மைவிழி – 07

4.5
(22)



சென்னையில் வந்து அவனோடு தங்கிக் கொண்டவளுக்கு அனைத்தும் புதுமையாக
இருந்தது.



பெரிய பெரிய கட்டிடங்களும் இடிப்பது போல வேகமாக செல்லும் வாகனங்களும்
நவீன ஆடையுடன் திரியும் பெண்களும் அவளை வியக்க வைத்தனர்.



தீரனோ மைவிழியை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தன்னுடைய காரில் அழைத்து வந்து
கொண்டிருந்தான். கார் வேகமாக செல்ல அவளுக்கோ விழிகள் பயத்தில் மூடிக் கொண்டன.



படபடப்போடு அமர்ந்திருந்தவளைக் கண்ட தீரனோ அவளுடைய கரத்தை மெல்ல
பிடித்துக் கொண்டான்.



“டோன்ட் பேனிக்..”



“பேனா..? என் தலைல பேன்லாம் இல்லைங்க.” என்றவளைக் கண்டு அவனுக்கோ பிபி
எகிறியது.



“இடியட்….” என்றவன் சட்டென தன் வாயை மூடிக் கொண்டான். தான் இடியட்
என்றால் அவள் இடியாப்பம் என்பாள் தேவையா.? என எண்ணியவன் தன்னுடைய ஆங்கிலப் புலமையை
அடக்கி வைத்தான்.



சற்று நேரத்தில் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு இருவரும் வந்திறங்க,
போட்டோ எடுக்கும் ஒளி வெள்ளத்தில் இருவரும் நனைந்தனர்.



புது நாயகி அதுவும் தீரனுடன் நடிக்கிறாள் என்றதும்
பத்திரிகைக்காரர்களோ வெகு ஆர்வமாய்
அங்கே வந்து நின்றனர். அவள்
தீரனுடன் இணைந்து வருவது அழகான புகைப்படமாக மாறிப் போனது.



மைவிழியோ மருண்டு போனாள். சட்டென தன் தலையைக் குனிந்து அவள் தீரனின்
பின்னே மறைய, அடுத்த கணம் அனைவரையும் தன் பார்வையில் தள்ளி நிறுத்தி விட்டு அவளைக்
கேரவனுக்குள் அழைத்துச் சென்றான் தீரன்.



தயங்கித் தயங்கி அவன் பின்னே வந்தவளைக் கண்டு அவனுக்கு சற்று சீற்றம்
கூடியது.



“இப்போ எதுக்கு பதுங்கிப் பதுங்கி வர்ற.? நார்மலா இரு.” என சற்றே
அதட்ட அவளுடைய முகமோ வாடிப் போனது.



“….”



“ஹேய் புரிஞ்சுதா..?”



“ம்ம்…”



“ஓகே குட் இப்போ நான் சொல்ற சீனை அப்படியே பண்ணு அம்மு?”



“சரிங்க..”



“உனக்கு நான் புது ட்ரெஸ் வாங்கித் தருவேன். அந்த மாடர்ன் ட்ரெஸ்ஸ நீ
போட்டு வந்து வெட்கத்தோட கன்னம் சிவக்க என்னைப் பார்க்கணும். உன்னோட கண்ணுல
படபடப்பு தெரியணும். அப்படியே நடந்து நீ எனக்கு பக்கத்துல வரும் போது கால் தடுமாறி
நீ விழணும்.” என சீரியஸாக சீன் சொல்லிக் கொண்டிருந்தவனை இடையில் நிறுத்தியவள்,



“சார் நான் கீழ எல்லாம் விழ மாட்டேன். கீழ விழுந்தா வலிக்கும்ல.” என
கண்ணை உருட்டியவளைக் கண்டு கோபத்துக்கு பதில் சிரிப்பே வந்தது அவனுக்கு.



“நான் உன்னை கீழே விழாம புடிச்சுக்கிறேன்.” என்றான் அவன்.



“நிஜமா.?”



“இம்சை பண்ணாதடி. உன்னை கீழே விழ விட மாட்டேன்.”



“அப்போ…. சரி.” என்றவளின் கரத்தில் அவள் போட வேண்டிய மாடர்ன்
ஆடையைக் கொடுத்தவன் இதைப் போட்டுக்கோ.” என்றான்.



“ஐயோ என்ன இது சின்ன பாப்பா போடுற  சட்டையை எனக்கு
கொடுக்குறீங்க. இது ரொம்ப இறுக்கமா இருக்குமே. பின்னாடி என்ன இவ்வளவு கயிறு
தொங்குது.? இதை நான் போட மாட்டேன்.” என உடனடியாக மறுத்தாள் அவள்.



“இத நீ போட்டுக்க முடியுமான்னு நான் கேட்கலை. இத நீ போட்டுத் தான் ஆகணும்.”
என உத்தரவிட்டான் அவன்.



அவனுடைய அதட்டலில் சட்டென விழிகள் மருள அவனை வெறித்துப் பார்த்தாள்
அவள். அவளுடைய விழிகளோ அச்சத்தில் கலங்கத் தொடங்கின.



அவளுடைய பார்வையில் உடனடியாக தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவன்,



“அம்மு நான் சொல்றதைக் கேளு. இங்கே எல்லா பொண்ணுங்களும் இப்படித்தான்
ட்ரெஸ் பண்ணுவாங்க. நீ கொஞ்ச நேரம் இதைப் போட்டுக்கிட்டா போதும்.” என்றவனுக்கோ
தன்னுடைய படம் சிறப்பாக வர வேண்டுமே என்ற எண்ணம் உள் மனதினுள் ஓடிக் கொண்டே
இருந்தது.



“சரி சார்.” என தலை அசைத்தாள் அவள்.



“ஓகே ட்ரெஸ்ஸ மாத்திட்டு வா.” என்றவன் அவளுக்குத் தனிமை கொடுத்து
விட்டு கேரவனுள் இருந்த அடுத்த பக்கம் சென்று அமர்ந்து அன்றைய காட்சிகளை ஒரு முறை
தன் மனதினுள் ஓட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான்.



அவளோ சற்று நேரத்தில் ஆடையை அணிந்து விட்டு பின் பக்கம் இருந்த
கயிற்றை எப்படி முடிவது எனத் தெரியாது விழித்தவாறு நிற்க, மறுபக்கம் இருந்த தீரனோ
“அம்மு ரெடியா.?” எனக் கேட்டான்.



“சட்டை போட்டுட்டேன் சார். பின்னுக்கு இருக்க கயிறை கட்ட முடியலை.”
என்றவளை எண்ணி சிரித்தவன் வெளியே நின்ற மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அனிதாவை அழைத்து
அவளுக்கு உதவும்படி பணித்தான்.



சற்று நேரத்தில் அனைத்தும் தயாராகிவிட படபிடிப்பும் ஆரம்பமாகியது.



அதே நேரம் அங்கே வந்த மைவிழியைக் கண்டு அனைவரும் திகைத்துப் போயினர்.



தாவணியில் கிராமத்துக் கிளியாக அழகியாக தெரிந்தவள் நவீன ஆடையில்
பேரழகியாக ஜொலித்தாள்.



“வாவ் வாட் அ ப்யூட்டி.” என சிலர் வாய்விட்டே கூற, தீரனுடைய
பார்வையும் அவளை மேல் இருந்து கீழே வரை ஆராய்ந்தது.



உடலைக் கவ்விப் பிடித்த ஸ்லீவ்லெஸ் கவுனில் தடுமாறியவாறு வந்தவளைக்
கண்டு அவனுடைய உதடுகள் இரசனையாக விரிந்தன.



அவள் அங்கே வந்ததும் மீண்டும் ஒரு முறை சீன் சொல்லப்பட்டது.



“கேமரா ரோலிங் ஆக்ஷன்..”



என்றதும் அவர்கள் கூறியதைப் போல நடந்து வந்தவளுக்கு இயல்பாகே வெட்கம்
ஒட்டிக் கொண்டது.



அந்த வெட்கப் பார்வையோடு நடந்து வந்தவள் கால் இடறி விழுவதைப் போல விழ,
அந்தப் படத்தின் நாயகனான தீரனோ சட்டென அவளைத் தாங்கிப் பிடித்தான்.



அவனுடைய ஒரு கரம் அவளுடைய இடையை அழுத்தமாக பிடித்து வளைத்து அவளைத்
தன் மார்போடு அணைக்க, அடுத்த கணம் அவனுடைய கரத்தை தட்டி விட்டவள் அங்கிருந்து
வேகமாக ஓடிச் சென்றாள்.



அவளுடைய செயலில் திகைத்தவன், அடுத்த நொடியே “கட்… கட்… கட்..”
என்றவன் அவளின் பின்னால் கோபத்தோடு சென்றான்.



அவளை தனியாக அழைத்து திட்ட நினைத்தவன் அவளுடைய பயந்த வதனம் கண்டு தன்
சீற்றத்தைக் குறைத்துக் கொண்டான்.



“ப்ச் ஏன்டி சொதப்புற.?’



“இ.. இல்ல சார் எனக்கு வர மாட்டேங்குது.”



“அதெப்படி வராம போகும்.?”



“இ.. இல்லைங்க.”



“நான் சொன்ன மாதிரி இப்போ பண்ணு.”



“இல்ல வேணாம்.”



“ப்ச் பண்ணு அம்மு.”



“….”



“உன்னை பண்ணுன்னு சொன்னேன்.” என்றதும் முகம் கசங்கியது அவளுக்கு.



“கமான் அம்மு.” என்றதும் தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டவள் அதே
போல நடந்து வந்து தடுமாறி விழ, அவனோ கை தேர்ந்த நடிகனாக அவளைத் தாங்கிப்
பிடித்தான்.



அவனுடைய இரும்புப் பிடியோ அவளுடைய இடுப்பில் கச்சிதமாக பொருந்திக்
கொள்ள, அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.



ஒரு ஆடவனின் கரம் தன் இடையில் இருப்பதை பொறுக்க முடியாது மீண்டும்
அவனைத் தள்ளி விட்டு ஓட முயன்றவளை தன்னோடு இறுக அணைத்து தன் இரண்டு கரங்களையும்
அவளுடைய இடுப்பிலே அழுத்தமாக பதிக்க, அவளோ பதறிப் போனாள்.



அடுத்த கணம் அவள் தேம்பித் தேம்பி அழத் தொடங்க, உச்ச கட்ட வெறுப்பில்
அவளை உதறித் தள்ளியவன் வெளியே வந்து “பேக்கப்..” எனக் கத்தியவாறு தன் ஷூட்டிங்கை
கேன்சல் செய்தான்.



அடுத்த கணம் அதிர்ந்து அழுது கொண்டிருந்தவளின் கரத்தைப் பற்றி இழுத்து
வந்து தன் காரில் ஏற்றியவன் காரை வேமாக செலுத்தத் தொடங்கினான்.



அவள் தேம்பித் தேம்பி அழுவது வேறு அவனுக்கு எரிச்சலைக் கொடுக்க, தன்
வீடு வந்ததும் அவளை உள்ளே அழைத்துக் கொண்டு சென்றான்.



“இன்னைக்கு உன்னால எவ்வளவு லாஸ் தெரியுமா.? கொஞ்சம் கூட யோசிக்க
மாட்டியா.?” என தன்னுடைய அறைக்குள் வைத்து அவளைத் திட்டினான்.



“இடுப்புல தானே தொட்டேன். அதுக்கு ஏன் கற்பே போன மாதிரி ஒப்பாரி
வைக்கிற.?” என்றவன் சட்டென அவளை இழுத்து தன் இரு கைகளாலும் அவளுடைய வளைந்த இடையை
இறுகப் பற்றிக் கொடண்டான்.



அவனுடைய செயலில் பயந்து போனவளின் இதழ்கள் அழுகையில் பிதுங்கின.



சிறு தீண்டலுக்கே துடிக்கும் அவள் அவன் பார்வைக்கு விசித்திர ஜந்துவாக
தெரிந்தாள்.



அவனுடைய நட்பு வட்டத்தில் இருக்கும் பெண்கள் இப்படி அல்லவே.



அவளோ விம்மலோடு அவனுடைய கரத்தை விலக்கப் போராடினாள்.



“இ… இந்த இடத்துல எல்லாம் பு.. புருஷனைத் தவிர வேற… வேற யாருமே
தொடக் கூடாதுன்னு என் அம்மாச்சி சொல்லிக் கொடுத்திருக்காங்க.” என்றவளை வியப்பாக
புருவம் உயர்த்திப் பார்த்தவன் அமைதியாகிப் போனான்.



அவளுடைய இடையில் இருந்த கரத்தையும் எடுத்துக் கொண்டான் அவன்.



“சரி நீ போய் இந்த ட்ரெஸ்ஸ மாத்து.” என கூறினான் அவன். அவள் ட்ரெஸ்
மாத்தும் அறைக்குள் நுழைந்ததும் அவனோ தன்னுடைய படுக்கையில் வந்து அமர்ந்து
கொண்டான்.



அவனுடைய கரங்கள் பின்னந் தலையை அழுத்தமாக தடவின.



அவனுக்கோ உள்ளுக்குள்ளே ஏகப்பட்ட டென்ஷன் இருக்க, மைவிழியை இவ்வளவு
தூரம் அழைத்து வந்தது வீணோ.? என்ற எண்ணமும் அவனுள் தோன்றத் தொடங்கியது.



சலிப்போடு அவனுடைய தோல்வியை ஏற்க முடியாது சிந்தனையில் துவண்டு
கொண்டிருந்தவனுக்கோ அவனுடைய பீஏவிடம் இருந்து கால் வந்தது.



காலை ஏற்றதும் “வாட்.?” என்றான் தீரன்.



“சா.. சார் இன்னைக்கு நீங்களும் மைவிழி மேடமும் ஷூட்டிங் ஸ்பாட்
வந்ததை போட்டோ எடுத்தாங்கள்ல. அது இப்போ வைரலா இன்டர்நெட்ல பரவிட்டு இருக்கு.”



“ஓஹ்…? என்னோட போட்டோ எப்பவுமே வைரல் ஆகுறதுதானே.? இதுக்கு ஏன்
இவ்ளோ ஷாக்.?’ எனக் கேட்டான் ருத்ர தீரன்.



“அ.. அது வந்து சார் இப்போ வைரலானது உங்க ஃபோட்டோ இல்ல. மைவிழி மேடமோட
போட்டோ. அவங்க அழகை வியந்து போய் எல்லாப் பசக்களும் அவங்களுக்கு ஆர்மியே கிரியேட்
பண்ணிட்டாங்க. படம் நடிக்க முதலே எல்லாரையும் இம்ப்ரெஸ் பண்ணிட்டாங்க சார்.”
என்றதும் தீரனின் முகமோ புன்னகைத்தது.



“தட்ஸ் கூல்.” என்றவாறு அழைப்பைத் துண்டித்தவன் உடனடியாக சமூக வலை
தளங்களில் பரவும் அவளுடைய புகைப்படங்களை எடுத்துப் பார்க்கத் தொடங்கினான்.



அதில்
அவளுடைய புகைப்படத்தைக் கண்டவனது விழிகளோ பிரம்மித்துப் போயின

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 22

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!