“எப்படி போறான் பாரு கோவத்துல..,அவன் கோபத்தில் போகும்போது கூட அழகா தான் பா இருக்குது” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்கும் அதே நேரம்…. ரூமிற்குள் சென்றவன்.., அவள் பின்னால் வருகிறாளா..!!! என்று திரும்பிப் பார்க்க அவள் திரும்பிப் பார்த்த நேரம்…அவள் ரூமிற்குள் நுழையவும்…அந்த கதவை தாழ்ப்பாள் போட்டான்…
“இப்ப எதுக்கு கதவை அடைக்குறீங்க, ஒரு வேளை என்கிட்ட தப்பா எதுனா நடந்து போறீங்களா.., தப்பா நடக்கிறதுன்னா அது ரொமான்ஸ் தான் நான் கேள்விப்பட்டு இருக்கேன்…நிறைய படத்துல பார்த்து இருக்கேன்….ஹீரோ வந்து ரூமுக்குள்ள வருவாரு… அதே நேரத்தில் ஹீரோயின் வந்த உடனே ஹீரோ கதவை பூட்டிருவாரு..,பூட்டுன உடனே அப்படியே ரொமான்ஸ் தான் நடக்கும்…செமையா இருக்கும். அதை நான் நிறைய பார்த்திருக்கிறேன் பட் அனுபவிச்சது கிடையாது….நீங்க அதுதான் பண்ண போறீங்களா..!!! அதுக்கு வெயிட் பண்றீங்களா..!!! ஒரு நிமிஷம் நான் கொஞ்சம் பிரிப்பர் ஆயிட்டேன்” என அவள் விடாமல் அவன் பார்த்து பேசிக் கொண்டிருக்க…
“ உன்னோட வாய் மூடவே மூடாதா.., இப்படித்தான் நீ ஏதாவது பேசிக்கிட்டே இருப்பியா.., நான் என்ன சொல்ல வரேன்னு ஒரு நிமிஷம் கேட்கிறாயா..” என அவளை பார்த்த முறைத்துக் கொண்டே கேட்க…
சரி நான் எதுவும் பேசல அமைதியா இருக்கிறேன்…. அப்புறம் உங்கள பத்தி நீங்க சொல்றேன்னு சொல்லி,என்ன ரூம்குள்ள தானே கூட்டிட்டு வந்தீங்க… ஆனா நீங்க உங்கள பத்தி சொல்லாம நீங்க என்னைய பத்தி பேசிகிட்டு , என்கிட்ட என்னைய திட்டிக்கிட்டு இருக்கீங்க… இது எந்த விதத்தில் நியாயம் நீங்களே சொல்லுங்க,அதனால நீங்க உங்கள பத்தி பேசுங்க… நான் அமைதியா அத கேட்டுக்கிட்டு இருக்கிறேன் ” என மறுபடியும் அவள் பேச அவளின் கையைப் பிடித்து தர தர வென இழுத்து வந்தவன்…. நேராக அந்த ரூமில் இருக்கும் டேபிளின் முன்பு நிப்பாட்டியவன் ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் பிளாஸ்டிக் ஒன்றை எடுத்தவன் அவள் வாயில் ஒட்டி விட்டு.., அவளின் புடவை முந்தனையை கையில் எடுத்தவன் அதை வைத்து அவளின் கைகளை கட்டினான்….
ஹ்ம் ஹ்ம் ஹ்ம் ஹ்ம் …. என்று அவள் ஏதோ ஒன்று பேச முடியாமல் அவள் சொல்லிக் கொண்டிருக்க, அதை பார்த்து அவனுக்கு சிரிப்பு வந்தாலும் சிரிக்காமல் அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தான் …
உன்னைய பத்தி நல்ல அனலைஸ் பண்ணிட்டேன்…. நீ கண்டிப்பா என் பக்கத்தில் இருந்தால் ஏதாவது ஒன்ணு பேசிக்கிட்டே இருப்ப… அதுக்காக தான் முன்னடியே முடிவு பண்ணி….உன்னை ரூமுக்குள்ள கூப்பிட்டதே உன்னோட வாயில் பிளாஸ்டர் ஒட்டணும் அப்படிங்கறதுக்காகதான்…
“ என்ன பத்தி தெரிஞ்சுக்கணும்.., அப்படிங்கறதுககா தானே.., என்னோட பாட்டி கிட்ட போய் கேட்டா நானே சொல்றேன்.. நல்லா. கேட்டுக்கோ” என்றவன் சொல்ல…
ஹ்ம் ஹ்ம் ஹ்ம்…. என்றவள் தலையை அசைத்துக் கொண்டே பின்னால் நகர்ந்து நேராக கட்டிலில் உட்கார்ந்தவள் இப்பொழுது பேசு என்பது போல் தலையைசைக்க…
ராட்சசி ராட்சசி…. இப்ப கூட அமைதியா இருக்காளா…?? எப்படி ஆடிட்டு தெரியுறாள் பாரு.., கொஞ்சம் கூட அடங்கவே மாட்டா போல…,இவளை என்ன பண்ணனும் எனக்கு தெரியல… அவ ரொம்ப பேசுற…எண்ணிய கேக்காம என் பக்கத்துல அனுமதி இல்லாம அங்கங்க டச் பண்றா, அதுனால கையை கட்டி போட்டேன்…ஆனா அதையும் மீறி அவ தலையை வைத்து அசைக்கிற பாரு.., என்னய எண்ணமோ பண்ணுற அவ…, என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன்… அவளை பார்த்து கொண்டிருக்க…
“நீ அவளை பார்த்து ரொம்பவே மயங்குற.., அவ உன்னைய வளைச்சு போடுறதுக்கு ட்ரை பண்றாள் … அவள பத்தி உனக்கு நல்லாவே தெரியுமே.., அவ உன்னை மயக்குறதுக்கு என்ன வேணா பண்ணுவான்னு.., அவ கூட கார்ல வரும்போது நல்லாவே பாத்துட்ட..,அதனால நீ கொஞ்சம் உஷாரா இரு…,அவ பக்கத்துல கான்சன்ட்ரேஷன கொண்டு போகாத” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன் தன்னுடைய தொண்டையை சிறுமிக் கொண்டு அவளிடம் பேச ஆரம்பித்தான்…
இதோ பாரு எங்க பாட்டி சொன்னதுனால தான் நான் உன்னை கல்யாணம் பண்ணினேன்…, எனக்கு பெருசா உன் மேல எந்த ஒரு இன்ட்ரெஸ்ட்டும் கிடையாது….கல்யாணம் நின்னு போனது பாத்தியா.., இந்த கல்யாணத்தை நிப்பாட்டுனாலா..!!! அவ்வளை தான் நான் லவ் பண்ணுறேன்…. இப்பவும் அவளை தான் லவ் பண்ணிக்கிட்டு இருக்கேன்…என் மேல உள்ள கோவத்துல தான் அவ இந்த கல்யாணத்தையே நிப்பாட்டனா..,அப்புறமா கால் பண்ணி சமாதானம் செஞ்சுகிறேன்… பட் எங்க ரெண்டு பேருக்கும் இடையில் நீ இருக்கிற, அதனால எனக்கு டிவோர்ஸ் கொடுத்துடு… அப்புறம் என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டல்ல நீ…,அதனால நீ எந்த மாதிரி ஜீவனாம்சம் எதிர்பாக்குறையோ அதை கொடுக்குறதுக்கு நான் தயாரா இருக்கிறேன்….பட் எனக்கு உன் கூட வாழ புடிக்கல… என்னைய பத்தி தெரிஞ்சுக்கறது வேஸ்ட்….அப்புறம் நீங்க என்னை லவ் பண்ணுற…. என்னென்னமோ அப்போ டயலாக் விட்டுகிட்டு இருக்குற… அது எல்லாமே வேஷ்ட்…. நீ முதல் தடவ கிராமத்து காரனை பாக்குறதுனால வந்த அட்ராக்சன் அவ்வளவுதான்… மத்தபடி நீ என்னை லவ் பண்ணல… உனக்கு இப்போ இருக்குறது காம உணர்வு…. அது தான் அதிகமா இருக்கு…. அதனால என் மேல ஒரு அட்ராக்சன் வந்திருக்கு…. அதனால தான் நீ இப்படி பேசுற இப்படி நடந்துக்கற…!!! அதை மொத நல்லா தெரிஞ்சுக்கோ…. அப்புறம் நான் பேச வேண்டியது எல்லாமே பேசிட்டேன்….என்னோட ரூம் எப்படி இருக்கணும்…எந்த மாதிரி இருக்கணும் அப்படின்னு முடிவு பண்ணுவது நானு.., ஒரு பெயிங் கெஸ்ட் மாதிரி இருக்கிற…. அதனால இப்படி அதிக பிரசங்கித்தனமா பேசுறே… என்கிற பேர்ல ஏதோ ஒன்னு பண்ணிக்கிட்டு இருக்காத..,எல்லா நேரமும் நான் பொறுமையா இருக்க மாட்டேன் என்று அவளைப் பார்த்து சொல்லியவன் பேசியதெல்லாம் பேசி முடிந்தாயிற்று… என்று முடிவு செய்தவன் அவள் கைகளைக் கட்டி இருக்கும் அந்த கட்டினை எடுத்து விட்டு, அவள் வாயு ஒட்டி இருக்கும் அந்த பிளாஸ்டரையும் எடுத்துவிட்டு இப்போ நீ என்ன சொல்ற..?என அவளை பார்த்து கேட்க…
“வாவ் இவ்வளவு அழகா நீங்க பேசுறீங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை… உங்களுக்கு பேச தெரியுமா??? இவ்வளவு அழகா பேசுவேன்ணு நான் எதிர்பார்க்கவே இல்லை..,நீங்க கோபப்படும் போது அழகுதான்….. பேசும் போது இன்னும் பேரழகா தெரியறீங்க..!!! அப்புறம் என்ன சொன்னீங்க….ஒரு பொண்ண லவ் பண்றீங்களா…,பரவால்ல பண்ணிட்டு போங்க… எனக்கு ஒன்னும் பிரச்சனை கிடையாது….அப்புறம் என்னால எல்லாம் டைவர்ஸ் கொடுக்க முடியாது….உங்களுக்கு இஷ்டம் இருந்தால் நீங்க பாட்டிகிட்ட போயி நான் அந்த பொண்ணு தான் லவ் பண்ணுறேன்… இவளுக்கு நான் டைவர்ஸ் கொடுக்க போறேன்னு சொல்லுங்க…. பாட்டி அக்செப்ட் பண்ணிக்கிட்டா மட்டும் தான் நான் அந்த இடத்தில் கையெழுத்து போடுவேனே.., தவிர மத்தபடி நானா போட மாட்டேன்….அதுவும் எனக்கு இஷ்டம் இருந்தால் தான் போடுவேன்… அப்புறம் இன்னொன்னு என்னமோ சொன்னீங்களே…. என்ன சொன்னீங்க என்ன சொன்னீங்க….ஜீவனாம்சம் கொடுக்கிறேன் என்று சொன்னீகள்ள… நல்ல கேட்டுக்கோங்க நம்ம ரெண்டு பேருகுள்ள, ஜீவனாம்சம் என்ன தெரியுமா…? சப்போஸ் நம்ம ரெண்டு பேருக்கும் டிவோர்ஸ் ஆயிருச்சு அப்படின்னா, நான் ஜட்ஜ் கிட்ட கேக்குற ஒரே விஷயம்…. ஒன்னு தான்..என் புருஷன் கூட டெய்லியும் நான் தான் இருக்கணும்.., என் புருஷனை கொஞ்சனும், என் புருஷன் என்னையும் கொஞ்சணும் …அப்புறம் இன்னொன்னு மெயின் என்ன தெரியுமா.., நாங்க ரெண்டு பேரும் இருக்கிறப்போ கூட எவளும் இருக்கக்கூடாது அப்படின்னு… தான் நான் ஜீவனாம்சம் கேட்பேனே தவிர,வேற எந்த மாதிரியும் கேட்க மாட்டேன்… என்னய என்ன பணத்துக்கு போறவன் நெனச்சுக்கிட்டு இருக்கியா.., நீ பணம் தூக்கி கொடுத்தா… உன்னை டிவோர்ஸ் பண்ணிட்டு போவேன்னு நினைச்சுக்கிட்டு இருக்கியா.., இந்த ஜென்மத்துலயும் இல்ல உன்னை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அப்படி நடக்கவே நடக்காது…..அது நல்ல உன்னோட நெடுமாட மண்டையில,மரமண்டைல பதிய வைச்சுக்கோ புருஷா…,சரியா…வரட்டா புருஷன்…இந்த நிகழ்ச்சி கூட நல்லா தான் இருக்குது….” உன்கிட்ட என அவனை பார்த்து சொன்னவள் கடைசியாக போகும் முன் ஹலோ புருஷா என அவனை கூப்பிட…
அவளைப் பார்த்த முறைத்துக் கொண்டே நின்று கொண்டிருக்க…
“ஐ லவ் யூ டா புருஷா…. நீ பேசறது எல்லாமே ரொம்ப புடிச்சிருக்கு டா…. நீ என்ன திட்டுறது கூட ஒரு அழகா தான்டா இருக்குதுடா புருஷா…” என அவனைப் பார்த்து சொல்லியவள் மறுபடியும் பறக்கும் முத்தம் ஒன்று கொடுத்துவிட்டு…அந்த ரூமை விட்டு வெளியேறினால்…
அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை,எப்பொழுதும் போல் தலையில் கை வைத்து அதே இடத்தில் சாய்ந்து கொண்டு நின்றவன்….அவள் பேசிய வார்த்தைகளை எல்லாம் ரிமைண்ட் செய்து பார்க்க… அவளிடம் பேசியது அவள் தன்னிடம் பேசியது எல்லாம் யோசித்துப் பார்த்துக் கொண்டிருந்தவனின் உதடு அவனை அறியாமல் புன்னகை செய்தது…
“ராட்சசி எப்படி பேசிட்டு போற பாரு..,இவ கிட்ட ஏதாவது ஒன்னு பேசி இவள கடுப்பாக்கலாம் அப்படின்னு பார்த்தா,கடைசியா நம்மல கடுப்பாக்கிட்டு போறாள்…. நான் இன்னொரு பொண்ணை லவ் பண்ணுறேன்…அவளை தான் கல்யாணம் பண்ண போறேன் அப்படின்னு சொன்னேன்….எந்த பொண்ணா இருந்தாலும் கண்ணுல தண்ணி வரும்,ஆனா இவ என் கண்ணுல தண்ணிய வர வச்சுட்டு போயிருவா போல….இவ பேசுறதெல்லாம் பார்த்தா…. ப்பா இவ என்ன பொண்ணுடா” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன்…. என் உதடு புன்னகையில் விரிய…மனதும் ஏதோ ஒன்று லேசானது போல் உணர்ந்தான்….
இங்கு வெளியில் வந்த விஹிதா … நேராக சமையல் அறைக்கு சென்று … ,ஏதோ ஒன்றை தேடிக் கொண்டிருக்க…
“சின்னம்மா என்ன தேடுறீங்க..? ஏதாவது வேணுமா…. நீங்க என்ன தேடுறீங்கன்னு சொன்னா நான் எடுத்து தர வசதியா இருக்குமா” என்று அந்த பணிப்பெண் விஹிதாவிடம் சற்று மரியாதையுடனே பேச ….
“என்னோட பேரு விஹிதா.., நீங்க என்னோட பேர் சொல்லலையே, கூப்பிடலாம்….அப்புறம் நீங்க இவ்வளவு யோசிக்க வேண்டியதுக்கும் அவசியமே கிடையாது….எனக்கு இப்ப ரோஸ்மில்க் குடிக்கணும் போல,ஆசையா இருக்குது….உங்களால் அதை செஞ்சு தர முடியுமா, இல்லாட்டி அதற்குரிய இன்கிரிடியன்ஸ் எல்லாம் எங்க இருக்குன்னு சொல்லுங்க….நானே ரெடி பண்ணிக்கிறேன்….”என அவள் கேட்க…
அவள் பேசியது ஒன்றுமே புரியாமல் பணிப்பெண் அப்படியே நின்று கொண்டிருக்க…
“ என்னக்கா…நான் சொல்றது உங்களுக்கு புரியலையா, எதுக்கு இப்படி முழிச்சுக்கிட்டு இருக்கீங்க..?”என விஹிதா அந்த வேலைக்கார பெண்மணியிடம் கேட்க…
“ என்ன பாப்பா நீ என்ன பேசுறன்னு ஒண்ணுமே விளங்கல..,”அதுதான் q தலையை சொறிந்து கொண்டே அவள் மிக மெதுவாக பேச…
“நீங்க ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்றீங்களா…, நான் போய் என்னோட வீட்ல நீங்க கேக்குற ரோஸ் மில்க் பிரிப்பேர் பண்ணி கொண்டுட்டு வரேன்” என பின்னால் இருந்து ஒரு குரல் வர…
வேகமாக அந்த குரலுக்கு சொந்தக்காரர் யாரு என நினைத்தவள்.., மனதிற்குள் சிரித்துக் கொண்டே “வாவ் உங்களுக்கு ப்ரிப்பேர் பண்ண தெரியுமா..? நீங்க வீட்ல வச்சிருக்கீங்களா..?”என்று கேட்க மரகதமோ ஆம் என்று தலையை அசைத்தவுடன் நேராக மரகதத்தின் பக்கத்தில் வந்த விகிதாவும் அவளின் கன்னத்தை பிடித்தவள் எனக்கு இன்னும் பிரச்சனை கிடையாது…என்று சொல்லியவள் நானும் உங்க கூட வரனே… உங்க வீட்டுக்கு..என்று கேட்க…
மரகதமும் நேராக காதம்பரி பாட்டியிணை பார்க்க…,காதம்பரி பாட்டியோ தலையை அசைத்த உடன்… சரி ஓகே வாங்க என்று விஹிதாவை பார்த்து சொல்ல…
அதே நேரம் இங்கு மொட்டை மாடியில் நின்று கொண்டு மரகதத்துடன் போகும் விகிதாவையே பார்த்துக் கொண்டு இருந்தான் விதுரன்…
மான்விழியால் வருவாள்…