வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..!

4.9
(10)
வஞ்சம் – 6

 

ஸ்ரீ நிஷா ‘யாரும் பார்க்கிறார்களா…’ என்று சுற்று முற்றும் பார்த்து விட்டு மெதுவாக ஏணியின் மேல் கால் வைத்து ஏறினாள்.
அவள் கனவிலும் எதிர்பாக்காத அளவுக்கு மிகவும் பெரிதாக ஜெர்மன் ஷெப்பர்ட் வகையைச் சேர்ந்த நாய்கள் மூன்று ஓடி வந்து அந்த ஏணியின் மீது பாய்ந்து அவளை கடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தன.
அதனைக் கண்டதும் ஏணியின் மீது மிகவும் வேகமாக ஏறி நின்றாள். ஆனால் இருந்தும் அந்த நாய்கள் அவளை விடவே இல்லை. ஏணி மீது பாய்ந்து கொண்டே இருந்தன. அதன் ஒவ்வொரு பாய்ச்சலுக்கும் ஏணி நகரத் தொடங்கியது.
இப்படியே சென்றால், இன்னும் சிறிது நேரத்தில் ஏணி கீழே விழப் போகின்ற நிலைமை உருவாகி விடும்.
ஸ்ரீ நிஷாவும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஒன்றும் செய்ய இயலாத நிலைமையில் “காப்பாத்துங்க… காப்பாத்துங்க…” என்று பெரும் குரல் எடுத்து கத்தினாள்.
அவளது குரல் கேட்டு இளஞ்செழியன் வீட்டிற்கு வெளியே ஓடி வந்து பார்த்தால், அவனது செல்லப்பிராணி அவளுடன் வம்பு இழுப்பதை பார்த்து மெதுவாக ஆடி அசைந்து நடந்து வந்தான்.
அவன் நடந்து வருவதைப் பார்த்து ஸ்ரீநிஷா “அச்சோ….. வசமாக மாட்டிக் கொண்டேனே…! பெரிய பிசாசிடமிருந்து தப்பித்து சின்ன பேயிடம் மாட்டிக் கொண்டேனே…! என்று தன்னை தானே நொந்து கொண்டாள்.
ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் மாறி மாறி ஏணியில் பாய்ந்து அவளை எப்படியாவது பிடித்து தின்பது போல் வெறி கொண்டு பாய்ந்தது.
இளஞ்செழியனும் அருகில் வந்து தோட்டத்தில் உள்ள பெஞ்சில் அமர்ந்து, கால் மேல் கால் போட்டு நடப்பவற்றை தொலைக்காட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சி பார்ப்பது போல் சுவாரசியமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனது நோக்கம் அவளுக்கு தெள்ளத் தெளிவாக விளங்கியது. இருந்தும் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “ப்ளீஸ்… என்னை காப்பாத்துங்க…. இந்த நாய்களை இங்க இருந்து போகச் சொல்லுங்க… எனக்கு ரொம்ப பயமா இருக்கு…. ப்ளீஸ்….. நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன்…. ப்ளீஸ்… காப்பாத்துங்க…..” என்று உயிரை கையில் பிடித்துக் கொண்டு கெஞ்சினாள்.
அவனோ மிகவும் திமிராக “என்ன…? ஏதோ சொன்னீங்க…? ஆனா என் காதுல சரியா விழல… ப்ளீஸ் அகைன்….” என்று கூற,
‘அச்சோ… நிலைமை தெரியாம சோதிக்கிறானே…!’ என்று மனதுக்குள் திட்டிக் கொண்டு, “நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன்… ப்ளீஸ்…. என்ன காப்பாத்துங்க… முதல் இந்த நாய்களை கொஞ்சம் போகச் சொல்லுங்க ..”
“ஓகே… எனக்கு ஒரு விஷயத்தை மட்டும் நீ கிளியர் பண்ணு …. அத போகச் சொல்றேன்…”
“சரி… முதல் இந்த நாய்களை விரட்டுங்க… “
“வெயிட் அ மினிட்… என்ன தைரியம் இருந்தா… இந்த வீட்டை விட்டு தப்பிச்சு போக நினைச்சிருப்ப… நீ இப்படி செய்வேன்னு தெரிஞ்சு தான்…. நான் அவங்கள கட்டாம விட்டேன்…. தப்பிக்க போக நினைச்சல்ல இப்ப நல்லா அனுபவி…” என்று வார்த்தைகளை கடித்து குதறினான்.
“இல்லைங்க… இனிமே இப்படி பண்ண மாட்டேன்… இப்ப போக சொல்லுங்க… ப்ளீஸ்….” என்றிட, இனிமேல் தாமதித்தால் அவளுக்கு உண்மையில் ஆபத்து நேர்ந்து விடும் என்பதால், அவன் இருந்த இடத்திலேயே இருந்து,
“டைகர், சிம்பா, லைக்கா கம் ஹியர்…”. என்றதும் பூனை குட்டிகள் போல அந்த நாய்கள் அருகில் ஓடி வந்து அமர்ந்து வாலை ஆட்டிக் கொண்டிருந்தன.
அதன் தலைகளை ஒவ்வொன்றாக அன்புடன் தடவி விட்டு “கோ மை டியர்ஸ்… கோ யுவ ப்ளேஸ்…” என்று அன்பு கலந்த குரலில் அவன் கூற, அவை எங்கு சென்றனவோ தெரியவில்லை.
அவ்வளவு வேகமாக மூன்று நாய்களும் ஓடிச் சென்று மாயமாக மறைந்து விட்டன.
அவனதற்கு அவ்வளவு பயிற்சிகள் கொடுத்து அதனை ட்ரெயின் பண்ணி வைத்துள்ளான் என்பது அவற்றின் செயலிலேயே தெட்டத் தெளிவாக விளங்கியது.
நாய்கள் போன பின்பும் அது எங்கு சென்றது என்று கண்களால் தேடிக் கொண்டு, அது மீண்டும் வந்து விடுமோ… என்ற பயத்துடன் ஏணியின் மேலே இருந்து கீழே இறங்க பயந்து கொண்டு இருந்தாள்.
இளஞ்செழியன் கீழிருந்து “இப்ப கீழே இறங்கி வாரியா…? இல்லன்னா…” என்று கூறி நாய்கள் சென்ற திசையைக் கண்களால் காட்ட,
அவன் கண்கள் கூறும் அர்த்தம் புரிந்து, படு வேகத்தில் ஏணியில் இருந்து கீழே பாய்ந்து குதித்தே வீட்டிற்குள் ஓடி விட்டாள்.
அவள் செல்வதைப் பார்த்து தனது முடி இல்லா தலையை தடவிக் கொண்டு வீட்டிற்குள் சென்றான். ஸ்ரீ நிஷா உள்ளே சென்று இரவு உணவை 20 நிமிடத்தில் உணவை தயார் செய்து விட்டு, எவ்வாறு அவனை அழைப்பது என்று திண்டாடிக் கொண்டிருக்கும் போது அவனாகவே கீழே இறங்கி வந்தான்.
தட்டு தடுமாறி “டி…ன்…ன….ர் ரெ…டி” என்று கூற எதுவும் பேசாமல் அருகில் வந்து, உணவை உண்டு விட்டு ஒன்றும் கூறாமல் மேலே சென்று விட்டான். இப்பொழுது ஸ்ரீ நிஷாவுக்கு மிகப் பெரும் யோசனையாக இருந்தது.
‘காலையில் அவன் அவளிடம் கூறிய முக்கிய வேலை… அது என்னவாக இருக்கும்…? இரவு ஒவ்வொரு ரூமும் பெருக்கி துடைக்க விட்டுருவானோ…! என்ன செய்யப் போகிறான்னு தெரியலையே….!’ என்று யோசித்த படி இருக்க, வயிறு தப்பாட்டம் போட்டது.
ஆம், மதியமும் ஒழுங்காக உண்ணவில்லை. பசியாலும் வேலைப்பளுவாளும் உடல் களைப்பை உணர, வேகமாக உணவை உண்டு முடித்து விட்டு, பாத்திரங்களை எடுத்து கழுவி, டைனிங் டேபிளை சுத்தம் செய்து, ‘இருக்கும் ஏதாவது ஒரு ரூம்ல தூங்குவோம்..’ என்று எண்ணிக் கொண்டிருக்கவே அவளுக்கு தூக்கம் தூக்கி அடித்தது.
இன்று முழுவதும் தொடர்ந்து வேலை செய்ததில் உடல் மிகவும் அசதியால் நித்திரையை அள்ளி வாரி இறைத்தது.
இனி சிறிது நேரம் கூட கண்கள் வேலை செய்ய மாட்டேன் என இமை விலங்கை போட்டுக் கொண்டு அடம் பிடித்தன.
அப்படியே போய் ஏதோ ஒரு அறையில் மெத்தையின் மேல் தொப் என விழ நித்திரா தேவி அவளை அன்புடன் தழுவிக் கொண்டாள்.
சிறிது நேரத்தில் ஏதோ கனவு உலகத்தில் மிதப்பது போல இருந்தது. ‘நல்ல கனவா இருக்கே…’ என மறுபக்கம் திரும்பிப் பார்த்தால், மாடிப்படிகளின் மேல் தனது உடல் அந்தரத்தில் தொங்குவது போல விளங்கியது.
நிமிர்ந்து பார்த்தால் இளஞ்செழியன் அவளை எங்கோ தூக்கிச் சென்று கொண்டிருந்தான்.
தன் கண்களையே தன்னால் நம்ப முடியவில்லை. “என்ன விடுங்க…. என்ன எங்க தூக்கி போறீங்க…..? ப்ளீஸ்… விடுங்க…. ஏன் இப்படி பண்றீங்க….” என்று அவள் திமிர திமிர வேகமாக அவனது அறைக்குள் அவளை தூக்கிச் சென்று அங்கிருக்கும் மெத்தை மேல் தூக்கிப் போட்டான்.
அவள் மெத்தையின் மேல் விழுந்தவுடன் எழுந்து ஓட முயல, அவனோ ஒரே எட்டில் அவளது கையை பிடித்து இழுத்து மீண்டும் மெத்தையின் மேல் தூக்கி வீசி
“என்ன ஸ்ரீ…. மார்னிங் சொன்னது மறந்துடுச்சா…. என்ன சொன்னான்… இப்ப நீ என்ன செய்ற….. என்கிட்ட இருந்து உன்னால தப்பிக்க முடியாது… எப்படி வசதி நான் சொல்ற செய்றியா…? இல்லனா போ…. இப்பவே இந்த வீட்டை விட்டுப் போ….” என்றதும் கண்களில் கசிந்த நீரை துடைத்து விட்டு எழுந்து தீர்க்கமான முடிவு என்று எடுத்தவளாக வீர நடை போட்டு வெளியேறச் அடியெடுத்து வைக்கும் வேளையில்,
“ஆனால் ஒரு கண்டிஷன்…. வெளியில் நிற்கிற நாய்கள் உன்னை மூன்று துண்டா பிரிச்சு சாப்பிட்டா…. அதுக்கு நான் பொறுப்பில்லை…. பிறகு ஐயோ என்னோட கையை காணல…. ரெண்டு காலை காணல்லன்னு கேட்கக் கூடாது சொல்லிட்டேன்….” என்று திமிராக கூறினான்.
அவன் மறைமுகமாக மிரட்டுகிறான் என்பது நன்றாக அவளுக்கு புரிந்தது. நான் சொல்வதை செய் இல்லாவிட்டால் செத்துமடி என்று சொல்கிறான்.
அவளை நினைத்து அவளுக்கே மிகவும் பாவமாக இருந்தது. வெறுப்பான உன் சிரிப்பை முகத்தில் தவள விட்டுக் கொண்டு “என்ன செய்யணும்….? சொல்லுங்க….” என்று தலை குனிந்தபடி கேட்டாள்.
“ஓ…. தட்ஸ் மை குட் கேர்ள்… நான் தந்த டிரஸ் எல்லாம் எங்கே…?
“அது… வந்து….. அது…” என்று திரு திரு திரு என முழித்துக் கொண்டு தடுமாறினாள்.
“எங்கன்னு சொல்லப் போறியா…? இல்லையா…” என்று குரலை உயர்த்தி மீண்டும் கத்தினான்.
அவன் மிரட்டலைக் கேட்டு அதிர்ந்தவள், “வாஸ்… ரூம்ல…” என்று சப்தமே வெளிப்படாமல் கூறினாள்.
“அதை… எடுத்துட்டு வா…” என்றதும் அவளுக்கு கோபம் வந்தது.
“எதுக்கு…? என்னால அதை போட முடியாது…. நான் இதுக்கு முன்னுக்கு இப்படி எல்லாம் டிரஸ் பண்ணினது இல்ல… நீங்க நினைக்கிற ஆள் நான் இல்லை…. நீங்க ஆள் மாறி என்னை கடத்திட்டு வந்துட்டீங்க…. என் பெயர் ஸ்ரீ……” என்று இழுக்கும் போது அவளது கண்ணன் சிவக்கும் அளவுக்கு அறைந்திருந்தான்.
அவனது திடீர் தாக்குதலில், உடல் விதிர் விதிர்க்க சரிந்து விழ,
“நான் சொன்னா…. நீ செய்யணும்…. அவ்வளவு தான்… வேற கதை எனக்கு தேவையில்லை… மார்னிங் உன்கிட்ட என்ன சொன்னேன்…..? சொல்லு…. என்ன சொன்னேன்…?” என்று அதட்டினான்.
கீழே விழுந்தபடியே கண்கள் இருந்து நீர் வழிய, அழுது கொண்டு, அவனை கண் கொண்டு பார்க்க பிடிக்காமல், தலை குனிந்து “தெரியாது…..” என்று தலையாட்டினாள்.
“எனக்கு முன்…. நீ…. வாயே திறக்க கூடாதுன்னு…. என்ன சொன்னனா…? இல்லையா…?” என்று உறுமினான்.
அவன் குரல் கேட்டு, தற்போது அவளது உடல் வெளிப்படையாகவே நடுங்கத் தொடங்கியது.
“ஆமென…” மேலும் கீழும் தலையாட்ட,
இரக்கமற்ற காட்டு விலங்கை போல “போ…. போய்… அந்த டிரஸ்ல ஒன்ன போட்டுட்டு வா…. போ…” என்றிட, அவளது கால்களோ நகர மாட்டேன் என அதே இடத்தில் நின்றது.
“போன்னு சொன்னேன்….” என்று அருகில் வர, பயந்து திரும்பி பாராமல் ஓஸ் ரூமுக்கு சென்று விட்டாள்.
அங்கிருக்கும் உரைகள் ஒவ்வொன்றையும் பார்த்து “இறைவா…! ஏன் எனக்கு இப்படி ஒரு சோதனை…?” என்று வெளிப்படையாகவே புலம்பி கண்ணாடி பார்த்து கண்ணீர் வடித்தவள், அந்த உடையில் ஒன்றை அணிந்து கொண்டு,
அவனது அறை வாசலிலேயே தயங்கி நின்றவள், ‘இன்னும் எவ்வளவு நேரம் அப்படியே நிற்பது…. எப்படியாவது உள்ளே செல்லத்தான் வேண்டும்…. இங்கே இப்படியே நின்றால், அவன் என்னை விட்டு விடவா போகின்றான்…’ என்று மனதினுள் எண்ணிக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.
இடை தெரியும் வண்ணம் இறுக்கமான டிஷர்ட், முழங்காலுக்கு மேல் சோட்ஸ் அணிந்து கொண்டு, அவர் முன்னே நிற்க, அவளுக்கு மிகவும் கூச்சமாக இருந்தது.
இவ்வாறான உடையுடன் எவ்வாறு யார் என்று தெரியாத ஒரு ஆண்டவனின் முன் போய் நிற்கின்றேன்…. என்று புரியாமல் இப்படியே இங்கேயே ஏதாவது செய்து உயிரை மாய்த்துக் கொள்வோமா…? என்றெல்லாம் அவளுக்கு தோன்றியது
அவனது கண்களில் இமைக்க மறந்தன.
அவனால் ஒரு நிலையில் நிற்க முடியவில்லை. அந்த உடையில் அவள் மிகவும் அழகாகவும், கவர்ச்சியாகவும் இருந்தாள்.
கண்களாலேயே அவளை பருகியபடி மெல்ல மெல்ல ஒவ்வொரு அடியாக அவளை நெருங்கினான்.
மிகவும் விறுவிறுப்பான கதைக்களத்துடன் அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!