வதைக்காதே என் கள்வனே

4.7
(13)

  1. கள்வன்-19

மித்ரனை சீண்டி விட்டு வெளியே வந்தவளோ கதவைச் சாற்றி விட்டு அதன் மேல் சாய்ந்து கொண்டு கண்ணை மூடி பெரு மூச்சு விட்டாள்.

‘ஹப்பா எப்படியோ ஒரு வழியா அவர்கிட்ட இருந்து தப்பிச்சி வந்தாச்சி. நான் ரொம்ப பயப்பிடறதுனாலதான் நம்மள அப்படி எல்லாம் டார்ச்சர் பண்ணிருக்குறாரு. ச்சை இந்த ட்ரிக் முதல்லையே தெரியாம போச்சே.. சரி அதான் இப்ப தெரிஞ்சிருச்சே இனிமே பார்த்துக்கலாம்..’ என்று தனக்குள் சிரித்தவள் கண்களை திறக்க அதிர்ந்தாள்.

எதிரே தன் இரு ரெக்கைகளையும் நாம் இரு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு கோவமாக பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி மதியை முறைத்துக் கொண்டு இருந்தது லியா.

லியா அப்படி நிற்பதை பார்த்தவளோ தன்னுடைய 32 பற்களையும் காட்டியவாறு “என்ன லியா இங்க வந்து இப்படி நினைக்கிற..?” என்று இவள் கேட்க அதுவும் “என்னை பார்த்தா உனக்கு பைத்தியக்காரி மாதிரி தெரியுதா..? நானும் இன்னைக்கு காலைல இருந்து உன்னை பார்த்துக்கிட்டு தான் இருக்கேன் உன்கிட்ட என்னமோ வித்தியாசமா இருக்கு.. காலையில சீக்கிரமா எந்திரிச்சு விதவிதமா இன்னைக்கு சமையல் எல்லாம் பண்ண.. அப்புறம் பாக்ஸ்ல எடுத்துட்டு வந்து அந்த ராட்சசன் ரூமுக்குள்ள சிரிச்ச மாதிரியே கொண்டு போயிட்டு இப்போ சிரிச்ச மாதிரியே வெளியே வர என்னமோ தப்பா நடக்குது..” என்று முறைத்தபடியே கேட்க அது கேட்கும் தினுசைப் பார்த்து அவளுக்கோ சிரிப்பு வந்தது.

அவளும் சிரித்தவாறே “ஹஹஹ.. இதுதான் உன் பிரச்சனையா..? சரி வா நான் சொல்றேன்..” என்றவள் கீழே நின்றிருந்த லியாவை தன் கையில் தூக்கிக்கொண்டு தன்னுடைய கேபினுக்குள் நுழைந்தாள்.

இதை இரண்டு கண்கள் வன்மத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது அது வேறு யாரும் அல்ல ஆஷா தான். ஏற்கனவே மதிவை அவளுக்கு சுத்தமாக பிடிக்காது. இதற்கு முன்னர் மித்ரன் இடம் தான் அவமானப்பட்டது அதை மதி பார்த்தது இவள் முன்பு தான் அவமானப்பட்டு விட்டோமே என்று நினைத்தவள் இப்போது இவள் மித்ரன் அறையிலிருந்து சிரித்தபடி வெளியே வரவும் ஆத்திரம் அதிகமாகியது.

தன் மனதிற்குள் “உங்க ரெண்டு பேரையும் நா சும்மா விடமாட்டேன்..” என்று கருவிக் கொண்டாள்.

வெண்மதி நடந்த அனைத்தையும் லியாவிடம் கூறினாள். அதுவும் மித்ரனுடைய கதையைக் கேட்டு வருத்தப்பட்டது. அதனால் அதுவும் அவளுக்கு உதவியது.

“சாரி மதி நீ பண்றது சரிதான் நான் தான் உன்னை தப்பா புரிஞ்சுகிட்டேன் சாரி.. உனக்கு என்னோட ஹெல்ப் எது வேணும்னாலும் சொல்லு நானும் பண்றேன்..” என்றது. அவளும் புன்னகையுடன் “சரி ஓகே டன்..” என்றவள் தன்னுடைய வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டாள்.

இங்கே மித்திரனோ அவள் ஏன் இன்று வித்தியாசமாக தன்னிடம் நடந்து கொண்டாள் என்று யோசிக்க ஆரம்பித்தவனுக்கு எதுவும் புலப்படவில்லை .ஆனால் அவள் ஊட்டி விட்ட சாப்பாடு அவனுடைய வயிற்றையும் மனதையும் சேர்த்து நிரப்பி இருந்தது.

அவளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தவன் எதேர்ச்சியாக அவளுடைய கேபின் பக்கம் திரும்பி பார்க்க, அவளோ தன்னுடை டீமில் வேலை பார்ப்பவர்களிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள்.

இவனோ அவளைப் பார்க்க அவளுடைய சிரிப்பு இவனுக்கு உள்ளுக்குள் ஆனந்தமாக இருந்தது. அவளை இன்றுதான் முதல் முறை இப்படி சிரிப்புடன் பார்க்கிறான்.

வெள்ளந்தியான சிரிப்புடன் இருப்பவளா அன்று அப்படி நடந்து கொண்டது..? என்று யோசிக்க வைத்தது அவனை. பின்பு நடந்தது அவனுக்கு நினைவு வர தன் பெற்றவர்களை தன்னிடம் இருந்து பிரித்தவள் என்று நினைத்துக் கொண்டவனுக்கோ அவள் மேல் கோவம் வந்தது. உடனே இன்டர்காம் மூலம் அவளை அழைத்து இங்கு வரும் படி கூறினான். அவள் வந்ததும் “என்ன இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு போல..?”

“ஏன் சார் நான் சந்தோஷமா இருக்க கூடாதா..?” என்க.

“எப்படி டி என் சந்தோஷத்தை குழி தோண்டி புதைச்சிட்டு உன்னால சந்தோஷமா இருக்கு முடியுது..” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்த அவள் கண்களோ கலங்க ஆரம்பித்தன.

“சும்மா இங்க அழுது சீன் போடாத.. இந்தா இந்த ஃபைல பழைய பைல்ஸ் இருக்குற ரூம் ல போய் வச்சுட்டு வா..” என்க. அவளோ தன் கண்களை துடைத்துக் கொண்டு அவன் கொடுத்த பைலை வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்றாள்.

அவள் சென்றதும் தன் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டான் அவன். அன்றைய நாள் கழிய மித்திரனும் தன்னுடைய வேலையை முடித்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்ப அறையை விட்டு வெளியே வந்தான். அவனுடனே நந்தாவும் வந்தான். இருவரும் வெளியே செல்ல எதேர்ச்சையாக அவன் கண்கள் மதியின் கேபினைத் தாண்டிச் செல்லும்போது லியா அங்கு இருப்பதைப் பார்த்தவனோ யோசனையோடு நின்றான்.

நந்தாவும் லியாவைப் பார்த்தவன் உடனே உள்ளே சென்றான்.

“என்ன லியா இவ்வளவு நேரம் நீ இங்க என்ன பண்ற..? வீட்டுக்கு போகலையா வெண்மதி எங்க..” என்று கேட்டான்.

அதற்கு லியாவோ “இல்ல நந்தா மதி இன்னும் வரல அவளுக்காகத்தான் வெயிட் பண்றேன்..” என்றது லியா.

“என்ன மதி வரலையா எங்க போனா..?” என்று நந்தா கேட்க. மித்ரனும் யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

“மித்ரன் சார் கூப்டாருன்னு தான் போனா அதுக்கப்புறம் அவ வரவே இல்ல.. நானும் ரொம்ப நேரமா இங்கேயே தான் இருக்கேன்..” என்று சோகமாக லியா சொல்லியது.

அதன் பிறகு அவர்கள் மூவரும் அந்த ஆபீஸ் முழுவதும் தேடினார்கள் மதி எங்கு தேடியும் காணவில்லை. பிறகு மித்ரனுக்கு ஒரு யோசனை வந்தது. தான் அவளை பைலை ரூமில் கொண்டு வைக்க சொன்னது ஞாபகம் வர, சட்டென்று அங்கிருந்து ஓடியவன் அந்த பழைய பைல்ஸ் வைக்கும் அறைக்கு உள்ளே சென்று பார்த்தான்.

ஆம் மதியும் அங்கேதான் இருந்தாள். ஆனால் அங்கு மயக்கம் போட்டு விழுந்து கிடந்தாள். அதைப் பார்த்தவனுக்கு ஒன்றும் ஓடவில்லை.

சட்டென்று அவள் அருகில் சென்றவன் அவளை தன் மடியில் தூக்கி வைத்து “மதி மதி எழுந்துருடி என்னாச்சு உனக்கு ஏன் இப்படி மயக்கம் போட்டு விழுந்து கிடக்க..” என்று அவளை எழுப்பிக் கொண்டிருந்தான். ஆனால் அவளோ எழுந்திருக்கவே இல்லை.

அவளுடைய மூக்கில் தன் விரல் வைத்து சுவாசம் இருக்கிறதா என்று செக் பண்ணியவன் சுவாசம் சற்று சீர் இல்லாமல் வர பயந்து போனவன் ஆழ மூச்சு எடுத்து அவளுடைய இதழில் இதழ் பதித்து தன் சுவாசக் காற்றை அவளுக்கு கடத்தினான். ஆனாலும் மதியிடம் எந்தப் பதிலும் இல்லை.

இனியும் தாமதிக்க முடியாது என்று நினைத்தவன் அவளை சட்டென்று தன் கையில் தூக்கிக்கொண்டு அந்த அறையில் இருந்து வெளியேறினான்.

அவன் மதியை கையில் ஏந்திக் கொண்டு வருவதை பார்த்து பயந்து போயினர் நந்தாவும் லியாவும்.

மித்ரனோ “நந்தா கார சீக்கிரம் எடு..” என்று சொல்லியபடியே ஓடினான். நந்தாவும் அவன் சொல்லை கேட்டு காரை எடுத்துட்டு வந்து அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடல் சென்றார்கள்.

அங்கு மதியை செக் பண்ண டாக்டரும் மித்ரனிடம் “ஒன்னும் பயப்படாதீங்க அவங்க கன்சிவா இருக்காங்க அதனால தான் மயக்கம் போட்டு விழுந்திருக்காங்க.. காற்றோட்டம் இல்லாத இடத்துல ரொம்ப நேரமா மயங்கி இருந்ததால அவங்களுக்கு சீக்கிரம் மயக்கும் தெளியல.. பயப்படாதீங்க இன்னும் கொஞ்ச நேரத்துல முழிச்சுக்குவாங்க..” என்றார். அதைக் கேட்டு மித்திரனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்ன அவ மாசமா இருக்காளா..?” என்று உறைந்து போய் நின்றான்.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “வதைக்காதே என் கள்வனே”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!