முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 35

4.5
(8)

அரண் 35

வள்ளியிடம் தனது திட்டத்தினை ஒப்பித்து முடித்த வசுந்தரா அவளிடம் 100க்கு 300 தடவை ஜாக்கிரதை என்று கூறி வசுந்தராவின் காரில் ஏறி துருவனைத் தேடிப் புறப்பட்டனர்.

காருக்குள் ஏறி இருந்த இருவரும் இருந்த பின்பு காரை எடுக்கும் முன்பு வசுந்தரா வள்ளியைப் பார்த்து,

“உன்னோட போன குடு வள்ளி..” என்று கேட்க,

“என்னோடதா..?” என்று தனது ஹேண்ட் பேக்கில் இருந்த கைத்தொலைபேசியை எடுத்து தடுமாற்றத்துடன் கொடுத்தாள்.

அதனைப் பார்த்ததும் வசுந்தரா புருவம் சுருக்கி,

“என்னது பாதி தான் வருது மீதி எங்க..?” என்று சற்று குரலை ஏத்தி கேட்க,

உடைந்து சிதறியதில் அனைத்தையும் எடுத்து தனது ஹேண்ட் பேக்கில் போட்டு வைத்தவள், அந்தத் துண்டுகளில் ஒன்றை எடுத்துக் காட்ட வசுந்தராவிற்கு ஐயோ என்று ஆனது.

“என்ன வள்ளி உன்னோட போன உடச்சிட்டியா இப்போ எப்படி துருவன கண்டுபிடிக்கிறது..?

போன வச்சு தான் நான் என்னோட போனை ரீச் பண்ணனும் நான் லொகேஷன் ஆன் பண்ணி வச்சுட்டு தான் காருக்குள்ள  என்னோட போன போட்டேன்.

இப்போ என்னோட நம்பர அடிச்சு லொகேஷன இன்னொரு போன்ல செக் பண்ணினா என்னோட போன் இருக்க இடத்தை அது காட்டும்.

அதை வச்சு அவங்க எங்க இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கலாம் அப்புறம் நாங்க நேரடியா அங்கே போய் துருவனை கண்டுபிடித்து காப்பாத்திடலாம் இப்படி பிளான் போட்டு தான் நான் காருக்குள்ள போன வச்சேன் இப்போ உன்னோட போன் இப்படின்னா என்ன செய்றது..?” என்று வசுந்திரா வள்ளிக்கு கோபமாகப் பேசிக்கொண்டே ஒரு இயலாமையுடன் அவளைப் பார்க்க,

“அவரோட போன் இருக்கு ஆனா..?” என்று மீண்டும் தயக்கத்துடன் துருவனின் கைத்தொலைபேசியை எடுத்து வசுந்தராவிடம் நீட்டினாள்.

ஒரு புது வழி கிடைத்துவிட்டது என்ற நம்பிக்கையில் சிரித்துக் கொண்டே வசுந்தரா,

“நல்லவேளை துருவனோட போன் இருக்கு சரி தா..” என்று கையில் போனை வாங்கி எடுத்து,

“ஓகே அவனோட போன் பாஸ்வேர்டை சொல்லு..” என்றதும் வள்ளிக்கு முழிகள் பிதுங்கின.

“அது வந்து அது தெரியாது..”

“என்ன நீ அவனோட பொண்டாட்டி தானே உனக்கு தெரியாதா..?”

தலை குனிந்த படி முகம் வாட,

“இல்லை அத்தை எனக்கு உண்மையிலேயே தெரியாது..”

“துருவன் உன்கிட்ட சொல்லலையா இல்லாட்டி நீ தெரிந்துகொள்ள விரும்பலையா..?” என்று அவர் கேள்விகளைத் தொடுக்க,

‘இதற்கு என்ன பதில் சொல்வது நாங்க இப்போ தான் வாழ்க்கையை ஒண்ணா வாழ ஆரம்பித்து இருக்கின்றோம் அதனால அவர் பத்தின எந்த விஷயமும் எனக்கு இதுவரைக்கும் தெரியாது என்று எப்படி இவங்க கிட்ட சொல்றது இவங்க அவரைப் பற்றி தப்பா நினைச்சுட்டாங்கனா..” என்று புரியாமல் அவள் தவித்துக் கொண்டிருக்க,

அவளது மௌனத்தை பார்த்து ஏதோ பிரச்சனை இருக்கு என்று புரிந்து கொண்ட வசுந்தரா அவளது மனநிலையை உணர்ந்து,

“சரி என்கிட்ட இன்னொரு போன் இருக்கு ஆனா அந்த போனை நான் யூஸ் பண்றது குறைவு பப்ஜி, ப்ரிபையர் அப்படி  கேம்ஸ் விளையாடறதுக்கு மட்டும்தான் அதை நான் யூஸ் பண்றது

நான் இதுவரைக்கும் என்னோட ஹஸ்பண்ட தவிர வேறு யாருக்குமே இது தெரியாது அந்த போனை வச்சு நாங்க எப்படியும் துருவன கண்டுபிடிச்சிடுவோம் நீ பீல் பண்ணாத ஓகே யா..?” என்று அவர் கூற உடனே வள்ளியின் முகம் மலர்ந்து,

“சரிங்க அத்தை சீக்கிரமா போனை எடுங்க அவரை கண்டுபிடிப்போம்..” என்று சிறுபிள்ளை போல துடி துடித்தாள்.

அவளது ஆர்வத்தை பார்த்து மகிழ்ந்த வசுந்தரா தனது ரகசிய ஃபோனை எடுத்து அதில் தனது இலக்கத்தை அடித்து அது இருக்கும் இடத்தில் லொகேஷன் எனும் அப் மூலம்  அந்த போன் இருக்கும் இடத்தை அறிந்து கொண்டார்.

“என்ன அத்தை..?”

“பக்கா பிளான் அவங்க சிட்டிக்கு தூரமா ஒரு காட்டுப் பகுதியில் தான் அவன வெச்சிருக்காங்க வா சீக்கிரம் போகலாம்..” என்று காரை மிகவும் வேகமாக ஓட்டிக்கொண்டு அந்த இடத்தை 20 நிமிடங்களில் விரைவாக அடைந்தார் வசுந்தரா.

அந்த இடம் எந்த ஒரு மனிதர்கள், வாகனங்கள் இல்லாத ஆள் அரவம் அற்ற ஒரு இடமாக இருந்தது.

பழைய பாழடைந்த ஒரு குடோன் போல மிகவும் பழமையான ஒரு தொழிற்சாலை மட்டும்தான் அங்கு இருந்தது. சுற்று வட்டாரத்தில் எந்த ஒரு கட்டிடங்களும் காணப்படவில்லை. அதனைப் பார்க்கவே மிகவும் பயங்கரமாக இருந்தது.

வசுந்தராவிற்கு மனதிற்குள் பய பந்து உருண்டாலும் வெளியில் காட்டிக் கொண்டால் வள்ளியும் பயந்து விடுவாள் என்று எதனையும் வெளியே காட்டிக் கொள்ளாமல் மிகவும் தைரியமாகக் காரை ஓட்டினார்.

அதோடு அந்த பாழடைந்த தொழிற்சாலை பிரதான வீதியிலிருந்து சற்று உள்ளே இருந்தமையால் இதுவரைக்கும் அப்படி ஒரு தொழிற்சாலை இருந்ததாக யாருக்கும் தெரியாது. கிட்டதட்ட அது ஒரு இரசாயன தொழிற்சாலையாகத் தான் இருக்க வேண்டும் என்று வசுந்தரா மனதுக்குள் கணக்கிட்டார்.

ஒருவழியாக தனது கைத் தொலைபேசி மூலம் அந்த இடத்தை தேடி கண்டுபிடித்த வசுந்தரா வெற்றி புன்னகையுடன் தனது காரை அருகில் இருக்கும் பெரிய புதருக்கு அருகில் நிறுத்தி வைத்து அதனை மறைத்துக் கொண்டார்.

துருவன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டோம் என்ற பேர் ஆரவாரத்தில் வள்ளி உடனே காரை திறந்து வெளியே இறங்க எத்தனிக்க,

வசுந்தரா அவளை தடுத்து கோபத்துடன் மிகவும் யாருக்கும் கேட்காத குரலில்,

“என்ன காரியம் பண்ணிக்கிட்டு இருக்க வள்ளி உன்கிட்ட நான் என்ன சொன்னான் நீ இங்கே வந்ததும் ரொம்ப ஜாக்கிரதையா நடந்துக்கணும் என்று சொல்லித்தானே கூட்டி வந்தேன்

நீ என்னன்னா காரில் இருந்து இறங்கி ஏதோ சந்தைக்கு காய்கறி வாங்க போறது மாதிரி போறா நான் அப்பவே சொன்னேனே சிறு பிள்ளை போல நடந்துக்காதேன்னு பிறகு உன்னால நானும் இந்த ஆபத்துல மாட்டிடுவேன் கொஞ்சமாவது பொறுப்பா நடந்துக்கோ ப்ளீஸ் வள்ளி எனக்கு நிறைய ஆசை இருக்கு நான் இன்னும் வாழனும் உன் புருஷனோட சேர்த்து என்னையும் போட்டு தள்ளிராத..” என்று அதட்ட,

அப்படியே பூனை போல வசுந்தராவின் பின் வந்து நின்று கொண்டு,

“மன்னிச்சுக்கோங்க அத்தை அவர எப்படியும் பார்த்துடனும் என்ற ஒரு ஆர்வத்துல அப்படி பண்ணிட்டேன்..”

“சரி நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குத் தானே திரும்பவும் ஏதாவது ஏடாகூடமா பண்ணி எல்லாரையும் ஆபத்துல மாட்டி விட்டிராத நீ செய்த ஒரு சின்ன தப்புல மூன்று  பேரோட உயிரும் சம்பந்தப்பட்டிருக்கு அவங்க ரொம்ப மோசமான ஆட்களா தெரியுது..” என்று வசுந்திரா எச்சரிக்க,

“சரிங்க அத்தை உங்கள  கேட்காம நான் ஒன்னும் பண்ண மாட்டேன் சத்தியமா..” என்று தலையில் கை வைத்து சத்தியம் செய்தாள் வள்ளி

“இதெல்லாம் நல்லா பண்ற ஆனா சொன்னது மட்டும் அப்பப்ப மறந்து போற

ஓகே வா போகலாம் யாராவது நிற்கிறார்களா என்று நான் முதலில் போய் பார்க்கிறேன் ஏனென்றால் இரண்டு பேரும் ஒன்றாக போவது ஆபத்து எனக்கு ஏதும் நடந்துச்சுன்னா நீ உடனே போலீசுக்கு கால் பண்ணிடு இந்த போன்ல இருக்கிற இந்த நம்பர அழுத்தி எமெர்ஜென்சி என்று சொன்னா போதும் அவங்க லொகேஷன பார்த்து உடனே பத்து நிமிஷத்துல வந்துருவாங்க ஓகே..”

“என்ன அத்தை ரொம்ப பயமுறுத்துறீங்க..”

“இங்க வந்து விளையாடாத வள்ளி நான் சொல்றத முதல் கேளு நான் போய் பார்த்த பிறகு உன்னை நான் கையை உயர்த்தி இந்த இரண்டாவது விரல் இருக்கல்லோ ஆட்காட்டி விரல் அதை அசைப்பேன். இப்படி..” என்று வசுந்தரா தனது ஆட்காட்டி விரலை அசைத்துக் காட்டினார்.

“அப்படி அசைக்கும் போது தான் நீ என் கிட்ட வரணும் அதுவரைக்கும் நீ அமைதியா இதே இடத்துல இருக்கணும்..” என்று சொல்லிவிட்டு மீண்டும் அவளை திரும்பிப் பார்த்து ஜாக்கிரதை என்று கூறிவிட்டு வசுந்தரா மிக மெதுவாக காலடி சத்தம் கூட கேட்காமல் இருக்க தனது காலணியை கழற்றி வைத்துவிட்டு நடந்து வந்து அந்தத் தொழிற்சாலையின் பின்புறமாக ஜன்னலோரத்தில் எட்டிப் பார்த்தாள்.

அங்கு அந்த தொழிற்சாலையின் கீழ் தளத்தில் பத்திற்கும் மேற்பட்ட அடியாட்கள் கைகளில் ஆயுதங்களோடும், துப்பாக்கியோடும் இருக்க அதன் நடுவில் துருவனை ஒரு பெரிய கதிரையில் கை, கால்கள் கட்டி போட்டிருந்தனர்.

துருவனின் தலை கீழே தொங்கிய படி இருக்க ஒரு வேலை அவன் இன்னும் மயக்கத்தில் இருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்ட வசுந்தரா நிலைமையை புரிந்து கொண்டு விவேகமாக செயல்பட என்ன செய்யலாம் என்று யோசித்தவர் ஒரு முடிவோடு பின்னே திரும்பி வள்ளியைப் பார்த்தவாறு தனது ஆட்காட்டி விரலை அசைத்தார்.

அவரது செய்கையை புரிந்து கொண்ட வள்ளி தனது காலணியையும் கழட்டி வைத்துவிட்டு மெதுவாக ஊர்ந்து தவண்டு வசுந்தராவின் அருகில் வந்து நின்றார்.

அந்நேரம் பார்த்து யாரோ ஒருவர் பின்னே வந்து நிற்பது போல வசுந்தராவின் மீது பின் நிழல் விழ, அப்படியே மெதுவாக திரும்பிப் பார்த்தவர் நொடியில் ஸ்தம்பித்து போய் அதே இடத்தில் உறைந்து நின்றார்….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!