முரடனின் மான்விழி

5
(3)

 பாட்டி சொன்னது போல் வாழை இலையில் அந்த சம்பிரதாயத்தை இருவரும் செய்ய…, அப்படி செய்யும் பொழுது விதுரனும் விகிதாவை பார்த்து முறைத்துக் கொண்டிருக்க விகிதாவோ அதை கண்டுகொள்ளாமல் சுவாரசியமாக செய்து கொண்டிருந்தாள்…

 

 “பரவால்லத்தா நல்லபடியா எல்லாம் முடிஞ்சிருச்சு..,அம்மாடி மறக்காமா அந்த… தேங்காயை எடுத்துட்டு வாம்மா” என்று மரகதத்திடம் சொல்ல….மரகதமும் சரிங்க பாட்டி எல்லாமே ரெடியாதான் வச்சிருக்கேன்” என்று சொல்லியவள் தேங்காயை வாசலில் முன் வைத்தாள்…

 

 இது எதுக்கு பாட்டி..? என்று விகிதா கேள்வி கேட்க….

 

 அதுவாத்தா “இந்த தேங்காயை நீ தள்ளி விடணும்…, அப்படி தள்ளிவிடுறப்போ உன்னோட பலம் என்னன்னு தெரியும்த்தா..,அதுதான் வேற ஒன்னும் கிடையாது.., இங்க ஒவ்வொரு இதுக்கும் ஒவ்வொரு சம்பிரதாயம் இருக்கும்.., அந்த சம்பிரதாயம் எல்லாத்தையும் கல்யாணத்து அன்னைக்கு பண்ணனும்த்தா பேத்தி “ என்று பாட்டி சொல்ல…

 

 “சூப்பரா இருக்கு பாட்டி உங்களோட சம்பிரதாயம் எல்லாமே” என்று பாட்டியின் கன்னம் கிள்ளி வாழ்த்திய விகிதாவும் அந்த தேங்காயை அவளின் வெண் பாதங்களால் மெதுவாக எத்த…

 

 அதற்கே சற்று தூரமாக தான் போய் விழுந்தது.. அதை  பார்த்த பாட்டியின் முகத்தில் புன்சிரிப்பு தான் வந்தது….

 

“ பரவாயில்லையே பேத்தி நல்ல வலிமையா தள்ளிட்டியே.., இந்த வீட்டுக்கு செல்வ செழிப்பு எல்லாமே இன்னும் உன்னோடு தான் நிறைஞ்சு போய் வரணும் பேத்தி” என்று அவளுக்கு நெற்றி சுத்தி திருஷ்டி சுத்தினாள் பாட்டி.. 

 

 பாட்டி அடுத்து என்ன வச்சிருக்கீங்க ட்விஸ்ட்..?  என்று வேகமாக விஹித்தா கேட்க…

 

 “அப்படின்னா என்னத்த பேத்தி..?என்ன என்னமோ பேசுற…!!!! நீ பேசுற அந்த தஸ்சு புசு ஒன்னும் புரிய மாட்டேங்குது” என்று பாட்டி சொல்ல….

 

 இல்ல பாட்டிமா இந்த சடங்கு முடிஞ்சிருச்சு…அதுக்கப்புறம் நீங்க எந்த சடங்கு எனக்கு கொடுக்க போறீங்க…. ஐ மீன் சம்பிரதாயம்…சம்பிரதாயம்… என்று அவள் கேட்க…

 

“ திமிரு திமிரு உடம்பு ஃபுல்லாவே திமிரு… பார்க்க ரொம்ப குட்டியா இருந்துகிட்டு இவ்வளவு வாழ்த்தனம்  இவளுக்கு தேவையா..!!! இவ சும்மாவே இருக்க மாட்ட போல,ஏதாவது ஒன்னு தொண தொணன்னு பேசிக்கிட்டே இருப்பா.., இவளுக்கு சைலன்ட்டுனா என்னனு தெரியுமா தெரியாதா!!!அப்படிங்கறது தெரியல,பெரியவங்க கிட்ட எப்படி நடந்துக்கணும் அப்படிங்கறதும் தெரியல,இவளை எல்லாம் எப்படி தான் இவ்வளவு தூரம் வளர்த்தாங்கனும் தெரியல..,இவ எதுக்கு என்னோட வாழ்க்கையில வந்தாலும் தெரியல” என்று மனதிற்குள் அவளைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்க, அதே நேரம் அங்கு அவளோ அடுத்து என்ன நடக்கும்..? என்று ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தாள்…

 

 அம்மாடி ராகினி பூஜை ரூமுக்கு கூட்டிட்டு போமா….ரெண்டு பேரையும்,ஐயா நீயும் கூட போயா..இன்னும் நீங்க தான் பெரியவங்களா இருந்து இவங்க எல்லாத்தையும் பார்த்துக்கணும்…எனக்கு அடுத்து நீங்க தான்யா பெரியவங்கன்னு இருக்கிறீங்க…என்று காதம்பரி பாட்டி சொல்ல…

 

 பாட்டி என்ன பேச்சு பேசுறீங்க..?நீங்க தான் இருப்பதிலேயே பெரியவங்க நீங்கதான் கூட இருக்கணும்…. அதை விட்டுட்டு இன்னைக்கு நல்ல நாள் அதுவும் இப்படி பேசுறீங்க!!!என்று மரகதம்  பாட்டியிடம் சண்டையிட…

 

 ஆமா அத்தை நீங்க தான் இருப்பதிலேயே பெரியவங்க…. உங்களுக்கு அப்புறம் தான் நாங்க எல்லாருமே.., வயசுல மூத்தவங்க நீங்கதான்….நீங்கதான் கூட இருந்து பாத்துக்கணும்… இவங்களுக்கு என்ன தெரியும் நீங்களே சொல்லுங்க என்னோட பொண்ணுக்கு புத்திமதி சொல்றதே நீங்களா தான் இருக்கணும், அவள நான் விளையாட்டு பிள்ளையாக வளர்த்துட்டேன்….அவளுக்கு என்ன செய்யனும் சொல்லி கொடுங்க…, அவ எந்த ஒரு தப்பு பண்ணாலும் அவளுக்கு சொல்லிக் கொடுங்க…அவ சரி பண்ணிக்குவ, அவளுக்கா எதுவும் தெரியாது…திடீர்னு கல்யாணம் நடந்ததுனால எனக்கும் என்ன பண்றதுன்னு தெரியல… என  சற்று வருத்தத்துடன் ராகினி சொல்ல….

 

 என்னோட பேத்தி துரு துருனு இருக்குற… அதனால கண்டிப்பா அவ எல்லாத்தையும் கத்துக்குவ, எல்லாத்தையும் பார்த்துக்கொள்ளவா….அதெல்லாம் அவளுக்கு அந்த திறமை எல்லாம் இருக்குது…. நீ வீணா கவலைப்பட்டுக்கிட்டு இருக்காத…!!!யாரும் தெரிஞ்சு வீட்டுக்குள்ள நுழைவது கிடையாது, எல்லாமே நொழஞ்சதுக்கப்புறம் தான் கத்துகிறது” ராகினிக்கு சற்று நிம்மதியாகவே இருந்தது…. எப்படியும் தன்மகள் இந்த வீட்டில் நல்லபடியாக தான் இருப்பாள் என்று நம்பிக்கையும் காதம்பரி பாட்டி பேசியதில் வர….அவள் முகத்தில் அப்பொழுதுதான் உண்மையான புன்னகையை வந்தது…

 

 “ஆன்ட்டி நெக்ஸ்ட் விளக்கு ஏத்தணும்..,நீங்க ரெண்டு பேரும் அவங்கள பூஜை ரூமுக்கு கூட்டிட்டு வாங்க” என்று சொல்லிய மரகதமும் விளக்கு எல்லாம் சரி செய்தவள் வத்தி பெட்டியை ராகினியிடம் கொடுக்க…

 

 என்னம்மா என்கிட்ட தர்ற..? என்று கேள்வியாக ராகினி கேட்க….

 

 இல்ல ஆண்ட்டி நீங்க உங்க பொண்ணு கிட்ட குடுங்க,விளக்கு ஏத்த சொல்லுங்க…. நீங்க கொடுக்குற சப்போர்ட் வேற யாரலையும் கொடுக்க முடியாது…அதனால நீங்களே கொடுங்க ஆன்ட்டி… என்று மரகதம் சிரித்துக் கொண்டே ராஹினியிடம் சொல்ல….

 

“ என்னமோ எனக்கு இது எல்லாமே புதுசா இருக்குது.., ஆனா உனக்கு வயசு சின்ன வயசு, இருந்தாலும் இது எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சிருக்க,இருக்கிற இடம் என்று ஒன்று இருக்குல்ல அதனால இருக்கலாம்… ஆனா உன்னை எனக்கு ரொம்ப புடிச்சி இருக்குமா…எனக்கு மட்டும் பையன் ஒன்னு இருந்தானா கண்டிப்பா உன்னை அவனுக்கே கட்டிவைப்பேன்” என்று ராகினி நெற்றி முறித்தவள் நேராக விகிதாவின் பக்கம் வந்தவள் அவளின் கையில் வத்தி பெட்டியை கொடுத்து..,இதுல விளக்கு ஏத்து,இந்த இது அணையாமல் பக்கத்துல உள்ள விளக்கையும் ஏத்தணும்… என்று ராகினி அவளுக்கு சொல்லிக் கொடுக்க….

 

 ராகினி பேசியதற்கு சிரித்த மரகதமும் எதுவும் பேசவில்லை…பதிலுக்கு அவள் அமைதியாக இருக்க…. விகிதாவும் அமைதியாக ராகினி சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டு அப்படியே விளக்கேற்றினால்….

 

“ மகராசி என் பேத்தி வந்து விளக்கேத்தவும் தான் இந்த வீடு வீடாவே, வெளிச்சமா இருக்குது….மனசார சாமி கும்பிட்டுக்கோ பேத்தி.., இது எல்லாமே உன் வீடு தான்… இனிமே நீ தான் இந்த வீட்டுக்கு எஜமானிக்கிற மாதிரி அதனால நல்லா கும்பிட்டுகோத்தா” என்று காதம்பரி பாட்டி சொல்ல…

 

 அதைக் கேட்டுக் கொண்டிருந்த விகிதாவிற்கு ஒரு மாதிரியாக வந்தது ஆனால் பக்கத்தில் இருக்கும் விதுரனுக்கு கோபம் பல மடங்கு வந்தது…என்றும் அவனுக்கு அந்த வீட்டில் மகாராணியாக வலம் வந்து கொண்டிருக்கும் காதம்பரி பாட்டியோ என்று இவளை எஜமானி என்று சொல்லுவது அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை… அதுவும் இவள் இவள் இஷ்டத்துக்கு இருக்கிறாள் ஒரு பொறுப்பு என்பது இவளுக்கு சுத்தமாக இருக்கவில்லை…ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்று கூட இவளுக்கு  தெரியவில்லை..,இவள் எப்படி இந்த வீட்டுக்கு எஜமானியாக இருக்க முடியும்..? இப்ப வந்தவள் அப்படி இருக்க முடியுமா என்ன..? என்று அவனுக்குள் பல கேள்விகள் இருக்க எதையும் முகத்தில் காட்டாமல் இறுக்கமாக நின்று கொண்டிருந்தான் அவன்….கையெடுத்து அந்த அறையில் இருக்கும் சாமிகளை பார்த்து கும்பிட வில்லை… ஆனால் அவன் மனதில் ஆயிரம் கேள்விகள் திட்டல்கள் எல்லாம் பக்கத்தில் இருப்பவளை நினைத்துதான்….

 

“ நல்ல சாமி வேண்டிக்கோங்க…இனிமே என்னுடைய இம்சைகளை தாங்கறது நீங்களா தான் இருக்கணும்… அதுக்கு அப்புறம் ரொம்ப ஓவரா காலைல என்னை திட்டுனீங்கல்ல…அதுக்கு எல்லாத்துக்கும் பனிஷ்மென்ட் உங்களுக்கு இருக்குது….என்னைய திட்டுனிங்கல்ல உங்களுக்கு இருக்குது” என்று அவன் காதுக்கு மட்டும் கேட்கும் மறு சொல்ல…

 

 ஏய் நீ ரொம்ப ஓவரா பேசிகிட்டு இருக்க என்று அவன் மெதுவாக சொல்ல…

 

 “இப்பவே புருஷனும் பொண்டாட்டியும் என்ன காதுக்குள பேசிகிட்டு இருக்கீங்க..? எதுவா இருந்தாலும் ரூமுக்குள்ள போய் பேசிக்கோங்க…இப்ப அமைதியா சாமி கும்பிடுங்க”என்று சொல்லிய காதம்பரி பாட்டியோ அவர்கள் இருவருக்கும் திருநீர் வைத்து வாழ்த்தினர் நல்லபடியாக… நீடுழி வாழ வேண்டும் என்று…

 

 அப்படியே ராகினிக்கும் சேகருக்கும் வைத்து விட்டு மரகதமும் வர மரகதத்துக்கும் வைத்து விட்டார் விபூதி….

 

பாட்டி நெக்ஸ்ட் என்ன..? என்று அவள் அடுத்த சம்புறாதயம் என்னவென்று காதம்பரி பாட்டி இடம் கேட்க….

 

“ ஹான் பாட்டி எனக்கு நிறைய வேலை இருக்குது… உங்களுக்கே தெரியும் அதனால இந்த சம்பிரதாயம் எல்லாமே அப்புறமா வச்சுக்கோங்க…. இப்ப நான் போலாமா,இவ்வளவு நேரம் உங்களுக்காக தான் நான் காத்திருந்தேன்… இப்பதான் எல்லாமே முடிஞ்சிடுச்சுல்ல, அதனால நான் என் வேலைய பாக்க போகட்டா பாட்டி” என்று விதுரன் இதற்கு மேல் தாங்காது என்பது போல் பாட்டியிடமே கேட்க….

 

 ஆமா  “என் ராசா நீ நேத்து சொன்ன…ஆனா பேத்தி கேக்குறதுல,பேசுறதுல எல்லாமே மறந்து போயிட்டியன்.., சரியா நீ போயா நீ போயிட்டு வேலையெல்லாம் முடிச்சுட்டு விரச வீடு வந்து சேரியா”…என காதம்பரி பாட்டி சொல்ல…

 

“ சரிங்க பாட்டி” என சொல்லியவனோ அடுத்த நிமிடம் அவனின் ரூமிற்குள் யாரையும் எதிர்பார்க்காமல் அந்த இடத்தை விட்டு சென்றான்..

 

 கொஞ்சமாவது சிரிச்சு பேசுறானா பாரு… எப்ப பார்த்தாலும் முகத்தை உரர்னு வச்சிருக்கான்….இவன் இன்னைக்கு காலைல தான் பார்த்தேன்,பட் இப்ப வரைக்கும் இவன் சிரிச்சு பேசி நான் பார்த்ததே கிடையாது…. என்றும் மனதிற்குள் நினைத்துக் கொண்டவள் அவன் எங்கே போகிறான்..?அவனுக்கு அப்படி என்ன வேலை..? அதுவும் கல்யாணம் அன்னைக்கு கூட அவனுக்கு வேலையாய் என்று ஒரு எண்ணம் அவளுக்குள் வர அவளின் எண்ணத்திற்கான கேள்வியை ராகினியை கேட்டால்…

 

 முக்கியமான வேலையா அத்த மருமகன் போறது..? எதுக்கு கேக்குறனா கல்யாணம் அன்னைக்கு கூட வேலைன்னு போறாங்களே..!!! அதுக்கு தான்…என்று சற்று மென்று முழுங்கி ராகினி கேட்க…

 

 “ஆமாத்தா நேத்து காட்டுக்கு தண்ணி பாய்ச்சணும்னு சொல்லிக்கிட்டு இருந்தான்.., நான் தான் மறந்துட்டேன் ஆள் யாரும் இல்லை அதனாலதான்…சரி நேத்தே சொன்னான் நான் நாளைக்கு போயிட்டு வரேன்னு கைனிக்கு…இங்க தான் போறாப்ல” என்று காதம்பரி பாட்டி சொன்னவுடன்..

 

 பாட்டி சொன்ன உடன்

 ராகினிக்கு சற்று முகம் மாறியது ஆனால் அதை வெளியில் எதுவும் காட்டிக் கொள்ளவில்லை..

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!