அரண் 13
வைதேகியின் காத்திருப்பிற்கு விடை கொடுக்க இருபது நிமிடங்களிலேயே துருவனின் கார் வாசலில் வந்து நின்றது.
துருவன் மட்டும் காரில் இருந்து இறங்கி வர வைதேகி தனது இருக்கையில் இருந்து எழுந்து வாசல் பக்கம் வந்து நின்றார்.
துருவன் வேகமாக வந்து,
“குட் நைட் மா..” என்று கூறிவிட்டு மாடிப்படிகளில் ஏறச் செல்ல
“துருவன்..” என்ற அழுத்தமான ஒற்றை அழைப்பு அவனது கால்கள் நகராமல் அதே இடத்தில் நிற்கச் செய்தது.
நின்ற இடத்தில் இருந்து அப்படியே திரும்பி,
“என்னம்மா..?” என்று மிக இயல்பாக கேட்க,
அவனது முக பாவனையே அவனை காட்டி கொடுத்தது.
தாய் கேட்கப் போகும் கேள்விகளுக்கு எவ்வாறு பதில் சொல்லப் போகிறான் என்று,
“நான் என்ன கேள்வி கேட்கப் போகிறேன்னு உனக்கு நல்லா தெரியும் தெரிந்துகொண்டு தான் இப்படி நடந்து கொள்றா..”
“அம்மா இந்த நேரம் உங்களோட ஆர்கியுமென்ட் பண்ண எனக்கு விருப்பமில்லை எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு தூக்கம் வருது குட் நைட்..”
“ஓகே நீ தூங்க போகலாம் ஆனால் வள்ளி எங்க உன்னோட தானே கார்ல அனுப்பி வச்சேன் நீ மட்டும் தனியா வார..”
“வள்ளி பசிக்குதுன்னு சொன்னா அதுதான் நல்ல ஹோட்டலா பார்த்து அங்கேயே இறக்கி விட்டுட்டு வந்துட்டேன் அவள் ஆறுதலா அவளோட பசி தீரும் மட்டும் சாப்பிட்டு வரட்டும்..”
“அவ சாப்பிட மட்டும் பொறுமையாக இருந்து கூட்டி வர வேண்டியதுதானே.. அவ சின்ன பொண்ணுடா..”
“உங்க மருமகளுக்கு எப்ப பார்த்தாலும் சாப்பாடு சாப்பாடு தான்..”
“துருவன் என்ன காரியம் செய்திட்டு வந்திருக்க அவளுக்கு ஊர் பெயர் தெரியாத இடத்துல அவள போய் தனியா விட்டுட்டு வந்து இருக்க..
அவளுக்கு ஒன்னும் தெரியாது இந்த அப்பாவி பொண்ண யாரு என்ன செஞ்சாங்களோ தெரியாது அவ மட்டும் இப்ப வீடு வந்து சேரல உன்ன உண்டு இல்லன்னு பண்ணிடுவேன் அவ இல்லாத வீட்டில நீயும் இருக்கத் தேவையில்லை அவளோட இந்த வீட்டு வாசலுக்கு வாரதுன்னா வா இல்லன்னா…” என்று கோபத்துடன் ஆவேசமாகப் பேசினார் வைதேகி.
“இல்லன்னா என்ன சொல்லுங்க அதன் வாய் வரைக்கும் வந்துடுச்சே நான் என்ன இப்ப இந்த வீட்டை விட்டு போகணும் ஓகே போறேன்..” என்று கூறிவிட்டு திரும்பியவன் அப்படியே ஒரு நிமிடம் அதிர்ந்து போனான்.
ஆமாம் நம் நாயகன் அதிரும்படி அப்படி என்ன தான் நடந்தது. வேற யாரும் இல்ல நம்மளோட அற்புதவள்ளி தான் திடீரென அவன் முன் வந்து நின்றாள். அதனைக் கண்டு திகைப்படைந்து விட்டான் துருவன்.
வைதேகிக்கு அப்போதுதான் உயிரே வந்தது போல இருந்தது. அற்புத வள்ளியை காணவில்லை என்றால் எவ்வாறு அண்ணனிடம் பதில் சொல்வது, எங்கே என்று அவளைத் தேடுவது என்று திணறிக் கொண்டிருந்தவர் அவளைப் பார்த்த பின்பு பேரானந்தம் கொண்டார்.
“எப்படிமா வந்த…?”
“அதுவா அத்தை அது ஒன்னும் இல்ல வாய் இருந்தா வங்காளமும் போகலாம் என்று எங்க ஊர்ல சொல்லுவாங்க எனக்கு இந்த ஊரை பத்தி ஒன்னும் தெரியாது இங்கு இருக்கிறவங்களையும் தெரியாது ஆனால் உங்களை இங்கே இருக்கிறவங்களுக்கு தெரிந்திருக்க தானே வேணும் அதனாலதான் உங்க பேர சொல்லி இவரு விட்டுட்டு வந்த ஹோட்டல் முதலாளி கிட்ட கேட்டேன்.
அவரு நம்ம மாமாவோட நெருங்கின சிநேகிதராம் அதனால அவரே அவரோட கார்ல கொண்டு வந்து விட்டுட்டு போறாரு
“அவங்க கேட்கலையா ஏன் ஹோட்டலுக்கு முன்னுக்கு நிற்கிறேன்னு..” என்று வைதேகி ஆவலாகக் கேட்க,
“கேட்டாங்க அத்தை நான்தான் வந்த கார் ரிப்பேர் ஆயிட்டு இவங்க பக்கத்துல இருக்குற செட்டுக்கு கொண்டு போய்ட்டாங்க என்று சொல்ல ரொம்ப நேரம் ஆயிற்று அவர் வர லேட் ஆகும் நீங்க வீட்டுக்கு நேரத்துக்கு போங்க அவரு வந்து சேரட்டும் என்று சொல்லி கொண்டு வந்து விட்டுட்டு போகிறார் அந்த முதலாளி..”
“நல்லவேளை துருவன் செய்த கூத்த நீ அவருக்கு சொல்லல, சொல்லி இருந்தா அவரு நாளைக்கே வீட்ல வந்து நேர்ல கேட்டு இருப்பாரு. துருவன் உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையாடா..?” என்று வைதேகி அவ்வாறு கூறவும் துருவனுக்கு கோபம் தலைக்கு மேல் ஏறியது விறு விறு என படிகளில் ஏறி தனது அறைக்குச் சென்று விட்டான்.
வைதேகி சொல்வதை பார்த்துக் கொண்டிருந்த அற்புத வள்ளி,
“அவரு சும்மா பகிடிக்கு தான் செய்தார் அத்தை ஏன் அவரை ஒரே திட்டிகிட்டு இருக்கீங்க.? நீங்க எனக்காக அவருக்கு பேசுறதால அவரு கோபம் எல்லாம் என் மேல தான் இருக்கும் நான் வந்ததுக்கு அப்புறம் தான் நீங்க அவரோட கோவமா இருக்கீங்க என்று நினைப்பார்
கடைசில உங்க ரெண்டு பேரோட சண்டைக்கு நான் தான் காரணம் என்று அவர் என் மேல தான் வெறுப்பா இருப்பாரு
இனிமேல் எனக்காக அவருக்கு பேசாதிங்க அத்தை அவர் என்னோட சும்மா விளையாடுகிறார்..” என்று அவள் கூறிவிட்டு சிறு புன்னகையுடன் வைதேகி உறங்கும் அறைக்கு செல்ல முற்பட,
“நில்லு எங்க போற..?”
“இது என்ன கேள்வி நேற்று நாம இந்த அறையில தானே தூங்கினோம் அதுதான் தூங்குறதுக்கு போறேன் நீங்க வரலையா..?”
“அது நேத்து இன்னைக்கு நீ இங்கே தூங்கக்கூடாது..”
“அப்போ எங்க அத்தை..?”
“அதுவா..? வா…” என்று அற்புத வள்ளியை கொண்டு போய் துருவனின் அறைக்குள் விட்டுவிட்டு வந்துவிட்டார்.
குளியலறைக்குள் இருந்த துருவன். தனது கோட்டினை கழட்டி மெதுவாக காயம் பட்ட இடத்தை நீரினால் கழுவினான்.
அதனை சுத்தம் செய்து கொண்டே நடந்தவற்றை யோசிக்க, யாரோ ரிசப்ஷன் நடந்த ஹோட்டலில் இருந்து துருவனை பைக்கில் கண்காணித்துக் கொண்டே வந்தனர்.
துருவன் இதனை அவதானித்த பின்பு தான் அற்புத வள்ளியை அந்த உணவகத்திற்கு அருகில் இறக்கி விட்டான். துருவனுக்கு மட்டும்தான் யாரோ குறி வைத்துள்ளனர் இந்த பிரச்சனையில் அற்புத வள்ளியை இடையில் சேர்க்கக்கூடாது அவளுக்கும் அவளது உயிருக்கும் எந்த ஆபத்தும் வரக்கூடாது என்ற நல்லெண்ணத்திலேயே அந்த உணவகத்தில் இறக்கி விட்டு விட்டு சிறிது தூரம் காரில் வந்த பிறகு உணவகத்தின் தனது தந்தையின் நண்பன் என்பதால் கார் பழுதடைந்து விட்டது என தொலைபேசி மூலம் கூறி அவளை வீட்டிற்கு விட்டு விடுமாறு கூறியதும் துருவன் தான்.
அற்புத வள்ளியை பாதுகாப்பாக விட்டு விட்டு வந்த நிம்மதியில் ஒரு தனிப்பட்ட சாலை ஓரமாக கொண்டு போய் காரினை நிறுத்தினான்.
அவன் எதிர்பார்த்தது போல பின்பு அந்த பைக் அவனை தொடர்ந்து கொண்டே வந்தது.
காரிலிருந்து மிக இயல்பாக இறங்கி வெளியே வந்து கையில் தொலைபேசியை எடுத்து அதில் ஏதோ ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க, அந்த பைக் சரியாக மறைவான இடத்தை நோக்கி சென்று துருவன் என்ன செய்கிறான் என்று நோட்டமிட்டது.
பின்பு துருவன் எழுந்து மீண்டும் காருக்குள் நுழையப் போக எங்கிருந்தோ திடீரென ஒரு குண்டு அவனது கழுத்துக்கும் தலைக்கும் இடையே சிறு இடைவெளியில் பயணித்தது. தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்றானது துருவனின் நிலை.
அந்த மர்ம நபர் துப்பாக்கி மூலம் சுடுவான் என எதிர்பார்க்காத துருவனுக்கு மேலும் பதற்றம் வந்து தொற்றிக் கொண்டது.
உடனே காருக்குள் பாய்ந்து தனது இரகசிய ஹன்னை எடுத்து அதற்குள் குண்டை சரி பார்த்து விட்டு காரை விட்டு வெளியே புலி வேகத்தில் பாய்ந்து ஓடி வந்து அந்த பைக் ஒதுங்கி நின்ற இடத்தைப் பார்த்து சுட்டான்.
சுட்டவுடன் பைக்கில் இருந்தவன் சுதாரித்துக் கொண்டு வேகமாக பைக்கை முறுக்கிக் கொண்டு அவ்விடத்தை விட்டு நகரப் பார்த்தான்.
விடாமல் ஓடிக்கொண்டே அந்த பைக்கை துரத்தி துருவன் சுட, பைக்கில் இருந்தவனோ திரும்பிப் பார்த்து அவனது காலில் சுடப் போக, அதிலிருந்து தப்பிக்க எகிரி பாய்ந்த துருவன் அப்படியே தோள் அடிபட நிலத்தில் சரிந்து விழுந்தான். விழுந்த படியும் அந்த பைக்கை விடாமல் அவனது ஹன் துரத்தி சுட பைக் மிக வேகமாக பாய்ந்து சென்றது.
விழுந்ததில் அவனது தோள் மூட்டில் வீதியில் கிடக்கும் சிறு கற்கள் மூலம் உராய்வு ஏற்பட்டதால் தோளில் பலமாக அடிபட்டுவிட்டது.
போட்டிருந்த ஷர்ட் கிழிந்து அதில் இருந்து இரத்தம் கசியத் தொடங்கியிருந்தது.
நல்ல வேலை கோர்ட்டை காருக்குள்ளேயே அப்போதே கழட்டி வைத்து விட்டிருந்தான். இங்கு நடந்த விடயம் எதுவுமே தனது தாய், தந்தை உட்பட அற்புத வள்ளியின் குடும்பத்திற்கும் தெரியக்கூடாது என்று நினைத்திருந்தவன் அந்த கோர்ட்டை எடுத்து போட்டுக் கொண்டு தனது காயத்தையும் மறைத்து விட்டு வேகமாக கார் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டான்.
வரும் வழியில் ஏதேனும் வித்தியாசமாக தென்படுகிறதா என்று நோட்டமிட்டவன் எதுவும் இல்லை என்று அறிந்தபின் நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டு கமிஷனருக்கு அலைபேசி மூலம் அழைத்தான்.
“ஹலோ கமிஷனர் சார்.. எப்படி இருக்கீங்க ஒரு ஏஜென்ட் அதுதான் இந்த நேரம் கால் எடுக்க வேண்டியது தான் போயிட்டு.. சாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ்..”
“இட்ஸ் ஓகே துருவன் எனிதிங் சீரியஸ்..”
“ எஸ்.. த்ரெட் மெசேஜா வந்து கொண்டு இருக்கு என்ன பிரச்சனைன்னு தெரியல யாரோ என்னோட சாவுக்கு தேதி குறிக்கிறாங்களாம் இப்படி எல்லாம் மெசேஜ் வருது நான் வந்த மெசேஜ் உங்களுக்கு ஃபார்வேர்ட் பண்ணி அனுப்பி விடுறேன் வேணும்னா கம்ப்ளைன்ட் எதுவும் நான் ஆபீஸியலா ஏதாவது செய்யணும் என்றாலும் பரவாயில்லை நான் இந்த ரிசப்ஷன் பங்க்ஷன்ல ரொம்ப பிஸியா இருந்ததால கரெல்ஸா இருந்துட்டேன். என்ன பிராப்ளம்..? யாரு..? எவரு..? பிசினஸ் எனிமிசா என்று எனக்கு தெரியல எனக்கு இன்னும் டூ டேஸ்ல நீங்க யாருன்னு சொல்லிரனும் உயிரோட அவன் எனக்கு வேணும்..”
“ஓகே துருவன் இதை நீங்க நேரத்துக்கே என்கிட்ட சொல்லி இருக்கணும்..”
“நோ சேர் நோ இட்ஸ் ஓகே நீங்க எனக்கு சீக்கிரம் இந்த விஷயத்தை ஹேண்டில் பண்ணனும் அப்பாக்கு இது தெரிய வேணாம்..”
“இட்ஸ் ஓகே யூ டேக் கேர் நான் உங்களுக்கு ரெண்டு நாளுக்கு இல்ல ஒரு நாளுக்குள்ளையே யாருன்னு சொல்லப் பார்க்கிறேன் அந்த நம்பரையும் அனுப்பி விடுங்க அது எந்த இடத்துல சிக்னல் கிடைக்குதுன்னு பார்ப்போம்..”
“நம்பர்ல ஒரு யூசும் இல்ல சார் அவன் ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு நம்பர்ல இருந்து மெசேஜ் பண்றான் ரொம்ப செக்யூரா இருக்கான் செய்ற பிளான யாருமே கண்டுபிடிக்க கூடாதுன்னு நல்லா திட்டம் தீட்டித் தான் செய்கிறான் இப்ப கூட பைக்ல என்னைய கொலை பண்றதுக்கு கண் சூட் நடந்தது ரொம்ப சீரியஸா நீங்க இந்த விஷயத்தை ஹேண்டில் பண்ணனும் எனக்காக..”
“நீங்க இப்படி கேட்க வேண்டிய அவசியமே இல்ல நானே நேர்ல இதை விசாரிக்கிறேன் நாளைக்கு மார்னிங் உங்களுக்கு டீடைல்ஸ் கலெக்ட் பண்ணி சொல்றேன்..”
“ஓகே சார் ஃபைன்.. பாய்…” என்று கார் ஓட்டிக்கொண்டே தொலைபேசி மூலம் கதைத்து முடித்தவன் வீடு வந்தவுடன் கோர்ட்டை எடுத்து மாட்டிக்கொண்டு எதுவும் நடவாதது போல வீட்டிற்குள் நுழைந்து இதோ தனது காயத்தை சுத்தப்படுத்தி லேசாக மருந்து இட்டிருந்தான்.