மைவிழி – 05

4.6
(19)

மைவிழியை நாயகியாக தெரிவு செய்தது மிகப் பெரிய தவறு என அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கையில் ருத்ரதீரனின் யோசனையாலும் அவளது இயல்பான நடத்தையாலும் உருவான காட்சியை கண்டு அனைவரும் வாயடைத்துப் போனார்கள்.

தன் தெரிவு எப்போதும் பிழைத்துப் போகாது என விளங்கும் வகையில் ஆணவத்துடன் எழுந்து ருத்ரதீரன் அனைவரையும் பார்வையாலே சுட்டெரித்தான்.

மறுபக்கமோ மைவிழி சிறு பிள்ளை போல துள்ளிக் குதித்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

சுமார் பத்து நாட்கள் அந்தக் கிராமத்தில் இருந்து அவன் எதிர்பார்த்த அனைத்து காட்சிகளையும் அவன் நினைத்ததை விட சிறப்பாக எடுக்கக் கூடியாத அமைந்தது.

மைவிழியோ நடிப்பு என்பதற்கு மேலாக இயல்பாக அவள் செய்த அனைத்தையும் தன் திறமைக் கொண்டு மேலும் செதுக்கினான் ருத்ரதீரன்.

இறுதியில் அனைத்தும் சிறப்பாக முடிய படத்தின் அடுத்தக்கட்ட காட்சிகளை எடுப்பதற்காக சென்னைக்கு செல்ல அனைவரும் தயாராகினார்கள்.

மைவிழியோ அம்மாச்சியையும் தனது ஆசையான ஆட்டுக்குட்டிகளையும் பிரிந்து செல்ல மனமில்லாது தவிப்பாக இருந்தாள்.

குகனும் அவளோடு செல்ல மறுக்க தனிமையில் எவ்வாறு இருப்பது எனும் கவலை அவளுள் தோன்ற அதை வெளியில் சொல்லாமலே இருந்தாள் நங்கை. ஆனால் அவளது துயரை அறிந்துக் கொண்டான் ருத்ரதீரன்.

“மைவிழி நாம நாளைக்கே இங்கேயிருந்து போகனும் சோ நீ அதுக்கு தேவையான எல்லாத்தையும் ரெடி பண்ணு” என்றான்.

எப்போதும் கலகலவென்று சிரித்து பேசிக் கொண்டிருக்கும்  மைவிழியோ வாடிய வதனத்துடன் சரி என்றவாறு தலையை அசைத்துவிட்டு சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தவளின் கையில் ஓர் சிறிய பெட்டியொன்றை கொடுத்தான் ருத்ரதீரன்.

“என்ன இது…..?”

“கிப்ட்.. பரிசு.” என தமிழில் கூறினான் அவன்.

“எனக்கா இந்தப் பரிசு….?” என சட்டென அவளது பேச்சில் மாற்றம் ஏற்பட,

“எஸ் பட் இது உனக்கு இல்லை…” எனக் கூறினான் ருத்ரதீரன்.

அந்தப் பொருளை பார்த்து மகிழ்ச்சியாக மாறிய முகமோ தனக்கு இல்லை என்றவுடன் மீண்டும் சுருங்கிக் கொள்ள,

“எனக்கு இல்லையா…., அப்புறம் ஏன் என்கிட்ட கொடுக்குறீங்க…?” எனக் கேட்டவாறு தன் கையில் இருந்த பெட்டியை உடைத்துப் பார்த்தாள் மைவிழி.

“என்ன இது கண்ணாடி மாதிரி இருக்கு…?” எனக் கேட்டாள்.

“கண்ணாடியா.? அடியேய் இதுதான் செல்போன், ஏன் உனக்கு இதைப் பத்தியும் ஒன்னும் தெரியாதா…?” எனக் கேட்டான் ருத்ரதீரன்.

“செல்போனா…?, அப்படின்னா” என்ற அவளது கேள்வியில் ருத்ரதீரனுக்கு புரிந்த ஒரேயொரு விடயம் இவள் இன்னும் கிணற்றுத் தவளையென்று,

“இது தான் ஃபோன், இதை வைச்சு ஒரு இடத்தில இருந்து தூரமா இருக்குறவங்க கூட பேச முடியும்” என தன் கையில் ஃபோனை தூக்கிக் காட்டிச் சொன்னான் ருத்ரதீரன்.

“இதுவா….., அதுக்கு உங்க ஊர்ல ஃபோன்னா சொல்லுவாங்க.. எங்க ஊர்ல இதுக்கு பேரு பேசுறப் பெட்டி,

அதோடு நீங்க என்னைப் பொய் சொல்லி ஏமாத்த பார்க்குறீங்க பேசுற பெட்டிக்கு அமத்துற கட்டை எல்லாம் இருக்கும் இதுல ஒன்னுமே இல்லையே யாரை ஏமாத்த பார்க்குறீங்க. முகம் பார்க்கிற கண்ணாடி தானே இது.?” என புத்திசாலி தனமாக பேசுவது போல தன்னை மெச்சியவாறு அவன் எதிரே நின்றாள் மைவிழி.

அவளது தலையில் தட்டிய ருத்ரதீரன், “லூசு இதுவும் நீ சொல்றதும் ஒன்னுதான், நம்பலன்னா கொஞ்சம் பொறு” எனக் கூறி ஃபோனை ஆன் செய்து கொடுத்தான் ருத்ரதீரன்.  அதில் இருந்த ஒவ்வொன்றையும் சொல்லிக் கொடுக்க ஆந்தைப் போல விழித்துக் கொண்டிருந்த மைவிழி,

“அது சரி இதைப் பத்தி ஏன் என்கிட்ட சொல்றீங்க….?” எனக் கேட்டாள்.

“எஸ் இதுல ரெண்டு ஃபோன் இருக்கு ஒன்னு உனக்கு இன்னொன்னு உங்க அப்பாவுக்கு..” என்றான் ருத்ரதீரன்.

“எங்களுக்கா…., ஏன்.? இதுலாம் எங்களுக்கும் வேணாம்” என்றாள் அவள்.

“நீ என்னோட ஷூட்டிங்க்கு வந்தா நிறைய நாளைக்கு உங்க ஊர்ப் பக்கம் உன்னால வர முடியாது.  சோ உங்க அப்பாவை பாட்டியை பார்க்காம இருக்குறது கஷ்டம் தானே அதான் இந்த ஃபோன்” என்று கூறினான்.

“அப்படியா இதை வைச்சு பார்க்க முடியுமா…”

“எஸ் நான் இந்த ரெண்டு ஃபோன்லையும் வாட்ஸ்ஸப் திறந்திருக்கேன் சோ நீங்க வீடியோ கால் பண்ணி பேசலாம்” என்றான்.

“வாஸ்தா…. அப்படின்னா என்ன யோசியம் பார்க்குறதா…  அந்த மந்திரத்தை வைச்சிதான் பார்க்க முடியுமா” என மைவிழி கேட்க,

“அம்மா தாயே இதுக்கு மேலே என்னால உனக்கு ஒன்னும் விளக்கமா சொல்ல முடியாது இங்கே இருக்குற பச்சை கலரை அமுக்கு போதும் இந்தா இதைக் கொண்டு போய் உங்க அப்பாகிட்ட கொடுத்து அவரையும் இதையே அமுக்க சொல்லு” என்று கையில் இருந்த மற்றைய செல்ஃபோனை கொடுத்தான் ருத்ரதீரன்.

“அப்பாகிட்டவா….. வேணாம் வேணாம் இதைக் கொண்டு போய் சாராயக் கடையிலே கொடுத்து குடிச்சுடுவார்” என தலையை ஆட்டிக் கொண்டு பதிலளிக்க,

“அப்படின்னா உன்னோட பாட்டிக்கிட்ட கொடு அவங்க வைச்சுக்கட்டும்” என்று தீரன் கூற,

வாயினை கையால் மூடியவாறு சத்தம் மட்டும் கேட்கும் வகையில் சிரித்த மைவிழி,

“பெரிய பெரிய படிப்புலாம் படிச்சுட்டு இப்படி யோசிக்காம பேசுறீங்களே.., உங்களை பார்த்தாலே பாவமா இருக்கு” என்று மீண்டும் நகைத்தாள் மைவிழி.

மைவிழி தன்னை பார்த்து திடீரென ஏன் இவ்வாறு சிரிக்கிறாள் என அறியாமல் நின்ற ருத்ரதீரன் அவளைப் பார்த்து,

“ஏன் இப்படி பேசுற…. எதுக்காக என்னை பார்க்க பாவமா இருக்குன்னு சொல்ற” எனக் கேட்டான்.

“இப்படி உலகம் தெரியாம இருக்குறீங்களே அதான் அப்படி சொன்னேன், ஏன்னா எங்க பாட்டிக்கு இதுப் பத்திலாம் தெரியாது வயசான காலத்தில அவங்ககிட்ட இதைக் கொடுக்க சொல்றீங்களே…., என்னை மாதிரின்னாலும் பரவாயில்லை…” என்று கூறினாள்.

அவள் கூறி முடித்து மீண்டும் சிரிக்க பட்டென அவளது கையினைப் பிடித்து திருப்பிய ருத்ரதீரன்,

“ஆமா இவ பெரிய மார்க் மச்சாள். அப்படியே எல்லாம் தெரிஞ்சு வைச்சிருக்கா.., வாட்ஸ்ஸாப்பை கொண்டு வாஸ்து பார்க்குற நீ என்னைப் பார்த்து சிரிக்கிறியா.., உன்னை..” என அழுத்தம் கொடுக்க,

“அம்மாஆஆ ஹா வலிக்குது வலிக்குது” என்றுக் கத்தியவள்,

“திரும்பவும் நீங்க தப்பா தான் சொல்றீங்க என்னோட மாச்சான் ரங்கன் தான். பார்க்க இல்லை” என்றாள்.

“இப்ப எல்லாம் புரியும் பார்..” என்று தலையில் தட்டிய ருத்ரதீரன் அவளது பாட்டியிடம் ஃபோனைக் கொடுத்து அதை பயன்படுத்துவது பற்றியும் சொல்லிக் கொடுக்க கூறினான்.

அவளும் தன் பாட்டியை தன் ஆசை ஆட்டு குட்டிகளையும் பார்க்கலாம் என நினைத்து துள்ளிக் குதித்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றாள்.

மைவிழியின் விளங்கிக் கொள்ளாத தன்மையும் குறும்புக் கார தனமும் அவனை கோபத்தை தூண்டாமல் சிரிப்பையே தூண்டுவதாக இருந்தது.

மைவிழியோ வீட்டுக்கு சென்று பாட்டி, அப்பா அயலவர்கள் அவளது குட்டி குட்டி நண்பர்கள் மற்றும் ஆட்டுக்குட்டி அனைத்தையும் பார்த்து செல்லும் விடயத்தை கூறினாள். இதன் போது பலர் பல விதமான அறிவுரைகளையும் வாழ்த்துக்களையும் கூறினார்கள் ஆனால் நம் நாயகியை பற்றிதான் தெரியுமே அனைத்தையும் விளையாட்டாக எடுத்துக் கொள்ள மதியம் கடந்து மாலை தொடங்கும் நேரம் ஊரைவிட்டு புறப்பட தயரானாள்.

அனைத்தையும் எடுத்துக் கொண்டு வந்த மைவிழியை தன் காரில் ஏற்றினான் ருத்ரதீரன்.

ஊரைவிட்டு வெளியே செல்லும் வரை தான் இருந்த அனைத்து இடங்களையும் காரின் கண்ணாடியில் நாடியை வைத்து பாலை பார்க்கும் பூனைப் போல ஏக்கத்துடன் பார்த்தவாறு இருந்தாள்.

அவளின் நிலை கண்டு தீரன் அனைத்தையும் புரிந்துக் கொண்டு மைவிழியின் மனநிலையை மாற்ற அவளோடு சாதரணமாக பேசத் தொடங்கினான்.

“என்ன இப்படி பார்த்துகிட்டு இருக்க ஏன் இதுக்கு முதல் இந்த ஊரைப் பார்த்ததில்லையா..” என்றான்.

“இந்த ஊர்ல தான் நான் பிறந்து இருபது வருஷமா இருக்கேன் இதுலாம் பார்க்காம இருப்பனா..?”

“அப்புறம் ஏன் இப்படி பார்த்துகிட்டு வர்ற?”

“இல்லை இனி எப்போ இங்கே வருவேன்னு தெரியலை அதுதான் கொஞ்சம் கவலையா இருக்கு” என்று கலங்கிய படி கூற,

“ இந்த படம் எவ்வளவு வேகமா முடியுதோ அவ்வளவு வேகமா நீ வீட்டுக்கு வந்திடலாம், அதோட இப்ப தான் வீட்டுல ஃபோன் இருக்குல்ல அடிக்கடி பேசு” என்றான் ருத்ரதீரன்.

“ம்ஹும் பாட்டி கையிலே அதைக் கொடுக்க பாக்கு உடைக்க கொண்டு வந்தியான்னு கேட்குறாங்க..?, பாருங்களேன் அதை வைச்சு ஒரு நாள் கட்டாயமா பாக்கு உடைப்பாங்க” என்று கூறி புன்னகைக்க ருத்ரதீரனும் சிரித்தான்.

“அது சரி உனக்கு யார் மைவிழின்னு பேர் வைச்சது….”

“அதுவா நான் தான் எனக்கு பேர் வைச்சேன்” என்றாள்.

“நீயா அது எப்படி….” என கேட்க,

“என்ன சொன்னாலும் நம்புறீங்க நீங்க ரொம்ப நல்லவர் தான்” என கைதட்டிக் கொண்டு சிரித்துக் கொண்டே,

“எனக்கு என்ன தெரியும் நான் சின்ன குழந்தையா இருக்கும் போதே வைச்சிட்டாங்க” என்றாள்.

“ம்ம்ம் உன்னோட பேரை சொல்றதுக்கே கஷ்டமா இருக்கு..” என்றான் ருத்ரதீரன்.

“ஆமா ஆமா அப்படிதான் ஊர்ல எல்லாரும் சொல்லுவாங்க அதுக்காக என்னை விழின்னு தான் கூப்பிடுவாங்க” என்றாள்.

“நோ நோ அதுவும் நல்லா இல்லை நாம வேணும்னா வேற பேர் வைப்பமா”

“முடியாது முடியாது.. அம்மாச்சிக்கு தெரிஞ்சா திட்டுவாங்க” என அவள் மறுக்க,

“லூசு நான் உன்னை கூப்பிடுறதுக்காக மட்டும் ஒரு பேர் வைப்போம்னுதான் சொன்னேன் மத்தபடி நீ பேரை மாத்த வேணாம்” என்றான் ருத்ரதீரன்.

“அப்படின்னா சரி…., என்ன பேர் வைக்கலாம்..?” என தன் நடுவிரலைக் கொண்டு நாடியில் வைத்து சிந்தித்தாள் மைவிழி.

“ஹா தேன்மொழின்னு வைப்போமா..? இல்லை இல்லை நல்லா இருக்காது..” என கேள்வியை கேட்டு அவளே பதிலையும் கூறினாள்.

“அம்மு என்ற பேர் எப்படி இருக்கு..” என ருத்ரதீரன் கேட்க,

“வேணாம் வேணாம் நல்லா இல்லை..” என்றாள் மைவிழி.

“ஏன் நல்லா இல்லை…”

“எனக்கு பிடிக்கல அதான் வேணாம்னு சொல்றேன்”

“பேரை கூப்பிடப் போறது நான்தானே அப்படின்னா எனக்கு பிடிச்ச மாதிரி தான் பேர் வைப்பேன். அம்மு நல்லாதான் இருக்கு.” என்றான் ருத்ரதீரன்.

“நான் இதை ஏத்துக்க மாட்டேன், வேற அழகான பேரை வைங்க” என்று சினுங்க,

“ஓவரா பேசாத பிறகு முனியம்மான்னு தான் கூப்பிடுவேன்” என அவன் கூற அதற்கு அவளும் நக்கலாக பேச,  நேரம் சென்றதும் தெரியவில்லை அவளது சோகம் சென்றதும் தெரியாமலே போனது.

அவளுடைய முகமும் அவனுடைய பேச்சினால் மலர்ந்து போனது.

அவளுடைய இந்த மகிழ்ச்சி நிலைக்குமா…???

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 19

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!