ஸ்ரீநிஷாவின் அருகில் நெருங்கி வந்த இளஞ்செழியன், அவள் மீது மட்டும் பார்வை வைத்துக் கொண்டு “ராமையா…! ஒன்று சொல்ல மறந்துட்டேன்…. இவளுக்கு தேவையான எல்லா வசதியும் செய்து கொடுங்கன்னு… சொன்னல்ல… அது வார்த்தை தவறி வந்துட்டு…. இவ இங்க ஒரு வேலைக்காரி மட்டும் தான்….. வேலைக்காரிக்கு எதுக்கு வசதி எல்லாம்…. நான் பார்க்கிற நேரம் எல்லாம் இவள் வேலை செய்து கொண்டு மட்டும் தான் இருக்கணும்….. அவளுக்கு உதவி செய்யணுமுன்னு நீங்க நினைச்சீங்க….. நீங்களும் இந்த வீட்டை விட்டு வெளியே போக வேண்டி வரும்…. மனசுல வச்சுக் கொள்ளுங்க….” ஸ்ரீநிஷாவின் அருகில் நெருக்கமாக வந்து அவளது தாடையைப் பிடித்து
“அப்புறம்… இனிமேல் நீ தான் சமையல் செய்யனும்…. உனக்கு சமைக்க தெரியுமோ…! தெரியாதோ….! நீ தான் சமைக்கணும்….. சமையல் நல்லா இல்லைன்னா பரவாயில்லை…. ஆனா ஒன்னு…. அவ்வளவு சாப்பாடையும் நீயே தனியே சாப்பிடுவ….” என்று கூறிவிட்டு திரும்பினான்.
ஸ்ரீநிஷாவுக்கு அப்போது தான் உயிர் மீண்டும் உடலுக்குள் வந்தது போல் இருந்தது. உன்னை அவ்வளவு சீக்கிரம் நான் விட மாட்டேன் என்பது போல் மீண்டும் அவளை பார்த்து திரும்பி “ஆஹ்…. சொல்ல மறந்திட்டேன்….. இன்னைக்கு நைட் உனக்கு பெரிய வேலை ஒன்னு இருக்கு…. இந்த வேலையெல்லாம் முடிச்சிட்டு வெயிட் பண்ணு….. நான் நைட் வந்து உனக்கு என்ன வேலைன்னு விளக்கமா சொல்றேன்… ராமையா அவளை பத்திரமா பார்த்துக் கொள்ளுங்க…. இந்த இடத்தை விட்டு வெளியே போகணும்னு நினைச்சே…. நீ உயிரோட இருக்க மாட்ட…. அப்புறம்…. உன் இஷ்டம்,,,,” என்று கூறிவிட்டு அழுத்தமாக ஷூ தடங்கள் டைல்ஸில் பட மிகவும் வேக நடையுடன் அவ்வீட்டை விட்டு வெளியேறினான்.
அவனது திடீர் மாற்றங்களை பார்த்து ராமையாவுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ‘அன்னை இறந்த துன்பத்தில், இவ்வாறு நடந்து கொள்கிறானா..? அல்லது வெளிநாட்டில் வசித்ததால் இவனது குணப்பண்புகள் மாறிவிட்டதோ…!’ என்று சிந்தித்தபடி அவனது மாற்றங்களை அவரால் சிறிதும் ஏற்றுக் கொள்ள முடியாமல் காரணம் தேடி மனதிற்குள் திண்டாடிக் கொண்டிருந்தார்.
ஆம் பெண்களை தாயாக மதிப்பவன், பெண்கள் மீது மிகவும் மதிப்பு வைத்திருப்பவன், தன் அன்னையை போற்றி பாதுகாத்து பேணியவன், அப்படிப்பட்டவன் இப்படி ஒரு பெண் மீது ஆக்ரோஷமாக ஒரு புழுவை நடத்துவது போல் அவளை நடத்துவது அவருக்கு மிகவும் வேதனையாக இருந்தது.
தனது சிந்தனையை கலைத்து விட்டு ஸ்ரீநிஷா பக்கம் திரும்ப ஸ்ரீநிஷா அவன் சென்ற பாதையே பார்த்த படி அவளது சிந்தனைகள் அன்பு இல்லத்திலேயே தொக்கி நின்றன.
அதனை கலைக்கும் வண்ணம் ராமையா அவளது தோளினை தொட்டு “குளித்து விட்டு சாப்பிடலாமா…” என்று கூற திக்கித் திணறி அவரிடம் கேட்க சிரமப்பட்டு கொண்டு “வா……ஷ் ரூ….ம்… எங்க இருக்கு…?” என்று கேட்டபடி தலை குனிந்தாள்.
அவளது தேவை புரிந்து அவர் கை காட்டிய அறைக்குள் சென்று தனது இயற்கை தேவைகளை முடித்து விட்டு, அப்போது தான் ஒன்றை அவள் நன்றாக உணர்ந்தாள்.
தனது வயிறு பசிக்காக சத்தமிடுவது, உடனே டைனிங் டேபிள் அருகில் வந்து அமர, ராமையா சுடச் சுட இட்லியும், சாம்பாரும் செய்து டைனிங் டேபிளில் கொண்டு வந்து வைக்க, ஸ்ரீ நிஷாவுக்கு இரண்டு நாட்கள் உண்ணாமல் இருந்த பசி வேறு, அவரது சாம்பார் வாசனை மூக்கைத் துளைக்க, மெதுவாக இட்லியை சாம்பாரில் தொட்டு வாயில் வைக்க அப்படியே சுவை நாவில் நின்று நடனம் ஆடியது.
அதனை கண் மூடி ரசித்து ருசித்து உண்டு விட்டு, அடுத்த இட்லியை எடுத்து சாம்பாரில் தொடப் போகும் போது சாம்பார் தட்டு சுவற்றில் பட்டு கீழே விழுந்திருந்தது.
ஆம் இளஞ்செழியன் அவளது உணவு பிளேட்டினை தூக்கி வீசி இருந்தான். அது சுவற்றில் மோதி கீழே விழுந்து சுக்கு சுக்கு நூறாக சிதறிக் கிடந்தது.
ராமையா இதைச் சற்றும் எதிர் பார்க்கவில்லை. மிகவும் கடுமையான குரலில் இளஞ்செழியனிடம் “தம்பி நீங்க பண்றது ரொம்ப தப்பு…. அம்மா இருந்தாங்கன்னா.. இந்நேரம் உங்க கண்ணம் பழுத்திருக்கும்…. இப்படியா நடந்துக்கிறது…? ஒருவர் சாப்பிடும் போது இப்படி செய்யலாமா….? அந்த பொண்ணு ரெண்டு நாளா சாப்பிடல… அது உங்களுக்கும் தெரியும்…. நீங்க இப்படி நடந்துப்பிங்கன்னு நான் கொஞ்சம் எதிர்பார்க்கல்ல….
உங்க மேல இருக்கிற மரியாதையை நீங்களே கெடுத்துக்குறீங்க தம்பி…. மேலே இருந்து நீங்க செய்றதெல்லாம் அம்மா கவனிச்சுக்கிட்டு தான் இருப்பாங்க….. இப்படி செய்யாதீங்க….” என்றதும் இளஞ்செழியன் எதுவும் பேசாமல் மேலே சென்று விட்டான்.
ராமையா ஸ்ரீ நிஷாவினைப் பார்த்து “கொஞ்சம் பொறுமா… சாப்பாடு எடுத்துட்டு வாரேன்…” என்று சொன்னதும் அவளது தொண்டையில் இருந்த உணவு உள்ளே செல்ல மறுத்தது.
“வேணாம் ராமையா… வேணாம்… விடுங்க…. இருக்கட்டும்… எனக்கு பசிகல்ல…” என்றதும்
“இல்லம்மா…. ஒரு ரெண்டு வாயாவது சாப்பிடு…..”
“இல்ல ராமையா…. எனக்கு வேணாம்…. ப்ளீஸ்… என்னை ஃபோர்ஸ் பண்ணாதீங்க….” என்றாள் ஸ்ரீ நிஷா.
இவை அனைத்தையும் மேலே அவனது அறையில் இருந்து ஜன்னல் வழியாக கவனித்துக் கொண்டிருந்தான் இளஞ்செழியன்.
ராமையா அவள் உண்ண மறுப்பதை பார்த்து மிகவும் வேதனையுடன் ஒன்றும் கூறாமல் அப்படியே நிற்க, “என்ன வேலை இருக்குன்னு சொல்லுங்க ராமையா…. நான் என் வேலையை தொடங்குகிறேன்…. இல்லாவிட்டால், அவர் வந்து உங்களுக்கு தான் பேசுவார்…..” என்று கூற
“இல்லம்மா… நீங்க இருங்க…. நானே பார்த்துக்கிறேன்…. தம்பி ஏதோ கோபத்தில் சொல்லிட்டு போகுது…” என்று இளஞ்செழியனுக்கு பரிவாகப் பேசினார்.
ஸ்ரீ நிஷாவோ ஒரு கவலை தோய்ந்த புண் சிரிப்புடன் சமையலறைக்குள் சென்று அங்கு இருக்கும் பாத்திரங்களை ஒவ்வொன்றாக கழுவத் தொடங்கினாள்.
அவளது கண்களில் இருந்து நீர் ஆறாக பெருக, தொண்டையில் ஏதோ இருந்து உள்ளே செல்ல மறுப்பது போல் மிகவும் வேதனையில் தன்னிலை எண்ணி அழுதழுது ஒவ்வொரு வேலையாக செய்யத் தொடங்கினாள்.
காலை 10 மணியிலிருந்து ராமையா வேண்டாம் என்று சொல்லச் சொல்ல அதை மறுத்து முதலில் சமையலறைக்குள் பாத்திரங்களை கழுவி, பின்பு சமயல் அறையை கூட்டித்து துப்புரவு செய்து, தோட்டத்திற்குச் சென்று ஒவ்வொரு மரங்களுக்கும் நீரூற்றி, அது தான் அவளுக்கு பிடித்தமான வேலை ஆயிற்றே..! அதனை செய்து முடித்து ஹாலில் ஒவ்வொரு பொருட்களாக தூசி தட்டி துடைத்துக் கொண்டிருக்க கதிரைக்கு அருகில் அவளது கண்ணில் திடீரென ஒரு புகைப்படம் தென்பட்டது.
அதில் இளஞ்செழியனும் அவனது தாயும் ஒன்றாக இணைந்து எடுத்த புகைப்படமாகும்.
இளஞ்செழியன் தனது அன்னை கதிரையில் அமர்ந்து இருக்க, அவரது தோளில் இரு கைகளையும் போட்டு அவரின் பக்கவாட்டில் கதிரையில் அமர்ந்திருந்து சிரிப்பதாக அப்புகைப்படம் இருந்தது.
என்ன அதிசயம் என்றால் அதில் இளஞ்செழியன் வசீகர புன்னகையுடனும், தலை நிறைய சுருள் முடியுடனும் அழகாக இருந்தான். அவனது கண்களும் சேர்ந்து சிரித்தன.
அதில் இருப்பது இளஞ்செழியன் தானா என்று அவளுக்கு சந்தேகம் கூட பூத்தது.
அதனை கையில் எடுத்து இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருக்கும் போது பின்னால் ஏதோ ஒரு சத்தம் கேட்டு புகைப்படத்தை வைத்து விட்டு திடீரென்று திரும்ப அவள் சரிவர அந்தப் புகைப்படத்தை வைக்காததால் அது சரிந்து கீழே விழுந்து உடைந்து போனது.
அதிர்ச்சியில் திரும்பிப் பார்த்தால், இளஞ்செழியன் ருத்ர தாண்டவம் ஆடுபவன் போல், அவளை கொல்லும் எண்ணம் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான்.
அருகில் வேகமாக வந்து அவளது கழுத்தைப் பிடித்து நெறித்து சுவற்றுடன் சாய்த்து தூக்கினான்.
“என்ன தைரியம் இருந்தா…. என்னோட ஃபேவரிட் போட்டோவ உடைச்சி இருப்ப…. இந்த ஒவ்வொரு போட்டோவும் என்னோட வாழ்க்கையில பொக்கிஷங்கள்…. உனக்கு எங்க அது தெரிய போது… பாசம், அன்பு, கருணை என்றால் என்ன என்று உனக்கு தெரியுமா…? உனக்கு பணம் மட்டும் தான் முக்கியம்… நான் ஈவினிங் வரும் போது… இந்த போட்டோ பழைய மாதிரி இருக்கணும்… இல்லன்னா நீ உயிரோடு இருக்க மாட்டே….” என்று கூறி விட்டு கழுத்திலிருந்து கையை எடுத்தான்.
அவளது கழுத்தை இறுக்கிப் பிடித்ததால், கண்களில் நீர் வடிய தொண்டையைப் பிடித்துக் கொண்டு இடைவிடாமல் இருமி கொண்டே இருந்தாள். இருமல் சற்றும் நிற்கவே இல்லை.
அவன் வீட்டை விட்டு வெளியேற வாசலில் ராமையா அனைத்தையும் பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார்.
அவரின் அருகில் சென்று சிறிது நடையின் வேகத்தை குறைத்து அவரை ஒரு நொடி ஆழ்ந்து பார்த்துவிட்டு நகர எத்தனிக்க,
ராமையா “தம்பி..! நான் கொஞ்சம் ஊருக்கு போகணும்…. என்னோட கூட பிறந்த தம்பிக்கு உடம்புக்கு ரொம்ப முடியலையாம்… சாகக் கிடக்கிறான்னு ஊர்ல இருந்து தந்தி வந்துச்சு…. நான் இவ்வளவு காலமும் ஊருக்கு போகவே இல்ல… போயிட்டு ரெண்டு நாள்ல வந்துருவேன்…” என்று கூறி இளஞ்செழியனின் பதிலுக்காக காத்து இருந்தார்.
முதலில் சற்று தயங்கியவன் பின்பு ஏதோ நினைவில் வர பிரகாசித்த முகத்துடன் “பரவால்ல ராமையா…. நீங்க இன்னும் ஒரு வாரம் இருந்துட்டு வாங்க… இங்க தான் எல்லாத்தையும் பார்க்கிறதுக்கு நம்ம ஸ்ரீ இருக்காங்களே…! அவங்களே எல்லாத்தையும் பாத்துப்பாங்க…. நீங்க போயிட்டு ஆறுதலா வாங்க…”
ஸ்ரீ நிஷாவுக்கு மனதுக்குள் பெரும் சூறாவளி எழும்பியது போல் இருந்தது.
அவளுக்கென்று இருந்த ஒரே ஆறுதல் ராமையா மட்டும் தான். தன் மகள் போல நினைத்து பல உதவிகள் செய்து தந்தவர்.
அவர் செல்வது முக்கியமான காரணம் என்றாலும். தனிமையில் இங்கு இவனுடன் இருப்பதை நினைத்தால் ஸ்ரீநிஷாவுக்கு இப்போதே பெரும் பய பந்து உள்ளுக்குள் உருண்டு திரிந்தது.
இளஞ்செழியனும் ‘ராமையா இருந்தால் சில திட்டங்கள் தீட்டி அதனை செயல்படுத்துவது கடினம். அவர் சென்றால் தான் சுதந்திரமாக எனது விளையாட்டை தொடங்கலாம்..’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு தன் திட்டங்களை தீட்டி புன்னகைத்துக் கொண்டிருந்தான்.
ராமையாவுக்கும் ஸ்ரீனிஷாவை விட்டு செல்ல மனமே இல்லை தான். பாவம் சிறு பெண் இப்படி வேலைகளில் மாட்டி கஷ்டப்படுகின்றாள் என்று எண்ணி மன வருத்தப்பட்டாலும், கட்டாயமாக செல்ல வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தில் அவர் அவளிடம் கூறி விட்டு அன்றே தனது ஊருக்கு புறப்பட்டு விட்டார்.
அவர் சென்றதும் அரை மணி நேரத்திற்குள் இளஞ்செழியன் வந்து ஸ்ரீ நிஷாவை அழைத்து கையில் ஒரு பையை கொடுத்தார்.
அந்தப் பையில் ஒரு சில உடைகள் இருந்தன. அதைப் பார்த்ததும் அவளுக்கு மனதிற்குள் சிறு சந்தோசம் எழுந்தது.
சிறு வயதிலிருந்து இல்லத்திலே வளர்ந்ததால், இன்னொருவர் உடுத்திய உடையை தான் இவ்வளவு காலமும் அவள் அணிந்து வந்தாள்.
தற்பொழுது ஒரு புத்தாடையைப் பார்த்ததும் அவளது மனதில் இனம் புரியாத ஒரு சந்தோஷம் உருவாகியது.
அதோடு மனதிற்குள் ‘அங்கு கடல் குளித்ததிலிருந்து இன்னும் உடை மாற்றவே இல்லை… நல்ல வேலை உடையாவது மாற்றுவதற்கு கொண்டு வந்து தந்தானே…! இன்னும் உடம்பு பிசுபிசுன்னு உடல் இருக்கின்றது… குளித்துவிட்டு முதலில் உடை மாற்ற வேண்டும்…’ என்று எண்ணி குளியலறைக்குள் ஓடிச் சென்றவள்,
குளித்து விட்டு உடைகளை மாற்ற கையில் எடுத்துப் பார்த்தால், அனைத்தும் அரைகுறையான மெல்லிய உடல் அங்கங்கள் அப்பட்டமாக விளங்கும் உடைகள். அந்த உடைகள் அனைத்தும் மேற்கிந்திய முறையில் அமைக்கப்பட்டதாக இருந்தது.
அதனைப் பார்த்து முகம் சுளித்தவள், ‘விபரீதமாக எதுவும் நடக்கும் முன் முதலில் இங்கிருந்து நான் எப்படியாவது தப்பிக்க வேண்டும்..’ என நினைத்து தனது பழைய உடைகளை உடுத்திக் கொண்டு இந்த குளியல் அறையில் இருந்து வெளியே செல்வதற்கு வழி ஏதும் கிடைக்குமா என கண்களால் தேட, சிறு ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள்.
அது அந்த பெரிய பங்களாவின் பின்பக்க மதிலைக் காட்டியது. மெதுவாக குளியலறையில் இருக்கும் சிறு ஜன்னலில் கண்ணாடியை ஒவ்வொன்றாக கழட்டி மெது மெதுவா கீழே வைத்தாள்.
இங்கிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று ஒரு உத்வேகத்தில் மெதுவாக கால்களை ஊன்றி எழுந்து, அதனூடாக வெளியே செல்ல தலையை நீட்டி அவ்வழியாக கீழே இறங்கி, பின்பக்கம் மதிலுக்கு அருகில் சென்று, மதிலை தாண்டுவதற்கு ஏதாவது கிடைக்குமா..? என்று தேடினால் அப்போதுதான் தோட்டத்தினை சுத்தம் செய்யும் போது அங்கிருக்கும் ஏணியைக் கண்டது ஞாபகத்துக்கு வந்தது.
அதனை எடுத்து வந்து மதில் மேல் சாத்தி விட்டு மெதுவாக ஏற கால் வைத்த போது தான் அந்த சம்பவம் இடம்பெற்றது.
ஸ்ரீநிஷா இளஞ்செழியனின் வீட்டிலிருந்து தப்பித்து செல்வாளா..? அல்லது மாட்டிக் கொள்வாளா…?