முரடனின் மான்விழி

5
(3)

“ ஏன் அத்தை எப்பவுமே மாப்பிள்ளை தம்பி..,  காட்டுக்கு அப்படி இப்படின்னு போயிருவாங்களா? விவசாயம்தான் பாக்குறாங்களா ” என்று மெதுவாக காதம்பரி பாட்டு இடம் ராகினி கேட்க….

 

“  ஆமா  மருமகளே என் பேரனுக்கு விவசாயம்னா அவ்வளவு உசுரு … அது மேல ரொம்ப ஆர்வமாக இருக்கிறா… அதை விட்டுடா..,  யாருக்குனா குத்தகைக்கு கொடுத்துடுவோம் அப்படின்னு சொன்னா கூட வேண்டாம்னு சரி மல்ழுக்கு நிப்பான் தான் என்கிட்ட  …  என்ன செய்ய என்னால தான் பாக்க முடியல,  வயசாகிருச்சு நானும் எவ்வளவு நாள் தான் அந்த விவசாயத்தை பார்த்துக்கிட்டே இருக்கிறது… அவன்கிட்ட வேண்டாம்னு சொன்னாலும் அவன் கேட்க மாட்டான் … என்னோட கண்ணு இருக்கிற வரைக்கும் நான் அந்த விவசாயத்தை கூட மாட இருந்து பாத்துக்குவேன். ஆனால் எனக்கு எதுனா ஒன்னு ஆச்சுன்னா….அவன் எப்படி ஒரு ஆளா இருந்து கஷ்டப்படுவான்….,  அவன் சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டிக்கிறான்” என்று பாட்டி ராகினியிடம் வருத்தப்பட 

 

 அதையெல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்தால் ராகினி … ஏனோ அவளின் மனது சரி இல்லை என்பது போல் தோன்ற… அமைதியாகவே இருந்தாள்…

 

 அம்மாடி மேல தம்பியோட ரூம் இருக்கும் … அங்க என்னோட பேத்தியை கூட்டிட்டு போய் விற்று மா  .., அதுக்கப்புறம் என சொல்லிய காதம்பரி பாட்டி ராகினியை பார்த்து,அம்மாடி நீ இந்த ரூம்ல இருந்துக்கோமா…  ரெண்டு பேரும் … என்று பாட்டியின் அறைக்கு பக்கத்து அறையை கை காண்பிக்க…

 

 சரிங்க பாட்டி என்று சொல்லிய மரகதமும்…. விகிஹிதா  பக்கத்தில் வந்தவள்… வாங்க அக்கா என்று விஹிதா விடம்  சொல்ல…

 

 “ஐயோ பியூட்டி என்ன விட உங்களுக்கு வயசு அதிகம்” நீங்க போய் என்ன அக்கான்னு சொல்றீங்க…  “இப் யூ டோன்ட் மை எனக்கு இந்த பாலோ பண்றது…. அந்த மாதிரி எல்லாம் ரொம்பவே கஷ்டம்…  சோ உங்கள நான் பியூட்டி கூப்பிட்டுக்கிறேன் அண்டு என்னோட பேர் விஹிதா… நீங்க என்னை எப்படி கூப்பிட்டாலும் சரி…  பட் இந்த அக்கா…அந்த மாதிரி எல்லாம் ஒன்னு வேண்டாமே…” என்று விஹிதா  சட்டென்று பேசிவிட அதைக் கேட்ட மரகதமோ சிரித்தாள் பதில் ஏதும் பேசவில்லை..

 

இங்கு ரூமில் …

 

காதம்பரி  பாட்டி சொன்னது போல்  ராகினியும் ராஜ்குமாரும் அந்த அறையில் தங்கினார்… 

 

 என்ன ராகினி ஒரு மாதிரியாவே இருக்கிற..?? ஏதாவது பிரச்சனையா ..? உடம்பு  ஏதாவது பண்ணுதா …!! எதுவா இருந்தாலும் சொல்லு…  இல்ல ஹாஸ்பிடல் போவோமா…!!! என்று ராகினி சற்று அமைதியாகவே வழக்கத்துக்கு மாறாக இருப்பதை பார்த்து ராஜ்குமார் என்னவென்று ராகினி இடம் கேட்க… 

 

 இல்லைங்க காலையில கல்யாணம் நின்றிருச்சு….  ஏதோ குடும்பம் நல்லா இருக்கு… நம்மளுக்கு தெரிஞ்சவங்க …அதுவும் இல்லாம உங்களோட சின்னம்மா பேரன் அப்படின்னு நம்ம நம்பி  கொடுத்துட்டோம்….  எனக்கு என்னமோ இப்போ இது சரியா வருமா அப்படிங்கறது..,  எனக்கு தோணுலங்க … என்று மிக மெதுவாக அவள் சொல்ல… 

 

 என்ன சொல்லுற ராகினி…!!!  நீதானே இடம் நல்ல இடம் அப்படின்னு சொன்ன …,நீயே இந்த மாதிரி பேசலாமா …, அதுவும் இல்லாம உனக்கு  நல்லாவே தெரியும் சின்னம்மாவை பத்தி …, உன்னோட சின்ன மாமியார் பத்தி அப்புறம் ஏன் நீ இந்த மாதிரி எல்லாம் பேசுற …அவங்க வளர்ப்பு எப்பவுமே தப்பாகாது….,  பையன பார்த்தல்ல எவ்வளவு நல்ல தங்கமான பையனா இருக்கான்னு…  உனக்கு ஏன் இந்த மாதிரி தோணுது…, எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுமா… என்று தோள்பட்டையில் கையை வைத்துக்கொண்டு தன் மனைவியிடம் கேட்க… 

 

 அது இல்லங்க நம்ம பாப்பா ரொம்ப சின்ன பொண்ணு…,அவளுக்கு எதுவுமே தெரியாது…  இந்த மாதிரி ஒரு கிராமத்தில் அவ எப்படி அடாப்டாவா அப்படின்னு நினைக்கும் போது ரொம்பவே கஷ்டமா இருக்குது … மாப்பிள்ளை வேற ஏதாவது ஒர்க் பண்ணுவாங்க….வெளியில போய் வேலை பாப்பாங்க அப்படின்னு நினைச்சேன்…,  எனக்கு இதுல என்ன சொல்லுறதுன்னு தெரியல..,  ஏற்கனவே அவங்க சொன்னாங்க விவசாயம் பாக்குறாங்க …,என் பொண்ணு எப்படி இதை ஏத்துக்குவான்னு எனக்கு புரியல …. எனக்கே இது எல்லாமே புதுசா இருக்கிறப்போ என் பொண்ணுக்கு மட்டும் எப்படிங்க தெரியும் ..?? அவளுக்குமே இது எல்லாமே ஃபாலோ பண்றது ரொம்பவே கஷ்டமா இருக்கும்…  அத நினைச்சா தான் கொஞ்சம் கஷ்டமா இருக்குது …, தெரியாம அவசரப்பட்டு நம்ம பொண்ண கல்யாணம் பண்ண சொல்லட்டிமோ…., அப்படின்னு இப்ப வருத்தமா இருக்குது …. என்று ராகினி வருத்தப்பட…. 

 

 நீ நினைக்கிற மாதிரி இல்லடா,  உனக்கு நல்லா தெரியும்…  என்னோட சின்னம்மாவை பத்தி அப்புறம் ஏன் நீ பீல் பண்ணிக்கிட்டு இருக்க …அதுவும் அவங்க வளர்த்த பையன் விதுரன் …,கண்டிப்பா நல்ல பையனா தான் இருப்பான்… உனக்கு அதுல எந்த பயமும் வேண்டாம்…  இங்க நீ நிம்மதியா உன்னோட பொண்ணு கொடுத்துட்டு இருக்கலாம் ….எல்லாமே தெரிஞ்சும் நீ இந்த மாதிரி பயப்படுறது நியாயமே கிடையாது..,அதுவும் இல்லாம இப்ப விவசாயம் பாக்குறவங்க யாரும் குறைஞ்சு போயிரல , அவங்க தான் இப்போதைக்கு நல்ல இருக்கிறாங்க அந்தஸ்தோடு…  உனக்கு நல்லா தெரியும்..,  அப்புறம் ஏன் இந்த மாதிரி பீல் பண்ணிக்கிட்டு இருக்க..???  என்று தன் மனைவியை அணைத்துக் கொண்டே அவர் கேட்க…. 

 

 நீங்க கூட பாத்தீங்கள்லே …  கல்யாணம் ஆகி கொஞ்ச நேரம் கூட ஆகல .., வீட்டுக்கு வந்தவுடனே மாப்பிள்ளை விவசாயம் பார்க்க போறேன்னு போயிட்டாரு … இங்கே என் பொண்ணு தனியா இருக்கிறாள் …  அவங்க ரெண்டு பேரும் ரூம்ல தனியா பேசிக்கிட்டா தானே ஏதாவது அவங்களுக்குள்ள ஒரு புரிதல்ன்னு வரும் … ஆனால் இங்கு  என்  பொண்ணு  தனி மரம் அவ ரூம்ல இருக்கிறாள் …அந்த பையன் என்னடான்னா விவசாயம் பார்க்க போறேன்னு போயிட்டான்…  கல்யாணம் முடிஞ்சு கொஞ்ச நேரத்துல இதுல எப்படி அவ … என்று மேலும் பேச வர…  அவளை பேச விடாமல் இடை நிறுத்தினார் ராஜ்குமார் … 

 

 உன்னோட மனசு ரொம்பவே சஞ்சல பட்டு இருக்க…, அப்படின்னு நீ நெனச்சுக்கிட்டு இருக்காத…எனக்கு ஒரு நாள் மட்டுமே நீ பாக்குறது வச்சு ஜட்ஜ்மெண்ட் பண்ணாத…. எப்பவுமே…அப்புறம் விவசாயம் பார்க்கிறது…ஒன்னும் ரொம்ப கேவலமான வேலை கிடையாது அதுவும் ஒரு அந்தஸ்தான வேலை தான். நம்ம எல்லாம் உள்ள இருந்து வேலை பார்க்கிறோம்… அவங்க வெளியில் இருந்து வேலை பார்க்கிறார்கள்.. அவர்கள் வேலை பார்க்கிறதுனால தான் நம்ம இப்போ உள்ள இருந்து நிம்மதியா சாப்பாடு சாப்பிடறோம்…அதை என்னைக்கும் மறந்துடாத..,அப்புறம் நானும் ஒரு காலத்துல விவசாயம் தான் பார்த்துக்கிட்டு இருந்தேன்….அந்த நேரத்துல தான் நீ லவ் பண்ண,நல்ல உனக்கே தெரியும்….அப்படி இருந்தும் நீ ஏன் மாப்பிள்ளை தம்பியை இந்த மாதிரி நீ நினைக்கிற…ன்னு தெரியல்லை….உனக்கு ஒரு நியாயம்.., உன் பொண்ணுக்கு ஒரு நியாயமா !!!  எனக்கு ஒண்ணுமே புரியல என்று அவர் பேச.., அதை இடை நிறுத்தினார் ராகினி…

 

 ஏங்க நான் என்ன சொல்ல வர்றேன்னா… என்று ராகினி பேச வர..

 

 நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்… ராகினி இன்னைக்கு நடக்கிறத பார்க்கும்போது உனக்கு மனசு ஒரு மாதிரியா இருக்குது…..அவ்வளவுதான் உன் மனசு என்னால புரிஞ்சுக்க முடியுது.., ஆனால் நீ நினைக்கிற மாதிரி எதுவுமே கிடையாது.., எனக்கு தெரிஞ்ச இந்த மாப்பிள தம்பி ரொம்பவே நல்ல தம்பி…. அதுவும் இல்லாம அவளுக்கு அமைந்திருக்கிற வாழ்க்கை.. நல்லா இருக்கும்… நீ கூட இருந்து உன் பொண்ணு எப்படி வாழ்கிறான்னு அப்படின்னு பார்க்க தான போற !!! அப்புறம் என் பீல் பண்ணிக்கிட்டு இருக்கிற..!!! என்கிட்ட நீ முகத்தை தூக்கி வச்சிருக்கிற மாதிரி வெளியில எங்கேயும் அப்படி இருக்காத.., சந்தோசமா இருக்கிற மாதிரி காட்டிக்கோ…எதுவா இருந்தாலும் நம்ம வீட்டுல போய் பேசிக்கலாம்…இங்க பேசுறது எதுவும் சரியாயிருக்காது.. நம்ம எல்லாமே முழு சம்மதத்தோட ஒத்துழைச்சதான் நம்ம பொண்ண கல்யாணம் பண்ணி கொடுத்திருக்கோம்…,நான் அமைதியா இருந்தாலும் நீயா தான் நம்ம பொண்ண கல்யாணம் பண்ணி கொடுக்கலாம்னு சொன்னேன்.. அப்ப நீயே இந்த மாதிரி எல்லாம் யோசிக்காதே, சரியா..!!!  என்று தன் மனைவியை தோளோடு அணைத்து கொண்டவர்.. சிறிது ராகினுக்கு எடுத்து உரைத்து அவரை சமாதானப்படுத்தினர்…

 

 என்னோட மனசுல இருக்க பயம் உங்களுக்கு புரிய மாட்டேங்குது.., நீங்க விவசாயம் பார்த்ததினால் அதுனால வந்த  வலி அனுபவிச்சுது எனக்கு மட்டும்தான் தெரியும்… இதை எப்படி நான் உங்களுக்கு எடுத்துரைப்பேன்… நீங்களும் அதே காடு…,கைனி அப்படின்னு இருக்கிற மாதிரி…மாப்பிள்ளை தம்பியும் இருந்துட்டா…அப்போ நான் தனிமையில் பீல் பண்ண மாதிரி என்னோட பொண்ணு இப்படித்தான் ஃபீல் பண்ணிக்கிட்டு இருப்பா… என்று மனதிற்குள் ராகினி வருத்தப்பட்டு கொண்டே…. தன் கணவனின் தோளில் சாய்ந்து கொண்டாள்…அவள் மனதினுள் நினைக்கிறதை அவளால் வெளியில் சொல்ல முடியவில்லை,இதுக்கு தான் சொன்னேன்…. இவ்வளவு சொல்லியும் தன் கணவன் தன்னை புரிந்து கொள்ளாத போது…,  தன் மனதில் நினைப்பது மட்டும் சொன்னால்… எப்படி புரிந்து கொள்வார்…. என்று நினைத்துக் கொண்டவள் மனதினுள் வைத்து யோசித்துக் கொண்டே இருந்தால் என்ன பண்ணுவது என்று…

 

அவளால் இதை வெளியில் சொல்லவும் முடியவில்லை…சதாரணமாக சொன்னதற்கே அவர் இந்த மாதிரி பேசுகிறார்…இன்னும் நம் மனதில் நினைப்பதை பேசினாள் கண்டிப்பாக பிரச்னை வரும்…. அதையும் தாண்டி ஏதாவது ஒன்று பேச ஆரம்பித்து, தன்னுடைய மகளின் வாழ்க்கையில் ஏதாவது நடந்து விடும் என்று ஒரு பயம் இருக்க அதனை எல்லாம் உணர்ந்த  ராகினி இப்பொழுது சற்று அமைதியாக இருக்கலாம்…என எண்ணியவள்  அமைதியாக இருந்தாள்..

 

இன்னும் என்ன மா அமைதியா இருக்குற….?என  ராஜசேகர் கேட்க…

 

 அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க என சொல்லிய ராகவியுன் மனதிலோ 1008 எண்ணங்கள் ஓட,, ஆனால் வெளியில் எதுவும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தால்….

 

 சரி ஓகே நீ எதுவும் நினைச்சுக்காத.., ஒரு கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடு…. நான் போய் சின்னம்மா ட்ட எப்ப கிளம்பனும்,என்னன்னு கேட்டு வந்தர்றேன்….. அதுக்கப்புறம் அங்கு என்ன பாக்கணும்ணு கேட்டு வாறேன் என்று சொல்லிய  ராஜசேகர் வெளியில் போய்விட.., தன் கணவரை பார்த்துக் கொண்டிருந்தால் ராகினி … 

 

மான்விழியாள்  வருவாள் .. 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!