பாட்டியிடம் பேசிவிட்டு ரூமிற்குள் வந்தவனோ விகிதா படுத்து இருக்கும் செயலைக் கண்டு அதிர்ந்தவன்….சற்று வெளியில் வந்து தன்னுடைய மூச்சை சீராக்கிக் கொண்டிருக்க…, அதே நேரம் விகிதாவின் அப்பாவோ விதுரனிடம் பேசிக் கொண்டிருக்க…. அவர் சென்றவுடன் மறுபடியும் ரூமிற்குள் வந்தவன்,அவள் மேல் உள்ள கோபத்தில் ஜக்கில் தண்ணீர் எடுத்து அவள் முகத்தில் ஊற்றி இருக்க…,அதில் கோபம் கொண்ட பெண்னவளோ அவன் செய்தது போலவே அவனிடம் செய்து காட்டியவள்… பாத்ரூம்மிருக்கு சென்று விட.., அதே நேரம் வெளியில் பிரம்மை பிடித்து நின்று கொண்டிருந்த விதுரன்….அவள் என்ன செய்தால் என்று ஒன்றுமே புரியாமல் நின்று கொண்டிருக்க அவன் போய் விட்டான்” என்று உணர்ந்தவளோ வெளியில் வர அதே நேரம் அவன் அந்த ரூமை விட்டுப் போகாமல் அவள் வரவுக்காக இடுப்பில் கைவைத்து காத்துக் கொண்டிருந்தான் கோபத்தில் விதுரன்…
இனி ..,
“ஆஹா வீரா அப்ப விருமாண்டி இங்கனக்குள்ளதாண்டா நிற்கிறான்… பொதுவா படத்துல எல்லாம்….நம்ம கிட்ட சண்டை போட்டுட்டு மறு நிமிசம் கோபத்துல வீட்டை விட்டு வெளியில தான் போவாங்க….இவன் என்ன வித்தியாசமா இங்கயே நின்னுகிட்டு இருக்கான்” என்று மனதில் அவனை பற்றி நினைத்துக் கொண்டவள்,அவன் முகத்தைப் பார்க்காமல் நேராக கட்டிலின் பக்கத்தில் வர…
அவனும் அவள் வந்து நின்றது…,அவள் பார்வை போன இடம்….அவளையே அங்குலம் அங்குலமாக அளந்து கொண்டிருந்தவன்… அவள் கட்டிலின் அருகில் வரவும் சற்று விலகிய நின்றான்… எதுவும் அவளிடம் பேசாமல்…
நேராக கட்டிலின் அருகில் சென்றவள் தன்னுடைய மொபைல் போனை எடுத்துக்கொண்டு.., அவனை விட்டு விலகி சென்று வெளியில் போக போகும் போது அவளின் கையைப் பிடித்து நிறுத்தினான் விதுரன்…
ஆஹா..!!! இதுவரைக்கும் எதுவும் நடக்கல….என்னு நினைச்சேனே பம்பரக்கட்டை பரங்கி மண்டையை கண்டுபிடிச்சிட்டானே..!!!! இவ்வளவு நேரம் எதுவும் பேசாம இருந்தா, இப்ப பேசிட்டானே நினைச்சேன்…. இவன பத்தி நல்லது நினைச்சலே ஏதாவது ஒன்னு பண்ணுவானே இவ்வளவு நேரம் அமைதியாவே இருக்குதே,அப்படின்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன் இதோ கைய புடிச்சுட்டானே…. என்னை என்ன கேட்க போறான்னு தெரியலையே “என மனதிற்குள் நினைத்துக் கொண்டவள் முழுவதும் முகத்தை மட்டும் திரும்பியவன் அவனின் முகத்தை மேற்கொண்டு பார்க்க…
அவள் பார்த்ததில் அவன் தான் ஜெர்க்காகி நின்றான்…..வேகமாக அவன் பிடித்து இருக்கும் கைகளை விட்டவன்…, என்னது என்னோட ருமை இவ்வளவு கேவலமா வைத்திருக்கிற..!!!!” என்று அவன் பார்வை அவன்னின் ரூமை கண்கள் அழைப்பாய விட…
“நான் உங்க அருமை இவ்வளவு நீட்டா வச்சிருக்கேன்னு பெருமைப்படுங்கள்…, ஐ எம் மீன் சாரி நம்மளோட ருமை இவ்வளவு அழகா பெர்பெக்டா வச்சிருக்கேன்னு நீங்க பெருமைப்படுங்க..,என்னோட வீட்டுக்கு என்னோட ரூம் வந்து பாத்தீங்கன்னா இதைவிட ரொம்ப கேவலமா வச்சிருப்பென்.., அதுக்கும் இதுக்கும் கம்பேர் பண்றப்போ இது நான் பெஸ்ட்டாவே வைத்திருக்கிறேன்…. சோ இதுக்கு நீங்க பெஸ்ட் அவார்டு தான் எனக்கு கொடுக்கணும்” என அவள் திமிராக அவனுக்கு பதில் சொல்ல…
“பொண்ணுல தான் நீ பொண்ணு லிஸ்ட் ஆகவே இல்லை…..ன்னு நினைத்துக்கொண்டு இருந்தேன்… ஆனா இந்த மாதிரி ஒரு பர்பெக்ட்லயும் நீ அந்த லிஸ்ட் கெல்லாம் சரியே பட்டு வரமாட்ட..!!!! அப்படின்னு நீ தெளிவா சொல்லிட்ட ஆக்சுவலி உங்க அம்மா அப்பா உனக்கு என்னதான் சொல்லி வளர்த்தாங்க..? “ என அவன் அவளிடம் கோபப்பட்டு கொண்டே கேட்க…
இதோ பாருங்க நீங்கதான் என் கழுத்துல தாலி கட்டி இருக்கீங்க…,அதனால என்னைய சொல்றதுக்கு உங்களுக்கு என்ன “வேணா உரிமை இருக்குது …, உங்க அம்மா அப்பாவை இழுக்குறதுக்கு உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது… அப்புறம் வீடை அவ்வளவு கிளீனா நீட்டா வச்சிருக்குறதுக்கு இது ஒன்னும் மியூசியம் கிடையாது…. ரூம் நம்ம ரெண்டு பேருக்கும்மான தனிப்பட்ட ரூம்…அதுல எப்படி வேணா இருக்கலாம்…,இந்த பொருள் இப்படித்தான் இருக்கணும்…அந்த பொருளும் அப்படித்தான் இருக்கணும் அப்படின்னா அதுல மியூசியத்தில் போய் பாருங்க.., அங்க அப்படித்தான் இருக்கும்…. இது ரூம் எங்க எப்படி இருக்கணுமோ அப்படித்தான் இருக்கணும்… எனக்கு இதுதான் புடிச்சிருக்கு……., உங்களுக்கு இஷ்டம் இல்ல அப்படின்னா எனக்கு புடிச்ச மாதிரி நான் ரூம்ல அப்படி இப்படின்னு கலைச்சி போடுவேன்…உங்களுக்கு புடிச்ச மாதிரி நான் கலச்சி போட்ட பொருள் எல்லாம் நீங்க எடுத்து வச்சுக்கோங்க வேணா…. இந்த டீல்க்கு வேணா நான் அக்செப்ட் பண்ணிக்கிறேன்” என சொல்லியவள் அப்புறம் கடைசியா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என அவனை பார்த்து கொண்டே அவள் சொல்ல…
“இவ்வளவு நேரம் பேசினது பத்தலன்னு இப்போ என்ன மேடம் பெருசா பேச போறீங்க..? “ என கைகளை கட்டிக்கொண்டு நிமிர்ந்து அவளை பார்க்க…
அவன் நின்னது போலவே அவனுக்கு எதிரில் அவளும் கைகளைக் கட்டிக் கொண்டு அவளை நிமிர்ந்து அண்ணாந்து பார்த்தால்…
“ஸ்ப்பா இவன பாக்குறதுக்கு என்னோட கழுத்து எல்லாமே வலிக்குமே..!!! இவன் ஏன் தான் இவ்வளவு ஹைட்டா வளர்ந்து கெட்டவனா இருக்கானே… தெரியல …பனமரத்துல பாதியா இவ்வளவு உயரமா நெடுமாடு மாதிரி வளர்ந்து இருக்கானே” என மனதிற்குள் நினைத்துக் கொண்டவள் வேகமாக கட்டளின் மேல் ஏறி நின்று கொண்டவள்… இப்பொழுது நேருக்கு நேர் அவனை பார்த்து அவன் கைகட்டி நின்றது போலவே இவளும் கைகட்டி நின்றால்…
“தேங்க்ஸ் நான் பேசனும்னு சொன்ன உடனே நீங்க என் பேச்சைக் கேட்கறதுக்கு ரெடியாயிட்டீங்க.. அந்த விதத்தில் உங்கள ரொம்ப புடிச்சிருக்கு ஐ லைக் யு” என சொல்ல…
“இதுதான் நீ சொல்லணும்னு சொல்லிட்டு இருந்தியா..?” என அவன் முறைத்துக் கொண்டே கேட்க…
“ இல்லை இல்லை இல்லை அதெல்லாம் கிடையாது நான் ரொம்ப ஜாலி அப்புறம் எனக்கு பிரண்ட்ஸ் சர்க்கிள் நிறையவே இருக்குது…, இன்னும் சொல்லப்போனா நல்லா சாப்பிடுவேன் நல்லா தூங்குவேன்.., ஆன சமைக்க தெரியாது…,நல்லா வெளில சுத்துவேன் வெளில போறப்போ,பாய்ஸ் அழகா இருந்தா அவங்கள சைட் அடிப்பேன்…அதுவும் எனக்கு உன்ன மாதிரி தாடி வச்சிருந்தா இன்னும் நிறைய சைட் அடிப்பேன்.. அந்த பழக்கம் இருக்குது.. இது எல்லாமே ஏன் உங்க கிட்ட சொல்லுற அப்படின்னு நீங்க ஒரு நிமிஷம் உங்களோட அறிவே இல்லாத மண்டையில யோசிக்கலாம், ஆனால் நாள பின்ன ஏதாவது ஒரு பையன பாக்குறப்போ என்கிட்ட நீ ஏன் பார்த்தாய் என்று அதிக லவ்வுனால என்கிட்ட சண்டை போடக்கூடாது இல்லையா…. அதனால தான் இப்பவே நான் சொல்லிடுறேன்…”
“ நம்மளோட கல்யாணம் எப்படி நடந்துச்சு அப்படிங்கிறது உங்களுக்கு நல்லாவே தெரியும் எப்படி நடந்தாலும் எனக்கு ஓகே தான் கல்யாணம் நடக்கிறதுக்கு முன்னாடி சண்டை போட்டேன்….அம்மாகிட்ட எப்போவுமே பைட் பண்ணுவேன்…பட் கல்யாணத்துக்கு அப்புறம் உங்க கிட்ட பைட் பண்றதுக்கு எனக்கு ரொம்பவே புடிச்சிருக்கு….. இன்னமும் உங்கள தான் லவ் பண்ண போறேன்” என நான் எதிர்பார்க்கிறத விட அது அளவுக்கு அதிகமாகவே நீங்க என்னோட ரசனைக்கு தகுந்த மாதிரி இருக்கீங்க அந்த விதத்துல எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு டா ஐ லவ் யூ டா புருஷன்… உம்மா உம்மா என பறக்கும் முத்தத்தை கொடுத்தவள்…..அவன் என்னவென்று உணரும் முன்பே அவனின் பக்கத்தில் குதித்து சட்டை கலரை பற்றி குனிய வைத்து அவனின் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு வேகமாக அந்த ரூமை விட்டு வெளியேறி விட்டால் அவன் உணரும் முன்பே …
இது எப்படி சாத்தியமாகும்? பொண்ணுங்கனாளே நான் பத்தடி தூரம் போறவன் தானே…,அப்புறம் எப்படி இவள் பேசுறப்போ, இவ ஏதாவது சில் மிச சேவைல பார்க்கிறப்போ நான் அமைதியாக இருக்கிறேன்.ஒருவேளை எனக்கு அவளை புடிச்சிருக்கு அதனாலயா..!!!! ஆனா எப்படி பிடிக்கும் அவளை இன்னைக்கு காலையில தானே பார்த்தேன்..,காலையிலிருந்து அவள் கிட்ட சண்டை போட்டுக்கிட்டு திட்டிக்கொண்டு தானே இருக்கிறாய் அப்புறம் எதுனால நான் இப்படி அமைதியா இருக்கிறேன் பொதுவாக என் பக்கத்துல வர்றப்ப நான் இரண்டு அடி தள்ளி தானே போகணும்…ஆனா இப்படி ஏன் சிளை மாதிரி நிக்கிறேன் என அவனுக்குள்ள கேள்வி கேட்க கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு பதில் என்னமோ பூஜ்ஜியம் தான்…
பெண்ணவள் ஓடி வருவதை பார்த்து எதார்த்தமாக வெளியில் வந்த ராகினி..
‘ உனக்கு கல்யாணம் ஆகிவிட்டது அதை மனசுல வச்சுக்கோ.., ஏன் இப்படி ஓடி வர யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க உன்ன” என்று சற்று பயந்து கொண்டே அவளிடம் ரகசியமாக சொல்ல…
“ஐயோ அம்மா யாரும் சொல்றதுக்கு முன்னாடியே நீ நல்லாவே சொல்லுற இதை பண்ணாத பண்ணாத இப்படி இருக்காது அப்படி இருக்காதா…அப்படி இப்படி அப்படி இப்படி “என்று நொட்டு லொசுக்கென்று எல்லாமே சொல்லிக்கிட்டு இருக்கமா.., “ஆக்சுவலி எனக்கு கல்யாணம் ஆனது கூட பெருசில்ல…, நீ இப்படி எல்லாம் ஒரு அட்வைஸ் என்கிற பெயரில் என்னைய திட்டிக்கிட்டே இருக்கியா…. அப்பப்போ அது தான் எனக்கு பெருசா இருக்குது என அவள் அம்மாவை பார்த்து சொல்லியவள் நேராக சென்றது என்னவோ காதம்பரி பாட்டியிடம் தான்…
“என்ன…,இவளுக்கு நம்ம சொல்றது எதுவுமே புரிய மாட்டேங்குது..,இவளுக்கு தெரியாத்தனமா நம்ம கல்யாணம் பண்ணி வச்சிட்டோமா நம்ம தப்பு பண்ணிட்டோமா!!” என்று முதல்முறையாக ராகினி யோசித்துக்கொண்டிருக்க…
“ ஹே பியூட்டி உன்னுடைய பெயர் என்ன..? அந்த அளவுக்கு சிடுசிடு இருக்கிறா” என டைரக்டாக காதம்பரி பாட்டியிடம் கேட்க…
“என்ன பேத்தி சொல்லுற? என்று ஒன்றுமே புரியாமல் காதம்பரி பாட்டி கேட்க..பக்கத்தில் இருந்த மரகதமும் களுக்கென்று சிரித்தாள்…
பியூட்டி நான் என்ன சொல்ல வர்றேன்னு உனக்கு புரிஞ்சிருச்சா சரி விடு இந்த விஷயத்துல பாட்டிகிட்ட கேக்குறத விட உங்கிட்ட கேட்கிறது இன்னும் கொஞ்சம் பெட்டரா இருக்கும் நீ பக்கத்து வீட்டுல தான இருக்குற அப்போ என்னோட புருஷன நீ அடிக்கடி பாப்பா தானே என் புருஷன பத்தி கொஞ்சம் தெரிஞ்சு வச்சு இருப்ப இல்ல அத சொல்லு கொஞ்சம்” என்று வேகமாக மரகதத்திடம் கேட்க…
அச்சோ வி …. விகிதாவின் பெயர் தெரியாமல் மரகதம் முழித்துக் கொண்டிருக்க…
என்னோட பேரு விகிதா என அவள் பெயர் தெரியாமல் முழித்துக் கொண்டிருப்பதை பார்த்து விகிதா சிரித்துக்கொண்டே சொல்ல
இல்ல எனக்கு தம்பிய பத்தி பெருசா எல்லாம் தெரியாது தம்பி….இங்க கொஞ்ச நாள் தான் வளர்ந்தாங்க அதுக்கப்புறம் எல்லாமே ஹாஸ்டல் தான் இப்போ இங்க இருந்து வேலைக்கு போறாங்க அவ்வளவுதான் எனக்கு தெரியும்….நீங்க சொல்ற மாதிரி என்ன விட பாட்டி மாவுக்கு இன்னும் அதிகமா தெரியும் என அவங்களோட பேரன் அதனால பெட்டர் நீங்க அவங்க கிட்ட கேட்கிறது தான் நல்லது” என்று நிறுத்தி நிதானமாக விகிதாவிற்கு பதில் சொல்ல…
இதில் இருந்து நீங்க ஒண்ணுமே பார்க்கல அப்படின்னு நல்லாவே தெரியுது… ஓகே நான் என்னோட பியூட்டி கேட்டுக்கொள்கிறேன் சொல்லுங்க…பியூட்டி உங்க பேரனை பத்தி ஏன்னா பாட்டியன் கண்ணம் கிள்ளி கேட்டால் விகிதா …
என்ன பத்தி என்ன தெரிஞ்சுக்கணும் மேடம்..? என்று பின்னால் நின்று கையை கட்டிக்கொண்டு விதுரன் கேட்க…
“எல்லாம் உங்கள பத்தி தெரிஞ்சுக்கணும் இது என்ன புது கேள்வியா இருக்குது “என்று விகிதாவும் அவனுக்கு நிகராக பதில் சொல்ல..
ஐயா பேராண்டி.., பேத்திய கூப்பிட்டு தனியா போய் பிசியா ரெண்டு பேரும் மனசு விட்டு பேசுங்க..ரெண்டு பேருக்குமே எதிர்பாராமல் கல்யாணம் நடந்தது…அதனால ரெண்டு பேரும் மனசு விட்டு பேசினால் தான் எல்லாமே சரியா போகும்…என்று நாகரிகம் கருதி காதம்பரி பாட்டி சொல்ல…
“மானத்தை வாங்குற பாரு..,நான் பேசினா அமைதியா இருக்கணும் அப்படிங்கிற ஒரு பேசிக் கூட தெரியல…இவள போய் எங்க பாட்டி செலக்ட் பண்ணி இருக்காங்க…எனக்கு அமைதி அப்படின்னா என்ன பலன் கேட்கிற!!” என்று மனதிற்குள் அவளைப் பார்த்து திட்டிக் கொண்டிருந்தவன் வா ரூமுக்கு என்று சொல்ல…
ஆஹா..!!! வெளில எல்லாரும் முன்னாடியும் கேட்டா இவன் எதுவும் நம்மள தாக்க மாட்டான்னு பார்த்தா ரகசியமா ரூமுக்கு கூப்பிடுறன்” ஏனோ அவன் பேசியது ரசிக்க வேண்டும் என்ற மற்றொரு மனம் தோன்ற…
முன்னாள் குடும்பத்தில் விதுரன் போய்க்கொண்டிருக்க பின்னால் அவனின் கோபத்தை ரசித்தவரே விகிதா சென்றால்…
மான் விழியால் வருவாள்…