“ உங்க வீட்டில யாருமே இல்லையா நீங்க மட்டும் தான் இருக்கீங்களா..??” என்று அந்த வீட்டில் யாரும் இல்லாததை வைத்து விகிதா கேட்க…
“இல்ல விகிதா.. எங்க வீட்டுல எல்லாருமே காலையில வேலைக்கு போயிருவாங்க இன்னைக்கு எனக்கு லீவு அதனால தான் நான் எங்கேயும் போகல இல்லாட்டி நானும் காலேஜ் கிளம்பிடுவேன்…. என மரகதம் சொல்லிக் கொண்டு அவளுக்கு ரோஸ் மில்க் ரெடி செய்து கொடுக்க, அதே நேரம் காதம் பரி பாட்டி வீட்டில் இருக்கும் வேலைக்கார பெண்மணியோ சாப்பிட அழைக்க,வருகிறேன் என்று சொன்னவர்கள் அந்த வேலைக்கார பெண்மணியை போக சொல்லிவிட்டு ரோஸ் மில்க் குடிக்க ஆரம்பித்தால்.
அந்த பெரிய பாய் நீட்டாக விரித்து அதில் எல்லோரும் வரிசையாக சாப்பிட உட்கார்ந்திருக்க…, விதரனும் விகிதாவும் உட்க்காந்திருக்க, அவர்கள் இருவருமே சிறிது இடைவெளி விட்டு தான் உட்கார்ந்து இருந்தார்கள்…
அவளுக்கும் அவனின் பக்கத்தில் சாப்பிட உட்கார்ந்து இருக்கொமே என்ற முக பூரிப்பு இருக்க..,அவனோ வேண்டா வெறுப்பாக சாப்பிட உட்கார்ந்தான்….வேறு வழி இல்லாமல் தனது பாட்டிக்காக…
சாப்பிட வந்ததிலிருந்து ராகினியோ விதுரனின் முகத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்…. என்னவென்று எப்படி.., ஏது விசாரிக்காமல் தன்னுடைய சின்ன மாமியார் என்ற ஒரே காரணம்,சொந்தம் என்ற ஒரே காரணத்தினால் காலையில் தன் பெண்ணிடம் கல்யாணம் செய்து கொள்…. என்று சொன்னது எவ்வளவு பெரிய தப்பு… என நினைத்து கொண்டு ஒவ்வொரு நிமிடமும் விதுரினை பார்க்கும் பொழுது உணர்ந்து கொண்டிருந்தாள்….என்னதான் அவன் அப்படி இல்லை,தன்னுடைய மகளை நன்றாக பார்த்துக் கொள்வான்….என்று எதிர்பார்த்தாலும் ஏனோ அவளின் மனது கலங்க தான் செய்தது விதுரனை பார்க்கும் பொழுது…
“ஏன் சின்னம்மா நான் கேட்கணும்னு நினைச்சேன்…ஆனா எப்படி கேட்கிறதுன்னு தெரியல.. சரி கேட்காம அமைதியா இருக்கிறத விட கேற்றலாமே,அப்படின்னு தான் கேட்கிறேன்… உங்கிட்ட கேட்கலாமா என்று காதம்பெரி பாட்டியிடம் ராஜகுமார் கேட்க …
என்னப்பா ராசா கேளுப்பா என்று காதம்பரி பாட்டி சொல்ல…
அது வந்து கேட்கணும்னு நினைச்சேன் நம்ம வீட்டுக்கு வந்த போக, சொந்தக்காரங்கன்னு யாரும் இல்ல…அப்புறம் வீடுலயும் யாரும் சொந்தம்ன்னு அந்த அளவுக்கு பெருசா இல்ல.., நீங்க மட்டும் தான் இருக்கிறீங்க பொதுவா நம்ம சொந்தக்காரங்க தான் அதிகமா இருப்பாங்க…ஒரு கல்யாணத்துல ஆனா இப்போ ஏன் யாருமே இல்லாம இருக்காங்க.., எனக்கு அந்த அளவுக்கு தெரியல ஏன்னா நான் ஊருக்கு வரதில்லன்னு உங்ககிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன்..பட் இருந்தாலும் யாரும் இல்லp” என்று மிக மெதுவாக ராஜகுமார் கேட்க…
“நீ சொல்றது என்னமோ சரி தான்….ஆனா இந்த கல்யாணத்துக்கு அவன் யார்கிட்டயும் சொல்ல வேண்டாலும் முடிவு பண்னிடன்…. அதனால எல்லாருமே கோபத்தில் தான் இருக்கிறாங்க… அவனோட அம்மா அப்பா இறந்ததுக்கு வரிசையா வந்துட்டாங்க…இவ்வளவு கடன் இருக்கு… அவ்வளவு கடன் இருக்கு இப்படி இருக்கு…அப்படி இருக்குன்னு பெருசா பேச வந்துட்டாங்க….அதுக்கப்புறம் அவன் ஏதோ ஒரு ஆக்சிடென்ட்ல தான் என் பையன் இறந்துட்டான்…. ஆனா அந்த ஆக்சிடென்ட் காரணமே இல்லாம அவங்க கதை கட்டவும், என் பேரனுக்கு ரொம்ப கோவம் வந்துருச்சு…. இருக்கும்போது எல்லாம் பார்த்து பயந்தவங்க..,என்னோட மகன் போகவும் எல்லாம் எப்படி எப்படியோ பேச ஆரம்பிச்சுட்டாங்க….அதனாலதான் சொந்தமும் வேண்டாம்… பந்தமும் வேண்டாம்னு…. எல்லாத்தையும் ஒதுக்கி தள்ளுனான்….என்னோட கல்யாணத்துக்கு யாருமே வரக்கூடாதுன்னு சொன்னான்…. நானும் எவ்வளவோ சொல்லி பாத்துட்டேன்… அவன் கொஞ்சம் கூட கேட்கல….அதனாலதான் எல்லாருமே கோபத்துல இருக்காங்க யாரும் வரவும் இல்ல…” என்று சற்று வருத்தத்துடன் காதம்பரி பாட்டி சொல்ல…
“என்னங்க இது சாப்பிடுற நேரத்துல போய் என்ன பேசணும்…,கேட்கணும்னு தெரியாம இந்த மாதிரி கேக்குறீங்க..?” என்று சற்று மெதுவாக ராகினி ராஜ்குமாரிடம் கேட்க…
“இல்லடி உனக்கே தெரியும்.., எவ்வளவு பேர் இருக்காங்கன்னு ஆனா அதையும் மீறி இப்போ யாருமே இல்ல அப்படிங்கிறதுனால தான் கேட்டேன்,ஆனா சின்னம்மா சொல்லுறதுலயும் சரிதானே!!! இருக்கும்போது அப்படி இப்படின்னு இருந்துட்டு….இல்லாதபோது கண்ட மாதிரி பேசுறது தப்பு தானே, என் மருமகன் செய்யறது இல்ல… தப்பே கிடையாது… அவன் சரியா தான் செய்கிறான்” என்று ராகினியிடம் சொல்ல…
எப்படி பார்த்தாலும் அந்தப் பையனை இவர் ஒசத்தியா தான் பேசுறாரு.. இவர்கிட்ட போய் நம்ம நினைக்கிறது எல்லாம் சொல்லாது அப்படின்னா கண்டிப்பா….. நம்மள நினைத்துக் நினைத்துக் கொண்டிருக்க…
என்னடா பேரண்டி…,சாப்பிடாம அப்படியே இலையை பார்த்துக்கிட்டே இருக்க…? சாப்பிட வேண்டியதானே..!!! அப்படியே என்னோட பேத்திக்கு ஒருவா ஊட்டு…. என்று காதம்பரி பாட்டி சிரித்துக்கொண்டே சொல்ல…
பாட்டிமா எனக்கு ஆ வாங்கிலாம் பழக்கம் கிடையாது தப்பா எடுத்துக்காதீங்க…நான் கொடுத்து தான் பழக்கம்… அதனால நானே உங்க பேரனுக்கு உட்டுறேன் என்று சொல்லிக் கொண்டவள் சாப்பாடை சிறிதாக எடுத்து அவனின் வாயின் அருகில் கொண்டு போக…
அவனும் முகத்தை சுளித்து உதட்டை சுறுகியவன் மறுபக்கம் திரும்பப் போக…
“ நீ இப்ப மட்டும் என்கிட்ட வாங்கலன்னு வச்சுக்கோ, அப்படியே நேர உங்க பாட்டி கிட்ட போய் சொல்லிடுவேன்…நீ ஒரு பொண்ண லவ் பண்ணுற, அதுனால எனக்கு டிவோஸ் கொடுக்க சொல்ற அப்படின்னு, உங்க பாட்டி கிட்ட சொன்னேன்னு வச்சுக்கோ….அடுத்த நிமிஷம் என்ன நடக்கும்னு தெரியுமில்ல… அதனால இப்ப வாங்குற” என்று அவனின் காதுக்குள் ரகசியமாக சொல்லியவளின் கைகளோ அப்படியே தான் இருந்தது…அவனின் வாய் அருகே…
மாப்பிளைக்கு கொஞ்சம் கூட இஷ்டம் இல்லையோ.., நம்ம ஒருவேளை இதப்பத்தி மாப்பிள தம்பி கிட்ட பேசலாமா..,எனக்கு என்னமோ என்னோட பொண்ணோட “வாழ்க்கை நெனச்சாலே கஷ்டமா இருக்குதே”என்று மனதிற்குள் ராகினி ஒரு பக்கம் நினைத்துக் கொண்டிருக்க..
என்ன பேரண்டி என் பேத்தி என்னமோ சொல்லுது போல.., உன் காதல ரகசியமா… என்று சிரித்துக் கொண்டே காதம்பரி பாட்டி…
அது வந்து பாட்டிமா லவ் என்று சொல்ல வர…அவனும் அவளின் கையறுக்கே தன் வாயைக் கொண்டு போனவன், அவள் கையில் இருக்கும் சாப்பாட்டை வாங்கிக் கொண்டவன்… அவளை பார்த்து முறைத்துக் கொண்டே… “பாட்டி உங்க பேத்திக்கு இந்த சாப்பாடு புடிக்கலையாம்,வேற சாப்பாடு வேண்டுமாம்… அதுதான் சொல்லிக்கிட்டு இருந்தா” என்று அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டே காதம்பரி பாட்டியிடம் சொல்ல…
ஏன் என்னடி சாப்பாடு நல்லா தானே இருக்குது..? நீ இதெல்லாம் சாப்பிடுவியே,இப்ப என்ன புதுசா சாப்பாடு பிடிக்கவில்லை என்று சொல்ற? என்று வேகமாக ராகினி சொல்ல…
“எதுக்குத்தா பிள்ளையை போய் திட்டுற.., புள்ளைய எதுக்குத்தான் முறைச்சி பாக்குற.., அது சின்ன குழந்தை என்ன பேசணும் எப்படி இருக்கணும் அப்படிங்கறது எல்லாம் அவளுக்கு தெரியாது….மனசுல என்ன இருக்கோ அத சொல்லிடுவாங்க அதே மாதிரி தான் என் பேத்தியும்….அவளுக்கு என்ன வயசு ஆகுதுன்னு நீ இப்ப அவளை திட்டிக்கிட்டு இருக்கிற”என்று காதம்பரி பாட்டி ராகினியை பார்த்து திட்ட…
வாவ் ஸ்வீட் பாட்டி.., இப்ப தெரியுதா நான் ஏன் உன்னை பியூட்டி ன்னு சொல்கிறேன்ணு…. என்று ஒவ்வொரு சமயமும் “நீ எனக்கு சப்போர்ட் பண்றதுனால தான் நான் ஒரு பியூட்டின்னு சொல்கிறேன்…,எங்க அம்மா எப்ப பார்த்தாலும் என்னை திட்டிக்கொண்டே தான் இருக்கும்…அதுக்கு என்ன தெரியப்போகுது நான் ஒரு குழந்தை என்று அவள் சிணுங்கி கொண்டே சாப்பிட…
“எனது இவ குழந்தையா!!! இவ குழந்தையே கிடையாது,சரியான ராட்சசி அரக்கி எப்படியெல்லாம் இம்ச பண்ணனும் அப்படின்னு கேட்டா அதுக்கு பெஸ்ட் இவளோட பேரு சூஸ் பண்ணலாம் அந்த அளவுக்கு ஒரு ஆளை இன்சர்ட் பண்றதுல்ல இவள் தான் கெட்டிக்காரியா இருப்பா”என்று மனதிற்குள் கறுத்துக் கொண்டிருந்தான்…விதுரன் ..
விதுரனை பற்றி ராகினி நினைத்துக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது வரும் தென்றல் காற்றாய் காதம்பரி பாட்டி தன்னுடைய மகளுக்கு சப்போர்ட்டாக இருப்பதை நினைத்து ராகினியின் மனது சற்று குளிர தான் செய்தது. போக போக தன்னுடைய மகள் வாழ்க்கை சரியாகிவிடும்…. என்ற எண்ணமும் ஒரு பக்கம் வந்து போக… அதே நேரம் விதுரனை நினைத்து தன்னுடைய மகள் வாழ்க்கை ஏதாவது பிரச்சனையில் முடியுமோ..!!! என்ற பயமும் வந்து போனது…
விதுரனோ வேறு எதுவும் பேசாமல் முதல் ஆளாக கொஞ்சம் சாப்பிட்டு முடித்தவன்…. எழுந்து சென்று கையை கழுவ போக போகும் அதே நேரம் அவனைப் பார்த்து சிரித்த விகிதாவும் இன்னும் சாப்பாடு வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்….
“தாயு சாப்பிட்டு ஒரு அரை மணி நேரத்துல மறு வீட்டுக்கு கிளம்பிடலாம் தாயு…,எதுக்கு சொல்றேன்னா அங்க நாலு மணி,நாலரைக்குள்ள போயிறணும்….வீட்டுக்கு அப்பதான் சரியா இருக்கும்…. அடுத்த நேரம் எதுவும் சரியில்ல…அதனால போயிட்டு ஒரு கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு அதுக்கப்புறம் ஒன்னும் தெரியாது.., அதனால இப்ப சாப்பிட்டு கொஞ்சம் கிளம்புற மாதிரி இருக்கும்த்தா ” என்று ராகினியிடம் சொல்ல…
சரி அத்தை என எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தால் ராகினி..
அவர்கள் சாப்பிட்டு முடிக்கவும் சரியாக ஜோசியர் அந்த வீட்டிற்கு வர ஜோசியரை உபசரித்த காதம்பரிபாட்டியும்… சாப்பிட சொல்ல ஜோசியர் காதம்பரி பாட்டி சொன்னதற்கு எவ்வளவோ சொல்லியும் அவர் முழுவதுமாக மறுத்துவிட்டார்…
இரவு சம்பிரதாயத்திற்கான சடங்கிற்கான நேரத்தை ஜோசியர் வந்து குறித்து விட்டு, அதை ராகினியிடம் கொடுத்துவிட்டு காதம்பரி பாட்டியிடம் அனுமதி கேட்டு விட்டு அந்த வீட்டை விட்டுப் போக…
ஏன் பாட்டி பூசாரி எல்லாம் எதுக்கு வீட்டுக்கு வர்றாங்க..? என்று புரியாமல் விஹிதா கேட்க …
அம்மாடி அது பூசாரி கிடையாது..,நம்ம குடும்ப ஜோசியர்…, நம்ம வீட்டில என்ன நடந்தாலும் சரி அவர்கிட்ட ஒரு வார்த்தை கேட்டு வரது தான் மனசு சரின்னு படும்.. அதனாலதான் என்று பாட்டி அடுத்து சொல்லுவதற்கு வர…
போ அப்ப பஸ்ட் நைட் காண நேரம் கேட்டீங்களா..?என்று வேகமாக விகிதா கேட்க..
ராகினியோ தலையில் அடித்துக் கொண்டு என்ன பேச்சு பேசுற..? என்று வேகமாக விகிதாவை பார்த்த முறைத்துக் கொண்ட சொல்ல…
இப்போ உள்ள காலகட்டத்தில் எல்லாம் சகஜமா போயிருச்சு, அதனால என் பேத்தி அப்படி சொல்றதுல ஒன்னும் தப்பில்லையே.., நீ எதுக்கு இப்ப முறைச்சுக்கிட்டு இருக்க..? என்ன காரணம்….அவளுக்கு தெரிய போறது தானே….அவ ஒரு குடும்பத்துக்குள்ள வந்துட்டானா அவளுக்கு எல்லாமே தெரியும் தானே….பாட்டி சொல்லி விட்டு, விஹிதாவை என் பேரன் முரட்டுத்தனமா இருக்கிறன்…,ஒரு குழந்தை அவன்கிட்ட நீ பாசத்தை கொட்டுன்னா.., அவன் உன்னை நீ கொட்டுற பாசத்தை விட அளவுக்கு அதிகமாகவே கொட்டுவான்.., என்ன கோபம் கொஞ்சம் அப்பப்ப வரும்..,அந்த கோபம் இருந்தாலும் குணம் அதிகமாக இருக்கும் தான்.., உன்னை எதுவுமே கவலைப்படுற மாதிரி ஆக்க மாட்டாங்க என் பேரன் தான் கொடுத்து வச்சிருக்கணும் என்று காதம்பரி பாட்டி சற்று கண்கலங்க சொல்ல…
ஐயோ பாட்டி நீங்க எதை நினைத்தும் பீல் பண்ணாதீங்க…,உங்களோட பேரன நான் நல்லா பாத்துக்குவேன்…அப்புறம் நியாயப்படி பார்த்தால் முரட்டுத்தனத்துல ஒரு குழந்தை இருக்கிறது ஓகே தான். ஆனால் நானே ஒரு குழந்தைங்கறது நீங்க புரிஞ்சுக்கணும்….அப்பவும் உங்க பேரன் தான் நியாயப்படி பார்த்தா என்னைய பாத்துக்கணும்…என்று சொல்லிய அவளின் மனதிற்குள் ஹாப்பா அவனுக்கு கோபம் கொஞ்சமா வருமா…, இந்தா பாட்டி கிட்ட கோபத்தை கம்முச்சுருக்க மாட்டான் போல…இவனுக்கு அதிகமா வரும்… அந்த கோபத்தை ஏற்கனவே என்கிட்ட காமிச்சுட்டான்…. என நினைத்தவளின் உதடு புன்னகை செய்தது….
மான் விழியால் வருவாள்…