பகலவன் தன் ஆட்சியை கதிர்கள் மூலம் ஆட்கொண்டு வரும் அவ்வேளையில் இளஞ்செழியன் மெது மெதுவாக கண்களை திறந்து பார்த்தான். கண்களில் சூரிய ஒளி பட்டதும் கூஷத் தொடங்கின.
தலை லேசாக வலிக்க தொடங்கியது. எழுந்து மெதுவாக இருந்து, தலையை இரண்டு கைகளாலும் அழுத்திப் பிடித்த வண்ணம் சிறிது நேரம் அப்படியே இருந்தான்.
அப்போது தான் அவனுக்கு ஒரு விடயம் நினைவுக்கு வந்தது. ‘நான் மெத்தையில் உறங்காமல் ஏன் கீழே வெறும் தரையில் படுத்து இருக்கின்றேன்…’ என்று அவன் சிந்திக்கும் போது தான் தலையில் ஆணியால் அடித்தது போல் அவனுக்கு ஒரு உண்மை நன்றாக உரைத்தது. நேற்று இரவு நடந்தவை அனைத்தும் கனவு போல கண் முன்னே வந்தன.
‘அப்ப… ஸ்ரீ வீட்டை விட்டு தப்பிச்சு போயிட்டாளா…?’ என்று அதிர்ச்சியுடன் எழுந்து வீடு முழுவதும் ‘ஸ்ரீ…. ஸ்ரீ….’ என வானில் உள்ள மேகங்கள் கலைந்து செல்லும் அளவுக்கு இளஞ்செழியன் கத்தி கூச்சலிட்டான்.
பாத்ரூமில், வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையிலும், கிச்சனிலும், தோட்டத்திலும் என ஒவ்வொரு இடங்களிலும் விடாமல் தேடினான்.
அவனுக்கு கோபம் வானளவு உயர்ந்து கொண்டே சென்றது. பாத்ரூமில் உள்ள கண்ணாடியில் தன்னைத் தானே பார்த்து, ‘செழியா…! உன்னை ஒருத்தி ஏமாற்றி விட்டு சென்று விட்டாள்…. அதுவும் ஒரு பெண், அவ்வளவு முட்டாளாகவே இருந்திருக்கிறாய்….
அப்பாவி போல இருந்து கொண்டு என்ன வேலை செய்திருக்கின்றாள்…? ச்சே…. நீ எல்லாம் ஒரு ஆணா…? ஆண் வர்க்கத்துக்கு வந்த சாபம் நீ…. அவளுக்காக பாவம் பார்த்தாய் அல்லவா…. உனக்கு நன்றாக வேண்டும்… பெண்ணிடம் தோற்று வாழ்வதெல்லாம் ஒரு வாழ்க்கையா…?’ என்று அவனது மனசாட்சி அவனைப் பார்த்து காரி உமிழ்ந்தது.
அவனது ஏமாற்றம் அவள் மீது இன்னும் வெறுப்பை அதிகரிக்கச் செய்தது. அவள் இந்த வீட்டில் இல்லை என்ற எண்ணமே அவனை மீண்டும் மீண்டும் நரகத்திற்குள் தள்ளும் வேதனையை உண்டு பண்ணியது.
‘அவளை எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டும்…’ என்று மனம் மீண்டும் மீண்டும் வெறி பிடித்தது போல திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தது.
‘எங்கு சென்று இருப்பாள்….? எப்படி சென்று இருப்பாள்…? என்னை எப்படி ஏமாற்றினாள்…? நான் எப்படி தூங்கினேன்…?
சாப்பாடு…. அஹ்…. சாப்பாட்டுல தான் ஏதோ கலந்து இருக்கணும்…..’ என்று அவனது மனம் கிட்டத்தட்ட சரியாக நடந்த ஒவ்வொன்றையும் ஆராய்ந்து கணித்தது.
அவளை கண்டுபிடிப்பது எவ்வாறு என அவன் அடுத்தடுத்து திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தான். அவளது இந்த செயல் அவனை ஒரு முழு ராட்சச மிருகமாக மாற்றிக் கொண்டிருந்தது.
அவள் மேல் இருந்த கோபம் அவனே ஒரு அரக்கனாகவே மாற்றியது.
அவனுக்கு மீண்டும் மீண்டும் அவள் தந்த ஏமாற்றத்தை தாங்க முடியாமல், அப்படியே அருகில் இருந்த தொலைக்காட்சியினை தூக்கி
“ஆஆஆஹ்ஹ்ஹ்…………..”. என்று ஆக்ரோஷமாகக் கத்திக் கொண்டு தரையில் வீசி எறிந்தான்.
அது நொறுங்கி சின்னாபின்னமாக சிதறிக் கிடந்தது. அந்தக் கண்ணாடி துகள்களில் தெரியும் அவனது முகம் அவனைப் பார்த்து முட்டாள், முட்டாள் என்று கேலி செய்தது.
அந்நேரம் காலிங் பெல் அடிக்கும் சத்தம் வெளியே கேட்க, ‘இந்நேரம் யாராக இருக்கும்…’ என்று யோசித்து விட்டு, குளியலறை சென்று முகத்தை நன்கு கழுவி, தனது கோபத்தினை கட்டுக்குள் கொண்டு வந்த பின்னரே கீழே வந்து கதவைத் திறந்தான்..
திறந்ததும் வாசலில் ராகுல் வாயில் உள்ள அவ்வளவு பற்களும் தெரிய சிரித்த முகமாக வந்து அவன் முன் நின்றான். இளஞ்செழியன் ‘இவன் வேற நேரம் காலம் புரியாம தந்து தொல்ல பண்ணிக் கொண்டிருக்கிறான்…. இன்னைக்கு செமையா வேண்டிட்டு போகப் போறான்…. இரிடேடிங் இடியட்….’ என்று அவனை மனதிற்கு திட்டிக் கொண்டு முறைத்துப் பார்க்க,
ராகுல் “என்ன சார்…? உள்ள வான்னு கூப்பிட மாட்டீங்களா…?
“இல்லை…. போன்னா… போயிடவா போற…. சரி…. உள்ள வா….” என்று சலிப்புடன் உள்ளே அழைத்தான்.
“உங்களுக்கு ஒரே ஜோக் சார்…” ஒன்று கூறிக்கொண்டே உள்ளே வந்து சோபாவில் அமர்ந்தான்.
“அப்புறம் சார்…. எப்படி சுகம்…..”
“சுகம் எல்லாம் இருக்கட்டும்… என்ன விஷயம்…? முதல் அதைச் சொல்லு…..”
“வாவ்… எப்படி கண்டுபிடிச்சீங்க…? இருந்தாலும், நீங்க ரொம்ப இன்டெலிஜென் சார்….” என்று ராகுல் கூற ஏற்கனவே வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல அவனது வார்த்தைகள் குத்தீட்டியாக குத்தியது.
“உங்களுக்காக ஒன்னு கொண்டு வந்து இருக்கேன்…. என்னன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்….?” என்று கூறி சோபாவில் சாய்ந்து கொண்டு கூலாக விசில் அடித்தான்.
‘என் உயிரை வாங்குவதற்கென்றே வந்து இருக்கான்… இவன…..’ என்று மனதிற்குள் கடிந்து கொண்டு, “போலீஸ் சார்…. எனக்கு இப்போ உங்களோட விளையாட டைம் இல்ல… வந்த வேலை என்னன்னு சொல்லிட்டு சீக்கிரம் கிளம்புறீங்களா…? எனக்கு நிறைய வேலை இருக்கு…. உங்களோட கண்ணாமூச்சி ஆடுறதுக்கு எனக்கு டைம் இல்ல…” என்று சிடுசிடுதான்.
“அச்சோ…! என்ன சார்…? வேணும்னா ஒரு குழு தாரேன்…. நீங்க என்கிட்ட கேட்ட பொருள்…. அத பாத்தீங்கன்னா நீங்க ரொம்ப சந்தோஷப்படுவீங்க… அது என்னன்னு…. கண்டுபிடிங்க பார்ப்போம்…” என்று விடுகதையாகக் கூறினான்.
இவன் முகர கட்ட இன்றைக்கு உடைய போகுது என்று மனதிற்குள் அர்ச்சனை செய்தபடி “ராகுல்…. ப்ளீஸ்…. டோன்ட் டு திஸ்…. சில்லி….” என்று அவன் கடிந்து கொள்ள, ராகுலுக்கு ‘இனிமேல் இவனுடன் கதைத்து பிரயோசனமில்லை….’ என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.
நீங்க ஒரு போட்டோ அனுப்புனீங்க…. அதுல இருக்கிற பொண்ண கண்டுபிடிச்சு தர சொல்லி கேட்டீங்களே…! ஞாபகம் இருக்கா…? அந்தப் பொண்ணு நான் கண்டுபிடிச்சிட்டேன்… இப்ப அவ என் கஷ்டடியில தான் இருக்கா….” இன்று ஜாலியாகக் கூறினான்.
அவனை சிறிதும் பொருட்படுத்தாமல் எங்கோ பார்த்துக் கொண்டு இருந்த இளஞ்செழியன். அவன் கூறியப வார்த்தையைக் கேட்டதும், அனைத்தும் மறந்து அவனது தலை அதிர்ச்சியுடன் அவனை நோக்கி சாடார் எனத் திரும்பியது.
புருவங்களை சுருக்கி அவனை உற்றுப் பார்த்து “வாட்…. கம் எகைன்…” என்று வார்த்தைகள் அவனை மீறி வெளி வந்தன.
‘இவன் சொல்வது உண்மை தானா.. ?’ என்று கூட மனதிற்குள் ஒரு சந்தேகமும் முளைத்தது.
‘இவன் காசுக்காக எதையும் செய்யக் கூடியவன்…. இப்படி பொய் சொல்லி…. என்னிடம் பணம் பறிக்க தான் வந்திருக்கின்றானோ…’ என்று கூட மனம் கேள்வி ஒன்றை எழுப்பியது.
அவனது சிந்தனை ஓட்டங்கள் அனைத்தையும் ஒத்தி வைத்து விட்டு “ஓகே… அந்த பொண்ண… இப்ப எங்க வெச்சிருக்க… நான் நேர்ல பார்த்தா தான் உனக்கு தேவையானதை என்னால தர முடியும்….” என்று அவன் கூற,
“என்ன சார்…? நான் பொருள் இல்லாமல் உங்களைத் தேடி வருவனா..? இதோ…. ஜீப்ல தான் இருக்கு…. வாங்க காட்டுறேன்….” என்று வெளியே கூட்டிச் சென்றான்.
செழியன் ராகுல் செல்வதற்கு முன் வேக நடையுடன் சென்று ஜிப்பின் கதவினை திறந்து பார்க்க ஸ்ரீ நிஷா கண்கள் அயர்ந்து மயக்கத்தில் ஜீப்பின் பின் சீட்டில் படுத்து இருந்தாள்.
உடனே புருவம் உயர்த்தி கேள்வி தோரணையுடன் “அவளுக்கு என்ன ஆச்சு…” என்று முறைத்த படி கேட்டான்.
அதைப் பார்த்து மிரண்டு போன ராகுல், “அது ஒன்னும் இல்ல சார்… சின்ன மயக்கம் தான்… இப்ப எழுந்துருவாங்க… வேணும்னா தண்ணி தெளிச்சு எழுப்பி விடவா…” என்றிட, அதற்கு ஒரு முறைப்பை பரிசளித்து விட்டு அவனைத் தாண்டிச் சென்று,
அவளை அப்படியே தூக்கி மெதுவாக தனது பிரத்யேக அறைக்குள் சென்று மெத்தையில் படுக்க வைத்து விட்டு அவளை உற்றுப் பார்த்தான்.
அந்தப் பார்வை கோபத்தை, ஏமாற்றத்தை, சந்தோசத்தை, கவலையை என பல அர்த்தங்களை தாங்கி நின்றது.
எவ்வளவு நேரம் அவளை அப்படியே பார்த்துக் கொண்டு நின்றானோ தெரியவில்லை. வெளியே சிறு
சத்தம் கேட்டு, சிந்தனை கலைந்து, அறையை விட்டு வெளியே வந்து ராகுலை காணச் சென்றான்.
இரண்டு நிமிடங்களில் கண் விழித்த ஸ்ரீ நிஷா, கண்களைத் திறந்து பார்க்கும் போது ஏதோ ஒரு பழக்கப்பட்ட இடத்தில் இருப்பது போலவே இருந்தது. ‘கனவாக இருக்குமோ… நான் தான் இரவு தப்பியோடி வந்து விட்டேனே…! அப்படி என்றால் நான் எங்கேயும் போகவில்லையா…? இல்லையே… இளஞ்செழியனுக்கு தூக்க மாத்திரை கொடுத்துட்டு நான் வெளியில் வந்தேன்….
அப்புறம்…… நாய் துரத்துச்சி….. அப்புறம்….. அப்புறம்…. அப்புறம்…. ஜீப் வந்து மோதிச்சு….’ என்று யோசித்து தனக்குள் தானே குழம்பிக் கொண்டிருக்கும் போது கதவு திறக்கப்பட்டது.
இளஞ்செழியன் மானை வேட்டையாடும் சிங்கம் போல வேக நடையுடன் உள்ளே நுழைந்தான். அவனது கோபம் கக்கும் பார்வை அவளை நன்றாகவே உள்ளுக்குள் அதிர வைத்தது.
அவனது பார்வை குத்தீட்டி போல அவளது நெஞ்சைக் குடைய “என்ன தைரியம் இருந்தா… நீ இந்த வீட்டை விட்டு தப்பிக்க நினைச்சிருப்ப… உனக்கு இதுக்கு சரியான தண்டனை கட்டாயமாகக் கிடைக்கும்…. வெயிட் அண்ட் சீ…. இந்த இளஞ்செழியன் யார் என்று உனக்கு தெரியலல்ல…..
இனிமே யாருன்னு நான் காட்டுறேன் பாரு…. பாவம் பச்ச பிள்ளைன்னு விட்டா….. நீ ரொம்ப தான் ஓவரா பண்ணுற…. உன்னோட ஆட்டமெல்லாம் இன்னையோட க்ளோஸ்…” என்று கர்சித்து விட்டு சென்று விட்டான்.
அவன் பேசி விட்டு சென்ற பிறகு இடி இடித்து ஓய்ந்தது போல இருந்தது. அவளது சிந்தனை எல்லாம் எவ்வாறு…? எப்படி…? இங்கே நான் திரும்பியும் வந்தேன்… என்னடா இது…?’ என்று யோசித்தபடி ‘என்ன வெளியே சத்தமா இருக்கு…’ என்று எழுந்து மெதுவாகக் கதவைத் திறந்து சற்று எட்டிப் பார்த்தவள்,
இளஞ்செழியனுடன் ஒரு போலீஸ் அதிகாரி பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்து போனாள்.
அப்படியே அவர்கள் தங்களுக்குள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று மெதுவாக கதவின் அருகில் இருந்து காது கொடுத்து கேட்டுக் கொண்டிருந்தாள்.
“செழியன் சார்…. நீங்க சொன்ன மாதிரியே…. அந்த பொண்ண…. நான் கண்டுபிடிச்சு… கொண்டு வந்துட்டேன்…. அப்படியே….!” என்று தலையைச் சொறிந்தான்.
அவன் என்ன கேட்க வருகின்றான் என்பது நன்றாக இளஞ்செழியனுக்கு புரிந்தது. ஆனால், அவனுக்கு அதை விட அவனது முட்டாள்தனத்தை எண்ணி தான் பெரும் கோபம் எழுந்தது.
அதை வெளிக் காட்டாமல் இருக்க,, அவனும் “நான் எங்கெல்லாம் தேடினேன் தெரியுமா…? இந்த பொண்ணத் தேடாத இடம் இல்லை… வலை வீசி தேடி…. இராப்பகலா சாப்பிடாம….. தூங்காம…. உங்களுக்காக கஷ்டப்பட்டு கண்டுபிடித்து இருக்கேன் சார்… டூ, த்ரீ டேசா… நான் ஸ்டேஷனிலேயே இல்ல.. எவ்வளவு வொர்க் பிரஷர் தெரியுமா… ஆனால்,
இருந்தும் உங்களுக்காக…. எல்லா வேலையும் விட்டுட்டு… இந்த பொண்ண தேடுறதிலேயே குறியாக இருந்தேன்…” என்று அவன் இடைவிடாது அவன் பொய்களை அடுக்கிக் கொண்டு போக ஒரு கட்டத்திற்கு மேல் இளஞ்செழியனால் பொறுமை காக்க முடியவில்லை.
ஃபேண்ட் பாக்கெட்டுக்குள் இருக்கும் பணத்தினை அள்ளி அவனது மூஞ்சில் விசிறி அடிக்க,
ராகுல் பல்லை காட்டிக் கொண்டு அதனை ஒவ்வொன்றாக பொறுக்கி எடுத்தான்.
“ராகுல்…! உன்ன மாதிரி என்னையும் ஸ்டுப்பிட்ன்னு நினைச்சியா…?/ நீ அவளை நான் எப்போதோ தூக்கிட்டேன்… ரெண்டு நாளா அவ என் கூடத்தான் இருந்தா…. ஆனா ஒரு சின்ன மிஸ்டேக் அவ நான் கண்ணசரத நேரம் தப்பிச்சு ஓடிட்டா, ஓடி அந்த நேரம் பார்த்து நீ வர…. உன் கண்ணுல மாட்டி இருப்பா… நீ ஒன்னும் அலைந்து திரிந்து….. அவளை கண்டுபிடிக்கல்ல…. எனக்கு நல்லா தெரியும்…. இந்த பொய்யெல்லாம் நீ உன்னோடு வெச்சிக்கோ….
என்கிட்ட இதெல்லாம் செல்லாது…. மைண்ட் இட்…. அடுத்த தடவை இப்படி எல்லாம் சொல்லிக்கிட்டு இந்தப் பக்கம் வராத… வெளிய போ… கெட் அவுட்….” என்று உறுமினான்.
அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து ஸ்ரீநிஷா தலையில் கை வைத்து அப்படியே அதே இடத்தில் அமர்ந்து விட்டாள்.
“என்ன கொடுமை சரவணா…? திருடனுக்கு பயந்து போலீஸ் கிட்ட ஓடினா…. போலீஸ் அதைவிட திருடனால்ல இருக்கான்…. இவர்களை என்ன செய்வது…,? இந்த நாடு எப்படி உருப்படப் போகுதோ…? கடவுளுக்கு தான் வெளிச்சம்…” என்று தன்னைத்தானே நொந்து கொண்டவள்,
எப்படியாவது இவனிடம் இருந்து தப்பிக்க வேண்டும்…. அடுத்தது என்ன செய்யலாம் என்று மண்டையை குடைந்து கொண்டு திட்டம் தீட்டி கொண்டிருந்தாள்.
அப்பொழுது இளஞ்செழியன் ராகுலை அனுப்பிவிட்டு அசுர வேகத்தில் ஸ்ரீ நிஷா இருக்கும் அறைக்குள் நுழைந்து, “என்ன எப்படி தப்பிக்கிறது என்று யோசிச்சிட்டு இருக்கியா…?” என்று கேட்க ‘அய்யய்யோ… கண்டுபிடிச்சிட்டானே…’ என்று மனதிற்குள் நினைத்து விட்டு இல்லை என்று தலையாட்ட,
“இல்ல… நீ ட்ரை பண்ணித்தான் பாரேன்…. நாம் வெளிப்படையா சவால் விடுறேன்…. உன்னால முடிஞ்சா இங்கிருந்து தப்பிச்சு போ பாக்கலாம்…. ஓகே அது இருக்கட்டும்….. பனிஷ்மென்ட் இருக்குனு சொன்னல்ல….” என்று அவன் கூறிய பனிஷ்மென்டை கேட்டு அவ்வளவு உடல் பெரும் ஆட்டம் கண்டது.
அப்படியே அவன் கூறிய விடயம் தான் யாது….? அப்படி என்ன பனிஷ்மென்ட் இருக்கும்….?
திடீர் திருப்பங்களுடன் அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்..