மைவிழி – 11

4.6
(12)

அனைவருக்கும் விடுமுறை விட்ட ருத்ரதீரனோ அன்றைய தினம் மைவிழியை போட்டிங் அழைத்துச் செல்ல முடிவெடுத்திருந்தான்.

ஆகையால் அவளோடு காலையிலேயே தயாராகியவன் அவளைத் தன்னுடைய காரில் அழைத்துச் சென்று கொண்டிருந்தான்.

 

 

“நாம இப்போ எங்க போறோம்..?”

“அது சஸ்பென்ஸ்..”

“சப்பாத்தியா.?”

“அம்மா தாயே போட்டிங் போறோம்டி.”

“ஓஹ் போட்டியா.? என்ன போட்டிக்கு போறோம்.?”

“இம்சை இம்சை போட்டி இல்ல போட்டிங்.. போட்டிங்னா படகு சவாரின்னு அர்த்தம்.”

“ஹி ஹி.. சரி சார்.” என்றவளின் முகம் மலர்ந்தது.

“இதுக்கு முன்னாடி நீ போட்டிங் போயிருக்கியா.?”

“இல்ல சார்.”

“ஓகே அம்மு இன்னைக்கு போகலாம்.” என்றவன் குறிப்பிட்ட இடம் வந்ததும் காரை நிறுத்தினான்.

“வா அம்மு.” என்றவாறு அவளுடைய கரத்தைப் பிடித்துக் கொண்டவன் படகின் அருகே வந்து அதில் தான் ஏறியவன் மைவிழியை கை கொடுத்து தூக்கி உள்ளே இறக்கி விட்டான்.

கடலின் அலைகள் நுரைகள் பொங்க எழுந்து மோத வருவதை ரசித்தவாறு முதலில் சிரித்துக் கொண்டு நின்றவள் அடுத்த கணம் படகு வேகமெடுத்து கடல் அலையைக் கிழித்துக் கொண்டே போக, அலறி விட்டாள் அவள்.

பயந்து நடுங்கியவளை சட்டென இழுத்து அணைத்துக் கொண்டான் தீரன். அவனுடைய இறுகிய அணைப்பில் பயமும் படபடப்பும் சற்றே நீங்க, அவனோடு ஒட்டிக் கொண்டவளுக்கோ இதயம் தாறுமாறாக துடிக்கத் தொடங்கியது.

அதே போல அவளை இறுக்கமாக அணைத்து நின்றவனுக்கும் இமைகள் தானாக மூடிக் கொண்டன.

தீரனின் கரங்கள் அவளுடைய முதுகில் இருந்து இறங்கி அவளுடைய இடுப்பை அழுத்தமாக பிடித்துக் கொள்ள, அவளுக்கோ உடல் தூக்கிப் போட்டது.

அதிர்ந்து விழித்தாலும் அவனுடைய அணைப்பை விலக்காது அந்த படகு சவாரியை ரசிக்கத் தொடங்கினாள் அவள்.

அவனோ அவளை விட்டு விலகி அவளின் பின்னே சென்று அணைத்துக் கொண்டவன் அவளுடைய வயிற்றில் தன் கரத்தை அழுத்தமாக பதித்து அவளுடைய தோளில் தன் நாடியைக் குற்றினான்.

அவளுக்கோ தேகம் நடுங்கியது. கடலில் உள்ள அலைகள் போல அவளுடைய மனம் ஆர்ப்பரிக்கத் தொடங்க, அவனுடைய அணைப்பும் நெருக்கமும் இன்னும் இன்னும் அதிகரித்தது.

அவனுடைய முன் உடல் மொத்தமும் அவளுடைய பின் உடலோடு அழுந்தும் வண்ணம் நின்றவன்  அவளுடைய பின் கழுத்தில் விரல்களால் வருடினான்.

அவனுடைய மூச்சுக் காற்று அவளுடைய முதுகிலும் பின் கழுத்திலும் பட்டு அவளை நெளியச் செய்ய, சட்டென திரும்பியவளின் மாக்கனிகளோ அவனுடைய மார்போடு பச்சக்கென ஒட்டிக் கொள்ள, அந்த மோதலில் பெண்ணவளின் மென்மையின் ஸ்பரிஸத்தில் தன்னை மறந்து அவளை இன்னும் தன்னோடு இறுக்கிக் கொண்டான் அவன்.

அவளோ போட்டின் வேகம் குறைய, சட்டென விதிர்த்துப் போய் அவனை விட்டு விலகியவள் கரையில் வந்ததும் படகு சவாரி ஒத்துழைக்காததால் வாந்தி எடுக்கத் தொடங்கினாள்.

அவளைத் தாங்கி தன்னோடு அணைத்துக் கொண்டவன்,

“சாரி அம்மு உனக்கு போட்டிங் ஒத்துக்காதுன்னு எனக்குத் தெரியாது.” என கவலையுடன் கூறினான்.

“எனக்கே தெரியாது.” எனக் கூறிச் சிரித்தவளின் தலையில் செல்லமாக தட்டியவன் அவளை வீட்டுக்கு அழைத்து வந்திருந்தான்.

அன்றைய இரவு வழமை போல இருவரும் ஒரே அறையில் வேறு வேறு படுக்கையில் படுத்து உறங்கினர்.

அதிகாலையில் எழுந்தவனுக்கோ அறையில் மைவிழி இல்லை என்றதும் முகம் சுருங்கியது.

தன் போனை எடுத்தவன் அதில் பல தவறவிட்ட அழைப்புகள் இருப்பதைக் கண்டு அதிர்ந்தவன் தன்னுடைய பீஏக்கு அழைப்பெடுத்தான்.

அவனுடைய பீஏ கூறிய தகவலில் அவனுக்கோ பிபி எகிறியது.

சோசியல் மீடியாவில் வைரல் ஆகிக் கொண்டிருந்த அவர்களின் நெருக்கமான புகைப்படங்களும் நாயகன் நாயகியின் அந்தரங்க உறவும் என தலைப்பு இடப்பட்டிருக்க, அவனின் முன்னே வந்த மைவிழியோ காபியை அவன் முன்னே நீட்டினாள்.

அடுத்த கணம் படார் என்ற ஒலியோடு நொறுங்கியது அந்த காபி கப்.

அதிர்ந்து பயந்து போனவளுக்கு அவர்கள் போட்டிங் சென்ற நேரம் அவர்களுக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட அவர்களின் நெருக்கமான புகைப்படங்களுடன் வந்த செய்தியைக் காட்ட அவளோ உடைந்து போனாள்.

“என்ன சார் இப்படித் தப்பு தப்பா ஏன் போட்டாங்க.?” என அவள் அழத் தொடங்க, அவனுக்கோ அவளுடைய கண்ணீர் வேதனையைக் கொடுத்தது.

“ப்ச் அம்மு இப்போ எதுக்கு அழுகுற.?”

“இது த.. தப்பு தானே.? எல்லாரும் என்ன இனி தப்பாவே பார்ப்பாங்க.” என அழத் தொடங்கியவளை வெறித்தான் அவன்.

“நம்ம ரெண்டு பேரையும் தானே சொன்னாங்க. சோ பரவால்ல விடு.” என்றவனை கோபமாக பார்த்தவள்,

“இது எல்லாம் எங்க அம்மாச்சிக்கு தெரிஞ்சா அடி பிண்ணிருவா. ஊர்ல எந்தப் பையனும் என்னைக் கல்யாணம் கட்டிக்க மாட்டான். அப்பா கொன்னே போட்ருவார்.” என அழுதவளின் கன்னங்களை இறுகப் பற்றியவன்,

“நாம கல்யாணம் பண்ணிக்கலாமா.?” எனக் கேட்டான்.

அவனுடைய கேள்வியில் விழிகளை விரித்து உறைந்து நின்றவளின் இடையைப் பற்றி இழுத்து தன் உடலோடு ஒட்ட வைத்தவன்,

“எனக்கு இந்த அம்முவை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. நாம ஏன் இந்த நியூஸை உண்மையாக்கக் கூடாது.?.” என்றவனை தள்ளியவள் பதற்றமாக வெளியேற முயன்றாள்.

அடுத்த கணம் அவளுடைய கரத்தை பிடித்து இழுத்தவன்,

“ஏன்டி என்னை பிடிக்கலையா.?” என கேட்டான்.

“அப்படி இல்லைங்க அ… அதுஉ வந்து.”

“இந்த வந்து போயி எல்லாம் வேணாம். என்னை பிடிக்குமா பிடிக்காதா.?”

“பி… பிடிக்கும் ஆ… ஆனா.” என்றவள் வார்த்தைகளை முடிக்கும் முன்பே அவளுடைய இதழ்களை சிறை எடுத்துக் கொண்டான் அவன்.

அவளுடைய சிவந்த இதழ்கள் அவனுடைய இதழ்களுக்குள் காணாமற் போக, அவற்றைக் கவ்வி உறிஞ்சியவனின் செயலில் மாதுவுக்கோ தலையே சுற்றியது.

அவள் மூச்சு வாங்கவும் சட்டென விலகியவனை சடாரென தள்ளி விட்டாள் அவள்.

அவளுடைய கண்கள் கலங்கி மூக்கு நுனி சிவந்தது.

“ஏய் எதுக்குடி தள்ளி விட்ட.? என்னை பிடிச்சிருக்கா இல்லையா.?”

“நா.. சொல்ல மாட்டேன்.”

“ப்ச் சொல்லு. பிடிச்சிருக்கா இல்லையா.”

“பி.. பிடிச்சிருக்குங்க ஆனா…” என்றவள் அடுத்த வார்த்தைகளை முடிக்கும் முன்னரே அவளை அங்கிருந்த சுவரில் சாய்த்தவன் அடுத்த கணம் குனிந்து அவளை மீண்டும் முத்தமிடத் தொடங்கினான்.

அவனுடைய கரமோ அவளுடைய கழுத்திலும் மற்றைய கரமோ அவளுடைய பின்பக்க மேட்டிலும் பதிந்து அழுத்த, அவளுக்கோ மின்சாரம் தாக்கிய உணர்வு.

அவளுடைய அதிர்வில் சட்டென விலகிக் கொண்டான் தீரன்.

“சாரி அம்மு. என்னால கன்ட்ரோல் பண்ண முடியலை சாரி. உன்னோட முடிவுதான் எனக்கு முக்கியம். நீ ஓகே சொன்னா நாம கல்யாணம் பண்ணிக்கலாம். நீ ஓகேதான் சொல்லணும். எஸ் சொல்லுவ. இன்னைக்குள்ள உன் பதிலைச் சொல்லிரு.” என்றவன் அந்த அறையை விட்டே வெளியேற, தன் முகத்தை வெட்கத்தில் மறைத்துக் கொண்டாள் அவள்.

அவளுக்கு தீரனை பிடிக்காமல் போகுமா.? தனக்காக பார்த்து பார்த்து செய்யும் அவனை எப்படி பிடிக்காமல் போகும்.?

அவளுக்கு அவனை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் திருமணம் என்பது ஒன்றும் சுலபமானது அல்லவே. அது ஆயிரங் காலத்துப் பயிர் என எண்ணுபவளுக்கு அவளுடைய அம்மாச்சியின் சம்மதமும் தேவைப் பட்டது.

அந்த அறையின் கண்ணாடியின் முன் சென்று நின்றவள் தடித்து சிவந்து போயிருந்த தன் இதவ்களைக் கண்டு வெட்கம் கொண்டாள்.

“ச்சீ இப்படி கடிச்சு வெச்சுட்டாரே..” என புலம்பியவளுக்கு  அவனுடைய முத்தம் இனிக்கத்தான் செய்தது.

வெட்கத்தில் சிவந்தவள் தன்னை அறியாமலேயே தீரனை தன்னவனாக நேசிக்கத் தொடங்கியிருந்தாள்.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!