தன்னை சற்றும் அசைய விடாது பிடித்து வைத்து முத்தமிடுபவனை எதுவும் செய்ய முடியாது தவித்தவள் அடுத்த கணம் அவனுடைய மார்பிலேயே மயங்கி விழுந்தாள்.
கோபத்தில் அவளுடைய இதழ்களுக்கு தண்டனை கொடுத்துக் கொண்டிருந்தவன் அவள் மயங்கிச் சரியவும் பதறிப் போனான்.
“ஓ நோ…” எனக் கத்தியவன் அடுத்த கணமே அவளைத் தன் கரங்களில் ஏந்த முயல, மயக்கம் போல நடித்துக் கொண்டிருந்தவளோ அவனுடைய பிடி தளர்ந்த அடுத்த கணமே அங்கிருந்து ஓடியே போனாள்.
தீரனோ அவளுடைய நடிப்பில் அசந்து போனான்.
அவள் ஏமாற்றியது கூட அவனுக்கு அக்கணம் கோபத்தை ஏற்படுத்தவே இல்லை. அவளுடைய இதழ்களைத் தீண்டிய தன் இதழ்களை விரலால் வருடியவன் தன் பின் தலையில் தட்டிக் கொண்டான்.
ஏனோ அவளை தன் கை வளைவிற்குள் வைத்து மீண்டும் மீண்டும் முத்தமிட வேண்டுமென்ற அவா அவனுக்குள் அதிரடியாய் எழுந்தது.
மைவிழியோ அவனுக்கு எதிரான எண்ணங்களில் சிக்குண்டு போயிருந்தாள். அவளுடைய உடலோ இன்னும் நடுங்கிக் கொண்டே இருக்க, இனி இங்கே இருக்கக் கூடாது என்ற முடிவினை எடுத்தாள் அவள்.
அதே நேரம் உள்ளே வந்தவனோ அமைதியாக குளியல் அறைக்குள் நுழைந்து கொள்ள, இவளோ அவனைக் கண்டதும் பால்கனியில் தஞ்சம் புகுந்தாள்.
அவனை நெருங்கவும் அவளுக்கோ படபடப்பாக இருந்தது.
சற்று நேரத்தில் வெளியே வந்தவன்,
“இன்னும் எவ்ளோ நேரம்தான் இப்படி ஈரத்தோடயே இருக்கப் போற.? போ போய் ட்ரெஸ்ஸ மாத்து.” என்றதும் சரி எனக் கூறியவள் தானும் குளித்து முடித்து விட்டு வெளியே வந்தாள்.
அவனிடம் எப்படி பேசுவதெனத் தெரியாது தடுமாறியவாறு அவனைப் பார்ப்பதும் பின் திரும்புவதுமு அவன் பார்க்காத நேரமாக மீண்டும் பார்ப்பதுமாக இருந்தவளின் முன் வந்து நின்றவன்,
“என்ன சொல்லு.?” என்றான்.
“ஹாங்.?” என அதிர்ந்து விழித்தவளிடம்
“எதையோ சொல்லணும்னு நினைகுகிறல்ல அதைச் சொல்லு.” என்றான் அவன்.
“ஆ.. ஆமா அதுஉஉ வந்துஉ நா.. நான் எங்க வீட்டுக்குப் போகணும் சார். அம்மாச்சிகிட்ட போகணும்.”
“ஏன்..?”
“நா.. வீட்டுக்குப் போகணும்.”
“ப்ச் அதான் ஏன்.?”
“ஏ.. ஏன்னா நீ.. நீங்க த.. தப்பு பண்றீங்க சார்.. எ.. என்னைத் தப்பா தொடுறீங்க. எ.. எனக்கு பிடிக்கலை.” என பட்டெனக் கூறினாள் அவள்.
அவளுடைய வார்த்தைகள் சட்டென அவனைத் தாக்கின.
“ நான் பண்ணது உனக்கு நிஜமாவே பிடிக்கலையா அம்மு.?” என்றவன் அவளுடைய முகம் அச்சத்தில் மாறுவதைப் பார்த்து சட்டென விலகி நின்றான்.
அவனுடைய உடல் இறுகியது.
“ஓகே உனக்கு பிடிக்காத எதுவும் நான் இனி பண்ண மாட்டேன். அப்படிப் பண்ணினா நீ இங்க இருந்து தாராளமா போகலாம். நானே உன்னை உன்னோட அம்மாச்சிகிட்ட கூட்டிட்டுப் போறேன்.” என்றான் அவன்.
“நிஜமாவா.?” என விழி உயர்த்தி அவள் பார்க்க, ஒரு கணம் அசைவற்றவாறு அவளைப் பார்த்தவாறு அப்படியே நின்று விட்டான் ருத்ரதீரன்.
அவனுடைய பார்வையில் சட்டென முகம் சிவந்து போனது அவளுக்கு.
“சார்ர்ர்…” என அழைத்தவளை பார்த்து தன் சிந்தை தெளிந்தவன் “ஐ லைக் யு அம்மு.” என்றான்.
“அ.. அப்படின்னா என்ன.?”
“அப்படின்னா எனக்கு உன்னை பிடிச்சிருக்குன்னு அர்த்தம்.” என்றான்.
அவளோ அவன் தன்னை வீட்டுக்கு அனுப்புகின்றேன் என கூறியதால் மலர்ந்த இதழ்களோடு, “அப்போ நானும் மைக் யு சார்.” என்றாள் அவள்.
“ஹா… ஹா… அது மைக் இல்லடி லைக்.” என்றவனின் கரங்கள் அவளின் தோளை தொட உயர்ந்து பின் தாழ்ந்தன.
“ஓ நானும் லைக் யு.” என மீண்டும் திருத்திக் கூறியவளைப் பார்த்தவன்,
“ஹே அம்மு நீ படிச்சிருக்கியா…?” என ருத்ரதீரன் கேட்க,
மைவிழியின் கண்களோ அங்குமிங்குமாக ஓடிக் கொண்டே,
“ஆமா நான் நிறைய படிச்சிருக்கேன்” என கூற,
“அப்படியா எவ்வளவு படிச்சிருக்கா…?”
“அது வந்து…., நான் ஒரு நாலு அஞ்சு வகுப்பு படிச்சிருக்கேன், இப்போ ஏன் அதுலாம் கேட்குறீங்க…?” என அவள் கேட்க,
“ஓஓ இதுதான் பெரிய படிப்பா…..?, ஓகே மேலே படிக்கிறியா அம்மு.?” எனக் கேட்டான்.
“ஐயோஓ வேணாம் வேணாம், நீங்களும் என்னைக் கூட்டிட்டுப் போய் அந்த குடோன்ல விட்டுறாதீங்க.” என அலறினாள் அவள்.
“குடோனா…?”
“ஆமா எங்க பள்ளியை அப்படித்தான் நான் சொல்லுவேன் ஏன்னா அங்க போனாலே எனக்கு என்னமோ அப்படிதான் தோனும்.” என்றவளை அடிப்பாவி எனும் விதமாக பார்த்தான் அவன்.
“சரி சரி இப்போ வேணாம், உனக்கு கொஞ்சம் தெரியனும் அம்மு சோ கட்டாயமா கொஞ்சம் நீ படிக்கனும் ஓகே படிப்பை அப்புறம் பார்த்துக்கலாம்.” என்றவன்,
“நாம நம்ம சீனை ரிஹர்ஷல் பார்க்கலாமா.?” எனக் கேட்டான்.
“ஐயோ அந்த சீனா…..? என்னால முடியாது ”என அலறினாள் அவள்.
“ஜஸ்ட் நடிப்பு தானே அம்மு, ஒரு படம்ன்னு சொன்னா இதுலாம் சாதாரண விஷயம் தான் பட் எனக்கு தெரியும் உனக்கு இதுலாம் புதுசுன்னு பட் நாம படத்தை முடிச்சாதான் வேலை முடியும் அப்போதான் நீயும் நேரத்துக்கே வீட்டுக்கு போகலாம்.” என்று கூறி அவளை சரி கட்டியவன் அதே சீனை செய்யும் படி கூற,
அவளோ தயங்கினாலும் அவன் கூறுவது சரிதான் என நினைத்தவள் ரிஹர்ஷல் பார்ப்பதற்கு உடன்பட்டாள்.
அதே போல நடந்து வந்து விழ, அவளைத் தாங்கிப் பிடித்தவனுடைய கரம் மீண்டும் அவள் இடையில் பதிய,
“சார்ர்ர்….” என சினுங்கினாள்.
“அம்மு இது எல்லாம் நடிப்புதான் புரிஞ்சுக்கோ” என மீண்டும் அவன் கூறி அவளை விடுவித்தான். இவ்வாறே அவளது கூச்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க நினைத்து தொடர்ந்து இதை செய்தான் ருத்ரதீரன்.
அவளும் மனதில் சங்கடப்பட்டவாறு செய்துக் கொண்டிருந்தவள் தன்னை சமாதானப்படுத்தி அவன் கூறுவது போலவே செய்தாள். இறுதியில் அவன் நினைத்தது போலவே செய்து முடித்தாள் மைவிழி.
ருத்ரதீரனுக்கு மைவிழி செய்தது திருப்தியாக அமைய அவளிடம் இவ்வாறே பண்ண வேண்டும் என கூறிவிட்டு சென்றான்.
மைவிழியின் மனதில் அதீத சிந்தனைகள் இருந்தாலும் கூட இவை அனைத்தும் வெறுமனே நாடகம் என நினைத்து மனசை தேத்திக் கொண்டு உறங்கச் சென்றாள் மைவிழி.
மறுநாள் பொழுதும் விடிய மீண்டும் ஷூட்டிங்கிற்காக இருவரும் சென்றார்கள். அங்கு அவள் வீட்டில் இருந்ததை போல அனைவருக்கும் முன் இருக்க தயங்கினாலும் அதை எவ்வாறாவது முடிக்க வேண்டும் என நினைத்து அனைத்தையும் அவனுக்காக செய்தாள் மைவிழி.
அன்றைய பொழுது ஷூட்டிங் அனைத்தையும் முடித்து விட்டு வீட்டுக்கு இருவரும் வந்ததன் பின் தான் எடுத்த காட்சியின் காணொளியை போட்டுப் பார்த்த ருத்ரதீரன் மைவிழியின் சிறு வித்தியாசத்தை உணர்ந்தான்.
ஆனால் அந்த வித்தியாசம் புதிதாக நடிக்க வந்ததாலும் இதுவரை காலம் இவ்வாறான விடயங்களை இதுவரை காலம் பார்க்காத கிராமப் புறங்களில் இருந்த காரணத்தால் தான் என அதை பெரிதும் கவனத்தில் கொள்ளாமல் விட்டுச் சென்றான் ருத்ரதீரன்.
இவ்வாறு சில நாட்கள் தனது படத்தை சிறப்பாக கொண்டு வர பல முயற்சிகளை மாறி மாறி செய்துக் கொண்டே இருந்தான் ருத்ரதீரன்.
வழமையாக அவன் வேலையென வந்தால் தன்னை கவனிப்பது கிடையாது அங்கு வந்து சில நாட்களிலேயே இதை அவதானித்த மைவிழி ஒரு நாள் நேரடியாக ஷூட்டிங் முடிய அவனிடம் கேட்டாள்.
“சார் நீங்க காலையில சாப்பிட்டீங்களா…?”
ஒரு நாளும் இல்லாது இன்று இவ்வாறு கேட்கின்றாளே என நினைத்த ருத்ரதீரன் “ஏன் அம்மு திடீர்னு இப்படி கேக்குற….?,” என கேட்டான்.
“இல்லை நாங்க எல்லாரும் சாப்பிடும் போது உங்களை பார்க்குறதே இல்லை அதான் நான் நினைச்சேன் எனக்கு தராம ஏதும் நல்ல சாப்பாட்டை தனியா சாப்பிடுறீங்க போல” என நக்கலாக கேட்டாள்.
“ஹா ஹா ஹா….., அப்படிலாம் இல்லை இங்கே இருக்குற எல்லாருக்கும் ஒரே மாதிரி சாப்பாடு தான், எனக்கு மட்டும் ஸ்பெஷலா ஒன்னும் இல்லை” என சிரித்துக் கொண்டே கூறினான் ருத்ரதீரன்.
“அப்படின்னா நீங்க எங்கே இருந்து சாப்பிடுறனீங்க…?” எனக் கேட்க,
“நான் இங்கே பெரிசா சாப்பிடுறதில்லை, வேலையெல்லாம் முடிச்சப் பிறகுதான் சாப்பிடுவேன் சோ டைம் கிடைக்குறதில்லை அம்மு” என்றான்.
“எனக்குலாம் நேரத்துக்கு சாப்பிட்டாதான் நடக்கவே தெம்பு வரும் இல்லைன்னா யாரும் தூக்கிக் கொண்டு தான் போகனும்” என கூறிக் கொண்டு சிரிக்க,
“எனக்கு பழகிட்டு அம்மு சோ பிரச்சனை இல்லை ஓகே நீ போய் சாப்பிடு நாம அடுத்த ஷூட்டை ஸ்டார்ட் பண்ணணும்” எனக் கூறி தன் லாப்டப்பின் முன் அமர்ந்து ஏதோ செய்துக் கொண்டிருந்தான் ருத்ரதீரன்.
மைவிழியும் அங்கிருந்து சென்று ஒரு சில நிமிடத்தில் ஓர் தட்டொன்றில் சாதம், கறி என அனைத்தையும் எடுத்துக் கொண்டு வந்து ருத்ரதீரனின் முன் வைத்தாள்.
“ஏன் அம்மு உள்ளே இருந்து சாப்பிடலாம் தானே எதுக்காக இங்கே வந்த….?” என கேட்க,
“இது எனக்கு இல்லை சார், நீங்க சாப்பிடுங்க..” எனக் கொடுத்தாள்.
“நோ.., எனக்கு பசியில்லை அம்மு நான் கொஞ்சம் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிகிட்டு இருக்கேன் முடிய சாப்பிடுறேன். நீ இதைக் கொண்டு போய் சாப்பிடு” என மீண்டும் தன் லாப்டாப்பை நோண்டினான்.
இருக்கையில் அமர்ந்திருந்த தீரனின் கையினை பிடித்து எழுப்பிய மைவிழி,
“நீங்க இப்போ சாப்பிட்டு தான் ஆகனும், அது மட்டும் நான் உங்களை விட மாட்டேன்” என்க,
“ப்ச் நோ அம்மு நான் வேலையை முடிச்சுட்டு வர்றேன் நீ சாப்பிடு” என மறுத்தவனின் முதுகில் கை வைத்து மெது மெதுவாய் தள்ளி அமர வைத்து அவன் கையில் உணவைக் கொடுத்து,
“இனிமேல் நீங்க சாப்பிட்டதுக்கு அப்புறம் தான் நானும் சாப்பிடுவேன் இல்லைன்னா எனக்கும் சாப்பாடு வேணாம்” என்றவள் விழிகளை உருட்டியபடி மெதுவாக,
“சாப்பிடாம இருக்க வேணாம் நான் பசி பொறுக்க மாட்டேன்” என பல்லைக் காட்டினாள்.
விளையாட்டாக கேட்டாள் என நினைத்த ருத்ரதீரனுக்கு அவளது சிறு கண்டிப்பு கலந்த அக்கறை மனதில் இனிக்கச் செய்தது. பின் அவளது வற்புறுத்தலால் சாப்பிடத் தொடங்கினான் ருத்ரதீரன்.
மைவிழியோ தன்னோடு இருப்பவர்களின் நலன் பற்றி அடிக்கடி சிந்திப்பதால் அவளோடு இருந்த ருத்ரதீரனை பற்றியும் கவனம் செலுத்தத் தொடங்கினாள்.
“ஒரே அந்த டப்பாவுல தானே வேலைப் பண்றீங்க இப்போ நானும் போய் பண்றேன்” என அவனது லாப்டப்பின் முன் அமர்ந்த மைவிழி,
“ட்ரிங் ட்ரிங்….., இந்த டப்பாவுல யாராவது பேசுங்க” என ஏதேதோ பேச அவளை பார்த்து சிரித்து இரசித்தப்படி உணவு உண்டான் அவன்.