வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! – 18

4.7
(17)

வஞ்சம் 18

 

எதைப் பற்றி கூறினால் இளஞ்செழியன் மிகவும் கோபப்படுவானோ அதனையே அவனது பலவீனம் என எண்ணி ஸ்ரீஷா மீண்டும் அவனது அன்னை பற்றி அவதூறாகப் பேசத் தொடங்கினாள்.

அதனை சிறிது கூட பொறுத்துக் கொள்ள முடியாத இளஞ்செழியன் அவளை கொன்று போடும் அளவுக்கு கோபம் எழுந்திட முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு,

“ஸ்ரீ உனக்கு திரும்பவும் சொல்றேன் எங்க அம்மாவ பத்தி பேசுறதுக்கு உனக்கு எந்த தகுதியும் இல்லை…”

 

“நான் அப்படித்தான் பேசுவேன் உங்க அம்மா உங்கள ஒழுங்கா வளர்த்திருந்தா நீங்க இப்படி ஒரு பெண்ணோட நடந்து கொள்வீர்களா..?”

 

“ஸ்ரீ வாய மூடு..”

 

“நான் அப்படித்தான் பேசுவேன்..”

 

“ஸ்ரீ வாய மூடு..” என்று கூறியவன் அருகில் உள்ள கதிரையை எட்டி காலால் உதைந்தான். அவன் உதைந்த வேகத்திற்கு அது சுவற்றில் மோதி கீழே விழுந்தது.

 

“என்னால வாய மூட முடியாது நான் அப்படித்தான் திருப்பி திருப்பி பேசுவேன்.. உங்க அம்….” என்று அவள் வாய் திறக்கவே பாய்ந்து அவன் அவளது கன்னத்தில் ஓங்கி அறைந்து இருந்தான்.

 

“என்னடி சொன்ன என்ன சொன்ன உன்னை விட எங்க அம்மா உத்தமி தான்டி.. அவங்க தெய்வத்துக்கு சமம்… உன்னை மாதிரி நம்ப வச்சு கழுத்தை அறுக்கிறவங்க இல்ல அவங்க, நம்பிக்கை துரோகி..” என்று கர்ஜித்தான்.

 

அறைந்த வேகத்தில் கீழே விழுந்தவள் கன்னத்தை கையால் பற்றிக் கொண்டு, எழுந்து அவனை நிமிர்ந்து பார்த்து *என் மேல வீண் பழியை சுமத்தி.. நீங்க செய்ததெல்லாம் நியாயப்படுத்தாதீங்க…” என்று அவள் சீறினாள்.

 

அவளது சீற்றத்துடன் குரலை உயர்த்தி பேசியது அவனுக்கு மேலும் கோபத்தை அதிகரிக்கவே செய்தது.

 

அதற்கு மேல் பொறுக்க முடியாத இளஞ்செழியன் அவள் அருகே சென்று புடவையை இழுக்க இழுத்த வேகத்தில் சுழன்று போய் கீழே விழுந்தாள்.

 

இதனை சிறிதும் எதிர்பார்க்காத ஸ்ரீ நிஷா புடவையின் மறுமுனையை பற்றிக்கொண்டு,

“என்ன காரியம் பண்றீங்க..?” என்று புடவை பிடித்தபடி கண்கள் விரிய அச்சத்துடன் கூறினாள்.

 

அந்நேரம் அவளது அலறல் காதில் விழாதது போல இளஞ்செழியன் தன் வேலையிலேயே குறியாக இருந்தான்.

 

அவளது புடவையை முழுதாக உறுவி அதனை எடுத்து தனது அம்மாவின் அலுமாரிக்குள் வைத்துவிட்டு திரும்ப ஸ்ரீநிஷாவோ கோபக்கனல் பொங்க கண்களில் ரௌத்திரம் தாண்டவமாட அவன் முன்பு வந்து நின்று அவனது சட்டை காலரை பிடித்து,

“நீ எல்லாம் ஒரு மனுசனா..? ச்சே..” என்று கேட்க கையைத் தட்டிவிட்டு,

 

“நான் மனுஷன் இல்ல மிருகம்ன்னே வச்சுக்கோ இங்கிருந்து போயிடு என் கண்ணு முன்னாடி நிக்காத..” என்று எச்சரித்தான்.

 

அவளோ அவனது சட்டை காலரை திரும்பவும் பிடித்து,

“ஏய்.. என்ன இப்படி சித்திரவதை பண்றதுக்கு என்ன ஒரேடியா கொண்ணிரு.. நான் என்ன பாவம் செய்தேன்.. என்ன விட்டுடு நான் அப்படியே செத்து போயிர்றன் என்னை விடு தயவுசெய்து என்னை விட்டுவிடு..” என்று கூறி கதறினாள்.

 

அவளின் கதறல் ஒவ்வொன்றும் அவனுக்கு மிகவும் இன்பமாகவே இருந்தது அவன் அதை பார்த்து ஏளனச் சிரிப்பு ஒன்றை உதிர்த்தான்.

 

அவனது சிரிப்பை பார்த்த ஶ்ரீநிஷா அவனது கன்னம் சிவக்க ஓங்கி அறைந்திருந்தாள்.

 

அவனுக்கு சுற்றம் மறந்து அப்படியே திகைத்துப் போய் நின்றான்.

“என்ன தைரியம் இருந்தா எனக்கே அறைந்து இருப்பே..” என்று கூறியபடி அவளை கட்டில் தள்ளி அவள் மேல் பாய்ந்து வலுக்கட்டாயமாக அவளது உடலில் உள்ள உடைகளை ஒவ்வொன்றாக பிய்த்து ஏறிந்தான்.

 

இளஞ்செழியனுக்கு எதில் பலவீனம் என்று ஸ்ரீநிஷா அறிந்தாலோ அதுவே அவனது கோபத்தை தூண்டும் ஊன்றுகோலாக இருந்தது. அதனைப் போல ஶ்ரீநிஷாவுக்கு எது பலவீனம் என்று இளஞ்செழியன் அறிந்து வைத்திருந்தானோ அதன் மூலமாகவே அவளைத் தாக்கத் தொடங்கினான்.

 

அதுதான் அவளது கற்பை சூறையாடி அவளை பழிவாங்கும் எண்ணம் கொண்டு அவள் மீது படர்ந்தவன் அவளது பெண்மையை களவாட எண்ணம் கொண்டு ஆக்ரோஷமாக தனது செயலைத் தொடங்கினான்.

இரண்டாவது முறையும் அவளது உள்ளமும் உடலும் குலுங்கத் தொடங்கியது வேதனையிலும் துன்பத்திலும்.

 

இதனை எதிர்பார்த்த இளஞ்செழியன் அவளது கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை ஆனந்தத்துடன் இரசித்தான். அவளது கண்ணீரை தனது இதழ்களால் வருடிக் கொடுத்தவன் மேலும் முன்னேறி தனது ஆதரங்களால் அவளது உடலில் உள்ள மேடு பள்ளங்கள் அனைத்தையும் அளந்து அதனை கடித்து காயப்படுத்தினான்.

 

அவனது வன்மையான தீண்டல்களும் அழுத்தமான பிடியும் அவளை மேலும் மேலும் வருத்திக் கொண்டிருந்தது. அவளது அழுகை, கதறல் எதுவுமே அவனது காதில் விழவே இல்லை. அவனது கோபம் தீரும் வரையும் அவளை மீண்டும் மீண்டும் நாடினான்.

 

எத்தனை தடவை அவளை நாடினான் என்று அவனுக்கும் தெரியவில்லை அவளுக்கும் தெரியவில்லை உடல் சோர்வடைந்து களைப்புடன் அப்படியே அவள் மீது விழுந்து உறங்கியும் போனான்.

 

தன் மீது கிடக்கும் இளஞ்செழியனை ஒரு அருவருப்புடன் பார்த்த ஸ்ரீ நிஷா தனது வாழ்வை தானே வெறுத்தாள்.

 

இதற்கு மேலும் உயிர் வாழ வேண்டுமா என்ற எண்ணம் கூட அவளுக்கு எழுந்தது.

இளஞ்செழியன் எதனை திரும்பவும் ஸ்ரீ நிஷாவுக்கு செய்யவே கூடாது எனத் தள்ளி இருந்தானோ அதனை மீண்டும் ஸ்ரீ நிஷா செய்ய வைத்து விட்டாள்.

 

அவனது கோபம் கட்டுக்கடங்காமல் அவள் எதனை செய்தால் துன்பப்படுவாள், எதில் அதிகம் வேதனை அடைவாள் என்ற எண்ணமே அவனது கோபம் கொண்ட குணம் தேடி அறிந்தது.

 

அந்தக் கோபம் தான் அவளது கற்பை சூறையாடத் தூண்டியது. அதில் இளஞ்செழியனுக்கு சிறிது கூட மோகம் இல்லை.

 

அதன் பின்பு வந்த நாட்களிலும் அவளை துன்புறுத்த வேண்டும், கதற வைக்க வேண்டும், அவள் வேதனைப் பட வேண்டும் என்பதற்காகவே அவளது கற்பை ஒரு பகடைக் காயாகப் பயன்படுத்தி அவன் அவள் செய்த தவறை மறக்க முடியாமல் பழி வெறியை மனதில் சுமந்து கொண்டு ஒவ்வொரு நாளும் அவளை கட்டிலில் நாடினான்.

 

அவள் ஒவ்வொரு நாளும் அவனது சித்திரவதையை அனுபவித்து முடியாமல் தவித்துப் போனாள்.

தினமும் இரவு அவளை நாடி அவனுக்கு அது ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது.

இப்போதெல்லாம் ஸ்ரீ நிஷா இல்லாவிட்டால் அவனுக்கு உறக்கமே வருவதில்லை. அவளை நாடாவிட்டாலும் அவளது அருகாமை அவனுக்கு மிகவும் பிடித்தமானதாக மாறிவிட்டது.

 

அது அவனுக்கே தெரியவில்லை. அவளை துன்புறுத்துவதாக நினைத்து அவன் அவள் மீது வைத்த அன்பு கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படத் தொடங்கியது.

 

அவனது தீண்டல்கள் அனைத்தும் வன்மையிலிருந்து மென்மையாக மாறத் தொடங்கியது. அது அவனுக்கே புரியவில்லை.

ஸ்ரீநிஷாவுக்கு அந்த மாற்றம் நன்கு தெரிந்தது.

பெரிதாக அவளுக்கு வேறுபாடு தெரியவில்லை. முதலில் அவனது தொடுகை மிகவும் உடல் வேதனையை உண்டு பண்ணும்.

மனவேதனையுடன் ஒப்பிடும்போது அது அவளுக்கு பெரிதாகப்படவில்லை.

இப்போதும் அதே போலவே இருந்தாலும் அவள் அந்த விடயத்திற்கு பழக்கப்பட்டு இருந்தவள் என்பதால் அவளுக்கு அதுவும் நரகமாகத்தான் தெரிந்தது.

மீண்டும் மீண்டும் இவ்வாறு இளஞ்செழியன் செய்வதைப் பார்த்து எத்தனை முறை தற்கொலை செய்து கொள்வோமா என்றெல்லாம் அவளுக்குத் தோன்றியது.

 

இருந்தும் அவளால் அந்த முடிவை எடுக்க தைரியத்துக்குத்தான் மிகவும் பஞ்சமாக இருந்தது. தன்னைத் தானே நொந்து கொண்டு எப்போதும் மேலே வெறித்துப் பார்த்தபடியே இருப்பாள்.

 

இளஞ்செழியன் இந்த மாறுபட்ட முகம் அவளுக்கு பெருத்த இடியாகவே இருந்தது. கிஞ்சித்தும் இவன் இவ்வாறு தன்னிடம் நடந்து கொள்வான் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.

 

அவனது கோர முகம், கோரத்தாண்டவம் அவளுக்கு தாங்க முடியாத துன்பத்தை அள்ளித் தெளித்தது.

 

ஒரு நாள் இளஞ்செழியன் அவளை நாடிவிட்டு அவள் மீது படர்ந்தபடியே உறங்கி விட்டான். மேலே படர்ந்து கிடக்கும் அவனை அருகில் மெதுவாகத் தள்ளி நகர்த்தி விட்டு எழுந்து அருகில் உள்ள அவளது ஆடையை எடுத்து உடுத்திக் கொண்டு பால்கனி பக்கம் சென்றாள்.

 

அங்கிருந்து அந்த நிலாவினை பார்த்து ஓ என கதறி அழத் தொடங்கினாள். அவளது கதறல் அந்த வெண்ணிலாவுக்காவது எட்டுமா என்று அவளுக்குத் தெரியவில்லை.

 

மீண்டும் துணை எதுவுமின்றி தனது மனம் ஆறுதலுக்கும், வேதனையை கொட்டுவதற்கும் அலைந்து திரிய அந்த சந்திரனை பார்த்தபடியே அப்படியே வெறுத்து நின்றாள்.

 

அதன் பின் ஏதோ ஒரு முடிவு எடுத்தவளாக மெதுவாக முன்னேறி கீழ் இருக்கும் நிலத்தினை கண்கள் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவள், அப்படியே கால்களை மேலே வைத்து பால் கனி மேல் ஏறி நின்றாள்.

 

கீழே பார்க்க மிகவும் பயமாகவும் உயரமாகவும் இருந்தது. கண்களை இறுக மூடிக்கொண்டு இருக்கையையும் நெஞ்சில் வைத்துக் கொண்டு,

“என்னை ஆட்கொள்ளும் இறைவா..! அனைத்திற்கும் நன்றி..” என்று கூறி கொண்டு அவளது கால்களில் ஒன்று முன்னே அந்தரத்தில் தூக்கி வண்ணம் நின்றது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!