முரடனின் மான்விழி

5
(3)

 எப்பொழுதும் போல் தன்னுடைய ரூமிற்குள் கதவை திறந்து கொண்டு போனவன்…கண்டது கட்டிலின் மேல் குறுக்கால் படுத்து இருக்கும் விஹிதாவை தான்….ஒரு கால் நீட்டியும், ஒரு கால் மடக்கியும் படுத்திருந்தவள் , குப்பற கவுந்து படுத்து இருக்க…. அப்படி படுத்திருக்கும் போது அவளின்  கன்னங்கள் கட்டிலை ஓட்டி போய் இருக்க, வாயில் லைட் ஆஹ் ஜெல் வடிந்து கொண்டு சிறிது வாய் பிளந்தது போல் தூங்கி கொண்டிருக்க.., அவள் கட்டியிருக்கும்  சேலை முட்டிக்கும் மேல் தூக்கில் இருக்க… அவளின் தொடை பாதி தெரிந்தும் தெரியாமலும் பாதியாக இருக்க,பக்கத்தில் போன் பார்த்துக் கொண்டே படுத்திருப்பாள் போலும், அவள் கைகளில் போன் பிடித்து கொண்டிருக்க..,அந்த போனில் ரீல்ஸ் ஒரு பக்கம் ஓடிக்கொண்டே இருக்க.., அவ்வளவு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தால் விஹிதா…. அதை எதார்த்தமாக  ரூமிற்குள் வந்தவன் முழுவதுமாக பார்த்தவனில் உள்ள படபடக்க முழுதாக முதல் முதலாக ஒரு பெண்ணை இப்படி ஒரு கோலத்தில் பார்த்ததில் அவனின் மனது ஏதோ ஒன்று சஞ்சலப்பட…,வேகமாக அந்த அறை கதவை திறந்து கொண்டு வெளியில் நின்றான் மூச்சு வாங்கிக் கொண்டு….

 

 “ஸ்ப்பா கொஞ்ச நேரத்துல என்னென்னமோ நம்மளுக்கு நடந்துருச்சு.., மனசுலவுல  நம்ம இவ்வளவு வீக்காவா இருக்கோம்…” என்று அவனின் மனது நினைத்துக் கொண்டு இருக்க…

 

 “ நீ நினைக்கர அளவுக்கு அங்க ஒன்னும் நடக்கல..,உன் மேல ஒரு தப்பும் கிடையாது….ஒரு பொண்ணு அப்படி இப்படின்னு படுத்திருக்கும் போது,கண்ணு இருந்தா பார்க்க தான் செய்யும்.., அதுவும் நீ ஒன்னும் வேணும்னு பார்க்கலயே.., எதார்த்தமாக தான பார்த்த…. அப்படி இருக்கும் போது நீ ஏன் கவலை படுற… அதுவும் இப்பதான் இந்த வீட்டுக் கு  அந்த வந்து இருக்கா…,எப்படி படுக்கணும் அப்படின்னு அவளுக்கே தெரியல..!!!ஒரு அடக்கமா படுக்க வேண்டாம்.

..!!! அந்த பொண்ணு அப்படி போய் படுத்து இருக்கா..!!!” என்று பக்கத்தில் அவனைப் போல், அவன் கவலை பட்டதுக்கு அவனுக்கு பதில் அவனின் மனசாட்சி சொல்ல…

 

 “ஆமா ஆமா கரெக்டு தான் அவ பொண்ணா அடக்க ஒடுக்கமா படுக்கவே இல்ல..,எப்படி படுத்து இருக்கா பாரு, இப்படி தான் எங்க போனாலும் படுப்பா போல” என்று அவன் மனதில் நினைத்துக் கொண்டு இருக்க அதே நேரம்….

 

 “என்னப்பா வெளியிலே நின்னுகிட்டு இருக்க..? “ என்று அவன் நிற்பதை பார்த்து மேலே மொட்டை மாடிக்கு போக இருந்த ராஜ்குமார் விதுரன் நிற்பதை பார்த்து கேட்க…

 

“ இல்ல அங்கிள் சும்மாதான்…., இப்பதான் மேல  வந்தேன்.., அதுக்குள்ள போன் வந்திருச்சுன்னு வெளில  பேசிட்டு அப்படியே நின்னுட்டேன்” என்று சொல்லியவன் வேறு வழி இல்லாமல் அவர் இருப்பதை பார்த்துவிட்டு உள்ளே சென்றவன்…. மறுபடியும் அந்த கோலத்தை பார்த்து கண்கள் மூடிக்கொண்டே மெதுவாக கட்டிலை நோக்கி சென்றான் அடி மேல் அடி வைத்து… பெண்ணவளை திட்டி கொண்டே

 

 “ராட்சசி ராட்சசி என் ரூமுக்குள்ளே யாரோ மாதிரி வர வச்சிட்டா பாரு.., இவ இப்பவே இப்படி இருக்கானா..,இன்னும் என்னென்ன எல்லாம் நான் இவளோட கொடுமை அனுபவிக்க போறேன் தெரியல”என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன் தட்டு தடுமாறி அவனின் பெட்ஷீட் ஒன்றை எடுத்தவன் முழுவதுமாக விரித்து அவள் மேல் போர்த்தி விட்டு கண்களைத் திறந்து அந்த ரூமினை பார்த்தவனுக்கு கோபம் அளவுக்கு அதிகமாக வர..,வேகமாக டேபிளில் இருக்கும்  ஜக்கை கையில் எடுத்தவன்… அவளின் பக்கத்தில் வந்து அவளின் முகத்தில் அந்த நீரை முழுவதுமாக ஊற்ற….

 

 ஐயோ அம்மா என்று பதறி அடித்துக் கொண்டு எழுந்தவளின் முன்பு ருத்ர மூர்த்தியாக நின்று கொண்டு இருந்தான் விதுரன்…

 

“ ஏய் லூசு லூசு உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்குதா..!!! இல்ல இருக்குதான்னு கேட்கிறேன்,நல்லா தூங்கிக்கிட்டு இருந்த…என் மேல போய் இப்படி தண்ணிய ஊத்துறையே உனக்கெல்லாம் கொஞ்சம் கூட நியாயமே தெரியாதா..!!! நான் எவ்வளவு அழகா தூங்கிக்கிட்டு இருந்தேன் தெரியுமா..?”என்று அவள் அவன் தூக்கத்தில் தண்ணீர் ஊற்றி எழுப்பியதை கண்டு அவள் கோபமாக அவனிடம் கேட்க….

 

 “ஏய் யார பாத்துடி லூசுன்னு சொல்லிக்கிட்டு இருக்கிற..? கொஞ்சம் கூட பேசிக் மேனேர்ஸ்ல, உனக்கு வெளியிடத்துல வந்தா எப்படி தூங்கணும் அப்படின்னு பேசிக் கூட தெரியல நீ என்ன பத்தி பேசுறியா….”. என்று அவன் கோபமாக அவளிடம் பேச…

 

 “என்னது வெளியிடமா…!!!! ஹலோ சார்  இங்கதான் நீ இருக்கணும்…அப்படின்னு ரூம்ல வந்து விட்டாங்க, நான் ஒன்னும் வெளில ஹால்ல படுக்கல…ஓகேவா,ஹால்ல படுத்தா நான் எப்படி படுக்கணும் அப்படின்னு யோசிச்சிருக்கணும்….. நான் எனக்குன்னு கொடுத்த ரூம்ல படுத்தேன்…அப்போ நான் என்ன வேணா பண்ணிக்கலாம் ஓகேவா,இந்த பேசிக் கூட உங்களுக்கு தெரியலாட்டி சேம் சேம்…. நீங்கதான் நான் கிடையாது”என்று அவள் அழுத்தமாக அவனிடம் சொல்ல….

 

 “இந்த வாயில திமிர்த்தனம் கொஞ்சம் அதிகமாவே இருக்குடி.. உனக்கு… இது உதடு கிடையாது,பதிலுக்கு பதில் எதிர்த்து பேசுற உனக்கு ஆயுதம்” என்று சொல்லிக் கொண்டே அவளின் செவ்விதலின் மேல் கையை வைத்து அழுத்தமாக பற்றினான்….

 

“ டேய்ய் வளர்ந்து கெட்டவனே…விடுடா என்னோட உதட்டை விடுடா…, என்னோட  உதட்டை விடு”என்றவள் சொல்லிக் கொண்டு இருக்க…

 

 கோபத்தில் தான் அந்த உதடை பிடித்தான். ஆனால் கோபம் தணிந்து அந்த உதட்டை ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.., அவன் கைகளில் அந்த மெல்லிய உதடு பூ போல் இருக்க… அதேநேரம் அவன் கை பட்டதாலோ இல்லை அவளின் உதட்டின் நிறமோ என்னவோ, அடர் பிங்க் நிறத்தில் இருக்க கீழே லைட்டாக மெல்லிதாக கருப்பு நிற கோடு இருக்க…இடையில் பிங்க் நிறத்தில் இருக்க அதை ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் விதுரன்…

 

 வேகமாக அவன் கையை தட்டி விட்டவள் அவன் போட்டு இருக்கும் சட்டை காலரை எக்கிக் கொண்டு பற்றியவள், “ இதோ பார் இது எனக்கு கொடுத்த ரூம்…,நீ இந்த ரூம்ல தங்கிக்கோனு சொன்னதுனால தான் நான் என்னுடைய இஷ்டப்படி இருந்தேன்….அண்ட் நான் தூங்கிக்கிட்டு இருக்கிறப்போ அனுமதியே கேட்காமல்.. இந்த ரூமுக்குள்ள உள்ள நுழைஞ்சது நீ,நல்லா நான் ஒரு கனவில் இருக்கிறப்போ என்னோட கனவு ஒட்டுமொத்தமா நசுங்கி போகுற மாதிரி தண்ணிய ஊத்தி கலைச்சது நீ எல்லாத்தையும் மீறி…. நான் பேசும்போது திரும்பத் திரும்ப எதிர்த்து பேசுவது நீ இப்படி தப்பு,எல்லா தப்பும் உன் மேல வச்சுக்கிட்டு என்ன பழி சொல்றது நீ….சரியா அதனால நியாயப்படி தண்டனை நான் உனக்கு தான் கொடுக்கணும்” என்று சொல்லியவள் கட்டிலின் மேல் வேகமாக ஏறி நின்று அவனின் உதட்டை அவன் பற்றியது போலவே சற்று அழுத்தமாக பற்றியவள்,அதனை ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள்…

 

“ ஏன்டா நீ கிராமத்துல தான இருக்கிற..!!! அப்போ தம்மு, ஹான்ஸ், பாக்கு இந்த மாதிரியெல்லாம் அடிக்க மாட்டியா,சரக்கு கூட அடிக்க மாட்டியா…, ஆன உன்னைய பார்த்தா சரக்கு அடிக்கிற மாதிரி தான் இருக்கு மூஞ்சி…ஆனால் அந்த அம்மா அடிக்க மாட்டேன்னு உன்னோட உதடு சொல்லுதே!!” என்று அவள் அந்த உதட்டினை பார்த்து சொல்லிக் கொண்டிருக்க,

 

அவளின் கையை வேகமாக தட்டியவன் கன்னத்தில் பளார் என்று அறைந்து “பொண்ணடி நீ…,இல்ல பொண்ணா ன்னு கேக்குறேன்…எங்கனா உன்கிட்ட பொண்ணு குரிய அந்தஸ்து கொஞ்சமாவது இருக்கா..,ஒரு பொண்ணு மாதிரி அடக்க ஒடுக்கமா பேசுறியா…, பஜார் மாதிரி பேசுற.., பெண்ணுக்குரிய ஒரு லிஸ்ட் கூட உன்கிட்ட இல்ல” என்று அவன் இன்னும் ஆத்திரமாக கோபமாக பேச….

 

 “என்கிட்ட நீ எப்படி நடந்து கொள்கிறாயோ…, அதே மாதிரி தான் நான் நடந்துக்குவேன். நீ கோபக்காரன் அப்படின்னா, நான் அதை மட அதைவிட பல மடங்கு கோபக்காரி..,நான் ஜாலியா பேசுறதுனால பழகுறதுனால எப்படி வேணா இருப்பான் அப்படின்னு நினைச்சது உன்னோட தப்பு…” என்று அவனைப் பார்த்த முறைத்துக் கொண்டே சொன்னவள், அவனை கட்டியணைத்துக் கொண்டவள் அவனின் சட்டையில் முகத்தினை நன்றாக துடைத்துவிட்டு அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டே இனிமே எனக்கு எந்த சேதாரம் ஆனாலும் அதுக்கு ஆதாரமா நீயாய் இருக்கிறப்போ.., சேதாரத்துக்கு மருந்து நீயா தான் இருப்ப” என்று அவனைப் பார்த்து சொல்லுங்க சொன்னவள் அந்த ரூமில் இருக்கும் பாத்ரூம்மிருக்க சென்றால்….

 

அப்போ அவனோட முகம் அது பக்கத்துல பாக்குறப்போ அவ்ளோ பயமா இருக்குது..மீசையும் மாசு…,ஐயோ நான் நெனச்ச மாதிரியே ரியலிஸ்டிக் இருக்கும் செமையா இருக்குது..,உனக்கு எப்படி அவ்வளவு பெரிய தைரியம் வந்துச்சு பரவால்ல மாஸ் டி நீ” என விகிதா அவளின் கன்னத்தில் கிள்ளி கொண்டு அவளுக்கு அவளை ரசித்து கொண்டிருக்க…. 

 

கண்களை மூடி திறந்தவள் சிறிதாக கண்ணாடி இருக்க..,அந்த கண்ணாடியின் முன்பு நின்றவள் முதன்முதலாக அவளின் முகத்தைப் பார்த்து ரசித்தாள்… 

 

“எப்படி உனக்கு அவ்ளோ தைரியம் வந்துச்சு..,அவன் உன்னை திட்டுறான்…. இன்னும் சொல்லப்போனால் கழுத்த புடிச்சு நெரிக்கிறதுக்கு வர்றான்.., உன் முகத்தில் தண்ணீர் ஊற்றி இருக்கிறான்.., உன்னை ரொம்ப கேவலமா திட்டி இருக்கிறான்… ஆனால் அதையும் மீறி அவனை ரசிக்கிறியே… உனக்கு வெட்கமாகவே இல்லையா” என கண்ணாடியை பார்த்து அவள் முகத்தை பார்த்து அவளையே திட்டி கொண்டிருக்க….

 

“இல்ல நீ கொஞ்சம் கூட சரியே கிடையாது.., யாராவது உன்னை திட்டுனா… அவங்கள உண்டு இல்லன்னு பண்ணுவ….ஆனா இப்போ என்னடானா அவனையே கொஞ்சிட்டு வந்திருக்கிறேன்” என்று அவளின் மனசாட்சி சொல்ல

 

 “இல்லையே நான் அவனை நல்ல திட்டனேனே…அவன் சட்டையை புடிச்சு கேள்வி கேட்டேனே..,அதெல்லாம் நீ பார்க்க தான செஞ்ச இப்ப வந்துகிட்டு என்கிட்ட இதைப்பத்தி பேசுற” என்று அவள் மனசாட்சிக்கு அவள் பதில் பேச… 

 

“ஆஹா..!!!!!  நீ அவனோட சட்டை பிடிச்சியா, நல்ல கதையா இருக்குதே, அவன் சட்டை எப்படி புடிச்ச..?அவனோட சட்டையை புடிச்சு கட்டில் மேல ஏறி….அவனோட உதட்டை புடிச்ச அதை மட்டும் சொல்ல மாட்டேன்…. பிடிச்சது இல்லாம அவன்கிட்டயும் அவ்வளவு தைரியமா தம்மடிக்க மாட்டியா, உன் உதடு ஏன் இப்படி இருக்குன்னு கேள்வி கேட்டிருக்க..? புதுசா பாக்குற ஒருத்தர் அவரு, இன்னைக்கு தான் கல்யாணம் ஆகி இருக்கு…  ஆனா அவங்க கிட்ட இந்த மாதிரியெல்லாம் பேசுற ….நான் உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்” என அவளின் மனசாட்சி சொல்ல… 

 

 “ஏய் அவனோட உதட்டை பிடிச்சதே, அவன் என் உதட்டை பிடிச்சதுனால தான்….நான் அவனோட உதட்டை பிடிச்சேன்…. என்னோட  உதடு அவனோட  உதடுக்கும் சரியா போச்சு அதுவும் இல்லாம… அவன் என் மேல தண்ணி ஊத்தனான், அப்படி அவன் செஞ்சதுனால தான் தண்ணிய  துடைக்கிறதும் அவனா தானே இருக்கணும்….. அதனால தான் நான் அவனோட ஷாட்ல தொடச்சேன்…நான் பண்ணது கரெக்டா தான் பண்ணி இருக்கேன், ஆனா என்னமோ தெரியல எங்கேயோ இடிக்குது…அவன் மேல எனக்கு கோபப்பட தெரியல,அந்த கோபத்தில் கூட என்னமோ ஒன்னு இருக்குது….சம்திங் ராங் பட் ஸ்பெஷலா தான் இருக்கும்… அந்த சம்திங் கூட” என்றவள் மனதுக்கு பதில் சொல்லியவள் புதிதாக கண்ணாடியில் அவள் முகத்தை பார்த்து ரசித்து கொண்டிருந்தாள்… 

 

 “இப்போது என்ன நடந்துச்சு..? அவ என்ன பண்ணிட்டு போனா!!!! “என ஒன்றுமே புரியாமல் திக் பிரம்மை பிடித்தது போல் நின்று கொண்டிருந்தான் விதுரன்….அவனுக்கு  இன்னமும் அவள் செய்ததை நினைத்து கூட பார்க்க முடியவில்லை…அந்த அளவுக்கு அவனின் உடம்பு எல்லாம் சிலிர்க்க, திடீரென்று அவள் தன்னை ஹக்  செய்து அவளின் முகத்தை துடைப்பால் என்று எதிர்பாராதவன் அதிர்ந்து போய் நிற்க… 

 

 கண்டிப்பா நான் பண்ண வேலைக்கு ரூம விட்டு வெளிய போயிருப்பான்…. என அவள் நினைத்து கொண்டிருக்க…

 

இல்ல இல்ல அவன் போயிருக்க மாட்டான்,கண்டிப்பா அதே இடத்தில் தான்  இருப்பான்.. நீ செஞ்சு வச்சுட்டு வந்த வேலைக்கு…, உன்ன என்ன பண்ணலாமுன்னு காத்திருப்பான் “நீ  என்று அவளின் மனசாட்சி சொல்ல…. 

 

“ இல்ல இல்ல கண்டிப்பா நான் பண்ண வேலைக்கு கோபத்தில் அந்த ரூம விட்டு போயிருப்பான்…, பொதுவாக ஆம்பளைங்க எல்லாருமே அப்படித்தானே பண்ணுவாங்க…,ரூமுக்கு வெளில போயிருவாங்க….நான் எத்தனை படத்துல பார்த்து இருக்கேன்.அப்ப கண்டிப்பா அவனும் ரூம விட்டு வெளிய போயிருப்பான்னு” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள் பாத்ரூமின் கதவை திறந்து கொண்டு வெளியில் வந்து பார்க்க…, அவளின் மனச்சாட்சி சொன்னது போல்…, yஅங்கு இவளை தான் எதிர்பார்த்துக் கொண்டு காத்திருந்தான் இடுப்பில் கைவைத்து விதுரன்… 

 

மான் விழியால் வருவாள்…. 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!