யட்சனின் போக யட்சினி – 5

5
(7)

 

 

போகம் – 5

 

நிலவுக்காரிகை பனிவிழும் அத்தருணத்தில் அதன் சிதறல்களுடன் நகைத்து விளையாடிய வண்ணம் தன் வெண் வண்ண வெளிச்சத்தால் பூலோகத்தை தேவலோகமாக மாற்ற முயன்று கொண்டிருந்த மந்தகாச வேலை அது!!!

 

“வாட்… ??.வாட்…???வாட் டு யூ மீன்… ??? கல்யாணமாஆஆ… ???” என்று உதயரகசியா உறைந்து சிலையாகித்தான் போனாள்.

 

“ஆமாம் ஜில்லாடி கல்யாணமேதான்… நமக்கேதான்… நடக்கபோகுதான்…

 

ஏதாச்சும் கில்லாடி வேலை செய்யலாம்னு யோசிக்காத எதுமேஏஏ செய்ய முடியாதுஉஉ…

 

இது நடந்தா மட்டும்தான் நான் கேஸை வாபஸ் செய்து உன் பேரு புகழ் உன் கைல கொடுத்துடுவேன்…

 

இல்லாட்டி இனிமேல் நீ உன் கம்பெணில உட்கார்ந்து ஐஸ்கிரீம் மட்டும்தான் சாப்பிடனும்…

 

ம்ம்ம்… நல்லாஆஆ யோஸிசிக்க.

ஆனா பாரேன் கண்ணு யோசிச்சாலும் உனக்கு வேற வழி இல்ல…”, என்றவாறு அங்கிருந்து டைனிங் ஹால் நோக்கி நடந்தவன்,உணவு மேசை மேலே இருந்த ஸீட்லஸ் திராட்சையை எடுத்து கொறிக்க தொடங்கவிட்டான்.

(ஹேய் ஹேய் எனக்கும் கொஞ்சம் கொடு மேன் ஹிஹிஹி…!!!)

 

எப்படி வந்து சிக்கி இருக்கேன் பாத்தியா மொமண்ட்டில் இருந்த ரகசியாவோ,

தன்னிச்சையாக ருத்ரனை பின் தொடர்ந்து சென்றவள் ருத்ரன் மிக எதார்தமாக உண்பதை பார்த்ததும்,

‘திங்குறான் பாரு மலைமாடுஉஉ…’, என்று மனதில் நினைத்த வறுத்தெடுத்தாள்.

 

அப்போதும் அவளின் மிடுக்கென்பது சிறிதும் குறையாமல்

“நெவர்….முடியாது…முடியவே முடியாதுஉஉஉ…!!! ஐ கான்ட்…

வேற ஆப்ஷன் இருந்தா சொல்லுஉஉ…”, என்று அவனிடம் டீலிங் பேச…

 

“ஹோஓஓஓ… இருக்கே தக்காளிஇஇஇ…

லோகல் நியூஸ்ல போட்டதை பிபிசில போட்டுட்டு…

அப்றம் உலகத்துல உள்ள எல்லாப் பத்திரிக்கையிலும் போட சொல்லிடறேன்…

இது செமயான ஆப்பூஊஷனா இருக்கும்ல…

திராட்சை சாப்பிடுறியாஆஆ பாப்பாஆஆ…” , என்று அவளை நோக்கி கிட்டே வந்தவனின் விழிகள் நிச்சயம் செய்வேன் என்று தீட்சன்யமாக கூற…

 

ரகசியாவிற்கு தெரிந்துவிட்டது இப்போது சண்டகோழியாக முட்டி மோதுவதை விட சாணக்யனாக யோசிக்க வேண்டிய தருணம் என்று. இரண்டு நிமிடத்தில் கார்ப்ரேட் இராணியாக இதற்கும் முடிவை எடுத்து மூச்சை இழுத்து விட்டு தன்னை நிதானப்படுத்தி கொண்டாள்.

 

ருத்ரனோ, “என்னாச்சுஉஉஉ கண்ணுஉ…?!

மூச்சு கீச்சு அடைச்சிறுச்சா இல்லை நின்றுச்சானு செக் பண்ணி பார்த்துட்டிருக்க போல…” , என்று அவளை வேண்டுமென்றே சீண்டினான்.

 

பயங்கர கோபம் வந்தாலும் அடக்கிகொண்டாள் பாவம்…

“ஓகே ஃபைன்… எனக்கு டீலிங் ஒகே…

கல்யாணம் நடந்த அடுத்த ஸெகண்ட் நீ சொன்னது செய்துடனும்…”, என்றாள் திடமாக. திருமண பந்தம் எத்தனை புனிதமிக்க உறவுகளை கொடுக்கும், கையில் வைத்து விளையாடும் பொம்மையோ அல்ல இறைவனால் நடத்தப்படுவது என்பது எல்லாம் தெரிந்து கூறினாளா அல்லது தெரியாமளா…?!

அவளே அறிவாள்..!

 

‘இவள் அப்படி எல்லாம் சரினு சொல்ற ரகமில்லையேஏஏஏ என்னவா இருக்கும்…’ கூர்ந்து பார்த்தவாறு ருத்ரன் யோசிக்க…

 

மீண்டும் தொடர்ந்தாள், “பட் அதுக்கு ஒரு டீலிங் இருக்குஉஉஉ…

எனக்கு கரெக்டா ஒன் ஆர் த்ரீ மன்த்ஸ்ல டிவோர்ஸ் குடுத்துடனும்… நான் எப்போ கேட்கறேனோ அப்போ ஸைன் போட்டுடனும் …

அதுக்கு சம்மதம்னா கல்யாணம் நடக்கட்டும்…

இல்லாட்டி நாம மோதிப் பார்த்துக்கலாம்…

ஐ டோன் கேர்…” , எப்படியும் கல்யாணத்தை நிறுத்த போவதில்லை இவன் என்று நினைத்துதான் இப்படி மோதிப் பார்க்கலாம் எனக் கூறியது.

 

என்னதான் இவனுக்கும் இது கட்டாயக் கல்யாணம் எனினும், தமிழையும் மண்ணையும் பண்பாட்டையும் மண்வாசனையையும் நேசித்து வளர்ந்தவனுக்கு இந்த டிவோர்ஸ் எனும் வார்த்தை வேப்பங்காயாய் கசந்தது.

 

உடலும் உள்ளமும் கொதிக்க கையை முறுக்கி பல்லை கடித்துத் தன்னை கட்டுபடுத்திக் கொண்டவன்,

“ம்ம்ம்ம் சரீஈஈஈஈ…

ஆனா அதுவரை நீ இங்கதான் இருக்கனும் இருந்தாகனும்.” , என்று கடித்து துப்பினான் அவ்வார்த்தையை….

 

“நான் எப்படி இதை நம்புறதுஉஉஉ…

அக்ரீமெண்ட் ஸைன் செய்துக்கலாம்…”,என்றவளை எரிப்பது போல் பார்த்தான்.

 

“அதெல்லாம் ஒரு ம….ண்ணும் தேவையில்ல… அதான் சொல்லிட்டேன்ல அது போதும்… நம்பலாம்”, என்று முயன்று நிதானத்தைக் பிடித்துக் கொண்டு பேசினான்.

 

“இப்போ என் தாத்தா பாட்டி வருவாங்க…

நீ என்ன பன்ற ச்சமத்துப் புள்ளையா சாந்தமா இருக்கனும்…

தைய தக்கானு தகதிமிதா டான்ஸ் போட்ட…

நீ சொல்ற எதுவுமே நடக்காதுஉஉ.

ஒவ்வொரு முறையும் சொல்லிட்டிருக்க மாட்டேன் விளங்குதாஆஆ….!”,என்று குங்கும விழிகளை கொண்டு தீர்கமாக சொன்னான் ருத்ரன்.

 

அவ்விழிகளில் என்ன அர்த்தத்தை சொன்னதோ இவளுக்கு தானாக தலை ஆடியது சம்மதமாக அவளே அறியாது.

பெரியவர்களை எப்பொழுதும் மதிப்பவள்தான் ரகசியா வெகு சிலபேரைத் தவிர. அதனால் இவளுக்கு இது பெரிய நிபந்தனையாக இல்லை.

 

” சரி சரி… ஃபைன்…”, எனக் கையை கட்டிக் கொண்டு திமிருடன் நின்றாள்.

 

பின் ருத்ரன் ஹாலைக் கடந்து ஒரு அறைக்கு முன் சென்று,

“பாட்டி… பெருசு… ரெடியாகியாச்சா வாங்க போகலாம்…” , என்று அவர்களை அழைத்தவன், இவளை நோக்கி நாக்கை மடித்து கண்ணை உருட்டி சைகையில் பொறுமையா மரியாதையா பேசனும் என்று காட்டினான்.

 

‘ஸ்டுப்பிட்… நாட்டு மலைமாடு … வில்லேஜ் வினிகர்…’, என பொறித்தெடுத்து முகத்தை திருப்பிக் கொண்டாள் ரகசியா.

 

 

வெளிய வந்த பாட்டியும் தாத்தாவும், தவிப்புடன் விழிகளில் ஆனந்த கண்ணீரோடு அவளை நோக்கிச் செல்ல…

 

பிறந்த பிள்ளையை கையில் எடுக்கையில் ஒரு உணர்வு வருமே,

அது தாய்மையா…?!

பேரின்பமா…?!

இல்லை தெய்வீகமா??!!

பிரித்தறிமுடியா ஒர் சில்லென்ற உணர்வல்லவா அது…!

அந்த நிலையில்தான் இருந்தார்கள் இருவரும்.

 

பாட்டி அவளின் கையை பிடித்ததும் அவரின் விழிகளில் துளிநீர் கன்னங்களை கடந்தேவிட்டது எவ்வளவு அடக்கிவைக்க முயன்றும். தாத்தா எப்படியோ தன்னைக் கட்டு படுத்திக் கொண்டார்.

 

“எப்படி இருக்கீங்க தங்கம்மா…?!

அந்த அஷ்டலட்சுமியும் ஒன்னா சேர்ந்தாப்ல அவளோ அழகா இருக்கீங்க என்ற ராசாத்திஇஇ. ஊரு கண்ணே பட்டிருக்கும்…!”, என்று அவள் முகத்தில் நெட்டி எடுத்து திருஷ்டி சுத்தியவர் தன்னையும் மீறி ரகசியா கன்னத்தை முத்தம் இட்டுவிட்டார் சந்தானலட்சுமி பாட்டி…

 

தாத்தாவோ அவளின் தலையை ஆசையுடன் வாஞ்சையாக தடவிக் கொண்டு, “சாப்பிட்டுடிங்களா தங்கம்மா…? வாங்க சாப்பிடலாம்…!”, என்ற அவளை அக்கறையுடன் பாசமொழுக குசலம் விசாரித்தார்.

 

நெகிழ்ந்துதான் போனது அச்சிறிய தூரிகைப் பெண்ணின் உள்ளம்.

பெற்றோர்கள் இல்லாமல் வளர்ந்தவளுக்கு இந்த அன்பும், அக்கறையும் பெரிதாக ஏது…?! அவ்வப்போது கிட்டியதுதான்…!!!

 

இதுதான் சொர்க்கம் என்று உணர்ந்தாள்.

அன்பை தேடி எதிர்பார்த்து அதனை மறைக்க எண்ணி தன்னைத் திடப்படுத்த வேண்டி கனவை நோக்கி ஒட தொடங்கியவள் இன்று இங்கே வரும்வரை ஓடிக் கொண்டேதான் இருந்தாள் தனக்கென வேறு ஒரு குடும்ப வாழ்க்கை கலந்த எதிர்காலம் என்று ஒன்று உண்டு என்பதை மறந்துவிட்டு.

 

அவளுக்கு இந்த பாசம் நேசம் ஏன் எனத் தெரியவில்லை என சொல்வதைக் காட்டிலும் யோசிக்க அவள் மனமே விரும்பவில்லை என வைத்துக் கொள்ளலாம்.

 

சாதாரனமாக அவர்களின் பேரனை கல்யாணம் கட்டிக் கொள்ளபோகிறோம் அதனால்தான் இது என்று நினைத்துவிட்டாள்…!

 

சொல்ல போனால் சுயனலமாக இந்த அன்பு எனக்கு வந்து கொண்டே இருக்க வேண்டும் தனக்கு மட்டும் கிடைத்துவிட வேண்டும் என ஏதோ ஒரு மாயையில் கட்டுண்டவள் போல் அவர்களிடம் குழந்தையாக மாறிடத் துடித்தது ரகசியாவின் மனம்…!!!!

 

விழிகள் ஈரமாவதை உணர்ந்தவள், தன்னை நிதானித்துக் கொண்டு, “ஹா..ன் பாட்டிம்மா நல்லாருக்கேன்…

நீங்கதான் ரொம்ப ரொம்ப பியுட்டிஃபுல்…

சாப்பிட்டேன் தாத்தா நல்லாஆஆஆ வரும்போது…

நான் ஒரு கிஸ் செய்துக்கவா பாட்டிம்மாஆஆ உங்களை…?!!

தாத்தா உங்க பெர்மிஷன் உண்டாஆஆ… ??!!”, என்று அவரைப் பார்த்து கண்ணடித்து புன்னகைத்த வண்ணம் கேட்க…

 

“ஹாஹா…ஹா சேட்டைக்காரிஇஇ தங்கம்மா நீங்க… ஹாஹா…”, என பலமாக சிரித்தார் வெகுநாட்களுக்கு பிறகு,,

கூடவே மீசைமுடிச்சுகளில் வெட்கமும் அவருக்கு…!!!

 

பாட்டிக்கு இரட்டிப்பாக இருபக்க கன்னத்திலும் முத்தம் வைக்க சந்தானலட்சுமி அம்மாவிற்கு பிறவிப் பயனை அடைந்த உணர்வு தனக்குள்…!!!

 

தாத்தாவை மட்டும் விடுவாளா என்ன…!

தாத்தாவின் கன்னத்திலும் முத்தமிட்டவள் அவரை பார்த்து கழுத்தை வளைத்து சிறுகுழந்தையாய் கண்ணடிக்க, சொல்லறியா மொழியறியா உணர்வு அது…,

அப்பப்பா இதுவன்றோ வாழ்க்கையில் வென்ற உணர்வு என்று தோண்றியது அவருக்கு!!!

 

பாட்டியை பார்த்தவள்,”பாட்டி பெர்மிஷன் கேட்கலனு கோவிச்சிக்க மாட்டிங்களேஏஏ…?!! …ம்ம்…ம்ம்… ஹாஹா” , என்று கிண்டலாக கூறிக் கொண்டே அவர்கள் இருவருக்கும் இடையில் கோழிக்குஞ்சாக பதுங்கிக் கொண்டாள் பாசமெனும் கதகதப்பில், அன்பை தேடி ஓடிய பறவையின் ஓய்வாக…!!!

 

குங்குமாக இப்போதும் சிவந்த பாட்டியோ வெட்கத்துடன்,” போங்க தங்கம்…. “, என்றதும் தாத்தாவும் இவளும் சேர்ந்து சிரிக்க மொத்த வீட்டிலும் அச்சத்தம் நிறைந்து ஸ்தாஸ்து என்பதை போல் எதிரொளித்தது கவிதையாக…!!!

மோனாவும் ஆசையாக அதில் ஐக்கியமாகிப் போனாள் அந்த அழகில்…!

 

அங்கே தூரத்தில் இவர்களை கண்டு கொள்ளவே கூடாது என்று அமர்நதிருந்த ருத்ரனுக்கு வயிறு திகுதிகுவென பற்றி எறிந்தது இவர்கள் கொஞ்சலில்.

‘மேனாஆஆ மினுக்கிஇஇ…

வந்ததும் என் தாத்தா பாட்டிக்கிட்ட அப்படி கொஞ்சுரா இப்போ வந்துட்டு…

அவ பக்கம் மொத்தமா பாசத்தை கொட்டி சாய வச்சிடுவா போல மாயச்சிறுக்கி…

கடுப்பாகுதேடாஆஆ ருத்ராஆஆ என்ன செய்ய என்ன செய்ய…ஆஹ்ன் தண்ணிய குடிப்போம்…’ , என்று மனதுக்குள் புகைய புகைய தண்ணியை குடித்து புகையை ஆற்றியவனின் வாட்டர் பாட்டில் தீர்ந்தேவிட்டது…

 

வேறு பாட்டிலுக்கு கையை மட்டும் விட்டு மேசையின் மேல் துழாவ விழியோ வேறு திசையில் இருக்க…

விஜயன் அவன் முன்னாடி வாட்டர் பாட்டிலை நீட்டியவன்,

“இந்தா மச்சா…ன் தண்ணியவா தேடுற இந்தா புடி…

வெளியே எங்கயோ ஒரே கருகின ஸ்மெல்லுஉஉ மச்சா…ன். உனக்கும் வருதுதான…?!”, என்றவனை வயிற்றிலே கும்மாங்குத்தாக ஒரு குத்து எத்தியிருந்தான் ருத்ரன்.

 

“யம்மாஆஆஆஆ … மச்சா..ஆன் ஸ்மெல்லா எங்க…?! வரவேஏஏ இல்லயேஏஏ…”, என்று வயிற்றை பிடித்துக் கொண்டு கத்திவிட.

 

கத்தியவனை இழுத்துக் கொண்டு கொஞ்சல்ஸ்களை கொட்டுபவர்களிடம் சென்றான்.

“போதும் கதையடிச்சதுஉஉ எல்லாம் போதும்…

சாப்பிட்டு தூங்கனும் வாங்க… பசிக்குதுஉஉஉ எங்களுக்கு…”, என்று சிடுசிடுத்துவிட்டு மேசையில் உட்கார்ந்தான்.

 

அவர்களை காண சிறிதும் கண்டு கொண்டதாக தெரியவில்லை என்றதும் ‘இதுஹள் வராதுஹள் போல…’ என நொந்துக் கொண்ட ருத்ரன்,”டேய் மாப்பிஇஇ மவனேஏ…அந்த கறியை எடுடாஆஆஆ…”, என்று கத்தோ கத்தென கத்த அவளை மெல்வாதாக நினைத்து அரைத்து முடித்தான் முக்கால் கிலோ கறியை தீயை விழியால் அவளுக்கு அனுப்பிக் கொண்டே.

 

அப்போதும் யாரும் காணவில்லை என்றதால் அதிலும் சின்ன பையனாக கோபம் வந்து அவன் தலையில் அமர்ந்துகொண்டது…!

இருவரும் நன்றாக மொக்கிவிட்டு ருத்ரனின் அறைக்கு சென்று குப்புற படுத்து மட்டையாகிவிட்டதுகள்…!!!

 

பாட்டி அவளை நோக்கி,”வாங்க தங்கம் சாப்பிட்டு தூங்கலாம்…

பேசுனதுல நிறைய டைம் ஆயிடுச்சு போல…

ரொம்ப முன்னாடியே எழனும்…” , என்று அழைத்து சென்று தாத்தாவும் பாட்டியுமாக ராஜபபோக உபச்சாரம்தான்.

அதிலும் கூடவே நேசமும் பாசமும் கலந்திருந்தாள் பாவக்காய்கூட பாயாசம்தான்,

முட்டைக்கூட முக்கி எடுத்த சிக்கன் அறுபத்தைந்துதான்…!!!

 

நிறைவான நிம்மதியான உறக்கம் அனைத்து விழியிலும் அங்கே அந்த அரண்மனையில் , இருவரின் விழிகளில் தவிர…!!!

 

*********

 

ரகசியாவிற்கென அவள் ரசனைக்கேற்ப ஒரு அறையில் அவளையும் மோனாவையும் உறங்கச் சொல்லி பாட்டியும் தாத்தாவும் சென்றுவிட, அங்கே இவளுடைய பெட்டியில் துணிமனிகள் இருந்தது.

 

குளித்து முடித்து விழியை மூடியவளுக்கோ ஒரு நாளில் என்னவெல்லாம் நடந்துவிட்டது என யோசனைகள் வரவும்…

“எல்லாம் இந்த மலைமாடு நாட்டுகாட்டனால வந்தது…

மோரான்… இடியட்… ப்ளாக் காண்டா மிருகம்…”, என்று இப்போது வாய்விட்டே அவனை வறுத்தெடுக்க…

 

ஆனால் பாட்டி தாத்தாவை நினைத்தவளுக்கு புன்னகை வந்து ஒட்டிக்கொள்ள, எப்படியோ ஒருவழியாக உறக்கம் வந்து அவளைத் தழுவியிருந்தது.

 

அங்கே ருத்ரனோ விழி மூடி தன் கனவுத்தேவதையை நோக்கி காத்திருக்க, வந்தாள் இல்லை அவள்…!!!

மீ்ண்டும் மீண்டும் தன் முத்துமயிலைத் தேடித் தேடி சோர்ந்து போனான்.

 

‘அவளின் சிரிப்பு இல்லை…!

அத்தான் இல்லை…!

அந்த வெண்பச்சை மச்சமில்லை…!

அந்த வாசம் இல்லை…!’

முடியவில்லை அவனால் மூச்சு முட்டியது ருத்ரனுக்கு அவள் வராமல்.

 

“ஆஆஆஆஆஆஆ…ஆஆஆ முத்துமயிலுஉஉஉஉ…”, என்று தலையைப் பிடித்துக் கொண்டு கத்தியவன் விஜயனை இழுத்துக் கொண்டு மாடிக்குச் சென்றவன் அவனையும் சேர்த்து தூங்க விடாமல் சடுகுடு ஆடினான் எண்ணத்தின் நாயகியைத் தேடி பிறைநிலாவை பார்த்த வண்ணம்…!!!

(இன்னும் கொஞ்ச நேரத்தில ரகசியாவோட கண்ணாலம் ஆனா செய்ற அலப்பறைய பாருங்க பேபிஸ்…)

 

 

பித்தம் பிடித்து

சித்தம் தொலைத்து

கையால் துழவி

காற்றில் தடவி

உன்னை

தேடுகிறேன்…!!!

எங்கே சென்றாய் சகியே

என் உயிரை

பறித்துக்

கொண்டு…?!!

உன் சுவாசம் தந்து

என் சுவாசம் மீட்க

வந்துவிடடி

என் யட்சினி…!!!

 

(தன்வி டம் டம் டார்லிங்ஸ் டம் டம்

லைக்ஸ் அடிக்க கமெண்ட்ஸு டம் டம்

அஅஅ ஆஆஆ அஅஅ அஅஅ கிஃப்ட்

எனக்கு இச்சூஸுஉஉ…)

 

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!