முகத்தில் பூத்த புன்னகையோடு ஏதோ ஒரு கனவு உலகத்தில் மிதந்து கொண்டே தன் இடத்தில் வந்து அமர்ந்தவள் மனம் முழுக்க
“ இன்னைக்கு எப்படியாவது அவரைப் பார்த்து கல்யாணத்தை பத்தி அவர்கிட்ட பேசணும் “ என்று நினைத்தவளின் மனதில் தங்கள் இருவருக்கும் இடையே அன்று ஒரு நாள் இரவு நடந்த அந்த இனிமையான தருணங்கள் ஞாபகத்திற்கு வர அவளின் முகமோ சட்டென்று குங்குமம் போல் சிவந்தது. அதை பார்த்த அவளது தோழி அகல்யா
“ என்னடி அம்மு உன் முகம் எல்லாம் இப்படி செவந்து போய் இருக்கு என்ன விஷயம்? “ என்று கூறி அவள் தோளில் கைப் போட்டு கண்ணடித்து கேட்க அதில் சிவந்த முகத்தோடு
“ ஏய் …… ச்சீ ….. போடி “ என்று கூறி அதே வெட்கத்தோடு தனது வேலையை பார்க்க ஆரம்பித்தாள் அம்மு என்ற அமுதினி. இப்படியே நேரம் மெல்ல நகர ஆனால் அவள் யாரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தானோ அவன் தான் இன்னும் அவள் கண்ணில் படவே இல்லை
கிட்டத்தட்ட மதிய உணவு நேர இடைவெளியை நெருங்கி சமயத்தில் தான் அந்த ஆபிஸிற்குள் நுழைந்தான் தேவ் . முதலில் அவனை கவனிக்காத அம்மு ஏதோ பேச்சு குரல் கேட்க அதிலேயே வந்திருப்பது யார் என்று உணர்ந்த அம்மு முகத்தில் தவுசன் வாட்ஸ் பல்பு எறிய சட்ரென்று குரல் வந்த திசையை திரும்பி பார்க்க அங்கே அவள் எதிர்பார்த்தவனே நின்றிருந்தான்.
எப்போதும் பார்மல் உடையில் டிப்டாப்பாக வருபவன் இன்று ஏனோ கேசுவல்ஸ் உடையில் யாருடனோ சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்தவளின் கண்கள் மின்ன இப்பொழுதே அவனிடம் பேச வேண்டும் என்று அவளது உதடுகள் துடித்தது. இதை அனைத்தையும் அவள் அருகே அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த அகல்யா
“ என்னம்மா உன் ஆள் வந்தாச்சு போல? ம் ….. போ …. போ …. போய் நல்ல என்ஜாய் பண்ணு” என்று அகல்யா தலையை ஆடி சிரித்து கண்ணடித்து கூற கூற
“ ஏய் … லூசு என்கிட்ட நீ நல்ல வாங்க போற “ என்று மெல்லிய குரலில் அவளை அதட்டுவது போல் அம்மு கூற
“ அய்யயோ நீ கொடுக்கறது எனக்கெல்லாம் வேண்டாம் ப்பா …. போ … போய் உன் ஆளுக்கே அதையெல்லாம் கொடு அவரே வாங்கிப்பாரு அப்றம் அவரும் உனக்கு திருப்பி ….” என்று ஏதோ சொல்ல வந்தவளின் வாயை மூடி
“ அம்மா தாயே நீ எதுவும் சொல்லாத நான் முதலே அவருகிட்ட போய் பேசிட்டு வரேன் “ என்று கூறி தன் தோழியின் மண்டையில் நறுக்கென்று ஒரு கொட்டு கொட்டி விட்டு அங்கிருந்து ஓடி விட்டாள் அம்மு.
அவனிடம் இந்த விஷயத்தை பற்றி எப்படி பேசுவது என்று தெரியாமல் ஒரு சிறு தயக்கத்தோடு நின்றிருந்த அம்முவை பார்த்த அகல்யா
“ ஏய் … அம்மு இங்க என்னடி பண்ற நீ இன்னும் போய் அவருகிட்ட பேசவே இல்லையா? “ என்று அகல்யா கேட்க
“ அது இல்ல அகல் எனக்கு ரொம்ப பயமா இருக்குதுடி எப்படி போய் அவருகிட்ட பேசறதுனே எனக்கு தெரியலேடி
“ என்று தன் கையை பிசைந்தவாறு அம்மு நின்றிருக்க அதில் குழப்பத்தோடு தன் தோழியை பார்த்த அகல்யா
“ இல்ல எனக்கு புரியலே அம்மு? இப்போ நீ எதுக்கு பயப்புடுறே? “ என்று அகல்யா தன் ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க
“ அகல் நான் உன்கிட்ட ஒரு விஷயத்தை மறைச்சிட்டேண்டி” என்று அம்மு கூற அகலும் என்ன என்பது போல் அம்முவை பார்க்க
“அது ….. அது …. அன்னிக்கு நைட் அவரு சுயநிலை இல்லடி, அது மட்டும் இல்லாம உனக்கே நல்ல தெரியும் நான் மட்டும் தான் அவர லவ் பண்றேன். ஒரு வேளை அன்னைக்கு நடந்தது எதுவும் அவரு ஞாபகத்துல இல்லாம போனா நான் என்னடி பண்ண?” என்று தயங்கியவளை கோபத்தோடு பார்த்த அகல்யா ஓங்கி அவள் கன்னத்திலே ஒரு அரை விட அதில் அங்கிருந்த சிலர் இவர்களை திரும்பி பார்த்தனர். அப்போதே தங்கள் இருக்கும் இடம் உணர்ந்த அகல்யா அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு ஒரு மறைவான இடத்துக்கு சென்று
“ இடியட் உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்க இல்லையடி? அன்னைக்கு என்கிட்டே நீ என்ன சொன்ன?” என்று அகல்யா கேட்க அதில் அம்முவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. தன் தோழியின் கண்ணீரை பார்க்க முடியாமல் அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்ட அகல்யா அவள் உடல் நிலை கருதி அதற்க்கு மேல் அவளிடம் எதுவும் கேட்கவில்லை
“ சரி … சரி …. விடு நான் எதுவும் இப்போ உன்கிட்ட கேட்கலே போதுமா, நீ இப்போ என்ன பண்ண போற அத மட்டும் சொல்லு “ என்று அகல்யா கேட்க தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தவரே
“ அதான் டி எனக்கும் தெரியலே அவர்கிட்ட நான் எப்படி போய் பேச? ஒரு வேளை அன்னைக்கு நடந்துக்கும் எனக்கும் எந்த சம்மதமும் இல்லன்னு அவரு சொல்லிட்டா நான் என்ன பண்ண?” என்று தன்னை அணைத்தவாறே பயத்தோடு கேட்ட தன் தோழியிடம் என்ன சொல்வது என்று அகல்யாவுக்கு ஒன்றும் புரியவில்லை மெல்ல அவளை தன்னிடம் இருந்து விலகிய அகல்யா அவள் கையை பிடித்து ஆறுதல் படுத்தியவள்.
“இங்க பாரு அம்மு அந்த மாதிரி எல்லாம் எதுவும் இருக்காது புரியுதா? நீ போய் அவர்கிட்ட முதலே பேசு அவரு கண்டிப்பா உன்னை ஏத்துக்குவாரு நீ சொல்றதும் எனக்கு புரியுது ஆனா அன்னைக்கு என்ன நடந்தது அப்படிங்கறத நீ தான் அவருக்கு பக்குவமா எடுத்து சொல்லணும்” என்று அகல்யா அம்முவுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்க அம்முவும் சரி என்பது போல் தலையாட்டி
“ லஞ்ச் பிரேக் முடிஞ்சதும் கண்டிப்பா நான் அவர் கிட்ட பேசுறேன் அகல் “ என்று கூறியவளை முறைத்த அகல்யா
“ ஏய் …. லூசு அவரு இன்னைக்கு லீவ் போல இப்போ ஏதோ ஒரு வேலையா வந்து இருக்காரு, நீ சாப்பிட்டு வரதுக்குள்ள அவரு போய்ட்டா நீ என்ன பண்ணுவே போ போய் முதலே அவர்கிட்ட பேசு” என்று அகல்யா கூற அப்போதே அதை உணர்ந்த அம்மு
“ அட …. ஆமா இல்ல இரு நான் இப்போவே போய் அவர்கிட்ட பேசறேன் “ என்று கூறிய அம்மு அவனை தேடிக் கொண்டே அங்கு வர ஆனால் அங்கோ அவள் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடந்து கொண்டிருந்தது.
“ ஹாலோ கெய்ஸ் எல்லாரும் ஒரு நிமிஷம் இங்க பாருங்க “ என்று வெற்றி தன்னுடன் வேலை செய்யும் நபர்களை அழைக்க அவர்களும் என்ன என்பது போல் அவன் புறம் திரும்பி பார்க்க அப்போது தான் அங்கு வந்தாள் அம்மு.
“ ஆல்ரெடி உங்களுக்கு எல்லாம் தெரியும் நினைக்கிறேன், இருந்தாலும் தெரியாதவங்களுக்காக இன்னொரு தடவை சொல்றேன் கம்மிங் சண்டே எனக்கு மேரேஜ் கண்டிப்பா நீங்க எல்லாரும் வந்துடனும்” என்று கூற இதை கேட்டு அங்கிருந்தவர்கள் கை தட்டி ஆர்ப்பரிக்க அம்முவின் தலையிலோ இடி விழுந்தது போல் இருந்தது.
“ சார் மேரேஜ் எங்க சென்னைலே தானே?” என்று அங்கிருந்த ஒரு பெண் கேட்க
“ இல்ல .. இல்ல …. மேரேஜ் என் சொந்த ஊர்லே அங்க என் ஃபியன்ஷியோட பரம்பரை வீட்டில் தான் கல்யாணம்” என்று அவன் சற்று பெருமையோடு கூற
“ ஒஹ்ஹ அப்படியா சார் பட் அங்க எப்படி நாங்க வர முடியும் எந்த இடமுன்னு எங்களுக்கு தெரியாதே” என்று இன்னொருவன் கேட்க
“டோன்ட் வொரி அதுக்கெல்லாம் நான் அரேஞ்சி பண்ணிட்டேன் சாட்டர்டே நைட் நம்ப ஆபிஸ் பக்கத்துலே இருக்காரே பஸ்டாப்லே இருந்து தான் பஸ் கிளம்புது. எல்லாம் அதுலையே வந்துடுங்க அப்றம் நெஸ்ட் டே மேரேஜ் முடிச்சிட்டு அதே பஸ்லே நீங்க ரிட்டன் வந்துடலாம் ஒன்னும் பிரச்சனை இல்ல “ என்று தேவ் கூற அவன் கூறியதை கேட்ட அனைவருமே திருமணத்திற்கு வருவதாக ஒப்புக்கொண்டனர்.
ஒவ்வொருவருக்கும் பத்திரிகை கொடுத்த தேவ் இப்பொழுது அம்முவிற்கும் தன் திருமண பத்திரிக்கையை கொடுக்க ஏற்கனவே ஒன்றும் புரியவில்லை அவன் கூறியதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தவள். இப்பொழுது அவன் கொடுத்து திருமண பத்திரிக்கையை வாங்கி பார்த்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து அதில் பட்டு தெறித்தது. இதை அனைத்தையும் பார்த்த கொண்டிருந்த அகல்யாவுக்குமே இது அதிர்ச்சி தான், தன் தோழியின் மனநிலையைப் புரிந்து அவளை அங்கிருந்து அழைத்து சென்றவள்.
“ அம்மு என்னடி வர சண்டே மேரேஜ்ன்னு சொல்றரு ஆனால் நீ எதுவும் பேசாம அமைதியா நிக்கிறே?” என்று அவளை பிடித்து உலுக்க அப்போதே தன் சுயநினைவிற்கு வந்த அம்மு தன் கையில் இருந்த பத்திரிக்கையை ஒரு நொடி பார்த்து விட்டு தன் தோழியை நிமிர்ந்து பார்த்தவள்.
“ அகல் இப்போ என்னடி பண்றது?” என்று குரல் நடுங்க கேட்க
“ அம்மு இதுக்கு தாண்டி நான் அப்பவே சொன்னேன் நீ தான் நான் சொன்னதே எதையும் கேட்கலே, ஒருவேளை நீ சொன்ன மாதிரி அவருக்கு அன்னைக்கு நடந்த எதுவும் ஞாபகம் இல்லையோ?” என்று அகல்யாவும் சற்று பயத்தோடு கேட்க
“ தெரியலையே டி” என்று கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருக அம்மு கூற
“ இப்படியே அழுதுகிட்டே இருந்தா என்னடி ஆகப்போகுது போ போய் மொத அவர்கிட்ட பேசு இப்போவது அவர்கிட்ட பேசி அன்னைக்கு நடந்ததே புரிய வெச்சி நீ அவரே காதலிக்கிறேதே பற்றி சொல்லு” என்று அகல்யா சற்று கோபத்தோடு கூற
“ இல்ல கண்டிப்பா நான் இந்த தடவை அவர்கிட்ட பேச தான் போறேன். அவர் என்ன தான் கல்யாணம் பண்ணிக்கணும்” என்று கூறியவள் அதற்க்கு மேல் அங்கு ஒரு நொடி கூட நிற்காமல் தேவை தேடி ஓடி சென்றாள் அம்மு .
அம்மு தன் காதலை தேவ்விடம் கூறுவாளா? தேவ் அம்முவின் காதலை ஏற்றுக்கொள்வானா? இந்த கேள்விகளுக்கான விடையங்களை தெரிந்து கொள்ள படியுங்கள்…
யாருக்கு இங்கு யாரோ?
ஹாய் டியர்’ஸ் என்னை உங்களுக்கு தெரியுமா இல்லையான்னு எனக்கு தெரியல, இதுக்கு முன்ன நான் ஒரு சில கதைகள் எழுதி இருக்கேன். ஆனா இந்த ஏந்திழை தளத்தில் இப்போது தான் நான் முதல் முறையாக எழுதுகிறேன். அதனால் இங்கு இருக்கும் என்னுடைய அன்பான வாசகர்களாகிய நீங்க தான் எனக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்…
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்தால் மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க… ஏதேனும் தவறுகள் இருந்தால் கூட சொல்லுங்க நான் கண்டிப்பா என் தவறுகளை திருத்திக் கொள்ளேன்..