கள்வன்-13
தன் கார்க் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தவன் நிமிர்ந்து பார்க்கும் முன்பே தன் கழுத்தில் மாலை விழுந்ததை குனிந்து பார்த்தவன் அவள் “வெல்கம் சார்” என்று சொன்னதும் யார் என்று நிமிர்ந்து தன் கூலிங் கிளாசை தன் ஒற்றை விரலால் ஸ்டைலாக கழற்றி விட்டுப் பார்க்க அவளும் அப்போது அவனை நிமிர்ந்து பார்க்க இருவரின் விழிகளும் ஒருவரை ஒருவர் தீண்டிக் கொண்டன.
அவன் பார்வையிலோ கோவமும் ஆத்திரமும், இவள் பார்வையிலோ ஆச்சர்யமும் பயமும். அந்த நேரத்தில் கூட அவர்கள் தங்களை சுற்றி உள்ளவர்களை மறந்தவர்களாக தங்களின் பார்வையை திருப்பாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அங்கு நின்ற மற்றவர்களோ அங்கு வந்து நின்ற காரைப் பார்த்தே அதிசியத்து நிற்க அந்தக் காரின் கதவைத் திறந்து கொண்டு மித்ரன் கருப்பு நிறக் கோட் சூட் அணிந்து தன்னுடைய கூர் விழிகளை கண்ணாடியால் மறைத்த படி இறங்கியதிலேயே அங்கு உள்ள ஆண்களும் பெண்களும் அவனின் அழகையும் கம்பீரத்தையும் கண்டு வாயைப் பிளந்து கொண்டு பார்த்திருக்க இங்கு இவர்களுக்குள் பார்வையிலேயே ஒரு பனிப் போர் நடப்பதை எவருமே கவனிக்க வில்லை.
அன்று மதியை அவன் கடத்தும் போது தன் முகத்தை மறைத்து மாஸ்க் ஒன்று அணிந்திருந்தான். அதனால் மதியை தவிர வேறு யாருக்கும் அவனை அடையாளம் தெரிய வில்லை.
“ஹாய் வெல்கம் சார்..” என்று சிரித்த முகமாக மேனேஜர் வர அவள் மேல் இருந்த பார்வையை மேனேஜர் பக்கம் திருப்பியவன் சிறு தலை அசைப்போடு தன் கழுத்தில் உள்ள மாலையை கழற்றியவன் பக்கத்தில் திருவிழாவில் காணமல் போன பிள்ளை போல விழித்துக் கொண்டிருந்த வெண்மதியின் கழுத்தில் போட்டவன் “எனக்கு இதெல்லாம் பிடிக்காது நீங்களே வச்சிக்கங்க..” என்று சொல்லிவிட்டு மேனேஜருடன் உள்ளே நுழைந்தான்.
இங்கே இவளுக்கோ அவனை இங்கு பார்த்தது ஒரு அதிர்ச்சி என்றால் அவனுக்கு மாலை போட்டு வரவேற்றது பின் அவன் அந்த மாலையை கழற்றி அவள் கழுத்தில் போட்டது எல்லாம் அவளுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது.
ஆஷாவோ அவனின் அழகை கண்டு மெய் மறந்து நின்றாள். அப்போது அவன் மாலையை கழற்றி அவள் கழுத்தில் போடும் போது இவளோ தன் மனதிற்குள் “ச்ச.. அவகிட்ட மாலையை போட சொன்னது தப்பா போச்சு வரப் போறது எப்படியும் வயசானவரா இருப்பார்னு பார்த்தால் இப்படி ஒரு அழகான ஹேண்ட்ஸம் எம் டியா வருவார்னு எதிர்பார்க்கவே இல்லையே.. இதுவே நம்ம மாலை போட்டு இருந்தா அவ கழுத்துல போட்ட மாலையை நம்ம கழுத்துல போட்டு இருப்பாரு.. வாவ் நினைக்கவே சூப்பரா இருக்கே..” என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.
மற்றவர்களோ அவன் உள்ளே சென்றதும் அவர்களும் அலுவலகத்திற்குள் நுழைந்தார்கள்.
உள்ளே சென்றவன் மேனேஜரிடம் “உடனே எல்லாரையும் கூப்பிட்டு மீட்டிங் அரேஞ்ச் பண்ணிட்டு என்ன கூப்பிடுங்க பாஸ்ட் ஓகே..” என்றவன் எம்.டி அறையில் நுழைந்தவன் அப்போதுதான் தன் பின்னே நந்தா வராததைக் கண்டான்.
“ஓஓ ஷிட் இவனுக்கு அந்தக் கிளி மேல அப்படி என்ன தான் பாசமோ.. அத பார்த்ததும் செய்யிற வேலையை கூட மறந்துட்டான்.. இவன..” என்று பல்லைக் கடித்தவன் நந்தாவிற்கு கால் செய்தான்.
அவனோ அங்கு லியாவோடு ஜாலியாக பேசிக் கொண்டிருந்தான்.
“ஹேய் லியா எப்படி இருக்க..? உன்னை பார்த்து ரெண்டு மாசம் ஆச்சு இனிமே உன்ன பார்க்கவே மாட்டேன்னு நெனச்சேன் நல்லவேளை பார்த்துட்டேன்..” என்றான் சந்தோசமா.
“எனக்கும் தான் நந்தா..” என்றது லியா.
“சரி லியா இனிமே நாம டெய்லி பார்க்கலாம் ஓகே வா..”
‘என்னது டெய்லியா..? அந்த ராட்சசன் மட்டும் பார்த்தான் என்ன பொறிச்சி டேஸ்டு பார்க்காமா விடமாட்டான் அன்னைக்கு ஏதோ என்ன விட்டுட்டான்.. நம்ம வாய்க்கு எப்பவேனா அவங்கிட்ட சிக்க வாய்ப்பு இருக்கு இதுல டெய்லி வேறையா.. கடவுளே இவன் பாஸ் அந்த ராட்சசன் கிட்ட இருந்து என்ன எப்படியாவது காப்பாத்துப்பா..’ என்று மனதிற்குள் கடவுளிடம் வேண்டுதல் வைத்து விட்டு நந்தாவை பாவம் போல பார்த்தது.
“சரி லியா நாம அப்பறம் லன்ச் டைம்ல பார்ப்போம்.. பாஸ் என்ன தேடுவாறு நான் வர்றேன்..” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே மித்ரனிடம் இருந்து கால் வந்தது.
“அய்யோ இங்க பாரு சொல்லி முடிக்கல கால் பண்ணிட்டாரு..” என்றான்.
அதற்கு லியாவோ “பின்ன கூப்பட மாட்டாரா அவரோட வேலைக்காரன் அவர் கூட இல்லாம இங்க இருந்தா சீக்கிரம் போ பின்ன வேலையை விட்டு தூக்கிட போறாரு..” என்றது.
“வாஆஆட் வேலைக்காரனா..?”
“ஆமா நீ அவருக்கு வேலைக்காரன் தான..?”
“நான் ஒன்னும் வேலைக்காரன் கிடையாது.. அவருக்கு பி.ஏ புரியுதா..” என்றான்.
“ஹஹஹ..” என்று சிரித்த லியாவோ “டேய் லூசாடா நந்தா நீ..” என்க, அவனோ லியாவை முறைத்துப் பார்க்க “சரி சரி முறைக்காத பார்க்க முடியல பீ.ஏன்னா என்ன..?”
“பீ.ஏன்னா பர்சனல் அசிஸ்டன்ட்..”
“டேய் தமிழ்ல சொல்லுடா..”
“ம்ம் அப்படின்னா அவருக்கு தனிப்பட்ட காரியதரிசி அதாவது அவர் சம்மந்தப்பட்ட வே.. வேலை.. வேலை எல்லாம் நான் தான் பார்ப்பேன்..” என்று கூறும் போதே திக்கினான்.
“அப்போ நான் சொன்னது சரிதானே..” என்றது லியா.
லியா இப்படி சொல்லியதும் அவனால் அங்கு மறுத்து பேச முடியவில்லை. பேந்த பேந்த முழித்துக் கொண்டு இருந்தான். அப்போது மித்திரனிடமிருந்து இரண்டாவது முறையாக அழைப்பு வர உடனே அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.
“ஹலோ பாஸ்..”
“இன்னும் ஒரு நிமிஷத்துக்குள்ள நீ என் முன்னாடி நிக்கல உன்னை வேலையை விட்டே தூக்கிடுவேன்..” என்று சொல்லி முடிக்கவில்லை நந்தா மித்திரனின் முன்னால் வந்து நின்றான்.
“அப்பாடி கிரேட் எஸ்கேப்..” என்று நினைத்துக் கொண்டான்.
“சாரி பாஸ்..” மித்ரன் அவனை முறைத்துப் பார்த்துவிட்டு
“என்ன ஆச்சு நந்தா உனக்கு..? நீ யாருன்னு உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா..?” என்று கேட்க நந்தாவும் தன் தலையை குனிந்து நின்றவன் “இனிமே இப்படி நடக்காது பாஸ்..” என்றான்.
மித்ரன் ஏதோ சொல்ல வாய் எடுக்க அதற்குள் அவன் இருக்கும் அறையின் கதவு தட்டப்பட்டது. மேனேஜர் அனைவரையும் கூப்பிட்டு மீட்டிங்கிற்க்கு அரேஞ்ச் செய்தவர் மித்ரனை அழைப்பதற்காக அவன் அறையின் கதவை தட்டினார்.
“எஸ் கம் இன்..” என்றான் மித்ரன். உள்ளே வந்த மேனேஜரும் “சார் மீட்டிங்கிற்க்கு எல்லாம் அரேஞ்ச் பண்ணிட்டேன்.. நீங்க வந்தீங்கன்னா மீட்டிங்க ஸ்டார்ட் பண்ணிடலாம்..” என்று அழைக்க “ஷூயர் போலாம்..” என்றவன் மீட்டீங் நடக்கும் இடத்திற்கு சென்றான்.
அங்கு அனைவரும் கூடி இருந்தனர். அவனுடைய கண்களோ அந்த மீட்டிங் ஹாலை ஒரு முறை சுற்றி வந்தது.
ஆனால் அந்த இடத்தில் மதியைக் காணவில்லை. இவன் கண்களோ மீண்டும் ஒருமுறை அந்தக் கூட்டத்தில் அலைந்தது. சற்று தூரத்தில் கூட்டத்திற்குள் ஒளிந்து கொண்டிருந்தவளை இவன் கண்கள் கண்டன.
பின்பு திருப்தியாக உணர்ந்தவன் “ஹாய் ஐ அம் மித்ரன்.. இந்த கம்பெனிக்கு புதுசா வந்திருக்கிற எம்.டி அப்படிங்கறது உங்களுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கும்.. இருந்தாலும் ஒருமுறை என்னை நானே அறிமுகப்படுத்திக்கிறேன். இந்த கம்பெனியோட சிஇஓ திரும்ப வர்ற வரைக்கும் நான் சொல்றத தான் நீங்க எல்லாரும் கேட்டு நடக்கணும்.. அதே மாதிரி வேலையை சொன்ன டைமுக்கு முடிச்சு கொடுக்கணும்… அப்படி முடிக்க முடியலன்னா அதோட பின் விளைவுகள் மோசமா இருக்கும்.. நீங்க வெளிய எப்படி வேணா இருக்கலாம் ஐ டோன்ட் கேர்.. பட் ஆபீஸ் உள்ள வந்ததும் உங்களோட கவனம் முழுவதும் வேலையில மட்டும் தான் இருக்கணும் அப்படி இருக்க முடியாதுன்னு நினைக்கிறவங்க உடனே இந்த ஆபீஸை விட்டு போயிடலாம்..” என்று அவன் பார்வை வெண்மதியின் மேல் பதிந்து மீண்டது.
அந்தப் பார்வைக்கு அர்த்தம் தெரியாதவளோ பயந்தபடி அங்கு நின்ற ஒருவரின் பின்னால் ஒளிந்து கொண்டாள்.
அதையும் கவனித்தான் தான் மித்ரன். பின்பு தான் வந்த வேலை முடிந்து விட்டதாக நினைத்தவன், “ஓகே இப்ப நீங்க எல்லாரும் போய் உங்க வேலைய பாருங்க..” என்றவன் தன்னுடைய அறைக்குள் நுழைந்து கொள்ள மேனேஜரும் அவனுடனே உள்ளே வந்தார்.
“மேனேஜர் நான் வரும்போது என் கழுத்துல மாலை போட்டாங்களே அவங்க யாரு..?”
“சார் அந்த பொண்ணு பேரு வெண்மதி அவங்க ஆஷாவோட டீம்லதான் இருக்காங்க சார்… ஏன் கேக்குறீங்க..”
“அது எனக்கு இந்த ஆபீஸ்குள்ள ஒரு பர்சனல் செகரட்டரி வேணும் சோ அந்த பொண்ணை நான் இங்க இருக்கிற வரைக்கும் எனக்கு அசிஸ்டென்டா இருக்க ஏற்பாடு பண்ணுங்க.. இப்போ நீங்க போகலாம் அந்த பொண்ண வர சொல்லுங்க..” என்றான்.
அவரும் சரி என தலையாட்டியவர் உடனே தன்னுடைய அறைக்குச் சென்று வெண்மதியை இன்டர்காமில் அழைத்து தன்னுடைய அறைக்கு வரச் சொன்னார்.
“ஓகே சார் இதோ வரேன்..” என்றவள் “லியா நீ இங்கேயே இரு தயவு செஞ்சு வெளியே எங்கேயும் வந்திராத நீ அவர் கண்ணில கூட பட்டிடக் கூடாது சரியா..? அதனால இந்த இடத்தை விட்டு எங்கேயும் போகாத நான் வந்துடுறேன்..” என்று லியாவுக்கு மட்டும் கேட்கும் படி கூறிவிட்டு மேனேஜர் அறைக்கு சென்றாள்.
அதுவும் அவள் சொன்னது போலவே தாம் இந்த இடத்தை விட்டு வேறெங்கும் சென்றால் தன்னுடைய உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று நினைத்து அங்கேயே சமத்தாக அமர்ந்து கொண்டது.
இதை அனைத்துமே தன் அறையில் அமர்ந்தவாறு தன் முன்னே இருந்த கணினியில் பார்த்துக் கொண்டுதான் இருந்தான் மித்ரன்.
அவனுடைய வதனத்திலோ இகழ்ச்சியாக ஒரு புன்னகை தோன்றி மறைந்தது.
“இனி உன்ன என்கிட்ட இருந்து யாராலும் காப்பாத்த முடியாது..” என்று முனுமுனுத்தான்.