வஞ்சம் 24
இவ்வளவு நேரமும் வாய் திறந்து ஒன்றும் பேசாமல் இருந்தவன், அவள் தன்னை விட்டுப் பிரிந்து செல்லப் போகிறாள் என்பதை அறிந்ததும் இதற்கு மேலும் அவன் பேசாமல் இருந்தால் அனைத்தும் விபரீதத்தில் போய் முடிந்து விடும் என்பதை அறிந்தவன், உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாய் திறந்தான்.
“ஸ்ரீ நிஷா கொஞ்சம் பொறு நான் செய்தது தப்புதான்.. இல்லன்னு நான் சொல்லல.. ஆனால் என்னோட குழந்தையை என்கிட்ட தந்திட்டு போயிடு.. ப்ளீஸ் எனக்கு என் குழந்தையை பிரிஞ்சு இருக்க முடியாது.. தயவு செய்து என்கிட்ட என் குழந்தையை கொடுத்துட்டு போயிரு..” என்று ஸ்ரீ நிஷாவிடம் கெஞ்சினான்.
“உன்கிட்ட இந்த குழந்தையை கொடுத்தா உன்னைப் போலத் தான் குழந்தையயும் வளர்ப்பா… உங்களோட இந்த கீழ் தனமான குணம் உங்க அப்பாவோடையும் உன்னோடையுமே முடிஞ்சு போகட்டும்.
என் குழந்தையாக இந்த சமூகத்தில் நல்ல குழந்தையாக பிறக்கட்டும். உன்னிடம் தந்தால் அதன் குணம் உன்னை போலவே தான் இருக்கும் அப்படிப்பட்ட குழந்தை பிறப்பதற்கு இறந்து விடலாம்.”
“என்ன ஸ்ரீ அப்படி சொல்லாத. அது நம்மளோட குழந்தை. அது இந்த பூமிக்கு வருவதற்கு முன்னமே நீ இப்படி பேசலாமா?”
“நம்ம குழந்தையா? ச்சே… இத சொல்ல உனக்கே வெக்கமா இல்ல.. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்னை போல ஒரு ராட்சசனை நான் எங்குமே காணக்கூடாது”
அவள் ஒவ்வொன்றாகக் கூற அவனுக்கு மூச்செடுப்பதே சிரமமாக இருந்தது. தன்னை நிதானப்படுத்திக் கொண்டு எழ மூக்கிலிருந்தும் ரத்தம் கொட்டத் தொடங்கியது.
அவள் கூறிய அனைத்தையும் ஆமோதிப்பவன் போல அவளை ஒரு இயலாத பார்வை பார்த்து வைத்தான் இளஞ்செழியன்.
அவனது பார்வையை பார்த்து அசட்டு சிரிப்பு சிரித்த படி,
“உன்னோட வாழ்க்கை முடிவுல தான் என்னோட வாழ்க்கையை ஆரம்பம்னு இருக்கு. தெரிஞ்சோ தெரியாமலோ உன் மூலமா எனக்கு ஒரு குழந்தை வந்துட்டு அந்த குழந்தையை நான் நல்லபடியா வளர்க்கணும் உன்னோட குழந்தையா இருந்தாலும் நீ செய்த தப்புக்காக நான் அந்த சிறு குழந்தையை எந்த விதத்திலும் பாதிக்கிற மாதிரி நான் எதையும் செய்ய மாட்டேன் என்னோட குழந்தை தந்தை இல்லாத குழந்தையா இந்த உலகத்தில் சுதந்திரமா நல்லபடியா வளரும் என்று நம்புறேன்.. குட் பாய்…” என்று கூறிவிட்டு அவள் திரும்பும் போது இளஞ்செழியன்,
“ஸ்ரீ.. ஸ்ரீ.. என்ற அந்த வீடே அதிரும்படி அவளை அழைத்தான். அவளோ காது கேளாதவள் போல திரும்பி நடக்கத் தொடங்க இளஞ்செழியன் தட்டு தடுமாறி எழுந்து அவளை எட்டிப் பிடித்தான்.
அவனிடமிருந்து விடுபடத் திமிறியவள் அவனது கைகளுக்குள் இறுக்கமாக மாட்டிக் கொண்டாள்.
அவனோ அவளை விட்டு பிரிய எண்ணம் இல்லாமல் அவளது கைகளை இறுக்கமாகப் பற்றிக் கொண்டான்.
“ப்ளீஸ் ஶ்ரீநிஷா என்ன விட்டு போகாத எனக்கு என் குழந்தையை பார்க்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு நான் உனக்கு செய்தது தப்புதான் என்னை மன்னித்துக்கொள் என்னோட பக்கம் நியாயத்தை உன்கிட்ட சொல்ல விடு நான் வேணும்ன்னு செய்யல நான் கட்டாயமாக உனக்கு எல்லா விஷயமும் சொல்றேன்.
என் குழந்தைக்காகவாவது நான் வாழனும் என்று எனக்கு ஆசையா இருக்கு ப்ளீஸ் ஹெல்ப் பண்ணு..”
இன்று இளஞ்செழியன் கெஞ்சிக் கொண்டிருக்கும்போது
ஸ்ரீநிஷா அவனது கைகளில் இருந்து விடுபடுவதற்காக போராடி எழுந்து நின்று அவனது கைகளை விடுவித்துக் கொண்டு திரும்பியவள் கால் இடறி அருகிலுள்ள மேசை மீது சரிந்து விழுந்தாள்.
மேசையின் மூலை விளிம்பு அவளது மணி வயிற்றுடன் மோதியது.
“அம்மா..” என கத்தியவாறு ஸ்ரீ நிஷா அப்படியே துவண்டு போய் தரையில் சரிந்து விழுந்தாள்.
இந்நிகழ்வை கண்ணெதிரில் பார்த்த இளஞ்செழியன் அதிர்ச்சியில் உடல் உறைந்து போனது.
பின் சுயம் பெற்று ஸ்ரீ நிஷாவின் அருகில் சென்று அவளைத் தூக்கி தனது மடியில் போட்டு அவளது கன்னத்தில் தட்டிப் பார்த்தான்.ஸ்ரீ நிஷாவின் கண்களோ திறக்கவே இல்லை.
இளஞ்செழியனுக்கு விஷத்தின் வீரியம் தலைக்கு ஏறத் தொடங்கியது தலை சுற்ற, மனதை திறப்படுத்திக் கொண்டு,
“ராமையா.. ராமையா..” என்று அழைத்தவன் ராமையா வராது போக மெல்ல எழுந்து இரு கைகளால் ஸ்ரீ நிஷாவை தூக்கி கொண்டு வெளியே வந்தான்.
அவனது கால்கள் நிலையாக நிற்கவில்லை. அவனது கைகளோ நடுங்கத் தொடங்கின. அவனது உடலில் விஷத்தின் வீரியத்தால் மிகவும் பலவீனமாக இருந்தது.
எழுந்து தள்ளாடியபடி முடிந்தளவு வேகமாக வெளியே வந்து காரின் பின்பக்க இருக்கையில் ஸ்ரீ நிஷாவை படுக்க வைத்துவிட்டு, காரின் முன் பக்கம் அமர்ந்தவன், அப்படியே ஸ்டேரிங்கின் மேல் விழுந்தான்.
அவனது உடலோ காரினை ஓட்டுவதற்கு சிறிதும் ஒத்துழைக்கவில்லை இருந்தும் வேறு வழியில்லாமல், நிமிர்ந்து தன் இரு கைகளாலும் தலையை பலமாக தட்டினான்.
‘செழியன் உன்னால முடியும் ப்ளீஸ் ட்ரை பண்ணு..’ என அவனது மனதை திறப்படுத்திக் கொண்டு காரை எடுத்தான்.
இளஞ்செழியன் அது காரின் சத்தம் கேட்டு கொண்டு காரை எடுத ராமையா உடனே ஓடி வந்தார்.
‘இப்பதானே வீட்டுக்கு வந்துச்சு தம்பி எங்க போறாரு..?’ என்று நினைத்தபடி காரின் அருகே வந்து நின்றார்.
காரின் முன்னிருக்கையில் இருந்த இளஞ்சலி என்னை பார்த்ததும் அப்படியே அதிர்ந்து போய் நின்றார். இளஞ்செழியன் மூக்காடும் வாயாலும் குருதி பொங்கி வழிய அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவர்,
“என்ன தம்பி இது? உடம்புக்கு என்ன ஆச்சு? தம்பி உங்க வாயில இருந்தும் மூக்குல இருந்தும் இரத்தம் கொட்டுது பா…” என்று கைகள் நடுங்க கூறினார்.
“தெரியும் ராமையா முதல் நீங்க வந்து கார்ல ஏறுங்க… சீக்கிரம்…”
காரில் கை வைத்து கதவை திறக்கும் போது தான் ராமையா பின் இருக்கையில் படுத்திருக்கும் ஸ்ரீ நிஷாவைக் கவனித்தார்.
அப்படியே அந்த இடத்திலே வேரூன்றி நின்றதைப் போலப் பேச மறந்து திகைத்துப் போய் நின்றார்.
“த.. தம்… தம்பிபி..” என அவரது வாய் தந்தி அடித்தது.
அவரது நிலையைப் பார்க்க அந்நேரத்தில் இளஞ்செழியனுக்கு பாவமாகவும் இருந்தது, ஆனால் அவசர நிலைமை புரியாமல் இவரை எவ்வாறு சமாளிப்பது என்று கோபமும் வந்தது.
“ஐயோ ராமையா சீக்கிரம் காரில ஏறுங்க..”
இதோ தம்பி என்று காரில் ஏறினார்.
படு வேகமாக கார் வைத்தியசாலையை நோக்கி புறப்பட்டது. அவனது கார் செல்லும் வேகத்தை விட அவனது இதயம் படுவகமாக துடித்தது.
கடவுளிடம் மனம் இறங்கி கேட்டுக் கொண்டான்.
‘கடவுளே! ஸ்ரீ நிஷாவுக்கும், என்னோட குழந்தைக்கும் ஒன்னும் ஆகக்கூடாது என்னோட உயிரை வேணும் என்றாலும் எடுத்துக் கொள் ஆனால் இந்த இரு உயிர்களை மட்டும் தயவுசெய்து காப்பாற்றி விடு..’ என்று மனதார கடவுளிடம் மன்றாடினான்.
வைத்தியசாலையும் வந்து சேர்ந்தது. கையில் ஸ்ரீ நிஷாவை தூக்கிக்கொண்டு,
“டாக்டர்… டாக்டர்..” என்று கத்தியபடி ஓட உடனே ஒரு டாக்டர் வந்து, ஸ்டர்ச்சரில் ஸ்ரீ நிஷாவை வைத்து,
“என்ன நடந்தது..?”
“டாக்டர் பிரக்னண்டா இருக்காங்க கால் தவறி வயிறு அடிபட விழுந்துட்டாங்க.. வயித்துல என்னோட பாப்பா இருக்காங்க.. ப்ளீஸ் காப்பாத்துங்க… ரெண்டு பேரையும் காப்பாத்துங்க டாக்டர்… அவ கண்ணு முழிக்கிறா இல்ல என்னன்னு பாருங்க..”
“ஓகே மிஸ்டர்.. நர்ஸ் இம்மிடியட்டா இந்த பேஷண்ட எமர்ஜென்சி ரூமுக்கு கூட்டி போங்க..” என்றவுடன் ஸ்ரீ நிஷாவை உள்ளே கொண்டு செல்ல, அவள் உள்ளே செல்வதை பார்த்துக் கொண்டிருந்த இளஞ்செழியன் மறுகணம் அதே இடத்தில் சரிந்து விழுந்தான்.
இருவரின் வாழ்க்கையும் இறப்புக்கும் பிறப்புக்கும் இடையில் தத்தளித்துக் கொண்டிருந்தது. இதில் மீள்வது யார் என அடுத்த பதிவில் பார்ப்போம்…
உங்கள் தோழி இயல் மொழி 😍😍😍