வஞ்சம் – 9
அவன் கூறிய பனிஷ்மெண்டை கேட்டதும் அவளது உடல் நடுங்குவது வெளிப்படையாகவே விளங்கியது.
“என்ன ஸ்ரீ…? உனக்கு ரொம்ப பிடிச்ச வேலை போல… இப்பவே அதை செய்து முடிக்கணும்…. ஓகே…” என்று அதிகாரத்துடன் ஆணையிட்டான்.
அவளால் என்ன செய்வது என்று புரியாமல் திகைப்பு வேறு பயம் வேறு அவளை ஆட்கொண்டது. இருந்தும் மெதுவாக வாயைத் திறந்து, “நோ… என்னால முடியாது…” என்று மென் குரலில் கூறினாள்.
“ஏன் முடியாது…? என் செல்லக் குட்டிகளை நீ தான் குளிப்பாட்டனும். இது சின்ன வேலை தான்… பாவம் என்று உனக்கு பனிஷ்மென்ட குறைத்து தந்திருக்கேன்…. அடுத்த முறை இதை விட மோசமா இருக்கும்…. பி கெயார் ஃபுல்…” என்றிட,
முகத்தை அஷ்ட கோணலாக வைத்துக் கொண்டு “அதுங்க செல்லக்குட்டிங்களா….? மூன்றும் குட்டி யானைகளுக்கு சமம்….” என்று அழகு காட்டினாள்.
“ஏய்… என்னோட லைக்கா, டைகர், சிம்பா இந்த மூன்றும் எங்களோட குடும்பத்துல ஒருத்தர்….. நீ வெளியே போனதுக்கு இதுதான் பனிஷ்மென்ட்…. அவங்கள குளிப்பாட்டு போ….”
“அந்த மூனும் என்னை பார்த்த உடனே…. சிக்கன் மீல்ஸ பார்த்த மாதிரி…. எகிறி பாய்துகள்…. நோ என்னால முடியாது…. ப்ளீஸ்……” என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு, கண்களை சுருக்கி சிறுபிள்ளை போல அவனிடம் கெஞ்சினாள்.
கைகளை கட்டிக்கொண்டு நிமிர்ந்து நின்றபடி “நீ இதை செய்யலன்னா…. இன்னைக்கு நைட் அவங்களோட தான் ஸ்டே பண்ணனும்…. ஓகேயா….” என்று திமிராக கூறினான்.
அவள் இதனை எப்படியாவது அவனிடம் கெஞ்சி கேட்டு இதிலிருந்து எப்படியாவது தப்பிக்கலாம் என்று பார்த்தால் அவன் அது செய்யாவிட்டால் அதற்கு மேலும் அந்த நாய்களுடன் சேர்த்து கட்டி போடுவது என்று சொன்னதும், பயத்தில் நாக்கு உலர “நாய்…. நா….ய்….க…..ளோ….ட என்… என்…. எ…ன்…னை…யு…ம் சேர்த்து கட்டி போட போறீங்களா…..?” என்று நெஞ்சில் கை வைத்தபடி அப்படியே நின்றாள்.
“அவங்கள நாய்கள் என்று சொல்லாதே…! எனக்கு கோபம் வருது… என்ன காரியம் செய்த… எனக்கு பால்ல தூக்க மாத்திரை போட்டு தூங்க வச்சிட்டு… இங்கே இருந்து தப்பிச்சு போக ட்ரை பண்ணி இருக்கே…
இதுக்கு நான் உன்ன கொலையே பண்ணி இருக்கணும்… சும்மா விட்டுட்டேன் என்று சந்தோஷப்படு ….. என்னைய பத்தி தெரியல உனக்கு… இனி தான் தெரிய வரும்… அப்போ ஏன் இப்படி செஞ்சேன்னு… ரொம்ப பீல் பண்ணுவ…” என்று அவளை திரும்பிப் பார்த்து முறைத்தபடி அருகில் வந்தான்.
அவளோ பின் நகர்ந்தபடி ‘அச்சச்சோ… அனைத்தையும் பக்கத்திலிருந்து பார்த்தது போல சொல்றானே..!’ என மனதிற்குள் நினைத்தபடி திரு திரு என முழித்தவள்,
‘இதற்கு மேலும் இவனிடம் வாதிட முடியாது.
அப்படி ஏதும் செய்தால், இதை விட கொடூரமான வேலைகளை தந்து விடுவான்..’ என்று எண்ணி அவள் அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்று,
சமையலறையில் எதையோ தேடிக் கொண்டிருக்க யாரோ மிக நெருக்கமாக பின்னே வந்து நிற்பது போல தோன்றியது.
திடீரென திரும்பி பார்த்தால் இளஞ்செழியன் அவளது உடலுடன் உடல் உரச மிகவும் நெருக்கமாக நின்றான். அவளோ இதனை சற்றும் எதிர்பார்க்காமல், என்ன செய்வது என்றும் புரியாமல் அவ்விடத்தை விட்டு நகர முயற்சிக்க கையால் மரித்து அணை கட்டினான் அப்பேதையவளை.
மீண்டும் மறுபக்கம் நகர்ந்து போக எத்தணிக்க, மறு கையை அவளது பூ போன்ற மென்மையான இடையின் மேல் பதித்தான்.
மிக மிக நெருக்கமாக அவனது உடல் அவளது மேனியை உரச, அவனது கண்கள் இரண்டும் அவளது திராட்சை விழிகளைப் பார்த்த வண்ணம் மேலும் நெருங்க, அவளோ பின்னால் நகர முடியாமல் விக்கித்து போய் நின்றாள்.
அவனது தொடுகை அவளுக்கு மேலும் அருவருப்பை தூண்டியது. அந்த உணர்வை முகத்தில் தேக்கி வைத்துக் கொண்டு, “உங்களுக்கு என்ன வேணும்…? ப்ளீஸ் கொஞ்சம் தள்ளி நில்லுங்க…” என்று கூறினாள்.
இளஞ்செழியன் கண்களில் போதையுடன் தேனை குடிக்க வரும் வண்டு போல அந்த உணர்வலைகளில் சிக்கித் தவித்தபடி காந்தக் குரலில் “என்ன வேணும் என்று சொன்னால், உடனே கிடைத்திடுமா…?” என்று புருவம் உயர்த்திக் கேட்டான்.
முதல் அவன் கூறிய விடயங்கள் அவளுக்கு பெரிதாக மூளைக்கு எட்டவில்லை. சில மணித்துளிகளின் பின் இரட்டை பொருள்பட அவன் கூறியது யாதென புரிந்த உடன் அவ் வார்த்தைகள் எரிச்சல் ஊட்டின.
அவளது பட்டு போன்ற மென்மையான இதழ்களைப் பார்த்து, அவன் ஒரு நிமிடம் அசந்துதான் போனான்.
அந்த இதழ்களின் நாட்டியம் அவனை உள்ளுக்குள் சீண்டி கொண்டிருந்தன.
“எனக்கு என்ன வேணும்னா…” என்று மெது மெதுவாக அவளது கன்னத்திற்கு அருகில் அவனது முகத்தினை கொண்டு வர, அவளோ மறுபக்கம் திரும்பிக் கொண்டாள்.
அவளது செயல்களைப் பார்த்த மனது மேலும் அவளை தூண்டிப் பார்க்க அடம் பிடித்தது.
இப்பொழுது அவனது கைகள் அவளது முகத்தை தன் பக்கம் நிமர்த்தி பிடித்து, தனது இதழ் அருகில் அவளது வதனத்தை இழுக்க,
அவன் செய்யப் போகும் விபரீதத்தை அறிந்த ஸ்ரீநிஷா கண்களை இறுக்கி மூடியபடி அவனிலிருந்து விடுபட திமிறிக் கொண்டிருந்தாள்.
மிக அருகில் வந்து அவளது இதழ்களை தன் இரு விரல்களால் சுருக்கி பிடித்து அதன் மென்மையை உணர அவா கொண்டு, உதட்டோடு தன் இதழ்களை உரசி, அதன் மென்மையை உள்வாங்கியவனுக்கு, போதை தலைக்கு மேல் ஏறியது.
தன்னை கட்டுக்குள் கொண்டு வர சிரமப்பட்டு கொண்டு, அவள் கண்களை திறக்கும் வரை அப்படியே அவளையே பார்த்த வண்ணம் அருகில் நெருங்கி நின்றான்.
அவள் அவ்வளவு அழகாக அவனது கண்களுக்கு விருந்தளித்தாள். அந்த அழகு ஒவ்வொன்றையும் இஞ்சி இஞ்சாக ரசிக்கத் தொடங்கியிருந்தான்.
எந்த அசைவும் இல்லாமல் இருக்க, போய்விட்டானாக்கும் என்று கண்களைத் திறந்தால், கண் முன்னே அப்படியே அசையாமல் நின்று அவளை விழுங்குவது போல பார்க்க, அவளது கண்களோ அப்பாவியாக ஓராயிரம் கதைகளை அவனுக்கு மொழிந்தன.
அதனை சிறிது நேரம் ரசித்தபடி நின்றவன், அப்போது தான் சுயம் பெற்றான்.
தலையை நன்றாக உலுக்கி விட்டு, “ஸ்ரீ… எனக்கு தோசை வேணும்…. ரொம்ப பசிக்குது… சீக்கிரம்…. அதுக்கு முன்னுக்கு ஒரு டீ…” என்று கூறிவிட்டு மாயமாக மறைந்து விட்டான்.
அவளுக்கு அவனை புரிந்து கொள்ளவே முடியாமல் இருந்தது.
‘என்னிடம் எதையோ எதிர்பார்க்கின்றான்…. ஆனால் அது எதுவோ அவனை தடுக்கின்றது…. கெட்டவனாக இருந்திருந்தால் வந்த அன்றே என்னை அன்றே, அப்பொழுதே வெறி நாய் கோழிகளை பிடித்து உண்பது போல் வேட்டையாடி தன் இச்சையை தீர்த்து இருப்பான்.
ஆனால் அவன் அப்படி செய்யவில்லை… என்னை ஏன் இப்படி அடைத்து வைத்திருக்கின்றான்….? அவனுக்கு தேவையானது எதுவும் என்னிடம் இருக்கின்றதா… இவன் நல்லவனா…? கெட்டவனா…? ஏன் இப்படி நடந்து கொள்கிறான்…? கொஞ்சம் நல்லவனாக தான் இருப்பான்…’ என்று அவன் விட்டுச் சென்ற இடத்திலேயே யோசித்துக் கொண்டிருந்தாள்.
பாவம் அந்த பாவையவளுக்கு தெரியவில்லை. பின்பு ஒரு காலத்தில் அவனை இந்த உலகத்திலேயே கொடூரனாக நினைத்து தன்னையே நொந்து கொள்வாள் என்று,
விதி மிகவும் மோசமானது… அது யாரையும் பாவம் பார்ப்பதில்லை… அது இந்த உலகத்திற்கு தெரிய வருவது சில காலம் கழிந்து தான்… அது தெரிய வரும் போது சில பேர் உயிருடன் இருப்பர்…. சில பேர் இறந்தும் இருப்பார்…
வாழ்க்கை நமக்கு கற்றுத் தரும் பாடம் மிகவும் மோசமானதாகத் தான் இருக்கும். அது இரு வழிகளை எமக்கு காட்டித் தரும்.
ஒன்று அதனுடன் சேர்ந்து நாம் அதன் பாதையிலேயே போகவேண்டும்.
இன்னொன்று அதனுடன் போராடி வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். இதில் கிழஞ்சல்யனம் ஸ்ரீனிஷாவும் எந்த வலியை தேர்ந்தெடுப்பர் என்பது இனி தான் புரியும்.
அவள் சிந்தித்த வண்ணம் இருக்கும் போது, “டீ… ரெடியா…” என்று வெளியில் இருந்து இளஞ்செழியனின் சத்தம் கேட்டது.
உடனே தனது சிந்தனைகளை ஒதுக்கி வைத்து விட்டு வேலைகளில் மூழ்கத் தொடங்கினாள்.
அவன் சொன்னது போல டீயும் தோசையும் டைனிங் டேபிள் கொண்டு வந்து வைத்து விட்டு அவன் எங்கே என்று கண்களால் தேடித் திரும்பி பார்க்க, அருகில் வந்து நின்றான்.
‘இவன் எப்ப எங்கிருந்து வாரானே தெரியாம இருக்கு….’ என்று உள்ளுக்குள் நினைத்தபடி, “சாப்பாடு ரெடி…. சாப்பிடுங்க…” என்று உணவை பரிமாறி விட்டு இருக்க,
அவனோ உணவை உண்ணாமல் எதையோ நாடியில் கை வைத்து யோசித்து விட்டு, கேள்வியாக அவளைப் பார்த்தான்.
‘ஏன் என்னை பார்க்கிறான்..’ என்று புருவம் சுருக்கி அவள் ஓரப்பார்வையால் அவனை நோக்கினாள்.
அவன் ஒரு கேலிப் புன்னகையை வதனத்தில் சுமந்து கொண்டு, “ஓகே… நீயும் உட்கார்ந்து சாப்பிடு….”
“எனக்கு இப்போ பசிக்கல…”
“பரவால்ல… சாப்பிடு…” என்று விடா கண்டனாக ஒற்றை காலில் நின்றான்.
தலை குனிந்த படி மெதுவாக, “நான் இன்னும் பல்லு விளக்கேல…” என்று அவள் கூச்சத்துடன்
கூறினாள்.
“நல்லதா போச்சு… ஆடு மாடு எல்லாம் பிரஸ் பண்ணிட்டா…? சாப்பிடுது… இல்ல தானே…. மகாராணி..! ஒரு நாள் பிரஸ் பண்ணாம சாப்பிட்டா.. ஒன்னும் ஆகாது… சாப்பிடு…” என்று உணவு தட்டை அவள் பக்கம் தள்ளி விட்டான்.
அவன் கூறிய வார்த்தைகளைக் கேட்டு வாய் பிளந்து நின்ற, ஸ்ரீநிஷா இவனுக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியாமல், அவனைப் பார்த்தபடி மெதுவாக உணவுத் தட்டை அவன் புறம் நகர்த்தி வைத்தாள்.
அவனுக்கோ அவள் செய்த செயலில் சிறிது கோபம் முளைத்தது.
நான் சொல்வதை கேட்காமல் அவள் இவ்வாறு உணவு தட்டை நகர்த்தி வைத்ததும், “ஏன்… ஏன்… இன்னைக்கும் ஏதாவது சாப்பாட்டுல கலந்து வெச்சிட்டு… தப்பிச்சு போடுற பிளான் போல…?” என்று அவன் உரத்த குரலில் கத்த, அப்போது தான் அவளுக்கு உண்மை உரைத்தது.
அவன் எழுப்பிய சத்தத்தில் உடல் அதிர தலையை குனிந்த படி சத்தம் வெளியே வராமல், “இல்ல… இல்ல…” என்றாள்.
அவள் கூறிய வார்த்தைகள் அவளுக்கே நன்றாக கேட்கவில்லை. அப்படி ஒரு பயத்தில் சிக்குண்டு இருந்தாள்.
“ஃபர்ஸ்ட்… நீ சாப்பிடு… உனக்கு ஒன்னு ஆகலைன்னா… டூ மினிட்ஸ் கழிச்சு, நான் சாப்பிடுறேன்….. ஓகே ஸ்டார்ட் பண்ணு… சீக்கிரம்… எனக்கு பசிக்குது…
இனிமே இப்படித்தான் ஒவ்வொரு நாளும் நடக்கும்…. நீ சாப்பிட்ட பிறகு தான்…. நான் சாப்பிடுவேன்…. அதுவும் எனக்கு முன்னுக்கு இருந்து தான் நீ சாப்பிடணும்… சாப்பிட்டு காட்டணும்… சாப்பாட்டுல திரும்பி ஏதும் கலந்து… இங்கே இருந்து தப்பிச்சு போகணும்னு நினைச்சே… உன்னோட உயிர் என்னோட கையில….
நல்லா ஞாபகம் வச்சுக்கோ…. நீ தப்பிச்சு போனாலும் என்னிடம் இருந்து தப்ப முடியாது… எப்படி போன… நீ எப்படி திரும்பி என்கிட்ட வந்துட்ட…. யோசிச்சு பார்த்தியா…?
அதெல்லாம் உனக்குத் தெரியாது… தெரியாத வரைக்கும் சந்தோஷப்பட்டுக்கோ…. திரும்பி என்னை முட்டாள் ஆக்கணும் என்று நினைச்சா… நீ ரொம்ப…. ரொம்ப…. கஷ்டப்படுவ…. மைண்ட் இட்…” என்று
அவன் சொல்லச் சொல்ல ஆவென்று வாயைப் பிளந்து அவனைப் பார்த்தபடி நின்றாள்.
“இப்போ… உன்னைய சாப்பிட சொன்னேன்….” என்று மீண்டும் சாப்பாட்டுத் தட்டை எடுத்து அவள் பக்கம் நீட்ட,
அவன் கண்டிப்புடன் கூற வேறு என்ன தான் செய்வது… டீ யில் சிறிது அளவு கரண்டியால் எடுத்து குடித்து சுவைத்து விட்டு, தோசையில் சிறு துண்டு எடுத்து வாயில் வைத்து வேகமாக மென்று முழுங்கினாள்.
அவள் உணவு உண்ட பின்பு கையில் உள்ள கடிகாரத்தில் நேரத்தை பார்த்து விட்டு, சரியாக 2 நிமிடங்கள் கழிந்த பின்னே அவன் உணவை உண்டான்.
அவனது செயலைப் பார்த்து அவளுக்கு எங்கு கொண்டு தலையை இடிப்பது போல இருந்தது.
அடுத்து அவன் கேட்ட கேள்வியில், அவளது மனம் ‘இதற்கு இவனுக்கு உணவில் விஷத்தையே வைத்து… நானும் உண்டு விட்டு இறந்திருக்கலாம்…’ என்று தோன்றியது.