முரணாய்த் தாக்கும் அரண் அவன் –

4.6
(11)

அரண் 30

அழைப்பினை துண்டித்து விட்டு திரும்ப துருவன் இமைக்காமல் அற்புதவள்ளியை பார்த்து கொண்டிருந்தான்.

துருவனின் எதிர்பாராத அந்தப் பார்வையின் வீச்சு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை வள்ளிக்கு ஏதோ ஊடறுத்து செல்வது போல இருந்தது.

அந்தப் பார்வையை எதிர்கொள்ள திராணியற்று அற்புதவள்ளி வெட்கத்துடன் தலைக்கவிழ அவளது கன்னச் சிவப்பைக் கண்டு சிரித்த வண்ணம்,

“என்னவாம் உங்க அத்தை..”

அவன் கேட்கும் கேள்வி சிறிது நேரம் அவளது காதில் விழவே இல்லை காலையில் நடந்த அனைத்து விடயங்களும் கனவு போல இருக்க அதனை மனதினுள் மீட்டுப் பார்த்துக் கொண்டிருந்தவள் சிறிது நேரத்தின் பின்னே அவன் கேட்ட கேள்வி அவளுக்கு மண்டையில் உரைத்தது.

“ஆஹ்… என்ன கேட்டீங்க அத்தையா..? உங்களோட பேசணுமாம்..” என்று பதில் உதிர்த்தாள்.

“ஏன் என்னை எழுப்பி இருக்கலாமே..!”

“இல்லை நீங்க அசந்து தூங்கிட்டு இருந்தீங்க..”

“ஆமா இன்னைக்கு செம டயட் மூணு மணியிலிருந்து விளையாடி…” என்று புன்னகைத்துக் கொண்டு அவளை ஓரக்கண்ணால் பார்த்துக் கூற,

அவனது புன்னகை அவளது வெட்கத்தை சீண்டியது.

“அற்புதம்..”

“…….”

“அற்புதம்..”

“……”

“அற்புத வள்ளி…”

“…..”

“என் கூட பேச மாட்டியா..?”

“…….”

என்று துருவன் அழைக்க எதுவும் பேசாமல் இருந்த வள்ளி,

“என்ன பசிக்குதா..” என்று கேட்டவுடன், இல்லை எனத் தலையாட்டினாள்.

“அப்போ சரி இன்னொரு ரவுண்டு விளையாடுவோமா..?” என்று கூறியதும் அவளால் துருவனை நேருக்கு நேர் பார்க்க இயலவில்லை.

உணர்வுகள் நெஞ்சில் அலை போல வந்து மோத போர்வையை இழுத்து  முகத்தை மூடிக்கொண்டு மெத்தையில் திரும்பிப் படுத்தாள்.

அவளது வெட்கத்தை பார்க்க பார்க்க அவனுக்கு திகட்டவில்லை. போர்வையை விலக்கிவிட்டு அவளது வதனம் பார்த்து நெற்றியில் முத்தத்தினை முத்திரையாக பதித்துவிட்டு சிறு தடுமாற்றத்துடன்,

“உன்ன ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனா அற்புதம்..” என்று அன்பாகக் கேட்டான்.

இல்லை என தலையசைத்து விட்டு அவனது நெஞ்சில் தஞ்சம் புகுந்தாள் பேதையவள்.

அவளது தலையை காதலுடன் தடவிய படி,

“சரி அது இருக்கட்டும் நீ எப்படி இங்க வந்த..? யாரோட வந்த..?”

“அதுவா அது வந்து சொல்ல மாட்டனே..”

“சரி சொல்லலைன்னா விடு நான் அம்மாகிட்ட கேட்டு தெரிஞ்சுப்பேன்..”

“சரி கேளுங்க..”

“நீ ரொம்ப நல்ல பிள்ளைன்னு நினைச்சேன் ஆனா உன்ன பார்த்தால் அப்படி தெரியலையே..!” என்று துருவன் கூறியதும்,

சிறு கலக்கத்துடன் அவன்  நெஞ்சிலிருந்து எழுந்து அவனது முகத்தை திரும்பிப் பார்த்து,

“ஏங்க அப்படி சொல்றீங்க நான் அப்படி என்ன தப்பு செஞ்சேன்..” என்று சிறு கோபத்துடன் கேட்க,

“ஓஹ் அப்படியா நீ ரொம்ப பெரிய தப்பு செஞ்சிட்ட..”

“என்ன தப்புங்க..”

“தப்புன்னா தப்பு தான் நீ ரொம்ப பேட் கேர்ள்..”

“இல்லைங்க ஊர்ல என்னதான் ரொம்ப நல்ல பிள்ளைன்னு சொல்லுவாங்க தெரியுமா..” என்று தன்னை மெச்சியபடி கூற,

“அப்படியா அப்படி என்ன பெரிய விஷயம் செஞ்சிட்டீங்க அம்மணி..”

“பெரியவங்களுக்கெல்லாம் உதவி செய்வோம், அம்மாக்கு சமைப்பதற்கு எல்லா உதவியும் நான்தான் செய்து கொடுப்பேன், அப்பாவுக்கு வேலைக்கு போய் சாப்பாடு கொடுத்துட்டு வருவேன், பக்கத்து வீட்டு ஆச்சிக்கு கடைக்கு வெற்றிலை, பாக்கு வாங்கி வருவேன், சின்ன குட்டிகளுக்கு மிட்டாய் பேப்பரை பிரிச்சு கொடுப்பேன், பக்கத்து வீட்டு அக்காக்களுக்கு மா இடிச்சு கொடுப்பேன், ஊர்ல திருவிழா நடந்தா அங்க மொத்த வேலையும் நான்தான் இழுத்து போட்டு செய்வேன், பந்தியில பரிமாறல் தொடக்கம் சமையல் வேலையில் இருந்து கோயில சுத்தப்படுத்துவது எல்லாமே நான் தான், அதோட ஒவ்வொரு நாளும் கோயிலுக்கு மாலை கட்டி கொடுப்பேன்..” என்று அவள் ஆர்வமாக கூற,

துருவனுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. சிரித்து சிரித்து இயலாமல் கண்களில் இருந்து கண்ணீரும் பூத்தது.

“ஏங்க சிரிக்கிறீங்க நான் உண்மையா தான் சொல்றேன்.. நீங்க நம்பலையா இருங்க அம்மாக்கு கால் பண்ணி தரேன் நீங்களே கேட்டுப் பாருங்க..” என்று வள்ளி துருவன் தான் கூறுவதை நம்பாமல் சிரிக்கின்றார் என்று எண்ணிக்கொண்டவள்,

உடனே தனது அன்னைக்கு அழைப்பு எடுக்க தொலைபேசியினைத் தேடினாள்.

ஒருவாறு சிரித்து முடித்த துருவன் தனது சிரிப்பை அடக்கிக் கொண்டு,

“ஓகே ஓகே நான் நம்புறேன் உங்களோட சமூக சேவை எல்லாம் சிறந்தது தான் ஆனால் அதுல சின்னப் பிள்ளைகளுக்கு மிட்டாய் பேப்பரை பிரிச்சு கொடுக்கிறது எல்லாம் சமூக சேவையில  எப்போ சேர்த்தாங்கன்னு தெரியல..” என்று கூறிவிட்டு மீண்டும் சிரிக்க தொடங்கினான்.

“என்னங்க ஏன் கிண்டல் பண்றீங்க..?” என்று கூறிவிட்டு சிறு கோபம் துளிர்க்க மெத்தையிலிருந்து எழ முயற்சித்தவளை, அவளது கரத்தினை பிடித்து இழுத்து தடுத்த துருவன்,

“சரி கோபப்படாதே உன்ன நான் என்ன சொன்னேன் இந்தியாவிலேயே இரு நான் திரும்பி ஒரு மாதத்தில் வந்துருவேன் என்று தானே சொல்லிட்டு வந்தேன் அப்படி சொல்லியும் நீ என்னை தேடி இந்த ஆவுஸ்திரேலியாவுக்கு இவ்வளவு தூரம் தனியா வந்திருக்க வர்ற வழியில தொலைஞ்சு போயிருந்தா என்ன நடந்திருக்கும்..” என்று துருவன் அக்கறையுடன் கேட்க,

“அதெல்லாம் ஒன்னும் நடந்திருக்காது அத்தை அவங்க சினேகிதி வசுந்தரா அத்தையோட தான் அனுப்பி வச்சாங்க..” என்று கூறிவிட்டு உடனே நாக்கை கடித்தாள்.

“ ஹா.. ஹா.. எப்படி உன் கிட்ட இருந்து நான் உண்மையை எடுத்தேன் என்ன வசுந்தரா ஆன்ட்டி என்கிட்ட அவங்களோட தான் வந்தேன்னு சொல்ல வேணாம்னு சொல்லி இருப்பாங்களே..!”

“அட ஆமாங்க எப்படி கண்டுபிடிச்சீங்க..?”

“அவங்களை எத்தனை வருஷமா எனக்கு தெரியும் அவங்களோட பார்த்து பழகு எங்க அம்மா அப்பாவுக்குள்ள வர்ற முக்காவாசி சண்டைக்கு அவங்க தான் காரணம்…”

“அச்சச்சோ அவ்வளவு மோசமானவங்களா..?”

“இல்ல ரொம்ப மோசமானவங்க..” என்று கூறி சிரித்து விட்டு,

“சரி இப்போ அவங்க எங்க..?”

“என்ன உங்க ரூம் வாசல்ல விட்டுட்டு அவங்க உடனே கிளம்பிட்டாங்க..”

“ரொம்ப சந்தோஷம்..”

“உங்க மேல நான் கடலளவு கோபத்தோடு வந்திருக்கேன்..”

“ஆனா நீ காலையில நடந்துக்கிட்டத பார்த்தா கோவமா இருந்த மாதிரி தெரியலையே..” என்றிட அவள்,

“என்னங்க..” என்று சிணுங்கினாள்.

அவளது சிணுங்களில் தொலைந்து போனவன்,

மீண்டும் மோக கடலில் முக்குளிக்க ஆசை கொண்டு அவளை வாரி அணைத்தான்.

அவனது விருப்பத்திற்கு அவளும் இசைந்து கொடுக்க அங்கே அழகான மோகன ராகங்கள் இசைக்கப்பட்டன.

பூவின் தேனின் சுவையை அறிந்த வண்டிக்கு அது திகட்டவா செய்யும். மீண்டும் மீண்டும் பூவின் அழகில் மூழ்கி முக்குளித்தது.

இருவரும் துவண்டு போய் மீண்டும் உறக்கத்தை நாடினர். உறக்கத்திலிருந்து முதலில் விழித்த அற்புதவள்ளி மெதுவாக சத்தம் எழுப்பாமல் கலைந்து கீழே கிடந்த தனது ஆடைகள் ஒவ்வொன்றையும் எடுத்துக் கொண்டு இருக்க,

துருவனும் எழுந்து நெஞ்சில் உறங்கிக் கொண்டிருந்த வள்ளியை காணவில்லை என்று தேட அவளோ அவனைக் கண்டதும், போர்வையை இழுத்து மூடிக்கொண்டு குளியலறைக்குள் சிட்டாகப் பறந்து விட்டாள்.

துருவன் எட்டி அவளது கரத்தை பிடிக்க அவளோ சுதாரித்துக் கொண்டு சிரித்த வண்ணம் ஓடிச் சென்று விட்டாள்.

குழாயில் நீரை திறந்து விட்டு அதன் கீழே நின்றவளுக்கு அனைத்தும் மாயையாக இருந்தது நேற்று இந்தியாவில் இருக்கும் போது யாராவது இப்படி உனக்கு நடக்கும் என்று சொல்லி இருந்தால் அவர்களுக்கு பைத்தியம் பிடித்து இருக்கின்றது என்று தான் நினைத்திருப்பாள்.

அவனது லீலைகளால் ஏற்பட்ட சிறு சிறு தழும்புகளை தடவி பார்த்து மெய்சிலிர்த்துக் கொண்டவள்,

காதலில் விளையும் இன்பம் இவ்வளவு தித்திப்பானதா..? என்று எண்ணி வியந்துதான் போனாள்.

குளித்து முடிந்த பின்பு தான் யோசித்தாள் மாற்றுவதற்கு உடை கொண்டு வரவில்லை என்று, குளியல் அறையினுள் இருந்து,

“என்னங்க.. என்னங்க.. என்னங்க..”

“என்ன அற்புதம் ஏதாவது வேணுமா..?”

“ஆமாங்க டிரஸ்ச விட்டுட்டு வந்துட்டேன் அத கொஞ்சம் எடுத்து போடுங்களேன்..” என்று கூறியதும்,

கள்ள சிரிப்பு சிரித்தவன்,

“எங்க அற்புதம் உன்னோட டிரஸ் எங்க இருக்கு..?”

“அங்க தாங்க பாருங்க..”

“இல்லையே அற்புதம்..”

“காலைல கொண்டு வந்தனே அந்த பெட்டில இருக்கு கொஞ்சம் பாருங்க..”

“இல்லம்மா..”

வள்ளிக்கு துருவன் மீது கடும் கோபம்  எழ உள்ளே இருந்த டவலினை எடுத்து கட்டிக்கொண்டு வேகமாக வெளியே வந்து,

“அதோ கட்டிலுக்கு பக்கத்துல இருக்கு அதுதான் என்னோட பெட்டி இந்த சின்ன ரூம்ல என்னோட பெட்டி உங்களுக்கு எங்கே இருக்குன்னு தெரியலையா ஏன் இப்படி பண்றீங்க நான்… நான் டிரஸ் கொண்டு போக மறந்துட்டேன்னு தானே கேட்டேன் இந்த சின்ன உதவி கூட எனக்கு நீங்க செய்ய மாட்டீங்களா..?” என்று வேகமாகப் பேசிக்கொண்டே போக துருவனோ இமைக்காமல் வள்ளியை பார்த்த வண்ணம் புன்னகைத்துக் கொண்டிருந்தான்.

‘என்ன நான் இவ்வளவு கோபமா பேசுறேன் இவரு என்னன்னா இப்படி சிரிச்சுக்கிட்டு இருக்காரு..’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள் பின்பு தான் துருவனின் பார்வை போகும் திசையைப் பார்த்து அதிர்ந்து போனாள்.

“அச்சச்சோ..” என்று இரு கைகளையும் மார்புக்கு குறுக்காகப் பிடித்துக்கொண்டு மீண்டும் குளியலறை கதவை திறக்க இம்முறை துருவன் பாய்ந்து வந்து அவளுடன் அவனும் உள்ளே சென்றான்.

இப்படியே காதலில் இருவரும் திளைத்திருக்க இவர்களின் மகிழ்ச்சியை எவ்வாறு கெடுக்கலாம் என இருவர் கொலை வெறியுடன் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர்.

அது யாராக இருக்கும்..?

அடுத்த பதிவில் பார்ப்போம்…

உங்கள் தோழி

இயல் மொழி

🥰🥰🥰🥰

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!