வஞ்சம் 17
ஸ்ரீ நிஷா முன்னே வந்து நின்றதும் அவனது நடை உடனே தடைப்பட்டது. அவன் மிகவும் ஆச்சரியமாக கண்கள் விரிய ஒரு நிமிடம் அவளையே கூர்ந்து கவனித்தான்.
அவனது உடல் வேரூன்றியது போல அவ்விடத்தை விட்டு நகரவே இல்லை. ஸ்ரீ நிஷாவுக்கு அவனது அசைவற்ற உடலை பார்த்ததும் உள்ளுக்குள் பிடிக்கும் இதயம் தாளம் தப்பி துடிப்பது போல் தோன்றியது.
‘ஆடு தானா வந்து தலையை கொடுத்துடுச்சு போல..’ என்று மனதுக்குள் ஸ்ரீநிஷா தன்னை நினைத்து தானே வருந்திக் கொண்டாள்.
அவனது திடீர் மாற்றத்துக்கு காரணம் என்ன காரணம் என்னவென்று புரியாமல் அவள் மனது அங்கும் இங்கும் அலைபாய்ந்தது. இப்படியே வெளியே சென்று விடுவோமா என்று அவள் அறையை விட்டு வெளியேற எண்ணி திரும்பிய வேளை,
இளஞ்செழியன் தளர்ந்த நடையுடன் அவள் அருகே வர, அவளோ அவனது செயலைப் பார்த்து பயத்துடன் பின் நகர்ந்தாள்.
அவள் அருகில் வந்து மண்டியிட்டு அவளது கால்களை கட்டி அணைத்து விசும்பி அளத்தொடங்கினான் இளஞ்செழியன்.
கண்ணிமைக்கும் நேரத்தில அவன் தனது கால்களை கட்டி அணைத்ததை கண்டு இவள் மிரண்டு தான் போனாள்.
“அச்சச்சோ என்ன காரியம் பண்றீங்க செழியன்.. கால விடுங்க ப்ளீஸ்.. என்றதும், அவனது அணைப்பு மேலும் இறுகத் தொடங்கியது.
அன்னையின் புடவையை ஸ்ரீ நிஷா உடுத்தியதால் அப்படியே தனது தாய் போலவே அவள் அவனது கண்களுக்கு காட்சியளித்தாள்.
ஆம் இவ்வளவு நாளும் யாருடைய பிரிவால் துயர் உற்றானோ.. யாரின் அன்பிற்காக ஏங்கினானோ.. யாரின் பிரிவால் தவித்தானோ.. அவரே தன் கண் முன்னால் வந்து நின்றால் சும்மா இருப்பானா..?
அனைத்து பிரச்சினைகளையும் மனதில் உள்ள அனைத்து துன்பத்தையும் மறந்து, மண்டிவிட்டபடி சீரீசாவை நிமிர்ந்து பார்த்தான் அந்த வதனத்தில் எதனைக் கண்டானோ தெரியவில்லை எழுந்து நின்று கன்னத்தை கைகளில் ஏந்தி “அ… அ… அம்மா” என்றொரு வார்த்தையை தட்டு தடுமாறி உதித்தான்.
அக்கணமே ஸ்ரீ நிஷாவின் மனம் மெழுகாக உருகியது. தாயின் அன்பை எதிர்பார்த்து இளஞ்செழியன் தவிப்பது அவனது கண்களில் அப்பட்டமாக விளங்கியது.
தாய் இல்லாமல் இனிய தாயின் பாசத்திற்கு ஏங்கித் தவிப்பது ஸ்ரீநிஷாவுக்கு நன்கு புரிந்தது.
ஏனென்றால் ஸ்ரீ நிஷாவும் தாயின் அன்பின்றி வளர்ந்த பெண் தானே.. அவளுக்கும் தாயின் அன்பு பற்றிய ஏக்கம், தவிப்பு மனதில் இருக்கத்தானே செய்யும் அந்த ஏக்கத்தின் தாக்கம் அவளுக்கும் புரிந்தது தானே..! அதனால் அவனது வேதனையை அவள் நன்கு புரிந்து கொண்டாள்.
தனது தாயின் புடவையை உடுத்தியதால் தன்னை தாயென நினைத்துக் கொண்டான் என்பது அப்போதுதான் அவளுக்கு புரிந்தது.
அப்படியே அவளை இறுக அணைத்துக் கொள்ள இடைவிடாமல் கண்களில் இருந்து நீர் பெருகியது.
இறுக்கி அணைக்கும் போது முதலில் தடுமாறித் திமிறிய ஸ்ரீ நிஷா பின்பு எதுவும் கூறாமல் அப்படியே இரும்பு போல ஆசையாமல் நின்றாள்.
அவனது அனைப்பே கூறியது பிரிவால் அவன் படும் துயரை ‘இனி என்னை எங்கும் விட்டு நீ அகல முடியாது..’ என்பதைப் போல இறுக்கி அணைத்து இருந்தான் இளஞ்செழியன்.
சிறிது நேரத்தில் அவனது உடல் குலுங்கத் தொடங்கியது அதன் பின்பு தான் அவன் அழுகிறான் என்று தெரிந்தது.
அவனது வாயிலிருந்து ஒரே ஒரு வார்த்தை தான் மீண்டும் வேண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தது.
“அ..அம்மா அம்மா..” என்று அந்த வார்த்தை மீண்டும் மீண்டும் கூறி நான்கு வயது சிறுபிள்ளை போல விம்மி விம்மி அழுது கொண்டே இருந்தான்.
அவனது நெஞ்சில் சுமந்திருந்த அனைத்து வேதனைகளும் கண்ணீராய் வெளிப்பட்டது.
தாயை பிரிந்த பிள்ளை தாயை கண்டவுடன் அழுவது போல இளஞ்செழியன் மிகவும் வேதனையில் அழுது கரைந்தான்.
அவனது அழுகை எல்லை இல்லாததாக தொடர்ந்து கொண்டே போக ஒரு கட்டத்துக்கு மேல் இயலாத ஸ்ரீநிஷா அவனைத் தழுவி முதுகில் தனது கரங்களால் தடவி அவனை ஆறுதல் படுத்த முயற்சி செய்தாள்.
அவளது தொடுகை அவனுக்கு மிகப்பெரிய கொழு கொம்பாக அந்நேரம் விளங்கியது.
இருந்தும் பயனில்லை. அப்படியே அவன் அழுது கொண்டே இருக்க அவனை கட்டிலில் அமர வைத்து,
இளஞ்செழியன் டோண்ட் வொர்ரி.. என்ன இது சின்ன புள்ளத்தனமான அழுது கொண்டிருக்கிறீங்க, அம்மா எப்பவும் உங்களோட தான் இருக்காங்க…” என்று கூறியதும் உடனே அவளை தலை நிமிர்ந்து பார்த்தான் இளஞ்செழியன்.
அப்போதுதான் அவனுக்கு சுயமே வந்தது. இரு கைகளாலும் கண்களை நன்றாக துடைத்து விட்டு யார் என்று கண்களை சிமிட்டி சிமிட்டி கூர்ந்து கவனித்தான்.
“ஸ்ரீ… அப்ப அ… அம்… அம்மா நீ… நீ… நீ… நீ… எப்படி இங்க..?” என்று அதிர்ச்சியுடன் எழுந்து நின்றான் இளஞ்செழியன்.
“யாரோ தலையில் பெரிய பாறை ஒன்றை கொண்டு வந்து போட்டது போல தலை வலிக்கத் தொடங்கியது. இரு கைகளால் தலையை அழுத்தி பிடித்தபடி மீண்டும் மெத்தையில் தொப்பென அமர்ந்து விட்டான்.
ஸ்ரீ நிஷாவோ எதுவும் புரியாமல் “இளஞ்செழியன்….” என அழைத்தவுடன் அவளது கைகளை உதறித் தள்ளி விட்டு எழுந்து நின்றவன் சிறு தள்ளாட்டத்துடன், அனைத்தையும் சிந்தித்துப் பார்த்தான்.
“அப்போ அன்னையின் வடிவில் தெரிந்தது ஸ்ரீநிஷா தானா..? இந்த துரோகியா..?” என்று எண்ணியவனது மனம் கோவத்தில் ஏகத்துக்கும் எகிறியது.
அது அன்னை இல்லை என்ற ஏமாற்றம் வேறு.. அன்னையாக நினைத்து இவள் முன் அழுது விட்டோம் என்ற வெட்கம் வேறு… இவளது கால்களையா கட்டி அணைத்தோம் என்ற அவமானம் வேறு… என்றவாறு அவனது உணர்ச்சிகள் அவள் மீது கோபத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது.
‘அது தனது அன்னையின் புடவை தானே..! யாரைக் கேட்டு அதனை எடுத்தாள்..? அதனை கேட்காமல் எவ்வாறு எடுக்கலாம்.. அந்தப் புடவையை தொடுவதற்கு கூட இவளுக்கு அருகதை இல்லை… அதனை கட்டுவதற்கு யார் இவளுக்கு அதிகாரம் கொடுத்தது..?’ என்று கோபம் அதிகரிக்க,
“ஏய்..! யாரக் கேட்டுடி என்னோட அம்மாட புடவைய எடுத்துக் கட்டின.. மரியாதை போய் கழட்டி வைச்சிரு இல்லன்னா இங்க நடக்கிறது வேற உடனே போய் டிரஸ்ச மாத்திட்டு வா..” என்று கர்ச்சித்தான் இளஞ்செழியன்.
அவன் அவ்வாறு பேசவும் ஸ்ரீ நிஷாவுக்கு இவனது செயலைப் பார்த்து கோபம் வந்தது.
“வேற டிரஸ் இல்ல அதனால தான் இதை எடுத்து உடுத்திக்கிட்டேன்…” என்று சர்வ சாதாரணமாக கூறினாள்.
“நீ முதல் போய் கழட்டு நான் உனக்கு வேற புது டிரஸ் வாங்கி வந்து தாரேன் அம்மாட புடவையை முதல் கழட்டு..” என்றதும்,
“நீங்க வாங்கித் தர்ற அரைகுறை டிரஸ் எல்லாம் என்னால போட முடியாது..” என்று முகத்தில் அடித்தால் போல பட படவென கூறினாள்.
அவளது பேச்சு ஏனோ இளஞ்செழியனுக்கு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் இருந்தது.
“சரி.. டிரஸ் எடுக்க உன்னையும் கூட்டிப் போறேன் நீயே வந்து டிரஸ் எடு முதல் இந்த டிரஸ்ஸ போய் மாத்து…”
“மாத்துறதுக்கு ஒன்னும் இல்ல..” என்று சினத்துடன் பதில் கூறினாள்.
“எனக்கு தெரியாது ஸ்ரீநிஷா நீ இப்ப இந்த டிரஸ்ச நீ கழட்டனும் அவ்வளவுதான்..”
“என்னால முடியாது..”
“உன்னட்ட நான் பெர்மிசன் கேட்கல இது என்னோட ஆர்டர்.. நீ கழட்டுன்னா கழட்டத்தான் வேணும்..”
“கொஞ்சம் கூட உங்களுக்கு அறிவு இருக்கா இல்லையான்னு எனக்கு தெரியல.. நான் சொல்றன் தானே என்கிட்ட இன்னொரு டிரஸ் இல்லன்னு..”
“இல்ல ஒரு நிமிஷம் கூட நீ அவங்கட டிரஸ் போடக்கூடாது கழட்டு..”
“மாட்டேன்..”
“இப்போ கழட்ட போறியா இல்லையா..?”
“என்னால முடியாது நீங்க செய்றத செஞ்சுக்கோங்க..”
“எங்க அம்மாட கால் தூசிக்கு நீ வருவியா எங்க அம்மாட புடவையை தொட்டுப் பார்க்க கூட உனக்கு அருகதை இல்லை” என்று கூறியதும் அவளுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்தது என்றே தெரியவில்லை.
உடனே இளஞ்செழியன் அருகில் வந்து அவனது சட்டைக் காலரை பிடித்து,
“யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொன்னீங்க.. ஒரு பெண்ணை கூட்டிட்டு வந்து பலவந்தமா நடந்துக்கிட்டது மட்டும் இல்லாம.. நீங்க எல்லாம் வந்து அருகதைய பத்தி பேசுறீங்க என… அருகதை பற்றி கதைக்கவே உங்களுக்கு தகுதி இல்லை… முதல் உங்கள திருத்திக் கொள்ளுங்க.. நீங்க பெரிய நல்லவர் மாதிரி என்ன பேசுறீங்க..
நல்ல பழக்கவழக்கம் என்றாலே என்னன்னு தெரியாத ஆள் தானே நீங்க.. அம்மா.. அம்மா.. என்று உருகுறீங்களே.. இதுவா உங்க அம்மா சொல்லித் தந்த பழக்கம்… ஒரு பெண்ணை பலாத்காரம் பண்றது தான் சிறந்த வளர்ப்பு என..” ஸ்ரீ நிஷா கூறியதும் அவனது அசுரமுகம் வெளிப்பட்டது.
பாவம் பெண் அவளுக்கு தெரியவில்லை அவனது மற்றும் ஒரு முகம்…
இளஞ்செழியனின் அதிரடி ஸ்டார்ட்..💗🥰💗