லை நீங்களும் சாப்பிடுங்க…, நான் மட்டும் சாப்பிட்டால் எப்படி ..? உங்களுக்கும் தானே பசிக்கும்…  நீங்களும் சாப்பிடுங்க”  என்றவள் சொல்ல…  அவனும் வேண்டாம் என்று சொல்ல … இத பாருங்க சார் எனக்கு தோசை சுட தெரியாது…  அதனால நீங்களே சுட்டு நீங்க சாப்பிடுங்க … ஆனா உங்க பக்கத்துல நான் கம்பெனிக்காக … ஓகேவா”  என்று சொல்லிக் கொண்டு அவள் தோசை சுட சொல்ல ..

 

“அவள் சொல்லியதை நினைத்து சிரித்துக்கொண்டவன் எப்பவுமே நீ இப்படித்தானா,  இல்ல எப்பயாவது இப்படி இருப்பியா..?”என்று சற்று தெரிந்து கொள்ளும் நோக்கில் அவளிடம் கேட்க அவளும் அவனை பார்த்து முறைத்துக் கொண்டிருக்க சாரி சாரி..,  சொல்ல இஷ்டம் இல்லாட்டி வேண்டாம்” என்று சொல்லியவன் இரண்டு தோசை மட்டும் சுட்டுக் கொண்டு அடுப்பை ஆப் செய்தான்…. 

 

அவன் திடிரென்ன அடுப்பை ஆப் செய்வதை பார்த்தவள் .., ஏன்  இன்னும் கொஞ்சம் சுட்டுக்கலாமே..,  உங்களுக்கு ரெண்டு தோசை எப்படி பத்தும் ..? என்று அவள் கேட்க … 

 

“அதற்கு அவனும் இல்லை இல்லை நான் நைட்டு ரொம்ப சாப்பிட மாட்டேன் நைட்டு ஃபுல்லா சாப்பிட்டேன் காலைல எந்திரிச்சு ரெடி ஆகுவதற்கு லேட் ஆகும் அதனால்தான்” என்று சொல்லியவன் இரண்டு தோசை மட்டும் சாப்பிட்டுக் கொண்டு வா போகலாம் ரூமுக்கு .., என்று அவளை பார்த்து கூப்பிட அவளோ தலையசைத்துவிட்டு சமையல் ரூமின்  லைட்டை ஆப் செய்தவள் இருவரும் அவர்களின் ரூமிற்கு போக எதார்த்தமாக வெளியில்  வந்த ராகினியோ கிச்சன் லைட் எரிவதை பார்த்து.., சற்று எட்டிப் பார்க்க அங்கு தன் பெண் சாப்பிட்டு கொண்டிருக்க…..  மருமகனோ  அவளுக்கு தோசை சுட்டுக் கொண்டிருக்க அந்த காட்சியை பார்த்தவரின் கண்கள் கலங்கியது தான்  பார்த்தாலும் இப்படி ஒரு மாப்பிள்ளையை பார்க்க மாட்டோம் “ என்ற எண்ணம் தனக்குள் வர சிரித்துக்கொண்டே மறுபடியும் வந்த தடையும் தெரியாமல் ரூமிற்கு போய்விட்டால் ராகினி… 

 

 “ரூமிற்குள் ராஜகுமார் இடம் தான் பார்த்ததை சொல்ல…,  ராஜகுமார் மனதுக்கு குளிர்ந்து போய் தான் இருந்தது…  இன்னும் தன்னுடைய பெண்ணின் வாழ்க்கையில் எந்த ஒரு கவலையும் வராது அப்படியே வந்தாலும் தன் மருமகன் பார்த்துக் கொள்ளுவான்” என்ற எண்ணம் அவர்களுக்குள் வர அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சாய்ந்து ஆறுதல்  படுத்தி கொண்டனர்… 

 

சரி நீங்க இங்க படுத்துக்கோங்க… நான் கீழே படுத்துகிறேன் என்று சொல்லி அவள் கீழே பெட்ஷீட் ஒன்றை வெறுத்து அவள் தலையணையம் போட்டுக்கொண்டு படுக்கப் போக அவனும் படுக்காமல் அப்படியே நின்று அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டு இருந்தான்… 

 

 நான் பேசின காயம் உன்னை விட்டு போகல என்று அவன் அவளிடம் கேட்க… 

 

 அவள் அவனைப் பார்த்துக் கொண்டே அமைதியாக தலையை குனிந்து கொண்டிருந்தாள் அதை பார்த்தவனுக்கு மனது கலங்கியது… 

 

 “ சாரி என்ன மன்னிச்சிடு எப்படி தண்டனை வேணாலும் கொடு ஆனால் தயவுசெய்து பேசாமல் மட்டும் இருக்காத …,முதல்ல நீ பேசுனது எனக்கு என்னமோ ஒரு டார்ச்சர் மாதிரி இருந்தது … ஆனா இப்போ என்கிட்டே பேச மாட்டியா அப்படின்னு ஏங்குற அளவுக்கு உன்னோட பேச்சு இருக்குது நான் தனிமை உணராத அளவுக்கு ,உன்னோட பேச்சு இருக்குது….  நான் ரொம்பவே பீல் பண்ணுற அதனால ப்ளீஸ் தயவுசெய்து பேசாம இருக்காத” என்று அவன் அவளிடம் கெஞ்சி கேட்கும் முறையில் கேட்க…  

 

“சரி ஓகே நான் பேசுறேன் அதுக்கு ஏன் நீங்க இந்த மாதிரி பீல் பண்ணிக்கிட்டு இருக்கீங்க..? ஒன்னும் பிரச்சனை கிடையாது நீங்க தூங்குங்க ‘என்று சொல்லியவள் அவள் தூங்க போக மறுபடியும் அவனோ தூங்காமல் அப்படியே நின்று கொண்டு இருந்தான்… 

 

 இப்போ என்ன பிரச்சனை என்று அவள் கேட்க… 

 

 நீயும் கட்டில் வந்து படு ஏசி வேற இருக்குது அதனால ரொம்பவே சில்னஸா இருக்கும் கட்டில் வந்து படு என்று அவன் சொல்ல அவளோ மாட்டேன் என்று சொன்னால்… 

 

 ஏன் இப்படி மாட்டேனு சொல்ற எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது நீ கட்டில் வந்து படுக்கிறது நல்ல அதுவும் எது உன்னோட கட்டில் நீ படுக்குறதுல எந்த தப்பும் இல்லையே என்று அவன் ஒன்றுமே புரியாமல் அவள் எண்ணமும் தன்னைத்தான் தவறாக தான் நினைத்து இருக்கிறாளா என்று அவளிடம் கேட்க… 

 

 இல்லை நான் தூங்கும்போது அப்படி இப்படின்னு படுப்பேன் தூக்கத்துல உங்க மேல கை கால் எல்லாமே படும் அதனால உங்களுக்கு தான் பிரச்சனை நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க எனக்கு ஒன்னும் பிரச்சனை கிடையாது நான் கீழே படுத்து கிடக்கிறேன் என்று அவள் சொல்ல… 

 

 இதோ பாரு நம்ம ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி என் மேல உன்னோட கை கால் பண்றது இல்ல நான் தப்பாவே நினைச்சுக்க மாட்டேன் ஏதோ தெரியாம அந்த மாதிரி பேசிட்டு அதுக்கு தயவு செய்து என்னை மன்னித்துவிடு. ஆனால் இனிமேல் இந்த மாதிரி குத்தி காட்டி மட்டும் பேசாத ரொம்ப ரணமா வலிக்குது இதுக்கு நீ என்ன கத்திய வச்சு குத்திருக்கலாம் அந்த அளவுக்கு இருக்குது என்று அவன் ஆற்றாமையால் அவளிடம் பேச 

 

 அவன் பேசியதை கேட்டவள் எதுவும் சொல்லாமல் கட்டளின் மறுபுறத்தில் படுத்துக்கொண்டு நன்றாக மூடிக்கொண்டு படுத்துக்கொண்டால் எங்கு ஏதாவது விலகி விட்டு அவன் ஏதாவது சொல்லி விடுவானோ என்ற பயம் அவளுக்குள் அப்பொழுதும் இருக்கும் அதை நினைத்துக் கொண்டவனோ தன்னைத்தானே மறுகினான் அவள் அப்படி செய்யும் பொழுது…. 

 

எல்லாத்துக்குமே காரணம் நான் தான் குழந்தைத்தனமாய் இருக்கிற ஒன்ன போய் அந்த மாதிரி பேசிட்டேனே என்னை மன்னிச்சிரு என்று அவன் சொல்ல அவளோ பேசாம தூங்குங்க ஒன்னும் பிரச்சனை இல்ல எனக்கு போக போக இது எல்லாமே சரியாகிவிடும் காலப்போக்குல நான் மறந்திடுவேன் நீங்க பேசுனத என்று சொல்லியவள் அமைதியாக தூங்குவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்க அவனும் அவளின் பக்கம் நெருங்கி அவளின் மேல் கையை போட்டு அணைத்துக் கொண்டு படுத்தான்…. 

 

“ஏன் எந்த மாதிரி எல்லாம் புதுசா நடந்துக்கிடுரேங்க .., இப்படி நடந்துக்கிடுறத  பாத்தா உங்கள என் மேல கையை  தூண்டுனது நானா தான் இருக்கும் அப்படின்னு எனக்கு தோணுது” என்று அவள் கண்ணீர் வெளியே அவனிடம் சொல்ல… 

 

“ அப்படி எல்லாம் கிடையாது..  எனக்கு உன்னோட பாதுகாப்பு வேணும் அப்படின்னு தோணுச்சு…., உன் மேல கைய போட்டு தூங்கணும் அப்படின்னு தோணுச்ச….  அதனாலதான் நான் அந்த மாதிரி இருந்தேன் … நான் தப்பான எண்ணத்தில் எதுவும் பண்ணல ப்ளீஸ் நான் கையை போட்டுக்கட்டுமா” என்று அவன் அவளிடம் கெஞ்சும் இறைச்சியில் கேட்க…  அவளோ சரி என்று தலையசைக்க ஆடவனோ அவளின் மேல் கையை போட்டு நன்றாக அணைத்துக்கொண்டு படுத்திருக்க ஆடவனின் நெருக்கத்தில் அவனின் பாதுகாப்பில் பெண்ணவளும் நன்றாக தூங்க ஆரம்பித்தாள்…. அவள் தூங்கியதை உணர்ந்தவனோ உதட்டில் புன்னகை செய்ய…  ஏனோ அவளை அறியாமலே அவளை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் 

 

“என்னோட செல்ல ராட்சசி டி நீ .., எனக்கு சலிக்கவே மாட்ட … அந்த அளவுக்கு நீ ரொம்ப அழகா ரசனையா இருக்குடி..,  உன்னை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு… யாருக்கு தாண்டி உன்ன பிடிக்காது … இவ்வளவு அடாவடித்தனமா சேட்டை பண்ணிக்கிட்டு .., இப்புடி அன்ப எல்லாமே இருக்கிற…!!!  நான் தான் உன்னை  தப்பா புரிஞ்சுகிட்டேன்…  உன்கிட்ட எந்த ஒரு நல்ல குணமும் இல்ல அப்படின்னு… உன்ன திட்டிட்டேன் …  அடக்கம் யாருக்குடி வேணும்… உன் இஷ்ட படி இரு டி தங்கம் …  குணம் நல்லா இருந்தா போதும்….  அதுவும் எல்லாரும் முன்னாடியும் நீ அப்படி இல்லையே .., எனக்கு மட்டும் என்கிட்ட ஆனா அப்படி இருக்கிற .., ஒன்னு மட்டும் நல்லா புரிஞ்சது…  உன்கிட்ட உனக்கு ஃப்ரீயா எப்படி இருக்கணும்னு தோணுதோ அந்த மாதிரி தான் இருப்பேன்….,  அப்படின்னு மட்டும் நல்லா புரிஞ்சுகிட்டேன் டி …. உன்ன தெரியாம மனசுலவுள்ள ரொம்பவே காயப்படுத்திட்டேன்….  என்னை மன்னித்து விடு  டி  பொண்டாட்டி” என்று சொல்லிக்கொண்டு அவளின் கன்னம் கிள்ளி கெஞ்சியவனின் கன்னங்களோ அவளின் கண்ணத்தோடு ஒட்டி இருக்க ..அப்படியே அவளை பார்த்து கொண்டே  அசந்து தூங்க ஆரம்பித்தான்…. 

 

“அதிகாலை விடிய…  எப்பொழுதும் போல் அந்த காலை வேலை ஆரம்பிக்க பெண்ணவளுக்கோ  சற்று அழுத்தமாக இருப்பதைப் போல் உணர்ந்தாள்….  ஆடவனின் கைகள் அவளை அனைத்து கொண்டிருக்க …, அவனின் முகமும் அவள்  முகத்த்தினை ஒட்டி இருக்க… இருவரும் அசதியில் இருந்ததால் அப்படியே தூங்கி இருக்க ..,  ஏனோ பெண்ணவளுக்கு சற்று சங்கடமாக இருந்தது… அவன் அப்படி படுத்து இருப்பதை பார்த்து …,  இருந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவனின் கையை மெதுவாக எடுத்து விட்டவள் அவனிடமிருந்து சற்று விலகி எழுந்து கொள்ள போக …, அதே நேரம் ஆடவனோ அதேநேரம் முழித்துக் கொண்டான் …. வேகமாக அவள் விலகியதால் வந்த வெறுமையை உணர்ந்து கொண்டு முழித்தானோ ,  இல்லை என்றால் தன் கூடவே ஒரு கங்காரு குட்டியை போல் அனைத்து கொண்டிருந்தவள் இப்பொழுது இல்லை” என்று நினைத்து முழித்தானோ என்பது அவனுக்கே வெளிச்சம் ஆன அவள் இல்லாததை உணர்ந்து வேகமாக கண்விழித்தவன் என்னாச்சு இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியது தானே ..? என்று அவளிடம் கேட்க… 

 

 “ என்ன விளையாடுறீங்களா இப்போவே மணி 9 மணிக்கு மேல ஆச்சு …!!!  இன்னைக்கு எனக்கு ரிசல்ட் அப்புறம் எப்படி எனக்கு தூக்கம் வரும்..?  எனக்கு தூக்கமே வரல ஆனா இவ்வளவு நேரம் தூங்கினதே பெருசு..” என்றவள் சொல்லிக்கொண்டு சற்று பதட்டமாக உணர்ந்தவள் வேகமாக பாத்ரூம் சென்று ஃபேஸ் வாஷ் செய்தவள் தண்ணீரை வைத்து கொப்பளித்துவிட்டு மறுபடியும் அவளின் போனை பார்க்க ஆரம்பித்தால்…. 

 

 என்ன ரிசல்ட் ..? காலேஜ் ரிசல்ட் ?இன்னைக்கு என்று அவன் புரியாமல் அவளிடம் கேட்க…  அவளோ வேகமாக இல்லை என்று தலையசைத்தாள்…

 

என்ன  இல்லையா ..? அப்பறம் என்ன ரிசல்ட் என்று புரியாமல் அவளை பார்த்தான் ….  

 

மான்  விழியாள்  வருவாள் …. 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!