வஞ்சம் 12
விண்ணில் இருந்து வந்த அசுரனைப் போல மிகவும் இரக்கமற்ற செயலை செய்ய துணிந்தான் இளஞ்செழியன். அவனுக்கு அப்போது தேவைப்பட்டது அவளது கண்ணீரும் கதறலும் மட்டுமே.
காட்டில் வேட்டையாடும் சினம் கொண்ட சிங்கமாக வேட்டையாட எண்ணம் கொண்டு அந்தப் பூங்கோதையை வாட்டி வதைத்தான்.
இதுவரை வலியைத் தாங்கிக் கொண்டிருந்த ஸ்ரீநிஷாவுக்கு அவனது அதீத வேகத்தைத் தாங்க முடியாமலும், வன்மையை சகிக்க முடியாமலும் உடல் ஏனோ நெருப்பில் விழுந்தது போல தகிக்கத் தொடங்கியது.
அவனது திடீர் வேகத்தில் உடல் ஊசலாட அப்படியே கசங்கிய பூ போல வின் மெத்தை மேல் கிடந்தாள்.
இதுவரை பெண்மையை எண்ணி சந்தோஷப்பட்டவள், இன்று ஒரு ஆடவனின் முன் இவ்வாறு கற்பை இழந்து சிக்குண்டு கிடப்பதை எண்ணி ‘ஏன் தான் பெண்ணாக பிறந்தோமோ..?’ என்று நினைத்து மிகவும் வேதனை அடைந்தாள்.
‘கடவுளிடம் பெண்களுக்கு மட்டும் ஆண்களை விட ஏன் பலத்தை குறைவாகப் படைத்தான்’ என்று எண்ணி கண்ணீர் வடித்தவள், ஒரு கட்டத்திற்கு மேல் அவளது எதிர்ப்புகள் எதுவும் அவனிடம் செல்லுபடியாகாது என்று புரிந்த பின் அவனை எதிர்ப்பதை தவிர்த்து அவன் தரும் வலிகளை உள்வாங்கிக் கொண்டு அசையாமல் அப்படியே இருந்தாள்.
ஆனால், அவளது கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் நிற்காது ஓடிக்கொண்டே இருந்தது. சிறிது நேரத்தின் பின் அவளையே அறியாமல் அவளது கண்கள் மூடிக்கொண்டன.
அப்போதுதான் அசைவற்ற அவளது உடலைப் பார்த்து சுயம் பெற்ற இளஞ்செழியன் தான் செய்த செயலைக் கண்டு உச்சகோபத்தில் எழுந்து அந்த அறையை விட்டு புயல் வேகத்தில் வெளியேறினான்.
இரவு அந்த அறையை விட்டு வெளியேறிய இளஞ்செழியன் ஏனோ மீண்டும் அந்த அறைக்கு செல்லவில்லை. அவளை நேரில் பார்க்கவும் திராணியற்றவனாக வேறொரு அறையில் இரவு உறங்கி விட்டான்.
பல இன்னல்களை தாங்கிய இரவு கழிந்து சூரியன் வெப்பக் கோலத்தைத் தாங்கியவாறு உதிக்கத் தொடங்கினான். காலையில் வெளியே காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு அப்போதுதான் நித்திரையில் இருந்து இளஞ்செழியன் எழுந்தான்.
“யாரு காலங்காத்தால..?” என்று எழுந்து கண்களைக் கசக்கிக் கொண்டு எழுந்து நேரத்தை பார்த்தால் நேரம் 8 மணியைத் தாண்டி இருந்தது.
‘என்ன..? இவ்வளவு நேரம் தூங்கி இருக்கனா..? என்று நினைத்தவன் எழ, முயன்றும் இயலாதவாறு என்றும் இல்லாத அளவுக்கு இன்று அவன் உடல் அவனுக்கு மிகவும் களைப்பாகவும், மிகவும் அசதியாகவும் இருந்தது.
அனைத்தையும் மறந்தவனாக வெளியே சென்று யார் அழைப்பது எனக் கதவைத் திறந்து பார்த்தவன், வெளிய நின்றவரைக் கண்டு சற்று அதிர்ச்சி அடைந்தான்.
பின்பு புன்னகையை முகத்தில் தவள விட்டுக் கொண்டு, “உள்ள வாங்கம்மா..” என்று அவரை அழைத்து வந்து அமரச் செய்து,
“எப்படி இருக்கீங்க சரோஜா அம்மா..?” என்ற கேள்வியுடன் தானும் இருக்கையில் அமர்ந்தான்.
“செழியன் ஆளே மாறிட்டீங்க.. நான் நல்ல சுகம். நீங்க எப்படி இருக்கீங்க..?”
“ஏதோ இருக்கேன் மா..”
“அம்மா இறந்ததுக்கு அப்புறம் அப்படியே எல்லாமே மாறின மாதிரி இருக்கு.. இந்த வீட்டுக்கு நான் வரும்போது எப்பவுமே அவங்க இங்கதான் இருந்து பேப்பர் படிச்சுக் கொண்டு இருப்பாங்க…
இங்க வந்தாலே அவங்களோட ஞாபகம் தான் வருது… அதாலேயே தான் இந்த வீட்டுக்கு வர்றத நான் தவிர்த்துட்டேன்…
ஆனா இப்ப வரவேண்டிய ஒரு கட்டாயத்தில் தான் நான் இங்கே வந்தேன்…”
“என்னம்மா..? ஏதும் பிரச்சனையா..?”
“இல்ல செழியன் அம்மா இருக்கும் வரைக்கும் எங்கட ஆசிரமத்துக்கு நிறையவே ஹெல்ப் பண்ணினாங்க.. ஆனா இப்ப அம்மா இல்ல தானே அதுதான்…” என்று இழுத்தார்.
இத எப்படி நான் மறந்தேன் என்று அவன் தலையில் கை வைத்து சிறிது நேரம் யோசித்து விட்டு,
“மன்னிச்சுக்கோங்க… அம்மா விட்டுச் சென்ற எல்லாத்தையும் நான் கவனிக்கத்தான் கனாடால இருந்து இங்க வந்தேன்… ஆனா இந்த விஷயத்தை நான் எப்படி மறந்தேன் என்று தெரியல.. நீங்க வீடு வரைக்கும் வந்து கேட்கிற அளவுக்கு நான் வச்சிட்டேன்…
என்னை மன்னிச்சுக்கோங்கம்மா.. இனிமே உங்க ஆசிரமத்துக்கு என்னென்ன தேவையோ அது எல்லாத்தையும் நானே செய்றேன்.. இப்போதைக்கு உங்களுக்கு என்ன உதவி வேணும் என்று சொல்லுங்கம்மா…”
“தம்பி, ஆசிரமத்தில் இருக்கிற வயசு போனவங்களுக்கு மெடிக்கல் இஸ்யூஸ் கொஞ்சம் இருக்கு.. அது சம்பந்தமா கொஞ்சம் மெடிசின்ஸ் எடுக்கணும் என்று அவர் தட்டு தடுமாறி கூற,
“இல்லம்மா நீங்க ஒரு காரணமும் எனக்குச் சொல்லத் தேவையில்லை, பொறுங்க வாரேன்..” என்று உள்ளே சென்று செக் புக்கை எடுத்து வந்து அதில் தனது கையொப்பதை இட்டு விட்டு தொகை எதுவும் எழுதாமல் சரோஜாதேவியின் கையில் கொடுத்தான்.
“என்ன தம்பி இது பிளாங்க் செக் தந்திருக்கீங்க… எனக்கு இது வேணாம்.. அம்மா எங்களுக்கு தாராளமாவே செஞ்சுட்டாங்க… இருந்தும் இப்ப சின்ன சின்ன கஷ்டங்கள்.. அதுதான் உங்களைத் தேடி வந்தேன்… நீங்க அம்மாக்கு மேலால செய்ய பாக்குறீங்க.. ஆனால் இதை நீங்களே வைத்துக் கொள்ளுங்க..”
“இல்லம்மா.. உங்களுக்கு என்ன வேணுமோ நீங்க அதை என்கிட்ட கேட்டுக் கொண்டிருக்க தேவையில்லை.. இப்படியான தயக்கம் இருக்கக்கூடாது.. நானும் உங்களுக்கு புள்ள மாதிரி தான் உங்ககிட்ட வளர்ர அவ்ளோ பிள்ளைகள்ல நானும் ஒரு ஆள்.. நீங்க எவ்ளோ பெரிய சேவை செய்றீங்க.. அதுக்கு நான் கட்டாயமா உங்களுக்கு பக்க பலமா இருப்பன்..
எங்க அம்மா உயிரோடு இருக்கும்போதும் அதைத்தான் எப்பவும் சொல்லிகிட்டே இருப்பாங்க..”
“நன்றி தம்பி சின்ன பிள்ளைகளுக்கு கொஞ்சம் புக்ஸ் வாங்க இருக்கு அடுத்த மெடிக்கல் செலவிற்கு,
கொஞ்சம் ஆசிரமத்துல சின்ன சின்ன கட்டிட வேலைகள் இருக்கு ஆசிரமம் மேல் கூரை கொஞ்சம் சேதம் அடைந்திருக்கு. இனி மழை காலம் தானே அதைத்தான் கொஞ்சம் திருத்தணும்.. ஆனால் இவ்வளவு தேவையில்லை எனக்கு கொஞ்சம் பணம் இருந்தா போதும்..” என்று சொல்லி அந்த செக்கை திருப்பி கொடுத்தார்.
“இத நீங்க மெடிக்கல் செலவுக்கு வைத்துக் கொள்ளுங்க.. பிள்ளைகளுக்கு தேவையான புக்ஸ் நானே வேண்டி வந்து ஆசிரமத்தில் தாரேன். அடுத்து ஆசிரமத்தில் என்னென்ன திருத்தணுமோ அதை நானே நேர்ல வந்து கவனிச்சு திருத்தி தாரன்..” என்று கூறி அந்த செக்கில் 2 லட்சம் காசு எழுதி அவரிடம் கையளித்தான்.
அதனை நன்றி ததும்பிய முகத்துடன் வேண்டி சிரித்தவாறு “நான் அப்புறம் கிளம்பட்டுமா தம்பி..?” என்று எழ,
“இருங்கம்மா ஏதாவது குடிச்சுட்டு போங்க..” என்று கூற, அவர் வேண்டாம் என்று மறுத்திட, காது கேளாதவன் போல எழுந்து உள்ளே சென்றான்.
ஸ்ரீ நிஷா அப்போதுதான் திறக்க மறுத்த கண்ணை மிகவும் சிரமப்பட்டு திறந்து பார்த்தாள். மெத்தையை விட்டு எழுந்ததும் ஏதோ உடல் கனமாக இருப்பது போல இருந்தது. தலையெல்லாம் சுற்றி எங்கோ கொண்டு போய் விழுத்துவது போல இருந்தது.
சுதாரித்துக் கொண்டு எழுந்து நிற்க முயற்சிக்க, அப்பொழுது தான் இரவு நடந்த விடயங்கள் அனைத்தும் அவளுக்கு ஞாபகத்திற்கு வந்தது.
எதிரில் கண்ணாடி தெரிய, அதன் அருகே சென்று, இது நான் தானா என்று கூட அவளுக்கு சிறு ஐயம் எழும் அளவுக்கு அவளது உடல் அலங்கோலமாக இருந்தது.
தனது கைகளாலேயே தனது முகத்தினை வருடி, அதில் பதிந்து இருக்கும் பல் தடங்களும், கை விரல்கள் அழுத்தமாகப் பதிந்ததால் ஏற்பட்ட தடயங்களும், உடல் அவளுக்கு ரீதியாகவும் மனரீதியாகவும் பெரும் அவஸ்தையை கொடுத்தது.
ஒரு இனம் புரியாத ஒவ்வாமை ஏற்பட, வாயை பொத்திக்கொண்டு அருகில் உள்ள குளியல் அறைக்குள் புகுந்தாள்.
அடிவயிற்றில் இருந்து குமட்டிக் கொண்டு வர அங்கேயே வாந்தியும் எடுத்தாள்.
அவளது உடலைக் காண அவளுக்கே அருவருப்பாக இருந்தது. உதட்டில் சிறு காயமும் கன்னத்தில் கழுத்தில் என தடயங்களும் கண்ணாடியில் பார்க்கப் பார்க்க அவளை புதைக்குழிக்குள் தள்ளுவது போல் இருந்தது.
அவளது உடலே அவளே தீண்ட தகாதது போல உணர்ந்தாள். அத்துடன் அவளது உடலே அவளுக்கு மிகவும் அருவருப்பாகவும், மிகவும் அழுக்காகவும் தெரிந்தது.
உடனே ஷவரைத் திறந்து நன்றாக நான்கு ஐந்து தடவை சோப் போட்டு தேய்க்க தேய்க்க இன்னும் உடலில் இருந்து அழுக்கு போகாதது போலவே இருந்தது.
நீர் பட்டதும் உடல் எங்கும் தீ சுட்டது போல எரியத் தொடங்கியது. நன்றாக குளித்து முடித்தவள் அப்போதுதான் உடை எடுத்து வராத தன்னுடைய மடத்தனத்தை உணர்ந்து கொண்டாள்.
வேறு வழி இல்லாமல் அருகே இருந்த அவனது டவளை எடுத்து உடலை சுற்றி கட்டிக்கொண்டு, மெது மெதுவாக இளஞ்செழியன் வந்து விடுவானோ என்ற பயத்துடன் கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள்.
கீழே யாரோ சோபாவில் அமர்ந்திருப்பது அப்போதுதான் அவளது கண்களுக்கு தெரிந்தது.
கதவை விட்டு சற்று நகர்ந்து வந்து பார்த்தால், “சரோஜா அம்மா.. சரோஜா அம்மாவா..?”,
அவளது ஆசிரமத்திற்கு பொறுப்பான சரோஜாதேவி அங்கு உட்கார்ந்து இருப்பதை பார்த்ததும் அவளுக்கு உடலில் புத்துணர்ச்சி பரவியது போல அவ்வளவு சந்தோஷம் உடலில் இருந்த களைப்பு அனைத்தும் அகன்று வானில் பறக்கும் புதிய பறவை போல சிறகடிக்கத் தொடங்கினாள்.
இத்தனை நாட்கள் இளஞ்செழியன் கொடுத்த வலிகளும்.. ஏன் நேற்று கூட அவன் அவளது வாழ்வில் மறக்க முடியாத வலியைத் தந்தது கூட அவளுக்கு அந்நேரம் அனைத்தும் மறந்து போனது.
‘என்னை கண்டுபிடித்து, அழைத்துப் போக சரோஜா அம்மா வந்து விட்டாங்க எப்படியாவது இந்த நரகத்திலிருந்து என்னை அழைத்து அழைத்து சென்றாள் போதும்..’ என்று அதீத சந்தோஷத்தில் துள்ளி குதித்தாள்.
உடனே பெரிய சத்தத்துடன் “சரோஜா அம்மா..” என்று அழைத்தாள்.
சரோஜாதேவி ஸ்ரீனிஷாவை இளஞ்செழியன் இடமிருந்து மீட்டுச் செல்வாளா..?
அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்