வஞ்சம் – 3
கடல் அன்னையின் சுவாசம் போல் வீசும் காற்று இளஞ்செழியன் மீது மோத, அக்கணம் அக்காற்று அவனுக்கு எரிச்சலை உண்டு பண்ணியது. அவனது மனநிலையினை தானும் தத்தெடுத்துக் கொண்டது போல் மிகவும் வேகமாக அந்த மாலை பொழுதினில் வீசத் தொடங்கியது.
இதே கடற்கரையில் தான் மூன்று மாதங்களுக்கு முன் தனது அன்னையுடன் சேர்ந்து மணல் வீடு கட்டி, கடல் அலைகளுடன் விளையாடி, இருவரும் சேர்ந்து பேசி மகிழ்ந்தோம். ஆனால் அன்று வீசிய காற்று அவனது இதயத்தை தொட்டு அவனது ஆனந்த அரங்கேற்றத்தினை மகிழ்ச்சியாக பரிசளித்து சென்றது.
ஆனால் தற்போது அன்னையின் நினைவுகள் ஞாபகத்திற்கு வந்து அவனை கொஞ்சம் கொஞ்சமாக மனதளவில் வேதனையை அதிகரிக்கச் செய்ய, ஏனோ..! எதனைப் பார்த்தாலும், எதனைத் தொட்டாலும், எங்கு பார்த்தாலும், அன்னையின் நினைவே தான். அவனால் அவரது பிரிவிலிருந்து மீண்டு எழுந்திட முடியவில்லை.
என்னதான் இருந்தாலும் அவனை ஈன்றெடுத்த அன்னை அல்லவா… அவனது தந்தை பிரிந்து சென்ற வேலையிலும் பட்ட கஷ்டங்களில் பல தடவை இறந்து விடுவோமா…? என்றெல்லாம் நினைத்த வேலை அவர் கண் முன்னே அவரது எதிர்காலமாய் திகழ்ந்தது நான் தானே…! என்றெல்லாம் சிந்தித்து,.
கடல் அலைகளை விட அவன் மனதில் எழும் கோபக்கனல் தீண்டும் அலைகள் மிகவும் பெரியதாக நெஞ்சினை வாட்டி வதைத்தது.
‘இந்த ராகுல் இன்னும் என்ன தான் செய்கிறானோ…! தெரியவில்லை. ப்ளடி ராஸ்கல்…’ என்று மனதிற்குள் இன்ஸ்பெக்டரை திட்டியபடி தொலைபேசியை கையில் எடுத்து ராகுலுக்கு அழைப்பு எடுக்க மறுமுனையில் “ஹலோ சார்… எப்படி இருக்கீங்க…” என்று மிகவும் பணிவாகக் கேட்டான்.
அவனது கேள்வியில் எரிச்சலுற்ற இளஞ்செழியன் “இந்த ஹலோ… கிலோன்னு….. குசலம் விசாரிக்கிறது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்…. நான் சொன்ன வேலை என்ன ஆச்சு…? இதுவரைக்கும் எனக்கு ஒரு பதிலும் வரல…. மூணு மணி நேரத்துல சொல்றேன்னு சொன்னே…. இதோ 5 மணி நேரத்துக்கு மேல ஆகிட்டு…. இவ்வளவு நேரமா நீ என்னத்த புடிங்கிட்டு இருக்க….” என்று தனது அதிகபட்ச கோபத்தை அவனிடம் காட்ட இயலாமல் கைகளை இறுக்கிப் பிடித்தபடி மிகவும் கடுமையாக ஆனால் மெலிதான குரலில் பேசினான். ஏனென்றால் கடற்கரை பொது இடம் அல்லவா, யாருக்கும்… எதற்கும்…. தொந்தரவு கொடுக்க கூடாது என்று அவ்வாறு நடந்து கொண்டான்.
“எனக்கு புரியுது சார்…. நீங்க என் மேல ரொம்ப கோவமா இருக்கீங்கன்னு… ஆனா என்னோட சிட்டுவேஷன் அப்படி சார்… நீங்க கால் எடுத்துட்டு வச்ச பிறகு…. மினிஸ்டர் வாராருன்னு… மினிஸ்டர் கூட பாதுகாப்புக்கு என்னை அனுப்பி வெச்சிட்டாங்க….” என்று அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே இளஞ்செழியன் தொலைபேசி அழைப்பினை துண்டித்து விட்டான்.
‘இவனை நம்பி பிரயோசனமில்லை…. நாமளே இறங்கித் தேட வேண்டியது தான்… அவனெல்லாம் மினிஸ்டருக்கு காக்கா பிடிக்கத் தான் லாய்க்கு…” என்று மனதிற்குள் நினைத்துத் திட்டிக் கொண்டிருக்கும் போதே அவனது சிந்தனையை சிதறடிக்கும் வண்ணம் “காப்பாத்துங்க… காப்பாத்துங்க…” என்று சற்று தூரத்தில் அலறும் சத்தம் கேட்டது.
அந்த அலறல் குரல் கேட்டு சட்டென்று சத்தம் வந்த திசையை நோக்கி இளஞ்செழியன் ஓடத் தொடங்கினான்.
அங்கு ஸ்ரீநிதியும் அவளை சுற்றி சில நண்பிகளும் குழுவாக பதறிய படி கத்திக் கொண்டிருந்தனர்.
என்னவோ ஏதோ என்று அந்தப் பெண்களுக்கு அருகில் ஓடிச் சென்று “என்ன பிரச்சனை….? ஏன் இப்படி கத்துறீங்க…?” என்று அவர்களது படபடப்பும் தன்னோடு ஒட்டிக்கொள்ள மிகவும் விரைவாகக் கேட்டான்.
அதில் ஒரு பெண் மிகவும் பயத்துடன் “சார்…. சார்… ப்ளீஸ்….. ஹெல்ப் பண்ணுங்க சார்….. நாங்க எல்லாரும் ஒன்றாக விளையாட வந்தோம்….. பந்து தண்ணில அடிச்சுட்டு போயிட்டு…. அதை எடுக்க போன ஸ்ரீயை இன்னும் காணல்ல…. பந்துக்கு பின்னுக்கு போனா… ஒரு பெரிய அலை ஒன்னு வந்துச்சு…. அதுக்கப்புறம் அவளை காணல சார்…. பயமா இருக்கு சார்….. ப்ளீஸ் சார் எங்களுக்கு ஒருத்தருக்கும் நீச்சல் தெரியாது…. அதோட அலையும் ரொம்ப பெருசா வந்து போய்க்கிட்டு இருக்கு…. ப்ளீஸ் சார்…. ப்ளீஸ்…. ப்ளீஸ்….” என்று படபட எனக் கூறிவிட்டு அனைவரும் ஒன்று சேரக் கெஞ்சினர்.
நடந்து இருக்கும் விடயத்தின் வீரியம் புரிந்து, உடனே புயல் வேகத்தில் அலைகளுக்கு நடுவில் ஓடிச் சென்று பாய்ந்து, உள் நீச்சல் அடித்து, அங்கும் இங்கும் தேடினான். எங்குமே அவளைக் காணவில்லை…. மீண்டும் வெளி வந்து நன்றாக மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு உள்ளே சென்று தேடினான். இப்போதும் இல்லை. அவனுக்கோ நீந்தி நீந்தி உடலும் களைப்படைந்து விட்டது.
கடல் அலைகளுக்கு நடுவில் எழுந்து கரையில் நிற்கும் பெண்களுக்கு “இங்கு எங்கும் அந்தப் பெண் இல்லை…” என்று உரத்த குரலில் கத்தி கைகளால் செய்கை காட்டினான்.
அந்தப் பெண்களோ ஓ…. என அழுது ஒப்பாரி வைக்க தொடங்கினர். அவள் இல்லை. இனிமேல் கிடைக்க மாட்டாள். இறந்துவிட்டாள் என்று முடிவு செய்து விட்டனர்.
அப்பெண்கள் அழுவதை தூரத்திலிருந்து பார்த்த இளஞ்சினியனுக்கு மனம் கேட்கவில்லை. இருந்தும் கடைசியாக ஒரு தடவை தேடிப் பார்ப்போம் என்று மீண்டும் அலைகளுக்குள் குதித்து, உள் நீச்சல் அடித்து அங்கும் இங்கும் வேகமாக தேடினான்.
இருந்தும் அவனது கண்களில் எதுவுமே தென்படவில்லை. ‘சரி, இன்னும் தேடி பலனில்லை… கரைக்குச் செல்வோம்…’ என்று அவன் எண்ணும் வேளையில், கடலுக்கு அடியில் தூரத்தில் சிவப்பு நிறத்தில் ஏதோ மங்களாக தென்பட்டது.
அதன் அருகில் வேகமாக சென்று பார்த்தால், அது ஒரு பெண்… இவள் தான் அந்தப் பெண்களின் தோழியாக இருக்க வேண்டும் என்று மயங்கி கிடந்த அப்பெண்ணை மின்னல் போல் கைகளில் ஏந்தி கடல் அலைகளுக்குள் நீந்தி வெளியே கொண்டு வந்து தூக்கி தோழிகளுக்கு நடுவில் கொண்டு வந்து கிடத்தினான்.
உடனே அழுவதை நிறுத்தி விட்டு தோழிகள் சூழ்ந்து அவளை கையில் ஏந்தி, ஒருவர் கை கால்களை சூடு பறக்க தேய்க்க, ஒருவர் வயிற்றினை அமுக்கி உள்ளிருக்கும் நீரே மெதுவாக எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தார், மற்ற பெண் வாய் மூலம் சேர்க்கை சுவாசம் அளித்துக் கொண்டிருந்தார்.