அவள் அணிந்திருந்த உடையில் அவளது அழகு மொத்தமும் இளமை செழிப்புடன் வெளிப்படையாக இளஞ்செழியனின் கண்ணுக்கு விருந்தளித்தது.
அவளது அழகினை பருகி ரசித்திட அவனது ஆண்மை மூர்க்கம் கொண்டு முன்னேறி அவள் அருகே நெருங்கிட, அவளோ பயந்த வண்ணம் அவன் வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் இரண்டடி பின்னோக்கி நகர்ந்து கொண்டே இருந்தாள்.
அவளது எண்ணம் புரிந்து இரண்டு எட்டில் அவளது இடையினை சுற்றி வளைத்து அவனது உடலோடு நெருக்கிப் பிடித்தான்.
அவனது திடீர் தீண்டல் அவளுக்கு உடல் மேல் தீயை வாரிக் கொட்டியது போல் தகிக்க தொடங்கியது.
அவளது வதனத்துக்கு அருகில் நெருங்கி “ஓஹ்…. மை டியர் பிரிட்டி கேர்ள்…. நீ இந்த டிரஸ்ல… எவ்வளவு அழகா இருக்க தெரியுமா…? அப்படியே உன் அழகு என்னை பித்தம் கொள்ளச் செய்யுதுடி… ப்ளீஸ் கம் வித் மீ….” என்று அவளது கண்களை உற்று நோக்கி காந்தக் குரலில் கிறக்கத்துடன் கூறினான்.
அவனது வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவளுக்கு அருவருப்பாக இருந்தது. இன்னும் அவளை தன் உடலுடன் இறுக்கி அணைக்க அவளோ அதனை தாங்க முடியாமல் அவனது நெஞ்சில் கைகளால் தடா போட்டு அவனை பின்னோக்கி தள்ளினாள்.
அவனது விரிந்த பரந்த மார்பில் அவளது கை பட்டதும் அவனுக்கு உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது போல் உடல் விரைத்தது. அவளால் முடிந்தவரை அவனில் இருந்து விடுபட முயற்சித்துக் கொண்டே இருந்தாள்.
ஆனால் இருந்தும் என்ன பலன். அது அவனுக்கோ சிறு எறும்பினை கைகளால் சுண்டி விடுவது போல் இருந்தது.
இன்னும் முன்னேறி ஒரு கையினால் அவளை இழுத்து அணைத்துக் கொண்டு, மறு கையால் அவளது உடலில் ஊர்வலம் நடத்தத் தொடங்கினான்.
அப்போது தான் அவளது பெண்மை விழிக்கத் தொடங்கியது. ‘இந்தக் கயவனிடமிருந்து எப்படியாவது என்னையும் என் கற்பையும் காப்பாற்ற வேண்டும்…’ என்ற எண்ணம் கொண்டு திடீரென அவனது கையினை கோபத்துடன் இறுக்கிப் பிடித்தபடி, அவனை அனல் கக்கும் பார்வை பார்த்தாள்.
அவளது பார்வையை பார்த்து சிறிது உள்ளுக்குள் தடுமாறித்தான் போனான் நமது நாயகன். இருந்தும் அதனை வெளிக் காட்டாமல், ஒரு அசட்டு சிரிப்பை சிரித்தபடி பிடித்திருந்த அவளது கைக்கு தனது முதல் முத்தத்தை பரிசளித்தான்.
முன்பின் தெரியாத ஒரு நபர் தன் மேல் இவ்வாறு அத்து மீறி நடந்து கொள்வது அவளுக்கு பெரியதொரு வேதனையை மனதில் ஏற்படுத்தியது. இருந்தும் அவளால் என்ன செய்ய முடியும். அதனை எவ்வாறு தடுப்பது என்று புரியாமல் தன் மேல் தானே கோபம் கொண்டவளாக, விடாப்படியாக தன்னுடைய எதிர்ப்பைக் காட்டத் தொடங்கினாள்.
அப்போது தான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
ஸ்ரீ நிஷா தனது மொத்த பலத்தையும் சேர்த்து இரு கைகளாலும் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு அவனை வேகமாக தன்னிலிருந்து பின்னோக்கித் தள்ள,.
அவள் தள்ளிய வேகத்தில் அவன் கீழே விழுந்து விடுவான் என்று நினைத்தால் ஆனால் அதுவும் அவளுக்கு பெரியதொரு ஏமாற்றம் தான்.
அவள் அவளது முழு பலத்துடனான வரை தள்ள, அதுவோ அவனை இரண்டு அடி மட்டுமே பின்னோக்கி நகரச் செய்தது.
“ஏய்… யாரத் தள்ளப் பார்க்கிறே…. உன்னை….” என்று அடிக்க கையை ஓங்கி வரும் போது அப்போதுதான் அவன் சற்றும் எதிர்பாராத ஒரு விடயம் அங்கு நடந்தேறியது. ஆம் அவனது கால்கள் பின்னி நிலை தடுமாறத் தொடங்கின.
அவனது கண்கள் மேலே சொருக, தலை சுற்றுவது போல இருக்க இரு கைகளாலும் தலையைப் பிடித்து, இரு பக்கமும் தலையை உலுப்பினான். உலகமே சுழல்வது போல அவனுக்கு அனைத்தும் ஆட்டம் கண்டது.
அப்படியே மெதுவாக இரண்டு அடி வைத்து முன்னோக்கி வைத்து தள்ளாடியபடி சரிந்து விழுந்தான் இளஞ்செழியன்.
ஸ்ரீ நிஷாவை பேசியபடி அடிக்க வர கண்களை மூடி கைகளை உயர்த்தி தடுக்க முயற்சித்த படி நின்றவள், என்ன சத்தத்தையே காணல்ல என்று சிறிது நேரத்தில் கண்களை திறந்து பார்த்தால் இளஞ்செழியன் கீழே விழுந்து கிடந்தான்.
பெரிய ஆலமரமே புயலில் அகப்பட்டு சரிந்து வேரோடு விழுந்து கிடப்பது போல இளஞ்செழியன் எந்தவித அசைவும் இல்லாமல் தரையில் விழுந்து கிடந்தான்.
ஸ்ரீ நிஷா அருகில் சென்று மெதுவாக அவனது மூக்கில் கையை வைத்து மூச்சு வருகிறதா? என்று சோதித்துப் பார்த்தால். மூச்சு வருகிறது என்றவுடன் நெஞ்சில் கை வைத்து ஒரு பெருமூச்சு ஒன்றை விட்டு விட்டு அருகில் உள்ள வெறுமையாக இருக்கும் பால் கிளாசினை உற்றுப் பார்த்து சிரித்தாள்.
ஆம், இவை அனைத்திற்கும் காரணம் ஸ்ரீனிஷா தான். தனது பெண்மைக்கு ஆபத்து என்ற உடன் அவள் என்ன செய்வதென்று அறியாமல் இந்த ஒரு வழியைத் தவிர வேறு வழி கிடையாது என்ற முடிவுக்கு வந்து அந்த ஆயுதத்தை கையில் எடுத்தாள்.
அது தான் சூழ்ச்சி. அந்த சூழ்ச்சியை அவள் மிகவும் இலகுவாகவே செய்து முடித்தாள. இருந்தும் அவளது மனதில் ஒரு சிறு படபடப்பு இருந்து கொண்டே இருந்தது. எப்படியும் கண்டுபிடித்து விடுவானோ..? என்ற ஒரு சிறு பயம் அவளது நெஞ்சில் தொற்றிக் கொண்டே இருந்தது.
அப்படி இளஞ்செழியன் மயங்கி விழுவதற்கு ஸ்ரீ நிஷா என்ன தான் செய்தாள்…? அந்த கிளாசை கையில் எடுத்து அதீத சந்தோஷத்தில் அதற்கு ஒரு சிறு முத்தத்தை பரிசளித்து நன்றி கூறி அதை நன்கு உற்று நோக்கினாள்.
ஆம், அது மயக்க மருந்து தான். ராமையா எப்போதும் தூங்கு முன்னர் பாலில் தூக்க மாத்திரை போட்டு கலந்துக் குடித்து விட்டு தூங்குவார். அது அவருக்கு பழக்கம் ஆகி விட்டது. அன்றும் ஸ்ரீநிஷா இதை கவனிக்க, “என்ன ராமையா…? ஏன் இப்படி மாத்திரை போட்டு தூங்குறீங்க….? உங்களுக்கு ஏதும் நோய் இருக்குதா…?” என்று கேட்க,
“இல்லம்மா… எனக்கு 40 வயசுக்கு பிறகு தூக்கம் ரொம்ப ரொம்ப குறைவு… டாக்டர் கிட்ட போய் கேட்டா…. அந்த வியாதி… இந்த வியாதி… அந்த டெஸ்ட் எடுங்க…. இந்த டெஸ்ட் எடுங்கன்னு….
ஒரே தொல்லை பண்ணுறாரு…. பிறகு நானே போய் மருந்து கடையில தூக்க மாத்திரை வாங்கி தூங்குவதற்கு முன்னுக்கு பாலோடு சேர்த்து கலந்து குடிச்சிட்டு தூங்கிடுவேன்…. ஆனால் நல்ல மாத்திரை…. ஒரு மாத்திரை போட்டாலும் இரவு 10 மணிக்கு தூங்கினா…. காலைல 6 மணி மட்டும் கண் திறக்கவே மாட்டேங்குது….
என்ன சத்தம் கேட்டாலும் எழும்பவே இயலாது… ஏன் இடியே விழுந்தாலும் கண் திறக்கவும் முடியாது….. நல்ல மாத்திரை….. எத்தனை வருஷமா…கிட்டத்தட்ட 20 வருஷமா… இந்த மாதிரி மாத்திரை குடிச்சுகிட்டு வாரேன்…” என்று இராமையா கூறினார்.
அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஸ்ரீ நிஷா “அச்சச்சோ….! அப்படி தொடர்ந்து பாவிக்க கூடாது…” என்றிட ராமையாவோ “இனி உடம்புக்கு ஏதும் ஆனா என்ன….? ஆகலைன்னா என்னம்மா…?” என்று சொல்லிவிட்டு அந்த மாத்திரையை எடுத்து சமையல் அறையில் உள்ள பொருட்களுடன் வைத்துவிட்டு சென்றுவிட்டார்.
அதனைப் பார்த்து இருந்த ஸ்ரீநிஷா இன்று தனது கற்பை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டு என்ன செய்வதென்று அறியாமல் இளஞ்செழியன் உணவு உண்டு சென்ற பின்னர் ஏதாவது திட்டம் போட்டு இங்கிருந்து சென்றிட வேண்டும் என்று எண்ணி மண்டையை குடைந்து கொண்டிருக்கும் போது இந்த மாத்திரை நினைவுக்கு வந்தது.
உடனே அவன் குடிக்கும் பாலில் இரண்டு மாத்திரைகளை போட்டு அப்படியே வைத்து விட்டு வந்து விட்டாள். ‘அவன் எப்படியும் குடிப்பான் என்று ஸ்ரீ நிஷாவுக்கு தெரியும்.
அவன் நித்திரை ஆன பின்பு இங்கிருந்து எப்படியாவது தப்பித்து ஓடணும், சரோஜா அம்மா கவலையுடன் தேடிக்கிட்டே இருப்பாங்க…..’ ஆம், சரோஜா என்பது அவளது அன்பு இல்லத்தில் பொறுப்பாக நடத்தி வருவது சரோஜா தேவி என்பவர் தான்.
அந்த அன்பு இல்லத்தை கிட்டத்தட்ட 30 வருடங்களாக பொறுப்பாக நல்ல விதத்தில் நடத்தி வருகின்றார். அங்குள்ள தாய் தந்தையற்ற பிள்ளைகளுக்கு இவர் தாயாகவும், வயது சென்றவர்களுக்கு மகளாகவும் இருந்து அன்புடன் பணிவிடை செய்து வருகின்றார்.
ஸ்ரீனிசா மீதும் இவருக்கு அதீத அன்பும் உண்டு ஸ்ரீநிஷா எத்தனை நாட்கள் காணவில்லை என்றதும் அவர் பரிதவித்து தேடிக் கொண்டுதான் இருப்பார் அது ஸ்ரீ நிஷாவுக்கு நன்றாகவே தெரியும்.
முதலில் இங்கிருந்து தப்பித்து சென்று அவரிடம் இங்கு நடந்த அனைத்து விடயங்களையும் சொல்லி இவனை முதல் ஜெயிலில் தள்ள வேண்டும் என்று ஒரு உத்வேகம் பிறக்க உடனே வாஷ் ரூமுக்குச் சென்று தனது பழைய உடையை அணிந்து விட்டு வேகமாக அவன் விழுந்து கிடக்கும் அறையினுள் சென்று அவனை எட்டிப் பார்த்து விடலாம் என்று எண்ணியவள் பின்பு எழுந்து விடுவானோ என்று பயம் தொற்றிக் கொள்ள உடனே புயல் வேகத்தில் வீட்டிலிருந்து வெளியேறினாள்.
வெளியேறியதும் ஒரு சுதந்திர காற்று அவள் மீது வந்து மோதிச் சென்றது. அதனை நன்கு உள்வாங்கியபடி பெருமூச்சொன்று எடுத்து விட்டு, சுற்றும் முற்றும் பார்த்தால், இது எந்த இடம்…? எந்த ஊர்…? என்று ஒன்றும் புரியாமல் இரவு வேளையில் பயத்தைக் கையில் ஏந்தி கொண்டு, எங்கு செல்கின்றோம் என்று தெரியாமல் கண்ணுக்கு தெரியும் வழியில் சரியா தவறா என்று ஒன்றும் யோசிக்காமல் வேகமாக ஓட்டமும் நடையுமாக ஏதாவது வாகனம் வந்தால் அதில் லிஃப்ட் கேட்டு சென்று விடலாம் என்று ஓடினாள்.
ஓடி ஓடி ஓடி கால்கள்
தோய்ந்து போனது. எங்கோ தூரத்தில் நாய் ஊளையிடும் சத்தம் எல்லாம் கேட்டது. அவளுக்கு இதயம் படபட என்று அடித்துக் கொண்டே இருந்தது.
இருந்தும் ஊரில் உள்ள அனைத்து தெய்வங்களையும் கும்பிட்டபடி வேகமாக ஓட, வீதியின் அருகில் இருக்கும் குப்பை தொட்டிகளில் அருகே படுத்திருந்த நான்கு நாய்கள், ஸ்ரீ நிஷா ஓடியதைப் பார்த்து அதிர்ந்து, குரைத்தபடி எழுந்து அவளை துரத்த தொடங்கியது.
நாய்கள் துறத்தி வருவதை பார்த்து, வேகமாக ஓடிச் சென்றவள், எதிரில் வந்த ஜுப்பை பார்க்காமல், அது அவளை வேகமாக வந்து மோதப் பார்க்க அந்த பயத்திலேயே மயங்கி விழுந்தாள்.
ஆனால் அவளை நெருங்கி வந்த அந்த ஜீப், அவளுக்கு மிகவும் அருகில் வந்து சடாரென பிரேக் அடித்து நின்றது.
ஜீப்பில் இருந்து இறங்கி வந்த நபர் அவளை பார்த்து “கோழி… தொக்கா வந்து நம்மகிட்ட மாட்டிகிட்டு…” என்று ஆக்ரோசமாக சிரித்தார்.
அப்படி அந்த ஜீப்பில் இருந்து இறங்கி வந்த நபர் யார்..? ஏன் ஸ்ரீனிஷாவை பார்த்து அவ்வாறு கூற வேண்டும்….
விறுவிறுப்பான களத்துடன் அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்.