வஞ்சம் 20
இளஞ்செழியன் அழைத்தவுடன் வந்திருந்த அவனது குடும்பம் மருத்துவரான வானதி வந்த உடனே ஸ்ரீ நிஷாவை பார்த்து இளஞ்செழியன் மீது கேள்விப் பார்வை ஒன்றை விழுத்தினார்.
அவரின் பார்வையின் அர்த்தத்தை உணர்ந்த இளஞ்செழியன் அதனை தவிர்த்து விட்டு ஸ்ரீ நிஷாவுக்கு என்னவாயிற்று என்பதை அறிவதிலேயே ஆர்வமாக இருந்தான்.
ஸ்ரீநிஷாவின் நாடித்துடிப்பை சோதித்துப் பார்த்துவிட்டு அவளது கண்களையும் விரித்து சோதனை செய்தார்.
இளஞ்செழியன் நடப்பதை அனைத்தையும் அமைதியாக இருந்து பார்த்துக் கொண்டிருக்க, அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு அருகில் வந்த வானதி,
“இந்த பொண்ணு யாரு..?” என்று கேட்டார்.
“என்ன விஷயம் ஏதாவது ப்ராப்ளமா ஆன்ட்டி.. ஹாஸ்பிடல் கொண்டு போகனுமா சொல்லுங்க இப்பவே கூட்டிட்டு வாரேன் ..”
“நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லை இளஞ்செழியன் ..”
“ஆன்ட்டி..”
“நான் உனக்கு ஆண்டி தான் சொல்லு யார் இது ..?”
“முதல் அவளுக்கு என்ன ஆச்சு என்று சொல்லுங்க நான் சொல்றேன் ..”
அவனது பிடிவாத குணத்தை அறிந்த வானதி,
“சீ ஸ் பிரக்னன்ட்..” என்று எந்தச் சலனமும் இன்றி இளஞ்செழியனின் தலையில் ஒரு இடியை இறக்கினார்.
அவனுக்கு அனைத்து விதமான உணர்வுகளும் ஒரு கணத்தில் தோன்றி மறைந்தன.
முதலில் சந்தோசம், தான் தந்தையாகப் போகின்றேன் என்று, பின்பு ஸ்ரீ ஸ்ரீனிஷாவின் விருப்பமின்றி இது நடந்ததால் அவனுக்கு அதனை எண்ணித் துன்பம் வேறு, ஏமாற்றம், ஸ்ரீ நிஷாவிடம் இதனை எவ்வாறு கூறுவது அவளை எவ்வாறு சமாளிப்பது என்ற சலிப்பு வேறு,
தனது ரத்தத்தில் உருவான உயிர் என்றதும் தனி உற்சாகம் வேறு, இவள் மூலமாகவா என்ற எண்ணம் தோன்ற சோகம் வேறு, அந்த சிசுவின் முகம் எவ்வாறு இருக்கும் என்று ஊகிக்க அவனுக்கு அழுகையே வந்து விட்டது.
இவ்வாறு மாறி மாறி முகத்தில் அனைத்து உணர்வுகளும் வந்து வந்து சென்றன .
அதன் பின்பு வானதியை பார்த்து, திமிராக
“சீஸ் மை வைஃப்..” என்று கூறினான்.
“ஓஹ் அப்படியா..? கழுத்துல தாலியை காணும்…”
“நாங்க பதிவுத் திருமணம் செய்து கொண்டோம்.. அம்மா இறந்து இன்னும் ஒரு வருஷம் ஆகல தானே அதனால நாங்க இன்னும் தாலி கட்டல..”
வானதி இவ்வாறு ஒவ்வொன்றையும் கேட்டுக் கொண்டிருக்க அருகில் இருந்த ராமையாவுக்கோ சித்தம் கலங்கியது.
முதலில் ஸ்ரீநிஷா கர்ப்பமாக உள்ளார் என்பதை கேட்ட உடனே ராமையா தலையில் கை வைக்காத குறையாக அப்படியே அதிர்ச்சியில் நின்று இருக்க, அடுத்தடுத்து வானதி கேட்கும் கேள்விகளுக்கு இளஞ்செழியன் பொய்களை அள்ளி விட இதனை திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார் ராமய்யா.
“எனிவே கங்கிராஜுலேஷன் இளஞ்செழியன். த்ரீ மன்த்ஸ்க்கு கேர்ஃபுல்லா இருக்கணும்.. கொஞ்சம் வீக்கா இருக்காங்க நான் கொஞ்சம் மெடிசின் எழுதி தரேன் அதை ஒரு நாளைக்கு மூணு நேரம் கொடுங்க நல்லா ஃப்ரூட்ஸ் சாப்பிடணும். மாசத்துக்கு ஒரு தடவை கிளினிக் கூட்டி போகணும் ஸ்கேன் பண்ணி பாக்கணும்… ஓகே யா… ” என்று ஸ்ரீ நிஷாவுக்கு கொடுக்க வேண்டிய மருந்துகளை எழுதிக் கொடுத்துவிட்டு கிளம்பினார் வானதி.
இவை அனைத்தையும் பார்த்து வெறுப்புடன் அவ்விடத்தை விட்டு நகர்ந்தார் ராமையா.
சிறிது நேரத்தில் ஸ்ரீ நிஷா கண் விழித்துப் பார்க்கும் போது அருகில் அவளைப் பார்த்தபடியே இளஞ்செழியன் அமர்ந்திருந்தான்.
அவனது கண்களில் என்றும் இல்லாத ஒரு அன்பும், கருணையும் அவளுக்கு நன்கு விளங்கியது.
மெதுவாக எழுந்து அமர அருகிலுள்ள ஜூஸை எடுத்து ஸ்ரீ நிஷாவுக்கு கொடுத்து “குடி..” என்று கூறினான்.
அவளோ ஒன்றும் புரியாமல் ‘என்ன இன்று இவ்வளவு பாசமாக இருக்கிறான்..’ என்ற எண்ணத்துடன்,
“எனக்கு என்ன ஆச்சு நான் எப்படி இங்க வந்தேன்..?” என்று அவன் கொடுத்த ஜூசை வாங்காமல் அவனிடம் கேள்வி கேட்க,
“எல்லாம் சொல்றேன் முதல்ல இதக் குடி..”
“இல்ல சொல்லுங்க எனக்கு என்ன ஆச்சு நான் சாகப் போறேனா உடம்புல ஏதாவது பிரச்சனையா எனக்கு கேன்சரா..? அப்பவும் நினைச்சேன் காலைல பிரஸ் பண்ணும் போது வாயிலிருந்து ரத்த ரத்தமா வந்துச்சு நான் சாகப் போறேன்..”
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல..”
“இல்ல நீங்க சொல்லுங்க ஏதோ இருக்கு என் மேல் ஒரே கோவமா இருக்குற நீங்க இப்ப மட்டும் ஜூஸை கொண்டு வந்து தாரீங்க ஏதோ இருக்கு சொல்லுங்க..”
“ஐயோ ஒன்னும் இல்லடி..”
“எனக்கு தலை எல்லாம் சுத்துது என்னவோல்லாம் பண்ணுது சொல்லுங்க..”
“இத குடி முதல் சொல்றேன்..”
“குடிச்சா சொல்லுவீங்க தானே..”
“ம்..” என்றதும் வாங்கி யூசை வேகமாக குடித்தாள். குடித்த கையுடன் அவளுக்கு குமட்டிக் கொண்டு வாந்தி வர ஓடிச்சென்று குளியலறைக்குள் வாந்தி எடுத்தாள்.
அதன் பின்பு மெதுவாக வந்து மெத்தையிலிருந்து,
“அப்பவே நான் சொன்னேன் வேணாம்னு நீங்க கேட்டீங்களா சரி எனக்கு என்னன்னு இப்போவாது சொல்லுங்க..”
“நீ.. நீ.. பிர..பிரக்னண்டா இருக்கா..” என்று எந்த உணர்ச்சியையும் வெளிக் காட்டாமல் முகத்தில் அடித்தால் போல் கூறினான்.
அவளுக்கோ சுற்றும் உலகம் நின்றது போல இருந்தது. அப்படியே அசைவற்று அதே இடத்தில் இருந்தவள். சிந்தனைகள் எங்கெங்கோ செல்ல, “ஓ..” எனக் கதறி அழத் தொடங்கினாள்.
அவளது சிந்தனைகள் அங்கும் இங்கும் அலைபாயத் தொடங்கின.
எதை நினைத்து மனதை நொந்து கொள்வது.
‘எனக்கே வாழப் பிடிக்கவில்லை இதில் இன்னொரு ஜீவனையும் நான் சுமப்பதா..? என்று வருந்தத் தொடங்கியவள், இவ்வாறு திருமணம் முடிக்காமல் ஒரு குழந்தையை சுமப்பது இந்த உலகில் சாதாரணமான காரியமா? எத்தனை பேர் எவ்வாறு கதைப்பர்.
கழுத்தில் தாலி இல்லை வயிற்றில் பிள்ளையோடு இருக்கிறாய்..? என் பிள்ளையின் எதிர்காலம்..’ என்று அனைத்தும் யோசித்து அவளது மனம் நொறுங்கிப் போனது.
‘என் வாழ்க்கை கெட்டது மட்டுமல்லாமல் என் குழந்தையின் வாழ்க்கையும் கெட வேண்டுமா..?’ என்று அவளது சிந்தனைப் போக்கு எங்கெங்கோ சென்றது.
கண்களில் இருந்து நீர் பெருக அதனை வெளி விடாமல் உள்ளே அடக்கிக் கொண்டவள், சிறு தைரியத்துடன் மெத்தை விட்டு எழுந்து நின்று,
“எனக்கு இந்தக் குழந்தை வேண்டாம்..” என்று இளஞ்செழியனின் கண்களைப் பார்த்து துணிவோடு கூறினாள்.
ஸ்ரீ நிஷா கூறிய வார்த்தைகள் இளஞ்செழியனின் காதில் நன்றாக விழுந்தது.
இருந்தும் ஒரு சிசுவை அழிக்கும் அளவிற்கு கல்நெஞ்சக்காரியாக ஸ்ரீநிஷா இருக்க மாட்டாள் என்ற நம்பிக்கையில் அவன் மீண்டும் கூறியது யாதென வினவினான்.
“நான் அபார்ஷன் பண்ணிக்க போறேன்..”
அதனை கேட்டதும் ஸ்ரீனிஷா மீது அதிகபட்ச வெறுப்பே இளஞ்செழியனுக்கு முகிழ்த்தது.
அவளது இந்த கொடிய வார்த்தைகள் அவனுக்கு நெஞ்சில் நஞ்சை விதைத்தது போல இருந்தது.
“உனக்கு என்ன லூசா பிடிச்சிருக்கு.. அந்த புள்ள என்ன பாவம் செய்தது ஒரு உயிர் அளிக்கிற அளவுக்கு நீ கொடுமக்காரியா..?”
“பின்னே என்ன என்ன செய்ய சொல்றீங்க என்னோட வாழ்க்கைய அழிச்சது மட்டுமல்லாமல் என்னோட குழந்தைட வாழ்க்கையையும் அழிக்கப் போறீங்களா..? என்னால அந்தக் குழந்தை கஷ்டத்த அனுபவிக்கிறது பார்க்க முடியாது..”
“அது என்னோட குழந்தை நான் அழிக்க விட மாட்டேன்..”
“உங்களோட குழந்தைன்னு உங்களுக்கும் எனக்கும் மட்டும் தான் தெரியும். இந்த ஊரு, உலகத்துக்கு தாலி இல்லாம ஒரு பெண் குழந்தையை சுமக்கிறது. இந்த சமூகத்துல அதுக்கு என்ன பெயர் வைத்து கூப்பிடுவாங்கன்னு உங்களுக்குத் தெரியுமா..?”
“அத பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்லை என்னோட குழந்தையை பெத்து என்கிட்ட கொடுத்துட்டு நீ உன் வேலையை பார்த்துட்டு போ..” என்றதும் அவளது இதயத்தை கிழித்து நாலா பக்கமும் எறிந்தது போல் இருந்தது.
“அப்போ என்ன பாத்தா குழந்தை பெத்து கொடுக்கிற மிஷின் மாதிரி உங்களுக்குத் தெரியுதா? எனக்குன்னு அன்பு, பாசம் என்ற எந்த உணர்ச்சிகளும் இல்லையா..?”
“ஐ டோன்ட் கேர் அபௌட் திஸ்..”என்று கூறிவிட்டு அவன் அவ்விடத்தை விட்டு வேகமாக வெளியேறி விட்டான்.
இவளுக்கு நெஞ்சு அடைப்பது போல இருந்தது. அவ்வளவு துன்பங்களும் அவளது மனதில் அடைந்திருக்க அவளுக்கு மூச்சு விடவே கஷ்டமாக இருந்தது. அப்படியே மெத்தையில் இருந்தபடியே சரிந்து விழுந்து அழுதழுது அவ்வாறே தன்னை7றந்து தூங்கிவிட்டாள்.
இவ்வாறு மாதங்கள் கடந்து சென்றன.
இளஞ்செழியன் அவளுக்குத் தேவையான உணவையும், பழங்களையும் வீட்டிற்கே கொண்டு வந்து குவித்தான்.
மாத மாதம் பரிசோதனைக்காக வானதியை வீட்டிற்கு அழைத்து அவளுக்கு பரிசோதனையும் பார்த்தான்.
மூன்று மாதங்களின் பின் சிறிது மேடிட்ட வயிற்றுடன் எழுந்து வீட்டில் தன் கண்முன்னே உலாவித் திரிபவளை பார்த்து அவனுக்கு உள்ளம் பூரிப்படைந்தது.
அந்த வயிற்றினைத் தொட்டு தடவி சிசுவின் இருப்பை அறிய ஆவலாக இருந்தது இளஞ்செழியனுக்கு,
ஆனால் அதுதான் நடவாத காரியம் ஆயிற்றே, ஏனென்றால் எப்போது ஸ்ரீநிஷாவிற்கு தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று தெரிந்ததோ அன்றிலிருந்து இளஞ்செழியனை கண்கொண்டு பார்ப்பதே இல்லை.
இளஞ்செழியன் எங்கிருக்கின்றானோ அங்கு ஸ்ரீஷா வருவதுமில்லை அவனது முகத்தை பார்க்க கூட அவளுக்கு அருவருப்பாக இருந்தது.
ஸ்ரீ நிஷா தன்னை வெறுத்து ஒதுக்கின்றாள் என்று இளஞ்செழியன் தெரிந்தும் அவளை வற்புறுத்த வில்லை.
அவளது உடல் நிலையைக் கவனத்தில் கொண்டு அவனும் தள்ளி நின்று அவளது செயற்பாடுகளை கவனித்து வந்து கவனித்துக் கொண்டிருந்தான்.
ஸ்ரீநிஷாவைப் பற்றி ஏதாவது முக்கிய விஷயங்கள் தெரிய வேண்டும் என்றால் ராமையாவிடமே கேட்டு தெரிந்து கொள்வான்.
கர்ப்பமான நாளிலிருந்து ஸ்ரீநிஷா எந்த வேலையும் செய்வதே இல்லை.
அடிக்கடி தலை சுற்றும், வாந்தியும் இருப்பதனால் எப்பொழுதும் தலையில் கை வைத்த படி சோர்ந்து படுத்தே இருப்பாள்.
வளமை போல ராமையாவே அனைத்து வேலைகளையும் கவனித்து வந்தார்.